ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா
Blog
-

சாட்ஜிபிடியின் சொதப்பல்கள்
பெரும் கவனம் பெற்றிருக்கும் சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவுச் செயலி, தமிழில் உரையாடும்போது பல நேரங்களில் சொதப்புகிறது. இன்று அந்தச் செயலியுடன் என் உரையாடல் இங்கே.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

2023 நிதிநிலை எப்படி இருக்கும்?
2023 நிதிநிலை எப்படி இருக்கும்? எந்த எந்தத் துறைகள் முன்னேற்றம் காணும்? முதலீட்டாளர்களுக்கு இந்த ஆண்டு எத்தகைய லாபத்தைத் தரும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் உடன் ஒரு நேர்காணல்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-
![பிரபஞ்ச ஒளிமந்தை [Galaxy] இயக்குவது நியூட்டனின் புலப்படா புற இயக்கி [External Dark Force]](https://www.vallamai.com/wp-content/uploads/2023/02/unnamed.jpg)
பிரபஞ்ச ஒளிமந்தை [Galaxy] இயக்குவது நியூட்டனின் புலப்படா புற இயக்கி [External Dark Force]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பிரபஞ்சக் குயவனின்
மர்மக் களிமண்
கண்ணுக்குத் தெரியாத
கருமைப் பிண்டம் !
கண்ணுக்குப் புலப்படாத
கருமைச் சக்தி,
பிரபஞ்சச் சக்கரத்தின்
இயக்க சக்தி !
கவர்ச்சிக்கு எதிராக நியூட்டன்
புலப்படா புற இயக்கி,
முதல் விதியில் எழுதி உளது .
கைத்திறன் காண்பது படைப்பாளி
மெய்வினை உணர்வது,
தாரணி
காரண நிகழ்ச்சி அறிவது,
அற்புத மனிதனின் கற்பனை
மகத்துவம் !**************
A change in velocity means, by definition, that there is acceleration. Newton’s first law says that a net external force causes a change in motion; thus, we see that a net external force causes nonzero acceleration. We defined external force in Forces as force acting on an object or system that originates outside of the object or system.
Newton’s First Law of Universal Dynamics
நியூட்டனின் புலப்படும் அக இயக்கிகள் / புலப்படா புற இயக்கிகள்
நமது பூகோளத்திலும், விண்மீன்களிலும் பிரபஞ்ச சக்தி தேய்வு (Entropy) தீவிரமாய் மிகையாகிக் கொண்டு வருகிறது. அதாவது சிறுகச் சிறுக முடிவிலே விண்மீன்களில் அணுக்கரு எரிசக்தி தீர்ந்துபோய் அவை செத்து வெறும் கனலற்ற பிண்டமாகி விடும். விண்மீன்கள் அவ்விதம் ஒவ்வொன்றாய்ச் சுடரொளி மங்கிப் பிரபஞ்சமானது ஒருகாலத்தில் இருண்ட கண்டமாகிவிடும்.
டாக்டர் மிசியோ காக்கு, (அகிலவியல் விஞ்ஞான மேதை)
1998 ஆண்டுக்கு முன்னால் “கருமைச் சக்தி” என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை ! கருமைச் சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) ! அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் நகர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பியைப் போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாதவாது அவற்றுள் இடைவெளிகளை ஏற்படுத்திக் கொண்டும் வருகிறது.
கிரிஸ்டொஃபர் கன்ஸிலிஸ் (வானோக்காளர், நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம்)

அகிலத்தின் மர்மப் புதிர்களை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள்
பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராயப் புகுந்த காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜார்க் காமாவ், கார்ல் சேகன், சுப்ரமணியன் சந்திரசேகர், ஸ்டீஃபென் ஹாக்கிங் ஆகிய விஞ்ஞான மேதைகளின் அணியில் நின்று, இப்போது இந்தியாவில் விஞ்ஞானப் பணி புரிந்து வருபவர், டாக்டர் ஜெயந்த் நர்லிகர்! உலகப் புகழ் பெற்ற நர்லிகர், வானோக்கியல், வானவியல் பெளதிகம், அகிலவியல் ஆகிய துறைகளுக்குத் [Astronomy, Astrophysics, Cosmology] பெருமளவு பங்கை அளித்துள்ளவர். பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி வரலாற்றையும், பிற்பாட்டு விரிவையும் விளக்கும் பெரும்பான்மையோர் ஒப்புக் கொண்ட ‘பெரு வெடிப்பு அகிலவியல் நியதிக்குச் ‘ [Big Bang Cosmology Theory] சவால்விடும் முறையில், விஞ்ஞானிகள் வேறுபட்ட கோட்பாடுகளில் ஆராய்ச்சிகள் புரிந்திட வழி வகுத்தன,
நர்லிகரின் அடிப்படை விஞ்ஞானப் பணிகள்!
ஜெயந்த் நர்லிகர் அகிலவியல் துறையில் ஆய்வுகள் புரியும் ஓர் ஆராய்ச்சி விஞ்ஞானி [Cosmology Researcher]. அகிலவியல் ஆய்வு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பைப் பற்றியது. பிரபஞ்சம் எத்துணை அளவு பெருத்த உடம்பை உடையது ? அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது ? ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா ? அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை ? அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின ? பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன ? அகிலாண்டத்தின் மர்மமான, புதிரான, நூதனமான, விந்தையான இந்த வினாக்களுக்குப் பதில் தேடிய முற்கால விஞ்ஞானிகள், தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தற்கால விஞ்ஞானிகளின் வரிசையில் வருபவர், ஜெயந்த் நர்லிகர்!

