Blog

  • நான் அறிந்த சிலம்பு – 99

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    வயல்களில் களை பறிப்பவர்கள்

    குவளை மலர்ச்செடிகளைக்

    களைகளெனப் பறித்து

    வரப்பு வழிகளில் போட்டிருப்பர்.

     

    அப்பூகளின் தேனை உண்டு

    சோர்வுற்று மயங்கி

    அப்பூகளுக்குள்ளேயே கிடக்கும் வண்டுகள்

    நாம் நடக்கையில் நம் பாதங்களில் மிதிபட்டு

    இறக்கவும் நேரிடும்.

     

    ஓங்கி அலை வீசும்

    வாய்க்கால் வழியாகச் செல்லலாம் என்றாலோ

    ஆங்கே

    அழகாய் மேனியில் புள்ளிகள் உடைய

    நண்டுகளும் நத்தைகளும்

    சிக்கிச் சிதைய நேரிடும்.

     

    நாம் கால்களில் மிதிபட்டு இறக்கவும் நேரிடும்.

    அதனால் நமக்குக் கொலைப்பாவம் நேரிடும்.

    அப்பாவத்தைத் தாங்குவது

    நமக்கு மிகவும் அரிதாகும்.

     

    வயல்வழி, சோலைவழி தவிர

    மதுரை செல்வதற்கு வேறு வழியே இல்லை.

    நெளிந்த கரிய தலைமுடியை உடைய கோவலனே!

    நீ உன்னை விரும்பிய அன்பு மனைவியுடன்

    செல்லும் போது

    எதிர்ப்படும் இடர்களைக்

    குறிப்பால் உணர்ந்து

    அக்குற்றங்கள் நேராத வண்ணம்

    அவளைப் பாதுகாப்பாயாக!

    என்று கவுந்தியடிகள் கூறினார்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 86- 97
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • வியர்வையூர்

     

    ‘வியர்வையூர்’ எனும் தொடர் கவிதை நடையில் அமைந்த காவியம்.. சிங்கப்பூரில் வாழ்ந்த பட்டறிவைச் சொல்லும் பெட்டகம். எதுவுமே கற்பனையில்லை. மொழிவேண்டுமானால்அழகைக் கூட்டியிருக்கலாம். எங்கேயும் எதையும் கூட்டிச் சொல்லவில்லை. ஓரு தமிழ்க் குடிமகனின் சிங்கப்பூர் வாழ்க்கை இது. அனைத்தும் அவனுடையதல்ல. அவனைச் சேர்ந்தவர்களின் பட்டறிவும் இதில் வலம் வருகின்றன. ஒட்டுமொத்த பட்டறிவின் பெட்டகம்..

    அன்புடன் பிச்சினிக்காடு இளங்கோ
    அந்த வீடுகளில்
    இப்போது
    இரவிலும் வெளிச்சம்
    ஒவ்வொருவர்
    முகத்திலும் வெளிச்சம்

    ஒவ்வொருவர் முகத்திலும்
    குதித்து விளையடும்
    குதூகலம்

    அதாவது இப்போது
    அங்கே
    இல்லத்திலும் வெளிச்சம்
    உள்ளத்திலும் வெளிச்சம்

    ஒவ்வொரு வீட்டிலும்
    ஒலிக்கிறது தொலைபேசி
    இது
    பழையசெய்தி
    இப்போது
    ஒவ்வொருவர் கையிலும்
    கைப்பேசி

    தீர்க்கப்படாத தேவைகள்
    குறைந்து
    கவலைப்படாத ஒரு காலம்
    கைக்குவந்திருக்கிறது

    கீற்றுக்குடிசைகள்
    மண்சுவர் வீடுகள்
    பனைஓலைக்கூரைகள்

    சாணத்தில் மெழுகி
    தீத்துக்கல்கொண்டு தீட்டி
    தீட்டி
    சலவைக்கல்போல்
    முகம்பார்க்கும் தரைகள்
    எல்லாம் இப்போது
    பளிங்குகளாக பரிணாமம்

    மலையில் கிடைத்த
    கிரானைட்களாக அலங்காரம்

    மாட்டுத்தொழுவமும்
    வீடும்
    என்றிருந்த நிலைமாறி
    ஒவ்வொருவரும்
    வீடுபேறு பெற்றநிலை

    தெருவில் எங்கும்
    குடிசைகள் இல்லை

    என்பிள்ளைப்பிராயத்தில்
    ஊருக்குள்ளே
    ஒழுங்கை இருந்தது

    இப்போது எல்லாம்
    தார்சாலைகள்
    சிமெண்ட் சாலைகள்

    கரிபிடித்த
    வறுமைப்பானைகளை
    உடைத்துவிட்டு
    வெள்ளிப்பாத்திரங்கள்
    குடியேறிவிட்டன

    எப்போதும் (ever silver)
    வெள்ளிகளுக்குத்தான்
    இப்போது
    வீட்டில் இடம்

    கொஞ்சம்
    பொன்நகைகளும் வந்து
    கழுத்தில் கனத்தன

    காய்ந்த முகங்களிலும்
    புன்னகைக்கூடின

    ஆடைகளிலும் தெரிந்தன
    அந்த அந்நியநாட்டு
    அடையாளங்கள்

    காலணி
    சோப்பு
    சீப்பு
    கண்ணாடி எல்லாம்

     

    இப்போது
    வெளிநாட்டினுடையது
    குறிப்பாக
    அந்த நாட்டினுடையது

    இந்தியாவில்
    இல்லாததில்லைதான்
    ஆனால்
    இந்தியா
    வீட்டில் இல்லைதான்

    இந்தியாவில்
    அவன்
    வீடு இருந்தது
    அவன் வீட்டில்
    இந்தியா இல்லை

    வாசனை திரவியங்கள்
    வானொலிகள்
    ஒலிப்பதிவுப்பெட்டிகள்
    தொலைக்காட்சிப்பெட்டி
    கடிகாரம்
    பேனா
    மூக்குக்கண்ணாடி
    படுக்கும் பாய்

    கோடரி மார்க்
    டைகர் பாம் மருந்துகள்
    ஒடிகோலன்
    கிளிதைலம்
    மீசைக்காரத்தைலம் போன்ற
    முன்னெச்சரிக்கை மருந்துகள்

    கைலிகள்(லுங்கிகள்)
    கைவிளக்குகள்
    கைக்குடைகள்
    கைக்குட்டைகள்
    ரொட்டிகள்
    படுக்கை விரிப்புகள்
    துண்டுகள்
    மான்மார்க் குடைகள்

    வெந்நீர் குடுவைகள்
    சவரப்பெட்டிகள்
    முகப்பூச்சுத்தூள்கள்

     

    தொடரும்

    Share
  • YOU MADE IT!!!

    Pavala Sankari

     

    Becareful with my heartheart
    as it pains much due
    wired with confusions
    win-now from partition thorns

     

    Neednot be worried
    Of yours being in a pool
    Full of lilly blossoms
    Embosomed with Cool breeze

     

    Blushing bluebell glancing down
    sizzling cute butterflies
    buzzing bees on the lily
    drizzling droplets of honey

     

    knowing not to harm his
    eternal peace of silence
    splayed his hypnotic wing
    Of multicolours to make it sing.

     

    final fling of warmth of sun
    reddened bright as the dawn
    warming hum of nightingale
    saved the soul of friendship!!

     

    as the geese fly across the sea
    as you never come downtoearth
    as you don’t have wings or limbs
    as you are my dream ever!!!!

     

     

    Thanks for the image:

    http://data2.whicdn.com/images/88991863/large.jpg

    Share
  • வார ராசி பலன்-02.12.2013-08.12.2013

    மேஷம்:  வியாபார வட்டத்தில் புழங்குபவர்கள் சொல்லோடு தங்கள் செயலும் இணைந்தி ருக்குமாறு பார்த்துக் கொண்டால், நல்ல பெயர் நிலைத்திருக்கும். நீங்கள் நல்லது சொன்னா லும் அது மற்றவர்க்கு தப்பாய்த் தோன்றும் என்பதால், பெண்கள் இயன்ற வரை மௌனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் பணிவாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வது புத்திசாலித்தனம். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளை சுருக்குங்கள். மன அளைச்சலும், கடன் தொல்லையும் கணிசமாகக் குறையும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் நேரம் தவறாமை யைக் கடைபிடித்தால், பல சலுகைகள் வந்து சேரும். பணியில் உள்ளவர்கள், கொடுக்க கணக்கு வழக்குகளை கவனமாய் சரிபார்த்தல் அவசியம்.
    ரிஷபம்: கலை நயத்துடன் செய்யும் காரியங்களால், அலுவலக விழா ஆகியவற்றில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் பிரச்னைக் குரிய விஷயங்களில் இருக்கும் சட்ட சிக்கல்களை உணர்ந்து முடிவெடுப்பது நல்லது. பெண்கள் வரவு, செலவு இரண்டிலும் கவனமாக இருந்தால், பொருளாதாரம் சறுக்கா மல் இருக்கும். மாணவர்கள் கூட்டாக செயல்படும் போது அடுத்தவரின் கருத்துக் களுக்கு மதிப்பு கொடுத்து செயல்பட்டால், கருத்து வேறுபாடு தோன்றாது. கலைஞர் கள் உடனிருப்பவர்கள் நடுவே வீண் போட்டி மனப் பான்மை, கருத்து பேதம் ஆகி யவை வளர இடம் கொடாதீர்கள். கட்டுக்கோப்பாய் வேலைகளை முடிக்கலாம்.
    மிதுனம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும் வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும்.பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை இருப்பதால், மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்னைகளை, தெளிவுடனும், திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய் மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!

    கடகம்: இதுநாள் வரை மந்த கதியில் சென்று கொண்டிருந்த வேலை, புதிய வேகத்துடன் நடைபெறுவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். கல்விப் பணியில் இருப்பவர்க்கு இது ஏற்ற வாரமாகும். அனுசரித்து நடந்து கொள்ளும் கொள்கை உடையவரின் கூட்டு முயற்சி வெற்றியாய்
    முடியும். வியாபாரிகள் எதிரிகளின் செயல்களை கண்காணிப்பது அவசியம். இது வரை தன் முயற்சிக்கு  அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்க்கு பாராட்டு வந்து சேரும். முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில் அவசரப்பட வேண்டாம். சிலர் பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழலாம்.

    சிம்மம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப் பழகுவதோடு யோசித்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள் நாவன்மையால் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு,மனை விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம்.
    இல்லச்சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம்,  பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில் இருப்போர் தன் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.

    கன்னி: பெண்கள் பேச்சில், படபடப்பைக் குறைத்து இனிமையைக் கூட்டுங்கள். இல்லறம் நல்லறமாய் திகழும். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பணம் கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் இடம், பொருள், ஏவல் தெரிந்து உங்கள் கோரிக்கைகளை முன் வைப்பது அவசியம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமிருக்கும். எனவே செலவுப் பட்டியலை குறைவாக்குங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் ,சிரமங்களுக்கிடையே வெற்றி காண்பர். சில நேரங்களில் நண்பர்கள் உங்களை முழுமையாய் புரிந்து கொள்ளாமல் செயல்படலாம்.

    துலாம்: மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி உறவுகளுக்காக பெண்கள் தங்கள் சேமிப்பை கரைப்பர். கலைஞர்களுக்கு வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றியிருப்பவர் களால் வீண் செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள்.நிலைமை மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால்,நீங்கள் மன உற்சாகத்துடன்
    செயல்படலாம்.

    விருச்சிகம்: பெண்கள் தங்கள் துணைவரின் உடல்நலத்தில் விசேஷ கவனம் செலுத்தி வந்தால்,  இல்லப் பணிகள் தடையின்றி தொடரும். மாணவர்கள் சோர்வை விரட்டியடி க்கும் சத்தான பானங்களை குடித்து வந்தால், சிந்தனை வளம் மேலும் பெருகும். வியாபார விஷயங்களில் வெளுத்ததெல்லாம் பால் என்றிருப்பதை தவிர்த்தல் நலம். பணியில் இருப்போர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும்
    துடிப்புடன் செயலாற்றுவார்கள். பிள்ளைகளிடம் உங்கள் கருத்துக்களை இதமான முறையில் எடுத்துச் சொன்னால்,அவர்களின் ஒத்துழைப்பையும் பெறலாம். பழைய கடன்கள் அடைவதால், பொருளாதார இறுக்கம் குறையும்.

