Blog
-

அரவிந்த மலர்ப்பாதம் | கிருஷ்ணகுமார்
ஞானானந்த மண்டலியில் அனுதினமும் பாடப்படும் ‘அரவிந்த மலர்ப்பாதம்’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

நித்திலாவின் படகு சவாரி
ஆழியாறு அணைப் பூங்காவில் சிறுவர்கள் தாங்களாகவே படகு ஓட்டும் வகையில் ஒரு வாய்ப்பினை வழங்குகிறார்கள். ஒருவருக்கு ரூ.40 மட்டுமே கட்டணம். நித்திலாவின் உற்சாகமான படகு சவாரி இங்கே.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

கோவை – பொள்ளாச்சி சாலை
கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலை எப்படி இருக்கிறது? தார்ச் சாலை – சிமெண்டுச் சாலை ஆகிய இரண்டில் எது சிறந்தது? இதோ ஒரு சோதனை ஓட்டம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

கணித மேதை ராமானுஜன் – 134ஆவது பிறந்த நாள்
இன்று கணித மேதை ராமானுஜனின் 134ஆவது பிறந்த நாள். 32 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன், மறைந்து 100 ஆண்டுகள் கடந்த பிறகும், கணித உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருக்கிறார். இவரது பிறந்த நாளை இந்தியாவின் கணித நாளாகக் கொண்டாடுகிறோம். கும்பகோணத்தில் உள்ள, இராமானுஜனின் நினைவு இல்லத்தைக் கடந்த ஆண்டு ஆவணப்படுத்தினேன். அவரது அறையும் பயன்படுத்திய கட்டிலும் பார்த்துக்கொண்டிருந்த ஜன்னலும் அப்படியே உள்ளன. ராமானுஜன் நடமாடிய இடத்தை நீங்களும் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

மயிலொன்று கண்டேன்
குரங்குகளைக் காண்பதற்கு முன்னதாக முதலில் கண்டது இந்த மயிலைத்தான். கோவை மாவட்டம், கவியருவியின் சாலையோரத்தில் அச்சமின்றி இரைதேடிக்கொண்டு இருந்தது. வாகனங்களின் இரைச்சலை இது கண்டுகொள்ளவே இல்லை. இது என் இடம் என்ற சுதந்திரத்துடன் சுற்றி வந்தது. இந்தச் சுதந்திரம், இதன் அழகை இன்னும் கொஞ்சம் அதிகரித்துவிட்டது. இந்தக் கான மயிலைக் கண்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

சேக்கிழார் பாடல் நயம் – 153 (மெய் அன்பர்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
வரலாறு
மழநாட்டில் தோன்றிய ஆனாய நாயனார் ஆயர் குலத்தைச் சார்ந்தவர். தூய திருநீறணிந்து வாயால் சிவநாமம் செப்பி, பேயோடு ஆடும் பிரான் அடியையே போற்றுவார். ஆநிரைகளை, அகன்ற வெளியில் மேய்த்தார். கொடியவிலங்குகளாலும், நோய்களாலும் அவை துன்புறாமல் காத்தார் . தன மாட்டுக் கொட்டில் வளரும் படிக்காப்பாற்றினார். அங்கே ஆநிரைகள் பெருகின. தம்மிடம் ஆயர்கள் பணி புரிய , அவர் புல்லாங்குழல் ஊதும் பயிற்சியில் சிறந்தார்.
வேதமுறை கற்று, மூங்கிலில் சரியான அளவை வெட்டி, காற்று புகும் துளை , மற்றும் சுரத்தானங்கள் கொண்ட துளைகளை அமைத்துக் குழலிசைப் புலமை பெற்றார். அக்குழலில் சிவபிரானின் அஞ்செழுத்துடன், ஏழிசைச் சுருதி முறையில் வாசித்தது அசைகின்ற ஆசையாய் பொருள்களைக் கவர்ந்து வாசித்தார். புல்லாங்குழலுக்குப் பூசை செய்து, தாமும் வெண்ணீறணிந்து அனைவரையும் கவர்ந்த அணிகலன்களுடன், நீறணிந்த மார்பில் வண்டு மொய்க்கும் முல்லை மாலை அணிந்தார்.
தம் பாதத்தில் செருப்பணிந்து கையில் குழல் எந்தகி ஆயர் குழுவுடன் ஆநிரை மேய்க்கச் சென்றார்.அப்போது, நீலநிறம் பொருந்திய பெரிய மயில்கள் அகவவும், வரிசையாகிய கொடிகளில் உள்ள வண்டுகள் முல்லைப் பண்ணைப் பாடவும், இந்திர கோபமாகிய வாயினில் வண்ணமுடைய வெள்ளிய அழகிய முல்லையரும்புகள் புன்முறுவல் காட்டவும், அசைகின்ற மின்னலாகிய இடையும் சூழும் மாலைப்பொழுதாகிய முலை அசையவும் ஞாலமாகிய பெரிய அரங்கத்திலே
ஆடுவதற்குக் காலம் என்கின்ற பருவத்தையுடைய பெண் வந்தனள்.
