Today 25.04.2017 Sri Danvantri Arogya Peedam, Walajapet conducted Sri Ranganathar Jayanthi Special Pooja and Abhishekam for Sri Bala Ranganathar
Today 25.04.2017 Sri Danvantri Arogya Peedam, Walajapet conducted Sri Ranganathar Jayanthi Special Pooja and Abhishekam for Sri Bala Ranganathar
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 7- 4 – 2017, மகநாள், வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி
இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி
தலைவர்: பேராசிரியர் தி. இராசகோபாலன்
இறைவணக்கம்:திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி
மலர் வணக்கம் : திருமதி ராதா ஜானகிராமன்
கம்பன் அடிப்பொடி அஞ்சலி
வரவேற்புரை: திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரை: பேராசிரியர் ந. விஜயசுந்தரி
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் எழுதி வானதி பதிப்பகம் வெளியிடும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கைகேயி படைத்த கம்பன் வெளியீடு : திரு. நாஞ்சில் நாடன்
அமெரிக்கன் கல்லூரி மேனாள் துணை முதல்வரும், கணினித் துறை இயக்குநருமான முனைவர் ப. பாண்டியராஜா அவர்களுக்கு அவர்தம் கம்பராமாயணம் தொடரடைவு (www. tamilconcordance.in) பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும் காரைக்குடி தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர்தம் குடும்பத்தார் நிறுவியுள்ள கம்பன் அடிப்பொடி விருது வழங்கிப் பாராட்டு : சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன்
கம்பனின் இராம வண்ணம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் திரு. பி. ராஜாராம்
மாணக்கர்களுக்குப் பரிசளிப்பு: திருமதி வள்ளி முத்தையா
தலைமை உரை : பேராசிரியர் தி. இராசகோபாலன்
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 8 – 4 – 2017, பூர நாள், சனிக்கிழமை, மாலை 5.30 மணி
இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி
தனிப்பேருரை
கம்பனின் கருத்து வண்ணம்: சிந்தனைச் சிற்பி திரு. பழ. கருப்பையா
கவியரங்கம்
தலைவர்:கவிச்சுடர் கவிதைப் பித்தன்
தலைப்பு: கம்பனின் கவி வண்ணத்தில்
பொருள் கவிவாணர்
அன்பு திரு. அ.கி. வரதராஜன்
அறம் திரு கிருங்கை சேதுபதி
தோழமை திரு. தஞ்சை இனியன்
தொண்டு திரு. வீ.கே. கஸ்தூரிநாதன்
காதல் திரு. வீ.ம. இளங்கோவன்
வீரம் திரு வல்லம் தாஜ்பால்
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 9 – 4 – 2017, உத்தர நாள், ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி
இடம்: வள்ளல் அழகப்பர் அவர்தம் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் பாரம்பரியமான நூற்றாண்டு கடந்த செட்டிநாட்டு இல்லம் கோட்டையூர்
செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான உலகத் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் – தொடக்கவிழா
தலைமை: திரு. இராஜாமணி முத்துக்கணேசன்
வரவேற்புரை: திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரை: செட்டிநாட்டு இளவல் செட்டிநாடு குழும நிர்வாக இயக்குநர் திரு எம்.ஏ. எம் ஆர். முத்தையா
சிங்கப்பூர் கவிஞர் திரு. அ.கி. வரதராஜன் எழுதிய வானதி பதிப்பகம் வெளியீடான அரிய மாமனிதர் அழகப்பர்கவிதைநூல் வெளியீடு: கவிதாயினி வள்ளி முத்தையா
முதற்பிரதியினைப் பெற்றுத் தலைமைஉரை நமது செட்டிநாடு இதழ்ப் புரவலர் செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர் திரு. இராஜாமணி முத்துகணேசன்
ஏற்புரை: கவிஞர் திரு. அ.கி . வரதராஜன்
மையக் கருத்துரையும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ ஆய்வுக்கோவை வெளியீடும்திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன்
முதற்பிரதியினைப் பெற்று வாழ்த்துரை: திரு.அரு.வே. மாணிக்கவேலு
முற்பல் 11 மணி முதல் உணவு இடைவேளை வரை பேராளர்கள் ஐந்து அமர்வுகளாக வெவ்வேறு இடங்களில் தத்தம் கட்டுரைகளை அறிமுகப்படுத்திச் சுருக்கத்தினை மட்டும் வாசித்தளிப்பர்.