நர்லிகர் தன் குருவான பிரிட்டிஷ் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயிலுடன் [Fred Hoyle (1915-2001)] இணைந்து ஆக்கி முடித்த ‘நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதியை ‘ [Conformal Theory of Gravity], ஹாயில்-நர்லிகர் ஈர்ப்பியல் நியதியாக [Hoyle-Narlikar Theory of Gravitation] தற்போது விஞ்ஞானச் சகபாடிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். குவஸார்ஸ் [போலி விண்மீன் கதிரலை எழுப்பிகள்], மிகுசக்தி வானியல் பெளதிகம், குவாண்டம் அகிலவியல், தூர மின்னாட்டம் [Quasars, High Energy Astrophysics, Quantum Cosmology, Distance Electrodynamics] ஆகிய விஞ்ஞானத் துறைகளுக்கு ஜெயந்த் நர்லிகர் பெருமளவில் தன் படைப்புகளை அளித்துள்ளார்.பிரிட்டிஷ் மேதை ஃபிரெட் ஹாயிலுடன் நர்லிகர் செய்த ஆராய்ச்சிகள்
பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கிய பிரிட்டிஷ் விஞ்ஞானி டாக்டர் ஃபிரெட் ஹாயில்தான் [Dr. Fred Hoyle (1915-2001)] ‘பொதுநிலை அமைப்புப் பிரபஞ்ச பெரு வெடிப்பு நியதி ‘[Standard Theory of the Origin of Universe (The Big Bang Theory)] என்னும் பதங்களை முதலில் பறைசாற்றியவர்! ஆனால் அந்த நியதியை ஏற்றுக் கொள்ளாது ஹாயில் புறக்கணித்தவர்! அதற்கு மாறாக ஃபிரெட் ஹாயில் தனது ‘நிரந்தரநிலை அமைப்புப் பிரபஞ்சத்தை’ [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார் ! ஆனால் தற்போது ஹாயிலின் கோட்பாடை நம்புவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாய்க் குறைந்து கொண்டே வருகிறது!

ஹாயில் நர்லிகர் இருவரும் பறைசாற்றிய ‘நிரந்தரநிலை நியதி ‘ ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘பொது ஒப்புமை நியதியின் ‘ [General Theory of Relativity] அரங்கிற்குள் அடங்கிப் பிண்டம் தொடர்ந்து உருவாகும் [Continuous Creation of Matter] ஒரு நடப்பானக் கோட்பாடை முதன்முதலில் கூறியது. ஜெயந்த் நர்லிகரும் ஃபிரெட் ஹாயிலும் படைத்த ‘பிரபஞ்சத் தோற்றத்தின் நிரந்தரநிலை நியதியை ‘ [Steady State Theory of the Universe], நம்பி வருபவர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது ! காரணம் பெரு வெடிப்பு நியதியை நம்பி வானாராய்ச்சி செய்து வருபவர்கள், புதிதாகக் கண்டுபிடித்த கருமைப் பிண்டம், கருமைச் சக்தி ஆகிய கோட்பாடுகள் பெரு வெடிப்பு நியதியின் நிழலாகப் பின் தொடர்கின்றன.
பிரபஞ்சக் கூண்டுக்குள்ளே இருக்கும் புதிரான பொருட்கள் என்ன ?
காரிருள் விண்வெளி எங்கணும் குவிந்த குடைபோல் பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் கூண்டுக்குள்ளே சிதறிக் கிடக்கும் பொருள்கள் என்ன ? சூரியன், சூரிய மண்டலம், சூரிய மண்டலத்தைப் போல் பல்லாயிரம் கோடி விண்மீன்களின் ஒளிக் குடும்பங்கள் கொண்ட நமது பால்மய வீதி, பால்மய வீதி போல் கோடான கோடி ஒளிமய மந்தைகள் கொண்டது பிரபஞ்சம் ! அவை எல்லாம் போக கருமையாகத் தெரியும் பரந்த கரு விண்ணில் உள்ளவைதான் என்ன ? அவை எல்லாம் சூனிய மண்டலமா ? வெறும் இருள் மண்டலமா ?

சுமாராகச் சொல்லப் போனால் பிரபஞ்சத்தில் 75% கருமைச் சக்தி (Dark Energy), 21% கருமைப் பிண்டம் (Dark Matter) 4% தான் சூரிய மண்டலம் போன்ற ஒளிமய மந்தைகள் (Normal Matter). விபரமாகச் சொன்னால் கருமைச் சக்தி 65%, கருமைப் பிண்டம் 30%, விண்மீன்கள் 0.5% [Stars], உலவும் ஹைடிரஜன், ஹீலியம் சேர்ந்து 4% [Free Hydrogen & Helium], கன மூலகங்கள் 0.03% [Heavy Elements], மாய நியூடிரினோக்கள் 0.3% [Ghostly Neutrinos]. இவற்றில் நமக்குப் புரியாமல் புதிராகப் இருக்கும் கருமைப் பிண்டம் என்பது என்ன ? ஒளிச்சக்தி, ஒலிச்சக்தி, மின்சக்தி, காந்த சக்தி, அணுசக்தி, ஈர்ப்புச் சக்தி போலத் தெரியும் பிரபஞ்சத்தின் புதிரான கருமைச் சக்தி என்பது என்ன ?
கருமைப் பிண்டம் செய்வ தென்ன ? கருமைச் சக்தி செய்வ தென்ன?
சூரியனைப் போன்று கோடான கோடி விண்மீன்களைக் கொண்ட நமது பால்மய வீதியின் விண்மீன் எதுவும் அந்த காலாக்ஸியை விட்டு வெளியே ஓடி விடாதபடி ஏதோ ஒன்று கட்டுப்படுத்தி வருகிறது. அதாவது அத்தனை விண்மீன்களின் அசுரத்தனமான ஈர்ப்பு ஆற்றல்களை அடக்கிக் கட்டுப்படுத்த ஏதோ பேரளவு ஆற்றல் உள்ள ஒன்று அல்லது பல பிண்டம் (Matter) அல்லது பிண்டங்கள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஊகித்தனர். நமது பால்மய காலாக்ஸியில் அவை எங்கே மறைந்துள்ளன என்று ஆழ்ந்து சிந்தித்த போதுதான் காலாஸியில் கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்டத்தின் இருப்பு (The Existance of Dark Matter) பற்றி அறிய முடிந்தது.