ஆனாயர் தம் அடியார்களுடன் கொன்றி மரத்தைச் சார்ந்தார். அக்கோன்டரை மரம் சிவபிரான் போலத் தோன்றியது. அதன் நேரே நின்று உள்ளம் உருக, சிவபத்தித் திறம் தோன்றக் குழல் இசைத்தார். பக்தி பொங்கும் இசையில் ஐந்தெழுத்தை வாசித்து,ஏழு துளைகளில் விரல் தடவி, எல்லாவுயிர்களின் எலும்பும் கரைந்து உருகும் வண்ணம், மூங்கில் குழற் கருவியில் வாய் வைத்து ஊதினார். அது வண்டு மலரை மொய்ப்பது போல் இருந்தது!
குழலின் துளைகளில் ஊதிய படியே ஓசையின் ஏற்ற இறக்கங்களைச் சோதித்துப் பண்ணிசை பெருக, இசையின் வகைகள் அனைத்தும் சேர முல்லைப்பண்ணில் சடைமுடியார் சிரமசைக்கத் தானம் முதலான ஓசைவகைகள் ததும்ப ஐந்தெழுத்தை இசைத்தார். வலிவு, மெலிவு, மத்திமம் என்ற வகைகளில் குழல் துளைகளில் விரலிட்டு அழுத்தி, இசையை எங்கும் பரப்பினார்.
அவர் இசைத்த ஓசை நிலமெங்கும் பரவி வானகத்தேவர்களைக் கவர்ந்தது. அவர்முன் எல்லாவுயிர்களும் தம்மை மறந்து நெருங்கின. பசுக்களும், மான்களும் பாலூட்டும் கன்றுகளும் பெரிய கொம்புடைய காளைகளும் மெய் சிலிர்த்து வந்தன. மயில்களும் பறவைகளும் நெருங்க, மாடு மேய்ப்பவர்களும் தொழிலை மறந்து கூடினர். உலகெங்கும் உள்ளோர், குழலிசைக்கு மயங்கினர். வானத்து தேவ மகளிர், வித்யாதரர்கள், சாரணர்கள், கின்னரர்கள், தேவர்கள், வான் வழியே வந்திறங்கினர். தேவமகளிர்கள் கற்பகப் பூஞ்சோலைகளின் பக்கத்திலிருந்து மலர்போன்ற தமது கைகளால் அமுதூட்டும் கனி பொருந்திய வாயினையுடைய மெல்லிய கிளிகளுடனே தமது கூந்தல் அலையும்படி தத்தம் விமானங்களில் விரைவாக ஏறிவந்து பரவிய ஏழிசை யமுதத்தினைப் பருகினார்கள்.
வலியோரும் மெலியோரும் உணர்வு ஒன்றிக் கேட்டலால் , பாம்புகளும் மயில்களுடன் சேர்ந்து வரும்; சிங்கமும் பெரிய யானையும் சேர்ந்து நிற்கும்; புலியின் வாயருகே மான்கள் சேர்ந்து நிற்கும்; அவை காலை எடுத்து வைக்கவில்லை; மரங்கள் மலர்களை அரும்ப வில்லை; அருவிகளும் காட்டாறுகளும் ஒலிஎழுப்பி ஓடவில்லை; மேகங்கள் மழை பொழிய மறந்தன;
இடிகள் முழங்க வில்லை; கடலையையும் ஓய்ந்தன;
இவ்வாறு அசையும், அசையாப் பொருள்கள் இசைவயப்பட்டன; அவற்றின் புலன்களும் அந்தக்கரணங்களும் அடியாரின் குழலிசையால் உருகின! உண்மையான அடியாரின் குழலிசை வையமும் வானமும் நிறைந்தது! அடுத்துச் சேக்கிழார் பாடுகிறார்..
பாடல்
மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை
வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயம் ஆக்கிப்
பொய் அன்புக்கு எட்டாத, பொன் பொதுவில் நடம் புரியும்
ஐயன் தன் திருச் செவியின் அருகு அணையப் பெருகியது ஆல்.பொருள்
மெய்யன்பரது அன்பினால் விளைந்த குழலினது இசையோசையானது இந்த உலகத்தையும் நிறைவித்து வானுலகத்தினையும் தன் வசமேயாகச் செய்து, பொய்யன்பினுக்கு எட்டாதவரும், பொன்னம்பலத்தினில் திருக்கூத்து இயற்றுகின்றவரும் ஆகிய ஐயரது திருச்செவியின் பக்கத்தில் அணையும்படி பெருகிற்று.
விளக்கம்
மெய்யன்ப ராதலின் அவரது மனத்து அன்பின்விளைந்த குழலோசை ஆண்டவர் திருசசெவியின் அருகு அணையப் பெருகியது என்பது குறிப்பு. இதனையே வலியுறுத்துவார் பொய்யன்புக் கெட்டாத என்று எதிர்மறை முகத்தானுங்கூறினார்.
