Blog

  • ‘வலிமையான ஆண்’ பார்த்தசாரதி

    ‘வலிமையான ஆண்’ பார்த்தசாரதி

    சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டி, சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ் 1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதுடன், ஒட்டுமொத்தமாக 520 கிலோ எடை தூக்கி, வலிமையான ஆண் (Strong Man) என்ற பட்டத்தைப் பார்த்தசாரதி வென்றுள்ளார். இவர் எடை தூக்கி, பதக்கம் வெல்லும் காட்சிகள் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 79 வயது வலுதூக்கும் வீரர், சுப்பிரமணியன்

    79 வயது வலுதூக்கும் வீரர், சுப்பிரமணியன்

    79 வயதில் வலுதூக்கி, இரண்டு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார், சுப்பிரமணியன். சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டி, சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கிளாசிக், எக்யுப்டு ஆகிய பிரிவுகளில் முதலிடம் பிடித்த சுப்பிரமணியன், சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். 2023 ஜூலை மாதம், 80 வயதைத் தொட உள்ள சுப்பிரமணியன் உடன் ஒரு சந்திப்பு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் கக்கிரபாரா யூனிட்-3 மின்வடத்துடன் சேர்க்கப்பட்டது.

    இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் கக்கிரபாரா யூனிட்-3 மின்வடத்துடன் சேர்க்கப்பட்டது.

    KAPP-3&4:
    Location: Kakarapar near Vyara, Gujarat
    Type or Reactor: Pressurised Heavy Water Reactors (PHWRs)
    Capacity: 2×700 MW
    KAPP-3&4 is India’s first pair of indigenously designed Pressurised Heavy Water
    Reactors (PHWRs) of 700 MW unit size with enhanced safety features, located at
    Kakrapar in Gujarat, where two units of 220 MW PHWRs are already in operation.
    Unit-3 has been successfully synchronized with Grid and is generating infirm
    power. In Unit-4, civil works are completed, installation of major
    equipment/components is completed and balance erection, testing and
    commissioning works are in progress.A major milestone “Hydro test of Primary
    Heat Transport (PHT) system” is completed successfully and further works are in
    progress.
    Overall View of Kakrapar Site Feeder Erection in KAPP

    Kakkrapar – 3 Atomic Power Plant Achieves Criticality on July 22, 2020 in Gujarat India

    Click to access 202212140136279797374RAPP_7_8_english.pdf

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    2020 ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் கக்ரபாரா -3 என்னும் புதிய மாபெரும் 700 MWe அணுமின்சக்தி நிலையம் முதல் பூரணத் தொடரியக்கம் புரியத் துவங்கியது. இது கனடாவின் காண்டு [CANDU DESIGN] அணுமின்சக்தி கட்டமைப்பு ஆயினும், இந்தியர் புதிய சாதன, நுணுக்கங்கள், இயக்கங்கள் புகுத்தி நவீனப் பாதுகாப்புச் சுய வடிவ [Indigenous] நிலையமாக டிசைன் செய்து கட்டியுள்ளார். இது பயன்படுத்தும் இயல் யுரேனிய உலோகம், கனநீர் எளிதாகக் கிடைப்பவை. இதே டிசைனில் மகாராஸ்டிரா தாராப்பூரில் கட்டப்பட்டுள்ள இரட்டை யூனிட்டுகள் ஒவ்வொன்றும் 500 MWe மின்சாரத் திறம் உடையவை.

    வெற்றிகரமாக அதே முறையில் இயங்கப் போகும் 700 MWe காண்டு இரட்டை யூனிட்டுகள் ராஜஸ்தான் கோட்டாவில் கட்டப் படுகின்றன. கக்ரபாரா -4 உருவாகி வருகிறது. மற்ற சில மாநிலங்களிலும் சேர்ந்து 12 யூனிட்டுகள் 700 MWe அணுமின் நிலையங்கள் 2017 ஆண்டில் நிதி ஒதுக்குப் பெற்றுள்ளன.

    பூரணத் தொடரியக்கம் [CRITICALITY] என்றால் என்ன ?

