Author: முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்

  • கலைஞர் கருணாநிதி

     

    அஞ்சலி!
    சு.ரவி

     

    Share
  • கவிதை எழுத வேண்டும்!

    சு. ரவி

     

    bharathy

    https://soundcloud.com/su-ravi/enssgi9f6lm9

    கவிதை எழுத வேண்டும்- இன்றொரு
    கவிதை எழுத வேண்டும்
    கவிதையாகவே வாழ்ந்தவனுக்கொரு
    கவிதை எழுதவேண்டும்
    காகிதம் இல்லை, கற்பனை இல்லை
    கைகளில் எழுதக் கோலெதும் இல்லை
    மேகப் பரப்பில் மிதக்கும் நிலவின்
    சீதக் கிரண விரல்களினாலொரு
    கவிதை எழுத வேண்டும்!

    உள்ளும் புறமும் ஓய்வில்லாமல்
    கனல் வளர்த்தானே, கவிதை நெய்தானே
    தெள்ளுதமிழ்க்குயிர் துள்ளித் துளிர்க்க
    தென்திசைப் புயலாய்த் திமிர்ந்தெழுந்தானே
    காற்றைப் பிடித்துக் கார்முகில் பரப்பில்
    கவிதை எழுத வேண்டும்!

    எல்லா உயிரும் தன்னுயிர் என்றே
    எக்களித்தானே விடுதலைக்காகச்
    சொல்லால் , செயலால் சோர்வில்லாமல்
    சூறாவளியாய்ச் சுழன்றடித்தானே!

    அலைகடற் பரப்பில் அவனுக்கென்றொரு
    கவிதை எழுத வேண்டும்

    கவலைகள் தின்னும் கணங்களில் கூடக்
    கண்ணனைக் காளியைக் காதலித்தானே
    தவமாய்க் கவிதைத் தீவளர்த்ததிலே
    தன்னையே ஆகுதி தான் கொடுத்தானே

    நெஞ்சத் திடலில் கோயிலெடுத்து
    நில்லாது பெருகும் கண்ணீரால் ஒரு
    கவிதை எழுதி வந்தேன்..இன்றொரு
    கவிதை எழுதி வந்தேன்!
    கவிதையாகவே வாழ்ந்தவனுக்கொரு
    கவிதை எழுதி வந்தேன்!
    சு.ரவி

    Share
  • விழிவேண்டல் பதிகம்

    என்னை சபரிமலைக்கு வழிநடத்திச் செல்லும் என் குருநாதரின் விழியொளி மங்கிய போது அவருக்கு விழியொளி வேண்டிப் பாடிய பதிகம் இது.

    சு.ரவி

    ayya

    விழிவேண்டல் பதிகம்

    கண்ணான தெய்வமே கருணா விலாஸமே

    கானகத் துறையும் அழகே!

    காரிருள் போக்கிடும் பேரருட் சோதியே

    கதிராய் விரிந்த பரமே!

    எண்ணாத நெஞ்சையும் எதிர்வந்து ஆட்கொளும்

    எளிமை பொதிந்த தயையே

    எகாந்த வாஸியே, எழைபங்காளனே

    ஏதிலார்க் குற்ற துணையே!

    பண்ணோடியைந்த கவி பரவுபாவலர் நெஞ்சில்

    பரவசத் தீப்பிழம்பே!

    பற்றற்று நின்பாதம் பற்றுவைத் தார்க்கருளும்

    பந்தளத் தீங்கரும்பே!

    கண்ணுதற் பெருமானும் கருநிறத் திருமாலும்

    காதலுற் றருள் பாலனே!

    கற்பித்த குருநாதன் குறைதீர்த்த தெய்வமே

    கண்திறந் தருளுவாயே!

