Blog

  • Interviews of MS Viswanathan – Book Release Function

    Interviews of MS Viswanathan – Book Release Function

    Baskar Seshadri 

    A Book release function with the collection of interviews that appeared in Ananda Vikatan  is scheduled this coming sunday (5th Nov 2022) evening at Five pm.

    The book consists of the Interviews of the  Veteran Music Director MS Viswanathan.

    This is total collection of the interviews that he gave to Ananda Vikatan in 1993.

    The Programme is scheduled to be released by Ace singer Mrs P Suseela and to be received by Shri AVM Kumaran of AVM Productions the famous Cinema Production house.

    The programme will commence with the issuance of the royalty right of the book proceeds to  Kannadasan Viswanathan Trust.

    K Bhagyaraj, Y G Mahendra, Padma subramaniam, Deva, Vani Jayaram and many film personalities had consented to grace the function.

    Sons of MSV, Kannadasan  and Muktha Srinivasan are set to Add Glitter to the occasion.

    Entry is free and the event is scheduled at Kumari Raja Muthiah Arangam, MRC Nagar around Five pm on Sunday 6th Novemeber.

    The Programme  is to be preceded with a musical venture by Thayanban

    Please do make it to the event

    Share
  • பால முருகனுக்குப் பால்குட அபிஷேகம்

    பால முருகனுக்குப் பால்குட அபிஷேகம்

    சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு பால முருகனுக்காக ஏராளமானோர் பால்குடம் எடுத்தனர். அபிஷேக ஆராதனை விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவிலிருந்து சில காட்சிகள் இங்கே. வேல்! வேல்! வெற்றி வேல்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 57

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 57

    -மேகலா இராமமூர்த்தி

    இலக்குவனையும் ஏனைய வானரப் படையினரையும் பிணித்திருந்த இந்திரசித்தனின் நாகக் கணையானது அப்போது போர்க்களத்துக்கு வருகை புரிந்த கலுழனால் (கருடன்) சின்னபின்னம் ஆகிவிட, அவர்கள் அனைவரும் ஆர்த்தெழுந்தனர் முன்னிலும் அதிக வலிமையோடு!

    போர்க்களத்திலிருந்து எழுந்த ஆர்ப்பொலி அரண்மனையில், சீதையின் நினைவால், துயிலாது கிடந்த இராவணனின் செவிகளில் விழவே, அவன் இந்திரசித்தனை அரண்மனையில் சந்தித்து வானரப் படையினர் நாகக் கணையிலிருந்து விடுபட்ட செய்தியை உரைத்து மீண்டும் போர்க்களத்துக்குச் சென்று அவர்கள் அனைவரையும் வீழ்த்துமாறு பணித்தான்; ஏற்கனவே கடும்போர் புரிந்து புண்களோடு வருந்திக்கொண்டிருந்த இந்திரசித்தன் நாளை மீண்டும் போருக்குச் செல்வதாய் உரைக்க, அதனை ஏற்றுக்கொண்டான் இராவணன்.

    அவ்வேளையில் இராவணனின் படைத்தலைவர்களான மாபெரும்பக்கனும் (மகாபார்சுவன்), புகைநிறக்கண்ணனும் (தூம்ராட்சன்), ”தம்மைப் போருக்கு அனுப்புக” என இராவணனிடம் வேண்டினர். அதுகண்ட தூதர்கள், ”இந்திரசித்தனை அடுகளத்தில் தனியேவிட்டு ஓடிப்போன இவர்கள் இப்போது திரும்பி வந்திருக்கின்றனர் போலிருக்கின்றது” என இராவணனிடம் சொல்லவே, அதுகேட்டுக் கடுஞ்சினத்தனாகிய இராவணன் அவர்களைத் தண்டிக்கவேண்டிக் கிங்கரர்களை அழைத்தான். அவ்விருவரின் மூக்கையும் அரிந்திடக் கருவிகளோடு கிங்கரர்கள் வரவே, அதனைத் தடுத்த மாலி எனும் படைத்தலைவன், ”போரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்; அதற்காகக் கோபிப்பதா? நமது நாற்பது வெள்ளம் சேனையையும் இலக்குவனும் வானரப் படையினரும் அழித்தொழித்தனர். எஞ்சியிருப்போர் இந்திரசித்தனும் மாபெரும்பக்கனும் புகைநிறக்கண்ணனுமே. எனவே, இவர்களின் வீரத்தைக் குறைத்து மதிப்பிடலாகாது” என்றான் இராவணனிடம்.

    மாலியின் சொற்களால் இராவணனின் சினம் சற்றுத் தணிந்தது. அதுதான் சமயம் என்று மாபெரும்பக்கனும் புகைநிறக்கண்ணனும் இராவணனைப் பார்த்து, ”எமக்குத் தந்தை போன்றவனே! எங்கள் இருவரையும் போருக்கு அனுப்புக! நாங்கள் கொடிய போர்செய்து இறந்தோம் என்ற செய்தியையோ, பகைவர்கள் முடிந்தனர் என்ற செய்தியையோ அன்றிப் போரில் தோற்றுவிட்டோம் எனும் சொல்லைக் கேட்கமாட்டாய் இனி” என்றுரைத்து உயிரைக் கொடுக்க மகிழ்ச்சி கொண்டவர்களாய்ச் சபதம் செய்தனர்.

