05.09.2021 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு, ஜி. நாராயண ஷர்மா அறக்கட்டளையின் (G Narayana Sharma Trust) யூடியூப் அலைவரிசையில் இணையங்கள். எதற்காக? முனைவர் அண்ணா கண்ணன் சொல்கிறார் கேளுங்கள்.
Blog
-

கடன் அட்டையைப் பயன்படுத்துவது எப்படி?
கிரெடிட் கார்டு பக்கமே தலைவைத்துப் படுக்காதவரா நீங்கள்? நில்லுங்கள். கடன் அட்டையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியுமா? எப்படிப் பயன்படுத்துவது? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் அவர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

புதிய விதைகள் – 2
இன்று நம் தோட்டத்தில் புதிய விதைகள் சிலவற்றை விதைத்தோம். செடி அவரை, கொடி அவரை, வெள்ளரி, முளைக்கீரை, சிவப்புக் காராமணி, சிவப்புத் தட்டைக்காய், நீட்டுப் பீர்க்கங்காய், குட்டைப் பீர்க்கங்காய், பாம்புப் படலை, பட்டை அவரை, பசலைக் கீரை, வெந்தயக் கீரை உள்ளிட்ட பலவற்றையும் இங்கே நீங்கள் காணலாம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

கடன் அட்டை வாங்கலாமா? | ராமகிருஷ்ணன் நாயக்
செல்பேசி உள்ள எல்லோருக்கும் இத்தகைய அழைப்புகள் வந்திருக்கும். கடன் அட்டை தருகிறோம். அதுவும் Lifetime Free Credit Card தருகிறோம் என அன்றாடம் அழைப்புகள் வருகின்றன. இத்தகைய அட்டைகளை வாங்கலாமா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் அவர்களுடனான உரையாடலின் முதல் பகுதி இங்கே.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 36
-மேகலா இராமமூர்த்தி
சுக்கிரீவனின் படைகளின் அளவையும் படைத்தலைவர்களைப் பற்றியும் அவனிடம் கேட்டறிந்த இராமன், இனி அடுத்துச் செய்யவேண்டியது குறித்துச் சிந்திப்போம் என்றான். அதை ஏற்றுக்கொண்ட சுக்கிரீவன், அனுமனைப் பார்த்து, ”சீதையைக் கடத்திச் சென்ற இராவணனின் இலங்காபுரி தென்திசையில் இருப்பதாய் என் அறிவு சொல்கின்றது. அனுமனே! வலிமை வாய்ந்த அத்திசைக்குச் சென்று அங்குள்ள அரக்கரை வென்று புகழ்பெறுவதற்கு உனையன்றி வேறொருவன் வேண்டுமோ?” என்று அனுமனைப் புகழ்ந்தான்.
தென் திசைக்கண்
இராவணன் சேண் நகர்
என்று இசைக்கின்றது என்
அறிவு இன்னணம்
வன் திசைக்கு இனி
மாருதி நீ அலால்
வென்று இசைக்கு உரியார்
பிறர் வேண்டுமோ. (கம்ப: நாடவிட்ட படலம் – 4559)”தாரையின் மைந்தனான அங்கதனும், கரடிகளின் அரசனான சாம்பவானும் நின்னோடு வரட்டும். இரண்டு வெள்ளம் சேனைகளோடு நீங்கள் புறப்படுங்கள்” என்று அனுமனிடம் கூறிய சுக்கிரீவன், விந்த மலை, நருமதை ஆறு, வடபெண்ணை, கோதாவரி என்று அவர்கள் கடந்துசெல்ல வேண்டிய வழிகளையும் விரித்துரைத்து, ”தென்திசையின்கண் தமிழ்நாடான பாண்டிய நாட்டிலுள்ள அகன்ற பொதிய மலையிலே நிலைபெற்ற அகத்திய முனிவனது தமிழ்ச்சங்கத்தைச் சேர்வீர்களாயின், அப்பொதிய மலை அம்முனிவன் என்றும் வாழும் உறைவிடம் ஆனபடியால் அதனை வணங்கி அப்பால் செல்லுங்கள். பொன் நிரம்பிய நீர் பெருகுகின்ற பொருநை நதியை (தாமிரபரணி) கடந்துசென்றால் யானைக் கன்றுகள் வாழும் பெரிய தாழ்வரைகளையுடைய மயேந்திர மலையையும் தென்கடலையும் காண்பீர்கள்” என்றான்.
தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்
என்றும் அவன் உறைவிடம் ஆம் ஆதலினால்
அம்மலையை இறைஞ்சி ஏகி
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திரு நதி பின்பு ஒழிய நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
நெடு வரையும், கடலும் காண்டிர். (கம்ப: நாடவிட்ட படலம் – 4583)”அந்த இடத்தை (மயேந்திர மலை) தாண்டிச்சென்று அப்பகுதிக்கு அப்புறத்திலும் இப்புறத்திலும் ஒரு திங்கள் முழுவதும் அலைந்து திரிந்து தேடிச் சீதையைக் கண்டுபிடித்து வாருங்கள்; விரைந்து புறப்படுங்கள்!” என்று கட்டளையிட்டான் சுக்கிரீவன்.
அப்போது இராமன் அனுமனை அருகழைத்து, கருணையொடு நோக்கி, ”நீதி நூல்களில் வலவனே! சீதையைக் காண்பாயாகில், இவள்தான் சீதை எனத் தெளியும்பொருட்டு அவளுடைய அங்க அடையாளங்களைக் கூறுகின்றேன் கேட்பாயாக” என்று அவனைத் தனியிடத்திற்கு அழைத்துச் சென்று சீதையின் அடி தொட்டு முடிவரை விவரிக்கின்றான்.
