Blog

  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 3

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 3

    மீனாட்சி பாலகணேஷ்

    இத்தொடரின் அடுத்த பகுதியாக அம்பிகை மீதான பல பிள்ளைத்தமிழ் நூல்களைக் காண உள்ளோம்.

    1. இணுவில் கௌரி அம்பாள் பிள்ளைத்தமிழ்

    நாம் முதலில் காணப்போவது ஒரு பெண்பாற் புலவரால் இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல். கலாபூஷணம், பண்டிதை திருமதி. வைகுந்தம் கணேச பிள்ளை என்பவரே 2016ம் ஆண்டில் இதனை இயற்றியுள்ளார். இதுவே நான் கண்ட பிள்ளைத்தமிழ் நூல்களுள் முதன்முதலாக ஒரு பெண்பாற் புலவரால் இயற்றப்பட்டதாகும். பருவத்திற்கு ஐந்து பாடல்கள் வீதம் கொண்ட இப்பிள்ளைத்தமிழ் நூல் எழுந்த வரலாறு சிலிர்க்க வைப்பது. இவ்வம்மையார் ஏற்கெனவே இணுவில் கௌரி அம்பாள் மீது திருப்பள்ளி எழுச்சி, திருவூஞ்சல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். திருப்பள்ளி எழுச்சி நூலுக்கு ஒரு பெரியவரிடம் ஆசியுரை வேண்டியபோது அவர் அதனைப் பிள்ளைத்தமிழ் நூலெனக் கருதிவிட்டமையால், அதற்கான ஆசியுரை இவருக்குக் கிடைத்ததாம். ஆகவே இதனை, கௌரி அம்பாளின் ஆணையாகவே கருதி, அன்னைமீது ஒரு பிள்ளைத்தமிழையே இயற்றியுள்ளார் இவ்வம்மையார்.

    இணுவியம்பதியில் கௌரி அம்பாள் தெற்கில் வேப்பமரத்தடியில் குடிகொண்டு வேண்டுவோர்க்கு எல்லா நலன்களையும் அருளி வருகிறாள். இந்த அருமையான நூலிலிருந்து சில நயங்களைக் காண்போமா?

    காக்குங்கடவுளான திருமாலைப் பாடும் வழக்கிற்கு மாறாகப் பரராசசேகர விநாயகரின் காப்புப்பாடலுடன் நூலைத் தொடங்கியுள்ளார். இவையனைத்தும் பலப்பல நயங்களுடன் அமைந்த பாடல்கள்.

    செங்கீரைப் பருவத்துப் பாடலொன்றில்,

    பன்னிருகையுடையான் முருகனின் அன்னையே உமையே
    குன்றக்குற நாயகி வள்ளியும்
    தேவகுஞ்சரியும் வந்து வந்து
    கன்னத்தில் முத்தமிட்டுக்செல்லுகிறார் கண்ணே
     …….. ………… …………
    ……… ஆடுக செங்கீரை

    எனும் வரிகள் புதுவிதமான கற்பனை நயத்திற்குச் சான்றாகும். உமையென்னும் மாமியைக் குழந்தையாக்கி, அவளுடைய மருமகள்கள் வந்து கொஞ்சுவதாகச் செய்த கற்பனை ரசிக்கத்தக்கது.

    மீனாட்சி, அபிராமி, காமாட்சி, என அம்பிகையின் பல அவதாரங்களையும் ஆங்காங்கே பொருத்திப் பாடியுள்ளார். பல தொன்மங்களும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப ஆங்காங்கு பொருந்திநின்று அழகு செய்கின்றன.

    முத்தப்பருவத்துப் பாடலொன்று: சிவபிரான் தன் காலால் செய்ததொரு செயலுக்கீடாக அம்பிகை காலால் தட்டி மகிஷாசுரனை வதம்செய்த செய்தியையும் சந்த நயத்துடன் போற்றுகிறது.

    எட்டிக்காலால் உதைத்துக் காலனைக்
    காலம் செய்த சிவனார் பாகத்து
    அமர்ந்தவளே அகமகிழ்ந்து முத்தந்தருகவே
    தட்டிக்காலால் மகிஷனை வதம்செய்த தேவி
     ……………………………….
    ……….. முத்தந் தருகவே.

    குமரகுருபரர் மீனாட்சியம்மையை, ‘துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே’ எனப் பாடியது போலவே இதிலும் ‘தெள்ளுதமிழ்ப் புலவோர் நாவிருக்குந் தமிழே வருக’ என்றும், சங்கமிருந்த தாயே என்றும், கன்னித்தமிழே வருக என்றும் பல பாடல்களில் அமைந்துள்ளதைக் கண்டு களிக்கலாம்.

