Blog

  • பாமா கோபாலன் நினைவலைகள் | வழக்கறிஞர் சுமதி உரை

    பாமா கோபாலன் நினைவலைகள் | வழக்கறிஞர் சுமதி உரை

    சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் வழக்கறிஞர் சுமதி ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அடுக்குமாடிகளில் ஆடம்பர வசதிகள் எதற்கு?

    அடுக்குமாடிகளில் ஆடம்பர வசதிகள் எதற்கு?

    தினசரியைப் புரட்டினால் திகைக்கும் அளவுக்கு அடுக்குமாடிகளில் ஆடம்பர வசதிகளை அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். இவற்றுக்கான அத்தனை செலவுகளும் வீடு வாங்கும் நுகர்வோர் தலையில் தான் விழும். கடன் உடன் வாங்கி, வீடு வாங்கும் நுகர்வோருக்கு இந்த வசதிகள் கூடுதல் சுமையை ஏற்றுகின்றன. எதற்காக இத்தனை வசதிகள்? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மயக்கமா கலக்கமா | கண்ணதாசன்

    மயக்கமா கலக்கமா | கண்ணதாசன்

    ‘மயக்கமா கலக்கமா’, காலத்தை வென்ற பாடல். எத்தனையோ பேருக்கு நம்பிக்கை அளித்த பாடல்; இன்றும் நம்பிக்கை அளிக்கும் பாடல். கண்ணதாசன் இயற்றி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், சுமைதாங்கி படத்தில் வெளியான இந்தப் பாடலை அமிர்தராஜ் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கச்சேரி

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கச்சேரி

    சென்னை, தி. நகர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சுக்கு அண்மையில் சென்றோம். வயிற்றுக்கு உணவுடன் செவிக்கும் விருந்து கிடைத்தது. வயலின், மிருதங்கத்துடன் அருமையான ஒரு கச்சேரி. இத்தகைய இசை நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை நேரத்தில் நடக்கிறது. ஒரே நேரத்தில் இசையை வளர்த்து, இசைக் கலைஞர்களை ஊக்குவித்து, கடைக்கு வரும் மக்களுக்கும் இசை விருந்து அளிப்பது, ஓர் உயர்ந்த சிந்தனை. நாங்கள் சென்ற போது நடந்த கச்சேரியிலிருந்து ஒரு பகுதி இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னியோங்கு 1 & 2 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    சென்னியோங்கு 1 & 2 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன் என்றெல்லாம் பாடிப் பரவுகிறார். இதன் முதல் இரண்டு பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கள்ளக் காதலர்கள் சிக்குவது எப்படி? | கல்யாணந்தி சச்சிதானந்தன்

    கள்ளக் காதலர்கள் சிக்குவது எப்படி? | கல்யாணந்தி சச்சிதானந்தன்

    திருட்டு மாங்காய் இனிக்கும் என்ற எண்ணத்தில், திருமணத்தை மீறிய உறவுகளில் ஆங்காங்கே சிலர் ஈடுபடுகிறார்கள். யாருக்கும் தெரியக் கூடாது என்று எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தாலும், பலரும் மாட்டிக்கொள்கிறார்கள். இந்தக் கள்ளக் காதலர்கள் சிக்குவது எப்படி? மனநல ஆலோசகர் கல்யாணந்தி சச்சிதானந்தன் விளக்குகிறார். இவர், அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமது அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்கப் பகிர்ந்துகொண்டார். இவரது உரையின் இரண்டாம் பகுதி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும் . . . 3

    அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும் . . . 3

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    கவியரசரின் ஆன்மீக அறிவு அவருக்குக் கிடைத்த சாட்சாத் சரஸ்வதி கடாட்சம் . தனக்குள் தன்னைத்தேடி தானே கற்றுத் தேர்ந்தார். தன் வாழ்க்கை நதி ஓடிய பாதைகள் தன்னை அழைத்துச் சென்ற கல்லும், முள்ளும் நிறைந்த பாதைகளுக்கூடாக தான் பயணித்த பயண அனுபவங்களின் வழி நின்று அதனுள் இருந்த ஆன்மீகத்தை அனைவர்க்கும் அள்ளித் தெளித்தார்.