1930 இல் டச் வானியல் மேதை ஜான் ஓர்ட் (Jan Oort) சூரியனுக்கருகில் விண்மீன்களின் நகர்ச்சிகளை ஆராயும் போது, முதன்முதல் கரும் பிண்டத்தின் அடிப்படை பற்றிய தன்மையை அறிந்தார். அவரது அதிசய யூகம் இதுதான். நமது பால்மய வீதி போன்று, பல்லாயிர ஒளிமய மந்தைகள், (Galaxies) மந்தை ஆடுகள் போல் அடைபட்ட ஒரே தீவுகளாய் சிதைவில்லாமல் தொடர்ந்து நகர்கின்றன. அதாவது அந்த மந்தை அண்டங்கள் வெளியேறாத படி ஒன்றாய் குவிந்திருக்க மகாப் பெரும் கனமுள்ள பொருட்கள் அவற்றில் நிச்சயம் பேரளவில் இருக்க வேண்டும் என்று நம்பினார். கனமான அந்த பொருட்களே விண்மீன்கள் தப்பி ஓடாதபடி, காலாக்ஸின் மையத்தை நோக்கிக் கவர்ச்சி விசையால் இழுத்து வைக்கின்றன என்று திட்டமாகக் கண்டறிந்தார்.
1998 ஆண்டுக்கு முன்னால் “கருமைச் சக்தி” என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை ! கருமைச் சக்தி அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) ! அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் நகர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது. அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பி போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாதவாது அவற்றுள் இடைவெளிகளை ஏற்படுத்தியும் வருகிறது என்று கூறுகிறார், பிரிட்டன் நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகத்தின் பேருரையாளரும், வானோக்காளரும் ஆகிய கிரிஸ்டொஃபர் கன்ஸிலிஸ் (Christopher Conselice)

கருமைப் பிண்டமும், கருமைச் சக்தியும் (Dark Matter & Dark Energy) பிரபஞ்சப் படைப்பின் கண்ணுக்குத் தெரியாத மர்மக் கருவிகள். கண்ணுக்குத் தெரியாத படைப்பு மூலத்தின் பிரபஞ்ச இயக்கக் கருவிகள் அவை இரண்டும் ! நியூட்டன் கண்டுபிடித்த ஈர்ப்பு விசை விண்மீனையும் அண்டங்களையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓர் குறிப்பிட்ட விண்வெளிச் சூழலில் இயக்கிய வண்ணம் உள்ளது. அதுபோல கருமைப் பிண்டத்தின் அசுரக் கவர்ச்சி விசை காலாக்ஸியில் உள்ள விண்மீன்கள் தமக்குரிய இருக்கையில் இயங்கி எங்கும் ஓடிவிடாதபடி இறுக்கிப் பிடித்துக் கொண்டு வருகிறது.கருமைச் சக்தி பிரபஞ்சத்தில் என்ன செய்கிறது? பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறிச் சென்று உண்டான காலாக்ஸிகள் நியூட்டனின் நியதிப்படி நகரும் தீவுகளாய் மிதந்து செல்கின்றன ! ஆற்றல் மிக்க மிகப் பெரும் தொலைநோக்கிகள் மூலமாக நோக்கும் போது, பிரபஞ்ச விளிம்புகளில் நகரும் தொலைத்தூர காலாக்ஸியின் வேகம் மிகுந்து விரைவாகுவதை (Acceleration of Galaxies) விஞ்ஞானிகள் கண்டனர் ! நியூட்டனின் அடுத்தொரு நியதிப்படி தனிப்பட்ட தொரு விசையின்றி காலாக்ஸிகளின் வேகம் மிகுதியாக முடியாது. அந்த காரண-காரிய யூகத்தில்தான் காலாக்ஸிகளைத் தள்ளும் கருமைச் சக்தியின் இருப்பை விஞ்ஞானிகள் உறுதியாகச் சிந்தித்துக் கூறினர் !

பிரபஞ்சத்தின் கண்ணுக்குத் தெரியாத மர்மக் கருவிகள்
பிரபஞ்சத்தின் மர்ம விதிகள், புதிரான நியதிகள் பல இன்னும் நிரூபிக்கப் படாமல்தான் இருக்கின்றன. பிரபஞ்சத்தின் விரிவு அல்லது சுருக்கத்தைத் தீர்மானிக்க கருமைப் பிண்டத்தின் இருப்பைத் தெளிவு படுத்தும் பிரச்சனை ! கருமைப் பிண்டம் “காணாத திணிவு” (Missing Mass) என்றும் அழைக்கப் படுகிறது. பிரபஞ்சப் பொருட்களின் 90% திணிவாக கருமைப் பிண்டம் கருதப் படுகிறது. அவை பெரும்பாலும் செத்த விண்மீன்கள், கருங்குழிகள், புலப்படாத துகள்கள் (Dead Stars, Black Holes & Unknown Exotic Particles). கண்ணுக்குத் தெரியும் பொருட்களின் மீது படும் அசுரக் கவர்ச்சி விசையை அறியும் போது, விஞ்ஞானிகள் கண்ணுக்குத் தெரிவதை விட, மிகையாகத் தெரியாத பொருட்கள் இருப்பதை நம்புகிறார்கள். அது மெய்யானால் பிரபஞ்ச விரிவைத் தடுத்து மீட்கக் கூடிய பேரளவுத் திணிவு உள்ளதென்றும், அது முடிவாகத் திரண்டு பிரளயத் சிதைவடைந்து (Eventual Collapse) “மூடிய பிரபஞ்ச நியதியை” (Closed Universe Theory) உறுதியாக்கச் செய்கிறது.
1998 இல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் சுமார் 75% மேவி அகிலத்தைக் கையிக்குள் இறுக்கிப் பித்து நம்மைச் சுற்றியுள்ள கருமைச் சக்தியைப் பற்றிக் கண்டுபிடித்தார்கள் ! அதன் இருப்பைத் தெரியாது நாம் குருடராய் இருந்திருக்கிறோம். அகிலக் கூண்டைப் பெருமளவில் ஆக்கிரமித்துள்ளதைத் தவிர, இந்தக் கருமைச் சக்தியின் நிலைப்புத் தன்மை நீடித்தால், தற்போதைய பௌதிகக் கோட்பாடுகள் விருத்தி செய்யப்பட வேண்டும்.