    ‘பெண்குலங்காக்க வருக’ எனச் சிறப்பாக மகளிருக்கான வேண்டுதலை முன்வைப்பதனையும் காணலாம்.

    அம்புலிப்பருவத்தின் பாடலொன்றில், அம்புலிக்கு அச்சுறுத்தலாக ‘தண்டம்’ எனும் உபாயத்திலமைந்த பாடலில்,

    ‘மனிதர் ஏவும் ஏவுகணை தாக்குமுன்னம் அம்புலீ
    அம்பிகையுடன் விளையாடவாவே’ எனவும் பாடியுள்ளார். இது நவீன யுகத்திற்கேற கருத்தாகக் காண்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

    மொத்தத்தில் மிக இனிய அருமையான நூலிதாகும்.

                                                               ————————–

    2. தெல்லிப்பழை ஸ்ரீ துர்காதேவி பிள்ளைத்தமிழ்

    இது 1999-ல் அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவரால் ஆக்கப்பட்ட நூலாகும். இவர் ஒருமுறை இவ்வன்னையின் கோவிலுக்குச் சென்றபோது அவரது நாவில் அன்னை அட்சரமெழுதி, நெற்றியிலே திருநீறும் பூசினாளாம். பின்னரே இவர் அன்னைமீது பல நூல்களை இயற்றினார். இவரே 1974-ல் பருவத்துக்கொரு பாடல்வீதம் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்களால் இவ்வன்னைமீதே ஒரு பிள்ளைத்தமிழ் நூலைப் பாடியுள்ளார். இரண்டாவது பாடிய நூல் பருவத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் பெண்பால் பிள்ளைத்தமிழாக அமைந்துள்ளது. இவையனைத்தும் அம்மையின் அருளே எனலாம்.

    இனி, சில பாடல்களின் நயங்களைக் கண்டு மகிழலாம். தமிழ்மொழியின் நயங்களை அன்னைக்கு அலங்கார அணிகளாகச் சூடும் பாடல்கள் பல இந்நூலில் காணக்கிடைக்கின்றன.

    சங்கத்தமிழ் உலவும் சந்தன வீதியுடையதாகப் புலவர் துர்க்காபுரத்தைக் குறிப்பிடுகிறார். குழந்தை முருகனைத் தம் மடியில் கிடத்தி, அவனுடைய மழலைமொழிகளைக் கேட்கும் அம்பாளை,

    “சங்கத்தமிழின் முதுதலைவி
    தமியேற் கிரங்காய் தாலேலோ
    சந்தன வீதித் துர்க்கைபுரச்
    சாந்தினி தாலோ தாலேலோ” என்பார் ஒரு தாலப் பாருவப் பாடலில்.

    ‘சைவமுயர் தெல்லிநகர்த் துர்க்காபுரத்திறைவி’ எனவும் சப்பாணிப் பருவப் பாடலில் போற்றுவார்.

    அம்புலிப்பருவத்து அழகான பாடலொன்று: மதி என்பவன் சந்திரன். இது சந்த்ரரூபியாகிய பராசக்தியையும் குறிக்கும் வண்ணம் இசைத்த பாடலொன்று.

    திருஞானசம்பந்தருக்குத் தன் முலைப்பாலையூட்டுவித்துப் பாடவைத்த ஞான மதி இவ்வம்மை! அபிராமி பட்டருக்காகத் தன் தோட்டினை ஆகாயத்தில் வீசியெறிந்து நிலவாக்கிக் காட்டிய மதி இவள். அரிகேசன் என்னும் தவச்சிறுவனுக்குக் காசியிலே அன்னதாதா, பிராணதாதா, ஞானதாதா எனும் பதவி கொடுத்த மதி. தமன் என்பவன் தீபமேற்றித் தவமிருந்து சிவன்-பார்வதியைப் பார்க்கக்கூடிய கண்களைக் கேட்டான். காசி விஸ்வநாதனும் அன்னை விசாலாட்சியும் அவ்வரத்தைக் கொடுத்தனர். இருவரையும்  பார்த்த தமன் ஒருகண் பார்வையை இழந்தான். அழுது புலம்பினான். மதியான இறைவி அக்கண்ணைப் பொற்கண்ணாக்கினாள். அவனே குபேரன் எனும் அளகாபுரிக்கு அதிபன். வியாசமுனிவனுக்கு சுகரைத் தந்த சிவபிரானின் திருமதியாகிய இவளைப் புறக்கணித்து மதி கெட்டலையாதே அம்புலியே! இப்படிப்பட்ட தெல்லிநகர்த் துர்க்கையுடன் வந்து விளையாடுவாய் என விளிக்கும் பாடல்.

