Blog

  • குறளின் கதிர்களாய்…(384)

    குறளின் கதிர்களாய்…(384)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(384)

    அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்.

    – திருக்குறள் – 441 (பெரியாரைத் துணைக்கோடல்)

    புதுக் கவிதையில்

    அறமதின் நுட்பத்தை
    ஆராய்ந்து அறிந்து
    அகவையில் தன்னிலும் மூத்த
    அறிவுடையோரின் நட்பை
    அரசன்
    அதன் சிறப்பை யுணர்ந்து
    அவர் மகிழும்
    வகையறிந்து
    வைத்துக்கொள்ள வேண்டும்…!

    குறும்பாவில்

    அறமுணர்ந்த தன்னிலும் மூத்த
    அறிவுடையோர் நட்பை அதன் சிறப்பறிந்து
    அரசன் கொள்ள வேண்டும்…!

    மரபுக் கவிதையில்

    அறத்தின் நுட்ப மதறிந்தே
    அகவை தன்னில் தன்னைவிடச்
    சிறப்பாய் மூத்த அறிஞருடன்
    செயலில் கொள்ளும் நட்பதனைப்
    பெறவே யதனின் சிறப்புடனே
    பெருமை யெல்லாம் சேர்த்தறிந்த
    பிறகே யதனைப் புவிமன்னன்
    பிடிப்பாய்க் கொள்ள வேண்டுமாமே…!

    லிமரைக்கூ

    அறமதனை உணர்ந்த நல்லார்
    அறிவுடைய அகவையில் மூத்தோரே அரசன்
    அறிந்து நட்புகொள்ள வல்லார்…!

    கிராமிய பாணியில்

    கொள்ளணும் கொள்ளணும்
    நட்பு கொள்ளணும்,
    நம்மவிடப் பெரியவங்கள
    நல்லவங்களப் பாத்து
    நட்பு கொள்ளணும்..

    அறத்தோட நுட்பமறிஞ்ச
    வயசுல மூத்த
    அறிவு நெறஞ்ச பெரியவங்களோட
    நட்பில
    அதனோட பெரும தெரிஞ்சி
    அரசன்
    நட்பு கொள்ளணும்..

    தெரிஞ்சிக்கோ
    கொள்ளணும் கொள்ளணும்
    நட்பு கொள்ளணும்,
    நம்மவிடப் பெரியவங்கள
    நல்லவங்களப் பாத்து
    நட்பு கொள்ளணும்…!

    Share
  • புளி இஞ்சி செய்முறை

    புளி இஞ்சி செய்முறை

    சுவை, சத்து, மணம் மிகுந்த, மிக எளிதில், விரைவில் செய்யக்கூடிய புளி இஞ்சி என்கிற இஞ்சி புளி செய்முறையை வழங்குகிறார் சுதா மாதவன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மூக்குத்தி அவரை விதை வேணுமா?

    மூக்குத்தி அவரை விதை வேணுமா?

    நம் வீட்டு மாடித் தோட்டத்தில் மூக்குத்தி அவரை விதைகளைச் சேகரித்து வைத்தோம். உங்களுக்கு இந்த விதைகள் வேணுமா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேஸ்புக் அறிவிப்புகளை முடக்குவது எப்படி?

    பேஸ்புக் அறிவிப்புகளை முடக்குவது எப்படி?

    பேஸ்புக், தினமும் ஆயிரத்தெட்டு அறிவிப்புகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்பதிலேயே நம் நேரம் பெருமளவு செலவாகிறது. இத்தகைய அறிவிப்புகளை முடக்குவது எப்படி? இதோ ஒரு வழிகாட்டி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஈஷா வளாகம் – ஒரு சிறு உலா

    ஈஷா வளாகம் – ஒரு சிறு உலா

    கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா வளாகம், இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. அத்துடன் கலையெழில் மிளிரத் திகழ்கின்றது. கலையெழில் என்பது ஒரு வார்த்தையாகக் கொள்ளக் கூடாது. இந்த வளாகத்தில் வாய்ப்புள்ள ஒவ்வோர் அணுவிலும் துணுக்கிலும் கலையெழில் மிளிர்கின்றது. முகப்பு, மதில், கதவு, விதானம், நடைபாதை, சிலைகள், அறிவிப்புகள், அலங்காரம்… என ஒவ்வொன்றிலும் தனித்துவமான கலையெழில் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது.

    கார்ப்பரேட் பாணியில் இந்த வளாகம் அமைந்திருந்தாலும், நல்ல திட்டமிடலும் செயல்திறனும் தொலைநோக்கும் பளிச்சிடுகின்றது. பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, அவற்றைத் தனி முத்திரையாக (Brand) முன்வைப்பதில் ஈஷா, ஆன்மீகத் துறையில் உள்ளோருக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகிறது.

    இந்தியா முழுவதுமிருந்தும் இங்கே பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆன்மீகத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் இது பரிணமித்து வருகிறது. இதோ ஈஷா வளாகத்தின் உள்ளே ஒரு சிறு உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 9