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 9 – 4 – 2017, உத்தர நாள், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3.00 மணி
இடம்: வள்ளல் அழகப்பர் அவர்தம் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் பாரம்பரியமான நூற்றாண்டு கடந்த செட்டிநாட்டு இல்லம் கோட்டையூர்
செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான உலகத் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் – நிறைவு விழா
இறைவணக்கம்
வரவேற்புரை பேராசிரியர்: மா. சிதம்பரம்
தலைமையுரையும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பரிசு வழங்குதலும்: தகைமிகு தஞ்சாவூர் மூத்த இளவரசர் திரு. பாபாஜி ராஜாசாகிப் போன்ஸ்லே
நிறைவுரை: கவிஞர் திரு. சொ. சொ. மீ. சுந்தரம்
நன்றியுரை: பேராசிரியர் செ. செந்தமிழ்ப்பாவை
(கருத்தரங்கிற்கு வரும் கட்டுரையாளர்களுக்கும், நோக்கர்களுக்கும் மதியஉணவு ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது)
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 9 – 4 – 2017, உத்திர நாள், ஞாயிற்றுக் கிழமை, மாலை 5.30 மணி
இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி
பட்டிமண்டபம்
நடுவர்: சொல் வேந்தர் திரு. சுகி.சிவம்
தலைப்பு: இராமனுக்கு மிகுதியும் இக்கட்டான சூழலை உண்டாக்கியவர் யார்?
கைகேயியே!
பேராசிரியர் து. ருக்மணி,
செல்வி நா. ஹேமலதா,
பேரா சுமதிஸ்ரீ
சுக்ரீவனே!
பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்,
திரு.த.க. தமிழ்பாரதன்,
பேரா. தமிழ்திருமால்
வீடணனே!
தமிழாகரர் பழ. முத்தப்பன்,
திரு. சு. சதீஸ்குமார்,
பேரா. மா.சிதம்பரம்
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 10 – 4 – 2017, அத்தத் திரு நாள், திங்கட் கிழமை, மாலை 5.00 மணி
இடம்: நாட்டரசன் கோட்டை, கம்பன் அருட்கோவில்
தலைவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
கம்பன் அருட்கோயில் வழிபாடு
மலர் வணக்கம் திரு. ஜி.எஸ். வி. பைரவ குருக்கள்
கம்பன் அருட்கவி ஐந்து
அமிர்தவர்ஷினி இசைப்பள்ளி ஆசிரிய மாணாக்கர்
இயக்கம்: திரு. த. வெற்றிச்செல்வன்
இறைவணக்கம்
வரவேற்புரை: திரு. கண. சுந்தர்
தலைவர் உரை: ‘‘கம்பனின் ஆற்றல் வண்ணம்’’ திரு. வி. யோகேஷ்குமார்
‘‘கம்பனின் பாத்திர வண்ணம்’’ திரு. இரா. மாது
நன்றியுரை: பேரா. மு.பழனியப்பன்
வாழிய செந்தமிழ்.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 24/02/2017 வெள்ளிக்கிழமை அன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்கள் பூஜையுடன் சிவ பஞ்சாட்சர ஹோமம் நடைபெற உள்ளது.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 320 ஜீவ சமாதிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சித்தர்களை தரிசித்து அப்புண்ணிய பூமியின் புனித ம்ருத்தியை கொண்டு 15 நாட்கள் ருத்ர ஹோமம் செய்து சிவ யந்திரத்துடன் 468 சித்தர்களை சிவலிங்க ரூபமாக பிரதிஷ்டை செய்து பிரதி அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் யாகங்கள், பூஜைகளை சிறப்பாக செய்து வருகிறார்.
மேலும் மரகதலிங்கம், வள்ளலார், மகா அவதார பாபா, சீரடி பாபா, ஸ்ரீ ராகவேந்திரர், ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், புத்தர், குருநானக், குழந்தையானந்தா சுவாமிகள், ஸ்ரீ வீரபிரம்மேந்திரர், சேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்களையும் பிரதிஷ்டை செய்து சித்தர் முறையில் பூஜித்து வருகிறார்.