    தனுசு:குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். பிரச்னைகள் சுமுகமாக முடியும். வெளி இடங்களில் தங்கி படிக்கும் மாணவ ர்கள் அவசியமற்ற இரவு நேரப் பயணங்களை தவிர்த்து விடுதல் நலம். கலைஞர்கள் கவனமாக இல்லை என்றால், சிலரின் சூழ்ச்சியால், வரும் வாய்ப்புகள் திசை
    மாறலாம். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், உங்களின் பெருமையும் உயரும். அலுவலக கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால், மன இறுக்கமின்றி வேலையில் ஈடுபட முடியும். மற்றவருக்கு ஜாமீன் போடுவதை தவிர்த்துவிடவும்.

    மகரம்: குடும்ப உறுப்பினர் உங்களின் திட்டங்களுக்கு, வலிமை சேர்க்க முன் வருவார்கள். பங்குச்சந்தை விஷயங்களில் ஏற்றம், ஏமாற்றம் இரண்டும் கலந்திருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்யும் முன் யோசனை செய்வது நல்லது. பெண்கள் பேச்சில் கடுமை கலவாதவாறு பார்த்துக் கொண்டால், குடும்ப
    உறவுகள் சுமூகமாக இருக்கும்.வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் உள்ள குளறுபடிகளை கவனமாக சரிசெய்தால், அபராதம் செலுத்தவதை தவிர்த்துவிடலாம். வெளியூர் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது. பொறுப்புக்களில் உள்ளவர்கள் கோப்பு களை நன்கு படித்தபின்,கையெழுத்திடுவது அவசியம்.

    கும்பம்: சில நேரங்களில் கண் மற்றும் பல்சம்பந்தமான உபாதைகள் உங்கள் இயல்பு வாழ்வை பாதிக்கக் கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடன் கவனித்து விடுங்கள். கலைஞர்கள் விழா விருந்து போன்றவற்றில், உங்கள் எல்லையை அறிந்து, நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வேலையாட்களை நம்பி முழு பொறுப்பை அளிக்காமல், உங்கள் கவனமும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.பணியில் இருப்போர் வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையில் உயரும் வாய்ப்பு உங்களை நாடி வரும்.
    மீனம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப் பழகுவதோடு யோசித்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள் நாவன்மையால் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு,மனை விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம்.
    இல்லச்சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம், பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில் இருப்போர் தன் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.

    Share
  • சீதாயணம் நாடகம் -9

    படக்கதை -9

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

    sita 1

    sita2

    Share
  • வல்லமைச் சிறுகதைகள் – நூல் வெளியீடு

    Manavaalan.pmd

    ஐக்கியா டிரஸ்ட் நிறுவனம் மற்றும் வல்லமை இணைய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தையும், ஐக்கியா டிரஸ்ட் நிறுவனரும் மற்றும் எழுத்தாளருமான திரு. வையவன் அவர்கள் ’வல்லமைச் சிறுகதைகள்’ என்ற பெயரில் நூலை மிக அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். டபுள் கிரவுன் அளவில், 102 பக்கங்களில், எழுத்தாளர்களின் படங்களுடனும் சுருக்கமான அறிமுகத்துடனும் இந்நூல் வெளிவந்துள்ளது. வாசுவின் பல்வண்ண ஓவியங்கள், அட்டையை அலங்கரிக்கின்றன. திரு வையவன் அவர்களுக்கும், இந்த போட்டியில் பங்கு பெற்ற கதைகளிலிருந்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ள திரு வெங்கட் சாமிநாதன் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகளும், நன்றியும். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள்.

    அன்புடன்
    பவள சங்கரி.

    ரூ.100 விலையுள்ள இந்த நூல், கிடைக்குமிடம்:

    தாரிணி பதிப்பகம்,
    பிளாட் எண்: 4-ஏ, ரம்யா பிளாட்ஸ்,
    32/79, காந்தி நகர் 4ஆவது பிரதான சாலை,
    அடையாறு, சென்னை – 600020
    மின்னஞ்சல்: vaiyavan.mspm@gmail.com

    என்னுரை

     ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்திருக்கும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.  2012 – 2013 ஆம் ஆண்டிற்கான சிறுகதைப் போட்டி இனிதாக முடிந்திருக்கிறது. . நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே  இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிக அவசியமாகிறது. தமிழ் சிறுகதை இலக்கியங்களின் வளர்ச்சிப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ஐக்கியா டிரஸ்ட் நிறுவனர் திரு வையவன் அவர்களின் பேராதரவுடன் நடத்தப்பட்டிருக்கும் போட்டியில் பங்குபெற்ற  சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வந்திருக்கும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கே உரிய தனிப்பட்ட பாணியில் விமர்சனங்கள் சுவை கூட்டின. அதன் மூலம் தங்களை  மேலும் செம்மையாக்கிக் கொள்ள எழுத்தாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.  ஐக்கியா நிறுவனத்தின் உரிமையாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர், திரு வையவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையை எழுதியவருக்கு தாம் அறிவித்திருந்தபடி மாதாமாதம், பரிசுத் தொகையை அனுப்பியிருந்தார். அவருடைய முழுமையான ஒத்துழைப்பு நமக்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல பிரபல எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் மாதப்பரிசு பெற்ற அனைத்துக் கதைகளையும் பொறுமையாக வாசித்து அதிலிருந்து பரிசுக்குரிய ஒரு கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அனைத்து கதைகளுக்கும் அருமையான விமர்சனமும் கொடுத்து எழுத்தாளர்களை மேலும் ஊக்குவித்திருக்கிறார். அவருக்கும் நம்முடைய நன்றியும்,  மனம் நிறைந்த பாராட்டுகளும் உரித்தாகுக.

    ஒரு எழுத்தாளனுக்கு செய்யும் சிறப்பை வைத்து அந்த நாட்டை மதிப்பிடலாம் என்பார்கள். அந்த வகையில் இந்த சிறுகதைப் போட்டி பல எழுத்தாளர்களை சிறப்பித்திருக்கிறது. இந்த 2013ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ள சமகால சிறுகதை எழுத்தாளரான, 82 வயதான கனேடிய எழுத்தாளர் அலைஸ் மன்றோ அவர்கள் மனிதரின் நலிவுற்ற நிலைமைகளையும், தலைமுறை வேறுபாடுகளையும்  மையமாகக்கொண்டு எழுதிய சிறுகதைகளுக்காக இந்த பரிசை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவருடைய கதைகள் அனைத்தும் தெளிவாகவும், உளவியல்பூர்வமான ஆதாரங்களுடன் இருபதனாலேயே இவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் சபை அறிவித்துள்ளது. 1.24 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாகப் பெறப்போகும் அலைஸ் ஏற்கனவே புக்கர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு சிறுகதையை உருவாக்க ஆறு முதல் எட்டு மாதங்கள் எடுத்துக்கொள்வதாகக் கூறும் இவரது  முதல் தொகுப்பான, Dance of the happy shades (1968) வாசகர் கைகளுக்குக் கிடைக்க இருபது ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து 15 தொகுதிகள் வெளியாகியுள்ளன. கடைசி தொகுப்பு Dear Life 2012ல் வெளியாகியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக புனைவுக்கதைகளைப் படைத்துக் கொண்டிருப்பவர் அலைஸ் மன்றோ. அந்த வகையில் நல்ல சிறுகதை இலக்கியங்கள் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு அலைஸ் மன்றோ ஒரு முன்னுதாரணம். தமிழில் நல்ல சிறுகதைகள் நிறைய வரவேண்டும். நம் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நல்ல சிறுகதைகள் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்.  இன்று வெற்றி வாகை சூடி நிற்கும் அனைத்து எழுத்தாளர்களும் மென்மேலும் உயர்ந்து நிற்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பனிரெண்டு கதைகளில் சில புதிய பார்வைகளை தந்தவர்கள் உண்டு அவர்கள் லட்சிய உலகை முன்னிறுத்துகிறார்கள். சிலர் ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்புகளைத் திரும்பச் சொல்கிறார்கள் சிலர்  அலங்கார வார்த்தைகளை, உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கொட்டுகிறார்கள். வார்த்தைகள் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றன. திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி கூறியுள்ள நுணுக்கமான செய்தியை பகிர்ந்து கொள்வது மற்றவர்களையும் ஊக்கப்படுத்தலாம்.

     பழமைபேசி தன் அனுபவங்களிலிருந்து ஒரு புதிய உலகை நமக்குப் படிக்கத் தருகிறார்  தன்னுடைய ஒவ்வொரு கதையிலும் வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவங்களை நம் முன் மிகத்திறமையுடன் வைக்கிறார். அன்னிய சூழலில் தொடர்ந்து இருந்த போதிலும், பிறந்த மண்ணின் வாசம் விடாது, அதே  சமயம் வாழும் அன்னிய மண்ணின் சூழலில் ஆழ்ந்த அனுபவம் நிறைந்த வாழ்நிலைகளை எழுதுகிறவர்

    வித்தியாசமாக எழுதிப் பார்க்கிறார்கள். அவர்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. கவிதை வடிவில் எழுதுகிறார்கள். ஒரு பொழுதின் நகைச் சுவையை எழுதிப் பார்க்கிறார்கள். துப்பறியும் கதை எழுதிப் பார்க்கிறார்கள். இப்புதிய முயற்சிகளில், தேமொழியின் துப்பறியும் கதை முயற்சி வந்தவற்றுள் படிக்க சுவாரஸ்யமாக சிறப்பாக வந்துள்ளது

    புதிய எழுத்தாகவே தோன்றவில்லை. பழகிய கை மாதிரிதான் இருக்கிறது எழுத்தின் தேர்ச்சி. அந்தச் சூழலின் சித்திரம். பார்வதி ராமச்சந்திரனின் கதையை இப்படித்தான் சொல்ல விரும்புகிறேன்.

    மாதவன் இளங்கோவின்  கதை முழுதும் கடைசி வரை ஒரு அயல் நாட்டின் கலாச்சார மேலாதிக்கத்தின் அகங்காரம் எனத் தோன்றினாலும் கடைசியில் அங்கும் மனித வாழ்வின் அவலங்கள் வேதனைகள் சில நமக்குக் கடைசி வரை புரியாமலேயே போகின்றன. எல்லா இடத்திலும் நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் மனிதம் இல்லாமல்  போய்விடுவதில்லை. ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும் என்று  ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார்.

    அதே மனிதப்பண்புகள், தான் மில்லியன் டாலர்கள் கணக்கில் நஷ்டப்பட்டாலும் மனித உயிரின் பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு.சரி இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா எங்கிலும் என்பது தெரியவில்லை. இருப்பினும் அது இன்னமும் உயிர்த்திருப்பது காணும் ஒரு இடத்தையாவது காண முடிகிறதே.

     மணி ராமலிங்கத்தின் கதை தடம் மாறும்போது திரும்ப தடம் வந்து சேரும் மனிதப் பண்பைச் சொல்கின்றன. மணி பேசாப் பொருளை எவ்வளவு தூரம் பேசவும் வேண்டும், பேசாது ஒதுங்கவும் வேண்டும், என்று தானே எல்லைக் கோடு இட்டு விளையாடியிருக்கிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் அதற்குரிய அழகுகளோடுதான் இருக்கிறது. குழந்தைப் பருவம், பள்ளி வாழ்க்கை, போலத்தான் விளையாட்டுப் பருவமும்.  அங்கும் மனித உறவுகள் உண்டு, மனிதனின் பலங்களும் பலவீனங்களும் பங்கு கொள்கின்றன. அது ஒரு கால கட்டம் இருப்பினும் பின்னர் அந்தக் கட்டம் முடிந்து திரும்பிப் பார்க்கும் போது கடந்த உறவுகளும் அதன் சந்தோஷங்களும் மனதை பின்னும் ஒரு nostalgia வோடு பாதிக்கின்றன.  மணி மிகத் திறமையாக, convincing -ஆக அந்த அனுபவங்களையும் பின்னர் ஒரு ஏக்க உணர்வோடு திரும்பிப் பார்த்தலையும் எழுதியுள்ளார். யாரும் தொடாத அனுபவ தளம். வாழ்க்கையின் ஒரு பகுதி.