அனுமனால்தான் சீதையைக் கண்டுபிடிக்க முடியும் எனும் நம்பிக்கை சுக்கிரீவனுக்கும் இராமனுக்கும் அழுத்தமாய் இருந்ததையே இப்பாடல்களால் நாம் அறிகின்றோம்.
எனினும், இப்பகுதியில் சீதையின் அங்க அடையாளங்கள் குறித்து அந்நிய ஆடவனும், மாணியுமான அனுமனிடம் இராமன் வருணிப்பது வரம்புகடந்த வகையில் அமைந்திருப்பது சற்று நெருடலாகவே உள்ளது. இந்த வருணனைகளைக் கொஞ்சம் குறைத்திருந்தால் காப்பியத்தின் சிறப்பு மேலும் கூடியிருக்கும்.
சீதையின் உடல் வருணனைகளை விலாவாரியாக விளம்பிமுடித்த இராமன், இராமனிடமிருந்துதான் அனுமன் வருகின்றான் என்று சீதை நம்பும்பொருட்டு வேறுசில செய்திகளையும் அவனிடம் சொல்லுகின்றான்.
”வளமிகு அயோத்திநகர் நீங்கிச் சந்திரனைத் தீண்டுகின்ற நெடிதுயர்ந்த அதன் மதிலின் அழகிய வாயிலைக் கடக்குமுன்னே எல்லையில்லாக் கொடிய காடு எதுவோ? என்று கேட்டாள் சீதை; அதை அவளிடம் நினைவுபடுத்து!” என்றான் இராமன்.
மல்லல் மா நகர் துறந்து
ஏகும் நாள் மதி தொடும்
கல்லின் மா மதிள்
மணிக் கடை கடந்திடுதல்முன்
எல்லை தீர்வு அரிய வெங்
கானம் யாதோ எனச்
சொல்லினள் அஃது எலாம்
உணர நீ சொல்லுவாய். (கம்ப: நாடவிட்ட படலம் – 4624)அரண்மனையைத் தாண்டி வெளியில் எங்கும் சென்றவள் இல்லை சீதை. அதனால்தான் அயோத்தி மதிலின் வாயிலைக் கடப்பதற்குமுன், காடு அருகிலிருக்கும் என்று எண்ணிக்கொண்டு, காடு எங்கே என்று இராமனைப் பார்த்துக் கேட்டாள்.
இதே போன்றதொரு காட்சியைச் சிலப்பதிகாரத்திலும் நாம் காணலாம். வண்ணச் சீறடிகளை மண்மகளுக்குக்கூடக் காட்டாமல் வீட்டிலேயே அடைந்துகிடந்த கண்ணகி, கோவலனோடு மதுரைக்குப் புறப்பட்டபோது புகார் நகர எல்லையிலேயே, ”மதுரை மூதூர் யாது?” (மதுரை எங்கே?) என்று கேட்டதன் எதிரொலியாகவே சீதையின் இவ்வினா அமைந்திருக்கின்றது. சிலம்பில் கம்பருக்கிருந்த காதலும் ஈடுபாடும் இராமகாதையில் ஆங்காங்கே பொருத்தமாய் வெளிப்படுகின்றன.
சீதையைப் பற்றிய அடையாளங்களையும் அவளுரைத்த மொழிகளையும் அனுமனுக்குச் சொன்ன இராமன், அழகிய இரத்தினங்கள் பதிக்கப்பட்ட தன் மோதிரத்தையும் (கணையாழி) சீதைக்கு அடையாளமாய்க் காட்டுமாறு அனுமனிடம் தர, அதனைப் பெற்றுக்கொண்ட அனுமன் அங்கிருந்து புறப்பட்டான் ஏனைய வானர வீரர்களோடு.
தொண்டு எனும் குணத்திற்கோர் ஒப்பற்ற இலக்கணமாய் அனுமனைத் தம் காப்பியத்தில் படைத்திருக்கின்றார் கம்பர். அங்கதனும் சாம்பவானும் துணைவர, அனைத்து இடங்களிலும் சீதையைத் தேடிக்கொண்டும் வீரச்செயல்கள் புரிந்துகொண்டும் செல்கின்றான் அனுமன். பல இடங்களில் தேடியும் சீதையைக் காணாமையால் சோர்வோடு தென்கடலை ஒட்டிய மயேந்திரமலைக்கு வருகின்றனர் வானர சேனையர்.
அப்போது அப்பகுதியில் வாழ்ந்துவந்த கழுகரசன் சடாயுவின் அண்ணனான சம்பாதியின் வாயிலாய்ச் சீதை இராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிகின்றனர்.
இலங்கைக்குச் செல்லவேண்டுமானால் நீண்டு பரந்த கடலைத் தாண்டவேண்டும். அந்த அரிய செயலைச் செய்யப்போவது யார் எனும் வினா அங்கே எழுந்தபோது, தன் பெருமையும் திறனும் அறியா அனுமனுக்கு அவன் பெருமையை எடுத்துரைக்கின்றான் சாம்பவான்.
ஓர் உயிர் கீழ்நிலைக்குச் செல்லாமல் மேல்நிலைக்கு உயரவேண்டுமானால் அதற்கான அடிப்படைத் தேவை புலனொழுக்கம். அந்தப் புலனடக்கம் முழுதாய்க் கைவரப் பெற்றவன் அனுமன். அவனுடைய சாற்றரும் ஆற்றலைப் பதினொரு பாடல்களில் அவனுக்கு நினைவூட்டிய சாம்பவான், அனுமன் குறித்த மிக நுட்பமான கருத்தைப் பேசுகின்றான்.