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 9

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    நூல் மதிப்பீடு

    முன்னுரை

    ‘நீ நொண்டி சிந்து எழுதினாய் தமிழ் எழுந்து நடந்தது’ என்று எழுதினான் ஒரு கவிஞன். நொண்டி சிந்து எழுதியவன் பாரதி! அவனைப் பாராட்டி எழுதிய கவிஞன் பெயர் தெரியவில்லை. யார் எழுதினால் என்ன? உண்மையை யார் சொன்னால்தான் என்ன? கவனிப்பதற்கு ஒன்று உண்டு.  எழுந்து நடந்தது என்று பாராட்டுகிறானே கவிஞன், அது எங்கே விழுந்து கிடந்தது? எங்கே முடங்கிக் கிடந்தது? இடைக்கால மன்னர் அரண்மனைகளின் அந்தப்புரங்களிலிருந்து எட்டையபுரத்து இளைக்காத சமஸ்தானம் வரை தமிழ் உள்ளூரிலேயே அடிமைப்பட்டுக் கிடந்தது. தமிழைப் பிணித்திருந்த அந்த அடிமைச் சங்கிலியை நொறுக்கி எளிய பதங்கள், மக்களுக்கு ஏற்ற மெட்டு எனப் புதியன பெய்து தமிழுக்குப் புதுமுகம் காட்டிய புலவன் பாரதி! அதனாலே என்ன ஆனது? தமிழ் புலவர்களுக்கானது அன்று நமக்கானது! நம் தாய்மொழி தமிழ்’ என்னும் புரிதல் தமிழர்களுக்கு வந்தது. இதுதான் பாரதி செய்த வித்தை! பாரதி பிறந்திருக்காவிட்டாலும் நாடு விடுதலையடைந்திருக்கும்! ஆனால் அவன் பிறந்திருக்காவிட்டால் இந்தக் கட்டுரை இந்த நேரத்தில் வல்லமையில் வெளிவந்திருக்க முடியாது. இந்தப் பின்புலத்தில் பாட்டுக் கட்டும் உரிமை மக்களுக்குச் சென்றது. புலவர்களின் தனியுடைமை நிராகரிக்கப்பட்டது. மக்களைப் பற்றிப் பாடியவர்கள் மக்கள் கவிஞர்கள் என அழைக்கப்பட்டனர். மக்களே கவிஞரும் ஆனார்கள். மக்களால் மக்களுக்காக மக்களைப் பற்றி எழுதப்படும் கவிதையே தமிழ்க்கவிதை என்னும் புதிய வரைவிலக்கணப் பரிமாணத்தை வரையறை செய்தனர். தமிழை முறையாகப் படித்தவர்கள்தாம் எழுத வேண்டும் என்ற நிலை மெல்ல மெல்ல ஆனால் நிலையாக உறுதியாக மாறியது, உட்கார்ந்து தமிழைப் படிக்காதவர்கள் ஓராயிரம் நூல்களைப் படைத்தார்கள். ஆர்வத்தால் யாப்பிலக்கணம் கற்றார்கள். அதன் கடுமையை உணர்ந்தார்கள். இருப்பதைக் கொண்டு எழுதிப் பார்ப்போமே என்று எழுதினார்கள். தங்கள் வாழ்க்கையில் தாங்கள் பட்ட இன்னலை எழுதினார்கள். எல்லார்க்கும் பாடமாக்கினார்கள். யாப்பிலக்கணத்தோடும் எழுதினார்கள். யாப்பு இல்லாமலும் எழுதினார்கள். யாப்பு இருந்தால்தான் அது கவிதை என்னும் மரபையும் உடைத்தெறிந்தார்கள். கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பத்தைக் கண்டறிவதுபோலத் தங்கள் திறமையைத் தாங்களே அறிந்து கொண்டார்கள். அவ்வாறு அறிந்து கொண்டவர்களில் ஒருவர்தான் குளித்தலை அன்பர் தண்டபாணி. தொழிற்சாலைகளின் கணக்கு வழக்குகளின் தணிக்கையாளர் அவர். கணிதத்தைத் தணிக்கை செய்யலாம். அவர் கவிதையைத் தணிக்கை செய்ய இயலுமா? இதயத்தை மூளையால் அளப்பது எப்படி? அவர் எழுதிய ‘கவிதை ஊருணி’ என்னும் அளவில் சிறிய கவிதை நூல் என் பார்வைக்கு வந்தது! படித்தேன்! சுவைத்தேன்! சுவைத்ததைச் சுருக்கமாக இங்கே பகிர்கிறேன்! பந்தி வைக்கிறேன். இது ஏழைவீட்டுப் பந்தி! பலகாரங்களின் எண்ணிக்கை குறையலாம். சுவை குறையாது!

    புரியாதவன் இன்னும் தேடுகிறான்

    கண்ணப்ப நாயனார் புராணத்தில் பெரும்பாலோர் திண்ணனின் ஆழமான பக்தியைச் சிலாகித்துப் பேசுவார்கள். பெரியபுராணத்தை நோக்குவார்க்கு ஒன்று நன்கு புரியும். அறுபத்து மூன்று தனியடியார்களும் தொண்டினால் உயர்ந்தவர்கள். சிவபதம் பெற்றவர்கள்! ‘தொண்டு’ என்பது மனித நேயத்தின் பழைய வழக்கு. காளத்திநாதரைச் சிவகோசரியார் சிலையாகத்தான் எண்ணினார். கடவுளாக எண்ணி வழிபட்டார். ஆனால் கண்ணப்பன் தன் தந்தையாகக் கருதினான்! ‘அத்தனார்க்கு அடுத்த தென்னோ?’  கடவுளுக்குக் கேடு வருமா? என்பது பகுத்தறிவாகக் கருதுவர். தந்தைக்குக் கேடு வரலாம் அல்லவா? தாய் மட்டுமன்று தந்தையும் பசித்திருக்கக் கூடாது என்பதுதான் மனித நேயம்!

    கையில் சூலம் கொண்டோ
    சங்குச் சக்கரம் கொண்டோ
    ஒளியின் திருவாய் மலர்ந்தோ
    இறைவன் நம்மிடம் வருவதில்லை!”

    வீழும்போது தூக்கி விடுவோரும்
    தாழும் போது தோள் கொடுப்போரும்
    நற்செயலை நாளும் செய்வோரும்
    நான் காணும் கடவுளின் வடிவங்கள்

    புரிந்தவன் கடவுளைக் காணுகிறான்
    புரியாதவன் இன்னும் தேடுகிறான்

    தனக்குப் பல நூற்றாண்டுக் காலம் முன்னே தோன்றிய திருமூலர் சொன்ன அறச் சிந்தனைதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு வள்ளலாருக்கு வந்தது.

    படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
    நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
    படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே

    என்னும் திருமந்திரத்தைப் பசிப்பிணி என்னும் கொடுநோய் போக்கி வள்ளலார் நடைமுறைப்படுத்தினார். பொதுவாகக் கவிதை எழுதுபவர்கள் இன்றும் ஆறு, குளம், குட்டை, ஏரி, மேகம், வான் என்று புவியியல் தலைப்புக்களாகவே சிந்திப்பார்கள். கேட்டால் இயற்கையைப் பாடுகிறேன் என்பார்கள். அவர்கள் பார்வையில் மனிதன் செயற்கைபோலும்! மனிதனுடைய வாழ்வியல் சிக்கல்கள் செயற்கை போலும்! ஆனால் விதிவழியே எல்லாம் நடக்கும் என்றும் சொல்வார்கள்! ஆனால் அல்துறைக் கவிஞர் தண்டபாணி சமுதாயத்தையே தனது கன்னிப்படைப்பின் கருப்பொருளாக்கியிருக்கிறார்!

    பெரு வியப்பின் நுண் இருப்பு

    எதனையாவது யாருக்காவது எப்பொழுதாவது எப்படியாயினும் சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்னும் உள்ளத் துடிப்பு எல்லார்க்கும் இயல்பு. கவிஞர்களுக்கு அல்லது கவியுள்ளம் படைத்தவர்களுக்கு வெகு இயல்பு. நேர்மையாக வாழ வேண்டும் என்ற தேவை கூட இல்லை. இனியாவது நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு முதலடி எடுத்து வைக்கிறபோதே அதற்கு எதிர்மறையானதொரு சமுதாயக் கட்டமைப்பை ஒருவன் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.  அங்கிங்கு எனாதபடி ஒரு போலித்தனத்தையே போர்வையாகப் போர்த்திக் கொண்டு நிற்கும் இரங்கத்தக்க நிலை நீக்கமற நிறைந்திருக்கிறது. மனம், மொழி, மெய்களால் சத்தியம் காக்க வேண்டும் என்ற உயரிய நெறிக்குப் பதிலாக மானுடத்தைச் சீரழிக்கும் சிந்தனைகள்!, வெளிப்பாடுகள்!, செயல்பாடுகள்!.

