Blog

  • நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

    நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

    வேலைக்கான நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி? நிர்மலா ராகவன் தரும் குறிப்புகளைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஹேமமாலினி அண்ணாகண்ணன் வீட்டுக் கொலு

    ஹேமமாலினி அண்ணாகண்ணன் வீட்டுக் கொலு

    சென்னை, தாம்பரத்தில் வசிக்கும் ஹேமமாலினி அண்ணாகண்ணன் வீட்டுக் கொலு இதோ. நித்திலா, அபிநயா, காயத்ரி, ஹரி நாராயணன், தங்கம் மாமி ஆகியோரின் பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குழந்தை வளர்ப்பு – பெற்றோர் செய்ய வேண்டியவை – 2

    குழந்தை வளர்ப்பு – பெற்றோர் செய்ய வேண்டியவை – 2

    குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன? சென்னை, கிழக்குத் தாம்பரம், ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நிர்மல் வழங்கும் உரையின் இரண்டாம் பகுதியைக் கேளுங்கள்.

    Art of Parenting – 2nd part of the speech by Nirmal at Sri Sankara Vidyalaya Matriculation Higher Secondary School, East Tambaram, Chennai. Every parent must watch this video. Please share with all parents.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கெம்மண்குண்டி சுற்றுலாத் தலம்

    கெம்மண்குண்டி சுற்றுலாத் தலம்

    கர்நாடக மாநிலம், சிக்மகளூரு அருகில் உள்ள கெம்மண்குண்டி என்ற சுற்றுலாத் தலம் குறித்து அறிவீர்களா? அங்கே சென்று வந்த வெ.சுப்ரமணியன், இந்தப் பதிவின் மூலமாக நம்மையும் அங்கேயே அழைத்துச் செல்கிறார். அவருடன் இணைந்து, இயற்கை அழகு கொஞ்சும் இந்த மலையைக் கண்டு களிப்போம் வாருங்கள்.

    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆண்குயிலும் பெண்குயிலும்

    ஆண்குயிலும் பெண்குயிலும்

    நான் ஓர் அதிர்ஷ்டசாலி. ஆண்குயிலும் பெண்குயிலும் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதைப் பார்ப்பதே அரிது. இவற்றை நம் வீட்டு ஜன்னல் வழியே அடிக்கடி பார்க்கிறேன், படமும் எடுக்க முடிகிறது எனில், இதை வேறு எப்படி அழைப்பது? இந்த அரிய காட்சியைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 25 | வேதா கோபாலன்

    சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 25 | வேதா கோபாலன்

    மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ள 2023 – 25 ஆண்டுகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வள்ளலார் காட்டும் மரணமிலாப் பெருவாழ்வு

    வள்ளலார் காட்டும் மரணமிலாப் பெருவாழ்வு

    திண்டிவனத்தில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் செல்வி வி.கிருத்திகா, ‘வள்ளலார் காட்டும் மரணமிலாப் பெருவாழ்வு’ என்ற தலைப்பில் இன்று ஆற்றிய உரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(420)

    குறளின் கதிர்களாய்…(420)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(420)

    யாதனின் யாதனி னீங்கியா னோத
    லதனி னதனி னிலன்.

    -திருக்குறள் – 341 (துறவு)

    புதுக் கவிதையில்…

    வையத்து வாழ்வில்
    எந்தெந்தப் பொருள்மீது
    வைத்திருக்கும் பற்றினை
    உண்மையிலே துறந்த
    ஒருவனுக்கு,
    அந்தந்தப் பொருட்களால் வரும்
    துன்பமேதும் வருவதில்லை…!

    குறும்பாவில்…

    எந்தப் பொருள்மீதுள்ள பற்றை
    எவன் துறந்துலகில் வாழ்கிறானே அவனுக்கு
    அந்தப்பொருளால் வருந்துன்பம் இல்லை…!

    மரபுக் கவிதையில்…

    வாழ்விது தன்னில் எப்பொருளில்
    வைத்திடும் பற்றில் முழுதுமாக
    ஆழ்ந்திடா வகையில் எவனொருவன்
    அதனையே துறந்து பற்றின்றி
    வாழ்ந்திடும் வாழ்வி லவனுக்கே
    வருவதே யில்லை அப்பொருளால்
    வீழ்த்திடும் துன்பம் வேறெதுவும்
    வேதனை தரவே வாராதே…!

    லிமரைக்கூ…

    பற்றைத் துறந்தான் பொருளில்,
    அவனுக் கப்பொருளால் அவதியே வராதே
    ஆட்டிடும் துன்ப இருளில்…!

    கிராமிய பாணியில்…

    துன்பமில்ல துன்பமில்ல
    வாழ்க்கயில துன்பமில்ல,
    ஒலகத்துப் பொருள்களுல
    ஆசயத் தொறந்தவனுக்கு
    துன்பமில்ல துன்பமில்ல..