”நீர் நீதிநெறியில் நிலைபெற்றுள்ளீர்; வாய்மை பொருந்தியுள்ளீர்; மகளிர் இன்பத்தை மனத்தாலும் எண்ணாது வளர்ந்துள்ளீர்; வேதங்களையெல்லாம் அவற்றின் பொருளொடு ஓதி உணர்ந்துள்ளீர்; ஊழியையும் கடந்த நெடிய ஆயுளை உடையீர்; உலகங்களைப் படைக்கின்ற முதற் கடவுளாம் பிரமதேவனே நீரென்று யாவரும் சொல்லும் அளவிற்கான சிறப்புடையீர்” என்று புகழ்கின்றான்.
நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும்
மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறையெலாம்
ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும்
ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர். (கம்ப: மயேந்திரப் படலம் – 4725)மதுவிலும் மாதர் இன்பத்திலும் வரம்பின்றிப் பொழுதைக் கழிக்கும் தன்மையுடைய இலங்கையில் ஒரு பெண்ணைத் தேடிச் செல்கின்றவன் புலனடக்கம் உடையவனாய் இருத்தல் அவசியம். அத்தகு உயர்குணம் நிரம்பப் பெற்றவன் அனுமன் என்பதையே “நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்” எனும் தொடர் நமக்கு உணர்த்துகின்றது. அனுமன் பண்புகளுள் உச்சமான உயர்பண்பும் அதுதான்!
சாம்பவானின் மொழிகளால் ஊக்கம்பெற்ற அனுமன், நூறு யோசனை தூரம் நீண்டுள்ள கடலைத் தாண்டிச் சென்று இலங்கையில் சீதையைத் தேட ஒப்புக்கொள்கின்றான்.
அனுமன் கடலைத் தாவிக் கடப்பதிலிருந்து தொடங்குகின்றது, கிட்கிந்தா காண்டத்திற்கு அடுத்து அமைந்துள்ள, சுந்தர காண்டம். இக்காண்டம் முழுமையும் நீக்கமற நிறைந்திருப்பவன் அனுமனே. அவனைப் பற்றிய சிறப்பான முன்னுரையாக அமைகின்றது சாம்பவானின் மொழிகள்.
கம்பராமாயணத்தின் ஒவ்வொரு காண்டமும் காப்பியக் கதை எந்தப் பகுதியில் நடக்கின்றதோ அல்லது எதனை அடிப்படையாக வைத்து நடக்கின்றதோ அதையொட்டியதாகவே பெயர்பெற்றிருக்க, ஐந்தாவது காண்டமான ’சுந்தர காண்டம்’ மட்டும் இந்தப் பொதுவிதிக்கு மாறுபட்ட வகையில் பெயர் பெற்றிருப்பது ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரியதாய் அமைந்திருக்கின்றது.
இக்காண்டத்தில் வீர சௌந்தரியம், பக்தி சௌந்தரியம், புலனடக்கம் எனும் சௌந்தரியம் ஆகியவை மிளிரும் சுந்தரனாகக் காட்சியளிக்கின்றான் அனுமன். காப்பியத் தலைவியான சீதையும் இக்காண்டத்தில் மீண்டும் கதைக்குள் வருகின்றாள். அவளின் தவவொழுக்க சௌந்தரியமும் காண்டத்துக்கு அழகூட்டுகின்றது. எனவே, இக்காண்டம் சுந்தர காண்டம் எனும் பெயர் பெறுவதற்கு அனுமனும் சீதையும் காரணமாகின்றனர் என்பது கம்பனில் தோய்ந்தவர்கள் ஆய்ந்துகண்ட முடிபாகும்.
தன் ஆற்றலையெல்லாம் ஒன்றுதிரட்டிய அனுமன், பேருருக் கொண்டவனாய் (விசுவரூபம்) தன்னை மாற்றிக்கொண்டு, மயேந்திர மலையின் மீதிருந்து தாவிக் கடலின்மேல் பறக்கத் தொடங்குகின்றான். அப்போது கடலில் பல இடையூறுகளைச் சந்திக்கும் அவன், அவற்றை வெற்றிகரமாய் முறியடித்து இலங்கையிலுள்ள பவள மலையில் இறங்குகின்றான்.
சொர்க்கத்தையே நரகம் எனச் சொல்லத் தகும் வகையில் அமைந்திருக்கும் பொன்னகரமாம் இலங்கையின் வனப்பு கண்டு வியப்படைகின்றான். சந்திர மண்டலத்தை முட்டும் மாடி வீடுகளும் அவற்றின் ஒளியும் அவனை வாய்பிளக்க வைக்கின்றன.
”இராவணன் கோபிப்பான் என்பதனால் இலங்கையின் மேலே செல்ல மாட்டான் கதிரவன்” என்று புகன்ற புலவோரின் கருத்து அனுமனின் நினைவுக்கு அப்போது வருகின்றது. பிறரால் பற்றமுடியாத இலங்கை மதில்களின் ஒளியைக் கண்டால் தன் கண்கள் கூசுமே என்று அஞ்சியே அங்கிருந்து அகன்று செல்லுகின்றான் பகலவன் என்பதை அவர்கள் அறியவில்லை என எண்ணுகின்றது அவன் உள்ளம்.