    பரவுமுலைப் பால்கொடுத்துப்
    பாடுவித்த ஞானமதி
    பட்டருக்காய்த் தோடெறிந்த
    பழமமிர்த லிங்கமதி
    அரவாக்கி விட்டுணுவை
    ஐங்கரன்சீர் விளக்குமதி
    அரிகேசன் காசியிலே
    அணிவிளங்கச் செய்தமதி
    குருமுகமாய்த் தமனுக்குக்
    குளிர்பொற்கண் கொடுத்தமதி
    குலமுனிவர் வியாசனுக்குக்
    குணச்சுகரைத் தந்தசிவத்
    திருமதியைப் புறக்கணித்து
    செயல்மதிகெட் டலையாதே
    தெல்லிநகர்த் துர்க்கையுடன்
    சேர்ந்தாடாய் அம்புலியே.

    மதி எனும் சொல்லைப் பலமுறை பயன்படுத்திய அரிய பாடலிது. இவ்வாறு படித்து, ரசித்து மகிழப் பல பாடல்கள் இந்நூலில் உள்ளன.

        ————————–

    3. நயினை நாகபூஷணியம்மை பிள்ளைத்தமிழ்

    1977-ல் பன்னூல் வித்தகரான கரவை வ. சிவராசசிங்கம் அவர்களால் இப்பிள்ளைத்தமிழ் நூல் இயற்றப்பட்டு யாழ்ப்பாணம் சைவத் தமிழ்க் கழகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

    இக்கோயில் எங்கு அமைந்துள்ளது, அதன் சுவையான வரலாறு என்னவெனக் காண்போம். இலங்கையின் நயினைதீவு நாகபூஷணி அம்பாள் எவரும் தன் தோற்றத்தை அறிய முடியாத சுயம்பு மூர்த்தமாக உள்ளவள். இலங்கையின் பூர்வ குடிகள் இயக்கர், நாகர், வேடர் என்பது வரலாறு. இவருள் நாகர்கள் ஆதித்திராவிடர்களான தமிழர்கள். இவர்களது வழிபாட்டுத்தலமாக விளங்கியது நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயம். இதன் வேறுபெயர்கள் நாகதீவு, மணிபல்லவம், நாகதீபம், மணித்தீவு எனவெல்லாமாகும். மணிமேகலை எனும் காப்பியத்தில் குறிப்பிடப்படும் ‘மணிபல்லவம்’தான் நயினாதீவு என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. இது அறுபத்துநான்கு சக்திபீடங்களில் ஒன்றாகிய புவனேஸ்வரி பீடம் என்று அறியப்படுகின்றது.

    இந்நூலிலிருந்து சுவையான சில பாடல்களைக் காணலாம்.

    செங்கீரைப்பருவத்தைப் பாடும்போதில் தவழ்ந்தாடி வரும் குழந்தையின் அணிகலன்கள் எவ்வாறு அசைகின்றன, ஒலிக்கின்றன எனக் கவித்துவமாகப் பாடிக் களிப்பர் புலவர் பெருமக்கள். மார்பிலணி ஆரங்கள் அசைந்தாடும் என்பது வழக்கு. ஒரு பாடலில் நயினை வளர் அம்மை மார்பின்மீது ஆணிமுத்தாரம் மட்டுமின்றி அடியார் பாடும் பாமாலையும் அசைந்தாடுகிறதென்கிறார். இது ஒரு புத்தம்புதிய அரிய கற்பனை!

    …………………………………
    ஐயர்திரு மேனியைத் தழுவிக் குழைக்கவென்
    றமைந்தமணி மார்பகத்தே
    ஆணிமுத் தாரமும் அடியார்பா மாலையும்
    அசைந்திசைந் தொலி செய்தாட
    செய்யமல ரடிதனிற் கிண்கிணி சிலம்பிடச்
    செங்கீரை யாடி யருளே
    தெள்ளுதமிழ் நயினைவளர் கிள்ளைமொழி நாகம்மை
    செங்கீரை யாடி யருளே.