    எந்த எந்த பொருள்மீது
    ஒருத்தன் பற்றுதல் இல்லாம
    தொறவு வாழ்க்க வாழுறானோ
    அவனுக்கு
    அந்தப் பொருளால
    எந்தத் துன்பமும் வராதே..

    தெரிஞ்சிக்கோ,
    துன்பமில்ல துன்பமில்ல
    வாழ்க்கயில துன்பமில்ல,
    ஒலகத்துப் பொருள்களுல
    ஆசயத் தொறந்தவனுக்கு
    துன்பமில்ல துன்பமில்ல…!

    Share
  • குழந்தை வளர்ப்பு – பெற்றோர் செய்ய வேண்டியவை

    குழந்தை வளர்ப்பு – பெற்றோர் செய்ய வேண்டியவை

    குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன? சென்னை, கிழக்குத் தாம்பரம், ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நிர்மல் வழங்கும் உரையைக் கேளுங்கள்.

    Art of Parenting, a speech by Nirmal at Sri Sankara Vidyalaya Matriculation Higher Secondary School, East Tambaram, Chennai. Every parent must watch this video. Please share with all parents.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோல எழில் கொஞ்சும் கொலு

    கோல எழில் கொஞ்சும் கொலு

    சென்னையில் காணக் கிடைத்த கோல எழில் கொஞ்சும் கொலு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக் கவசம்

    விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக் கவசம்

    சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து, நவராத்திரியை மக்கள் கொண்டாடினார்கள். ஊர்கூடி நடத்திய இந்த உற்சாகத் திருவிழாவைக் கண்டு களியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கணாம்பாள் | அருணா ஸ்ரீதர் வீட்டுக் கொலு

    கணாம்பாள் | அருணா ஸ்ரீதர் வீட்டுக் கொலு

    குத்துவிளக்கை அம்பிகையாக அலங்கரிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், குத்துவிளக்கைக் கணபதியாக, கணபதி அம்பாளாக, கணாம்பாளாக அலங்கரித்துள்ளதைப் பார்த்துள்ளீர்களா? இதோ அருணா ஸ்ரீதர் வீட்டுக் கொலுவில் இந்தப் புதுமையைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொற்பதம் பணிந்தோமம்மா நற்றுணை என்றும்நீயே! [சரஸ்வதி துதி]

    பொற்பதம் பணிந்தோமம்மா நற்றுணை என்றும்நீயே! [சரஸ்வதி துதி]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    மாதரது குரலிலும் மழலையரின் மொழியிலும்
    கீதமென ஒலித்திடும் குயிலனது குரலிலும்
    பேதமற அமர்ந்துமே பெருங்கருணை பொழிகிறாய்
    வீணையினை மீட்டிடும் வெண்டாமரை வாணியே

    நூல்பல கற்கவேண்டும் நுண்பொருள் உணரவேண்டும்
    வாய்மையாய் வாழவேண்டும் மனவழுக் ககலவேண்டும்
    தாழ்மையாய் இருக்குமெண்ணம் தான்மன மமரவேண்டும்
    வாணியே வேண்டுகின்றோம் வழங்கியே நிற்பாயம்மா

    கற்றவர் அணைக்கவேண்டும் மற்றவர் மதிக்க வேண்டும்
    நற்றமிழ் நாவிலென்றும் நடமிட்டு நிற்கவேண்டும்
    சொற்றமிழ் சிறக்கவேண்டும் சுவையுடன் பாடவேண்டும்
    பொற்பதம் பணிந்தோமம்மா நற்றுணை என்றும்நீயே

    ஞானியர் போற்றுமம்மா நான்மறை உணர்த்துமம்மா
    தேனினும் இனிமைமிக்காய் தெளிவினை ஊட்டுகின்றாய்
    வானவர் வியக்குமாறு மதியினைத் தந்துநின்று
    வையத்தார்  விரும்புவண்ணம் வைத்திட்டாய் வாணித்தாயே

    ஏழைகள் கற்கவேண்டும் இருப்பவர் ஈய்தல்வேண்டும்
    வாழ்விலே கல்விச்செல்வம் வானோங்கி நிற்கவேண்டும்
    தோழமை உணர்வுகொண்டு கற்றவர் இணையவேண்டும்
    நாளெலாம் பரவுகின்றோம் நல்லருள் புரிவாயம்மா

    Share
  • எனை நீ மறவாதே | கிருஷ்ணகுமார்

    எனை நீ மறவாதே | கிருஷ்ணகுமார்

    எம்.‌எம். தண்டபாணி தேசிகர் இயற்றிய ‘எனை நீ மறவாதே அங்கயற்கண்ணி எனை நீ மறவாதே’ என்ற புகழ் பெற்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியம்: ஜெயந்தி சங்கர்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share