முன்னம் யாவரும் இராவணன் முனியும் என்று எண்ணி
பொன்னின் மாநகர் மீச்செலான்கதிர் எனப்புகல்வார்
கன்னி ஆரையின் ஒளியினில் கண்வழுக்குறுதல்
உன்னிநாள் தொறும் விலங்கினன் போதலை உணரார். (கம்ப: ஊர்தேடு படலம் – 4962)இருட்டும்வரை ஊரை நோட்டம் விட்டபடி மலைமேல் காத்திருந்த அனுமன், இருட்டியதும் தன் உருவத்தைச் சுருக்கிக்கொண்டு மெல்ல ஊருக்குள் நுழைந்தான். அவனை எதிர்த்துத் தடுத்த இலங்கையின் காவல்தெய்வமான இலங்காதேவியைத் தாக்கித் தோல்வியுறச் செய்துவிட்டுச் சீதையைத் தேடும் பணியைத் தொடங்கினான்.
ஒவ்வொரு வீடாய்ப் புகுந்து தேடிக்கொண்டு போனவன், இராவணன் இளவலாகிய கும்பகருணன் வீட்டையடைந்தான். அங்கே அமளிமிசை ஆதிசேடனைப் போலவும், கடலினைபோலவும், பேரிருள் போலவும் தன் பிரம்மாண்ட உருவத்தால் காட்சிதந்து உறங்கிக் கிடந்த கும்பகருணனைக் கண்டு இவன் இராவணனோ என்று ஐயுற்றுச் சினந்தான்.
கும்பகருணனை இன்னும் சற்று நெருங்கிச்சென்று பார்த்து, இவனுக்குப் பத்துத் தலைகளுமில்லை; இருபது திண்புயங்களுமில்லை; ஆதலால் இவன் இராவணன் இல்லை என்று தெளிந்து, பெருகிவரும் வடவைத் தீயையொத்த தன் சினத்தை அறிவென்னும் கடல் நீரினால் அவித்தான் அனுமன்.
குறுகிநோக்கி மற்று அவன்தலை ஒருபதும் குறித்த
இறுகு திண்புயம் இருபதும் இவற்குஇலை என்னா
மறுகிஏறிய முனிவுஎனும் வடவைவெங் கனலை
அறிவு எனும்பெரும் பரவைஅம் புனலினால் அவித்தான். (கம்ப: ஊர்தேடு படலம் – 5072)மாட மாளிகைகள், மகளிரின் ஆடரங்குகள், கடவுளர் கோயில்கள், பட்டி மண்டபங்கள் எனப் பல இடங்களிலும் தன் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்த அனுமன் அடுத்து நுழைந்தது வீடணனின் இல்லத்தில்.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17. -

பழகத் தெரிய வேணும் – 82
நிர்மலா ராகவன்
கவலையை விட்டுத்தள்ளுங்கள்!
“நீங்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்களே! வாழ்க்கை உங்களை நல்லவிதமாக நடத்தியிருக்கவேண்டும்!” என்று அனுமானித்தாள் என்னுடன் அதிகம் பழகியிருக்காத ஒருத்தி.
அதற்கும் மெல்லச் சிரித்தேன். துன்பமோ, துயரமோ அறவே இல்லாத வாழ்க்கை எங்கானும் உண்டா?
சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்புகளை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தால், நிம்மதி ஏது!
சில இல்லங்களில், மூத்த மகள் தந்தைக்கு அருமையாக இருப்பாள். இரண்டாவது பெண் அம்மாவின் செல்லமாக இருந்தாலும், தந்தை தன்னிடமும் அன்பைப் பொழியவில்லேயே என்ற குறை ஏற்படக்கூடும்.
தந்தை மறைந்தபின்னும், “அப்பா உன்னைத் தலையிலே வைத்துக்கொண்டு ஆடுவார்!” என்று சகோதரியிடம் வன்மம் பாராட்டுகிறவள் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறோம் என்பதை உணர்வதில்லை.
கடந்தகாலக் கசப்பான நிகழ்வுகளை எப்படிச் சமாளிப்பது என்று புரிந்துவிட்டால், வாழ்க்கை எளிதானதுதான் என்று புரிந்துபோகும்.
நம்மால் பொறுக்கமுடியாத ஒரு நினைவிலிருந்து விடுபட வேண்டுமானால், அதைப் பற்றி ஆழமாக யோசித்துத்தான் ஆகவேண்டும் – அப்படிச் செய்வது எவ்வளவு வருத்தமாக இருந்தாலும். வேறு வழி கிடையாது. இல்லையேல், அதேபோன்ற அனுபவங்கள் தொடரும்.
கதை
ஒரு பெரிய குடும்பத்தில் வேண்டாத பிள்ளையாகப் பிறந்தவன் செல்வம். மூத்த அண்ணனுக்கோ, அவன் கேளாமலேயே அவனுக்குப் பல சலுகைகள் கிடைத்தன. அவன் தீய பழக்கங்களில் ஈடுபட்டு, வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டவுடன், செல்வம் உறுதிபூண்டான்: `நான் முன்னுக்கு வந்து, என்னை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுப்பேன்’.
ஆனால், தன் வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொண்டபோதும், அவன் எதிர்பார்த்த மகிழ்ச்சியோ, நிம்மதியோ கிடைக்கவில்லை.
தன்னையுமறியாது, தந்தையைப்போலவே தன்னைத் துச்சமாக நடத்தும் ஒருவனைச் சிறந்த நண்பன் என்று நம்பினான் செல்வம்.
அதன்பின், `யாரையும் நம்ப முடியவில்லை. எல்லாரும் என்னைக் காயப்படுத்துகிறார்கள்!’ என்று புலம்ப ஆரம்பித்தான்.