    ஒப்பனை செய்த சிரிப்பு
    ஒத்திகை பார்த்த அழுகை
    கடன்
    கொடுத்தவனிடம் கனிவு
    கொடுத்த கடன்
    கேட்பவனிடம் கோபம்

    வாழ்பவனைக் கண்டு வயிற்றெரிச்சல்
    வழுக்கி
    வீழ்ந்தவனைக் கண்டால் எகத்தாளம்!
    காசு பணம் தேவைக்காக நட்பு!
    நம்பிக்கைக்காகக் கொஞ்சம் நடிப்பு!
    எளியவனைக் கண்டால் அகங்காரம்
    வலியவனைக் கண்டால்
    காலில் விழும் கலாச்சாரம்

    மேலே கவிஞர் சொல்லியிருக்கிற அல்லது வெளிப்படுத்தியிருக்கிற வரிகளால் அவர் குடும்பத்திற்கு என்ன நன்மை? ஒரு நன்மையும் இல்லை என்பது அவருக்கும் தெரியும். நமக்கும் தெரியும். பிறகு ஏன் எழுதுகிறார்? ஆற்றாமை! சமுதாயத்தின் எதிர்மறை போக்குக் கண்டு தாங்க முடியாத ஓர் இதயத்தின் இளகிய வெளிப்பாடு! மனிதனாக வாழ்வது எப்படி என்று நீதிநூல்கள் கற்பிக்கின்றன!. அதனைப் படித்துணர்ந்து செப்பம் செய்து கொள்ள வேண்டிய சமுதாயம் அதற்கு நேர் எதிர்த்திசையில்! வாழ்வியல் உண்மைகளையும் சமுதாயப் போக்குகளையும் நூலறிவு மற்றும் பட்டறிவு கொண்டு அறிந்து கொண்ட சாதாரண மனிதன் ‘ஊருக்கு வந்தது தனக்கு’ என்று எண்ணிச் சமாதானமடைகிறான். ஆனால் சமுதாய அக்கறையும் பிறரை மதித்து நேசிக்கும் ஒரு வேறுபட்ட படைப்பாளனால் அவ்வாறு இருக்க முடிவதில்லை.

    தேடிப்பார்க்கிறேன்!
    இருக்கும் மனிதர்களில் பெரும்பாலும்
    மனிதனவன்
    எவரும்
    மனிதனாக இல்லை!”

    என்று எழுதுகிறார் தண்டபாணி. மனிதர்களாயிருந்தால் வாழ்வார்கள். அல்லது வாழ்பவர்கள்தாம் மனிதர்கள்! ‘இருப்பவர்கள்’ மனிதர்கள் அல்லர். ‘LIVING’  என்பது வேறு. ‘EXISTING’ என்பது வேறு. ‘எப்படி இருக்குறீங்க?’ என்றுதான் நலம் விசாரிப்போம்! ‘ஏதோ இருக்குறேன்!’ என்றுதான் விடையளிப்பார்கள்! இங்கே பிறப்பார்கள்!. இருப்பார்கள்! இறப்பார்கள்! முடிந்தது வாழ்வு! இந்த வாழ்வு வாழப்படாதா? என்று ஏங்குகிறார் தண்டபாணி! மானுடம் தன் பெயரைத் தக்கவைத்துக் கொள்ளாதா? ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று வேண்டிப் பெற்ற வாழ்வு வீணாகிவிடுமோ என்று வேதனைப்படுகிறவர் பலர். அப்படிப் பாடியவர்களில் வேதனைப் பட்டவர்களில் ஒருவராகத் திகழ்கிறார் தண்டபாணி!

    கவிதைகளில் எல்லாச் சொற்களும் நினைக்கப்படா. நிலைக்கவும் செய்யா. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்பன போன்ற தொடர்கள் ஊழிக்காலத்திற்கும் உலாவரும். தண்டபாணி எழுதியுள்ள,

    சிறந்த மனிதம்
    தன் பெருமை தானறியாத்
    தத்துவத்தின் சிறுகுறிப்பு
    தவிர்க்கவே முடியாத
    பெருவியப்பின் நுண் இருப்பு!”

    இந்த வரிகளில் உள்ள ‘பெருவியப்பின் நுண்ணிருப்பு’ என்னும் தொடர் மிகவும் ஆழமான தத்துவார்த்த சித்திரிப்பாகவே அமைந்துள்ளது. இது  போன்ற தொடர்கள் இவருக்கேகூட எல்லாப் பாடல்களிலும் அமைவதில்லை.  மனிதன் தன்னை உணரவேண்டும். சிறந்த மனிதன் தன்னை உணர்ந்தே ஆகவேண்டும் ஆனால் இந்தப் பிறவியின் மகத்துவம் உணராது, தன்னுடைய பெருமையைத் தானே உணராத மானுடத்தை எண்ணி மருகுகிறார். அரக்கனை அழிக்க இறைவன் எடுத்த வடிவம் மானுடம். இறைவன் வருந்தி எடுத்த பிறவியை எளிதாகப் பெற்றதனால் இப்பிறப்பின் அருமையை உணரவில்லையோ என எண்ணி வருந்துகிறார். ‘விசித்திர நாடகங்கள்’ என்னுந் தலைப்பில் கவிஞர் எழுதியிருக்கும் இந்த வரிகளை மகாகவி பாரதியின்,

    தேடிச்சோறு நிதம் தின்று பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
    வாடித் துன்பமிக உழன்று பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து நரைக்
    கூடிக் கிழப்பருவம் எய்திக் கொடுங்
    கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் பல
    வேடிக்கை மனிதரைப் போலே நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ

    என்னும் வரிகளோடு ஒப்பிடலாம். மகாகவி எந்தச் சமுதாயத்தைப் பற்றி என்றைக்குப் பாடினானோ அந்தச் சமுதாயம் அன்றைக்கு எப்படி இருந்ததோ அப்படியே தான் செக்கு மாடுபோல் ஒரே இடத்தைத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதைத் தண்டபாணியின் வரிகள் தெளிவாகப் படம் பிடிக்கின்றன. படைப்பாளர்கள் படத்திறப்பு விழாவுக்கும் படைப்புக்கள் பட்டிமன்றத்தில் சிலர் காசு சேர்ப்பதற்குமே பயன்படுகிறது. கம்பன் பிறந்தும் இங்குக் காவியம் செழிக்கவில்லை! திருவள்ளுவன் எழுதியும் இங்கு நீதி தழைக்கவில்லை! வள்ளலார் தோன்றியும் இங்குப் பசி போகவில்லை! வேலு நாச்சியார் வாழ்ந்தும் இங்கு வீரம் சிறக்கவில்லை! மொத்தத்தில் மானுடம் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை!

    எங்கே தேடுவேன்?

    ஒரு கவிதை இப்படித் தொடங்குகிறது. அறிவியல் வளர்ச்சி என்ற பெயராலும் நவீனத்துவம் என்ற பெயராலும் நகர்ப்புற மேம்பாடு என்ற பெயராலும் மரங்கள் வெட்டப்படுகின்றன. மாறாகக் கட்டடங்கள் விதைக்கப்படுகின்றன. பசுமை நிறப்பெயராகவே அறியப்படுகிறது.