குழல் இசை பேரோசையாகப் பெருகிய.ஓசை . அவ்வோசை வையத்தையும் வானத்தையும் நிறைத்து, இறைவன் திருச்செவியையும் நெருங்கியது!
நிறைத்து – வயமாக்கி – பெருகுதல் – என்ற தொழிற்பாடுகளின் உள்ளுறை குறிக்கத்தக்கது. தூல சூக்கும காரணநிலைகளுக்கேற்றவாறு கூறியது கண்டு கொள்க. புடைபெயர்ந்து ஒன்றை யொன்று பரம்பரையிற் றொடர்ந்து சென்று மறைவது ஒலியலைகளின் இயல்பு. நீரினுட் போகட்டதொரு கல்லினால் முதலில் அதனைச்சுற்றி மூண்ட அலைகள் உளவாம். பின் அவற்றைத் தொடர்ந்து தளர்ந்த அலைகள் உளவாம். பின்னர் அவ்வாறு மெலிந்து கொண்டே சென்று இறுதியில் ஒன்றும் அசையாமைபோல அவை மிக மெலிந்து காணப்படும். அது போலவே ஒலியலைகளும் உண்டாகும் இடத்தினின்றும் மேன்மேற் கிளம்பிச் சென்று சென்று இறுதியில் அதி சூக்குமமாகிய காரணத்தில் ஒடுங்கும். இங்கு ஆனாயர் குழலிசை ஓசை முதலில் தூலமாகிய ஒலியலைகளாக எம்மருங்கும் பரவி வையத்தை நிறைத்து, அதன்பின் சூக்கும ஒலியலைகளாகமேற்பரவி வானத்தைத் தன் வயமாக்கி, அதன்மேல் அதிசூக்குமமாகிய காரண ஒலியுருவில் ஐயர் திருச்செவியின் அருகு அணையும்படி பெருகியது. அலைகள் முதலில் நாற்புறமும் சுருங்கக் கிளம்பிப் பின்னர் மேன் மேல் விரிவாகப் பெருகுமியல்பு பற்றிப் பெருகியதால் என்ற குறிப்பும் காண்க.
இஃது எல்லாக் குழலோசைகட்கும் எல்லா ஓசை ஒலிகட்கும் இயல்பாமே? எனின், அற்றன்று; பூதசம்பந்தமாய் வையந்தன்னை நிறைத்த மட்டில் நின்று ஒழியும் ஏனைத் தொனியான்மக ஓசைகள் போலல்லாமல் இஃது அஞ்செழுத்தை உள்ளுறையாகக் கொண்டொழுகிய வர்ணான்மக ஓசையானதால் ஐயன் றிருச் செவியின் அருகணையப் பெருகியதென்க.
ஆனாயரது குழலிசை இம்மை, மறுமை, வீடு என்னு மூன்றினையும் தரவல்லதாயிறறென்பதாம். வைய நிறைத்ததனால் இம்மையும், வானம் தன்வயமாக்கியமையால் மறுமையும், ஐயன்றிருச் செவியினருகணைதலால் வீடும் அளிக்கவல்லதாயினமை கூறப்பட்டது. இறைவனைப் பாடுதல் இம்மூன்று பயன்களையும் அளிக்கவல்லதென்பது
“எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்,
இம்மையேதருஞ் சோறுங் கூறையும்; ஏத்த லாமிடர் கெடலுமாம்,
அம்மை யேசிவ லோக மாள்வதற் கியாதுமையுற வில்லையே”என்ற ஆளுடைய நம்பிகள் திருவாக்கா னறிக. பொய்யன்புக் கெட்டாத – ஐயன் – எனக் கூட்டுக.
“பொக்க மிக்கவர் பூவு நீருங் கண்டு,
நக்கு நிற்ப னவர்தமை நாணியே”என்பது தமிழ்மறை. ஐயனது பொற்பொது என்றது மெய்ஞ்ஞானமேயான அம்பலத்தை. எட்டாத பொற்பொது என்று கூட்டி உரைத்தலுமாம். பொற்பொது – பொன்னம்பலம்.
மெய் அன்பு – மன மொழி மெய்என்ற மூன்றானும் சிவபெருமானையல்லாது வெறொன்றினையும் பற்றாத அன்பு. அங்ஙன மல்லாது தம்மையும் உலகையுமே பற்றுக்கோடாகக் கொண்டு செலுத்தும் அன்பு பொய்யன்பாம்.