    அனுபவ ஆன்மீகமே வாழ்வின் உண்மை நிலையை எடுத்துக்காட்ட வல்லது என்பது புரிந்து கொண்ட அனைவராலும் அவற்றை ஒரு திரைப்பட இயக்குனரோ அன்றி நடிகரோ எதிர்பார்க்கும் வகையில் காட்சிகளுக்கேற்ற வரிகளாக்குவது ஒன்றும் இலகுவான காரியமல்ல.

    ஆனால் அதுவே கவியரசருக்கு கைவந்த கலையாயிற்று. “ முன்னோரு காலத்தில் கம்பன் வீட்டில் கனக்கெழுதியிருந்திருப்பேனோ ” என்று கூறி தன்னைத் தானே வியந்த கவியல்லவா கண்ணதாசன் ?

    அவர் பாடல்களுக்குள் புதைத்த அனுபவங்கள் பல தன்னுடைய சொந்த வாழ்க்கை அவருக்குக் கற்றுக் கொடுத்தவை மட்டுமல்ல பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார், பல ஆன்மீக அறிஞர்களுடன் கலந்துரையாடினார். தான் பட்டு அறிந்ததோடு, படித்து அறிந்தவைகளையும், கேட்டு அறிந்தவைகளையும் இணைத்து தனது ஆன்மீக ஞானத்தை வளர்த்துக் கொண்டார் .

    கவியரசர் பாடல்களை மட்டும் அள்ளித் தந்து விடவில்லை அதற்குள் பொருளையும் அல்லவா குவித்து வைத்திருக்கிறார் . அதுவும் காதல் பாடல்களுக்குள் கூட ஏதாவது ஒரு ஓரத்தில் ஆன்மீகக் கருத்தினை சூசகமாக புதைத்து வைப்பதில் வல்லவர் கவியரசர்.

    புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் தனது பாடல்களில் ஆங்காங்கே ஓரிரு வரிகளுக்குள் ஏதாவது புராண அல்லது இதிகாச சம்பவங்களைப் புதைத்து வைத்து அதைப் படிப்பவர்கள் மனங்களில் அச்சம்பவத்தைப் பற்றி அறியும் ஆவலைத் தூண்டுவதில் வல்லவர் .

    ஏசுகாவியம் எழுதிய அனைத்து மதங்களைக் கடந்த அறிவியல் ஆன்மீகவாதியல்லவா எமது கவியரசர் .

    ஆன்மீகத்தை சாதாரண மக்கள் மத்தியில் ௐௐகொண்டு சென்றவர்களுள் கவியரசர் கண்ணதாசன் ஒரு தனியிடத்தைப் பெறுகிறார். ஆன்மீகம் என்பது மதம் சார்ந்த பக்தியின் அடிப்படையில் ஆரம்பித்திருந்தாலும் ஆன்மாவின் ரகசியத்தைப் புரிந்து கொள்வதே ஆன்மீகம் , அது மதங்களைக் கடந்தது என்பதில் கவியரசர் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சரி இப்போ அவரது பாடல் ஒன்றின் சாரத்தைப் பார்ப்போமா,

    ஆலயமணி எனும் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அமரர் டி.எம்.எஸ் அவர்களின் குரலில் ஒலித்த பாடலுக்கான வரிகளைப் பார்ப்போம்.

    சட்டி சுட்டதடா கை விட்டதடா
    சட்டி சுட்டதடா கை விட்டதடா
    புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
    புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
    நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
    (சட்டி …)

    இங்கே என்ன சொல்ல வருகிறார் கவியரசர் ?

    மனிதனின் சராசரிக் குணம் என்ன ?

    கைகளில் ஒரு சுடுகின்ற சட்டியைப் பிடிக்கிறோம் என்று வையுங்கள் உடனடியாக ஐயோ சுடுகிறதே என்று அதற்குரிய முன்னெச்சரிக்கை எடுப்பவர்கள் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

    எம்மால் சமாளித்து விட முடியும் என்று கைகளில் கொஞ்ச நேரம் சூட்டைத் தாங்கிக் கொள்வோம் பின்பு அந்தச்சூடு தாங்க முடியாமல் கையைப் பொத்துவிடும் போலிருக்கும் போது கைகளை அப்படியே விட்டு விடுகிறோம் .

    அதேபோலத்தான் இப்படத்தில் வரும் கதாநாயகன் பொறாமை எனும் அரக்கக் குணத்துக்கு அடிமையாகி இழக்கக்கூடாதவைகளையெல்லாம் இழக்கிறான். அது அவனது நெஞ்சை எரித்து விடும் போதுதான் அவனுக்கு ஆன்மீக ஞானம் ஏற்படுகிறது.