    விட்டனை எம்மை விடுத்து இனி வெம்போர்
    பட்டனர் ஒன்று படுத்தனர் ஒன்றோ
    கெட்டனர் என்பது கேளலை என்னா
    ஒட்டினர் ஆவி முடிக்க உவந்தார்
    . (கம்ப: படைத்தலைவர் வதைப் படலம் – 8320)

    இராவணன் அதற்குச் சம்மதிக்கவே, சூரியன் பகைஞன் (சூரியசத்ரு), வேள்வியின் பகைஞன் (யக்ஞசத்ரு), மாலி, பிசாசன், வச்சிர எயிற்றன் எனும் படைத்தலைவர்களோடு மாபெரும்பக்கனும், புகைநிறக்கண்ணனும் இணைந்து பெரும்படையுடன் போர்க்களம் புக்கனர்.

    அரக்கர்படையைக் கண்ட இராமன் அதனைத் தலைமை வகித்து நடாத்திவருவது இந்திரசித்தனா என்று வீடணனிடம் வினவினான். வருபவர்கள் ஒவ்வொருவரையும் இராமனுக்கு அறியத்தந்தான் வீடணன்.

    தொடங்கிற்று போர்! அனுமனோடு பொருது புகைநிறக்கண்ணனும் அங்கதனோடு பொருது மாபெரும்பக்கனும் மாண்டனர்; மாலியின் தோளை இலக்குவன் துணித்து, கையற்றவனோடு பொருதல் தகாது என்று அவனைக் கொல்லாது விடுத்தான்; வேள்வியின் பகைஞனின் மார்பில் அம்பைத் தொடுத்து அவன் கதையை முடித்தான். சூரியன் பகைஞனைச் சூரியன் மகனான சுக்கிரீவன் கொன்றான்; வச்சிர எயிற்றனை அனுமன் விண்ணுலகுக்கு அனுப்பினான். பிசாசனைத் தன் வலிமிகு வாளிக்கு இரையாக்கினான் இலக்குவன்.

    அரக்கர்படையின் அழிவைத் தூதர்கள் அறிவித்தனர் அரக்கர்கோன் இராவணனுக்கு; துயருற்ற அவனைத் தேற்றும் விதமாக மகரக்கண்ணன் எனும் அரக்கன், ”ஐயனே! என் தந்தையை (மகரக்கண்ணனின் தந்தை கரன் – பஞ்சவடியில் சூர்ப்பனகை பொருட்டு இராமனோடு பொருது மாண்டவன் இவன்.) கொன்றவனான இராமனைக் கொல்ல என்னை ஏன் ஏவாமல் விடுத்தாய்? தேவையில்லாமல் மற்றையோரைப் பலி கொடுத்தாய்!

    என்னுடைய தாய் அழுத கண்களை உடையவளாய்க் கடத்தற்கரிய துயர்க்கடலுள் ஆழ்ந்திருக்கின்றாள்; பெருமைக்குரிய மங்கலநாணை இன்னும் கழித்திட ஆற்றாளாய், தன் கணவனைக் கொன்ற இராமனின் கரிய தலையென்னும் ஓடாகிய பாத்திரத்தில் அல்லாது தன் கணவனுக்குச் செய்யவேண்டிய கடனைச் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டாள். பருந்துகளுக்கு விருந்தளிக்கும் இனிய வேற்படையை உடையவனே! என் தாயின் வஞ்சினத்தை முடிக்கும் வகையில் இன்று போருக்குச் செல்ல என்னைப் பணித்திடுக!” என்றான்.

    அருந்துயர்க் கடலுளாள் என்அம்மனை அழுத கண்ணள்
    பெருந்திருக் கழித்தல் ஆற்றாள் கணவனைக் கொன்று பேர்ந்தோன்
    கருந்தலைக் கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள்
    பருந்தினுக்கு இனிய வேலாய் இன்அருள் பணித்தி என்றான்.
    (மகரக்கண்ணன் வதைப் படலம் – 8407)

    கணவனைக் கொன்றவனைப் பழிவாங்கும் வரை மங்கலநாணைக் கழற்றாமலும் மரணச் சடங்குகள் செய்யாமலும் இருப்பதாய் வஞ்சினம் கூறுதல் மறக்குல மகளிர் மரபு. அதனை நிறைவேற்றிக் கொடுப்பது அவர்தம் மைந்தரின் கடன். எனவே, அரச சேவையில் தன் கடமையும் சேர்ந்திருப்பதால் ”இன்னருளோடு என்னைப் போரிடப் பணித்திடு” என இராவணனை இரக்கின்றான் மகரக்கண்ணன்.

    இராவணன் இசையவே வேறுசில வீரநண்பர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு பெருஞ்சேனையோடு இராமனை எதிர்க்கச் சென்றான் மகரக்கண்ணன்.

    கமலக்கண்ணனாம் இராமனொடு பொருதபோது இராமன்விட்ட ஒரு கணை மார்பிலே பாய்ந்து குருதிசோர அதனைப் பொருட்படுத்தாது ஓர் இமைப்போதில் விண்ணில் ஏறிய மகரக்கண்ணன், தான்பெற்ற வரத்தின் பலனாய், அங்கிருந்து இடி காற்று மழை நெருப்பு ஆகியவற்றை மிகுதியாய் உண்டாக்கினான். அவன் உண்டாக்கிய இடியும் கடுங்காற்றும் கல்மழையும் நெருப்பும் போர்க்களத்தைத் தாக்கவே வானரர்கள் கணக்கற்ற எண்ணிக்கையில் மடிந்தனர்.