    நான்கு வழிச்சாலையில்
    வெப்பத்தை உள்வாங்கி
    நெருப்பை உமிழ்ந்து
    கொண்டே தேடுகிறேன்

    தான்தோன்றி மலைகளைத் தேடுகிறார். காட்டுக் குயிலினங்கள் கானம் ஒலித்த கருவேலங்காடுகளைத் தேடுகிறார். ஆர்ப்பரித்துச் சென்ற ஆற்றுப் படுகைகளைத் தேடுகிறார். ஏரிகளைச், சாலைகளை என்று எல்லா இடங்களிலும் தேடுகிறார் இயற்கையை! எப்படி நிறைவு செய்கிறார் தெரியுமா?

    என் இளமையைத் தாலாட்டிய
    இயற்கையே!
    பேராசைப் பேய்களின்
    பெருத்த வயிற்றுக்குள்
    இரையாகிப் போன
    உன்னை
    எங்கே தேடுவேன்!”

    மனிதனைத் தேடி ஏமாந்தவர் இப்போது இந்தப் பாட்டில் இயற்கையைத் தேடி ஏமாந்து நிற்கிறார்!

    கவிதை குடியிருக்கும் காட்டாறு

    எவ்வகைப் பயனையும் எதிர்பாராது ஒரு தனிமனிதன் பொருட்செலவைப் பொருட்படுத்தாது ஒரு நூலை எழுதி வெளியிடுகிறான் என்றால் அதன் காரண நுண்ணியம் கருதத்தக்கது. எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரியும். இருந்தும் செலவழித்து வெளியிடுகிறான் என்றால் அவன் உள்ளம் ஏதோ ஒன்றினைச் சொல்ல வேண்டும் என்று தவிப்பதாகத்தான் கொள்ள வேண்டியதிருக்கிறது. ‘தண்டபாணியின் கவித்துவம் இந்த நூலின் எல்லாப் பக்கங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது’ என்பது உயர்வு நவிற்சி! இன்னும் துணிந்துத் தெளிவாகச் சொன்னால் போலிப் புகழ்ச்சி! நூலெல்லாம் சமூக ஆர்வலராக, ஒரு படைப்பாளியாகத் தோன்றும் அரிமா தண்டபாணி.

    காட்டு வெள்ளம் வந்து போகும்
    காட்டாறு ஓடைகள்

    என்னும் இரண்டு வரிகளில் கவிஞர் தண்டபாணியாக அவதாரம் எடுக்கிறார். மேற்கில் தோன்றிக் கிழக்கில் கலப்பது இந்திய நதிகளின் இயற்கை. காட்டாறு என்பது மழைவந்தால் வரும். மழை போனால் ஆறும் போய்விடும். என்ன ஒரு கவித்துவம் பாருங்கள்? ஆற்றினை விருந்தாளியாக்கிப் பார்க்கிறார். வந்து போகும் ஆறாம்! கவிதையைத் தொழிலாகச் செய்பவனுக்கும் அவ்வளவு எளிதாக வர இயலாத கற்பனை இது! ஆலயங்களில் பக்தர்கள் வந்து போவார்கள்! வழித்தடங்களில் பேருந்துகள் வந்து போகும்! ஆறு என்பதன் இலக்கணமே ஒரு இடத்தில் தோன்றி வேறொரு இடத்தில் இன்னொரு ஆற்றில் கலக்கும் அல்லது பெரும்பாலும் கடலில் கலக்கும். இதுதான் ஆறு. ஆற்றுக்கு ஒருமுகப் பயணம்தான்! காட்டாற்றுக்கும் இது பொருந்தும். ஆனால் காட்டாறு தோன்றுவதும் மறைவதும் அதாவது வருவதும் போவதும் மழையைப் பொருத்ததேயன்றி ஊற்றினைப் பொருத்ததன்று தலைக்காவிரி போல!

    எது தவறு?

    வாழ்க்கை ஒரு சக்கரம்! சுழல்வது அதன் இயல்பு! அது சுற்றுகிறது என்பதைப் புரிந்து கொள்கிறவன் தனக்கான வாய்ப்பு வரும்போது தக்கவைத்துக் கொள்கிறான். விழித்துக் கொண்டே தூங்குகிறவன் ஏமாந்து போகிறான். சிரிப்பு அழுகையில் முடிவதும் அழுகை சிரிப்பாக மாறுவதும் உலகியற்கை!

    அழுவது தவறில்லை
    விழுவதும் தவறில்லை!
    ஆனால்
    அழுதபின்பு சிரிக்காமல் இருப்பதும்
    வீழ்ந்த பின்பு எழாமல் இருப்பதுமே தவறு

    அறியாமை குற்றமன்று. அறியாமல் போனோமே என்று வருந்தாமல் இருப்பது தவறு. அதனைத் தொடர்ந்து அதனை அறிந்து கொள்ள முயலாமை பெருந்தவறு. எனவே ஒரு சிக்கலில் எது தவறு என்பதை அறிவதற்கும் ஞானம் தேவைப்படுகிறது. ‘வாழ்க்கைச்சிக்கல்’ ஒரு நூற்கண்டு என்று உருவகித்தால் அதன் நுனியைக் காணும் திறன் வேண்டும். அத்திறன் வாய்க்கப் பெற்றால் அழுகை சிரிப்பாகும்! வீழ்ச்சி உயர்ச்சியாகும்! வெற்றி தொடர்ச்சியாகும்! கீழே விழுவதெல்லாம் எழுந்திருப்பதற்காகவே! அதற்காக ‘எழுந்திருப்பதெல்லாம் விழுவதற்காகவே’ என்று எண்ணினால் வாழ்க்கையின் நோக்கம் திசைமாறும்! ஏக்கம் எக்காளமிடும்!

    அந்தாதி அறிவுரை

    ‘தலை உள்ளவன் எல்லாம் தலைவனாக முடியாது. தலையில் உள்ளவன்தான் தலைவனாக முடியும்” என்பது உலகியல். எதனையும் யாரையும் தன் இயல்பால், தன் அறிவால், தன் ஆற்றலால் தன்வசப்படுத்திக்  கொள்பவன் வாழ்க்கையில் நிற்கிறான்., நிலைக்கிறான். சூழ்நிலையின் கைதியாகும் எவனும் அல்லது அதில் கரைந்து போகிற எவனும் வாழ்க்கைப் போராட்டக் களத்தில் எதிர் நீச்சல் போட இயலாது. தண்டபாணி எழுதுகிறார்,

    சூழ்நிலைக்குள் கரைந்து போகிறவன்
    சாதாரணத் தலைவன்!
    சூழ்நிலையைத் தகர்த்து எழுபவனே
    சாதனைத் தலைவன்!
    எண்ணுபவர் விழிப்பர்!
    விழிப்பவர் உழைப்பர்!
    உழைப்பவர் உயர்வர்!
    உயர்வாருக்கே இவ்வுலகம்!”

    தொடை விகற்பம் என்பது யாப்பு வல்லார்க்கானது. தணிக்கையாளரும் இந்த விகற்பத்தைத் தம் கவிதையில் கையாண்டுள்ளார். எதிலும் ஆர்வம் இருந்தால் எதுவும் கைகூடும் என்பதற்கு இந்த ‘அந்தாதித் தொடை அறிவுரை’ அழிக்க முடியாத ஒரு சான்றாகத் திகழ்கிறது.