இவனிடம் பலரும் தம் குறைகளைப் பகிர்ந்துகொள்ள, அவர்களுக்கு ஆறுதலாகப் பேசுவான். அதே அன்பைத் தன்னிடமும் செலுத்த அவனுக்குத் தெரியாமல் போயிற்று.
கடந்தகாலத்தை நினைவுகூர்ந்தாலே வருத்தம் மிக, தன்னிரக்கம் பெருகியது. அதை நினைத்தும் பார்க்க விரும்பவில்லை.
அறியாவயதில் ஏதேதோ நடந்திருக்கலாம். கடந்த காலத்திலேயே நிலைத்து, நிகழ்காலத்தை மகிழ்ச்சியின்றிக் கடப்பானேன்!
நல்ல நண்பர்களைப்போல் புகழ்ச்சி, பரிசுப்பொருட்களுடன் கவர்ந்து, அதன்பின் உணர்வுபூர்வமாக வதைப்பவர்கள் தொடர்பு எதற்கு?
அப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகுவதுதான் நமக்கு நாமே செய்துகொள்ளும் உதவி.
மன்னிப்பு
பிறரால் வதைக்கப்பட்டவர்களால் வெகு காலமானாலும் அவர்களை மன்னிக்கமுடியாது.
தாம் ஏன் வதையை அனுமதித்தோம் என்று, தம்மீது கொண்ட ஆத்திரமும் குற்ற உணர்வும்கூடத் தணியாது.
வதைக்கு ஆளாகிய குழந்தைகளுக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறத் தெரியாது. அவர்களை ஏதாவது வரையச்சொன்னால், மனத்திலிருப்பது சித்திரம்வழி வெளிப்படும். (உளவியல் நிபுணர்கள் இவ்வழியைத்தான் கடைப்பிடிக்கிறார்கள்).
செடிகளிடம் ஒரு பாடம்
எங்கள் வீட்டில் ஒரு மல்லிகைச் செடி புதராக வளர்ந்திருந்தது. இந்தச் செடி பூத்ததே கிடையாது. ஏனெனில் ஒரு மரத்தின் நிழல் அதன்மேல் படர்ந்திருந்தது.
அபூர்வமாக, ஒரே ஒரு கிளை மட்டும் மிக நீண்டிருக்க, அதில் மொட்டுகள்!
சூரிய வெளிச்சம் இல்லாததால் பூக்க முடியவில்லை என்று புரிந்து, அது வெளிச்சத்தை நோக்கி வளர்ந்துவிட்டது!
சூழ்நிலை சரியாக இல்லை என்றால், அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது அதற்குத் தெரிந்திருக்கிறது!
இயற்கையால் துன்பம்
துன்பமோ, துயரமோ பிறர் கொடுப்பது மட்டுமில்லை. இயற்கையும் அதைச் செய்யும்.
கதை
என் மகளுடைய பள்ளிக்கூட ஆசிரியை கனகா என்னைச் சந்திக்க விரும்புவதாக அழைத்தாள். (`கண்டிப்பாக உன்னைப்பற்றிக் குறை கூறமாட்டேன்!’ என்று என் மகளிடம் வாக்குறுதி கொடுத்தபின்தான் அவளால் என்னுடன் தொடர்புகொள்ள முடிந்ததாம்!).
திருமணம் செய்துகொடுத்தபின்னும், தன் மகளுடன் தங்கிவிட்ட அவளுடைய தாய் இறந்து போயிருக்கிறாள். ஆனால் கனகாவால் அத்துயரத்தை ஏற்க முடியவில்லை.
ஒரே மகனைப் பறிகொடுத்த துக்கத்தை நான் எப்படி எதிர்கொண்டேன் என்று அறிய விரும்பினாள் அவள்.
பொதுவாக, எந்தத் துக்கமும் ஒன்றரை வருடத்துக்குமேல் நீடிக்காது என்று கூறுவார்கள். அது சரியல்ல.
துயரை மாற்ற நாம் எதையாவது முனைந்து செய்தால்தான் அது காலம் முழுவதும் நம்மை ஆட்டுவித்து, நடைப்பிணமாக ஆக்கிவிடாது காத்துக்கொள்ள முடியும்.
“என் அம்மாவுக்கு பாயசம் என்றால் ரொம்பப் பிடிக்கும். இப்போது பண்டிகைக்குக்கூட பாயசம் பண்ண மனம் வரவில்லை,” என்றாள் கனகா. “இரண்டு பேரும் மாலை வேளையில், ஒன்றாக டீ குடிப்போம். இப்போது அழுகை அழுகையாக வருகிறது”.
“எப்பவும்போல, இரண்டு கப் டீ போட்டு எதிரெதிரே வைத்துவிட்டு, `அம்மா! டீ!’ என்று உரக்கக் கூப்பிடுங்கள். சில தினங்களுக்குப் பின் மனம் அடங்கிவிடும்,” என்றேன். “அம்மாவின் ஃபோட்டோவில் வாய்க்கருகே ஒரு சொட்டு பாயசத்தை வைத்தால், முதலில் அழுகை வரும். ஆனால், நாளடைவில், நிம்மதி கிடைக்கும்,” என்று என் சொந்த அனுபவத்தை விளக்கினேன்.
உற்றவர் மறைந்தபின் துயருறும் சிலர் என்னிடம் இவ்வாறு ஆலோசனை கேட்டிருக்கிறார்கள்.
விபத்தில் மகனைப் பறிகொடுத்த ஒரு முதியவர், `உங்களிடம் பேசியதும், நிம்மதியாக இருந்தது,’ என்று, வெகு தூரத்திலிருந்து என்னைச் சந்திக்க வந்தார், மறுமுறை.