    ”மகரக்கண்ணனின் இவ் ஆற்றலுக்குக் காரணம் அவன் கற்ற மாயங்களா? பெற்ற வரங்களா?” என வீடணனைக் கேட்டான் இராமன். ”மகரக்கண்ணனின் கடுந்தவத்தை மெச்சி வாயுதேவனும் வருணதேவனும் தந்த வரங்களின் விளைவுகள் இவை” என்றான் வீடணன்.

    இராமன் அவற்றுக்கு மாற்றுக் கணைகள் விடவே, மழையும் காற்றும் நெருப்பும் மறைந்தன; தன் மாயச்செயல் இடையிலேயே அழிந்தமை கண்ட மகரக்கண்ணன் மாயத்தால் வான்வெளியெங்கும் தன் உருவங்களை உருவாக்கி நிரப்பினான். தன் காயத்தை (உடம்பு) மறைக்க அவன் செய்துவரும் மாயங்கள் கண்டு வியந்த இராமன், அவ்வுருவங்களில் ஒன்றில் மட்டும் மார்பிலிருந்து குருதிவழிவது கண்டு இவனே உண்மையான மகரக்கண்ணன் எனத் தெளிந்து அவ்விடம் நோக்கித் தன் அம்பைச் செலுத்தத் தலை அறுபட்டுத் தரையில் வீழ்ந்தான் மகரக்கண்ணன்.

    மகரக்கண்ணனோடு சென்ற மற்றையோரும் போரிலே பட்டனர். இச்செய்தியைத் தூதர்கள் இராவணனிடம் செப்ப, இந்திரசித்தனை மீண்டும் போருக்கு அனுப்பச் சித்தமானான் அவன். தகப்பனின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் போருக்குப் புறப்பட்டான் இந்திரசித்தன். போர்முனை வந்த அவனை இராமனும் இலக்குவனும் முறையே அனுமன் அங்கதன் ஆகியோரின் திண்தோள் மீதமர்ந்து எதிர்த்தனர்.

    அப்போது இலக்குவன் இராமனை நோக்கி, ”அனைவரையும் வாழ்விக்க வல்லவனே! இந்திரனுக்குப் பகைவனாகிய இந்த இந்திரசித்தனின் சிரத்தை என் சரம் விசும்பிடையே அறுத்துத் தள்ளாது போகுமாயின் கொலைத்தொழிலைத் தன் செய்கையாய்க் கொண்ட கூற்றுவனுக்கு நான் விருந்தாகி, இவ்வுலகின் பெருமைமிகு வீரர்களில் கடையானவன் எனும் பழிப்புரைக்கு ஆளாவேன்!” என்று வெஞ்சினத்தோடு வஞ்சினமுரைத்தான்,

    இந்திரன்பகை எனும் இவனை என்சரம்
    அந்தரத்து அருந்தலை அறுக்கலாது எனின்
    வெந்தொழிற் செய்கையன் விருந்தும் ஆய்நெடு
    மைந்தரில் கடைஎனப் படுவன் வாழியாய்.
    (கம்ப: பிரமாத்திரப் படலம் – 8481)

    இந்திரசித்தன் இராம இலக்குவரைப் பார்த்து, ”நீங்கள் இருவரும் ஒருங்கே என்னுடன் போர் புரிய வருகிறீர்களா? ஒருவர் ஒருவராய் வருகிறீர்களா?” என வினவ, ”உன்னை முடிப்பதாய் நான் சபதம் செய்திருக்கின்றேன்; ஆகையால் நானே முதலில் வருகின்றேன்” என்றான் இராமனின் இளவல். அதுகேட்ட இந்திரசித்தன், ”உன் அண்ணனுக்குப் பின் பிறந்த உன்னை அவனுக்கு முன் இறந்தவனாக்குவேன்; இல்லையேல் நான் இராவணனுக்கு மகனாய்ப் பிறந்து என்ன பயன்? உம்மிருவரையும் கொன்று உம் குருதியால் என் தம்பிமார்களுக்கும் சிற்றப்பன் கும்பகருணனுக்கும் இறுதிக்கடன் ஆற்றுவேன்!” எனச் சினத்தோடு சாற்றினான்.

    அதனை மறுத்த இலக்குவன், ”உம்மினத்தார் அனைவர்க்கும் ஈமக்கடன் ஆற்றுதற்கே எமை அடைந்துள்ளான் உன் சிற்றப்பன் வீடணன்!” என்றுரைக்க, வெகுண்ட இந்திரசித்தன் கடும்போரைத் தொடங்கினான். மாற்றி மாற்றி இலக்குவனும் இந்திரசித்தனும் சரங்களைத் தொடுத்துக்கொண்டிருக்க, குறுக்கே தான் சரங்களை விடுவது முறையன்று என எண்ணிய இராமன் இலக்குவனுக்குப் பின்னே வாளா நின்றிருந்தான்.

    இலக்குவன் இந்திரசித்தனின் வீரக் கங்கணத்தையும் கவசத்தையும் தன் அம்பால் உடைக்க, விண்ணில் சென்று மறைந்தான் இந்திரசித்தன். ”இவனை நான் பிரமாத்திரம் (அயன்படை) எய்து கொல்வேன்” என இலக்குவன் இராமனிடம் கூற, “அறநெறி வழுவாதவனே! நீ பிரமாத்திரம் எய்தால் அஃது இந்திரசித்தனை மட்டுமல்லாது மூவுலகங்களையும் சேர்த்து அழித்துவிடும்! ஆகையால், அதனை எய்யாதே!” என்றான் இராமன்; இலக்குவனும் அச்செயல் தவிர்ந்தான்.