வருகிற மஹா சிவராத்திரி 24.02.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் உலக மக்கள் நலன் பெறவும் இயற்கை வளம் பெறவும் சிவ பஞ்சாட்சர ஹோமமும், ருத்ராபிஷேகமும், ருத்ர பாராயணமும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு விவாஹ பிராப்தம், சந்தான பாக்கியம், நல்ல நட்புகள், வறுமை நீங்கி வளமை, குரல் வளம், இனிய சரீரம், நல்விளைச்சல், தொழில், வணிகம், வியாபாரம் பெருகும் மற்றும் பலவிதமான சாபங்களும் தோஷங்களும் அகலும். இது மோட்சம் கிடைக்க வழிவகை செய்யும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
KALARI HERITAGE&CHARITABLE TRUST நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா-2017
தங்கள் வரவு நல்வரவாகுக
மு. ஹரிகிருஷ்ணன்,
ஆசிரியர் -மணல்வீடு.
புரவலர் எம்.எ.ஏம். ஆர் முத்தையா (எ) ஐயப்பன்
அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக டிசம்பர் மாதத் திருவிழா 10.12.2016 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணாக கல்யாண மண்டபத்தில் நிகழ்கின்றது.
கம்பன் கழகக் கொடைஞரான ஆலை அரசர் தனித்தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட ~தமிழ்நாடு| இதழைத்தொடங்கி அதன்ஆசிரியராகவும் விளங்கி அரும்பணி ஆற்றிய கலைத்தந்தை கருமுத்து தியாகராசனார் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூல் இவ்விழாவில் அறிமுகம் செய்யப் பெறுகிறது. (இந்நூலைத n;தாகுத்தவர் கருமுத்து தியாகராசனாரின் பெயரர் ஹரிதியாகராசன் ;ஆவார். இதனை வானதிப்பதிகப்பகம் வெளியிட்டுள்ளது.)
அனைவரும் வருக.
நிகழ் நிரல்
இறைவணக்கம் – திருமிகு கவிதா மணிகண்டன் அவர்கள்
வரவேற்புரை திரு. கம்பன் அடிசூடி அவர்கள்
நூல்வெளியீடும் த்லைi;மயுரையும்- தஞ்சாவூர் மூத்த இளவரசர் தகைமிகு
எஸ். பாபாஜி ராஜாசாகேப் போன்ஸ்லே சத்ரபதி அவர்கள்
சிறப்புரை
திருமிகு இளம்பிறை மணிமாறன்அவர்கள்
ஏற்புரை திரு. ஹரி தியாகராசன் அவர்கள்
நன்றியுரை பேரா மு,பழனியப்பன்
கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நன்றி
அரு.வே. மாணிக்கவேலு சரசுவதி அறக்கட்டளை அன்னைமெடிக்கல்ஸ், பொன்னமராவதி
நமது செட்டிநாடு இதழ்
திரு ரவி அப்பாசாமி நிர்வாக இயக்குநர், அப்பாசுவாமி ரியல் எஸ்டேட்ஸ்
தி.நகர் சென்னை
நவரத்தினம் அல்லமதேவன்
அவுஸ்திரேலியா மெல்பேண் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் வானமுதம் தமிழ் வானொலி ஒலிபரப்புச் சேவையின் பத்தாவது ஆண்டு நிறைவினையொட்டி உலகளாவியரீதியில் சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடாத்தியிருந்தது..
எமக்குக் கிடைத்த சகல தரமான ஆக்கங்கள் அனைத்தையும் நடுவர்கள் யாவரும் மிகவும் கவனத்தில் எடுத்துப் பரிசீலித்ததின் பிரகாரம் முதல் மூன்று பரிசுக்குரிய ஆக்கங்கள் யாவும் தரம் பிரித்துள்ளோம். அதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட ஆக்கங்கள் மற்றும் அவற்றிற்குரிய படைப்பாளிகளின் விபரங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.
நவரத்தினம் அல்லமதேவன்.
போட்டி ஒருங்கிணைப்பாளர். +61 413 528 342
வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை..
மெல்பேண். அவுஸ்திரேலியா.