    நிறைவுரை

    குளிர்பதன அறையில் வசதியான திண்டில் சாய்ந்து கொண்டு ‘வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே?’ மனிதனைத் தேடாமலேயே காணோம் என்று சொல்லிக் காசு பார்ப்பவர் ஒருபுறம். பணி ஓய்வு பெற்றுப் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ வேண்டிய நேரத்தில் அக்கறையோடு புலம்புகிறவர்கள் மற்றொரு புறம். முன்னவன் பணத்திற்காக எழுதுகிறான். இவர் பாசத்தோடு எழுதுகிறார். அவன் தத்துவம் சொல்வதாகக் கருதிக் கொண்டு சம்பாதிக்கிறான். இவர் சம்பாதித்த காசைப் பொருட்படுத்தாது தான் வாழுகிற சமுதாயத்தின் மீது தான் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறார். தொழிலாளர் நலன் சார்ந்தும் நிறுவனங்கள் சார்ந்தும் அமைந்த தணிக்கைத் துறை அலுவலர் பணி ஓய்வு பெற்ற பின்பு எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது! தன்னைச் சுற்றிய சமுதாயத்தைப் பற்றித் தானே சிந்தித்ததைத் தனக்குத் தெரிந்த மொழியில் தானே பதிவிட்டிருக்கும் இந்த எழுபது வயது இளைஞருடைய கவிதைகளை இந்த எண்பது வயது முதியவன் படித்தேன்! சுவைத்தேன்! அதனால் பகிர்ந்தேன்! நீங்களும் சுவைக்க வேண்டுமென்பதற்காக!

    தணிக்கையாளர் அரிமா .தண்டபாணி M.A.,M.L.M.,M.B.A.,

    (தொடரும்…)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 99

    பழகத் தெரிய வேணும் – 99

    நிர்மலா ராகவன்

    தானே வராது வாய்ப்பு

    “எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!” பலரும் முனகுவார்கள்.

    நாம்தான் அதைத் தேடிப் போகவேண்டும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை.

    அதிர்ஷ்டம் எப்படிக் கிடைக்கும்?

    முதலில் உழைப்பு. அதன்பின், உழைப்பைப் பாராட்டி புதிய வாய்ப்புகள் கிடைக்கும்போது அவற்றை நழுவ விடாதிருப்பது.

    கதை

    இசைத் துறையில் பட்டம் பெற்ற இளைஞர் குருசாமி.

    திரையுலகில் சேர்ந்தால், புகழுடன் நிறைய பணமும் கிடைக்குமே என்ற பேரவா அவருக்கு.

    தான் மெட்டமைத்த பாடல்களைப் பதிவு செய்து, ஓர் இயக்குநருக்கு அனுப்பினார்.

    “உடனே வாருங்கள்,” என்ற அழைப்பு வந்தது.

    இப்போது குருசாமிக்குத் தயக்கம் ஏற்பட்டது. திரையுலகைப் பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார்களே! அங்கு போய், தான் மாறிவிட்டால்?

    “நான் அங்கு சென்றால், எப்போதும்போல் நல்லவனாகவே இருக்க முடியுமோ என்ற பயம் வந்துவிட்டது,” என்று என்னிடம் தெரிவித்தார்.

    இதை முதலிலேயே யோசித்திருக்க வேண்டாமா?

    போதாக்குறைக்கு, `கல்யாணமானா, நிச்சயம் குழந்தை இருக்கணும்,’ என்று எவளோ கூறியிருக்கிறாள். அப்படித் தன் மனத்தைக் கலைத்தது அவள் தவறு என்பதுபோல், அதையே பலமுறை ஆத்திரத்துடன் கூறினார்.

    ஆரம்பிக்கும் முன்னரே அச்சமும் தயக்கமும் அடைந்தால் வாய்ப்பு நழுவிவிடாதா!

    எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளுமுன், அதனால் நன்மையும், நீடித்த மகிழ்ச்சியும் கிடைக்குமா என்று யோசிக்க வேண்டுவது அவசியம். அதற்கு ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பின், குருசாமி போயிருக்க வேண்டிய இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டு, பெரும் புகழை அடைந்தார்.

    கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை உரிய காலத்தில் பற்றிக்கொள்ளாத வருத்தம்தான் குருசாமிக்கு நிலைத்தது.

    இலக்கு சரியாக இருந்து, அதற்கான ஆராய்ச்சியைச் செய்து, திறமைகளையும் வளர்த்துக்கொண்டால் தோல்வி வராது.

    ஊக்கமளிக்கும் உறவினர்களும், ஓரிரண்டு நண்பர்களும் இருந்தால் கூடுதல் நன்மை.

    ஏன் தோல்விக்கு மேல் தோல்வி?

    “நான் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன். எல்லாவற்றிலும் தோல்விதான்!” என்று புலம்புகிறவர் தன்னால் என்ன முடியும் என்பதை உணராதவர். தன் மனத்தின் குரலைவிடப் பிறருடையதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். நம் முன்னேற்றத்தில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை?

    சவால்கள், அவமதிப்பு போன்றவற்றைப் பொறுத்துக்கொண்டு அலட்சியப்படுத்தினால்தான் முன்னேற முடியும்.

    எந்த வாய்ப்பும் பிரச்னையாகத்தான் ஆரம்பிக்கும்.

    கதை

    எங்கள் பள்ளியில், கேள்வித்தாள்களை ஆசிரியர்களே கணினியில் தட்டச்சு செய்துவிடவேண்டும் என்று புதிய விதிமுறையைக் கொண்டுவந்தனர்.

    உணர்ச்சிவசப்பட்டு, `எப்போதும் நான் என் கைப்படத்தான் எழுதுவேன்!’ என்று பிடிவாதம் பிடித்தால் புதியனவற்றைக் கற்று முன்னேறும் வாய்ப்பு கிடைக்குமா?

    ஒரு கணினி வாங்கிப் பழகத் தொடங்கினேன். நாற்பது வயதுக்குமேல் எதையும் கற்பது எளிதல்ல. எரிச்சலாக இருந்தது.

    அதை மாற்றி, உற்சாகம் அளித்துக்கொள்ளும் வகையில், தினசரியின் முதல் பக்கத்திலிருந்த செய்திகளிலிருந்து முதலிரண்டு வார்த்தைகளை ஒன்றாக இணைத்து ஒரு வாக்கியம் அமைத்தேன்.

    அது இப்படி இருக்கும்: மந்திரி – மரண தண்டனை – கற்பழிப்பு, கொலைக் குற்றத்திற்காக …

    எனக்கே சிரிப்பு வர, அலுப்பு மறைந்தது.

    சுமாராகத் தட்டச்சு செய்ய வந்தபின், உட்கார்ந்திருந்த போதெல்லாம் விரல்கள் நர்த்தனம் ஆடிக்கொண்டே இருக்கும், மனக்கண்ணால் இசைப்பலகையை இயக்குவது போல்.

    “டீச்சர்களுக்கெல்லாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியுமா?” என்று ஒரு மாணவன் அதிசயப்பட்டுக் கேட்க, பெருமையாகிவிட்டது.

    முதலில் ஆங்கிலம், அதன்பின், தமிழ்.