    கார்த்திகைத் திங்கள் தோன்றக்

    காத்திருந்தாற் போல் அன்றே

    ஆர்த்திடும் உவகை கொண்டுன்

    அடியவர் மாலை சூடும்

    நேர்த்தியைக் கண்டு விம்மி

    நேத்திரம் நெகிழ வேண்டும்

    சீர்த்தியே சிவனார் பெற்ற

    செல்வமே விழிகள் தாராய்! (1)
    ஐயனே உன்னை நெஞ்சில்

    அனுதினம் பூஜை செய்து

    மெய்த்தவக் கோலம் கொண்டு

    மண்டல நோன்பும் காத்து

    நெய்யினைத் தெங்கில் வார்க்கும்

    நிகரிலாக் காட்சி காண

    மைம்முகிற் கொண்டல் மேவும்

    மைந்தனே விழிகள் தாராய்! (2)
    ஆரியங் காவில் உன்னை

    ஐயனாய்க் காணவேண்டும்

    கூரிய வாளோ(டு) அச்சங்

    கோவிலில் கோனாம் கோலம்

    நேரிலே காண வேண்டும்

    நெஞ்செலாம் நெகிழ வேண்டும்

    சூரியச் சுடரை ஏற்றும்

    சுந்தரா விழிகள் தாராய்!! (3)
    அழகினை அமுதில் தோய்த்து

    அம்புலி ஒளியைச் சேர்த்து

    மழலையாய்த் தவழும் செல்வ

    மணிகண்ட னே!குளத்துப்

    புழையினில் குழந்தை யே!என்

    புன்னகை அரும்பே உன்னைத்

    தொழுது நான் காண வேண்டும்

    துணைவிழி இரண்டும் தாராய்! (4)
    கருமேனி அண்ணல் தோழன்

    கங்கையின் குகனைப் போல

    எருமேவி கோட்டை ஆண்டுன்

    எல்லையைக் காக்கும் வாவர்

    திருவாயில் தொடங்கி பக்தர்

    திந்தகத் தோமென் றாடி

    வருகின்ற காட்சி காண

    வளரொளி நயனம் தாராய்! (5)
    படிகநீர் அழுதை ஆடிப்

    பையவே பக்தர் கூட்டம்

    நெடிதுயர் மலைகள் தாண்டி

    நெருங்கிய காட்டின் ஊடே

    முடிசுமந் துன்பேர் கூவி

    முனைப்புடன் ஏகும் காட்சி

    அடியவன் காண வேண்டும்

    ஐயனே விழிகள் தாராய்! (6)
    சம்புவும் மாலும் ஈந்த

    சத்தியச் சுடரே! சீற்ற

    வெம்புலி இவரும் வல்வில்

    வீரமே! வேந்தே! வானில்

    உம்பரின் உடுக்கள் நாண

    உனதடி யார்கள் ஏற்றும்

    பம்பையின் தீபம் காணப்

    பழுதிலா விழிகள் தாராய்! (7)
    கரிமுகக் கடவுள் கோவில்

    கடந்துசெங் குத்தாய்ச் செல்லும்

    சரிவிலே ஏறிச் சென்று

    சபரியின் பீடம் கண்டு

    சரத்தினை ஆலில் தைத்து

    சன்னதி நோக்கி அன்பர்

    விரையுமக் காட்சி காண

    விழிகளில் ஒளியைத் தாராய்! (8)
    இருமுடி தலையில் ஏந்தி

    இணையடி நினைவில் மாந்தி,

    பரவசத் தோடே பதினெண்

    படிகளில் பணிவாய் ஏறி

    தரிசனம் கண்டு கண்ணீர்

    தாரையாய்ப் பெருக வேண்டும்!

    ஹரிஹர சுதனாம் எங்கள்

    ஐயனே விழிகள் தாராய்! (9)
    ஐயனே உந்தன் மேனி

    அடியவன் சுமந்து வந்த

    நெய்யிலே நனையக் கண்டு

    நெக்குநெக் குருக வேண்டும்!

    மெய்யெலாம் அணிகள் பூண்ட

    மின்னலே! மகர ஜோதித்

    தெய்வமே நின்னைக் காணத்

    தேசுறு விழிகள் தாராய்! (10)

    -சு.ரவி

    விழிவேண்டல் பதிகம்
    கண்ணான தெய்வமே கருணா விலாஸமே

    கானகத் துறையும் அழகே!