பிரபஞ்சத்தில் கருமைச் சக்தி ஆட்சியின் கைத்திறன் !காலாக்ஸியின் தோற்றக் கோட்பாடுகளில் இடையிடையே சேராமல் இருக்கும் ஐயப்பாடுகளை இணைக்கும் ஓர் இணைப்பியாக கருமைச் சக்தி எண்ணப் படலாம். அவற்றில் ஒரு முடிவு காலாக்ஸிகளின் ஈர்ப்பாற்றல் விரிவைத் தடுப்பதில்லை (Galaxies’s Gravity does not resist Expansion). சுருக்கமாக விளக்கினால் கீழ்க்காணும் முறையில் கருமைச் சக்தியைப் பற்றிச் சொல்லலாம் :
1. கண்ணுக்குப் புலப்படாமல் பிரபஞ்ச முழுமையாக ஓர் அசுர விலக்கு விசையாக (Anti-Gravity Force) ஆட்சி செய்யும் கருமைச் சக்தி “அகில விரைவாக்கி” (Cosmic Accelerator) என்று குறிப்பிடப் படுகிறது.
2. பிரபஞ்சத்துக் குள்ளே இருக்கும் பொருட்களின் மீது கருமைச் சக்தி விளைவிக்கும் இரண்டாம் தரப் பாதிப்புகள் (Secondary Effects) என்ன வென்றால் : பெரும்பான்மை அளவில் பிண்டத்தின் நுண்மை துகள் சீரமைப்பை (Filigree Pattern of Matter) அறிய உதவியது. சிறுபான்மை அளவில் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே “காலாக்ஸி முந்திரிக் கொத்துகள்” வளர்ச்சியை கருமைச் சக்தி நெறித்தது (Choked off the Growth of Galaxy Clusters) !
3. மிக்க சிறிய அளவில் கருமைச் சக்தி காலாக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று இழுத்துக் கொள்வதையும், மோதிக் கொள்வதையும், பின்னிக் கொள்வதையும் குறைத்துள்ளது ! அவ்வியக்கங்கள் காலாக்ஸிகள் உருவாகச் சிற்ப வேலை புரிகின்றன. கருமைச் சக்தி வலுவற்றதாகவோ, வல்லமை யுற்றதாகவோ இருந்திருந்தால், நமது பால்மய காலாக்ஸி மெதுவாக உருவாகி இருக்கும் ! அதனால் நமது பூகோளத்தில் நிரம்பியுள்ள “கன மூலகங்கள்” (Heavy Elements) பிணைந்து கொண்டு தாதுக்களாய்ச் சேராமல் போயிருக்கும்.

(தொடரும்)
*********************
தகவல் :
Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2. Universe 6th Edition (2002) 3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004)
1. Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)
2. Universe By Roger Freedman & William Kaufmann III (2002)
3. National Geographic Encyclopedia of Space By Linda Glover.
4. The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)
5. Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)
6. BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)
7. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html (பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!
9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html (பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் [George Gamow (1904-1968)]
10. Cosmic Collision Sheds Light on Mystery on Dark Matter [www.dailygalaxy.com/my_weblog/2007/05/dark_matter_hub.html (May 16, 2007)
11. “Beyond Einstein” Search for Dark Energy of the Universe
[www.dailygalaxy.com/my_weblog/2007/07/beyond-einstein.html (July 10, 2007)
12. Dark Matter & Dark Energy: Are they one & the Same ? Senior Science Writer [www.space.com/scienceastronomy/mystery_monday_040712.html (April 12, 2007)
13 Dark Energy By LSST Observatory – The New Sky (www.lsst.org/Science/darkenergy.shtml)
14. Stephen Hawking’s Universe By John Boslough (1985)
15. The Hyperspace By: Michio Kaku (1994)
16. The New York Public Library Science Desk Reference (1995)
17. Scientific American “The Cosmic Grip of Dark Energy” By Christopher Conselice (Feb 2007). -

அழகிய மீன்கொத்தி
அழகிய வண்ணமயமான மீன்கொத்தி, குளித்து முடித்து வந்த பிறகு தன் உடலை எப்படியெல்லாம் நீவி, கோதி, சிலுப்பி, உலர்த்தி அனுபவிக்கிறது என்று பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