    ஜெயஸ்ரீ ஷங்கர் கதை இது காறும் அவர் வல்லமையில் எழுதிய கதைகளிலிருந்து  நாலடி கோபுரங்கள் மாறுபட்டது.  தாய் தந்தையரால் கூட உதறிவிடப்பட்ட ஒரு குள்ள மனிதனின் அனுபவங்கள், கேலியும் தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையும் கூட பாதிக்கவில்லை. அதெல்லாம் சரி. கடைசியில் லிப்டிலிருந்து குழுந்தையைக் காப்பாற்றியது – இது நடக்கலாம் தான் ஆனால் – இது வரை இயல்பாக எழுதப்பட்டது இங்கு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போலத் தோன்றுகிறது.

    மிகச் சிக்கலான ஒரு ஆளுமை தன்  அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சின்னச் சின்ன கஷ்டங்கள், மனப் பிரள்வுகள், தன் இச்சைக்கும் மற்றோர் எதிர்பார்ப்புக்கு வாழும் முரண்களுமான நிரந்தர மனப் போராட்டம். ஆணாகப் பிறந்தும் பெண்மை சார்ந்த விருப்பங்கள் மறைத்தே மறைந்தே தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தங்கள் தன் திருமணத்திற்குப் பின்னும் தொடர்கிறது.  இதன் உண்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கதை சொல்ல சம்பவங்கள், விருப்பங்கள் நம்பக வட்டத்துக்கு வெளியே போவதில்லை. நன்றாக, திறமையுடன் எழுதப்பட்டுள்ளது. – அரவிந்த் சச்சிதானந்தனுக்கு வாழ்த்துகள்.

     சுதாகர் எழுதியுள்ள காட்சிப் பிழை என்ற கதை, நாடு இழந்தாலும், வாழ்க்கை சிதைந்தாலும், மனித சுபாவம் மாறுவதில்லை. அது நாடு கடந்தாலும், வாழ்க்கையின் கடைசிப் படியில் இருந்தாலும், வெறுப்பையும், தன் ego -ஐயும் துறக்கத் தயாராயில்லை. இது வாழ்க்கையின் யதார்த்தம்.

     மன்னிக்கத் தயாராக இருக்கும் அமீரும் தனனை அவமானப்படுத்திய மாமாவை மன்னிக்கத் தயாராக இல்லாத பாலாவும், அப்பாவுக்காகவாவது எல்லாத்தையும் மறந்து ஒரு வார்த்தை சொல்லலாமே என்னும் செல்வியும், மரணப்படுக்கையிலும் தன் வீராப்பை மறக்காத தெமெட்ட கொட மாமாவும் அவரவர் இயல்புப்படி நம் முன் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். அனாவசிய வார்த்தைகள் இல்லை. செயற்கையாக சித்தரிக்கப்பட்ட லட்சிய நோக்கு இல்லை. உணர்ச்சிக் கொப்பளிப்பு இல்லை. மனித சுபாவம் சிலரது சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும். மாறுவதே இல்லை.  சிக்கனமான எழுத்து. இயல்பான மனிதர்கள். எனக்கு மிகவும் பிடித்த எழுத்து.

    அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே.

    அன்புடன்

    பவள சங்கரி

    ஆசிரியர்

    வல்லமை இணைய இதழ்.

    Share
  • சூரியனைச் சுற்றி உரசி வந்த வால்மீன் ஐசான் [Sun-Grazing Comet Ison ] அக்கினிப் பிழம்பில் சிக்கிச் சிதைந்து ஆவியானது

     

    Comet Ison did not Survive

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    பரிதியைச் சுற்றி உரசி வந்த

    பெரிய வால்மீன் ஐசான்

    தீக்குளித்துச்

    சின்னா பின்ன மானதா ?

    செத்துப் போனதா ?

    சிதைந்து சிறிதாய் மீண்டதா ?

    எரிந்து ஆவியாகிப்

    பொன்னொளி வீசிப் புத்துயிர்

    பெற்றதா ?

    இன்னும் ஓர் நாளில் தெரியும் !

    பூதக்கோள் வியாழனைச் சுற்றுவது

    ஒற்றை வளையம்  !

    வியாழக் கோள் ஈர்ப்புத் தளத்தில்

    விழுந்த

    வால்மீன் சூமேக்கர்-லெவி

    தூள், தூளாகி

    நீர்க் களஞ்சியம் சிதறிப் போய்

    வேர்வை ஆவியானது !

    வெடிப்பு முறித்தது

    வியாழக் கோள் வளையத்தை !

    ++++++++

    2013 டிசம்பர் முதல் தேதி அண்மைக் கால அறிவிப்பு: 

    2013 நவம்பர் 28 இல் சூரியத் தணலில் தீக்குளித்த வால்மீன் ஐசான் உயிரோடு மீளவே வில்லை !   வால்மீனின் முக்கால் மைல் வடிவத் தலை முழுதும், முறிந்து, எரிந்து ஆவியாகிப் போய், முடிவில் முகில் மூட்டம் மட்டும் வெளிவருவது  நாசாவின் ஸோஹா [SOHO]] விண்ணுளவிக் காமிராவில் தெரிகிறது.  வால்மீன் ஐசான் மீண்டெழுந்து புத்துயிர் பெற்று வரும் என்ற உலக விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு பெருத்த ஏமாற்றத்தில் முடிந்தது !

    ​++++++++++++++++++++

     

    Comet Ison on Nov 22 2013

    http://www.youtube.com/watch?v=mpPSDe1fk8Y&feature=player_embedded

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=q03I1B_yrPg

    https://www.youtube.com/watch?v=A1yH_DuC88M&feature=player_embedded

    [Comet ISON, which will round the sun on Nov. 28, 2013, at a distance of just 730,000 miles from the sun,
    is what’s known as a sungrazing comet, due to its close approach.]
    Image Credit: NASA/Goddard Space Flight Center

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=MLXArWXiQEo

    [The Fate of Comet Ison, passing close to the Sun] 

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=svSAj98imp0

    [What to expect on November 28, 2013 for the Comet Ison -C/2012 S1]

    http://spaceinvideos.esa.int/Videos/1994/06/Collision_Comet_Shoemaker_Levy_9

    [Comet Shoemaker Levy colliding with Jupiter]

     

    Comet Ison -1

    நாசாவின் பரிதி இயக்க ஆய்வகம் [SDO  (Solar Dynamics Laboratory)] நோக்கி வந்த வால்மீன் ஐசான்

    2013 ஆண்டு நவம்பர் 28 இல் சூரியனை நெருங்கிச் சுற்றிவரும் வால்மீன் ஐசானைப் பரிதித் தீப்பிழம்புகள் தாக்கிச் சிதைத்து விட்டதா, அல்லது வால்மீன் பிழைத்துக் கொண்டதா என்பது இதுவரை தெரிந்தும், தெரியாமல் உள்ளது.  வால்மீன் ஓரளவு சிதைந்து, பேரளவு தப்பிக் கொண்டதாய் நாசாவின் ஒரு செய்தி மூலம் தெரிய வருகிறது.   அது உறுதி செய்யப்பட இன்னும் ஒரு நாள் ஆகலாம் என்று அந்த அறிவிப்பு மூலம் அறிய முடிகிறது.  வால்மீன் ஐசானைத் தொடர்ந்து நாசாவின் [SDO – Solar Dynamic Observatory)]  பரிதி இயக்க ஆய்வகமும், ஈசாவின் [ESA – (European Space Agency) SOHO -(Solar Heliospheric Observatory)]  பரிதிக் கோள ஆய்வகமும் கண்காணித்து வருகின்றன.  தப்பித் தணலிலிருந்து வெளி வந்த ஐசான் வால்மீன் முன்னை விட ஒளி மிக்கதாய்க் காணப் பட்டது என்று ஒரு தகவல் கூறுகிறது.  அதற்குக் காரணம், வால்மீனில் போதிய பிராண வாயும், இரும்பும் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது.   ஆயினும் தீக்குளித்த வால்மீன் ஐசானின் வடிவம் சிதையாமல் முழுதாய் உள்ளதா அல்லது சிதறித் துண்டங்களாகிச் சின்னஞ் சிறு வால்மீன் குஞ்சுகளாக மாறி விட்டனவா என்பது இன்னும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

    ஓராண்டுக்கு முன் கண்டு பிடிக்கப் பட்ட வால்மீன் ஐசான் “சூரியனை உரசும் வால்மீன்” [Sun-Grazing Comet] என்று முத்திரை இடப் பட்டது.   அதாவது பரிதிக்கு 850,000 மைல் தூரத்தில் சுற்றி நகரும் வால்மீன்கள் இவ்விதம் அழைக்கப் படும்.   வால்மீன் ஐசான் 730,000 மைல் [1170000 கி.மீ.]  தூரக் குற்று ஆரத்தில்  [Perihelion] சூரியனைச் சுற்றிப் போய்க் கொண்டிருந்தது.   இந்த வால்மீன் தப்பிப் பிழைத்தாலும் மீண்டும் சூரியனைச் சுற்றத் திரும்பாது விரிந்த சுற்றியக்கத்தில் விண்வெளியில் வெகு தூரம் சென்று விடும்.   இவ்விதம் சூரியனுக்கு வெகு நெருக்கத்தில் உரசிச் செல்லும் வால்மீன்கள் தீப்பிழம்பில் வெந்து முற்றிலும் தகர்ந்து ஆவியாகப் போகலாம்.   அல்லது ஓரளவு சிதையலாம்.  அல்லது துண்டு துண்டாகிச் சிறு வால்மீன்களாய் மீளலாம்.

    Comet Shoemaker-Levi

    சூரியனை உரசும் வால்மீன்கள் பின்பற்றும் சுற்றுவீதிக்கு “கிரியூட்ஸ் சுற்றுவீதி” [Kreutz Path] என்று பெயரிடப் பட்டுள்ளது.   சோஹோ [SOHO] விண்ணுளவி 85% சூரியனை உரசும் வால்மீன்களையே பெரும்பாலும் கண்காணித்து வருகிறது.

    2013 நவம்பர் 28 இல் வால்மீன் ஐசான் பரிதிக்கு அருகில் 730,000 மைல் குற்று ஆரத் தூரத்தில் [Perihelion] சுற்றிச் சென்றது.   அது சூரியனைச் சுற்றித் திசை மாறும்போது அதன் பளு நெம்பு வேகம் [Momentum MV (Mass X Velocity)] பரிதி ஈர்ப்பு விசையால் உந்தப் பட்டு மிகையாகிச் சூரிய மண்டலத்தை விட்டே நழுவிச் செல்லும்.   அப்போது வால்மீன் பூமியிலிருந்து 40 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து விரைந்து செல்லும்.    அந்த நாள் டிசம்பர் 26, 2013 என்று கணிக்கப் படுகிறது.

    வால்மீன் ஐசான் சாதாரண வால்மீன் பளுவுக்குச் சுமார் பாதி வடிவே.  அதைக் கண்டுபிடித்தது : ரஷ்யக் குழுவினர்.  வால்மீன் ஐசானின் பெரு விட்டம் : சுமார் 0.75 மைல் [1.2 கி.மீ.].  கண்டு பிடித்த காலம் : 2012 செப்டம்பர்.   வால்மீனின்  உடம்பில் உள்ள பெரும்பான்மைப் பண்டம்  அடிப்படை மூலக்கூறான உறைந்த கார்பன் டையாக்சைடு.

    Anatomy of Comet Ison -1

    பூதக்கோள் வியாழனின் சூழ்வெளி மண்டலத்தில் சுமார் 10 மைல் உயரத்தில் உள்ள ஸ்டிராடஸ்ஃபியரில் [Stratosphere]  தற்போது தெரியும் நீர் மூட்டம், 1994 இல் வியாழன் அருகில் முறிந்து மோதிய வால்மீன் “சூமேக்கர்-லெவி 9” [Shoemaker-Levi 9] சுமந்து கொட்டிய நீர்தான் என்பது இப்போது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

    கோரான் பில்பிராட் [Herschel Project Scientist, ESA] 

    தாக்கிய பளு மிக்க வால்மீன் சூமேக்கர்-லெவியின் குப்பைகள்  வியாழக் கோள் வளையத்தைச் சிதைத்ததையும், அதன் முறிவுத் தூசிகளையும், நீரையும் விஞ்ஞானிகள் விண்ணோக்கியில் முதன்முறை காண முடிந்தது.