    காரிருள் போக்கிடும் பேரருட் சோதியே

    கதிராய் விரிந்த பரமே!

    எண்ணாத நெஞ்சையும் எதிர்வந்து ஆட்கொளும்

    எளிமை பொதிந்த தயையே

    எகாந்த வாஸியே, எழைபங்காளனே

    ஏதிலார்க் குற்ற துணையே!

    பண்ணோடியைந்த கவி பரவுபாவலர் நெஞ்சில்

    பரவசத் தீப்பிழம்பே!

    பற்றற்று நின்பாதம் பற்றுவைத் தார்க்கருளும்

    பந்தளத் தீங்கரும்பே!

    கண்ணுதற் பெருமானும் கருநிறத் திருமாலும்

    காதலுற் றருள் பாலனே!

    கற்பித்த குருநாதன் குறைதீர்த்த தெய்வமே

    கண்திறந் தருளுவாயே!

    கார்த்திகைத் திங்கள் தோன்றக்

    காத்திருந்தாற் போல் அன்றே

    ஆர்த்திடும் உவகை கொண்டுன்

    அடியவர் மாலை சூடும்

    நேர்த்தியைக் கண்டு விம்மி

    நேத்திரம் நெகிழ வேண்டும்

    சீர்த்தியே சிவனார் பெற்ற

    செல்வமே விழிகள் தாராய்! (1)
    ஐயனே உன்னை நெஞ்சில்

    அனுதினம் பூஜை செய்து

    மெய்த்தவக் கோலம் கொண்டு

    மண்டல நோன்பும் காத்து

    நெய்யினைத் தெங்கில் வார்க்கும்

    நிகரிலாக் காட்சி காண

    மைம்முகிற் கொண்டல் மேவும்

    மைந்தனே விழிகள் தாராய்! (2)
    ஆரியங் காவில் உன்னை

    ஐயனாய்க் காணவேண்டும்

    கூரிய வாளோ(டு) அச்சங்

    கோவிலில் கோனாம் கோலம்

    நேரிலே காண வேண்டும்

    நெஞ்செலாம் நெகிழ வேண்டும்

    சூரியச் சுடரை ஏற்றும்

    சுந்தரா விழிகள் தாராய்!! (3)
    அழகினை அமுதில் தோய்த்து

    அம்புலி ஒளியைச் சேர்த்து

    மழலையாய்த் தவழும் செல்வ

    மணிகண்ட னே!குளத்துப்

    புழையினில் குழந்தை யே!என்

    புன்னகை அரும்பே உன்னைத்

    தொழுது நான் காண வேண்டும்

    துணைவிழி இரண்டும் தாராய்! (4)
    கருமேனி அண்ணல் தோழன்

    கங்கையின் குகனைப் போல

    எருமேவி கோட்டை ஆண்டுன்

    எல்லையைக் காக்கும் வாவர்

    திருவாயில் தொடங்கி பக்தர்

    திந்தகத் தோமென் றாடி

    வருகின்ற காட்சி காண

    வளரொளி நயனம் தாராய்! (5)
    படிகநீர் அழுதை ஆடிப்

    பையவே பக்தர் கூட்டம்

    நெடிதுயர் மலைகள் தாண்டி

    நெருங்கிய காட்டின் ஊடே

    முடிசுமந் துன்பேர் கூவி

    முனைப்புடன் ஏகும் காட்சி

    அடியவன் காண வேண்டும்

    ஐயனே விழிகள் தாராய்! (6)
    சம்புவும் மாலும் ஈந்த

    சத்தியச் சுடரே! சீற்ற

    வெம்புலி இவரும் வல்வில்

    வீரமே! வேந்தே! வானில்

    உம்பரின் உடுக்கள் நாண

    உனதடி யார்கள் ஏற்றும்

    பம்பையின் தீபம் காணப்

    பழுதிலா விழிகள் தாராய்! (7)
    கரிமுகக் கடவுள் கோவில்

    கடந்துசெங் குத்தாய்ச் செல்லும்

    சரிவிலே ஏறிச் சென்று

    சபரியின் பீடம் கண்டு

    சரத்தினை ஆலில் தைத்து

    சன்னதி நோக்கி அன்பர்

    விரையுமக் காட்சி காண

    விழிகளில் ஒளியைத் தாராய்! (8)
    இருமுடி தலையில் ஏந்தி

    இணையடி நினைவில் மாந்தி,

    பரவசத் தோடே பதினெண்

    படிகளில் பணிவாய் ஏறி

    தரிசனம் கண்டு கண்ணீர்

    தாரையாய்ப் பெருக வேண்டும்!