சில வருடங்களுக்குப்பின், அவர் குடும்பத்தில் இன்னொரு துக்கம் நிகழ, அயல்நாட்டிலிருந்த என்னைத் தொடர்புகொண்டார்.
`நான் மாறிவிட்டேன். நீங்களும் மாறலாம். ஓயாமல் அழுதுகொண்டிருக்க வேண்டியதில்லை,’ என்று நான் சொல்லாமல் சொன்னது அவ்விருவருக்கும் நம்பிக்கை அளித்துவிட்டது.
போதைப் பழக்கத்தில் ஈடுபட்டு, பின்பு அதிலிருந்து விடுபட்டவர்களையும், சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவிட்டுத் திரும்பித் திருந்தி வாழ்பவர்களையும் கல்விக்கூடங்களில் உரையாற்ற அழைக்கிறார்களே, ஏன்?
`நீங்களும் மாறலாம்’ என்ற நம்பிக்கையைப் பிறருக்கு ஊட்டுவதற்காகத்தான்.
`அப்போது எனக்குத்தான் தெரியவில்லை. பிறரும் என்னைக் காப்பாற்றத் தவறிவிட்டார்கள். ஆனால், நான் அப்படி இருக்கமாட்டேன். அவதிப்படும் பிறருக்கு ஆதரவாக இருப்பேன்!’ என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டவர்கள் இவர்கள்.
அப்போக்கால், பிறரது கவலையைப் போக்குவதுடன் தம் மனதையும் ஆற்றிக்கொள்கிறார்கள்.
பெருந்துயரோ, தீய பழக்கங்களோ மட்டும் மாற்றப்பட வேண்டியதில்லை.
மகிழ்ச்சி எங்கே?
`நமக்கு ஏன் மகிழ்ச்சியே கிடைப்பதில்லை?’ பலருக்கும் மன உளைச்சலை உண்டாக்கும் கேள்வி.
தமக்கு என்ன வேண்டும் என்று புரியாததால் வரும் விளைவு இது.
நமக்கு உகந்ததாக இல்லாவிட்டாலும், பிறரது எதிர்பார்ப்புகளை ஏற்றுச் செய்யும்போது சலிப்பாகவோ, எரிச்சலாகவோ இருக்கும். எல்லோரிடமும் நற்பெயர் வாங்கவேண்டும், பிறர் மனதை நோகடிக்கக்கூடாது என்ற எண்ணத்துடன், அக்காரியங்களைச் செய்வானேன்! எதற்காக நம்மையே கஷ்டப்படுத்திக்கொள்வது?
நம் நலனையும் கவனித்துக்கொள்ள வேண்டாமா?
எதிலும் சுயநலம்
“எவருமே சிறிதும் சுயநலமின்றி, பிறருக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வதில்லை” — இவ்வாறு கூறினார் ஆப்ரஹாம் லிங்கனின் நண்பர் ஒருவர்.
மாஜி அமெரிக்க ஜனாதிபதியோ அக்கூற்றை ஏற்க மறுத்தார். “நான் பிறருக்கு நன்மை செய்வதில் என்ன சுயநலம் இருக்க முடியும்?” என்று விவாதித்தார்.
“அப்படிச் செய்வதால் உனக்கு என்ன கிடைக்கிறது?”
“மகிழ்ச்சிதான்!”
“அதுவும் சுயநலம்தானே! உனக்காகத்தானே செய்கிறாய்!” என்று அவரை மடக்கினார் நண்பர்.
கலைஞர்களும் மனக்கவலையும்
பண்பட்ட நடிகர்களும், எழுத்தாளர்களும் தம் அனுபவங்களை செயல்மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.
ஒருவரை ஆட்டிப்படைக்கும் எண்ணங்களை, அவற்றால் எழும் பாதிப்பை, வெகுவாகக் குறைக்கும் வலிமை எழுத்துக்கு உண்டு.
நிம்மதி பெறுவதற்கு, எழுத்தாளராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. நம்மை அலைக்கழைக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி யோசித்து, அன்றாடம் எழுதிவந்தாலே நம் மனம் புரிந்துபோகும்.
அநாவசியமான கவலைகளை மனதில் சுமந்து அவதிப்படுவானேன்!
-

எறும்புகள் என்ன செய்கின்றன?
இந்த எறும்புகளை இன்று கண்டேன். இவை என்ன செய்கின்றன?
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

புதிய விதைகள்
இன்று நம் தோட்டத்தில் புதிய விதைகள் சிலவற்றை விதைத்தோம். என்னென்ன விதைகள் தெரியுமா?
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

அருண்குமார் | வண்ணப் பூச்சுக் கலைஞர்
தன் வீட்டுக்கு வண்ணப் பூச்சு மேற்கொண்ட அருண்குமாருடன் உரையாடுகிறார் சுதா மாதவன். உங்கள் வீட்டுக்கு வண்ணம் பூச வேண்டுமா? அருண்குமாரை அணுகுங்கள்.
This is time brush; get refreshed.