    தாலப் பருவத்தின் ஒரு பாடலும் மிகப் புதுமையான இயற்கைக் காட்சியை விளக்கி, அதனை அம்மையப்பரோடு ஒப்பிட்டுப் போற்றுகிறது. கொன்றைமரத்தின்மீது குருக்கத்தி படர்ந்துள்ளதாம். இவற்றை வெண்மையான மலர்களைக்கொண்ட மல்லிகை சூழ்ந்துள்ளது; இதில் கொன்றை சிவபெருமானையும், பசுமை நிறங்கொண்ட குருக்கத்தி சியாமளை என்னும் அம்பிகையையும், நினைவு படுத்துகின்றன. கொன்றையும் குருக்கத்தியும் இணைந்தது அம்மையப்பர் திருவுருவாகும். இது இவ்விருவரும் முத்தாலான விதானமமைந்த (தொங்கும் மாலைகளான மல்லிகை மலர்கள் முத்துவிதானத்துக்கு உவமை) தேரில் பவனிவருவது போலுள்ளதாம். எத்துணை இனிய கற்பனை! முழுப்பாடலையும் காணலாமே!

    கொத்துக் கொத்தாய் மலர்ந்த பொலங்
    கொன்றை மரத்தின் மீதுமிகக்
    குழைத்துச் செழித்து மணிப் பசுமை
    கொண்ட குருக்கத் திச்செடிபோய்த்
    தொத்திப் படர்ந்து கிடக்க நெடுந்
    தூரமணக்கும் மல்லிகை மேல்
    தொங்க லிட்டுச் சூழ்ந்திருக்கும்
    தோற்றம் நோக்கும் அடியவர்க்கு
    முத்து விரித்த விதான முறு
    முழுமா மணித்தே ரூர்ந்துவரு
    முக்கண் மூர்த்தி நின்னொடருள்
    முகிழ்த்த கோலம் அளிக்கின்ற
    சித்ரப் பொழில்சூழ் நயினை வளர்
    செல்வி தாலோ தாலேலோ
    சிவனார் இடம்வாழ் நாகம்மைத்
    தேவி தாலோ தாலேலோ.

    அடுத்து, வருகைப்பருவப்பாடலொன்று மெய்யடியார்களை எவ்வாறு அன்னை பிறவிப்பிணியினின்றும் நீக்குவாள் என விவரிக்கிறது. அடியவரின் கருத்தினுட் புகுந்து ஞான ஒளி கொடுத்து உய்யும் நெறியைக் காட்டி, கருவில் புகாவகையையும் உணர்த்தியருளுகிறாள் நயினை நாகம்மை!

    கருவிற் புகுதா வகையெனது
    கருத்திற் புகுந்துள் ளொளிபெருக்கிக்
    கதிபெற் றுய்யும் நெறிகாட்டும்
    கதிரே வருக ………………. என்பன பாடலின் சில வரிகள்.

    இது போன்ற எண்ணற்ற பாடல்கள். தமிழன்பர்கள் படித்துப் போற்ற வேண்டிய நூலிதுவாம். தொடர்ந்து மேலும் பல நூல்களைக் காண்போம்.

    (வளரும்)

    Share
  • அரிசி பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி?

    அரிசி பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி?

    அசத்தல் சுவையில் ஆளையே தூக்கும் அரிசி பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி? ஹேமமாலினி வழங்கும் செய்முறை இதோ. தீபாவளி நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(422)

    குறளின் கதிர்களாய்…(422)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(422)

    வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை.

    -திருக்குறள் – 439 (குற்றங்கடிதல்)

    புதுக் கவிதையில்…

    அனைத்திலும் மேன்மையுற்றே
    அரசன் உயர்நிலை பெறுங்காலத்தும்
    அவன்
    தன்னைத்தான் உயர்வாகத்
    தற்செருக்கால் எண்ணக்கூடாது,
    நாட்டிற்கும் தனக்கும்
    நன்மைதராச் செயல்கள் செய்ய
    நினைவில்கூட விரும்பக்கூடாது…!

    குறும்பாவில்…

    தன்நிலை உயர்ந்த போதிலும்
    எக்காலத்தும் அரசன் தற்செருக்கில் இருக்கக்கூடாது,
    நன்மைதராச் செயல்செய்ய விரும்பலாகாது…!

    மரபுக் கவிதையில்…

    நாட்டைக் காக்கும் அரசனவன்
    நானே எல்லாம் என்றேதான்
    வாட்ட மில்லா உயர்வினிலும்
    வஞ்சச் செருக்கால் எண்ணவேண்டாம்,
    நாட்டு நன்மை யுடனேதான்
    நன்றாய்த் தனக்கும் நன்மைதராக்
    கேட்டை மட்டும் தருஞ்செயலைக்
    கேடாய் எண்ணிச் செய்யாதே…!