    ஹரிஹர சுதனாம் எங்கள்

    ஐயனே விழிகள் தாராய்! (9)
    ஐயனே உந்தன் மேனி

    அடியவன் சுமந்து வந்த

    நெய்யிலே நனையக் கண்டு

    நெக்குநெக் குருக வேண்டும்!

    மெய்யெலாம் அணிகள் பூண்ட

    மின்னலே! மகர ஜோதித்

    தெய்வமே நின்னைக் காணத்

    தேசுறு விழிகள் தாராய்! (10)

    -சு.ரவி

    Share
  • மறைந்த இசை மாமேதை மாண்டலின் ஸ்ரீநிவாஸ் – அஞ்சலி

    சு. ரவி

    வணக்கம்,வாழிய நலம்

    ar

    இந்த பிறவிக் கலைஞனை என் நண்பன் க்ரேஸிமோஹன் வீட்டு விழாஒன்றில் சிறுபாலகனாகக் கண்டு கேட்டு பிரமித்திருக்கிறேன். ஏழெட்டு வயது இருக்கும்.. விரல்களின் வழியே வாணியின் வீணை இசையைப் பொழிந்த அச்சிறுவனுக்கு அப்போது வரைந்த காஞ்சி மஹாபெரியவரின் கோட்டோவியத்தைப் பரிசளித்துவிட்டு நெஞ்சம் நிறைய இசையோடு வீடு திரும்பினேன்.

    பிறிதொரு நாளில் என் MBA வகுப்பில் “Relevance of Western Corporate Culture to Indian Management” என்ற தலைப்பில் உரையாற்றிய போது, அவ்வுரையின் இறுதியில் சுவாமி விவேகானந்தரை மேற்கோள்காட்டி, ” உங்கள் உடலுறுதியில் மேலைநாட்டினராகவும், ஆன்ம நிலைப்பாட்டில் இந்தியராகவும் இருங்கள்” எனச் சொல்லி, India needs to adapt the western Corporate Management Style & build it around OUR Indian Value Systems என்று நிறைவு செய்தேன்.

    “இது சாத்தியமா என சந்தேகமிருப்பின், இதோ நிரூபணம் மேலைநாட்டின் மாண்டலின் இசைக்கருவியில் ஆன்மாவாக ஒலிக்கிறது நமது கர்நாடக இசை” என முத்தாய்ப்பாக மாண்டலின் ஸ்ரீநிவாஸ் அவர்களின் “வாதாபி கணபதிம்” இசை நாடாவை ஒலிக்க வைத்தேன்.

    அரங்கம் அதிர்ந்தது.

    இன்று இளம் வயதிலேயே தன் இசைப்பயணத்தை நிறைவு செய்து மறைந்த அந்த மாபெரும் இசை மேதைக்கு என் ஓவிய அஞ்சலி!

    நாதப்ரம்மத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்!

    சு.ரவி

    Share
  • இசை அரசி M.S 99 வது ஜெயந்தி வருடம்16 செப், 2014

    சு.ரவி

    வணக்கம் வாழியநலம்

    எத்தனையோ பேர் கர்நாடக இசை உலகில் பாடி உலாவந்தாலும், இவரது குரலில் மட்டும் அப்படி என்ன விசேஷமான ingredient கலந்து நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது என்று வியக்காதவர் இல்லை.