    ஜோ பேர்ன்ஸ், கார்நெல் பல்கலைக் கழகம்

    SOHO watching the comets

    சூரிய மண்டலத்தில் அப்பால் இருக்கும் நான்கு பூதப்  புறக்கோள்களின் [வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்]  சூழ்வெளியில் நீர்மை ஆவி காணப் படுகிறது.   அவற்றுக்கு நான்கு வித விளக்கங்கள் இருக்கலாம்.   பூதக் கோள் வியாழனில் 1994 இல் தோன்றிய நீரின் மூலம், வால்மீன் சூமேக்கர்-லெவியே.  மற்ற முறைகளிலும் சிறிதளவு நீர் வியாழன் பெற்றிருக்கலாம்.

    டாக்டர் காவலி  [Astronomy & Astrophysics Scholar] 

    ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கியே, வியாழக்கோளின் சூழ்வெளியில் உள்ள  நீர்த் தோரணப் புதிரை, நமது நேரடிப் பார்வையில் 1994 இல் விழுந்த வால்மீன் சூமேக்கர்-லெவியால் நேர்ந்தது என்பதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தெளிவாகத் தீர்வு செய்துள்ளது.

    கோரன் பில்பிராட்  [ ESA Herschel Project Scientist]

    Comet Levy 9

    ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கி வியாழச் சூழ்வெளியில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.

    2013 ஏப்ரல் மாதத்தில் ஈரோப்பியன் விண்வெளிப் பேரவை [European Space Agency]  அனுப்பிய ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகம்  [ESA Herschel Space Observatory]  தற்போது பூதக்கோள் வியாழனின் சூழ்வெளி  மேற்தளத்தில் நீர் இருப்புக் காரணம் பற்றிய   நீண்ட காலப் புதிர் ஒன்றை விடுவித்ததாக அறிவித்துள்ளது.    அதாவது 1994 ஜூலை மாதம் வியாழனில் மோதிய  சூமேக்கர்-லெவி வால்மீனே காரணம் என்பதை இப்போது உறுதிப் படுத்தியுள்ளது.  வியாழனின் தென் கோளப் பகுதியில் ஒரு வாரமாய் நேர்ந்த ஒளிமயமான வெடிப்பு முறிவில் 21 எண்ணிக்கை யுள்ள துண்டுகள் சங்கிலித் தொடர்போல் வால்மீனி லிருந்து வெளியேறி விழுந்தன !   முடிவில் இந்த வெடிப்பு வான வேடிக்கை பல வாரங்கள் நீடித்தன !   விண்ணோக்கி மூலமாக இதுவே விஞ்ஞானிகள் நேராகக் கண்ட முதல் சூரிய மண்டல வால்மீன் மோதல் நிகழ்ச்சி !   வால்மீன் வீழ்ச்சியால் தென் கோள வியாழனில் நீர்மைத் தோரணம் தெரிந்தது என்பதும் முதன்முதல் நிரூபிக்கப் பட்டது.

    இவற்றுக்குப் பேருதவி செய்த விண்ணோக்கிகள் இரண்டு, விண் வெளியில் சுற்றி வரும் நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி, அடுத்து ஈசாவின் இசா ஆய்வகம் [ESA Infrared Space Observatory] [ISA].  ஈசாவின் இசா ஆய்வகம் 1995 இல் பூதக்கோள் வியாழனின் மேற்தளச் சூழ்வெளியை ஆராய்வதற்கு ஏவப் பட்டது.  வால்மீன் சூமேக்கர்-லெவி மோதியதால் வியாழச் சூழ்வெளியில் நீர் வெள்ளம் கொட்டி இருக்கலாம் என்றோர் ஊகிப்பு இருந்தாலும், 1995 இல் அது உறுதியாக நிரூபிக்கப் படவில்லை.  20 ஆண்டுகளுக்குப் பிறகு உறுதிப் படுத்த ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கி உதவி செய்தது.

    ESA Herschel Telescope

    வியாழக் கோள் சூழ்வெளியில் தோன்றிய நீர்த் தோரணம் எதனால் எழுந்தது ?

    1.   முதலில் பூதக்கோள் வியாழனின் ஆழ்ந்த உட்தளத்திலிருந்து நீர்த் தோரணம் எழுதிருக்க முடியும் என்னும் ஊகிப்பு தவிர்க்கப் பட்டது.  ஏனெனில் அவ்வித உட்தள ஊற்று நீர் “குளிர் அடைப்பு”  [Cold Trap] அரணிலிருந்து மீறி மேற்தளத்துக்கு வர முடியாது.   ஆகவே வெளிப்புறத்தி லிருந்துதான் நீர் விழுந்திருக்க வேண்டும்.  மோதல் நேர்ந்து 15 ஆண்டுகள் கடந்தும், அந்தப் புதிர் விடிவிக்கப் படாமலே நீடித்தது.  2009 இல் ஈசா ஏவிய ஹெர்ச்செல் உட்சிவப்பு  நுணுக்கக் கண்ணே [Herschel Space Infrared Observatory Eye]  வியாழனின் சூழ்வெளியின் செங்குத்து, மட்ட நிலை நீர் ரசாயன அமைப்பைத் தெளிவாகக் காட்டி நிரூபித்தது.

    2.  ஹெர்ச்செல் உட்சிவப்பு நோக்கத்தின் கணிப்புப்படி பூதக்கோள் வியாழனின்  தென்பகுதியில், வடபகுதியை விட 2 அல்லது 3 மடங்கு நீரளவு காணப் பட்டது.   அதுவும் அந்த நீர்த் தோரணம் வால்மீன் சூமேக்கர்-லெவி 1994 இல் விழுந்த இடத்துக்கு அருகிலே தெரிந்தது.

    3.  மூன்றாவது யூகிப்பு, வியாழக் கோளில் காணப்படும் நீர்த் தோரணம், அங்கே படிந்த விட்ட  அகில வெளித் தூசிகளாய் இருக்கலாம் என்பது.  அப்படி யானால் அந்தத் தூசிகள் வியாழக் கோள் பூராவும் சூழ்வெளியில் ஒரே சீராகப்  பரவி இருக்க வேண்டும்.    தணிந்த மட்ட உயரங்களில் வடிகட்டப் பட்டிருக்க வேண்டும்.    அதனால் அந்த யூகிப்பும் தவிர்க்கப் படுகிறது.

    4.  வியாழக் கோளின் பனிமூட்டம் உள்ள ஒரு துணைக்கோளிலிருந்து “பூத நீர்மை வளையம்”  [Giant Vapour Torus] போல் விழுந்து பரவி இருக்கலாம்.   இது போல் சனிக்கோளில் அதன் துணைக்கோள் என்ஸிலாடஸிலிருந்து பனிநீர் வளையம் விழுந்துள்ளதை ஹெர்ச்செல் விண்ணோக்கி காட்டியுள்ளது.  அந்தக் கோட்பாடும் தவிர்க்கப் படுகிறது .  காரணம் அவ்விதம் நேர வெகு அருகில் வியாழனக்குத் துணைகோள் எதுவும் கிடையாது.

    5.  முடிவாக 2009 – 2010  ஆண்டுகளில் நேர்ந்த சிறு மோதல்கள், அவற்றின் விளைவுகளும், உஷ்ண மாற்ற விளைவுகளும் நீக்கப் படுகின்றன.

    6.  ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கியே, வியாழக்கோளின் சூழ்வெளி நீர்த் தோரணப் புதிரை, வால்மீன் சூமேக்கர்-லெவியால் நேர்ந்தது என்பதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வு செய்துள்ளது.

    Fig 5 Two Comets Orbiting the Sun

    வால்மீன் வியாழக் கோளில் விழுந்து வளையத்தைக் கலைத்தது !

    1979 இல் ஏவப்பட்ட வாயேஜர் -1 [ Voyager -1 ] விண்கப்பல்  முதன்முதலில் பூதக்கோள் வியாழனில் சனிக்கோள் போல் சில வளையங்கள் இருப்பதைப் படம் எடுத்தது.  சனிக் கோள் வளையங்கள் போல் ஒளிவீச்சின்றி  வியாழனின் வளையங்கள் மிகவும் மங்கியவை. எண்ணிக்கையில் குறைந்தவை.   அவை எல்லாம் தூசிகளே.   அந்த தூசிகள் பல்லாண்டுகள் கடந்து நாளடைவில் வளையம் முழுவதும் வியாழனில் மறைந்து விடும் என்று ஊகிக்கப்படுகிறது.    மேலும் கோள்கள் தோன்றி 5 பில்லியன் ஆண்டுகள் கடந்துள்ள போது,  புறக்கோள்களின் வளையங்கள் தோன்றி சில மில்லியன் ஆண்டு கள்தான் ஆகி யிருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  விண்கப்பல் வாயேஜர் -1 அனுப்பிய முதல் படத்தில் பூதக்கோளின் மங்கிய வளையம்  150,000 மைல் (250,000 கி.மீ) விட்டத்தில் இருப்ப தாகக் காட்டியது.   வியாழன் வளையத்தின் தடிப்பு 20 மைலுக்கும் (30 கி.மீ)  குன்றியதாக இருப்பதாய் அறிய முடிந்தது.   வியாழக் கோளின் கோசமர் (Gosamer) வளையத் தூள்கள் கோளின் இரண்டு துணைக் கோளிலிருந்து  [Thebe and Amalthea] விழுந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.    அடுத்த முக்கிய, மெலிந்த, ஒடுங்கிய வளையம் வேறிரண்டு துணைக் கோளிலிருந்து [Adrassstea, Metis] விழுந்தி ருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    வால்மீன் சூமேக்கர்-லெவி 9 [Shoemaker-Levy 9]  பூதக்கோள் மீது விழுந்தது.

    புறக்கோளின் வளையங்களை  பல்லாண்டுகள் ஆராய்ந்து வரும் வானியல் விஞ்ஞானி மார்க் ஷோவால்டர்  [Mark Showalter] சனிக்கோளின் வளையங் களை ஏதோ ஒன்று பாதித்து வருவாய் அறிந்தார்.   சனிக்கோளின் ஈர்ப்பியல் விசை வளையங் களில் அலைகளை எழுப்புவதாய் கருதினார்.   1996 இல் கலிலியோ விண்ணுளவி அனுப்பிய பூதக்கோள் வியாழனின் வளையங் களை நோக்கினார்.   அப்போது வளையங்களில் மர்மமான அதே மாதிரி அலைகள் எழுவதைக் கண்டார்.   அந்த அலைகளின் அசைவு நீளத்தைக் [Oscillation Length]  கணக்கிட்டு இரண்டு நிகழ்ச்சிகள் அதைத் தூண்டியிருக்க வேண்டும் என்று யூகித்தார்.   அதாவது 1990 அடுத்து 1994 ஆகிய ஈராண்டு களில் ஏதோ ஒரு நிகழ்ச்சி பாதித்திருக்கிறது என்று தீர்மானித்தார்.   வியாழக் கோளை நெருங்கும் வால்மீன் சூமேக்கர்-லெவி [9] 1992 இல் கண்டு பிடிக்கப் பட்டது.   1994 இல் அந்த வால்மீன் வியாழக் கோளில் மோதி நொறுங்கித் தூள் தூளானது.    அப்படி மோதி வியாழனில் பசிபிக்கடல் பரப்பளவில் ஒரு பெரிய கறையை உண்டாக்கியது.   ஷோவால்டர் வால்மீன் முறிவே பூதக்கோள் வளையத்தில் அத்தகைய அலைகளை உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று அறிவித்தார்.  1994 இல் வால்மீன் தூசிக் குப்பைகள் வியாழனைச் சுற்று வீதியில் சுற்றி, அதன் வளையத்தோடு சேர்ந்து கொண்டன.