    ஆனால், இராம இலக்குவரின் உரையாடலை மறைந்திருந்து கேட்ட இந்திரசித்தன் அவர்கள் தவிர்த்த அந்தத் தெய்வ அத்திரத்தைத் தான் எய்வது என முடிவுசெய்துகொண்டு, யாருக்கும் தெரியாமல், இலங்கைக்குத் திரும்பினான். அவனைக் காணாததால் இராம இலக்குவரும் ஏனைய வானர வீரர்களும் போர்க்கோலம் களைந்தனர். களைத்திருக்கும் படைவீரர்களுக்கு உணவு கொண்டுவரும்படி வீடணனைப் பணித்துவிட்டுச் சேனைகளைக் காக்கும் பொறுப்பை இலக்குவனிடம் ஒப்படைத்துவிட்டுத் தன் தெய்வப் படைக்கலங்களுக்குப் பூசனை செய்யும்பொருட்டு அங்கிருந்து அகன்றான் இராமன்.

    இலங்கைக்குச் சென்ற இந்திரசித்தன், பிரமாத்திரம் எய்யவிருக்கும் தன் திட்டத்தை இராவணனிடம் தெரிவித்து அதற்கு அனுமதிபெற்றான். அவன் பிரமாத்திரம் எய்வதற்கு முற்பட்ட வேளையில் மாயப்போர் புரிய மகோதரன் எனும் அரக்கனை அனுப்பினான் இலங்கையர்கோன். வானரப் படையும் அரக்கர் படையும் மீண்டும் கைகலந்தன. அரக்கர் படை நடுவில் போரிட்டுக்கொண்டிருந்த வானரர்கள் மகோதரன் செய்த மாயத்தால் ஒருவரை ஒருவர் காணமுடியாது தவித்தனர்.

    அவ்வேளையில் இலக்குவனின் நாணொலி கேட்டு மகிழ்ந்த அனுமன் இலக்குவனை வந்தடைந்தான். அரக்கர்செய்த மாயத்தால் வானர வீரர்கள் ஒருவரை ஒருவர் காணவியலாது இருளில் தவித்துவருவதையும் இலக்குவன் தெய்வப் படைக்கலத்தை ஏவி அவ்விருளை ஒழித்தாலன்றி வானரர்கள் இலக்குவனை அடைய இயலாது என்பதையும் தெரிவித்தான் அவன். அதனையேற்று, இராமனை மனத்தில் தியானித்து, சிவனாரின் பாசுபத அத்திரத்தை அம்பிலே பொருத்தி அரக்கர்மேல் இலக்குவன் ஏவ, அரக்கர்படை அழிந்தது; இருள் ஒழிந்தது; மாயப்போர் புரிந்துகொண்டிருந்த மகோதரனும் அவ்விடத்தினின்று மறைந்தான்.

    அரக்கர் செயல்களைத் தூதர்வாயிலாய் அறிந்த இந்திரசித்தன், தான் பிரமாத்திரம் எய்தற்கு ஏற்ற காலம் இதுவென உணர்ந்து பெரிய ஆலமரமொன்றை அடைந்து பிரமாத்திரத்திற்கு முறையாக வேள்விகள் செய்துவிட்டு அப்படைக்கலத்தோடு வானில் மறைந்திருந்தான்.

    வானரப் படையினரை திசைதிருப்பும் வகையில் அப்போது மகோதரன் இந்திரன்போல் தோற்றங்கொண்டு ஐராவதமெனும் வெள்ளையானையில் ஏறி தேவர்கள் சூழப் போர்க்களத்துக்கு வந்தான். ”இந்திரனும் வானவரும் நம்மோடு போர்புரிய இங்கேவரக் காரணமென்ன?” என்று இலக்குவன் குழப்பத்தோடு அனுமனை வினவ, அச்சூழலைத் தன் வேலைக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கொண்ட இந்திரசித்தன், காலத்தால் முன்னவனாகிய பிரமனின் படைக்கலத்தை வானில் மறைந்திருந்தபடி இலக்குவன் உடல்மீது செலுத்தினான்; பொன்மயமான மலையைக் குருவிக்கூட்டங்கள் மொய்ப்பதுபோல் சொல்லற்கரிய ஒளிமிகு அம்புகள் இலக்குவனின் உடலைத் தைத்தன!

    இன்ன காலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான்
    முன்னை நான்முகன் படைக்கலம் இமைப்பதன் முன்னம்
    பொன்னின் மால்வரைச் குரீஇஇனம் மொய்ப்பது போலப்
    பன்னல்ஆம் தரம் அல்லன சுடர்க்கணை பாய்ந்த.
    (கம்ப: பிரமாத்திரப் படலம் – 8610)

    கோடிக்கணக்கான அம்புகள் ஒரே நேரத்தில் உடலில் பாயவே, அதனைச் சற்றும் எதிர்பாராத இலக்குவன் நாடிதளர்ந்து வலிமிகு யானை துயில்கொண்டதுபோல் தரையில் வீழ்ந்தான்; இலக்குவனைத் தொடர்ந்து அனுமன் அங்கதன் சுக்கிரீவன் என மற்றுள்ள வானரரும் உணர்வொடுங்கி மண்ணில் சாய்ந்தனர்.

