இசை அரசி M.S 99 வது ஜெயந்தி வருடம்16 செப், 2014
சு.ரவி
வணக்கம் வாழியநலம்
எத்தனையோ பேர் கர்நாடக இசை உலகில் பாடி உலாவந்தாலும், இவரது குரலில் மட்டும் அப்படி என்ன விசேஷமான ingredient கலந்து நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது என்று வியக்காதவர் இல்லை.
கர்நாடகக் கீர்த்தனைகளோ, மீரா பஜன் பாடல்களோ, வடமொழி ஸ்லோகங்களோ, தமிழ்ப் பாசுரங்களோ- அக்காலத்தில் இவர் பாடிய திரை இசைப் பாடல்களோ- இசையின் எந்த வடிவத்திலும் தன்னிகரற்றுக் கோலோச்சிய இசை அரசி M.S சுப்பலக்ஷ்மி அவர்களின் தேனிசைக் குரலுக்கு அடிமை ஆகாதார் எவர்?
உயர்தர இசையும், உன்னதமான பக்தியும் இரண்டறக் கலந்து ஒரு வடிவாக இலங்கிய இவர் பிறந்து 98ஆண்டுகள் நிறைந்து 99 வது ஆண்டு தொடங்கும் இத்தருணத்தில், அன்னாரது நினைவாக வரைந்த கருப்பு வெள்ளை மற்றும் நீர்வண்ண ஓவியங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பார்க்க, ரசிக்க…
சு.ரவி