    காண்டு அணு உலையில் இயல் யுரேனியம் -238 எரிக்கோலாய் கனநீர்த் தொட்டியில் எழுப்பும் நியூட்ரான்கள், சிறிதளவு உள்ள யுரேனியம் -235 உலோகத்தின் அணுக்களைப் பிளக்கின்றன. ஒரு நியூட்ரான் ஒரு யுரேனிய -235 அணுவைப் பிளந்து வெப்பசக்தியும்,இரு நியூட்ரான்கள் வெளியாகும். இரு நியூட்ரான்கள் இரண்டு யுரேனிய -235 அணுக்களைத் தாக்கி, வெப்ப சக்தியும் 4 நியூட்ரான்கள் உண்டாகும். 2, 4, 8,16, 32, 64 …. என்று பெருக்கு முறையில் நியூட்ரான்கள் பெருகும்.  அத்துடன் வெப்பசக்தி விரைவில் பெருகி, கதிரியக்கக் கழிவுகளும் மிகும். அதாவது நியூட்ரான்களின் எண்ணிக்கை வெப்பசக்தி பெருக்கத்துக்கு அளவு கோலாகிறது.  உருவாகும் நியூட்ரான்கள் சில தப்பி ஓடும். சில கனநீரிலும், கவச உலோகத்திலும் விழுங்கப்படும்.  அத்துடன் அணு உலை நியூட்ரான்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த காட்பியம் கோல்களும் [Cadmium Rods] விழுங்கிக் கோல்களும், [Absorber Rods], உலை நிறுத்தக் கோள்களும் [Shutdown Rods] பயன்படுத்தப் படுகின்றன.

    அணுப்பிளவுத் தொடரியக்கம் [Nuclear Fission Chain Reaction] பூரணத்தொடரி யக்கத்தில் [Criticality]  துவங்குகிறது.  அதாவது அணு உலைத் தொட்டியில் முதலில் தோன்றும் நியூட்ரான்களும், பிளவு செய்யும் நியூட்ரான்களும் சமாக இருக்கும்படி செய்வது.

    அடுத்தது மீறும் தொடரியக்கம் [Super Critical]. உருவாகும் நியூட்ரான்கள் எண்ணிக்கை, பயன்பாட்டு எண்ணிக்கை விட அதிகமாகி வெப்ப சக்தி  மிகுதி ஆவது.  அதுபோல் உருவாகும் நியூட்ரான்கள் குறைந்தால் ஆறும் தொடரியக்கம் [Sub Critical Reaction] வெப்பசக்தி குன்றச் செய்யும்.

    அணு உலையில் உருவாகும் பெரும்பான்மை நியூட்ரான்கள் விழுங்கப் பட்டால் உலை நின்று விடும். [Reactor Shutdown]

    image.png

    தற்போது இந்தியாவில் 23 அணுமின் நிலையங்கள் 6780 MWe உற்பத்தி செய்து வருகின்றன. இந்தியாவின் குறிக்கோள் 2031 ஆண்டுக்குள் 22,480 MWe தகுதியுள்ள அணுமின் நிலையங்கள் கட்ட வேண்டும் என்பதே. அவற்றுள் 12 நிலையங்கள் 700 MWe திறம் கொண்டவையாக இருக்கும். ஒரு 700 MWe யூனிட் கட்ட சுமார் 10 ஆண்டுகள் எடுக்கும். இரட்டை யூனிட் கட்ட நிதிச் செலவு சுமார் 11,500 கோடி ரூபாய். யூனிட் விலை வீதம் : 2.80 ரூ /kwh [2010 நாணய மதிப்பு] அணுமின் நிலையம் விலை : ரூ 8 கோடி/ MWe [2010 .நாணய மதிப்பு.].

    Base Load Power Plant

    Base Load - Load Follow - Peak Load

    Base Load vs Peak Load Power Plants

    Nuclear power plants may take many hours, if not days, to startup or to change their power output. Modern power plants can and do operate as load following power plants and alter their output to meet varying demands. But base load operation is the most economical and technically simple mode of operation. It is primarily due to the fact, they require a long period of time to heat up the nuclear steam supply system and the turbine-generator to operating temperature. From this point of view power plant generally are divided into two basic categories:

    • Base Load Power Plant
    • Load Following Power Plant

    Base Load Power Plant

    Electricity Generation by Source

    In general, nuclear power plants (NPPs) have been considered as base load sources of electricity as they rely on a technology with low variable costs and high fixed costs. This is the most economical and technically simple mode of operation. In this mode, power changes are limited to frequency regulation for grid stability purposes and shutdowns for safety purposes. Different plants and technologies may have differing capacities to power changes on demand.  Base load power plants are generally run at close to maximum output (100% of rated power) continuously (apart from maintenance, refueling outages). During refueling, every 12 to 18 months, some of the fuel – usually one third or one quarter of the core – is replaced by a fresh fuel assemblies. After refueling the reactor is usually started up and operated again at nominal power.