    போர்க்களத்துளோரை அழித்துவிட்ட நிறைவில் வெற்றிச் சங்கம் முழங்கியபடி இலங்கையை அடைந்தான் இந்திரசித்தன். செய்தியறிந்த இராவணன் ”இராமன் இறக்கவில்லையா?” என்றான் அவனிடம். ”நான் அத்திரம் எய்தவேளையில் அவன் போர்க்களத்தில் இல்லை; அதனால் உயிர்பிழைத்தான்; இல்லையேல் அவனையும் ஒழித்திருக்கும் அயன்படை” என்று பதிலிறுத்துவிட்டுத் தன்மனை புகுந்தான் இந்திரசித்தன்.

    படைக்கல பூசை முடித்துவிட்டு அடுகளம் புகுந்த இராமன், அங்கிருந்த இருளை விரட்ட அக்கினிதேவனின் அம்பைக் கொளுத்தினான். அவ்வெளிச்சத்தில் அவன் கண்ட காட்சி அவனைத் திடுக்கிடவைத்தது. சுக்கிரீவனும் அனுமனும் அங்கதனும் இளவல் இலக்குவனும் உயிரற்றவர்களாய் குருதிவெள்ளத்தில் கிடப்பதைக் கண்டவன் இடியால் தாக்குண்ட மராமரம்போல் மண்ணில் சாய்ந்தான்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

    Share
  • எம். ரிஷான் ஷெரீபுக்கு இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது

    எம். ரிஷான் ஷெரீபுக்கு இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது

    இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒவ்வொரு வருடமும் வெளிவரும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் சிறந்த நூல்களுக்கு இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை (28.10.2022) கொழும்பில் நடைபெற்ற ‘அரச சாகித்திய இலக்கிய விருது’ விழாவில் இலங்கை தமிழ் எழுத்தாளர் எம். ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் வெளியான ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ நூல், சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான விருதினை வென்றுள்ளது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, சிங்களப் பெண் எழுத்தாளர் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் சிறுகதைகள் அடங்கிய அந்த நூலை ஆதிரை பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

    அந்த விருதோடு, ‘அரச சாகித்திய இலக்கிய விருது’ இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருந்த, எம். ரிஷான் ஷெரீபின் மேலுமிரண்டு மொழிபெயர்ப்பு நூல்களான, வம்சி பதிப்பக வெளியீடுகளான ‘சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்’ (சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு) மற்றும் ‘கிகோர்’ (சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்) ஆகிய நூல்களுக்கான சான்றிதழ்களும், விழா நிகழ்வில் அவருக்கு வழங்கப்பட்டன.

    Share
  • விடியலா? விரிசலா?

    விடியலா? விரிசலா?

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    ரிஷி சுனாக் எனும் பெயர் இன்று உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு பெயர்.

    இந்திய மரபுவழி. வந்தவரான இவர் இன்றைய இங்கிலாந்தின் பிரதமராக்கப்பட்டுள்ளார். ஒரு இந்து ஆசியர் கிறீஸ்துவ நாடென்று பெயர்பெற்ற வெள்ளை இனத்துவ பெரும்பான்மையினரைக் கொண்ட பிரித்தானிய நாட்டிற்கு பிரதமராக முடியுமா? என்று எண்ணிய பலருள் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்.

    அந்தக்கேள்விக்குப் பதிலாக அமைந்திருக்கிறது ரிஷி சுனாக் அவர்களின் தெரிவு.

    42 வயதே நிரம்பியவர் ரிஷி சுனாக். 47 வருடங்கள் இந்த நாட்டிலே வாழ்ந்து வருபவன் நான். மாணவன் எனும் நிலையிலிருந்து இன்று ஒரு பேரக்குழந்தையின் தாத்தா எனும் நிலையை எட்டியிருக்கின்றேன்.

    என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நிலை மாற்றத்திலும் பல அனுபவங்களுக்கூடாக பயணித்திருக்கிறேன். அப்வனுபங்களில்.இனத்துவேஷமும் அடங்கும் என்பது.உண்மை. ஆனால் என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட முன்னேற்றத்துக்கும் இனத்துவேஷம் என்பது முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்பதும் உண்மை.

    பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெரும்பான்மையோர் நான் முன்னேறுவதற்கு உந்துதலாக இருந்தார்களேயன்றி இடையூறாக இருக்கவில்லை.

    அதே மனப்பான்மைதான் இன்றைய ரிஷி சுனாக் அவர்லளையும் பிரதமர் பதவியில் அமர்த்தி பார்த்திருக்கிறது என்பதே உண்மை.

    ரிஷி சுனாக் அவர்களின் அரசியல் கட்சியின் அரசியலோடு நாம் உடன்படுகிறோமோ இல்லையோ பேதங்களைக் கடந்து அவ்வரசியல் கட்சி அவருக்களித்த ஆதரவினைக் கண்டு புலபெயர்ந்த நாம் புளாங்கிதமடைய வேண்டும்.

    இதுவரை நான் கண்ட பல புலம்பெயர் சமூக மக்கள் பல வருடங்களாக பிரித்தானியாவில் வாழ்ந்து பிரித்தானியப் பிரஜாவுரிமையைப் பெற்றிருந்தும் பிரித்தானிய நாட்டு வாழ்க்கையை ஒரு வாடகை வீட்டில் வாழ்வது போன்ற மனப்பான்மையுடன் அணுவது போலவே தென்படுகிறது.

    அது என்ன வாடகை வீட்டு மனப்பான்மை? ஒரு சொந்த வீட்டில் குடியிருப்பவரையும், வாடகை வீட்டில் குடியிருப்பவரையும் எடுத்துக் கொண்டால் இருவரில் யார் தாம் வாழும் வீட்டின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள்?