     

    Cosmic Crash

     

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html

    21. BBC News – Milky Way’s Sweetness Throughout [Nov 25, 2008]

    22 BBC News – Genesis Faulty Battery Probed

    23. Sky & Telescope Magazine – Genesis Finding- Earth Has a Problem (Sep 8, 2004)

    24. BBC News – (Genesis) Crashed Probe  Yields Sun’s Secrets (Mar 15, 2006)

    25 New Scientist – Crashed Genesis Probe Delivers Solar Wind Dust – Genesis Space Probe Mission (Mar 15, 2006).

    26. Wikipedea – Genesis Spacecraft [Dec 2, 2008]

    27 Science Magazine – Genesis Search for Origin -The Sun Under Lock & Key By : Bob Silberg [Updated Nov 14, 2008]

    28. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]

    29 The Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Singnal Underground Water & Microbial Life [Nov 29, 2008]

    30 The Daily Galaxy on Biological Universe – “Super Cells” that Eat Radiation, Generate Electricity & Cure Cancer -A Galaxy Classic [Nov 14, 2008]

    31 BBC News – Earth Could Seed Titan with Life By : Paul Rincon 33 Wikipedia – Extra-terrestrial Life

    34 Space Science Reference Guide : Europa & Titan : Oceans in the Outer Solar System By : Walter S. Kiefer Lunar & Planetary Institute, Houston, Texas. [2003]

    35 The Daily Galaxy -Non-Carbon Species : Will We Fail to Detect Extra-terresstrial Life ? [Dec 3, 2008]

    36.http://www.thinnai.com/module=displaystory&story_id=40407085&format=html

    (Cassini-Huygens Space Probe Mission) (July 8, 2004)

    Origin of Jupiter’s Water Solved –The Massive 1994 Comet Bombardment

    40.http://www.spacedaily.com/reports/Herschel_links_water_in_Jupiters_stratosphere_to_1994_comet_impact_999.html [April 25, 2013]

    41.  http://www.nasa.gov/content/goddard/timeline-of-comet-ison-s-dangerous-journey/  [July 16, 2013]

    42.  http://www.cbc.ca/news/technology/comet-ison-likely-didn-t-survive-sun-encounter-1.2443504  [Nov 28, 2013]

    43.  http://thewatchers.adorraeli.com/2013/11/28/comet-ison-vs-the-sun/  [November 29, 2013]

    44.  http://abcnews.go.com/Technology/comet-ison-live/story?id=21053068 [November 29, 2013]

    45.  http://www.skyandtelescope.com/observing/highlights/193909261.html  [November 29, 2013]

    46.  http://en.wikipedia.org/wiki/Solar_Dynamics_Observatory   [November 30, 2013]

    47.http://en.wikipedia.org/wiki/Solar_and_Heliospheric_Observatory   [SOHO]  (SOlar Heliospheric Observatory)

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [November 30, 2013]

    http://jayabarathan.wordpress.com

    48. 

     ​ ​

    http://waitingforison.wordpress.com/updates-december-2013-1/  [Latest Update of Ison Comet] [December 1, 1023]

     
    YouTube – Videos from this email
    Share
  • குறவன் பாட்டு – 19

    குறத்தி கானகத்தில் கண்டுகளித்த காட்சிகள்

     

    நாரைகளும் வண்டுகளும் பலாக்கனிக்குக் கண்கள் வழங்குதல்

     

    மாலை வானில் நாரைக் கூட்டம்,

    மேலும் கீழும் சிறகை அசைத்து,

    மேவிப் பரந்த கடலின் கரையில்,

    மெல்லப் புரளும் அலைபோல் பறந்தன!                                                                    150

     

    அலைபோல் பறந்த நாரைக் கூட்டம்,

    ஆயிரக் கணக்கில் பலா மரத்தில்,

    அழகுத் தோரணம் போல அமர்ந்து,

    அசைத்துக் குலுக்கின உச்சிக் கிளைகளை!                                                                     151

     

    கிளையில் அமர்ந்து தூளிகள் ஆடிக்,

    காற்றில் சிறகினை நாரைகள் அடிக்க,

    கணத்த கனிகளைச் சுமந்த மரமே,

    குதித்துப் பறக்க முயல்வதாய்த் தெரியும்!                                                                      152

     

    வேகவைத்துத் தோலுரித்து, நுனிதொடங்கிப் பாதிவரை

    பிளந்தபின்பு, நடுத்தண்டை நீட்டி நிற்கும்,

    பனைங் கிழங்காய் நாரை தன்,

    பேரலகைப் பிளந்து நாநீட்டி நிற்கும்!                                                                               153

     

    நீரில் மீன்களைப் பிடிக்கும் விசையுடன்,

    நீண்ட அலகினை நொடியினில் செலுத்தி,

    நறுமணக் கனிகளைக் குத்திக் குத்தி,

    நாரைகள் நீண்ட துளைகள் இட்டன!                                                                                154

     

    யானைத் தந்த நுனிநுழை விட்டத்,

    துளையைச் செய்து அலகைச் செலுத்தி,

    சுளையைக் கவ்வி வெளியே எடுத்து,

    மீனை விழுங்கும் நினைவில் விழுங்கின!                                                                      155

     

    கொக்குகள் இட்ட மஞ்சள் துளையில்,

    கருவண்டுகள் அமர்ந்து கனியை உண்ண,

    மஞ்சள்விழிப் படலத்தின் மீது உருண்ட,

    கருவிழிப் படலம் உள்ளதாய்த் தோன்றும்!                                                                     156

     

    துளைகளின் வழியே சென்றிட அஞ்சித்,

    தயங்கித் தயங்கி வண்டுகள் நகர,

    தேன்சிந்தும் கண்களை மெதுவாய் உருட்டி,

    தீஞ்சுவைக் கணிகான் காண்பதாய்த் தோன்றும்!                                                            157

     

    மூட்டை போன்ற பசும்பலா, மேனியின்

    ஓட்டை மஞ்சள் வண்டுக் கண்களால்,

    காட்டைக் கண்டு கவினில் இலயித்து,

    வாட்டம் கொடுக்கும் வலியை மறந்தது!                                                                 158

     

    வேடன் விரித்த வலையில் சிக்கி,

    வாடும் பறவைகள் கூட்டம் போல,

    வெளிறிய மஞ்சள் சடையின் பிடியில்,

    வண்டுகள் நுண்கால் சிக்கித் தவித்தன!                                                                           159

     

    சிக்கித் தவித்த வண்டுகள் சிறகை,

    அச்சத்தோடு படபடத் தடிக்க, அவ்வொலிகேட்ட

    மந்திகள் வந்து, மானுடன் போலச்

    சிந்தனைகொணடு, வண்டுகளை விடுவித் தனவே!                                                       160

    Share
  • தத்தாத்​ரேயர்

    சு. ரவி

    தத்தாத்ரேயர் ஓவியம் – பார்க்க, ரசிக்க…

    Datthathreya 31 08 09 2

    Share
  • ஐயப்பன் திருப்புகழ்

    சு.ரவி    

    வணக்கம், வாழியநலம்!

    ஆரியங்காவு அய்யனுக்கும், குளத்துப்புழை பாலனுக்கும் உருவான திருப்புகழ்ப் பாடல்கள்..

    படிக்க, ரசிக்க…

    ஐயப்பன் திருப்புகழ் 2

    ராகம்: சக்கரவாகம்

    தானதந்தானத்  தனதான

    தானதந்தானத்  தனதான

     

    ஊழெனும் பாதைத் தடமீது

    ஊனுடம் பாசைத் தொடராலே

    கூழ்பெறும் பாடுற்(று) அலைமோதிக்

    கூனியிங் கேவற் படுவேனோ!

    தாழ்வெலாம் போகத் தளிர்போலுன்

    தாளையன் பாகத் தருவாயே!

    ஆழ்நெடுங் கானத் துறைவோனே

    ஆரியங்  காவிற் பெருமாளே!

    (தாளையன் பாகத் தருவாயே!)

     

    ஐயப்பன் திருப்புகழ் 3

    ராகம்: ரேவதி

     

    தனத்தத் தனதான  தனதான

    தனத்தத் தனதான  தனதான

    அறத்துட்  சிலபோதும் முனையாதே

    அவத்துட் படுவேனை அளியேனை

    புறத்துத் தடுமாற விடுவாயோ?

    புயற்கர்ப்ப மெனநீல மழைமேக

    நிறத்துத் திருமாலை விடையோனும்

    நினைக்கச் சிசுவான மணிமார்பா!!

    குறத்திக் கிணையோனின் இளையோனே!

    குளத்துப் புழைமேவு பெருமாளே!

    (புறத்துத் தடுமாற விடுவாயோ)

     

    வழிநடை தொடரும்..

    Share
  • மொழியும் இலக்கணமும்

    சதீஷ் குமார் டோக்ரா

    1098542_10200497743781930_2023689908_n

    ஒரு மொழிக்கு இலக்கணத்தின் அவசியம் என்ன என்று ஒருவரிடம்  கேட்டால், அவர் அனேகமாக, “இலக்கணம் மொழியை முறைப்படுத்துகிறது. அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. எது சரி, எது பிழையானது என்பதில் வித்தியாசம் காட்டுகிறது” என்பது போல் பதில் கூறுவார்.

    இந்தக் கட்டுரையில் இலக்கணத்தைச் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்போம்.

    எழுத்துகளின் அவசியம்:

    மொழி முதன் முதலில் ஒலிகளாகப் பிறந்தது. மொழியின் பயன்பாட்டுத் தேவை, காது கேட்கும் தூரம் வரை இருந்தபோது, மொழி ஒலிகளாகவே நீடித்தது. பிறகு, காது கேட்காத தூரத்திற்குச் செய்தி கொண்டுபோக வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, செய்தியை எழுத்துகள் மூலம் கொண்டுபோகும் அவசியம் உருவானது. எழுத்து வடிவம் தோன்றியது. அந்தந்தப் பொருளையோ, செயலையோ வரைப்படமாக பிரதிநிதித்து அனுப்பினார்கள். இந்த எழுத்துமுறையை நாம் படுகைத் தளக்குறியீடுகள் (hieroglyphics) என்கிறோம்.

    படுகைத் தளக்குறியீட்டு வடிவத்தை மொழியின் எழுத்து வடிவமாகப் பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது. எத்தனை பொருட்கள் மற்றும் செயல்களைப் பற்றிப் பேச வேண்டுமோ அத்தனை வரைப்படங்கள் உருவாக்க வேண்டும். இவ்வுலகத்தில் உள்ள பொருட்களும் சூழ்நிலைகளும் செயல்களும் ஏராளம். அவை அனைத்தையும் தனித் தனி வரைப்படங்களாக வழங்குவதானால் எண்ணற்ற எழுத்துகள் தேவைப்படுமே!

    மேதாவியான நம் முன்னோர்கள் ஒன்றை உணர்ந்தார்கள். நாம் மொழியில் பயன்படுத்தும் ஒலிகள் மிகக் குறைவு. ஆகவே, பொருட்களையும் செயல்களையும் வரைப்படங்களாக வழங்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு ஒலிக்கும் ஓரோர் எழுத்து வைத்துக்கொண்டால் மிகக் குறைவான எழுத்துகளை வைத்துக்கொண்டே ஒரு மொழிக்கு எழுத்து வடிவம் தந்துவிடலாம்.

    அப்படியே செய்தார்கள்: ஒரு மொழியிலுள்ள ஒவ்வொரு ஒலியைப் பிரதிநிதிக்கும் எழுத்து வடிவம் உருவாகி எழுத்துமுறை வடிவுபெற்றது.

    இதற்கும் இலக்கணத்தின் அவசியத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள்.

    சம்பந்தம் உண்டு.

    எவ்வாறு ஒலிகளை எழுத்துகளாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் திட்டம் எழுதுவதைச் சுலபமாக்கியதோ, அதே போல இலக்கணமும் மொழியைச் செய்தியறிவிப்புச் சாதனமாகப் பயன்படுத்தும்போது வார்த்தைகளின் தேவையைக் குறைக்கிறது.

    எப்படியென்று பார்ப்போம்.

    இன்று டில்லி போகிறேன் என்று சொல்லும்போது ‘போகும்‘ செயலைக் குறிக்கிறோம்.

    போகும் செயல் இன்று நடக்கலாம், நேற்று நடந்திருக்கலாம், அல்லது நாளைக்கு நடைபெறலாம். இம்மூன்றுக்கும் தனித்தனி வார்த்தைகள் வைத்துக்கொண்டால், 3 வார்த்தைகள் தேவைப்படும். அதனால், நம் முன்னோர்கள் போகும் செயல் ஒன்றுதான் அது வெவ்வேறு காலங்களில் நடைபெறும்போது தனித் தனி வார்த்தைகள் தேவையில்லை. ஒரே வார்த்தையை வடிவம் மாற்றிப் பயன்படுத்திவிடலாம் என்று முடிவு செய்தார்கள். போகிறேன், போனேன், போவேன் என்ற வடிவங்களைத் தோற்றுவித்து வார்த்தைகளின் பெருக்கத்தைத் தவிர்த்தார்கள்.