    Although most of nuclear power plants were designed as base load power plants, today, the utilities have had to implement or to improve the manoeuvrability capabilities of their NPPs in order to be able to adapt electricity supply to daily, seasonal or other variations in power demand. It is due to the share of nuclear power in the national electricity mix of some countries has become large, and due to the significant increase renewable energy sources. References:

    1. https://www.npcil.nic.in/writereaddata/CMS/202212140133183171845KAPP_3_4_english.pdf
    2. https://www.npcil.nic.in/writereaddata/CMS/202212140136279797374RAPP_7_8_english.pdf

    தகவல் :

    1. https://indianexpress.com/article/explained/kakrapar-atomic-power-project-third-unit-achieves-first-criticality-india-nuclear-mission-6518946/

    Share
  • மந்தி(ரி) மனம் (சிறுகதை)

    மந்தி(ரி) மனம் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த மிஸ்.கமலாம்பாளின் கவனம் தடைப்பட்டது.  அந்த மூன்று மாணவர்களும் எழுந்து வெளியே நடையைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். தங்களை யார் என்ன செய்துவிட முடியும் என்ற மிதப்பு அவர்கள் நடையில் தெளிவாகத் தெரிந்தது.

    தன் கையாலாகாத்தனத்தை நொந்துகொண்டு, எதுவும் நடக்காததுபோல் பாடத்தைத் தொடர்வதா என்ற குழப்பம் ஏற்பட்டது ஆசிரியைக்கு. விதிமுறைகளை மீறுவதற்கேபோல் பள்ளிக்கு வருகிறவர்களை என்ன செய்வது?

    முதல்முறை, இப்படித்தான் உல்லாசமாகச் சுற்றிவிட்டு அரைமணிக்குப்பின் வகுப்பினுள் நுழைந்தார்கள், வாயை மென்றபடி.

    அவர்களின் தலைவன் யார் என்பதில் அவளுக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. கணேஷை முறைத்தபடி கேட்டாள்: “பாடம் நடந்துக்கிட்டிருந்தபோது எங்கே போனீங்க?”

    “பாடம் போர்! அதுதான் என் பைக்கை எடுத்துக்கிட்டு வெளியே போனேன். நூடுல்ஸ் சாப்பிட்டோம்”. திமிருடன் வந்தது பதில். பள்ளிக் காண்டீனில் கண்ட நேரத்தில் உணவு விற்கமாட்டார்கள்.

    ஆசிரியைக்கு வாயடைத்துப்போயிற்று.

    பையனின் அப்பா பேரம்பலத்திற்குப் புகார் போக, “சின்ன வயசில ஃப்ரெண்டஸோட சுத்தறதுதானே ஜாலி! நானும் அந்த வயசில அப்படித்தான் இருந்தேன்,” என்று தலைமை ஆசிரியரிடம் சிரித்தபடி கூறினார்.

    `சிறு வயதில் எப்படி இருந்திருந்தால் என்ன, இப்போது உங்களையெல்லாம்விட மேலான நிலைக்கு வந்துவிடவில்லையா?’ என்று கேலியாகக் கூறியதுபோலிருந்தது.

    “இதையெல்லாம் பெரிசு படுத்தாதீங்க!” என்றபடி ஐயாயிரத்திற்கு ஒரு செக்கும் கொடுத்தார் அந்தப் பெரிய மனிதர்.

    மகனுக்காக நேரத்தைச் செலவழிப்பதைவிட பணம் கொடுத்துச் சமாளிப்பது எளிதாக இருந்தது அவருக்கு. அத்துடன், தான் சிறுவயதில் அனுபவிக்காததையெல்லாம் மகனுக்குக் கொடுத்துவிடுவதுதானே அன்பு!