வால் காக்கையின் குரல்
வால்காக்கையின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? கோகீ கோகீ எனக் குரல் எழுப்பும் என்பர். ஆனால், வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு குரல் எழுப்பும். துணைப் பறவையை அழைக்கும் இதன் இனிய குரலைக் கேளுங்கள். இதன் குரலுக்கு இடையிடையே இதன் துணைப் பறவை எதிர்க்குரல் கொடுக்கிறது. அது குரல் கொடுக்கிறதா என அவ்வப்போது பார்த்துக்கொள்கிறது. ஆனால், பதில் வந்தாலும் வராவிட்டாலும் இடைவிடாமல் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மன்றாடி, மன்னிப்புக் கேட்பது போல் இது இருக்கிறதா? கேட்டுச் சொல்லுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 6
மீனாட்சி பாலகணேஷ்
இனி கையில் கிடைத்துள்ள அம்பிகை மீதான எஞ்சிய இரு பிள்ளைத்தமிழ் நூல்களைப் பற்றிப் பார்க்கலாம்.
6. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்
சுதுமலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊர். புவனேசுவரி அன்னைக்கான ஆலயம் இங்கு அமைந்துள்ளது. இந்த அன்னையின்மீது ஒரு அழகிய பிள்ளைத்தமிழ் நூல் பண்டிதர் மு. கந்தையா அவர்களால் இயற்றப்பெற்று1987-ல் வெளியானது.
பிள்ளைத்தமிழின் கூறுகள் அனைத்தையும் கொண்டு பத்துப்பருவங்களில் பத்துப்பத்துப் பாடல்களுடன் பெருமைபெற விளங்குகிறது. இதன் நயங்கள் சிலவற்றைக் காண்போம்.
சப்பாணிப்பருவத்தின் முதற்பாடல், மிக அருமையாக உள்ள ஒரு பாடல்:
தாமரைமலரில் வைத்த பவளச் செப்பொன்று சிறிது திறந்தபடியுள்ளது. அதனுள்ளே உள்ள முத்துக்களில் சில தெரிகின்றன. இது எதற்கு உவமை? தாமரை போன்ற முகத்தில் பவளவாய் திறந்து சிரிக்கும் அம்மையின் பற்கள் முத்துப்போன்று காண்கின்றன. தாமரை மலரின் உள்ளிதழ்கள் ஒரு அரிய சிவப்பாகக் காணப்படும்; அப்படிப்பட்ட பாதங்களை மடித்து பத்மாசன நிலையில் அமர்ந்துள்ள குழந்தை. அனிச்ச மலரையொத்த மென்மையான சிவப்பு மெத்தையில் அழகாக அமர்ந்துகொண்டு சப்பாணி கொட்டுகிறாள் குழந்தை.
பங்கயத்தில் வைத்த பவளநற் செப்பினிற்
பாதிமுத் தொளிர்வ தேய்ப்பப்
பல்லினொளி சிறிதே பளிச்சிட மொழிச்சிதர்ப்
பால்வாய் குதட்டி யாணர்ச்
செங்கமல வகவிதழ் சிவணுமிரு பதமடித்
தொன்றுபத் மாசனத்திற்
சீர்திக ழனிச்சசெஞ் செந்தூவி யணையினிற்
செவ்வே நிமிர்ந்தமர்ந்து
………………………………………………………..
சங்களை யிருக்கைகொண் டெங்களை யுருக்குமனை
சப்பாணி கொட்டியருளே. (1)புலவரின் கற்பனை தேனினுமினிதன்றோ?
***
அடுத்து நீராடற் பருவத்துப் பாடல்களுள் ஒன்றினைக் காண்போம்.
இளம்பெண்கள், சிறுமியர், நீராடும்போது நிகழும் சில நிகழ்வுகளை வருணிக்கும் இனிய பாடலிது. சொல்லின் தெய்வமான கலைமகள், திருவின் தெய்வமான திருமகள் இருவரும் இருபக்கமும் இருக்க, சுழித்தோடும் நதி நீரில் துழாவியளைந்து மிதந்து ஆடுகின்றனள் அன்னை. செவிபொத்தி, கண்களை மூடி விளையாடும்போதில் கைகளும் கால்களும் நீரில் அளைவதனால் ‘முகேர்’ எனும் ஒலி எழுகின்றதாம். தாமரை மலரின் இனிய நறுமணத்தையும் நுகர்ந்து மகிழ்கின்றனர். ஒளிவீசும் பற்கள் தெரியுமாறு நகைத்தபடி தோழியரோடு மழலைச்சொல் பேசி கமலமலரின் அழகினைப் பழிக்கும் முகத்தின் எழில் பொங்குமாறு புதுநீராடுக என வேண்டுகின்றார் புலவர்.
சொற்படு கலைமகள் திருமகளெனுமிரு
தோழியர் பாங்காகச்
சுரிபுன லாழ்ந்து துழந்து மிதந்தும்
துணைவிழி செவிபொத்தி
முற்படு நீரில் முகேரெனு மொலியெழ
மூழ்கி யெழுந்துமயல்
முளரிப்புண மளவிக் கனிகொள
மூசி முகந்தார்த்தும்
எற்படு முத்தி னிளம்பத மூரல்
இலங்க நகைத்துநகைத்
தெதிருறு மகளிரோ டிதமுறு மழலை
இசைத்து நசைக்கமலப்
பொற்படு முகவெழில் பொங்கவே மங்கலை
புதுநீ ராடுகவே
…………………………………………………..இவ்வாறெல்லாம் அழகான பாடல்களைக் கொண்டது இந்நூல்.
0000000
7. இணுவை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
இந்நூல் எவ்வாறு எழுந்தது?
ஈழத்து அரசன் திருக்கோவலூர்ப் பேராயிரவன் காலத்தில் சிவகாமியம்மையின் ஒரு திருவுருவம் சிதம்பரத்தினின்றும் கொண்டுவரப்பட்டு இணுவையூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவ்விடம் சிதம்பர வளவு எனவும் அறியப்பட்டது. ஆலயமும் உடன் எழுந்தது. இங்கு குடிகொண்டுள்ள அம்பிகை மீது அடியாரான சின்னத்தம்பிப் புலவர் பாடியதே ‘சிவகாமியம்மை தமிழ்’ என்னும் நூல்.
இலங்கையைச் சிவபூமி என்பார் திருமூலர். பல சிவன், சக்தி, முருகன், விநாயகர் திருக்கோவில்களைக் கொண்டது. இணுவில் எனும் ஊர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் யாழ் நகரிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்லும் பெருவீதியில் நான்காவது கல் தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்துப் பரராசசேகர மன்னன் இவ்வூரிலிருந்து அரசு செய்தான் என்று சில பாடல்களால் அறிகிறோம். பரராசசேகர விநாயகர் கோவிலை அமைத்த அரசனும் இவனே எனப்படுகிறது.
சின்னத்தம்பிப்புலவர் சிவகாமியம்மை மீது சிறை நீக்கிய பதிகம், பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை துதி, சிவகாமியம்மை திருவூஞ்சல் ஆகிய நூல்களைப் பாடியுள்ளார்.
சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் எனும் நூல் பிள்ளைத்தமிழ் இலக்கணத்தின் பாற்பட்டதன்று. புலவர் சிவகாமி அம்மையைத் தாயாகவும் தம்மைச் சேயாகவும் வைத்து இந்நூலை ஆக்கியுள்ளார். பிள்ளையாகத் தம்மையே வைத்துப் பாடிய பாடல்கள் இருப்பதனால் பிள்ளைத்தமிழ் எனப் பெயர்பெற்றது. இதில் மொத்தமே பத்துப்பாடல்கள் தாம் உள்ளன.
அன்னை சிவகாமியின் அருட்சிறப்பும், அருள் தத்துவங்களும், திருப்பெயர்களும் அமைந்தும், புலவர் தம்மைப் பிள்ளையாக்கிக் கொண்டு அன்னை அவளிடம் முறையிடுவதும் இந்நூலில் சிறப்பாக அமைந்துள்ளன. இப்பிள்ளைத்தமிழில் வடமொழிச் சொற்களும் சொற்பிரயோகங்களும் மிகுந்து காணப்படுகின்றன.
இந்நூலின் பத்துப் பாடல்களும் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக இசைக்கப் பட்டுள்ளன.
முதற்பாடலில் அன்னையின் ஸ்ரீ சக்ர வடிவைப் போற்றி, அவள் அடியார்களுக்கு அருளும் தகைமையைப்போற்றியும், இணுவை நகரின் வளத்தை ஏற்றியும் பாடியுள்ளார்.
சீரணி முக்கோ ணத்து ளிருக்குந் தேவிசட் கோணத்துட்
சேருங் கன்னி அட்ட தளத்துட் சீரார் கௌமாரி
நாரணி யென்றுன் செய்ய பதங்கள் நாளுந் துதிசெய்யும்
நம்பின பேருக் கம்புவி மீதே நல்லருள் புரிவாயே
காரணி சோலையும் மணிமண் டபமுங் கஞ்ச மலர்த்தடமும்
காவிச் செடியுங் கழுநீர்த் தொகையுங் கதிர்நித் திலங்களுந்
தேரணி வீதிகளு மெங்கும் நெருங்குஞ் செல்வந் தழைக்கின்ற
திருவள ரிணுவைப் பதிதனி லுறையுஞ் சிவகாமித் தாயே. (1)எட்டாம் பாடலில் அன்னையிடம் உரிமை கொண்ட பிள்ளை தனக்கவள் அருள்புரியத் தாமதிப்பதனால் அவளிடம் கோபித்துக் கொள்வதனைக் காண்கிறோம்.
எள்ளுக்குள் எண்ணெயாக உள்ளவள் நீ; என்னிடம் ஏன் நீ இல்லை? உனக்கு எல்லாம் தெரியும்; எனது வறுமையும் பிணியும் நீ அறிந்திலையோ? உலகத்தே முப்பத்திரண்டு அறங்களை வளர்த்தாய் நீ; என்னிடம் மட்டும் ஏன் இரக்கமில்லை? நீ பிள்ளையே பெறாத மலடியோ? உலகெலாம் நீ பெற்றெடுத்தாய் என்பதும் பொய்தானோ? தான் பெற்ற பிள்ளை பேய்ப்பிள்ளை ஆனாலும் தாயென்பவள் அதனை இகழ்வாளோ? என்றெல்லாம் உரிமையோடு ஏசுகிறார்.
எள்ளுக் குணெய்போ லெங்கும் நிறைந்தா யென்னிடத் தில்லையோ
எல்லா மைந்தநீ யென்றனில் லாமையும் பிணியுந் தெரிந்திடாயோ
உள்ளந் திகழ்பா வியேனென் பாசம் உனையடுத் தாலுமுண்டோ
உலகத் துமுப்பத் திரண்டறம் வளர்த்தா யிரக்க மில்லையோ
பிள்ளை பெறாமுழு மலடியோ யுலகெலாம் பெற்றதும் பொய்தானோ
பேய்ப்பிளை யாகிலும் பெற்றதா யிகழ்வளோ பிழைபொறுத் துன்கருணை
அள்ளித் தாராதெனைத் தள்ளிவிடல் நீதியோ ……. …………(8)
அன்னையின் அன்பினில் ஆழ்ந்து விட்டால் தான் பிள்ளையெனும் உரிமையுடன் அவளிடம் வேண்டலாமன்றோ?
இத்துடன் அம்பிகை மீதான பிள்ளைத்தமிழ் நூல்கள் பற்றிய சிந்தனைகள் முடிவுறுகின்றன. இனி அவளுடைய திருமகனான முருகப்பெருமான் மீதான ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களைப் பற்றிக் காண்போம்.
(வளரும்)
-