For painting needs contact: Arun kumar @ 9092921141
Video by Sudha Madhavan
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

சேக்கிழார் பாடல் நயம் – 143 (ஊர் தொறும்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
பாடல்
ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே,
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
சீர் உடை அடிசில், நல்ல செழுங்கறி, தயிர், நெய், பாலால்
ஆர் தரு காதல் கூர, அடியவர்க்கு உதவும் நாளில்.வரலாறு
தாலிக்குக் பெற்ற கலயனார், மிகவும் விரைந்து வீரட்டானக் கோயில் சார்ந்து, எனையாளும் ஈசனின் திருக்கோயில் சேம வைப்பில் தாம் கொண்டுவந்த குங்கிலிய மூட்டைகளை முழுவதும் நிறைத்தார். மற்ற செயல்களை மறந்து சடையுடைய ஈசனார் தம் மலர்த்தாளைப் போற்றி அங்கேயே தம் திருப்பணிகளை செய்து கொண்டு இருந்தார்.அப்படி அங்கே கலயனார் இருந்த போதில். இறைவன் திருவருளால் அளகையில் வாழும் குபேரன் தம் பெருநிதியத்தை எடுத்து பொற்குவை, நெற்பொதி மற்றும் எல்லாப் பொருள்களும் நிறைந்த பெருஞ்செல்வமாக்கிக் கலயனார் இல்லத்தில் நீடித்து வளம் சேர்க்க வைத்தார்.
அடியார் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி உறங்கும்போது, தவம் மிக்க கொடி போன்ற மனைவியரின் கனவில், இறைவன் செல்வம் பற்றி அறிவித்தார். உடனே விழித்தெழுந்த அவர் தம் இல்லத்தில் நிறைந்த செல்வத்தைக் கண்டு மகிழ்ந்தார்! இவ்வாறு இல்லத்தில், குறைவின்றி நிறைந்த பொன்னும். நெல்லும் அரிசி முதலான பண்டங்களும் நிறைந்தது இறைவனின் திருவருளால் என்று கரங்குவித்து வணங்கினார்.
காலனையே கொன்ற சிவபிரான், கலயனார் அறிந்து கொள்ளும் வண்ணம் அவரிடம் ‘’நீ மிகவும் பசியால் வாடுகிறாய்; உன் இல்லம் சென்று பால் முதலிய இனிய உணவுகளை உண்டு வருத்தம் நீக்குக!’’ என்றார்.அதைக் கேட்ட கலயனார், இறைவனை வணங்கி அவர் கூற்றை மறுத்துக் கோயிலில் இருக்க அஞ்சி, உடனே திருக்கோயில் மாடவீதியில் உள்ள தம் இல்லத்தை அடைந்தார்!
அங்கே பெருஞ் செல்வம் குவிந்திருந்ததைக் கண்டு, தம் மனைவியாரிடம், ‘’இங்கே மிகுந்த செல்வம் எவ்வாறு வந்தது?‘’ எனக் கேட்டார். ‘’நீலகண்ட னாகிய இறைவன் திருவருளால் வந்தது!’’ என்று தாம் கண்ட கனவு பற்றிக் கூறினார். அதனைக் கேட்ட அடியார்,’’ என்னையும் ஆண்டுகொண்டு அருளிய எம்பிரான் கருணை இருந்தவாறு என்னே!’’ என்று தலை மேல் கரம் வைத்து வணங்கினார். திருமகள் போன்ற மனைவியார், உணவுக்குரிய கலங்களை எடுத்து, இறைவனுக்கு தீபம் ஏற்றி இனிய உணவைச் சமைத்துப் படைத்தார்! கலயனார் அதனை உண்டு பசியாறி மகிழ்ந்தார். அப்போது நிகழ்ந்ததைச் சேக்கிழார் பெருமான் எழுதுகிறார்;
பாடல்
ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே,
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
சீர் உடை அடிசில், நல்ல செழுங்கறி, தயிர், நெய், பாலால்
ஆர் தரு காதல் கூர, அடியவர்க்கு உதவும் நாளில்.பொருள்
ஊர்கள் தோறும் பலிகொள்ளும் சிவபெருமானது திருவருளினாலே இவ்வுலகில் நிறைந்த செல்வமுடையவராகிய தன்மையில் சிறந்து மிக்க அமுதினை, நல்ல வளமான கறி, தயிர், நெய், பால் இவற்றுடன் நிறைத்து, மிக்க அன்புடன் சிவனடியார்களுக்கு உதவுகின்ற நாளிலே,
விளக்கவுரை
ஊர்தொறும் என்ற தொடர் எவ்வூரிலுமுள்ள எவ்வுயிர்களிடத்தும் என்ற பொருள் காட்டும் .
பலிகொண்டு உய்க்கும் என்ற தொடர், பலி – பிச்சை. கொண்டுய்க்கும் என்பது ஒரு சொன்னீர்மைத்தாய்க் கொள்ளும் என்ற பொருளில் வந்தது. பலியைத்தான் கொண்டு, பலி இட்டோரைத் தனது பதத்திற் செலுத்துகின்ற என்றலுமாம். இப்பொருட்கு உய்த்தல் – செலுத்துதல் – வைத்தல் என்க.
“பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன்”
என்பது திருவாசகம்.
உய்த்தலாவது – “நிரந்தரமாக நினையு மடியார், இரந்துண்டு தன்னடி யெட்டச் செய்”தல் என்று கொள்ளுதலுமொன்று. இறைவன் பிட்சாடனராக எழுந்தருளிப் பிச்சை ஏற்கும் வரலாறு கந்தபுராணத்துட் காண்க. இதனைப் பற்பலவாறும் பாராட்டுவது அன்பர் வழக்கு.
“துள்ளுமறி யாமனது பலிகொடுத் தேன்” என்று தாயுமானார் கூறியபடி இவர்கொள்ளும் பலியாவது ஆன்மாக்களின் பசுபோதமும் அதற்கு விடயமாகிய வினைப்பயன்களுமாம். ஊர்தொறும் – என்ற கருத்தைப்பற்றி
“இங்குநம் மில்லங்கள் தோறும் எழுந்தருளிச்,
செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை”என்ற திருவாசகத்தினை உன்னுக.