அவுஸ்திரேலியா மெல்பேண் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் வானமுதம் தமிழ் வானொலி உலகளாவியரீதியில் நடாத்திய கவிதைப் போட்டி – 2016
” உலக மொழியாக உயர்ந்த தமிழ் “ – கவிதை முதலாவது பரிசு பெறுபவர் ஏ.எம்.முகைதீன் (மூதூர் முகைதீன்) மூதூர். இலங்கை.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ் சென்ற திரு.பிரான்சிஸ் அன்ரனிப்பிள்ளை அவர்களின் நினைவாக அவருடைய மகன் திரு.ஜெயேந்திரா அன்ரனிப்பிள்ளை அவர்கள் வழங்கிய $150 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றது.
” செந்தமிழ் மொழியின் சிறப்பினைப் போற்றுவோம் ” – கவிதை இரண்டாவது பரிசு பெறுபவர் முஹம்மது ஹனிபா ஆதம்பாவா. சம்மாந்துறை. இலங்கை.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி முன்னாள் ஆசிரியரும், கலைஞரும், பௌராணிகரும், பண்டிதரும், கவிஞருமான காலஞ் சென்ற திரு.கதிரேசர்பிள்ளை அவர்களது 25 வது ஆண்டு நினைவாக அவரது பேர்த்தி திருமதி.கமலப்பிரியா கோகுலபாலன் அவர்கள் வழங்கிய $100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றது.
“தாயகங்களில் தமிழ் நிலைக்குமா” – கவிதை மூன்றாவது பரிசு பெறுபவர்கள் இருவர் திரு.சோ.இராசேந்திரம் (தாமரைத் தீவான்). திருகோணமலை. இலங்கை. நெருப்பலைப்பாவலர் இராம. இளங்கோவன். பெங்களூர். இந்தியா.
மெல்பேண் மணி என்ற புனை பெயரில் ஆக்கங்களைப் படைத்து வரும் படைப்பாளி எழுத்தாளர், கவிஞர், யாழ்ப்பாணம் கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியர் திருமதி கனகமணி அம்பலவாணர்பிள்ளை அவர்கள் வழங்கிய $50 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியா மெல்பேண் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் வானமுதம் தமிழ் வானொலி உலகளாவியரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டி – 2016
முதலாம் பரிசு பெறும் சிறுகதை “ இவர்கள் காத்திருக்கிறார்கள் ” முதலாம் பரிசு பெறுபவர் கனஹா கந்தசாமி ( புனைபெயர் சணா.கார்த்திஹா ) புசல்லாவ இலங்கை
யாழ்ப்பாணம் உரும்பராய் இந்துக் கல்லூரி முன்னாள் கனிஷ்ட அதிபரும், பண்டிதர், வித்துவான், சைவப்புலவருமான காலஞ் சென்ற சிவஸ்ரீ.இ.நவரத்தினக்குருக்கள் அவர்களது நினைவாக மகன் அல்லமதேவன் அவர்கள் வழங்கிய $200 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றது.
இரண்டாம் பரிசு இரண்டு சிறுகதைகள் பெறுகின்றன. “ஒரு மொட்டுக் கருகிவிட்டது” என்ற சிறுகதையினை எழுதியவர் திருமதி.அனுராதா பாக்கியராஜா. களுவாஞ்சிக்குடி. இலங்கை.
“கடேசி பெஞ்சும் கனவுகளும்” என்ற சிறுகதையினை எழுதியவர் சோ.சுப்புராஜ் திருமுல்லைவாயில். சென்னை. தமிழ் நாடு.
இந்தியா.
திருகோணமலையைச் சேர்ந்த காலஞ் சென்ற திருமதி.பவாநிதி ஸ்ரீரஞ்சிதன் அவர்களது மூன்றாம் ஆண்டு நினைவாக அவரது மைத்துனன் திரு.ஸ்ரீரஞ்சன் ஸ்ரீரங்கநாதன் அவர்கள் வழங்கிய $150 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த இறைபதமடைந்தவர்களான திரு.மரியாம்பிள்ளை மனுவேற்பிள்ளை, ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை திருமதி.அன்னம்மா மனுவேற்பிள்ளை ஆகியோர் நினைவாக அவர்களுடைய புதல்வர்கள் அன்ரன் றொபேர்ட் மற்றும் அன்ரன் நியூட்டன் ஆகியோர் வழங்கிய $150 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசாக வழங்கப்படுகின்றது.