    கட்டாயம் என்பதால் கற்றது இப்போது பல வகைகளிலும் பயனுள்ளதாக இருக்கிறது.

    கிடைக்கும் சந்தர்ப்பங்களால் நமக்கு என்ன நன்மை விளையும் என்று எப்போதும் அலசுவது சரிதானா?

    கோலாலம்பூரில் பெருவெள்ளம்

    கடற்கரைப் பகுதியில் இல்லாத தீபகற்ப மலேசியத் தலைநகரில் நூறு வருடங்களாக வெள்ளம் கிடையாது.

    இப்போதோ, பாதுகாப்பு வேண்டி, மக்கள் கூரைமேல் ஏறினார்கள்.

    ஒருவர் தாம் வைத்திருந்த படகால் அவர்களுக்கு உதவி செய்யலாமே என்று தோன்ற, காரின்மேல் படகுடன் சென்றார் – பலமுறை.

    நல்லது செய்தாலும், சந்தேகப்படவென்று சிலர் இருப்பார்களே!

    குருத்வாரா

    சீக்கியர்கள் ஒன்றுகூடவும் வழிபடவும் அமைக்கப்பட்ட இடங்கள், குருத்வாரா.

    சேவை மனப்பான்மை கொண்ட பிற இனத்தவரும் இணைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கினர்.

    “சீக்கியர்கள் தயாரிக்கும் உணவை நாம் சாப்பிடலாமா? ஹலாலாக (halal) இருக்குமா?” என்ற கேள்விகள் எழுந்தன, மலாய்க்காரர்களிடமிருந்து.

    அது என்ன, ஹலால்?

    ஆடு, மாடு, கோழி போன்றவற்றை இஸ்லாமியரே பூசை செய்தபின் கொல்வதாம். இதற்கு விலக்கு மீன், முட்டை.

    “மத, இன வித்தியாசம் பாராது, பிறருடைய கொள்கைகளை மதித்து, தன்னலமின்றி சேவை செய்பவர்களை அவமதிப்பதா?” என்று ஒரு மலாய்ப் பெண்மணி காரசாரமாக இணையத்தில் கேட்டிருந்தார்.

    சுற்றிலும் தண்ணீர் இருந்தாலும், குடிநீர்ப் பற்றாக்குறை.

    உணவு மட்டுமின்றி, ஆடை, குடிநீர், சிசுக்களுக்கான டயாபர் போன்றவற்றையும் பொதுமக்கள் அளித்தனர். பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய முன்வந்தனர்.

    `இதனால் நமக்கு என்ன நன்மை?’ என்று யோசிக்க அவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். `பிறரது துன்பத்தில் பங்குபெற முடிந்ததே!’ என்ற நிறைவு போதும் அவர்களுக்கு. அவர்களே வெள்ளத்தில் மாட்டிக்கொண்டும் இருக்கலாம். அந்த அனுபவத்தையும் சவாலாக எடுத்துக்கொண்டிருப்பார்கள்.

    `நம்மால் இவ்வளவு செய்ய முடியுமா!’ என்ற அதிசயம் எழ, அதனால் நிறைவும் ஏற்பட்டிருக்கும்.

    கதை

    குமரன், பத்து வயதுப் பையன். பொருளாதார வசதி குறைந்த விதவைத் தாய் மறுமணம் செய்துகொண்டதும், எங்கள் உறவினர் வீட்டில் வேலையாளாகச் சேர்ந்தான். படிப்பைத் தொடர்ந்தாலும், தேர்ச்சி பெற முடியவில்லை.

    வீட்டு வேலை முடிந்ததும், ஓயாது தொலைக்காட்சிதான் துணை.

    “நேரத்தை இப்படி வீணடிக்கிறாயே!” என்று அவனைச் செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்த்துவிட்டார்கள்.

    அலுவலகம் ஒன்றில் உத்தியோகம் கிடைத்தபோதும், தொடர்ந்து உழைத்தான். பிறருக்கு உதவும் மனப்பான்மை வலுத்தது.

    ஆனால், அதைப் பெருமையாகக் கருதவில்லை.

    தீயணைக்கும்போதோ, வெள்ளம் பெருகியபோதோ தான் அடைந்த அனுபவங்களை ரசித்துக் கூறுவான்.

    அந்த வேலைகளெல்லாம் எளிதாக இருந்திருக்குமா? உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாமே!

    எதையும் எதிர்பார்த்துக் குமரன் பிறருக்கு உதவவில்லை. ஆனாலும், சவால்களை `வாய்ப்பு’ என்று எடுத்துக்கொண்டதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டியது குமரனுக்கு.

    “Smooth seas do not make skilful sailors” (கடலில் கொந்தளிப்பு இல்லாவிட்டால், தேர்ந்த மாலுமிகளாக ஆக முடியாது (ஆப்பிரிக்கப் பழமொழி).

    “எனக்குச் சரியான சந்தர்ப்பம் அமையவில்லை!” என்று மூக்கால் அழுபவர்கள் வாய்ப்புகளை நழுவ விடுகிறார்கள், அவை கஷ்டம் என்று.

    `கஷ்டமாக இருந்தால் என்ன!’ என்று துணிகிறவர்களே அந்த சந்தர்ப்பத்தையே நல்ல வாய்ப்பாக ஆக்கிக்கொள்கிறார்கள்.

    யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை?

    அவற்றை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றி, தோல்வி அடங்கியிருக்கிறது.

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்-8: கொடிய இரவுகள் 

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    கொடிய இரவுகள் ! கொடிய இரவுகள் !
    உன்னோடு சுகிக்க இருந்தால்
    இன்ப உணர்வு இரவுகள் நமக்கு
    ஆடம்பரச் சுகம் அதுதான் !

    காற்றால்  எந்தப் பயனில்லை.
    துறைமு கத்தில் வடமிட்டு
    கட்டிய கப்பலுக்கு,
    திசைக் கருவி, வரைப் படம்
    உதவி செய்யா விடில்.

    படகு ஏடனுக்குப் போகும்
    கடல் பயணம் !
    இன்றிரவு  அதில் அடைபட்டு
    உன்னோடு  கூடல் !

    *******************

    Wild nights – Wild nights

    Wild nights – Wild nights!
    Were I with thee
    Wild nights should be
    Our luxury!

    Futile – the winds –
    To a Heart in port –
    Done with the Compass –
    Done with the Chart!

    Rowing in Eden –
    Ah – the Sea!
    Might I but moor – tonight –
    In thee!

    ************************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -9: இரவுப் பகிர்வு உன்னோடு

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நமது இரவுப் பகிர் வு தாங்குவது
    நமது காலைப் பகிர்வு அடுத்து
    நமக்கு இடைவெளி, இனிய நிரப்பு
    நமக்குப் பிரிவு, மிக மிக வெறுப்பு

    இங்கோர் தாரகை, அங்கோர் தாரகை
    அவற்றில் சில பாதை தவறி யவை.
    இங்கோர் மூடுபனி, அங்கோர் மூடுபனி.
    அதற்குப் பின் வருவது பகல்.

    **************

    Our share of night to bear—
    Our share of morning—
    Our blank in bliss to fill
    Our blank in scorning—

    Here a star, and there a star,
    Some lose their way!
    Here a mist, and there a mist,
    Afterwards—Day!