    நாலுவகையான செயல்களினாலும் பாதிக்கப்பட்டதன் பின்னால் தான் அவனுக்குத் தனக்கும் மேலே ஒரு சக்தியின் ஞாபகம் வருகிறது. இங்கேதான் அவரது அறிவியல் ஆன்மீகம் தெரிகிறது.

    என்ன என்கிறீர்களா ?

    உடனடியாக அவர் இறைவனைப் பற்றி பேச வரவில்லை. நல்லது எது, கெட்டது எது என்பதனைப் பற்றி மனதைச் சிந்திக்கத் தூண்டுகிறார்

    அடுத்துப் பார்ப்போமா ?

    பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
    மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
    ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
    ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
    அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
    (சட்டி …)

    ஆகா ! எப்படி எம்மை ஆன்மீகத்துடன் கொண்டு இணைக்கிறார் ?

    எல்லோருடைய மனங்களிலும் நற்குணங்களும் உண்டு அதே போல் தீயகுணங்களும் உண்டு .

    இதை அழகாக அன்பர் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் குறிப்பிடும்போது அசுர தேவர் யுத்தம், இராமயண யுத்தம், மகாபாரத யுத்தம் எனும் வகையிலான நல்லெண்னங்களுக்கும், தீய எண்ணங்களுக்குமிடையிலான யுத்தமானது மனிதராகப் பிறந்த அனைவர் உள்ளங்களிலும் நிகழ்கிறது நல்லெண்ணங்கள் வெற்றியடைந்தால் நற்செயல்களையும் , தீய எண்ணங்கள் வெற்றிய்டைந்தால் தீய செயல்களையும் புரிகிறோம் என்பார்.

    இதையேதான் அன்று எமது கவியரசர் பாதி மனதில் தெய்வம் இருப்பதாகவும், மீதி மனதில் மிருகம் இரு[ப்பதாகவும் கூறியுள்ளார் போலும். எத்தனை துல்லியமான ஆன்மீக அறிவியல் கவியரசர் உள்ளத்தில் விளையாடியிருக்கிறது பார்த்தீர்களா ?

    அந்த அறிவியல் ஆன்மீகம் கதாநாயகன் உள்ளத்தில் குடியேறிவிட்டதை அழகாக ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா என்று பூடகமாகப் புதைத்து வைத்துள்ளார் கவியரசர்.

    இதோ வருகிறது அவரது அடுத்த அற்புத வரிகள் பார்ப்போம் வாருங்கள் ,

    ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
    ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
    தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
    தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
    மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா
    (சட்டி …)

    மனித மனதின் சஞ்சலங்களுக்கு ஓய்வுண்டா என்ன ?

    குறிப்பாக இத்திரைப்படத்தின் கதாநாயகன் மனதில் சந்தேகப் பேய் ஆரவாரமிடுகிறது. அவனை அதாள பாதாளத்துக்கே கொண்டு செல்கிறது.அச்சந்தேகப் பேயின் ஆரவாரத்தில் அகப்பட்டு பலமான அடிவாங்கியபோது அவனிக்குள் ஆன்மீக ஞானம் குடி கொள்ளத் தொடங்குகிறது.

    எம்மில் பலரும் இம்மாதிரியான அனுபவங்களுக்கூடாகப் பயணித்திருப்போம். அவ்வனுபங்களின் ஆழப்புரிதல் எமக்குத் தேவையான ஆன்மீகத்தை அள்ளி வழங்குகிறது. ஆன்மீகத்தை வெறும் பக்தி மார்க்கமாகவே பார்த்துக் கொண்டிருப்பவர்களின் புரிதல்களுக்கும், அவ்வான்மீகத்தை அறிவியலின் அடிப்படையில் மதங்களைக் கடந்த ஒரு பார்வையைக் கொண்டு அடைந்த புரிதல்களுக்கும் பலமான வித்தியாசம் உண்டு.

    இதனையே கவியரசர் இங்கே உணர வைக்க முற்படுகிறார் போலும்.

    மனதிலுள்ள ஆரவாரப் பேய்கள் ஓடி விட்டது என்றால் ஒலிக்கும் ஆலயமணியின் உண்மை அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்கிறார். ஆலயமணி வெறும் ஆண்டவனை அறிவிக்க ஒலிப்பதல்ல தூய்மையான உள்ளத்தின் வெளிப்பாட்டினை வெளிப்படுத்தும் ஒலியென்கிறார் கவியரசர்.