    படகுபோன்ற காரில் அந்த மந்திரி, பாடம் கற்பிக்கும் ஆசிரியையோ கணவனுடன் பைக்கில் தொத்திக்கொண்டு வரும் நிலை. மாணவர்கள் அவர்களை மதிக்காததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று பட்டது தலைமை ஆசிரியருக்கு.

    ஆசிரியர்களின் பொதுக்கூட்டத்தில், “இந்தப் பணக்கார வீட்டுப் பையன்களை நம்பளாலே ஒண்ணும் செய்யமுடியாது. மாசம் பிறந்தா நமக்குச் சம்பளம் வந்துடுதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்!” என்று அந்த விஷயத்தை அத்துடன் முடித்தார். கிடைத்த ஐயாயிரத்தில் ஒன்றை மட்டும், `பார்ட்டி’ என்று கணக்குக் காட்டிச் செலவழித்துவிட்டு, மீதியைத் தன் கணக்கில் வைத்துக்கொண்டவர் அதன்பின் பையனிடம் அருமையாக நடந்துகொள்ளத் தீர்மானித்தார்.

    அவனுடைய சேட்டைகள் தொடர்ந்தன.

    ஆண்டு முடிவில் பள்ளியிலிருந்து விலகும்போது, கணேஷ் இளித்தபடி ஆசிரியையிடம் வந்தான்.

    “தாங்க்ஸ், டீச்சர்!”

    அந்தச் சிரிப்பு `இனி உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது!’ என்று கேலி செய்வதுபோல் இருந்தது.

    அவளால் சும்மா இருக்க முடியவில்லை. “வயசுக் கோளாறால பிள்ளை தப்பு செய்தா, வீட்டில பெரியவங்க கண்டிக்கணும். ஒனக்கு நல்லது செய்யறதா நினைச்சுக்கிட்டு ஒங்கப்பா ஒன்னை ஒன் மனம் போனபோக்கில விட்டிருக்கார். இது எங்க போய் முடியப் போகுதோ!” என்று அங்கலாய்த்தாள்.

    “என்னடா சொன்னாங்க?” என்று கேட்ட நண்பர்களிடம், “பாடம் நடத்தினோமா, சம்பளம் வாங்கினோமான்னு போய்க்கிட்டே இருக்கணும். அதை விட்டுட்டு லெக்சர் அடிக்குது கிழவி!” என்றான் ஆத்திரத்துடன்.

    கணேஷ் வளர்ந்தான். கூடவே, தீய பழக்கங்களும், கூடாத சேர்க்கையும்தான்.

    வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருந்த மகனைப் பார்த்து மெள்ள, “ஏதாவது வேலை தேடிக்கயேன்!” என்றார் பேரம்பலம். அவரைவிடக் கிட்டத்தட்ட ஓரடி உயரமாக வளர்ந்திருந்தவனிடம் அதிகாரத் தொனியில் பேசவே பயமாக இருந்தது.

    போதாத குறைக்கு, அவருடைய நீண்டகால பதவி வேறு ஆட்டம் கண்டிருந்தது.

    அவர் பக்கம் திரும்பாது, “எதுக்கு? அதுதான் நீங்க நிறைய பணங்காசு சேத்து வெச்சிருக்கீங்களே, ஏதேதோ தில்லுமுல்லு பண்ணி! அதையெல்லாம் செலவழிக்கவே எனக்கு நேரம் பத்தாது,” என்று அவருடைய கரிசனத்தை அலட்சியப்படுத்திவிட்டு, கார் சாவியைச் சுழற்றியபடி வெளியே நடந்தான்.

    “இந்த ராத்திரி வேளையில எங்கேப்பா போறே?” என்று அவர் ஈனஸ்வரத்தில் கேட்டதை அவன் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.

    `நல்லவேளை, நான் இந்த மனுசனுக்குப் பொண்ணா பிறக்கலே. வீட்டிலேயே வெச்சு பூட்டியிருப்பார்!’ என்று நினைத்துக்கொண்டான்.

    மறுநாள் காலை போன் அடித்தது.

    “யாருடா இந்த வேளையிலே, என் தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு!’ என்று திட்டியபடி அருகிலிருந்த மேசையைத் தடவினார் பேரம்பலம்.