    **************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -10: நம்பிக்கை

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “நம்பிக்கை” என்பது சிறகு முளைத்தது
    ஆத்மா வேரில் தோன்றி  எழுவது.
    இசை பாடும் ஏது சொற்கள் இன்றி !
    நிற்காது ஒரு போதும் அந்த இசை !

    மிக்க இனிப்பது புயல் வரும் போது
    புண்பட்டு புள்ளினம் தவிக்கும் போது
    நன் நம்பிக்கை  பல்லுயிர் காக்கும்.

    குளிர் நாட்டில் கேட்டுளேன் நானதை
    கொந்தளிக்கும் கடல்களில் கேட்டுளேன்
    எல்லை மீறிய நிகழ்வில் நம்பிக்கை
    எச்சிறு துண்டும் கேளாது என்னிடம்.

    *******************

    “Hope” is the thing with feathers –
    That perches in the soul –
    And sings the tune without the words –
    And never stops – at all –

    And sweetest – in the Gale – is heard –
    And sore must be the storm –
    That could abash the little Bird
    That kept so many warm –

    I’ve heard it in the chillest land –
    And on the strangest Sea –
    Yet – never – in Extremity,
    It asked a crumb – of me.

    ************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 11: வர்த்தக வாழ்வு 

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    என்னைக் கொடுத்தேன் அவனுக்கு நானே
    அவனை வசீகரித்தது பண வரவுக்கு,
    அமைதி வாழ்வுக்கு அது ஓர் உடன்பாடு
    அவ்விதம் ஒப்புக் கொள்ளப் பட்டது.

    நானே ஏழைக்கு ஓர் உதாரணம்
    என் சொத்து மதிப்பு ஏமாற்றம் தருவது
    வர்த்தகன்  எதிர்பார்ப் புக்கு மாறாய்.
    காதல் மதிப்பு கண்ணை மறைப்பது.
    வர்த்தகன் குதிரை வாங்கும் வரை
    மசாலா தீவில் அது தனித்தி ருக்கும்.

    ஒருவகையில் இருவர்க்கும் பண நொடிப்பு
    சில பேர் அதிலும் ஊதியம் காண்பார்
    வாழ்வுக்கு இனிய  உடல் கொடுப்பு,
    ஒவ்வோர் இரவிலும்  கடன் கொடுப்பு
    ஒவ்வோர் பகலிலும்  பண இழப்பு.

    *********************

    I Gave Myself To Him

    I gave myself to Him
    And took Himself, for Pay,
    The solemn contract of a Life
    Was ratified, this way

    The Wealth might disappoint
    Myself a poorer prove
    Than this great Purchaser suspect,
    The Daily Own — of Love

    Depreciate the Vision
    But till the Merchant buy
    Still Fable — in the Isles of Spice
    The subtle Cargoes — lie —

    At least — ’tis Mutual — Risk —
    Some — found it — Mutual Gain —
    Sweet Debt of Life — Each Night to owe —
    Insolvent — every Noon —

    Share
  • கண்ணனைப் பணி மனமே | விஜயலட்சுமி

    கண்ணனைப் பணி மனமே | விஜயலட்சுமி

    ‘கண்ணனைப் பணி மனமே’ என்ற இனிய பாடலைத் தமது 72 வயதில் திருமதி விஜயலட்சுமி பாடுகிறார், கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புடலங்காய் அறுவடை

    புடலங்காய் அறுவடை

    நம் வீட்டு மாடித் தோட்டத்தில் இன்று புடலங்காய் அறுவடை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆழியாறு அணை – அசர வைக்கும் அழகு

    ஆழியாறு அணை – அசர வைக்கும் அழகு

    கோவையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள ஆழியாறு அணை, நீர் நிரம்பி நிற்கிறது. மலைகள் சூழ அமைந்துள்ள இந்த அணை, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது. இயற்கையின் கொடையாக, அமைதியின் முனையாக உள்ள ஆழியாறு அணையின் அசர வைக்கும் அழகு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செம்போத்தின் குரல்

    செம்போத்தின் குரல்

    செம்போத்தின் குரல் இதோ. குரலெழுப்பும்போது இதன் உடலே அதிர்கிறது என்பதை இன்றுதான் கண்டேன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Faces of Mylapore – Alwar Kadai

    Faces of Mylapore – Alwar Kadai

    Baskar Seshadri

    Nammaalwar who reached Chennai at the age of thirteen in late Twenties never had even thought that this Chennai is going to give him his life for the hard work. He came from Vizhuppuram and settled down in Luz corner Junction and started doing the errand works around this area. It was tough to earn even a “Kaalanaa” and the life was too a Hardship and when he was struggling for the food he developed the habit of reading the books. This became his passion and he and any of us would not have even thought that only these books are going to be his real bread winner. By now you could have guessed our Alwar of Mylapore . He is jocularly called as Luz Azhwaar. Initially he had his pavement shop in front of the Old Murudis Hotel and probably as per the information received through various sources he was the first person to set up a shop In Luz corner. Many may not know that he was a small time actor featured mostly in Kalaignar’s Films. But he did not like the profession as he did not get any big opportunity and decided that his life to settle in books and Books alone .He started collecting all the old books from various houses which were about to be discarded and started his Sale of Books. Within a short span he collected plenty of books in various cartons and sacks which he decided to display on the road for a normal Fee.

    Azhwar now had set in and his Business grew slowly. He had faced severe hardship in maintaining the books since there is always a possibility of books being stolen. The roads were not lit with all such brightness Like now and it was only later after years Sodium Vapour Lamp came into being. Then it’s the rains which is a normal botheration since he could not afford to buy even a big Tarpaulin.

    But all changed when his name became big. Local Newspapers and few journals had done some stories and it elevated the name and fame of Alwar. It was Mary his wife who was very supportive all through the life and after all the struggle to attain the success with no formal education he breathed his last in 2018 and months later his wife also passed away.

    It’s now his daughters who are looking after the shop. They are bit worried about the Metro rail Project and they wonder how they could survive if that place is taken over. Julie his daughter recollects that everyone enquires about Ayya , Our Alwar . Such is the name he had gained here in the hearts of many people including political leaders and writers. Till his end Alwar never wore slippers and hardly he wore a shirt. He was Ninety five when he passed away. Azhwar is a brand and an Identity of Mylapore. Can we say He Ruled our Heart?

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 155 (நாளும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 155 (நாளும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    திருத்தொண்டர் புராணத்தில்  இனி அடுத்த  சருக்கம்  மும்மையால் உலகாண்ட  சருக்கம் ஆகும் .  முதலில்  மூர்த்தி நாயனார் வரலாறு பேசப்பெறுகிறது. சிறப்பும் செல்வமும் மிக்க மக்கள் மாடமாளிகைகளில் அன்புமிக்க சிந்தையராய் வாழும் பழம்புகழ் கொண்டது பாண்டிநாடு.இங்கே அழகிய இளம்பெண்களின் வாய்களில் பற்களாகிய முத்தும், கடலில்  நன்முத்தும் நிறைந்திருக்கும்.