    லிமரைக்கூ…

    தானுயர்வெனத் தற்செருக்கு பண்ணாதே
    தன்நிலை உயர்ந்தபோதும், நாட்டுக்கும் நன்மை
    தராச்செயலை விரும்பிச்செய்ய எண்ணாதே…!

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம்
    தானுங்கிற தற்பெரும,
    வேண்டவே வேண்டாம்
    நாட்டுக்குக் கேடுசெய்ய நெனைப்பே..

    தன்னோட நெலயில
    ஒசந்த நேரத்திலயும்
    ஒருநாளும் வேண்டாம் ராசாவுக்கு
    தானுங்கிற கெறுவம்,
    நாட்டுக்கும் தனக்கும்
    நன்மதராத செயலெதயும் செய்ய
    நெனைக்கக்கூட வேண்டாமே..

    அதால
    வேண்டாம் வேண்டாம்
    தானுங்கிற தற்பெரும,
    வேண்டவே வேண்டாம்
    நாட்டுக்குக் கேடுசெய்ய நெனைப்பே…!

    Share
  • நாசாவின் முதற்பெரும் வெற்றி: விண்கணை தாக்கி விண்பாறை சுற்றுப் பாதை சிறிதாகி உள்ளது

    நாசாவின் முதற்பெரும் வெற்றி: விண்கணை தாக்கி விண்பாறை சுற்றுப் பாதை சிறிதாகி உள்ளது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    NASA Confirms DART Mission Impact Changed Asteroid’s Orbit in Space

    https://www.nasa.gov/press-release/nasa-confirms-dart-mission-impact-changed-asteroid-s-motion-in-space

    நாசாவின் பூகோளப் பாதுகாப்பு அசுர விண்வெளி சாதனை

    2022 செப்டம்பர் 26 இல் நாசா பூமியிலிருந்து 7 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனைச் சுற்றிவரும் ஒரு விண் பாறையைக் குறிவைத்து தாக்கி அதன் சுற்றுப் பாதையை மாற்றி உள்ளது. அச்சிறு விண்பாறை மற்றுமோர் பெரும் விண்பாறையைச் சுற்றி வருகிறது. இந்த இரட்டை விண்பாறை அமைப்பைச் சூரிய மண்டலத்தில் பின்பற்றித் தாக்குவது சற்று எளிதாகத் தோன்றினாலும், மெய்யாக இது ஓர் இமாலய முயற்சியே.  சிறிய பாறை பெரிய பாறையை  ஒரு முறை சுற்ற 11:55  மணி நேரம் எடுத்தது. விண்கணை மோதலுக்குப் பிறகு 32 நிமிடம் குறைந்து, 11:23 நேரம் பிடித்தது.

    இந்த வெற்றிகரமான விண்வெளிச் சாதனை பூமிமேல் விண்பாறை விழுந்து பிரளயப் பேரிடர் நிகழும் எதிர்கால பயத்தை நீக்கியுள்ளது.

    https://youtu.be/Zhzn0U2m5wQ

    https://youtu.be/RoAR3I7Fvcg

    https://youtu.be/R3dzwZJUKI8

    https://youtu.be/HyqzK2hC0sA

    Update on DART Mission to Asteroid Dimorphos (NASA   News Conference Oct. 11, 2022)

    Streamed live on Oct 11, 2022 Experts discuss early results of the NASA’s Double Asteroid Redirection Test (DART) mission and its intentional collision with its target asteroid, Dimorphos.


    On Monday, Sept. 26, DART successfully impacted its asteroid target in the world’s first planetary defense technology demonstration. As a part of NASA’s overall planetary defense strategy, DART’s impact with the asteroid Dimorphos will help to determine whether asteroid deflection using a kinetic impactor spacecraft is a viable mitigation technique for protecting the planet from an Earth-bound asteroid or comet, if one were discovered. Johns Hopkins APL manages the DART mission for NASA’s Planetary Defense Coordination Office as a project of the agency’s Planetary Missions Program Office. Neither DART’s target asteroid, Dimorphos, nor its larger asteroid parent, Didymos, poses a hazard to Earth.