    இன்னும் பல வடிவங்கள் உருவாகின: போய்க்கொண்டிருந்தாரா, போகையில், போகப் போக, வயிற்றுப் போக்கு, பொழுதுபோக்கு என்று எத்தனையோ வடிவங்கள் தோன்றி கூடுதலான வார்த்தைகளைத் தோற்றுவிக்காமலேயே செய்தியறிவிப்பை நடைமுறைபடுத்த உதவின.

    யோசித்துப் பாருங்கள், ஒரு வினைச்சொல் வார்த்தையுடன்  கிறேன், -னேன், -வேன், -கொண்டிருந்தார்,  -யிருக்கிறார்  போன்றவற்றைச் சேர்த்து ஒரே வினைச்சொல் வார்த்தையை பல்வேறு சூழ்நிலைகளிலும் காலங்களிலும் நடைபெற்ற செயல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு தனி வார்த்தையைக் கையாள வேண்டி வந்தால் எத்தனை வார்த்தைகள் தேவைப்படும், நினைத்துப் பாருங்கள்!

    ஆக, இலக்கணம் செய்தியறிவிப்பிற்காக நாம் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, மொழியைச் செய்தியறிவிப்பு சாதனமாகப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

    Grammar expands the range of communication, while reducing the need for words to do so.

    ஒரு நியாயமான கேள்வி எழலாம்.

    போகிறேன், போனேன், போவேன் ஆகிய வடிவங்களின் மூலமாக ஒரே செயலின் வெவ்வேறு காலங்களைப் பிரதிநிதித்து, மூன்று வார்த்தைகளை உருவாக்குவதற்குப் பதிலாக ஒரே வார்த்தைக்கு மூன்று வடிவங்கள் அளித்து, வார்த்தைகனின் தேவையைக் குறைக்கிறோம் என்பது சரிதான். ஆனால், போகிறான், போகிறேன், போகிறாள், போகிறார்கள், போகிறது, போகிறீர்கள், போகிறாய் என்று ஒவ்வொரு பாலாருக்கும், ஒருமை – பன்மைக்கும் தனித்தனி இலக்கண வடிவங்கள் அமைப்பது அவசியமா? ஏன் ஆங்கிலத்தில் You go, they go, we go என்று வாக்கியங்களில் இருப்பது போல் go என்ற ஒரே வடிவத்தைப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு பாலாருக்கும், ஒருமை – பன்மைக்குத் தனித் தனி வடிவங்கள் உருவாக்குவதால் என்ன பயன்?

    சாதாரணச் செய்தியறிவிப்புக்கு (day-today-communication) இது போதும்தான். மக்களை நான் போகிறான், நீங்கள் போகிறான், அவர்கள் போகிறான் என்றெல்லாம் பழக்கப்படுத்திவிட்டால் அன்றாட செய்தியறிவிப்பில் எந்தப் பாதிப்பும் இருக்காது. பெரும்பாலான மொழிகளில் இதே முறையில் ஒரே வடிவத்தைப் பயன்படுத்திச் செய்தியறிவிப்புத் தேவையைப் பூர்த்தி செய்வது வாடிக்கை.

    ஆனால், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய, பழங்காலத்திலேயே மிகச் சிறந்த இலக்கியங்களை உருவாக்கிய மொழிகளில், மொழி ஒரு அன்றாடச் செய்தியறிவிப்பு சாதனமாக மட்டும் அல்லாமல் சிறந்த இலக்கியத்தை இயற்றுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த முறையில் இலக்கணம், குறைவான வார்த்தைகளில் அதிக அர்த்தங்களைச் சிப்பமிட உதவியது.  கவிதைகளில் அர்த்தத்தின் அடர்த்தி கூட, இலக்கண வடிவங்கள் கை கொடுத்தன.

    Multiple forms in the grammars of Sanskrit and Tamil make it possible to densely package into a few words ideas and emotions that, in another language, might require a far greater number of words. 

    எப்படி என்பதை இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியில் பார்ப்போம்.

    Share
  • வாழ்க்கை நலம் – 37

    குன்றக்குடி அடிகள்

    37. புறம் கூறல் தீது!

     

    புறங் கூறல்  – அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய குற்றம் குறைகளைப் பேசுதல், மேலும் அவர் முன்னே முகமனாகப் பாராட்டுதல்; புகழ்தல், அப்புறம் அந்த நபரை அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய பழிகளை மட்டும் கூறுதல் புறங்கூறுதலாகும்.

    சிலர் புறங்கூறுதல் என்ற தீமையை, நன்மை கருதிச் சொல்வதாகக் கூறுவர்.  ஆனால் புறங்கூறித்தான் நன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. எல்லாரும் நேரிடையாக நன்மையை எடுத்துச் சொன்னால் மறுப்பார் யார்? அறம் சொல்லுவார்போல் நடித்துப் புறம் சொல்லுதல் தீய பழக்கம்.

    சிலர் வாயிலிருந்து சொற்கள் வருவதில்லை.  “எரியும் நெருப்பு கனலே வீசுகிறது” என்று ஒரு பழமொழி உண்டு, நன்மையையே சொன்னாலும் புறத்தே சொல்லுதலை நன்மையென எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் பகையே வளரும், மானம்  – அவமானச் சிக்கல்கள் தோன்றும். புறஞ்சொல்லுதல் ஒரு பயனையும் தராததால் புன்மை என்றார் திருவள்ளுவர். “குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்” என்று திருமுறை கூறும்.

    ஒருவர் இல்லாத இடத்தில் அவர்தம் நற்குணங்களைப் பற்றி மட்டுமே கூற வேண்டும். அவர் முன்னே குற்றங்களை எடுத்துக் கூறலாம். புறங்கூறுதலால் பிணக்கும் பகையும் வளர்ந்து பிரிவினைகள் உருவாகும். இதனால் புறம் பேசுதலில் ஒரு நன்மையையும் இல்லை. தீமை மட்டுமே தரும்.

    குற்றங்களையே எண்ணிப் பேசுதலால் காலப்போக்கில் குற்றங்கள் நம் மீதே சாரும் என்பதையும் அறிக! குற்றங்களைப் பொறுத்தாற்றும் உணர்வோடு ஏற்றுக்கொண்டு பழகும் அனுபவம் இருந்தால் குற்றங்கள் தொடரா.

    நல்லனவற்றை நேரில் கூறுக. புறங்கூறுதல் அளவிறந்த தீமை தரும். அதனால் ‘புன்மை’ என்று ஏளனம் செய்யப் பெறுகிறது.

    புறங்கூறும் பழக்கமுடையவர்களுக்கு மற்றவர்களின் குணங்களும் அருமைப்படும் தெரியாது, குற்றங்குறைகளையே காண்பர்; விமர்சிப்பர்; ஏசுவர்; பழிதூற்றுவர் இதனால் பகை வளரும்.  ஆதலால் புறங்கூறுதல் தீது. நன்மையை நோக்கிக்கூடப் புறங்கூறக் கூடாது.

    அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
    புன்மையாற் காணப் படும்.
    (குறள் – 185)

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ?

    சு. ​​கோதண்டராமன்

    விதியா, மதியா?  இது தொல் நெடுங்காலமாக இருந்து வரும் பிரச்சினை. திருவள்ளுவரும் இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்.

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

    சூழினும் தான் முந்துறும்      

    என்று விதியின் வலிமை பேசிய அவர்

    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

    தாழாது உஞற்றுபவர் 

    என்று முயற்சியின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

                    இது பற்றிப் பாரதியின் கருத்து என்ன? அவரது பாஞ்சாலி சபதத்தைப் பார்ப்போம்.

                    பாரதப் போராகிய பேரழிவு வரப்போகிறது என்று தெரிந்தும் அதைத் தடுக்க முடியாமல் எல்லோருமே பலி ஆகிறார்கள். பாண்டவரைச் சூதாட அழைக்கப் போகிறேன் என்றும் அதற்குத் தந்தை இணங்காவிட்டால் உயிர் விடுவேன் என்றும் துரியோதனன் மிரட்டுகிறான். பிள்ளை மீதுள்ள பாசத்தால் அவனுடைய சதித் திட்டத்திற்கு வேறு வழியின்றி ஒப்புதல் அளிக்க நேர்ந்த போது திருதராட்டிரன் கூறுகிறான்,

    bharathiyar‘விதிசெயும் விளைவி னுக்கே-இங்கு

    வேறு செய்வார் புவிமீ துளரோ?

    …………

    ‘விதி! விதி! விதி! மகனே! –இனி

    வேறெது சொல்லுவன் அட மகனே!

    கதியுறுங் கால னன்றோ-இந்தக்

    கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்?

    கொதியுறு முளம் வேண்டா;-நின்றன்

    கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்;

    வதியுறு மனை செல்வாய்,’ –என்று

    வழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான்.

     

                    விதுரனுக்கு வருங்காலம் தெரிகிறது. ஆனால் அவனாலும் துரியோதனனின் திட்டத்தைத் தடுக்க முடியவில்லை. அவனுடைய ஆலோசனைகள் நலம் பயப்பவை என்று அறிந்தும் அவற்றைச் செயற்படுத்த முடியாமல் திருதராட்டிரனின் கைகள் கட்டப்பட்டுவிட்டன. அதை உணர்ந்து, திருதராட்டிரன் கூறுகிறான்,

    என்று விதுரன் பெருந்துயர் கொண்டே
    ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர்,
    ‘சென்று வருகுதி, தம்பி இனிமேல்
    சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன்.
    வென்று படுத்தனன் வெவ்விதி என்னை;
    மேலை விளைவுகள் நீஅறி யாயோ?
    அன்று விதித்ததை இன்று தடுத்தல்
    யார்க்கெளி’தென்றுமெய் சோர்ந்து விழுந்தான்.

                    அண்ணன் கூறியபடி விதுரன் துரியோதனனுடைய அழைப்பில் சூழ்ச்சி உள்ளது என்பதைத் தருமனுக்குத் தெரிவிக்கிறான். தருமனோ, ஆபத்து வரும் என்று அறிந்தும், தந்தை அழைத்திருக்கும் போது போகாமல் இருப்பது தவறு என நினைக்கிறான். தந்தையே சூழ்ச்சி இருப்பதைச் சுட்டிக் காட்டி இருந்தும், தம்பிகள் தடுத்தும் தருமன் தன் மனதை மாற்றிக் கொள்ள வில்லை. துன்பம் வரும் என்ற அச்சத்தால் கொள்கை தவறுவது சான்றாண்மை ஆகாது என்று கருதுகிறான். இது விதியின் செயல் என்று அழைப்பை ஏற்றுக் கொள்கிறான்.

    ‘இங்கிவை யாவுந் தவறிலா-விதி
    ஏற்று நடக்குஞ் செயல்களாம்;-முடி
    வெங்கணு மின்றி எவற்றினும்-என்றும்
    ஏறி இடையின்றிச் செல்வதாம்-ஒரு
    சங்கிலி யொக்கும் விதி கண்டீர்-வெறுஞ்
    சாத்திர மன்றிது சத்தியம்-நின்று
    மங்கியொர் நாளில் அழிவதாம்-நங்கள்
    வாழ்க்கை இதனைக் கடந்ததோ?

    ………

                                                                    ……..நெஞ்சில்
    ஊன்றிய கொள்கை தழைப்பரோ-துன்பம்
    உற்றிடு மென்பதொர் அச்சத்தால்?-விதி
    போன்று நடக்கும் உலகென்றே-கடன்
    போற்றி ஒழுகுவர் சான்றவர்.

                    ஊரை விட்டுப் பாண்டவர் தங்கள் துன்பக் களம் நோக்கிச் செல்கையில் கவிக் கூற்றாக வருவது விதியின் வலிமை பற்றிய இக்கருத்து.

    நீங்கிஅகன் றிடலாகுந் தன்மை உண்டோ

    நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே?

     

    நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்

    நழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும்;

    வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்;

    வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்;

    கிரிவகுத்த ஓடையிலே மிதந்து செல்லும்;

    கீழ்மேலாம், மேல் கீழாம்; கிழக்கு மேற்காம்;

    புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்

    போற்றிடுவார், விதிவகுத்த போழ்தி னன்றே.