சிறிய கொக்கின் தந்திரம்
இரையைப் பிடிக்க இந்தச் சிறிய கொக்கு செய்யும் தந்திரத்தைப் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

நெற்றியில் நாமத்துடன் தாழைக் கோழி
நெற்றியில் நாமத்துடன் அழகிய தாழைக் கோழி.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

குறளின் கதிர்களாய்…(439)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(439)
மிகினுங் குறையினு நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று.-திருக்குறள் -941(மருந்து)
புதுக் கவிதையில்…
மருத்துவ நூலறிஞர்கள்
சொல்லும்
வாதம் பித்தம் சிலேட்டுமம்
என மூன்றாம்,
உடல்நிலைக்கு ஒவ்வாமல்
ஒருவனின்
உணவும் செயலும்
மிகுதியாயினும்
மிகக் குறையினும்,
மேனியில்
நோய்கள் வரும்…!குறும்பாவில்…
மருத்துவநூலோர் சொன்ன வாதமுதல்
மூன்றாம் உடலுக்கொவ்வா உணவும் செயலும்
மிகுந்தாலும் குறையினும் நோய்வரும்…!மரபுக் கவிதையில்…
வருத்தியே உடலதைச் சாய்த்திடவே
வந்திடும் நோய்களைக் குணப்படுத்தும்
மருத்துவ நூலவர் கண்டறிந்த
மகத்துவக் காரணம் வாதமுதல்
இருந்திடும் மூன்றென உள்ளதான
இவைகளாம் உடலதற் கொவ்வாத
அருந்திடும் உணவதும் செயலதுவும்
அதிகமோ குறையினும் நோய்வருமே…!லிமரைக்கூ…
மருத்துவ நூலோர் கண்டவை,
உடலுக்கொவ்வாத உணவுடன்செயல் கூடினும் குறையினுமவை
நோய்தரும் குணத்தைக் கொண்டவை…!கிராமிய பாணியில்…
நோய்வருமே நோய்வருமே
ஒடலுக்கு நோய்வருமே,
ஏதுவுமே
அளவுக்குமிஞ்சினா நோய்வருமே..மருத்துவ நூலெல்லாம் படிச்சவுங்க
கண்டறிஞ்சி சொன்னபடி
ஒடலுக்கு ஒத்துக்காத
ஒணவும் செயலுமே
அளவுக்கு மிஞ்சியே
கூடிப் போச்சிண்ணாலும்
கொறஞ்சாலும்
கொண்டுவருமே நோயத்தான்..தெரிஞ்சிக்கோ,
நோய்வருமே நோய்வருமே
ஒடலுக்கு நோய்வருமே,
ஏதுவுமே
அளவுக்குமிஞ்சினா நோய்வருமே…! -