ஐயன் திருச் செவியின் அருகணையப் பெருகுதலாவது கீழுள்ள தத்துவங்களை யெல்லாம் கடந்து சுத்த தத்துவத்தில் விளங்கும் இறைவனிடமும் செல்லும்படி வியாபித்தல்.ஆயின்,
“சகஸ்ர சீரிஷாத் புருஷ சகஸ்ராட்ச சகஸ்ரபாத்” எனவும்,
ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும்” எனவும்,
ஆயிரங் கமல ஞாயி றாயிரமுக் கண்முக கரசர ணத்தோன்”எனவும்,
“எங்கும் திருமேனி” (திருமூலர்) எனவும், “எங்கணும் பணிவதனங்கள்” எனவும், “எங்குஞ் செவியுடையாய்” எனவும்
வரும்திருவாக்குக்களா லறியப் படுகின்றபடி எங்கும் நிறைந்து எல்லாம்கேட்பது இறைவனது தன்மையாதலின், இங்கு “ஐயன் றிருச்செவியி னருகணையப் பெருகியது” என்றது என்னையோ? எனின், “அவன் மற்றிவ்விடங்களிற் பிரகாசமாய் நின்றே அல்லாதவிடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்” என்ற சிவஞானபோத ஏதுவை விளக்குவாராகி, “அம்முதல்வன் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து (பத்தரது வேடமும் சிவாலயமும்) மாத்திரையே தயிரின்நெய் போல விளங்கி நிலைபெற்று, அல்லுழியெல்லாம் பாலினெய்போல வெளிப்படாது நிற்றலான்” என்று எமது மாதவச் சிவஞான சுவாமிகள் சிற்றுரையினுள் உரைத்தது கொண்டு இதனை அமைவுபடுத்திக் கொள்ளத்தக்கது.
அன்பின் விளைந்த இசையாதல் பற்றியே, இறைவரும், இது கேட்டவுடன் வெளிப்பட்டுவந்தனர் என மேல்வரும் பாட்டிற் கூறுதலும் கருதுக.
திருச்செவி – என்பது அரன்றன் கரசரணாதி சாங்கமெல்லாம் அருளே என்ப; ஆதலின் ‘சிவனடிசென்னி வைப்பாம்’ என்பது போல உபசாரம். இறைவனுக்கு அருளே திருமேனியாம். அத்திருமேனியில் கண் செவி முதலாகிய அவயவப் பகுப்பெல்லாம் அருளே. இக்கருத்துப்பற்றியே
“இத்தன்மை நிகழுநாளிவர் திருத்தொண் டிருங்கையிலை,
யத்தர்திரு வடியிணைக்கீழ்ச் சென்றணைய வவருடைய,
மெய்த்தன்மை யன்புநுகர்ந் தருளுதற்கு விடையவர்தாஞ்,
சித்தநிகழ் வயிரவராய்த் திருமலைநின் றணைகின்றார்”என்று சிறுத்தொண்டநாயனார் புராணத்துட்கூறுதலுங் காண்க.
இப்பாடலில் ஓசையின் செயல்களும், அளவைகளான் அறியப்படும் அறிவியல் கருத்தும் இணைந்து, அறிவியலையும் ஆன்மிகத்தையும் துல்லியமாக இணைத்து விளக்கும் நுட்பத்தைக் காட்டுகிறது!
-

குரங்கு அருவி | கவியருவி
கோவை மாவட்டத்தின் வால்பாறை நகராட்சியில், ஆழியாறு பகுதியை அடுத்துள்ள கவியருவி என்ற குரங்கு அருவிக்குச் சென்று வந்தோம். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இங்கே.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

உடுமலைப்பேட்டையின் காற்றாலைகள்
வெறுங்கையால் முழம் போடலாம். காற்றிலும் காவியம் தீட்டலாம். வெட்டவெளி, பொட்டல் காடு என்று வர்ணித்த இடங்கள், இன்று கோடிகளைக் குவித்து வருகின்றன. தமிழகத்தின் முக்கியமான காற்றாலை மையங்களுள் ஒன்றாக, உடுமலைப்பேட்டை திகழ்கிறது. ஆண்டு முழுவதும் காற்று வீசும் இடங்களையே இதற்குத் தேர்வு செய்கிறார்கள். ஒவ்வொரு காற்றாலையும் பல கோடிகள் செலவில் அமைக்கப்படுகின்றன. அதே போல, இவற்றிலிருந்து பல ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான மின்சாரம் உற்பத்தி செய்து, லாபம் ஈட்டுகிறார்கள். பரபரப்பான சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் காற்றாலைகளைக் கண்டு களியுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

வானத்தில் எத்தனை வண்ணங்கள்
நண்பர்களே!
வணக்கம்.
21.12.2021 அன்று காலை 11 மணிக்கு, இந்தத் தொடர் நிகழ்ச்சியில் என் குருநாதரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரைப் பற்றிப் பேசவுள்ளேன்.
வாய்ப்புடையோர் வருக! அல்லாதார் நேரலையில் காண்க!