    அளவுக்கு மீறி குடித்து, போதையிலிருந்த மகனால் ஏற்பட்ட விபத்து! மழைக்காக பைக்குடன் மேம்பாலத்தின் அடியில் ஒதுங்கியிருந்த நான்குபேர்மேல் அவன் காரை ஏற்ற, மூவர் தலத்திலேயே மாண்டிருந்தனர். இன்னொரு ஏழைத் தொழிலாளி உயிருக்காக மன்றாடிக்கொண்டிருந்தார்.

    அந்த நிலையிலும் ஒன்று மட்டும் புரிந்தது அந்த அரசியல்வாதிக்கு. கட்சியிலும், மக்களிடையேயும் தன் மதிப்பு அதிகரிக்க இதைவிட வேறு நல்ல தருணம் கிடைக்காது!

    நடந்ததை மறைக்கமுடியாது போலிருக்கிறதே, அடுத்து என்ன செய்வது என்று அவரிடமே காவல்துறை மேலதிகாரி கேட்க, “என் மகன்னு பாக்காதீங்க. மத்தவங்களுக்கு என்ன தண்டனையோ அதுவே இவனுக்கும் கிடைக்கட்டும்!” என்றபோது, தன் நாணயத்தில் சற்று பெருமைகூட உண்டாயிற்று. தன் பதவி நிலைத்திருக்க வழி செய்துவிட்டோம்!

    “எங்கப்பா யார் தெரியுமா?” என்று சிறைச்சாலையில் சவால் விட்டபடி இருந்தவனுக்கு அந்த மந்திரியின் மனம் புரியத்தான் இல்லை. அவருடைய வருகையை எதிர்பார்த்து – அவர் வருவார், மகன் செய்தது தவறே இல்லை என்று பக்கபலம் அளிப்பார் என்று – காத்திருக்கிறான், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக.

    Share
  • கிளி தூங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா?

    கிளி தூங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா?

    கிளி தூங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? நம்ம வீட்டு மாமரத்தில் இளைப்பாறும் கிளி, சற்றே கண்ணயரும் காட்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என்ன கவி பாடினாலும்

    என்ன கவி பாடினாலும்

    மதுரை சோமு பாடிப் புகழ்பெற்ற ‘என்ன கவி பாடினாலும்’ என்ற உருக்கமான பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குயில் மூச்சுவிடுவது இப்படித்தான்

    குயில் மூச்சுவிடுவது இப்படித்தான்

    குயிலின் கழுத்துப் பகுதி ஏறி ஏறி இறங்குவது ஏன்? இப்படித்தான் அது மூச்சு விடுகிறது. இளைப்பாறும் பெண்குயிலின் எழிற்கோலம் காணுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கலைஞர் கருணாநிதியின் நகைச்சுவை

    கலைஞர் கருணாநிதியின் நகைச்சுவை

    கலைஞரின் நகைச்சுவை எத்தகையது? குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தின் 30ஆம் ஆண்டு விழாவில், மாசிலாமணி விவரிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(454)

    குறளின் கதிர்களாய்…(454)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(454)

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
    வெல்லுஞ் சொலின்மை யறிந்து.

    – திருக்குறள் – 6435 (சொல்வன்மை)

    புதுக் கவிதையில்…

    நாடாளும் மன்னனுக்கு
    நலமுரைக்கும் அமைச்சன்
    கேடு வரா வகையில்
    நற்சொல் பேசிடவேண்டும்..

    பேசும் சொல்லை மிஞ்சும்
    பெருஞ்சிறப்பு உள்ள
    பிறசொல் இல்லையெனும்
    பெருமையறிந்து பேசுவோன்தான்
    சொல்வன்மை மிக்க அமைச்சனே…!

    குறும்பாவில்…

    சொல்லும் சொல்லை மிஞ்சிடச்
    சொல்வேறு இல்லை என்பதறிந்ததை அரசனிடம்
    சொல்பவனே சொல்வல்லமையுள அமைச்சன்…!

    மரபுக் கவிதையில்…

    நாட்டை யாளும் மன்னனுக்கு
    நலம துரைக்கும் நல்லமைச்சன்
    கேட்டைத் தாரா வகையினிலே
    கிட்டும் நற்சொல் லுரைக்கையிலே,
    காட்டும் சொல்லை மிஞ்சிடவே
    கணக்காய்ப் பிறசொல் இல்லையெனும்
    கோட்பா டறிந்த சொல்வலனைக்
    கொள்வாய் நல்ல அமைச்சனென்றே…!