    அந்த ஒலி அச்சமயத்தில் தர்மத்தை அவனுக்கு அறிவுறுத்துகிறது என்கிறார். தர்மம் என்றால் வெறும் தானம் எனும் ஒரு பொதுவான புரிதலைக் கடந்து வாழ்வின் தார்மீகக் கடமைகளையும் குறிக்கிறது என்கிறாரோ கவியரசர் ?

    அத்தகைய தார்மீகக் கடமைகளைச் சரிவரப் புரிந்து கொண்ட மனதில் சாந்தியைத் தவிர வேறு ஏது குடி கொள்ள முடியும் ?

    சரி இனி இந்தப் பாடலின் ஜீவநாடியான வரிகளைப் பார்ப்போம். இங்கேதான் கவியரசரின் ஆன்மீக ஞானம் கொடிகட்டிப் பறக்கிறது எனலாம்.

    இதோ அந்த வரிகள் ,

    எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா- நான்

    இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
    இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
    (சட்டி …)

    பல வருடங்களாக இந்த வரிகளை மந்திரம் போல மனதினுள் ஒலித்துக் கொண்டிருந்தாலும் அதன் உண்மையான அர்த்ததத்தைப் பற்றிச் சிந்திக்கத் தலைப்படவில்லை.

    அது என்ன “எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா” என்கிறார் கவியரசர் ? அதற்குள் அப்படி என்ன ஒரு பெரிய விடயத்தை உள்ளடக்கியிருப்பார் கவியரசர் என்றே எண்ணத் தோன்றியது.

    என்ன முன்னுக்குப் பின்னான முரணாக இருக்கிறதே ! என்று எண்ணத் தோன்றியது. கவியரசரின் பாடல் வரிகளின் சிறப்பே அது பலரின் பார்வைக் கோணங்களுக்கேற்ப வித்தியாசமான அர்த்தங்களைக் கொடுக்க வல்லது என்பதே !

    அப்படியாக கற்றுக்குட்டியான எனது கோணப்பார்வையில் அதைப்பார்க்க விளைந்தேன்.

    எறும்பின் தோலை உரித்துப் பார்த்தால் அதனுள்ளிருந்து யானை வருவதென்பதெல்லாம் என்ன நடக்கக் கூடிய காரியமா ? அதை உணர்ந்து கொள்ள அதன் அடுத்த வரியைப் பார்ப்பது முக்கியமாகிறது.

    “ நான் இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா ” என்கிறார் கவியரசர்.

    எறும்புத்தோலுக்குள் இருந்து யானை வருவது எப்படி நடக்க முடியாத காரியமோ அதேபோலத்தான் பொறாமை எனும், அழுக்காலும், செல்வந்தன் எனும் மமதையைலும் மூடிக்கிடந்தவனின் இதயத்தோலை உரித்துப் பார்த்தால் அதனுள் ஞானம் வருவது என்கிறார் என்பது இக்கற்றுக்குட்டியின் புரிதல்.

    அதுமட்டுமல்ல ஒரு சிறிய எறும்பின் தோலினுள் யானை ஒளிந்திருக்க முடியுமானால் இந்த அகங்கார இதயம் எத்தனை சிறியதாக இருப்பினும் அதனை உரிப்பது போன்ற தூய்மையை அடைந்தால் அத்தனை பெரிய ஞானத்தை அடைய முடியாதா? என்கிறார் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம் அல்லவா ?

    சரி பிறக்குமுன்னே இருந்த உள்ளம் என்கிறாரே அது என்ன ?

    இங்கேதான் அறிவியல் ஆன்மீகத்தின் ஆழத்துக்கே சென்று விட்டார் எனலாம் . ஆன்மீக அறிவியலாளர்களின் பார்வையில் பிறக்குமுன்னே நாம் ஆன்மாவாக ஆன்ம உலகில் இருக்கிறோம். எமது கர்மவினைகளுக்கேற்ப என்னவிதமான அனனுபவங்களை அடைய வேண்டுமோ அதற்குரிய வகையில் பிறப்பெடுக்க வேண்டி நாமே எமது பிறப்பை தெரிவு செய்கிறோம் என்கிறார்கள்.