அன்புடன்,
ரமணன்
-

கோவை விமான நிலைய உள்ளழகு
கோவை விமான நிலையத்தின் உள்ளழகு எப்படி இருக்கு? இதோ ஒரு சிறு உலா.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

சென்னை விமான நிலைய உள்ளழகு
சென்னை விமான நிலையத்தின் உள்ளழகு எப்படி இருக்கு? இதோ ஒரு சிறு உலா.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

(Peer Reviewed) க.நா.சுவின் ‘அசுரகணம்’ – பித்தேறி அலையும் அடர் காமம்
ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல்
முனைவர் பட்ட ஆய்வாளர்
முதுகலைத் தமிழாய்வுத்துறை
ஜமால் முகமது கல்லூரி
திருச்சி – 20.
george.joshe@gmail.com
+91 9788784958க.நா.சு தினமும் நாற்பது பக்கங்களுக்கு குறையாமல் எழுதிக் குவித்தார் என்று சொல்வர். அத்தனை பக்கங்கள் எழுதியிருக்க மாட்டார் எனப் ப்ரமிள் விமர்சித்ததும் ஊரறிந்தது. அவர் அப்படி எழுதினார் என்று எடுத்துக் கொண்டால், இந்நாவலை மூன்று நாட்களில் எழுதி முடித்திருக்கலாம். ஆனால், இதைத் திருப்திகரமாக எழுதி முடிக்க, பதினைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன் என முன்னுரையில் குறிப்பிடுகிறார் க.நா.சு. மேலும் இத்தனை காலம் நாவலின் தத்துவப் போக்கைப் கனப்படுத்த பயன்பட்டது என்று குறிப்பிடுகிறார். அவரது வார்த்தையிலிருந்தே, இது அவருக்கு எத்தனை முக்கியமான பிரதி என்பதை உணரலாம்.
தாயைச் சிறுவயதிலே இழந்த இளைஞன் வாலிபம் மீதூறும் காலத்தில் தாயொத்த வயதுடைய பெண்ணின்மேல் உண்டாகும் காமத்தை, அடக்கியாளத் துன்பப்படும் நிலையே நாவலின் களம்.
ஃப்ராய்டியம், இடிபஸ் உளச்சிக்கல் என நவீன உளவியல் கூறுகளின் புனைவாக்கமே அசுரகணம் என எடுத்துக் கொண்டு கடந்துவிடாதபடி செய்கிறது, இதன் ராமாயணத் தொன்மத்தின் மீளுருவாக்கப் பிறழ்ச் சித்திரிப்புகள்.
அவதூதர், பொய்த்தேவு போன்ற நாவல்களில் ஞானத்தை அடைந்த, நிம்மதியை அடைய எண்ணித் துறவு பூண்ட கதாப்பாத்திரங்கள், இடம்பெற்றிருக்கும். அந்நாவல்களை விடவும் க.நா.சுவின் இருத்தலியல்சார் கேள்விகள், விசாரணை எய்தி வெளிப்பாட்டை நோக்கி நகரும் நாவல், அசுரகணம்.
“ நாதசுர சப்தம் கேட்டால் யாருக்காவது சாவு நினைவுகளாக வருமோ?
எனக்கு வருதே என்ன செய்ய?”என்றுதான் நாவல் ஆரம்பிக்கின்றது.
மங்களம் எனக் குறிப்பிட்ட நாதத்தை அமங்களமாக உணரும் இளைஞன் எனத் தொடக்கத்திலே நாவலின் போக்கை உணரத் தருகிறார், ஆசிரியர். தன்னுடைய வித்தியாசமான பார்வையினாலே ராமன் ’செமி (பைத்தியம்)’ என்று வகுப்பு மாணவர்களாலும் பேராசிரியர்களாலும் சுட்டப்படுகிறான். படிப்பில் முதலிடம் என்றாலும் பொது காரியங்களில் ராமனுக்கு அறிவு போதாது என்கிற விவரணைகள் ராமனைச் சிந்தனையாளனாக, தனித்து நிற்கும் புத்தி ஜீவியாக முன்வைக்கிறது.
இடிபஸ் உளச்சிக்கல் என்பது எந்த இளைஞனுக்கும் இருக்கலாம். ஆனால், அதை ஓர் புத்திஜீவியான இளைஞன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதில்தான் பிரதியின் கனம் கட்டமைகிறது.
ராமனின் அதிகப்படியான சிந்தனைப் போக்கிற்குத் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளுதல் முக்கியக் காரணமாக அமைகிறது. நடைப் பயணத்தில் அலாதியின்பம் காணும் ராமன், எங்கு சென்றாலும் நடந்தே செல்கிறான். அந்த நடைப் பழக்கமே அவனது சிந்தனைப் பெருக்கத்திற்கு உதவியும் புரிகிறது. மனிதர்களின் பலத்தரப்பட்ட முகவமைப்புகள் பற்றி வியக்கும் பார்வைகளுக்கு மத்தியில் க.நா.சு ராமனை, ஒவ்வொருவரின் தனித்துவமான கழுத்துகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் உறுப்புகளில் கூட மனிதர்களிடமுள்ள மாற்றங்களை எண்ணி வியக்கவும் வைக்கிறார்.