    கர்நாடகக் கீர்த்தனைகளோ, மீரா பஜன் பாடல்களோ, வடமொழி ஸ்லோகங்களோ, தமிழ்ப் பாசுரங்களோ- அக்காலத்தில் இவர் பாடிய திரை இசைப் பாடல்களோ- இசையின் எந்த வடிவத்திலும் தன்னிகரற்றுக் கோலோச்சிய இசை அரசி M.S சுப்பலக்‌ஷ்மி அவர்களின் தேனிசைக் குரலுக்கு அடிமை ஆகாதார் எவர்?

    உயர்தர இசையும், உன்னதமான பக்தியும் இரண்டறக் கலந்து ஒரு வடிவாக இலங்கிய இவர் பிறந்து 98ஆண்டுகள் நிறைந்து 99 வது ஆண்டு தொடங்கும் இத்தருணத்தில், அன்னாரது நினைவாக வரைந்த கருப்பு வெள்ளை மற்றும் நீர்வண்ண ஓவியங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    பார்க்க, ரசிக்க…

    as

    as1

    சு.ரவி

    Share
  • பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினப் பகிர்வு

    வணக்கம் வாழியநலம்

    ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் அற்புதமான ஆளுமை பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினப் பகிர்வு இக்கோட்டோவியம்.

    அமைதியாக புத்தகம் படிக்கும் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

    உங்களுக்கும் பிடிக்கும் என்று பகிர்கிறேன்.

    பார்க்க, ரசிக்க.

    சு.ரவி.

    2AF87934-9E19-4099-927F-B59DFE82D10B

     

     

    Share
  • மஹாகவிக்கு ஓர் ஓவிய அஞ்சலி.

    வணக்கம்,வாழியநலம்

    செப்டம்பர் 11 : மஹாகவிக்கு என் ஓவிய அஞ்சலி

    சு.ரவி

     

    Bharathy

     

    Share
  • ஆசிரியர் தினம்- என் தந்தையின் நூற்றாண்டு வருடம்

    சு. ரவி

    ஓவியம்  சு. ரவி
    ஓவியம் சு. ரவி



    என் தந்தையார் திரு. A.சுப்ரமணியன் அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயிலை P.S. உயர்நிலைப் பள்ளியில் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், தாளளராகவும் பொறுப்பேற்றுத் தமது 58 ஆம் வயதில், 1973 ஆம் ஆண்டு மறைந்தார்.

    இவ்வருடம் அவருடைய நூறாவது பிறந்த ஆண்டாக அமைகிறது.

    கணிதப் பாடத்தையே கவிதை போலச் சொல்லிக் கொடுக்கும் அவருடைய ஆங்கில இலக்கிய வகுப்புகள் எப்படி இருக்கும் என அவரிடம் பயின்ற மாணவர்கள் வியந்து பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.

    ஆழ்ந்த இறைபக்தி, அமைதியும் சாந்தமும் தவழும் முகம், அதிநுட்பமான கணித அறிவு, அற்புதமான குரல்வளம், இணையிலா இசைஞானம், ஒவ்வொரு கடைநிலை மாணவனும் உயரவேண்டும் என்ற உண்மையான அக்கறை,
    தூய வெண்ணிற வேட்டி, அரைக்கைச் சட்டை, மேல்துண்டு என எளிமை…

    மானவர்களுக்கு மட்டுமல்ல, உடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் கூட முன் மாதிரியாக இருந்து வழிகாட்டியவர்.

    வீட்டிலோ எங்கள் நினைவுக்கு எட்டியவரையில் அன்பு என்கிற சூழலன்றி வேறு நாங்கள் கண்டதில்லை. விளையாட்டாக என்னைச் சீண்டுவது போலக் கணக்குகளைக் கொடுத்து, சமயோசிதமாகவும், Out of the box &
    Lateral சிந்தனைகள் மூலமாகவும் நான் தீர்வு கண்கிறேனா என்று சோதித்துப் பார்ப்பார்.

    நான் வரையும் ஓவியங்களுக்கும், எழுதும் கவிதைகளுக்கும் முகத்தெதிரே பாராட்டாமல் என் தாயிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்.

    பிற்காலத்தில், நான் ஒரு பகுதி நேர ஆசிரியனாகச் சில அமைப்புகளில் பணியாற்ற எனக்கு அவரே உந்துசக்தியாக இருந்தார்.