    அப்படியாயின் பிறக்குமுன்னே எமது உள்ளம் எப்படி இருந்திருக்கும்? முற்பிறப்பில் நாம் செய்த கர்மவினைகளை நன்கு ஆராய்ந்து எம்மை நாமே புடம் போட்டுக் கொண்ட ஒரு தெளிவான உள்ளம் இருந்திருக்க வேண்டுமல்லவா

    அத்தகைய ஒரு ஆன்மீகத்தெளிவை இப்போது அடைந்து விட்டதாக அவ்வரிகள் சொல்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாமா ?

    அடுத்துப் பாருங்களேன் ” இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா ” இறந்த பின்னால் வரும் அமைதியா ? அது எப்படி இருக்கும் ?

    செட்டியாரல்லவா? பட்டினத்துச் செட்டி சொன்ன ” செத்தாரைப் போல திரி ” எனும் வாசகமும் , நபிகள் நாயகத்தின் ” இறப்பதற்கு முன்னால் இறந்து விடு ” எனும் வாசகமும் கவியரசருக்கு ஞாபகம் வந்திருக்கும்.

    அறிவியல் ஆன்மீகவியலாளர் என்ன சொல்கிறார்கள் ? எம்மைச்சுற்றி நடப்பவற்றினுள் எம்மை மூழ்க விடாமல் அனைத்தையும் ஒரு சாட்சிக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்கிறார்கள் .

    அதற்குச் சுலமான வழி என்ன ” இறந்த பின் வரும் அமைதியை மனம் இப்போதே அடைந்து விடுவது தானே ” .

    அன்பு வாசக உள்ளங்களே ! இந்த அற்புத வரிகளை யாத்த கவியரசர் ஒரு அறிவியல் ஆன்மீகவாதி என்பதில் எதுவித சந்தேகமும் இருக்க முடியுமா ?

    இந்தப் பாமரனின் கோணப்பார்வையை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    மீண்டும் வருவேன்

    Share
  • அதிரடி சிரிப்பு யோகா | ஹாஹோ சிரிப்பானந்தா

    அதிரடி சிரிப்பு யோகா | ஹாஹோ சிரிப்பானந்தா

    சிரிப்பு யோகாவை வேறு உயரத்துக்குக் கொண்டு போயிருக்கிறார், சிரிப்பானந்தா. அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் இவரது அதிரடி சிரிப்பு யோகாவைக் கண்டு மகிழுங்கள். நீங்களும் செய்து பாருங்கள். அமர வாழ்வு லட்சியம், ஆரோக்கியம் நிச்சயம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அந்தரங்க உறவுகள், ஆழமான சிக்கல்கள் | கல்யாணந்தி சச்சிதானந்தன்

    அந்தரங்க உறவுகள், ஆழமான சிக்கல்கள் | கல்யாணந்தி சச்சிதானந்தன்

    நெருங்கிய அந்தரங்க உறவுகளுக்குள் எத்தனையோ ஆழமான சிக்கல்கள், முட்டல் மோதல்கள் உள்ளன. இவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர், மனநல ஆலோசகர் கல்யாணந்தி சச்சிதானந்தன். இவர், அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமது அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்கப் பகிர்ந்துகொண்டார். இவரது உரையின் முதல் பகுதி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கருப்பு மோனாலிசா…!

    கருப்பு மோனாலிசா…!

    சி. ஜெயபாரதன், கனடா

    நீ சிரித்தால் மின்னல் அடிக்கும்
    நெஞ்சு ஓவியப் படம் பிடிக்கும்
    மோனா லிசா புன்னகை தோற்கும்
    முறுவல் முகம் ஆடவர் ஈர்க்கும்.

    சிரித்தால் நிலா தங்க நிறம் பூசும்
    கருநிலா முழு நிலவாய் ஒளி வீசும்
    இருண்ட முகம் சிரிப்பால் பொன் மயம்.
    உருண்ட முகம் பாதி தங்க நாணயம்.

    நீ சிரித்தால் நெஞ்சில் தேன் ஊறும்
    நினைவிலும் கனவிலும் ஊன் மாறும்
    புனைவிலும் படைப்பிலும் கலை பேணும்
    இனித்தம் உடைய எழில் விழி காணும்.

    கருப்பழகி சிரிப்பு காண்போர் கவரும்
    கட்டுடல் எடுப்போ நர்த்தனம் புரியும்
    கறுப்பும் சிவப்பும் காரிகை கவர்ச்சி
    இடுப்பு, குடம் போல் நளின நகர்ச்சி.