மகா சிவராத்திரி: சீவனை அன்பெனக் கோளும் நாள்
பேரா. முனைவர். அழ. நா. அருணாசலம், அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்நாடு
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் நாம் நம்மை முதலில் நேசித்து, அதன் மூலம் நாம் நம் சக மனிதர்களை அன்பு செய்யும் பிரபஞ்ச நோக்கத்தை அடைய, நாம் நம் வினைப்பயனை கடக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய முற்பிறவி கர்ம வினைகள் அனைத்தையும் இறை வழிபாடு என்கிற மந்திர ஜெபம், யாகங்கள், அபிஷேக ஆராதனைகள், உழவாரப் பணி, அன்னதானம், முன்னோர்கள் தர்ப்பணம், ஆன்மிக பணி போன்றவைகள் மூலமாக வழிபாடு செய்து, நம் வினைப் பயனை கடந்து ஆன்ம விமோசனம் பெறவே இந்தப் பிறவி எடுத்து இருக்கிறோம். நாம் வாழும் பூமியை கர்ம பூமி என்று கூறுகிறார்கள். நம்முடைய ஒவ்வொரு செயலும் பாவக் கணக்கில் அல்லது புண்ணியக் கணக்கில் சேரும். பாவபுண்ணியம் பற்றிய சித்தர்களின் கர்ம விளக்கத்தையும் அதை கடக்கும் வழிமுறைகளையும் நம்முடைய தமிழ் மொழியில் ஏராளமான நூல்களில் காணலாம்.
சித்தர்களின் கோட்பாடுகள் மதங்களைக் கடந்தவை, வாழ்க்கை என்னும் மாயப் பிடியில் சிக்காமல் இந்த பிரபஞ்ச இரகசியங்களையும், தன்னை உருவாக்கிய ஆதித் தலைவனையும் உணர்ந்து, நம் வாழ்வில் சகல நலன்களைப் பெறுவதே மகா சிவராத்திரியின் தத்துவம் ஆகும். அனுத் துகள்கள் மற்றும் பிரஞ்சத்தின் அனைத்து இரகசியங்களையும் சித்த மகான்கள் சொல்லியபடி நாம் சிவராத்திரி அன்று வழிபடுவது அறிவியல் சார் மெய் ஞானம் ஆகிறது.
பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் கோடான கோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் நம்மை கடந்து சென்றுக் கொண்டிருகின்றன. இத்தகைய கதிர்வீச்சுக்களை அறிவியல் பூர்வமாக சித்தர்கள் தம் யோக தியான வலிமையினால் இந்த ரகசியங்களை அறிந்து அதை நமக்கு தியான வழிபாடு என்று வெளிப்படுத்தினார்கள். அந்த வலிமையான தினம் மகா சிவராத்திரி என்பதை நமக்கு அறிவித்து சென்று உள்ளார்கள்.
மனிதர்கள் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளி முகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள் முகமாகவும் செயல்படுகிறார்கள். மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது, மேலும் தடுமாறுகிறது. மனிதன் சமநிலை தவறாத வண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க, மகா சிவராத்திரி வழிபாட்டில் தியானம் என்கிற ஒரு முக நிலை நம்மை என்றும் வாழ்வில் உள்முகமாக வைக்க நிலை செய்கிறது.
மகா சிவராத்திரியன்று வழிபாடு செய்து ஆதி சிவனையும், நம் குல தெய்வத்தையும் வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு காணாமல் போய்விடும். அடுத்த வரும் மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான வளம் மற்றும் வலிமை நம்மை வந்து சேரும் என்பது சித்த ரகசியம் ஆகும். மகா சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற வழிபாட்டின் பலனை மகாசிவராத்திரி வழிபாடு ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். தொடர்ந்து பனிரெண்டு சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலையை கிரிவலம் வந்தால், கர்ம வினைகள் அனைத்தும் போய்விடும் என்பது சித்தர்களின் வாக்கு. நித்திய, யோக மற்றும் மகா சிவராத்திரிகள் நம் வினைப்பயன் போக்கும் ஆற்றல் கொண்டது. மகா சிவராத்திரி வழிபாடு மரணம் என்கிற எம பயத்தை போக்கி, அன்று வழிபாடு செய்யும் மக்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என சிவ புராணதில் மாணிக்கவாசகர் கூறுகின்றார். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதின் மூலம் நம் பிணிகள் அனைத்தும் விலகும்.
சித்தர்களின் தலைவராக இருப்பவரும், தமிழ் மொழியை ஈசனிடம் இருந்து பெற்று பூமிக்குக் கொண்டு வந்தவரும், ஜோதிடத்தின் தந்தையும், சித்த மருத்துவத்தின் தந்தையும், மந்திரங்களின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷி பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கிறார்.
சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் பெரும் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னதானம் வழங்கினால் நன்மை உண்டாகும் என்று சித்தர்கள் கூறுகின்றனர். எனவே சிவராத்திரி அன்று வெறும் வழிபாடு மட்டும் வேண்டும் என்கிற கருத்து ஏற்புடையது அல்ல. எனவேதான் பல நூறு ஆண்டுகள் முதல் தொடங்கி இன்று வரை பல குல தெய்வக் கோயில்களில் ஊர்கூடி அன்னதானம் செய்து மகிழ்கின்றனர். தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் மகா சிவராத்திரி வழிபாட்டை உரிய முறையில் செய்தால் அனைத்து பாவங்களும் நம்மை விட்டு நீங்கும். மகா சிவராத்திரி வழிபாட்டை அனைவரும் சேர்ந்து சிவ ஆலயத்திலும், நம் குல தெய்வக் கோயிலிலும் வணங்கி அதன் பின் அன்னதானம் செய்தால் நம் பிறந்த பலனை பரிபூர்ணமாக தெய்வ அருள் கொண்டு பெறலாம் என்பது வாழ்வியல் உண்மை.
உண்மையில் மகா சிவராத்திரியின் நான்கு காலத்திலும் விழித்திருந்து உயர்வான தியான நிலையில் மனம் ஒன்றி சிவத்தை உணர்ந்து சிவம் அருகே செல்ல முயலும் நிலையே மகா சிவராத்திரியின் அடிப்படை ஆகும். மனம் அமைதி கொண்டு தூய நிர்மலமான சிந்தனைகளோடு சிவத்தில் ஒன்றுவது என்பதே மகா சிவராத்திரியின் தாத்பர்யம் ஆகும். மகா சிவராத்திரி அன்று உருவமும் இல்லாது அருவமும் இல்லாத இறையை தியானித்து, நம் மனதை உள்முககமாக பயணிக்கச் செய்வதே முதல் நிலலை. அதன் பின் நாம் நம்மை உணர்ந்து, நாம் நம் தன்மையைக் கடந்து உள் சென்று உய்ய வழி பெறுவதே இறுதி நிலை, இதுவே மகா சிவராத்திரி வழிபாட்டின் மூலக்கரு ஆகும்.
மகா சிவராத்திரி அன்று குறிப்பிட்ட கிரகங்களின் மற்றும் பேரண்டங்களின் கதிர்வீச்சுக்கள் இந்த பூமி முழுவதும் வியாபித்துக் காணப்படும், அதே சமயம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கடியில் இருந்து நீரூற்று பிறப்பெடுத்து ஓடும். இந்த நீரூற்றுதான் சித்தர்கள் கூறும் மூப்பு, அண்டக்கல் என்றழைக்கப்படும் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
மகா சிவராத்திரி நாளில் நாம் செய்யும் தியானமானது, மூன்று மாதங்கள் இடைவிடாது தொடர்ந்து தியானம் செய்தால் கிடைக்கும் பலனைக் கொடுக்கும். இது சித்தர்களின் சாதனை முறை. இதையே நாம் அன்றைய தினம் கண்விழித்து இறைவனை துதி பாடி தியானித்து வருடம் தோறும் கொண்டாடினாலும், சித்தர்கள் சொல்லிய அகக்கண் விழிப்பு நிலையுடன் கூடிய தியான நிலையை பெரிதும் நாம் விட்டு விட்டு, புறக் கண் விழிப்பை மட்டுமே இன்றளவும் செய்து வருகிறோம்.சீவனும் சிவனும் இரண்டு அல்ல, அன்பும் சிவனும் இரண்டு அல்ல, இரண்டும் ஒன்றே என்றும் உணரும் ஆன்ம பேரொளியை நம் ஆன்மாவில் தோற்றுவிக்கும் வழிபாடே மகா சிவராத்திரி. எனவே நாமும் இப்புனித தினத்தில் எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேரியக்க ஆற்றலைக் கிரகித்து “அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார், அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார், அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின் அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே என்று அன்பு செய்து புறக்கண் திறக்கும் வண்ணம் மகா சிவராத்திரியை தியான வழிபாட்டின் மூலம் மேற்கொண்டு அன்பு என்கிற சிவத்தை உணர முயற்சித்து மகிழ்வுடன் வாழ்வோமாக.
-