    Participants include: • NASA Administrator Bill Nelson • Italian Space Agency President Giorgio Saccoccia DART update panel: • Lori Glaze, director of the Planetary Science Division at NASA Headquarters in Washington • Tom Statler, DART program scientist at NASA Headquarters • Nancy Chabot, DART coordination lead at the Johns Hopkins Applied Physics Laboratory (APL) in Laurel, Maryland More on DART: https://nasa.gov/dart

    https://youtu.be/C2O5nBo0wMU

    Nasa‘s asteroid-deflecting DART spacecraft successfully slammed into its target on Monday, 10 months after launch. The test of the world’s first planetary defense system will determine how prepared we are to prevent a doomsday collision with Earth.

    https://www.dailymail.co.uk/sciencetech/article-11203413/NASAs-asteroid-deflecting-DART-mission-explained.html

    https://www.dailymail.co.uk/sciencetech/article-11203413/NASAs-asteroid-deflecting-DART-mission-explained.html

    What is DART?

    DART was the first-ever mission dedicated to investigating and demonstrating one method of asteroid deflection by changing an asteroid’s motion in space through kinetic impact.

    விண்பாறை மீது நேரடியாக மோதி வேறு பாதைக்கு நகர்த்தும் நாசாவின் முதல் முயற்சியில் வெற்றி.

    2022 செப்டம்பர் 26 ஆம் தேதி ஏவிய டார்ட் [DART – DOUBLE ASTROID RE-DIRECTING TEST SPACECRAFT] விண்கணை முதன்முதல் பூமியிலிருந்து 7 மில்லியன் மைல் [11 மில்லியன் கி.மீ] தூரத்தில் சூரியனைச் சுற்றிவரும், திமார்போஸ் / திடிமாஸ் [Dimorphos / Didymos] என்னும் இரட்டை விண்பாறைகளில் ஒன்றை மோதி, அவற்றின் பாதையை மாற்றி யுள்ளது. இவற்றில் திடிமாஸ் பெரியது. அதைச் சுற்றிவரும் திமார்போஸ் சிறியது. டார்ட் விண்கணை மோதிய விண்பாறை சிறியது. விண்கணை மோதியால் பாதை எவ்விதம் மாறியுள்ளது, என்று விஞ்ஞானிகள் விண்ணோக்கிகள் மூலம் கணித்து வருகிறார் நாசாவின் இந்த முதல் விண்வெளி முயற்சி எதிர் காலத்தில் பூமியை எதிர்நோக்கி மோத வரும் விண்பாறைகளைத் திசை திருப்பும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடையும்.

    டார்ட் விண்கணை 2021 நவம்பர் 24 இல் ஸ்பேஸ் X ஃபால்கன் -9 [SPACEX FALCON -9] ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. விண்பாறையில் மோதிய வேகம் சுமார் மணிக்கு 14,000 மைல். இந்த விண்வெளிச் சாதனை “பூகோளப் பாதுகாப்பு” [Planetary Defense] என்னும் அகில நாட்டு கூட்டுழைப்பில் நிதி செலவழிக்கப் படுகிறது. இந்த இரட்டை விண்பாறை போக்கு முறைகளைக் கண்காணித்து வருபவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பௌதிக வினை ஆய்வுக் [Johns Hopkins Applied physics Laboratory Team] குழுவினர். இந்த விண்வெளித் திட்டத்துக்கு நிதிச் செலவு 308 மில்லியன் டாலர். விண்பாறையின் அகலம் : 525 அடி, டார்ட் விண்கணையின் எடை 570 கி.கிராம்.. அடுத்து 2024 ஆண்டில் ஏவப்படும் விண்சிமிழ் 2026 இல் விண்பாறையுடன் இணைந்து ஆய்வுகள் புரியும். விண்கணை மோதி விண்பாறைகள் பாதைகள் மாற்றம் இப்போது கணிக்கப்படும்.

    ************************************

    1. https://www.dailymail.co.uk/sciencetech/article-11203413/NASAs-asteroid-deflecting-DART-mission-explained.html

    2.https://ca.news.yahoo.com/nasa-dart-mission-live-space-115530230.html

    3.https://jayabarathan.wordpress.com/2019/04/27/hayabusa-2-impactor-on-asteroid/

    Share
  • மனமகிழ தீபாவளி வருகிறது வாழ்வில்!

