ஐயப்பன் திருப்புகழ்
சு.ரவி
வணக்கம், வாழியநலம்!
ஆரியங்காவு அய்யனுக்கும், குளத்துப்புழை பாலனுக்கும் உருவான திருப்புகழ்ப் பாடல்கள்..
படிக்க, ரசிக்க…
ஐயப்பன் திருப்புகழ் 2
ராகம்: சக்கரவாகம்
தானதந்தானத் தனதான
தானதந்தானத் தனதான
ஊழெனும் பாதைத் தடமீது
ஊனுடம் பாசைத் தொடராலே
கூழ்பெறும் பாடுற்(று) அலைமோதிக்
கூனியிங் கேவற் படுவேனோ!
தாழ்வெலாம் போகத் தளிர்போலுன்
தாளையன் பாகத் தருவாயே!
ஆழ்நெடுங் கானத் துறைவோனே
ஆரியங் காவிற் பெருமாளே!
(தாளையன் பாகத் தருவாயே!)
ஐயப்பன் திருப்புகழ் 3
ராகம்: ரேவதி
தனத்தத் தனதான தனதான
தனத்தத் தனதான தனதான
அறத்துட் சிலபோதும் முனையாதே
அவத்துட் படுவேனை அளியேனை
புறத்துத் தடுமாற விடுவாயோ?
புயற்கர்ப்ப மெனநீல மழைமேக
நிறத்துத் திருமாலை விடையோனும்
நினைக்கச் சிசுவான மணிமார்பா!!
குறத்திக் கிணையோனின் இளையோனே!
குளத்துப் புழைமேவு பெருமாளே!
(புறத்துத் தடுமாற விடுவாயோ)
வழிநடை தொடரும்..
ஐயப்பன் திருப்புகழ் is very good. If it ;s recited version is released , it will be appropriate to learn and enjoy