நூல்கள், தங்கை என இரண்டைத் தவிர அவனுடன் உரையாடுவதற்கு யாரும் இல்லை. அவன் அதை உருவாக்கிக் கொள்ளவுமில்லை. தாயைச் சிறுவயதிலே இழந்த பாரதி, தந்தையுடன் ஒருமித்து வாழ முடியாதது போலத்தான் ராமனும் வாழ்கிறான். தான் தன் தந்தையைப் போல் இருந்துவிடக் கூடாதென்ற தவிப்புகள், அவனைத் துண்டாடுகிறது. தன்னியல்பாக நடந்து கொள்ளும் வேளையில் அவனை யாராவது தந்தையைப் போல் நடந்து கொள்கிறாய் என்று சொல்லிவிட்டால் சமநிலை குலைந்துவிடுகிறான்.
சமநிலை அறுபடுவது, கற்பனையின் பிடியில் அவனைச் சமர்ப்பிக்கிறது. தன்னை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படும் வேளைகளில், அவனைப் ஆட்கொள்ளும் கற்பனை நிஜம் போலவே தோற்றம் கொண்டு ஆளுகை செய்கிறது.
தன்னிலையின் இயல்பிலிருந்து பிறரைக் காண்பதிலுள்ள சிக்கல், அவர்களும் தன்னைப் போன்றே எல்லாக் காரியங்களையும் சிந்திப்பதாக மயக்கம் கொள்வது. ஆனால் ராமனின் தன்னிலையிலிருந்து எழும் சிந்தனை பிறர் தன்னைப் போல் எதையும் சிந்திக்கவோ அணுகவோ மாட்டார்கள் என்று மயங்குவதாக உள்ளது. தன்னுடைய போக்கை நியாயப்படுத்தும் சுயபச்சபாத உணர்வின், முழுத் தொகுப்பாகவே ராமன் எழுதப்பட்டிருக்கிறான்.
சாதாரண காரியத்திற்காகச் சென்ற ஓரிடத்தில் கண்டடையும் அசாதாரணத்திலிருந்து மீட்சிக் கொள்ள வழியுண்டா? என அலைகிறது ராமனின் மனம். தன் வகுப்புத் தோழியின் தாயாக இருக்கும் மத்திய வயதுடைய பெண்ணின் அழகு ராமனைக் கொதிப்படையச் செய்கிறது. அவனுலகில் அவளது ரூபம், இயல்விதி கடந்து எங்கும் வியாபித்தலைகிறது. பெருந்தாபம் கனலாகிக் கருத்தில் வெற்றி கொள்ள முனகும் உடலின் கொந்தளிப்பை, பூர்வ கவியின் கற்பனை மாந்தர்களைக் கொண்டு அணைத்துவிட நினைக்கிறார், க.நா.சு.
ராமன் அவளைச் சூர்ப்பணகையாகவே பார்க்கிறான். தனது இன்ப ஒடுக்கத்தைக் களவாடும் ரவிவர்மனின் மோகினியாகவே கண்டு கலங்குகிறான். இளமையை உடல் களையும் பருவத்தில், மீண்டுமாய் ருதுவெய்திய காலத்து பரிபூர்ண அழகு மேலெழுந்து மெருகேறுவதைக் கண்டு அல்லல் படுகிறான்.
அவனது மீட்புச் சுயமாய் நிகழமுடியும் என நம்பமுடியாத நிலைக்குப் போய்விடுகிறான். சூர்ப்பணகையின் மூக்கறுக்க லட்சுமணன் வேண்டுமெனத் தேடுகிறான். இல்லாத லட்சுமணனைத் தெரிந்தே வரவழைக்கத் துடிக்கிறான். தாபத்தை மேலும் எரியூட்டி வளர்ப்பதாக உள்ளது, ஹேமாவின் வருகை. ஹேமா அச்சூர்ப்பணகையின் மகள். அவளைத் தான் விரும்புவதாகச் சிந்திப்பதன் பின்னாலும் அவளது தாயே உள்ளதைக் கண்டடைவதோடு நாவல் முடிகிறது. மகளைக் கைப்பிடித்ததால் தாயின்மேல் நாட்டம் விலகியதாகச் சொல்லும் ராமன், ஹேமாவைத் தாயாகப் பார்க்கும் நிலையிலிருந்து தன்னுடைய நிரந்தர போராட்டத்தைத் தொடக்கிவிடுகிறான். தாய் நிலையை மனைவிக்கு வழங்குவதில் மீண்டும் குடிகொண்டுவிடுகிறது ஃப்ராய்டின் தத்துவம்.