    மனமகிழ தீபாவளி வருகிறது வாழ்வில்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    மனமகிழ மனநிறைய கொண்டாடி நிற்க
    தினமதனை முன்னோர்கள் வகுத்துமே நின்றார்
    அறிவுடனும் தெளிவுடனும் அவரளித்த கொடையே
    ஆனந்தம் பெருக்குகின்ற திருநாட்க ளாகும்

    தீபமது வாழ்வினிலே சிறப்பளித்து நிற்கும்
    தீபவொளி எல்லோர்க்கும் மங்கலமே ஆகும்
    மாவிருளைப் போக்குதற்கு தீபவொளி தேவை
    மனமகிழ  தீபாவளி வருகிறது வாழ்வில்

    பக்தியொடு பக்குவமும் பாங்காகக் கொண்டு
    பலர்மகிழத் தீபாவளி வருகிறது பாரில்
    சுற்றமெலாம் சூழ்ந்திருந்து சுவைபயக்கும் நாளாய்
    இப்புவியில் தீபாவளி அமைந்திருக்கு எமக்கு

    தீமையெனு மெண்ணம் திசையறியாப் போக
    தீபாவளி எமக்கு வாய்த்திருக்கு வாழ்வில்
    ஞானமதை உணர்த்தி நற்கருமம்  ஆற்ற
    மாநிலத்தில் தீபாவளி வாய்த்திருக்கு எமக்கு

    புத்தாடை எமக்குப் புத்துணர்வை ஊட்டும்
    மத்தாப்பு பட்டாசு மனமகிழ்வைக் காட்டும்
    சொத்தான சுற்றங்கள் சுவைமிக்க உணவு
    அத்தனையும் தீபாவளி ஆனந்தப் பரிசே

    விலவாசி ஏற்றம் விண்ணைத் தொடுகிறது
    வேலையின்றி பலபேர் நாளுமே பெருகுகிறார்
    எரிபொருளின் விலையோ எரிச்சலைத் தருகிறது
    என்றாலும் தீபாவளி எமையணைக்க வருகிறதே

    போர்மேகம் ஒருபக்கம் போட்டியோ மறுபக்கம்
    பொறுப்பின்றி செயலாற்றும் நாடுகளோ பலபக்கம்
    வறுமை ஒருபக்கம் வாய்த்தர்க்கம் ஒருபக்கம்
    வரவிருக்கும் தீபாவளி இவைபோக்க உதவிடட்டும்

    தித்திப்பை மனமிருத்த தினமே நினைப்போம்
    எத்திக்கும் ஆனந்தம் பெருகிடவே எண்ணுவோம்
    சித்தமதில் இறையெண்ணம் என்றுமே இருந்திட்டால்
    இப்புவியில் எல்லாமே இன்பமாய் ஆகிவிடும்

    Share
  • குலாப் ஜாமூன் செய்வது எப்படி?

    குலாப் ஜாமூன் செய்வது எப்படி?

    மிக எளிதாக, குலாப் ஜாமூன் செய்வது எப்படி? ஹேமமாலினி வழங்கும் செய்முறை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குயிலும் காக்கையும் – அதிசயக் காட்சி

    குயிலும் காக்கையும் – அதிசயக் காட்சி

    காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடுவது தெரிந்ததே. அப்போது காக்கை, குயிலை விரட்டும். அதன் பிறகு எப்போது காக்கையைக் கண்டாலும் குயில் பறந்தோடி ஒளியும். இன்று ஓர் ஆச்சரியம். முதலில் குயிலைக் காக்கை விரட்டுகிறது. பிறகு குயில், துணிச்சலுடன் காக்கையை வெருட்டுகிறது. ‘என் உணவை நீ எடுக்கிறாயா?’ என்ற உரிமையில் குயில் தன் வாயை அகலத் திறந்து, காக்கையின் அருகில் சென்று மிரட்டுகிறது. ஒரு வாய் உணவுடன் காக்கை பறந்தோடிப் போகிறது. இந்த அதிசயக் காட்சியைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழா

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழா

    நிறுவன நாள் விழா அழைப்பிதழ்

    நாள் திருவள்ளுவராண்டு 2053. ஐப்பசி – 4, 21.10.2022 – வெள்ளிக்கிழமை

    நேரம்: முற்பகல் 11.00 மணி

    இடம்: தமிழ்த்தாய் ஊடக அரங்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

    மு.ப.11.00

    வரவேற்புரை

    மு.ப. 11.00-11.15

    முனைவர் பெ. செல்வக்குமார் இணைப் பேராசிரியர், தமிழ்மொழி (ம) மொழியியற் புலம்

    முன்னிலை

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவனப் பேராசிரியர்கள் [ம] நிருவாக அலுவலர்கள்

    மு.ப. 11.15-11.45

    தலைமையுரை

    முனைவர் ந. அருள்
    இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

    மு.ப. 11.45-1245

    நிறுவன நாள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – சிறப்புரை

    இன்றும், இனியும் ..”
    முனைவர் பொற்கோ சென்னைப் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர்

    கட்டுரை, கவிதை, பேச்சு [ம] பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நிறுவன மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல்

    பி.ப. 12.45-01.00 01.00-01.05

    பி.ப.