பக்தியாய் பாடிப் பரவிடுவோம் வாருங்கள்!
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. ஆஸ்திரேலியாவேதத்தின் முதல்வன் விடமுண்டன் கண்டன்
ஆதியந்தம் இல்லான் அருளொளியாய் நிறைவான்
சோதியென எழுந்தான் துடுக்கொழிய வைத்தான்
மாலயனின் மயக்கம் போக்கியவன் நின்றான்மாலயனின் மயக்கம் போக்கிய நாளுலகில்
மகாசிவ ராத்திரியாய் மலர்ந்ததென வுரைப்பார்
சீலமுடன் சிவனை சிரத்தையுடன் எண்ணி
விரதமதை விரும்பி நோற்றிடுவார் அடியார்பசித்திருக்க வேண்டும் தனித்திருக்க வேண்டும்
விழித்திருக்க வேண்டும் மெய்யுணர்தல் வேண்டும்
ஆலமதை உண்ட அருட்கடலாம் சிவனை
அகமிருத்தி விரதம் அனுட்டிக்க வேண்டும்அப்பனுக்கு ஒன்று அம்மைக்கு ஒன்பது
இப்புவியில் விரதமதை ஏற்கின்றார் அடியார்
எல்லாமே இராத்திரியாய் இருப்பதுதான் சிறப்பு
இறையுணர்வை ஊட்டுவதே இதன் நோக்கமாகும்விரதமெனும் வார்த்தை வெறும் வார்த்தையல்ல
பவவினைகள் போக்கும் பாங்கான வார்த்தை
உடலுளத்தைத் தூய்மை ஆக்கிவிடும் வார்த்தை
உணர்வுடனே செய்தால் உயர்நிலையே வாய்க்கும்ஆன்மீகக் கருத்துக்களை அலட்சியமாய் நோக்கும்
அவலமது அலையலையாய் எழுகிறது நாளும்
அறிவியலை நிறைத்தபடி ஆன்மீகம் அமைந்திருக்கு
அதை உணர்ந்தால் அலட்சியமும் அகன்றோடிப்போகும்பிறக்கின்ற நாளெல்லாம் பெம்மானை நினைக்க
இருக்கின்ற வகையினிலே இணைத்தார்கள் முன்னோர்
வையத்து வாழ்வார்கள் வாழ்வாங்கு வாழ
மனஞ்சிறக்க விரதமெலாம் வண்ணமுற வைத்தார்புராணக் கதையெல்லாம் பொருந்துமா என்பார்
பூதலத்தில் கருத்துரைக்க தேர்ந்த வழியன்றோ
கதையுரைத்து கதையுரைத்து கடவுளுணர் வூட்டும்
காரியத்தை புராணமாய் கண்டார்கள் முன்னோர்மூடத் தனமென்று முழஞ்சுழிக்க வேண்டாம்
முன்னோர்கள் சிந்தனையில் முகிழ்த்ததுதான் புராணம்
முன்னைப் பழம்பொருளாய் முதலுக்கும் முதலாக
விண்ணிற்கும் பரம்பொருளை விளக்கியதும் புராணமன்றோதிருமுறைகள் போற்றுகின்ற செம்பொருளாம் சிவனை
சிவராத்திரி தினத்தில் சிந்திப்போம் வாருங்கள்
சித்தர்க்குச் சித்தராம் திருச்சிற்றம் பலத்தானை
பக்தியாய் பாடிப் பரவிடுவோம் வாருங்கள் -

கடவுளின் வடிவம் யாது?
சி. ஜெயபாரதன், கனடா
மனிதனுக்கு
செவிகள் இரண்டு,
கடவுளுக்கு
காதுகள் ஏது மில்லை.
மனிதனுக்கு
கண்கள் இரண்டு,
கடவுளுக்கு
கண்கள் ஏது மில்லை.
மனிதனுக்கு
சுவாசிக்க மூக்கும்
வாயும் உள்ளன.
கடவுளுக்கு
மூக்கு மில்லை,
பேச நாக்கு மில்லை.
மனிதனுக்கு
காலிரண்டு, கையிரண்டு.
எங்கும் நிறைந்த
கடவுளுக்கு
கை, கால்கள் எதற்கு ?
மனிதனுக்கு
உடல் உண்டு, உணவுண்டு.
கடவுளுக்கு
கால வெளியே உடம்பு.
மனிதனுக்கு
இருப்பது சிறுமூளை.
கடவுளுக்கு
உள்ளது பெருமூளை.
மனிதருக்கு
பல்வேறு முகமுண்டு ,
அடையாளம் காண்ப தற்கு.
கடவுள்
முகம் அற்றது.
பிறப்பும், இறப்பும்
சுழற்சியாய்
பெற்றது மனிதன்.
கடவுள்
பிறப்பு இறப்பு
அற்றது.
வயிற்றுக்குள் வளரும்
யானைக் குட்டி
தாயைக் காண முடியாது.
கடவுள்
உருவைக் காண்ப தற்கு
பிரபஞ்ச விளிம்யை
கடக்க வேண்டும்,
நர மனிதன் !



