இங்கே கேள்வி, அத்தாய்மைக் கருத்துரு இருவரில் யாருடைய தாயாக உருக்கொள்கிறது என்பதில் மீண்டும் முடிச்சு கிளைவிடுகிறது. நாவல் மறுவாசிப்பிற்கும், புதுதிறப்பிற்கும் கண்டடைதலுக்கும் அழைத்துச் செல்லும் பகுதி, இக்கேள்வியிலிருந்துதான் துளிர்க்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பிராமணச் சமூகத்தில் பெரும்பாலான பெண்களுக்குத் தனது முதல் மகளை, மணம் முடித்து வைக்கும்போது வயது, நாற்பதிற்குள் தானிருக்கும். பண்பாட்டு ரீதியாக மணவயது பொருட்படுத்தப்படாத காலத்தில் இளவயதிலே பெண்கள் பேரப்பிள்ளைகளை எடுத்துவிடுவார்கள். இன்றும்கூட சொற்ப அளவில் பெண்கள் இளவயதிலே தன் இரண்டாம் தலைமுறையைக் காண்பதைப் பார்க்கிறோம். அப்படியான இளவயதுடைய தன்னுடைய வகுப்புத் தோழியின் தாயாக இருப்பதும் அவள் கவர்ச்சிகரமாக இருப்பதுமே ராமனைத் திக்குமுக்காட வைத்ததன், பின்னணி.
ராமன் என்கிற பெயருக்கு, பதிவிரதன் என்னும் பொருள் சூட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. அந்தத் தேய்வழக்குச் சிந்தனைப் போக்கை (Stereotype mentality) கூறுபோடுவது போல க.நா.சு, ராமனை நாலரை ரூபாய் கொடுத்து விலைமாதுவிடம் காதல் பயின்றதாகக் காட்சிப்படுத்துகிறார்.
தன் தந்தையை நகல் செய்து வாழக்கூடாதென ராமன் நினைக்கிறான். தந்தையை வெல்லவேண்டுமென்பதே அவனுடைய ஏக்கமாக இருக்கிறது. இங்கு தந்தையை வெல்லுதல் என்பது தந்தையின் குணாம்சத்தை, தான் அறிந்தும் அறியாமலும் சுவீகரித்துக் கொண்டு தளைப்பட்டுவிடக்கூடாது என்பதாகும். ராமனுடைய தந்தை இதிகாசத்தின்படி தசரதன் தானே. தசரதனின் போக இயல்பைத் தானும் பின் தொடர்ந்து யாருக்கும் தளைப்பட்டு (தசரதன் கையேயிடன் தளைப்பட்டதைப் போல்) விடக்கூடாதென்று ராமன் நினைக்கிறான்.
தசரதனின் போகந்துய்க்கும் பண்பு, நாவலின் தசரதனாகிய நாராயணனிடம் உள்ளதைச் சுட்டிக் காட்டுமிடம் நுட்பமானது. தான் காதல் பாடம் பயின்ற இடத்திற்குத் தந்தையும் அடிக்கடிச் சென்று வருபவர் என்பதால் அவருக்குத் தான் போய் வந்தது தெரிந்திருக்கும் என்கிறான் ராமன்.
அதற்கு முன்னும் பின்னும் நாராயணின் அச்செயலைப் பற்றி எவ்வித அறவியல் தீர்மானமும் (Moral correctness) ராமனிடமிருந்து வெளிப்படவில்லை. ராமனே அத்தீர்மானப் போக்கிற்கு எதிரான மனநிலை உள்ளவனாகவே தன்னைக் குறிப்பிடுகிறான். இவையாவும் நேரடி கூற்றாகவோ நனவோடையாகவோ இடம்பெறாமல் நுண்வாசிப்பில் வெளிப்படுவது, இந்நாவலின் சிறப்பு. க.நா.சுவின் மறைபிரதி என்று அசுரகணத்தைக் குறிப்பிடுவது சாலத் தகும்.
அந்தரங்கங்களிலிருந்து தப்பலாம் ஆனால் அந்தரங்கக் கதைகளிலிருந்து தப்புவது என்பது ஞானமடைந்ததாகத் திரிபுற்று சாக்கடைக் குழியில் சவமாகி மிதக்கும் சோமு பண்டாரத்தின் நிலைதான்.
மானுட வாழ்வுள்ளவரை அவனுக்கு ஒழுக்கவியல் சிந்தனையும் போதிக்கப்பட்ட அறவியலை மீறுவதால் உண்டாகும் குற்றவுணர்வும் உள்ளவரை, அசுரகணங்களை அவன் எதிர்க்கொண்டுத்தான் ஆக வேண்டும். அதை நுட்பமாகவும் எக்காலத்திற்கும் பொருந்துவதாகவும் பிரதியாக்கிய க.நா.சு, இந்நாவலுக்காக என்றும் நினைக்கப்படுவார்.
க.நா.சுவின் அசுர வார்த்தைகளாலே இக்குறுங்கட்டுரையை நிறைவுச் செய்கிறேன்:
”சிறை (புலன்) வாழ்வென்பது சுவடு தேய்ந்த பாதையிலே வளைய வருவதாகும்”.