                    சூதாட்டத்தில் தான் தோற்று விடுவோம் என்பது தருமனுக்குத் தெரிகிறது. என்றாலும் சூதாட அழைக்கப்படும்போது மன்னர்கள் மறுக்கக் கூடாது என்ற மரபை அவன் பின்பற்ற வேண்டி இருக்கிறது. வேறு வழியின்றி சூதாட அவன் இணங்குகிறான்.

    வெய்ய தான் விதியை நினைந்தான்
    விலக்கொ ணாதறம் என்ப துணர்ந்தோன்;

                    இவ்வாறு பாஞ்சாலி சபதக் கதை முழுவதும் அறிஞர்கள், நல்லவர்கள் பலர் வர இருக்கும் பேரழிவை உணர்ந்தும், உணர்த்தியும் தடுக்க முடியாமல், ஒவ்வொரு நிலையிலும் போரை நோக்கிக் கதை நகர்வதைக் காணும்போது விதியின் வெல்லவொண்ணா வலிமை புலப்படுகிறது.

                    இதைக் கொண்டு பாரதி விதியை நம்பினார் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இது வியாசர் கூறியதன் மொழிபெயர்ப்பே என்று முன்னுரையில் அவரே கூறுவதால் இது வியாசருடைய கருத்தே அன்றிப் பாரதியின் கருத்து அல்ல என்று அறியலாம்.

                    ஆனால் தன் சுய சரிதையில் ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ? என்று அவர் கேட்கும்போது விதி வலியது, வெல்ல முடியாதது என்று அவர் நம்பியதை உணர முடிகிறது.

                    ஆம். பாரதி விதியின் வலிமையை உணர்ந்திருந்தார். அது இறைவனின் மந்திரி என்று அவர் கூறுகிறார். கண்ணனைத் தந்தையாக உருவகித்த பாடலில்,

                                                    – ஒரு
    மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
    முன்பு விதித்த தனையே – பின்பு
    முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான்.

                    செய்த தவறுக்குத் தண்டனையாகத் துன்பத்தை தனது மந்திரியாகிய விதி தரும்போது இறைவன் குறுக்கிடுவதில்லை.

    நயமிகத் தெரிந்தவன் காண்; – தனி

    நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.

                    ஆனால் பாரதி பாடிய பாடல்களில் விதிக்குக் கட்டுப்பட்டு வாளா இராமல் முயற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். கஞ்சி குடிப்பதற்கிலாத நிலையில் அதன் காரணங்களை அறிந்து அதை நீக்கும் முயற்சியில் ஈடுபடாத எளியோரைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் தவிக்கிறார். துன்பம் வரும்போது இது விதிவசத்தால் வந்தது, எது வரினும் அனுபவித்தே தீருவேன் என்று கையைக் கட்டிக் கொண்டிருத்தல் தகாது என்பதைக் காட்டும் அறிவுரைகள் பல அவருடைய ஆத்திசூடியில் உள்ளன.

    கொடுமையை எதிர்த்து நில்.

    சீறுவோர்ச் சீறு.

    செய்வது துணிந்து செய். 

    சௌரியந் தவறேல்.

    ஞமலிபோல் வாழேல்.

    தேசத்தைக் காத்தல்செய்.

    நாளெலாம் வினைசெய்.

    பணத்தினைப் பெருக்கு.

    மிடிமையில் அழிந்திடேல்.

    மீளுமாறு உணர்ந்துகொள்.

    முனையிலே முகத்து நில்.

    யவனர்போல் முயற்சிகொள்.

    ராஜஸம் பயில்.

    ரௌத்திரம் பழகு.

    லௌகிகம் ஆற்று.

    வீரியம் பெருக்கு.

    வெடிப்புறப் பேசு.

    வையத் தலைமைகொள்

                    பாஞ்சாலி சபதத்தில் திரௌபதி தெருவில் இழுத்துச் செல்லப்படும்போது மக்கள் அதைத் தடுக்க முயலாமல் புலம்பினர் என்று அவர்களை இகழ்கிறார்.

    ஊரவர் தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ?

    வீரமிலா நாய்கள்,விலங்காம் இளவரசன்

    தன்னை மிதித்துத் தராதலத்தில் போக்கியே,

    பொன்னை அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல்

    நெட்டை மரங்களென நின்று புலம்பினார்

    பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ”?

                    விதியின் பேரில் பழியைப் போட்டு விட்டு முயற்சியின்றி இருப்பவர்களை இறைவன் இகழ்வான் என்றும் அன்பு செய்தால், அதாவது பிறர் துயர் நீக்க முயற்சி செய்தால் அந்த முயற்சிக்குப் பலன் கொடுப்பான் என்றும் கூறுகிறார்.

    துன்பத்தில் நொந்து வருவோர் – தம்மைத்
    தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்;
    அன்பினைக் கைக்கொள் என்பான்; – துன்பம்
    அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;

                    விதி மதி இரண்டில் எது வலியது என்பது பற்றிய தன் கருத்தைச் சுருக்கமாக அழகுத் தெய்வம் என்னும் பாடலில் கூறுகிறார்,

    காலத்தின் விதி மதியை வெல்லுமோ என்றேன்

    காலமே மதியினுக்கோர் கருவியாமென்றாள்.

                    ஆம். மதியைத் தெளிவாக வைத்திருந்தால் விதி வசத்தால் துன்பம் நேர்கையில் அதைப் போக்கிக் கொள்ளச் செயல்படத் தூண்டும். முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற மொழிப்படி செயலுக்கு விளைவு நிச்சயம் உண்டு என்ற விதியின் நியமத்தைச் சாதகமாகப் பயன்படுத்தித் துன்பத்திலிருந்து விடுதலை அடையலாம்.

    வெற்றி செயலுக்குண்டு, விதியின் நியமம் என்று

    கற்றுத் தெளிந்த பின்னும் கிளியே கவலைப்படலாகுமோ?

                    ஆனால் சில சமயங்களில் முயற்சி பலன் தராமல் போவதும் உண்டு.

                                                    ………..     கிணற்றினுள்ளே

    மூழ்கிய விளக்கினைப் போல் – செய்யும்

    முயற்சியெல்லாம் கெட்டு முடிவதும்

    ஏழ்கடல் ஓடியுமோர் பயன்

    எய்திட வழியின்றி இருப்பதுவும்

    உண்டு.

                    அப்பொழுது என்ன செய்ய வேண்டும்? ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி என்பதால் இறைவனைச் சரணடைக என்கிறார் பாரதி. இறைவனிடம் பக்தி செய்தால் நிச்சயம் பலனுண்டு. உண்மையான பக்தியின் மூலம் துன்பங்கள் யாவும் நீங்கும். முன்னைத் தீய வினைப் பயன்கள் இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் என்று வேண்டினால் திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம். எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடையலாம். கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயமில்லை. அதற்கு அடிப்படையாக கடவுளிடத்தில் அசையாத நம்பிக்கை வேண்டும். நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு மறைத் தீர்ப்பு.

                    அப்படியும் துன்பம் தொடருமானால், சக்தி சோதனை செய்கிறாள் என்று உணர்க. பொறுமையுடன் இரு. நம்பிக்கை இழந்து பக்தியை விட்டு விடாதே. அவள் நிச்சயம் காப்பாள் என்ற சொல்லே துயர் போக்கும்.

    சக்தி சில சோதனைகள் செய்தால்  அவள்

    தண்ணருள் என்றே மனது தேறு

     

    பக்தியுடையார் காரியத்திற் பதறார் மிகுந்த பொறுமையுடன்

    வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்

     

    வையகத்துக்கில்லை, மனமே, நினக்கு நலம்

    செய்யக் கருதி இவை செப்புவேன்- பொய்யில்லை

    எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும் என்ற

    சொல்லால் அழியும் துயர்

                    பாரதியின் இவ்வழி வேதத்தையும் கீதையையும் ஆதாரமாகக் கொண்டது. பக்தி நெறி வேத நெறிக்கு விரோதமானது அல்ல. அறியாதார் சிலர் வேதம் என்பது வேள்வி முறையை மட்டுமே கொண்டதென்றும் பக்தி என்பது வேதச் சார்பு இல்லாத வழி என்றும் கூறுவர். இவர்களுக்குப் பாரதி பதில் கூறுகிறார்.

                    வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது, விக்கிரக ஆராதனை கிடையாது. ஸந்யாஸம் கிடையாது, அத்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா. பக்தி மாத்திரம் தானுண்டு. ….சரணாகதியே வழி. வேத ரிஷிகள் வேறு வழி காட்டியதாக ஸம்ஹிதைகளிலே தெரியவில்லை.

                    கீதையில் கண்ணனின் உபதேசமாகப் பாரதி கூறுகிறார், பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னான், பக்தி பண்ணிப் பிழைக்கச் சொன்னான்.

                    இவ்வாறு விதி வலியது என்பதை உணர்ந்தாலும், பக்தியின் மூலமும் முயற்சியின் மூலமும் அதைப் புறங்காண முடியும்  என்று நம்புவதே வாழும் நெறி என்று பாரதி வழிகாட்டுகிறார்.

                    இந்தப் பக்தி நெறியே பாரதியின் பாடல்கள் அனைத்திலும் விரவிக் கிடக்கிறது.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…85

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் !

    இங்கிலாந்து குளிர்காலம் எனும் உறைபனிக் காலத்திற்குள் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கும் வேளையிலே உள்ளம் கதகதப்பாக உங்களுடன் மடல் மூலம் ஒரு உரையாடல்.

    இன்றைய காலை தொலைக்காட்சிச் செய்தியிலே கேட்ட ஒரு தகவல் என் நெஞ்சை உறைய வைத்தது.

    இங்கிலாந்து அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சிருவர்களுக்கான திகாரியை பி.பி.சி காலநேர நிகழ்ச்சியில் பேட்டி கண்ட பழுது அவர் கூறினார் இங்கிலாந்தின் ஒரு கணக்கெடுப்பின் படி இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகெங்கும் அதிக அளவில் சிறுவர்கள் பாலியல் சம்பந்தப்பட்ட இணையத்தளங்களை அதிக அளவில் பார்வையிடுகிறார்கள் என்று.

    அப்போது அவ்ரைப் பேட்டி கண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் கேட்ட கேள்வி , சிறுவர்கள் கணிணியில் இவ்விணையத்தளங்களைப் பார்வையிடுகிறார்கள் என்றால் பெற்றோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுவே !

    காலம் மாறுகிறது, காலாச்சார அடையாளங்களில் மாற்றம் ஏற்படுகிறது, தகவல் தொழில் நுட்ப பரிமாற்றங்கள் துரித அள்வில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இம்மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து எமது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொள்வது யதார்த்தத் தேவையாகிறது.

    ஆனாலும் ,

    மனிதர்மத்தின் அடிப்படைகளில் மாற்றம் ஏற்பட முடியுமா? விஞ்ஞானம் த்தனை தூரம் முன்னேறினாலும், காலம் எத்துணை அளவில் மாற்றம் கண்டிருந்தாலும், நாகரீகம் எவ்வளவோ வகையில் மாறியிருந்தாலும், தாய் தாய் என்பதும், தந்தை தந்தை என்பதும், தாரம் தாரம் என்பதும், சகோதரர்கள் சகோதரர்கள் என்பதும் மாற்றம் கண்டிட முடியுமா?

    நாம் எமது மனதின் கட்டுப்பாட்டை மனித தர்மத்தின் தார்மீக எல்லைகளைக் கடக்க அனுமதித்து விட்டு அதற்கு காலத்தின் மாற்றத்தைக் காரணமாகக் கூறி நியாயம் கற்பிக்க முயல்வது நகைக்கப்பட வேண்டிய விடயமாகும்.

    குழந்தைகளை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தி விட்டதும் எமது கடமைகள் முடிந்து போய் விடுகின்றனவா?

    இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயத்தைத் தூக்கி நிறுத்தப் போகும் தூண்கள். அவர்கள் மனிதன் எனும் தர்மத்தின் அடிப்படை நியாயங்களைக் கற்ரிருந்தால் தான் அமைதியான ஒரு அகிலத்திற்கு அவர்களால் துணை போக முடியும்.

    இன்றைய இந்த அவசரமான காலகட்டத்திலே நாமனைவரும் வாழ்வாதரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எம்மை பணம் சம்பாதிப்பதன் வழிகளுக்குள் முழுமையாகப் புதைத்துக் கொண்டுள்ளோம்..