    அதற்கு தம்மை நியாயப்படுத்தும் காரணமாக தாம் அந்நிய நட்டவர் எனும் வகையில் நடத்தப்படுவதாகக் கூறிக் கொள்வார்கள்.

    அத்தகையோரின் வாதங்களைத் தவிடு பொடியாக்கும் வகையில் இன்று நாம் வாழும்  ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக ஒரு புலம்பெயர் சந்ததியைச் சார்ந்தவர் வந்திருப்பது அமைந்திருக்கிறது இல்லையா?

    புலம்பெயர்ந்து வந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழ்வை அமைத்துக் கொண்ட பலருக்கும் தாம் வாழ்க்கையில் எடுத்த இலட்சியத்தை முனைப்புடன் உழைத்தால் அடையலாம் எனும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது .

    ஆனால் புலம்பெயர் சமூகத்தினர் தம்மை தாம் வாழும் நாட்டின் அரசியலமைப்பில் இணைக்காமல் தமது சமூகங்களுக்குள் முடங்கிக் கொண்டால் தம்மையும், தமது சமூகத்தின் தேவைகளையும் முன்னிலைப் படுத்த முடியாது.

    ரிஷி சுனாக் என்பவர் ஐக்கிய இராச்சியத்தின் அரசில் அமரக்கூடிய அரசியல் கட்சியில் இணைந்து தாம் வாழும் நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைப்பதன் மூலம் தாம் சார்ந்த சமூகத்தையும், புலம்பெயர்ந்து வாழ்வோரின் தலைமுறையினரின் திறமைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என்பதுவே உண்மை.

    இன்றைய இங்கிலாந்தின் பொருளாதாரச் சிக்கல் உலக அளவில் ஒரு பேசுபொருளாக இருக்கிறது. இதற்கு உலகரீதியிலான பின்னனிக் காரணங்கள் இருப்பினும் கடந்த பன்னிரெண்டு வருடங்லளாக அரசக் கட்டிலில் அமர்ந்திருக்கும் ரிஷி சுனாக் அவர்களின் கன்சர்வேடிவ் கட்சியும் காரணம் என்பது மறுக்கப்பட முடியாதது.

    குறிப்பாக பொரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக பிரதமராகிய லிஸ் ட்ரஸ் அம்மையாரும் , அவர் பதவியிலமர்த்திய அவரது முதலாவது நிதியமைச்சரும் அவசரமாகக் கொண்டு வந்த அதிரடிப் பொருளாதாரத் திட்டங்கள் இங்லிலாந்துப் பொருளாதாரச் சந்தையைப் படுகுழியில் தள்ளியது.

    தொடர்ந்து வெறும் 49 நாட்களே பதவி வகித்த லிஸ் ட்ரஸ் பதவி விலக நமது ரிஷி சுனாக் பிரதமரானார்.

    புதிய பிரதமர் ரிஷி சுனாக் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பூதாகரமானவை.

    பிரித்தானியப் பொருளாதாரச் சந்தை அரசின் மீது இழந்துவிட்ட நம்பிக்கையை மீண்டும் வலுப்பெறச் செய்ய வேண்டும்.

    ஒற்றுமை இழந்து பல திக்குகளில் இழுபடும் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் தான் செல்லும் திசை நோக்கி நகர்த்த வேண்டும்.

    வாழ்வாதாரச் செலவினை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் சராசரி பிரித்தானியப் பிரஜையின் வாழ்வினைச் சீராக்கும் கொள்கைத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

    இவையனைத்தையும் விட ஒரு ஆசியர் எமது நாட்டின் பிரதமரா? என்று வெகுண்டெழும் ஒரு சாரார் பெரும்பான்மை மக்களின் தொடர் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும்.

    இத்தனைக்கும் மேலாக ரிஷி சுனாக் ஒரு அதீத செல்வந்தர் என்றும் அவருக்கெப்படி அல்லலுறும் மக்களின் இன்னல்களைப் புரிந்து கொள்ள முடியும் எனும் தாக்குதல் வேறு.

    ரிஷி சுனாக் பிரதமாரானதும் ஆசியருக்கு பல அனுகூலங்கள் கிடைக்கும் என்று கருதுவது முட்டாள்தனமானது. அவர் தனது பதவியை தம்மைச் சார்ந்தவர்களுக்காக துஷ்பிரயோகம் செய்வார் என்று எதிர்பார்த்து அவரை வீழ்த்துவதற்கு பல இனத்துவேஷிகள் காத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    ஓபாமா அவர்கள் அமேரிக்காவின் ஐனாதிபதியானதும் அவரது பதவிக்கால முடிவில் அவர் தான் சார்ந்த கறுப்பின சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தார்? எனும் விமர்சனத்தை மும் வைத்தனர்.

    அத்தகைய எதிர்பார்ப்புகள் நியாயமற்றவை . ஒரு நாட்டின் ஐனாதிபதியாகவோ அன்றி பிரதமராகவோ பதவியேற்பவர் தான் சார்ந்த சமூகத்திற்காக மட்ட செயற்பட முடியாது அந்நாட்டின் சகல மக்களிந் பொது நன்மைக்காகவே செயற்பட முடியும்.

    ரிஷி சுனாக்கின் வெற்றி எம் அனைவரதும் வெற்றியாகும். ஏனெனில் அவரது வெற்றியே நாம் வாழும் நாட்டினை கட்டியெழுப்பி எம் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும்.