    இப்படிப் பட்ட ஒரு ஆசிரியப் பெருந்தகைக்கு மகனாகப் பிறந்ததை எண்ணிப் பெருமையோடு எந்தந்தையின் எண்ணெய் வண்ண ஓவியத்தை அவருடைய நூற்றாண்டு வருடத்திய இந்தத ஆசிரியர் தினத்தில் பகிர்ந்து கொள்கிறேன்!

    சு.ரவி

    Share
  • Teachers’ day share

     

    My humble homage to the teaching fraternity!

    Su.Ravi

     

    as1

    Share
  • இரு இமயங்கள்

    வணக்கம்,வாழிய நலம்

    1.ஸர் ஐஸக் நியூட்டன் ( 1643-1727)

    issac

    வரலாற்றில் சொல்வோமே- “இன்னார் உலகத்தை ஒருகுடையின் கீழ் ஆண்டார்” என்று, அதுபோல விஞ்ஞானம் குறிப்பாக இயல்பியல் மற்றும் கணிதத் துறைகளில் தன்னிகரில்லாமல் கோலோச்சிய ஒரு சக்கரவர்த்தி உண்டென்றால் அது ஸர்.ஐஸக் ந்யூட்டன் மட்டுமே!

    விழுகின்ற ஆப்பிள் தொடங்கி, வியனுலகெங்கிலும் வியாபித்த ஈர்ப்புவிசை, ஓளித்துகளின் இயல்பு ,’ கால்குலஸ் என்ற கணிதத் துறை, நிலை மற்றும் இயக்கத்திற்கான விதிகள் என ந்யூட்டனின் காலடிச் சுவடுகள் பதியாத துறை கிடையாது.1685 ஆம் ஆண்டு இவர் பதிப்பித்த ” Principia Mathematitia” என்ற ஆய்வுத் தொகுப்பே அறிவியல் வரலாற்றில் முதலாவதாக வெளிவந்த முழு அறிவியல் நூல் எனலாம்.

    2. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    albert

    நியூட்டன் போலவே, இவரது இளமைக் காலமும் சொல்லிக் கொள்ளும் படி பிரமாதமாக இல்லை.

    ஒரு சாதாரண மாணவனாகவே இருந்த ஐன்ஸ்டைன், எந்த உபகரணங்களோ, சோதனைச் சாலையின் உதவியோ இன்றி, 1905 ஆம் ஆண்டு, தனது மூன்று ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அறிவியல் உலகைப் புரட்டிப் போட்டார்.

    ” Max Plank இன் Quantum கொள்கையின் அடிப்படையில் Photo electric effect பற்றிய கட்டுரை அவருக்கு நொபெல் பரிசைப் பெற்றுத்தந்தது.

    இரண்டாவது கட்டுரை Brownian Movement என்றநிகழ்வின் அடிப்படையில், அணுக்களின் அளவு குறித்தது;
    மூன்றாவது உலகைப் புரட்டிப் போட்ட சார்புக்கொள்கை.( முதலில் சிறப்பு சார்புக் கொள்கையும், பின்னர் பொதுச் சார்புக் கொள்கையும் வெளியிட்டார்).

    இந்த இரு இமயங்களையும் வரைவதில் பெருமை அடைகிறேன்.

    பி.கு:

    1. “PHYSICS” என்ற வார்த்தையைத் தவறாக “இயற்பியல்” என்று மொழிபெயர்ப்போருக்கிடையே ” இயல்பியல்” என்ற சரியான பதப் பிரயோகம் செய்த என் இனிய நண்பன் க.ரவிக்கு இப்ப்படங்கள் காணிக்கை).

    2. இடம் பற்றாது என விரிவஞ்சி, மேற்படி குறிப்புகள் சுருக்கமாகத் தரப் பெற்றன. முழுமையாக அறிய ந்ண்பன் க.ரவியின் ” இருபதாம் நூற்றாண்டில் இயல்பியல்” ( வானவில் பதிப்பகம்) புத்தகத்தைப் படிக்கவும்

    சு.ரவி

     

    Share
  • JAMES CHADWICK-THE NEUTRON MAN

    3BD0C600-B09E-475C-9EFB-40821E9F023E

    James Chadwick, desciple of Rutherford, was the great Neuclear scientist who discovered the sub atomic particle- neutron which answered the puzzle of the gap between atomic number & atomic weight of a substance.