    நவீன கால தேவைகளின் அடிப்படியில் வாழ்வில் வசதிகளைப் பெருக்கிக் க்லொள்கிரோம் எனும் பெயரில் பெருகும் வசதிகளை அனுபவிக்கக்கூட முடியாத வகையில் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

    வருங்காலத் தலைமுறைகளுடன் வாழ்வின் முக்கிய தார்மீக விதிகளை விளக்ககூடிய வகையில் எமது நேரத்தைச் செலவிட முடிவதில்லை. இதற்கு விதிவிலக்காக சிலர் இருக்கிறார்கள் என்பதனை மறுக்க முடியாது. ஆனாலும் பெரும்பான்மையான்வர்கள் தமது குழந்தைகளுடன் தாம் விரும்பிய அளவில் நேரத்தைச் செலவிட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

    இத்தகைய சீழலில் தற்காலக் குழந்தைகளின் கைகளில் கணிணிஎன்பது ஒரு விளையாட்டுப் பொருளாகி விட்டது. பதின்ம வயதுகளில் தாம் ஒரு மடிக்கணனிக்கோ அல்லது கயடக்கக் கணணிக்கோ சொந்தக்காரர்கள் இல்லையென்றால் அது ஏதோ தாம் குறைவானவர்கள் என்று கருதுமளவிற்கு இவைகள் அவர்கள் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது.

    பெரும்பான்மையானவர்கள் மத்தியில் இது அவர்களது அறிவை விஸ்தரிப்பதற்கு பயன்பட்டால் கூட அவர்களின் பாவனையைத் தொடர்ந்து கண்காணிக்குமளவிற்கு அதிகமான பெற்றோருக்கு நேரம் கிடைப்பதில்லை.

    இத்தகைய சூழலினால் இக்கணிணிகளின் மூலம் தவரான இணையத்தளங்களை தற்செயலாகவோ அன்றி வேண்டுமென்றோ பதின்ம வயதுச் சிறுவர்கள் பார்வையிடுவதைத் தவிர்க்க முடியாது போய்விடக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது..

    எமது நாடுகளின் வருங்கால வரலாற்றைச் சிறப்பு மிக்கதானதாக மாற்றுவதில் எமது சந்ததியும் பங்குபெற வேண்டுமானால் மனித வாழ்கையின் தார்மீக பொறுப்புகளின் பெருமைகளை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு சரியான வாழி முறையை பெற்றோர்கள் கற்றுத் தரவேண்டும்..

    பாடசாலைகளுக்கு ஒழுங்காகப் போகிறார்கள் தானே ஒழுக்கத்தின் போதனையை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கவனயீனமாக இருந்து விட்டுப் பின்னால் புலம்புவதால் எவ்விதப் பயனுமில்லை

    இன்றைய உலகில் தமிழர்களாகிய நாம் பரந்து பட்டு உலகின் பல பாகங்களிலும் வாழ்கிறோம். தாம் வாழும் நாடுகளில் எமது இளைய தலைமுறை பலதரப்பட்ட கலாச்சாரங்களுக்குட்பட்ட பல்வேறு இனத்தினருடன் பழக வேண்டிடி ஏற்படுகிறது. இந்தச் சந்திப்புகளில் எமது அடிப்படை வாழ்க்கைத் தார்ர்மீக நெறிகள் தொலைந்து போய்விடாமல் இருப்பதர்கான பொருப்பு பெற்றவர்கள் வசமே இருக்கிறது.

    கலாச்சாரம், பழகும் பண்பு, ஒழுக்கமான வாழ்க்கை என்பவனவற்றை முன்னேற்ரத்து தடையான கால்விலங்காக மாற்றாமல் உள்ளத்தின் உணர்ச்சி வேகத்தை சரியான திசையில் செலுத்தக்கூடிய ஒரு கடிவாளமாக்குவது ஒன்றே எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வை உயர்ந்ததாக்கும்.

    அடுத்த மடலில் சந்திக்கும்வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 18ம் பகுதி

    தஞ்​சை​ வெ. ​கோபாலன்

    திருவிடைமருதூர்:
    மென்று விழுங்கி விடாய் கழிக்க நீர்தேடல்
    என்று விடியும் எனக்கு என்கோவே – நன்றி
    கருதார் புரம் மூன்றும் கட்டழலாற் செற்ற
    மருதா உன் சந்நிதிக்கே வந்து. 1.

    நன்றி கொன்ற அரக்கர்களையும், அவர்தம் புரம் மூன்றையும் மூண்ட செந்தழலாற் எரித்த மருதூர் வாழ் அண்ணலே! சதா காலமும் வயிற்றுக்கு உணவையும், உண்டபின் விடாய் தீர நீர்தேடி ஓடும் இந்த நீச வாழ்க்கை என்று தீரும், என்று நான் உன் சந்நிதிக்கு வந்து உனக்கே ஆளாவேன் சொல்லுவீர் எனை ஆளும் என் அரசே!

    திருவொற்றியூர்:
    கண்டங் கரியதாம் கண் மூன்று உடையதாம்
    அண்டத்தைப் போல அழகியதாம் – தொண்டர்
    உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுக ழொற்றிக்
    கடலருகே நிற்கும் கரும்பு. 2.

    ஆலகால விடமுண்ட காரணத்தால் நீலநிறம் பாய்ந்த கண்டமும், முகத்தில் மூன்று நயனங்களும், இந்த அண்டசராசரங்களைப் போல அழகும் படைத்த தொண்டர்கள் உடலும் உள்ளமும் உருகவைக்கும் இனிமை பொருந்திய கரும்பே! கீழைக் கடற்கரையோரம் திருவொற்றியூர் அமர்ந்த பெருமானே.

    ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பது வாய்ப் புண்ணுக்கு
    இடுமருந்த யான் அறிந்து கொண்டேன் – கடுவருந்தும்
    தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
    போவார் அடியிற் பொடி. 3.

    சீவடியும் புண்போன்ற ஒன்பது வாசல்களைக் கொண்ட இந்த உடலுக்கு இடவேண்டிய மருந்தை நான் அறிந்து கொண்டேன். அந்த மருந்து யாதெனின், (கடு + அருந்தும் = ஆலகாலவிடத்தை உண்ட) தேவாதி தேவனான திருவொற்றியூரானின் அடியவர்கள் தினந்தினம் நடந்த பூமியில் கிடக்கும் பாததூளியே இப்பிணிக்குச் சரியான மருந்து. (இக்கருத்தையொட்டியே சில ஆலயங்களில் அங்கப் பிரதக்ஷணம் செய்வது அடியார்கள் நடந்த பாததூளி உடலில் பட்டுப் புனிதமடைதற்காக என்பது கருத்து)

    வாவி யெல்லாம் தீர்த்தம், மணல் எல்லாம் வெண்ணீறு
    காவணங்களெல்லாம் கணநாதர் – பூவுலகில்
    ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
    ஓதும் திருவொற்றி ஊர். 4.

    மெய்யான தவம் புரிந்த புனிதர்கள் எல்லோரும் போற்றுகின்ற திருத்தலமாம் திருவொற்றியூரில் அமைந்துள்ள நீர்நிலைகள் அனைத்துமே சிவ புண்ணிய தீர்த்தங்களாம்; அந்நகர் எங்கும் பரவிக் கிடக்கும் மணல் யாவும் அவன் அணியும் திருநீறு; மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனங்கள் அனைத்துமே சிவகணங்களாகும்.

    திருவாரூர்:
    ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநாளென்று
    ஊரூர்கள் தோறும் முழலுவீர் – நேரே
    உளக் குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
    விளக்கிருக்கக் தீத்தேடு வீர். 5.

    திருவாரூர் தியாகேசர் இங்கே இருக்க, எந்தெந்த ஊரிலோ திருநாள் என்று ஊரெங்கும் பறையறைவீர். அட பேதையர்களே! சித்தத்தில் உறையும் அறிவான தெய்வத்தை உணராமல், ஊமைகளே! யாராவது விளக்கு எரிந்து கொண்டிருக்க தீக்காக அலைவார்களா?

    திருக்காளத்தி:
    பொய்யை ஒழியாய், புலாலை விடாய், காளத்தி
    ஐயரை எண்ணாய், அறம் செய்யாய் – வெய்ய
    சினமே ஒழியாய், திருவெழுத்து ஐந்து ஓதாய்,
    மனமே உனக்கென்ன மாண்பு. 6.

    நெஞ்சே! பொய் பேசுவதை நீ விட்டபாடில்லை; மாமிச உணவுகளை உண்பதை விட்டபாடில்லை; காளத்திநாதனை நினைக்கவில்லை; தான தர்மங்களையும் செய்தபாடில்லை; துன்பம் தரும் கோபத்தையும் விட்டபாடில்லை; அதெல்லாமிருக்கட்டும் சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவதும் இல்லை, இவைகளையெல்லாம் கடைபிடிக்காமல் உனக்கென்ன அத்தனை கர்வம்.

    காஞ்சிபுரம்:
    எத்தனை ஊர் எத்தனை வீடு எத்தனை தாய் பெற்றவர்கள்
    எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் – நித்தம்
    எனக்குக் களையாற்றா ஏகம்பா கம்பா
    உனக்குத் திருவிளையாட் டோ. 7.

    ஏ கம்பநாதா, எகம்பநாதனே! எனக்குத்தான் எத்தனை பிறவி, அவை அத்தனையிலும் எத்தனை ஊர், எத்தனை வீடு, என்னைப் பெற்ற அன்னையர்கள் எத்தனை பேர், எனக்கிட்டழைக்க எத்தனை பெயர்கள் ஏன் என சிந்தித்தேன், ஏகம்பநாதரே! இவை அத்தனைக்கும் நான் ஆளாவது எதனால், இதெல்லாம் உனது திருவிளையாடலோ?

    திருவிருப்பையூர்:
    மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன்
    வேதாவும் கைசலித்து விட்டானே – நாதா
    இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
    கருப்பையூர் வாராமற் கா. 8.

    இருப்பையூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! எனக்குத்தான் எத்தனை தாயார்கள் ஒவ்வொரு பிறவியிலும் அவர்கள் அத்தனை பேரும் என்னைப் பெற்று மனம் சலித்தார்கள்; தீவினைகள் செய்ய அத்தனை பிறவிகளிலும் ஓடியாடியதால் நானும் கால் சலித்துப் போனேன்; என்னை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வைத்து அந்த பிரம்மனாம் நான்முகனும் கைசலித்துப் போனான்; ஐயனே! இனியும் ஒரு முறை நான் கருப்பையூர் சென்று வாசஞ் செய்து மீண்டும் பிறக்காமல் வரமருள்வாயே.

    திருக்காரோணம்:
    அத்தி முதல் எறும்பு ஈரான உயிர் அத்தனைக்கும்
    சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகா – மெத்தப்
    பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி
    இசிக்குதையா காரோண ரே. 9.

    திருநாகைக் காரோணப் பெருமானே! யானை முதல் எறும்பு வரையிலான பலகோடி ஜீவராசிகளுக்கும் உணவளித்துக் காக்கும் பரமேச்வரா! ஞானத்தைத் தேடி அலையும் எனக்கும் வயிறு உண்டு, பசி உண்டு என்பதை அறியாமல் இருந்தேனே; பசிக்கொடுமை தாங்கமுடியவில்லை, அடியவனின் பாழ்வயிற்றைப் பற்றி நினைக்க வேண்டியிருக்கிறதே ஐயனே.

    திருக்குற்றாலம்:
    காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
    பாலுண் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்தே
    உற்றார் அழுமுன்னே, ஊரார் சுடுமுன்னே
    குற்றாலத் தானையே கூறு. 10.

    என் பாழும் உயிரை எடுத்தேக எமன் வருவதற்கு முன்பாக, கண்கள் பஞ்சடைந்து பார்வை மங்குமுன்பாக, வாயில் ஊற்றிய பால் உள்ளே இறங்காமல் கடைவாயில் வழிந்தோடுதற்கு முன்பாக, உயிர்போன என் உடல் மீது உறவும் சுற்றமும் விழுந்து அழுமுன்னே, அந்தப் பாழுடலை ஊரார் எடுத்துச் சென்று தீயிட்டுச் சுடுமுன்னே, ஓ நெஞ்சமே, திருக்குறாலநாதனை நினைத்துப் போற்றிடுவாய்.

    (இன்னும் வரும்)

    Share