    இந்நாட்டில் இனிய பொதிகைத்  தென்றல் சந்தன மணம் கமழும்;  உலகளந்த சிறப்புடைய தமிழ் மணமும் கமழும்.  மகளிர் நாவில் இன்னிசையும் அவர்கள் கூந்தலில் வண்டுகளும் வாழும் நகரம்  மதுராபுரி  ஆகும். அங்கே முத்தமிழ் நூல்கள் பயிலும் சங்கமும், எருமைகளின் பால் பாயும் தாமரையிடையே மீன்கள்  பாய, அங்கே வயலில் சங்குகள் ஏறும்; அங்கே மாடங்களில் ஆடும் மகளிரின் மார்பில்  முத்துப்போன்ற வியர்வையும், முத்து மாலைகளும் தங்கும்.

    அங்கே நமக்கு மெய்ப்பொருள்  தரும் ஈசன், திருவாலவாயில் தமிழ்ச் சங்கத் தலைவராய்  விளங்கி நூற்பொருளும் தருவதால்  அந்நகரம் மூவுலகங்களினும் சிறந்தது  அல்லவா? அந்த  நகரில்  வாழ்ந்த வணிகக்  குலத்தினர்  செய்த தவத்தின் பயனாகத்  தோன்றி, எல்லாப்  பற்றுக்களையும்  நீக்கி, ஏறூர்ந்த பெருமானின்  பதத்தையே பற்றி ஒருவர் வாழ்ந்தார். அவரே  இறைவன் பால் கொண்ட பற்றைத்  தவிர  மற்றைய பற்றுக்களை  நீக்கிய திருவுருவம் பெற்ற  மூர்த்தியார்  ஆவார்.  இதனைச் சேக்கிழார்,

    நாளும் பெரும் காதல் நயப்பு உறும் வேட்கை யாலே,
    கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
    ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்;
    மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார்; மூர்த்தியார்தாம்.

    என்று பாடினார்

    இதன் பொருள்

    நாடோறும் பெரிய காதல் கூர்ந்து பொருந்த வரும் ஆசைபெருகி வேட்கையாகி விளைந்ததனாலே சுற்றமும் துணையும் முதலாகிய கெடுதலில்லாத பதங்கள் எல்லாம் ஆளும் பெருமானாகிய சிவனது திருவடித் தாமரைகளேயல்லாது வேறில்லாதவர்; மூண்டு பெருகும் அன்பு என்றதனையே தமது உருவமாகக்கொண்டவர்; அவர்தாம் மூர்த்தியார் என்ற பெயர் பூண்டவர்.

    விளக்கம்

    பெருங்காதல் நயப்பு உறும் வேட்கை  என்ற தொடருக்கு,  விடாத விருப்பின் மிகுதி பெருங்காதலாக உருப்பட்டது; அது முறுகவே, நயப்பு என்னும் ஆசையாகியது; அது மேலிட வேட்கையாக விளைந்தது எனலாம். மனத்துள் அன்பு பெருகிப்படிப்படியாக வளர்ந்து கூர்தரும் வகையினைக் கூறியதாகக்  கொள்ளலாம்

    கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
    ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்;.

    என்ற அடிகளில் – கேள் – உயிர்ச்சார்பு. துணை – உயிர்ச்சார்பும் பொருட்சார்பும். கேடில் பதங்கள் – பதமுத்திப்போகங்கள். ஏனையவற்றை நோக்க இவை காலத்தால் நீடித்தனவாதலின் கேடில் என்று  உபசரித்தார். இப்பொருளைச் சிங்கமுகாசுரன் எடுத்துச் சூரபதுமனுக்கு இனிது விளக்குகின்ற திறம் கந்தபுராணத்தினுட் கூறப்பட்டது காண்க.

    “அழிவில் மெய்வரம் பெற்றன மென்றனை யதற்கு,
    மொழி தரும்பொருள் கேண்மதி முச்சகந் தன்னுட்,
    கெழிய மன்னுயிர் போற்சில வைகலிற்கெடாது,
    கழிபெ ரும்பக லிருந்திடும் பான்மையேகண்டாய்.

    இறைவன் றாளிற் பெறும் அபரமுத்திப் பெரும் போகமொன்றே என்றும் அழியாததாகும் என்பது உண்மை நூல்களின் துணிபு. கேளும் துணையும் என்றவற்றால் ஆன்மாக்கள் இம்மையில் தமக்குப் பற்றுக் கோடாக எண்ணிக்கொள்வனவும், கேடில் பதங்கள் என்றதனால் மறுமையிற் பற்றுக் கோடாகக் கொள்வனவும் குறிக்கப்பட்டன. இம்மைத்துணை முதல் மறுமைப்பயன் வரையுள்ள எல்லாம் என்பது. இதனைச் சித்தியார்,

    “நெறியது வகையு மேலொடு கீழடங்க வெறும்பொயென நினைந்திருக்க”

    என்று  கூறும்.

    ஆளும் பெருமான் – “அம்மையி னுந்துணை யஞ்செ ழுத்துமே”  என்று ஆளுடையபிள்ளையார் அருளியபடி உயிர்களுக்குப் பந்தமும் வீடும் தந்து ஆட்கொள்ளும் சிவபெருமான் என்பதாம்.

    “இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்;
    அம்மை யேற்பிற வித்துயிர் நீத்திடும்;
    எம்மையாளு மிடைமரு தன்கழல்,
    செம்மை யேதொழு வார்வினை சிந்துமே”

    என்ற அப்பர்சுவாமிகள் தேவாரமுஞ் சிந்திக்க. மூளும் பெருகு அன்பு என்னும் மூர்த்தியார் என்ற தொடர்,  அன்பு மூண்டு பெருகிய அதுவே உருவாகி நின்ற என்பதைக்க  காட்டுகிறது.

    மூர்த்தி – உடல் – திருமேனி (வடிவம் என்பர்). மூர்த்திக்குள் இருந்து அதனை இயக்குபவர் மூர்த்திமான். ஆசனம் – மூர்த்தி- மூர்த்திமான் என்ற ஆகம பூசை முறையும் காண்க. மூர்த்தம் என்பதும் இது. மூர்த்தியார் மூர்த்தியை உடையவர். மூர்த்தியார் தாம் மூர்த்தியார் – என்க. மூர்த்தியார் பின்வந்தது பெயர். இவ்வாறு அடுக்கி மொழிந்து சிறப்பிப்பது ஆசிரியரது மரபு.

    Share
  • புள்ளிச் சில்லை

    புள்ளிச் சில்லை

    புள்ளிச் சில்லை என்ற பறவையை இன்று முதல்முறையாகப் படம் பிடித்தேன். இது சிட்டுக்குருவி அளவிலான ஒரு பறவை. ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இதன் மேற்புறம் பழுப்பாகவும் மார்பு, வயிற்றுப்புறம் செதில் போல் புள்ளிகளுடன் இருப்பதால் புள்ளிச் சில்லை எனப்படுகிறது. இதன் அலகு பெரிதாக கூம்பு வடிவத்தில் இருக்கும். இது புற்களின் கிழங்கினை உணவாகக் கொள்ளும். மேலும் சிறு பூச்சிகளையும் பழங்களையும் உண்ணும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share