    Share
  • குறளின் கதிர்களாய்…(455)

    குறளின் கதிர்களாய்…(455)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(455)

    இடுக்கண் படினு மிளிவந்த செய்யார்
    நடுக்கற்ற காட்சி யவர்.

    -திருக்குறள் – 654 (வினைத் தூய்மை)

    புதுக் கவிதையில்…

    கலங்குதல் இல்லாத
    தெளிந்த அறிவுடையோர்
    தாம் துன்பத்தில் சிக்கித்
    தவிக்க நேரிடினும்,
    துன்பமது
    தீர்வதற்காகக் கூட
    தாழ்ந்த செயல்களைத்
    தவறியும் செய்யார்…!

    குறும்பாவில்…

    நடுக்கமிலாத் தெளிந்த அறிவுடையோர்,
    துன்பத்தில் தாம் தவிக்க நேரிடினுமதைத்
    தவிர்த்திட இழிசெயல் செய்யார்…!

    மரபுக் கவிதையில்…

    நடுக்க மென்ப தில்லாதே
    நன்கு தெளிந்த அறிவுடையோர்
    கெடுக்கும் துன்பம் வந்தபோதும்
    கேடாய் நினைத்தே அதனைத்தான்
    தடுத்து நிறுத்தும் முயற்சியாகத்
    தக்க செயல்கள் செய்கையிலே
    எடுத்துச் செய்ய மாட்டாரே
    எதிலும் இழிந்த செயல்களையே…!

    லிமரைக்கூ…

    உடையோர் தெளிந்த அறிவு
    ஒருபோதும் செய்யார் வெறுக்கும் இழிசெயலை,
    துன்பத்தால் வரினும்மன முறிவு…!

    கிராமிய பாணியில்…

    செய்யாத செய்யாத
    கெட்ட செயலச் செய்யாத,
    கேடாத் துன்பம் வந்தாலும்
    கெட்ட செயலச் செய்யாத..

    கலக்கமில்லாம நல்ல
    தெளிஞ்ச அறிவு உள்ளவுங்க
    வாழ்க்கயில
    துன்பம் வந்தாலும்
    அதத் தடுக்க
    கெட்ட செயலு எதயும்
    செய்யமாட்டார்களே..

    அதால
    செய்யாத செய்யாத
    கெட்ட செயலச் செய்யாத,
    கேடாத் துன்பம் வந்தாலும்
    கெட்ட செயலச் செய்யாத…!

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 11

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 11

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • நாடக மேடைகளில் நகைச்சுவை | கவின் வாலிதாசன் பேச்சு

    நாடக மேடைகளில் நகைச்சுவை | கவின் வாலிதாசன் பேச்சு

    1500 மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்தவர், கவின் வாலிதாசன். வாலியின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாகத் தம் பெயரை வாலிதாசன் என வைத்துக்கொண்டார். நாடக மேடைகளில் நகைச்சுவை என்ற பொருளில் தமது நேரடி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தின் 30ஆம் ஆண்டு விழாவில், கவின் வாலிதாசன் ஆற்றிய சுவையான உரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மாணவர்களின் நகைச்சுவை ஆற்றல்

    மாணவர்களின் நகைச்சுவை ஆற்றல்

    மாணவர்களின் நுணுக்கமான நகைச்சுவை ஆற்றல் குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர் (ஓய்வு) ராஜசேகர் அணுக்கமாகப் பேசினார். குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தின் 30ஆம் ஆண்டு விழாவில், அவர் ஆற்றிய உரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கூட்டு முயற்சியில் அடுக்குமாடி: என்ன கணக்கு? யாருக்கு லாபம்?

    கூட்டு முயற்சியில் அடுக்குமாடி: என்ன கணக்கு? யாருக்கு லாபம்?

    பழைய வீடுகளையும் அடுக்குமாடிகளையும் இடித்து, கூட்டு முயற்சியில் அடுக்குமாடிகளாகக் கட்டுவது நகர்ப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இதில் எந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்படுகிறது? யாருக்கு என்ன லாபம்? பழைய வீடுகளை, அடுக்குமாடிகளை வாங்குவது லாபம் தருமா? நீண்ட காலம் உழைக்கும் வகையில் வீடுகளை, அடுக்குமாடிகளைப் பராமரிப்பது எப்படி? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share