    நன்றியுரை

    செல்வி தே. சுபஸ்ரீ
    முதுகலை இரண்டாமாண்டு மாணவர். உ.த.நி.

    நிகழ்ச்சித் தொகுப்பு

    திரு. செ. செல்வம்
    முதுகலை இரண்டாமாண்டு மாணவர். உ.த.நி.

    பி.ப.01.05

    தமிழ்த்தாய் வாழ்த்து
    நாட்டுப்பண்

    அன்புடன் அழைக்கிறோம்

    இயக்குநர்

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
    இரண்டாவது முதன்மைச் சாலை,
    மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி,
    சென்னை – 600 113. தொ.பே. 044-22542992.
    www.ulakaththamizh.in

    Share
  • அ.மாதவையாவின் கடைசிக் கோரிக்கை | டேவிட் பிரபாகர் உரை

    அ.மாதவையாவின் கடைசிக் கோரிக்கை | டேவிட் பிரபாகர் உரை

    அ.மாதவையா இலக்கிய அரங்கம் என்ற நிகழ்ச்சியை, சாகித்திய அகாதெமியும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து, 2022 அக்டோபர் 18 அன்று சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் டேவிட் பிரபாகர் வழங்கிய வாழ்த்துரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் | கல்யாணராமன் உரை

    அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் | கல்யாணராமன் உரை

    அ.மாதவையா இலக்கிய அரங்கம் என்ற நிகழ்ச்சியை, சாகித்திய அகாதெமியும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து, 2022 அக்டோபர் 18 அன்று சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில், மாநிலக் கல்லூரியின் முதல்வர் இரா.கல்யாணராமன், அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் – ஓர் இலக்கிய ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் பேசி முடித்தவுடன் அடுத்துப் பேசிய கவிஞர் வைகைச்செல்வி, ‘மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது’ எனக் குறிப்பிட்டார். இந்த இலக்கிய மழையில் நனையுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மெரினா கடற்கரையில் டிரோன் கேமரா

    மெரினா கடற்கரையில் டிரோன் கேமரா

    சென்னை, மெரினா கடற்கரையை டிரோன் கேமரா மூலம் காவல் துறையினர் கண்காணிக்கிறார்கள். தமிழகக் காவல் துறையின் சிறந்த முன்னெடுப்பை இங்கே பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அ.மாதவையா சிறுகதைகள் | மாலன் உரை

    அ.மாதவையா சிறுகதைகள் | மாலன் உரை

    அ.மாதவையா இலக்கிய அரங்கம் என்ற நிகழ்ச்சியை, சாகித்திய அகாதெமியும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து, 2022 அக்டோபர் 18 அன்று சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் நடத்தின. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய எழுத்தாளர் மாலன், அ.மாதவையா சிறுகதைகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 1930 – New Number to Report a Cyber Crime

    1930 – New Number to Report a Cyber Crime

    Baskar Seshadri

    1930 is the new number to be used to report a cyber-crime.

    Moment you realise that you are duped please call this number and report the whole story in detail.

    In Addition to the same you can mail to cybercrime.gov.in

    Kindly share this to one and all and alert people against fraudsters. Many leading banks had displayed this in the vending area.

    Please circulate for a good cause.

    Share
  • தமிழ் வளர்ச்சித் துறையின் ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம்

    தமிழ் வளர்ச்சித் துறையின் ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம்

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் ஆட்சிமொழிப் பயிலரங்கில் பங்கேற்கிறேன்

    Share
  • அரிய காட்சி: ஒருவாய் தோசைக்காக!

    அரிய காட்சி: ஒருவாய் தோசைக்காக!

    ஒருவாய் தோசைக்காகத்தான் இவ்வளவும். பெரிய துண்டினைப் பெண்குயில் லபக் என விழுங்க, அதைத் தவிட்டுக் குருவி ஆவலுடன் பார்க்க, ஆண்குயில் மேலிருந்து அதன் மீது குதித்து விரட்ட, இன்னும் பல ருசிகர காட்சிகள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share