    ஐக்கிய இராச்சியத்தின் இனத்துவேஷிகளுக்கு ரிஷி சுனாக் பிரதமரானது மிகுந்த புகைச்சலை உண்டாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. எங்கே இவரை வீழ்த்தலாம் என்பதில் மிகுந்த சிரத்தையோடு செயற்படுவார்கள் என்பதும் உண்மை.

    மனித உணர்வுகளின் ஒரு வடிவம் தான் இனத்துவேஷம். ஒரே நிறத்தையுடையவர்களாக இருந்தும் நாடு, மதம் எனும் வேறுபாடு எமக்குள்ளேயோ பேதங்களைத் தருவதில்லையா?

    ரிஷி சுனாக் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானது இங்கிலாந்துக்கு விடியலை ஏற்படுத்துமா?

    இல்லை,

    ஐக்கிய இராச்சியத்தின் பெரும்பான்மை இனத்தவர்க்கும், சிறுபான்மையினருக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துமா?

    Share
  • குறளின் கதிர்களாய்…(423)

    குறளின் கதிர்களாய்…(423)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(423)

    தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில்.

    -திருக்குறள் – 446 (பெரியாரைத் துணைக்கோடல்)

    புதுக் கவிதையில்…

    தகுதி வாய்ந்த
    பெரியோரின்
    துணையாம் கூட்டத்தில்
    தானிருந்து ஒழுகும்
    வல்லமையுள்ள அரசனுக்குத்
    தொல்லைதரும் பகைவரால் வரும்
    தீங்கு எதுவுமில்லை…!

    குறும்பாவில்…

    தக்க பெரியோரின் பக்கதுணைக்
    கூட்டமாயிருந்து ஒழுகவல்ல அரசனுக்குப் பகைவர்
    தந்திடும் தீங்கெதுவும் இல்லையே…!

    மரபுக் கவிதையில்…

    தகுதி மிக்கப் பெரியோரைத்
    தக்க துணையாய்க் கொண்டேதான்
    மிகுதி யுள்ள கூட்டமதாய்
    மிஞ்சும் வகையில் ஒழுகவல்ல
    தகுதி யுள்ள மன்னனுக்குத்
    தாக்கும் பகைவர் தன்னாலே
    வெகுவாய் தாக்கும் தீங்காக
    வேறே யெதுவும் வாராதே…!

    லிமரைக்கூ…

    தக்க பெரியோர்துணைக் கூட்டம்
    கொள்ள வல்ல மன்னவனுக்கு வராதே
    பகைவர் தீங்கினால் வாட்டம்…!

    கிராமிய பாணியில்…

    தொணவேணும் தொணவேணும்
    பெரியவங்க தொணவேணும்,
    வெவரம் தெரிஞ்ச
    பெரியவங்க தொணவேணும்..

    தகுதியுள்ள பெரியவங்களத்
    தனக்குத் தொணயான
    கூட்டமா வச்சிக்கிற
    தெறமயுள்ள ராசாவுக்கு,
    எதிராளிகளால
    எந்தத் தீமயும்
    எப்பவுமே வராதே..

    அதால
    தொணவேணும் தொணவேணும்
    பெரியவங்க தொணவேணும்,
    வெவரம் தெரிஞ்ச
    பெரியவங்க தொணவேணும்…!

    Share
  • கந்தசஷ்டிப் பிரார்த்தனை [6 ம் நாள்]

    கந்தசஷ்டிப் பிரார்த்தனை [6 ம் நாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    ஆறிரு தடந்தோள் ஐயா போற்றி
    அருமறை போற்றும் முருகா போற்றி
    கூறுசெய் வடிவேல் குமரா போற்றி
    குன்றுகள் தோறும் அமர்ந்தாய் போற்றி

    மாறில்லா வள்ளி மணாளா போற்றி
    மஞ்சையில் ஏறி வருவாய் போற்றி
    குக்குடக் கொடியை உடையாய் போற்றி
    குவலயம் உய்ந்திட உதித்தவா போற்றி

    முருகா போற்றி மால்மருகா போற்றி
    உருகிடும் அடியார் உளமுறைவாய் போற்றி
    பொருதிடு குணத்தை ஒழிப்பாய் போற்றி
    புவனமே போற்றிடும் குமரா போற்றிபோற்றி

    Share
  • நீல மயில் மீது ஞால வலம் வந்த

    நீல மயில் மீது ஞால வலம் வந்த

    ‘நீல மயில் மீது ஞால வலம் வந்த’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். அழகன் முருகன் அருளால் எல்லா வளங்களையும் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முருகா என்றதும் உருகாதா!

    முருகா என்றதும் உருகாதா!