    லிமரைக்கூ…

    கேட்டைத் தராத சொல்லை
    மிஞ்சிடச் சொல்வேறிலை என்றறிந்து மன்னனிடம்
    சொல்வதே அமைச்சனின் எல்லை…!

    கிராமிய பாணியில்…

    மந்திரி மந்திரி
    நல்ல மந்திரி,
    நல்லசொல்ல ராசாவுக்குச்
    சொல்றவனே நல்ல மந்திரி..

    நாட்டுக்கு நல்லது செய்ய
    ராசாவுக்கு
    நல்லதாச் சொல்லுற மந்திரி,
    சொல்லுற சொல்லவெட
    ஒசந்த சொல்லு
    வேற இல்லங்கிறத நல்லா
    அறிஞ்சி சொன்னா
    அவந்தான் பேச்சித்தெறமவுள்ள
    நல்ல மந்திரி..

    தெரிஞ்சிக்கோ,
    மந்திரி மந்திரி
    நல்ல மந்திரி,
    நல்லசொல்ல ராசாவுக்குச்
    சொல்றவனே நல்ல மந்திரி…!

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 10

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 10

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


     

    Share
  • திக்குவாயை வெல்லலாம்

    திக்குவாயை வெல்லலாம்

    திக்குகள் எட்டும் எதிர்த்து நின்றாலும் திடமாக நின்றால், திக்குவாயை வெல்லலாம். தடைகளை வென்று சாதிக்கும் மூவரின் தடையற்ற பேச்சு, தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் ஒலித்தது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் – 49

    அண்ணாகண்ணன் யோசனைகள் – 49

    இந்தியா இதுவரை காணாத மிகப் பெரிய ரெயில் விபத்து. இத்தகைய துன்பியல் நிகழ்வு எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க என்ன செய்யலாம்? மோதிய முனைகளில் உடல் நசுங்கி, உறுப்புகள் துண்டாகி இறந்தவர்கள் ஒரு புறம் என்றால், மோதிய வேகத்தில் ரயில் சுவர்களில் மோதுண்டு இறந்தவர்களும் பலர் இருக்கக் கூடும். இங்கே தான் எனக்கு ஒரு யோசனை.

    மகிழுந்துகளில் இருப்பது போன்ற காற்றுப்பைகளைத் தொடர்வண்டிகளின் உள்சுவர்களிலும் கூரையிலும் ஒவ்வோர் இருக்கையின் முன்னும் பின்னும் உட்காரும் இடங்களிலும் வைக்கலாம். குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் சென்று மோதினால், உடனே இந்தக் காற்றுப் பைகள் விரியும்படி செய்ய வேண்டும். அப்போது பயணிகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்படாமல் காப்பாற்றலாம். குறைந்தபட்சம், உயிர்ப்பலியைப் பெருமளவில் குறைக்கலாம். இதனைப் பேருந்துகள், விமானங்கள் உள்பட இதர பயணிகள் வாகனங்களுக்கும் விரிவுபடுத்தலாம்.

    Share
  • வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

    வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

    வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன? வீட்டின் தரத்தைச் சோதிப்பது எப்படி? வீட்டின் மதிப்பை நிர்ணயிப்பது எப்படி? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நீயல்லால் தெய்வம் இல்லை

    நீயல்லால் தெய்வம் இல்லை

    சீர்காழி கோவிந்தராஜன் பாடிப் பெரும்புகழ் பெற்றது, ‘நீயல்லால் தெய்வம் இல்லை’. இந்த இனிய பாடலை வைகாசி விசாகமான இன்று, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

    ஏது பிழை செய்தாலும்

    ‘ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி, தீது புரியாத தெய்வமே’ என்ற பாடல், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் இயற்றியது. இந்தப் புகழ்பெற்ற பாடலை, வைகாசி விசாகமான இன்று, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உச்சி வெயிலில் ஒரு குயில்

    உச்சி வெயிலில் ஒரு குயில்

    இந்தக் கோணங்களில் குயிலை நீங்கள் கண்டதுண்டா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share