முதன்மை நூல்:
- க.நா.சு, அசுரகணம், எழுத்து பிரசுரம், சென்னை – 40, முதற்பதிப்பு – 2020.
துணைமை நூல்:
- ஜெயமோகன், நவீனத்தமிழிலக்கியஅறிமுகம் கிழக்கு பதிப்பகம், சென்னை – 14, முதற்பதிப்பு – 2011.
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
கட்டுரையாளர் அசுரகணம் நாவலைப் படித்துத் தெளிவாக உள்வாங்கி இருக்கிறார். தமிழ் இலக்கிய மரபில் வரும் பெருந்திணை சார்ந்த கதையாடல் இந்நாவலில் வந்திருப்பதை உளவியல் கண்ணோட்டத்தில் இடிபஸ் சிக்கலாக எடுத்துக் கூறுவது சிறப்பு. ராமனுக்கும் அவனது தந்தையாகிய நாராயணனுக்கும் இடையே இருக்கும் குணம் சார்ந்த தலைமுறைப் போக்கிலிருந்து விடுபட என்னும் ராமனின் முயற்சிகளைக் கட்டுரையாளர் மிகவும் கவனத்துடன் உற்று நோக்கி இருக்கிறார். ஒவ்வொரு மகனும் தனது தந்தையின் சாயலில் இருந்து விடுபட்டுத் தனக்கான அடையாளத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற, போராடுகின்ற மனநிலை இங்குச் சிந்திக்கத்தக்கது. ராமனின் அப்பா பெண் சார்ந்த ஈடுபாட்டில் மயங்கி திரிவதில் இருந்து தான் மீண்டு வர வேண்டும் என்று எண்ணுகின்ற இயக்கப் போக்கு நாவலின் உட்சரடாக இருப்பதை இக்கட்டுரையாளர் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். க.நா.சுவின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பாங்கில் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.
-

எழுத்தால் சமூக மாற்றம் நிகழுமா? | கே.ஜி.ஜவர்லால் நேர்காணல் – 3
எழுத்தால் சமூக மாற்றத்தை உருவாக்க முடியுமா? கதையில் செய்தி ஏதும் சொல்ல வேண்டுமா? கடினமான நடையில் எழுதுவது உகந்ததா? புரிந்தால் புரிந்துகொள், புரியாவிட்டால் சொறிந்துகொள் என்று சுஜாதா சொன்னது ஏன்? நல்ல எழுத்து எப்படி இருக்க வேண்டும்? எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லாலின் அனுபவப் பகிர்வு இங்கே. இதில் அவர் சொல்லும் காட்சிக்கு நீங்கள் ஒரு கதை எழுதி அனுப்புங்கள். சிறந்த கதையை அவர் தேர்ந்தெடுப்பார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

குறளின் கதிர்களாய்…(381)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(381)
மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
தாஅய தெல்லா மொருங்கு.– திருக்குறள் – 610 (மடியின்மை)
புதுக் கவிதையில்…
சோம்பலில்
சுகமது காணா
சுறுசுறுப்பான மன்னன்,
அன்று
தன் அடியால்
ஓங்கி உலகளந்தோன்
கடந்த
உலகை யெல்லாம்
ஒருசேர அடைவான்…!குறும்பாவில்…
தன் திருவடியால் உலகளந்தவன்
தாண்டிய உலகமனைத்தையும் ஒன்றாய்ப் பெறுவான்
சோம்பலே இல்லாத அரசன்…!மரபுக் கவிதையில்…
தலையில் காலை வைத்தேதான்
தரணி யெல்லா மொன்றாக
அலையில் துயில்வோன் அளந்திட்ட
அகில மனைத்தும் பெற்றிடுவான்,
நிலையே யில்லா உலகத்தில்
நிம்மதி யென்றே சோம்பலென்னும்
வலையில் விரும்பி வீழ்ந்திடாத
வல்லோ னான மன்னவனே…!லிமரைக்கூ…
மன்னவன் சோம்பலே இல்லான்,
மண்ணளந்தோன் அடியாலளந்த உலகை யெல்லாம்
ஒன்றாய்ப் பெற்றிட வல்லான்…!கிராமிய பாணியில்…
கொடியது கொடியது
சோம்பலு கொடியது,
சோம்பலில்லா வாழ்க்க
சொர்க்கமா மாறுமே..மாவுலி தலயில கால்வச்சி
மண்ண யெல்லாம்
ஒண்ணா அளந்த பெருமாளு
கடந்த
ஒலகத்த யெல்லாமே
ஒண்ணாப் பெறுவாரு
சோம்பலுல சொகம்காணாத
சுறுசுறுப்பான மகராசாவே..தெரிஞ்சிக்கோ,
கொடியது கொடியது
சோம்பலு கொடியது,
சோம்பலில்லா வாழ்க்க
சொர்க்கமா மாறுமே…!