    ‘முருகா என்றதும் உருகாதா மனம் மோகன குஞ்சரி மணவாளா’ என்ற, கொஞ்சும் தமிழில் அமைந்த திரைப்பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இந்த சூரசம்ஹார நாளில் முருகப் பெருமான் அருளைப் பெற்று மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கந்தசஷ்டிப் பிரார்த்தனை [5 ம் நாள்]

    கந்தசஷ்டிப் பிரார்த்தனை [5 ம் நாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    பழமான முருகாநீ பழந்தேடி நின்றாய்
    பழனிப் பதியமர்ந்து பக்குவமாய் ஆனாய்
    அழகான இருமாதர் அருகணைத்துக் கொண்டாய்
    அரனாரின் திருக்குமரா திருவடியே சரணம்

    வண்ணமயக் காவடிகள் வருமுந்தன் வாசல்
    வாலைக் குமரியொடு வாலிபரும் வருவார்
    எண்ணமெலாம் உன்நினைப்பை இருத்திவைக்கும் அடியார்
    எழில்முருகா எனப்பாடி  ஏற்றிநிற்பார் உருகி

    கண்களிலே பரவசத்தைக் காட்டிநிற்கும் அடியார்
    கைகூப்பி வேல்முருகா எனவுருகி அழைப்பார்
    மண்புரள வீதியிலே வருமடியார் கூட்டம்
    மால்மருகா எனவுரைத்து உனைநினைத்து வருவார்

    Share
  • தண்டவாளத்தில் படு | அண்ணா உரை

    தண்டவாளத்தில் படு | அண்ணா உரை

    ‘தண்டவாளத்திலே தலைவைத்துப் படு என்று சொன்னாலும் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்று என்று சொன்னாலும் இரண்டையும் ஒரே விதமான ஆணை என்று ஏற்றுக்கொண்டு, நிறைவேற்றிக் கொடுப்பவன் என் தம்பி கருணாநிதி’ என்பது அண்ணாவின் பேச்சு. இதைப் பலரும் பல இடங்களில் மேற்கோள் காட்டிப் பேசுவார்கள். இதோ அண்ணாவின் குரலில் இதைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கலைஞர் கருணாநிதி பற்றிய அறிஞர் அண்ணாவின் உரை

    கலைஞர் கருணாநிதி பற்றிய அறிஞர் அண்ணாவின் உரை

    கலைஞர் கருணாநிதியின் 45ஆவது பிறந்தநாள் விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கவியரசும்  கடவுளும்

    கவியரசும் கடவுளும்

    [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

    கவியரசும் கடவுளையும் கண்டதெங்கே

    கண்குளிர கவிதைகளை பொழிந்ததெங்கே

    மண்மகிழ மனங்குளிர கவர்ந்தனால்

    பண்ணிசையில் கலந்தபல பாடலிங்கே

    கவியரசு இறைவனையும் பார்த்தவிதம்

    கண்மூடி கொண்டவனைக் கண்டவிதம்

    ஒவ்வொன்றாய் நானிங்கே சொல்லட்டுமா

    ஒருநாளும் போதாது யுகமும் வேண்டும்

    மதுவெனும் பேயணங்கை கொண்ட போதும்,

    மங்கையரின் மஞ்சனையில் துஞ்சும் போதும்,

    தங்கமகள் செந்தமிழாள் கொஞ்சும் போதும்,

    மெல்லிசை விஸூவோடு கெஞ்சும் போதும்,

    பக்திபட கதைகளிலே கலந்த போதும்,

    வீணையுடன் மகாதேவன் மீட்டும் போதும்,

    கண்ணனுடன் கீதையுடன் கலந்த போதும்,

    கட்டுமீசை பாரதியை படித்த போதும்,

    கழகமென கொடுத்து சொத்தை இழந்த போதும்,

    பகுத்தறிவை தேடி பக்தி சுவைத்த போதும்,

    தனக்கு என்று தன்னுள்ளே நின்ற போதும்,

    தயங்காது உண்மைசொலும் நேரம் போதும்,

    போதும் போதுமென தெய்வம் கண்டார்

    கவியரசு

    போகின்ற போக்கினிலே நமக்கும் தந்தார்

    திரைப்பாடல் என்றதனால் எளிதில் ஈர்க்கும்

    தினம்தினமும் கேட்பதனால் செவிகள் ஏற்கும்

    இசையோடு மூளையிலே பதிந்ததெலாம்

    எப்போதும் இனிக்கிறது  ஆமாம்  என்பீர்

     

    Share
  • கந்தசஷ்டிப் பிரார்த்தனை [4 ம் நாள்]

    கந்தசஷ்டிப் பிரார்த்தனை [4 ம் நாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    ஓமென்னும் பிரணவத்தின் உட்பொருளும் ஆவாய்
    உலகுய்ய அவதாரம் எடுத்துவனும் ஆவாய்
    தீமையெனும் இருள்சூழா காத்திடுவாய்  முருகா
    தினந்தோறும் பரவுகின்றோம் திருவருள்தா முருகா

    அறமற்ற அரசியலார் ஆட்சி அமர்கின்றார்
    ஆணவத்தை அகமிருத்தி அல்லல் கொடுக்கின்றார்
    நீதியொடு நிதிதன்னில் ஊழல் நுழைக்கின்றார்
    நெஞ்சுருக வேண்டுகிறோம் எமைக்காப்பாய் முருகா

    ஆதியந்தம் இல்லாத அருட்சுடரே கந்தா
    அசுரரது செருக்கடக்கி அமரர்துயர் தீர்த்தாய்
    பேதலித்து நிற்கின்ற அடியார் துயர்தீர்க்க
    பெம்மானின் திருக்குமரா பேரருளைப் பொழிக

    Share
  • நோக்கும் திசைதோறும் | பிரேமா நாராயணஸ்வாமி பாடல்

    நோக்கும் திசைதோறும் | பிரேமா நாராயணஸ்வாமி பாடல்

    பழந்தமிழ்ச் சொற்களைத் தேடி எடுத்து, அன்னைக்குப் பாமாலையாகச் சூட்டியுள்ளார், பிரேமா நாராயணஸ்வாமி. 78 வயதில் இதை இயற்றி, இசையமைத்து, கணீர் என்று அவர் பாடுவதைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share