ஒருவன் – ஒப்பற்றவன். “நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்” என்றபடி சிவபெருமான் ஒருவனே பதி – தலைவன் என்பதாம். ஒருவனது அருளினாலே ….. செல்வமுடையராம் பண்பின் நீடி – அவர் பிச்சை கொள்வாராயினும் தம்மை யடைந்தார்க்கு எல்லாச் செல்வமும் அருளவல்லார் என்றதனாற் பிச்சை கொள்வது தம்பொருட் டன்று என்பதாம்,
“படங்கொண்டு பாயும் பூவணையும் தருவா யெனினும் படுதலைகொண்டு, இடங்கள் தோறும் இரப்பாய் என்று ஏசுவார்க்கென் பேசுவனே”
என்ற திருவிளையாடற் புராணத்தினுள் இது சுவைபட விளக்கப்படுதல் காண்க.
பாரினில் ஆர்ந்த செல்வம் – உலகின் உண்மை அனுபவங்களுக்கு எவ்வெச் செல்வங்கள் வேண்டுமோ அவை முழுதும் நிறைந்த என்றபடி,
உடையராம் பண்பில் நீடி – பாரில் பலர் ஆர்ந்த செல்வமுடையராயிருந்தும் அவ்வுடைமையின் பண்பு இல்லாதாராய்க் கழிகின்றார்கள். அவ்வாறல்லாது அருளாற் பெற்றசெல்வமாதலின் அதனை உடையாராதலோடு உடைய பண்பினாலும் நீடினார் என்றுகுறிக்க உடையராய் நீடி என்னாது உடையராம் பண்பின் நீடி என்றார். அப்பண்பாவது செல்வம் பெற்றதால் ஆகிய நீடுபயன்பெறுதல். அப்பயனாவன அரன்பூசையும் அடியார்க்கமுது அளித்தலுமேயாம்.
நல்ல செழும் கறி தயிர் நெய் பாலாற் சீருடை அடிசில் உதவும் என்று கூட்டி உரைத்துக்கொள்க. நல்ல – குணத்தால் நன்மைதரும். இவற்றைப் பதார்த்தகுண சிந்தாமணி முதலிய மருத்துவ நூல்களுட் கண்டுகொள்க. தூய இடத்தில் தூயனவாகப் பயிரிடப்பட்ட என்பதும் உடன்கொள்க. செழுமை – இளையவை – முதியவை என்று அவ்வவற்றுக்கேற்ற நிலை, அழுகல் – வாடல் புழுக்கடி முதலிய கேடு இல்லாத நிலை முதலாகிய தன்மைகள். ஆல் – என்ற விகுதியை தயிர் நெய் என்பவற்றுடனும் தனித்தனியே கூட்டுக. உணவுப்பொருள்களில் இவையேதலைமை பெற்றனவும் இன்றியமை யாதனவும் சத்துவமுடையனவும் ஆம். ஆதலின் கறி தயிர் நெய் பால் அடிசில் என்ற இவற்றைக் கூறினார். கூறினாரேனும் உடனுண்ணும் இனம்பற்றிப் பருப்பு முதலியவையும், சுவைதரும் தகுதிபற்றி உப்பு முதலியவையும் உடன் கொள்க.
சீருடை அரிசி – என்று பாடங் கொள்ளின் செந்நெல்லரிசி என்றுரைத்துக் கொள்க. அதுவே அடிசிற்குச் சீருடையதாம்.
ஆர்தரு காதல் கூர – நிறைந்த ஆசை மேலும் மிக. கூர்தல் – உள்ளது சிறத்தல்.
அடியவர்க்குதவும் – “உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல்” என்ற ஆளுடைய பிள்ளையாரது திருமயிலைத் தேவாரங் காண்க.
இப்பாடலில் கலயனார் இறைவனுக்குக் குங்கிலியத் திருப்பணி செய்த சிறப்புடன், அடியாருக்கு உரிய, மாகேசுர பூசை என்ற வகையில் தகுதி மிக்க அடியாருக்கு உணவூட்டும் சிவப்பணியும் செய்தமை புலனாகின்றது! இதனாலேயே இவருக்குச் சிவபிரான் கருணை நோக்கம் உண்டானதை இவர் வரலாற்றிலேயே அறிந்து கொள்கிறோம்!
-

கண்ட நாள் முதலாய் | புல்லாங்குழல் இசை
கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு – 7
‘கண்ட நாள் முதலாய்’ என்ற புகழ்பெற்ற பாடலை, அஷோக் ரவியின் புல்லாங்குழலிசையில் கேட்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-
கண்ட நாள் முதலாய் – கண்ணன் துதி
கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு – 6
முருகனைப் பாடுகின்ற ‘கண்ட நாள் முதலாய்’ என்ற புகழ்பெற்ற பாடலைச் சற்றே திருத்தி, கண்ணனைப் பாடுகின்றார், கல்யாணம் பக்திசாரன். கேட்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

கண்ணிநுண் சிறுத்தாம்பு
கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு – 5
மதுரகவியாழ்வார் அருளிச்செய்த ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற பாமாலையின் முதல் பாடலைச் செல்வி வி.ஸ்ரீநிகா இங்கே வழங்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

கிருஷ்ண லீலை
கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு – 4
எங்கள் மகன் ஹரி நாராயணனின் கிருஷ்ண லீலை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