    Once again with respect n regards to Dr.Seha.Srinivasan, I dedicate this drawing of JAMES CHADWICK to him for his excellent write up on the great scientist n his contribution to Atomic Physics.

    Su.Ravi
    For paarkka,rasikka…

    Share
  • இன்னும் மாயை இருக்கிறது

     

    THE LAST STANZA OF THIS POEM TRANSLATED BY MY SON AJITH SUBRAMANIAN CAN BE SEEN AT THE END..

    Su.Ravi

    PS : my poet friend K.Ravi’s reply poem & the chain poems thereafter will be sent subsequently.

     

    BF3B946F-ED68-4A62-B1DB-942F77340846

    இன்னும் மாயை இருக்கிறது- அது
    என்னில் என்னை மறைக்கிறது!
    மின்னல் கீற்றாய் மெய்யுணர்(வு) அந்தோ!
    எப்பொழுதாகிலும் ஸ்புரிக்கிறது. ( இன்னும்)

    புலன் உணர்வெல்லாம் பொய்மைஎன்றே ஒரு
    பொறிபறந்தாற்போல் புரிகிறது;
    நிலத்தில் இவ்வாழ்வும் நிலைகிடையாதெனும்
    நிச்சய உண்மை தெரிகிறது- மனம்
    சிலபோதேனோ இனிப்பை அவாவும்
    சிறுமதலை போல் அலைகிறது-உடல்
    பலமிழந்தோய்ந்தால் பயந்து நடுங்கிப்
    பரிதவித்தேங்கிக் குலைகிறது! ( இன்னும்)

    ‘மனநிறை(வு) என்பதோர் மாரீசம் – அது
    மயக்கி இழுத்துனைச் செயும் மோசம்
    இனம் குலம் என்பவை வெளிவேஷம் “- என
    இன்னும் பலப்பல கதை பேசும்= உடன்
    தனயன், தாய், மனை இவர் முகம் பார்த்திடில்
    தயங்கும், தடுக்கும், தவறி விழும்!
    கனவும் நனவும் கடந்த பின்னாலும்
    கணப்பொழுதாசையில் கவிழ்ந்து விடும்! ( இன்னும்)

    விண்ணியல் கண்டு தெளிந்தாலும்- மறை
    ஓதிய பண்டிதன் ஆனாலும்
    எண்ணிய மட்டினில் ‘யான்’ ,‘என(து)’ எனும் இவை
    எங்கோ பாதலம் ஆழ்த்திவிடும்
    திண்ணிய நெஞ்சுரம் வைராக்யம் இவை
    திரும்பவும் இடிந்து பொடியாகும்
    நுண்ணிய நூலிழைதான் பாசம்- அது
    நோற்ற தவங்களை விலைபேசும் ( இன்னும்)

    ஓட்டம் இதற்கோர் இலக்கில்லை
    ஓடாதிருக்க விலக்கில்லை
    ஓட்டுவ தாரோ, ஓடுவ தேனோ
    ஓடும் எவர்க்கும் தெரிவதில்லை
    ஓட்டம் முடிந்தபின் ஓடு கழன்றால்
    ஓய்வுண்டோ எனில் அதுவுமிலை
    ஓட்டத்தின் ஊடே ஓராயிரம் தடை!
    ஓட்டத்தில் நாட்டம் குறையவில்லை ( இன்னும்)

    சு.ரவி
    ********************************************

    Ajith (s/o Su.Ravi):

    The rules of the game, aint so clear,
    I can quit this game, but my lifez so dear!
    Who runs the show? Why play this game?
    Not a single player can answer the same!
    Oh the game is over, and now Ive got no name!!
    I wanna rest, but, here we go again!
    A thousand obstacles each time I play,
    Do I lose interest? Nay nay nay!!
    **********************************

     

    Share