மூன்றாம் பரிசினைப் பெறுகின்ற சிறுகதை “முப்பத்தொன்பது வயதுடைய வெங்கடேசனும் அவனது மூக்குச் சளியும்” மூன்றாவது பரிசு பெறுபவர் ஏ.பிரேம் ஆனந்த் ( புனை பெயர் குறிஞ்சி மைந்தன் ) டெல்லி. இந்தியா.
கிளிநொச்சி கரடிப்போக்கு விஞ்ஞானக் கல்வி நிலைய முன்னாள் அதிபர், ஆசிரியர், சைவப்புலவர், பண்டிதர் அமரர் தமிழ் ஐயா வே.மகாலிங்கம் அவர்களின் நினைவாக விஞ்ஞானக் கல்வி நிலைய இயக்குனரும், ஆசிரிய குடும்பமும், பழைய மாணவர்களும் இணைந்து வழங்கும் பரிசாக திரு.எட்வேட் பிலிப் மரியதாசன் வழங்கிய $100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றது.
ரியாத் தமிழ்ச் சங்கம்
***முக்கிய அறிவிப்பு***
ரியாத் தமிழ்ச் சங்கம் அறிவித்திருந்த, கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டியின் கால அளவு நாளையுடன் முடிவடைய உள்ள சூழலில், குறிப்பிட்ட அந்த மடல் முகவரி கெடுமதியோரால் (Hacking) கடத்தப்பட்டுள்ளதை, தற்போது அறிய வந்ததை, ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.
மீட்டெடுக்க முயன்றும் இயலா நிலை. எனினும் விரைந்து செயற்பட்டு புதிய மின்னஞ்சலை உருவாக்கியுள்ளோம்.
rtskp2016@gmail.com
இக்கட்டான இச்சூழலில் எங்களின் மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொள்ளும்படியும், மீண்டும் ஒருமுறை (ஏற்கனவே அனுப்பியிருந்தாலும்) போட்டிக்கான உங்கள் கவிதைகளை இப்புதிய மின்னஞ்சல் rtskp2016@gmail.comக்கு அனுப்பித் தருமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்நிலையில் தவிர்க்க இயலாமல் போட்டிக்கான கால அளவு டிசம்பர் 31, 2016 இந்திய நேரம் 23:59 வரை நீட்டிக்கப்படுகிறது.
இச்சிரமங்களுக்கும், இதன் பொருட்டு ஏற்படும் காலத் தாழ்வுக்கும் எங்கள் வருத்தங்களைப் பதியும் அதே வேளை, தொடரும் உங்கள் ஆர்வத்திற்கும், புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி பலவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
போட்டி குறித்த விவரங்கள், விதிகளை அறிய
https://m.facebook.com/story.php?story_fbid=10209656479109367&id=1250956727
நன்றி
ரியாத் தமிழ்ச்சங்கம்.
Sheik Mohamed Fakhrudeen Ibnu Hamdun Muthusamy Vetrivel
சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தன்வந்திரி ஜெயந்தியின் சிறப்பு,
ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவேந் திரன் தனது செல்வங்களை இழந்தான். மீண்டும் அவற்றைப் பெற, திருமாலின் அறிவுரைக்கேற்ப அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. அதை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்திக் கொண்டு நீல கண்டனானார். தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனித மான பொருட்கள் வந்தன. பாற்கடலிலிருந்து கடைசி யில் திருமாலே தன்வந்திரி யாக அம்ருத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டார். தேவேந்திரன் சாவா மருந் தான அமிர்தத்தையும் தான் இழந்த பிற பொருட் களையும் பெற்று தேவலோகம் சென்றான். திருமால் மக்களுக்கு மருத்துவராகத் தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும். நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் கீழுள்ள சுலோகத் தைக் கூறி வழிபடலாம். இதை 16 முறைக்குக் குறையாமல் கூறினால் நல்ல பலன்கள் கிட்டும்,
ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய
சர்வ ரோக நிவாரணாயத்ரைலோக்ய பதயே
த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்த.
உலக நலன் கருதி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில்காலை 10.00 மணிக்கு கோ பூஜையுடன் மூலவர் தன்வந்திரிக்கு பால் தயிர்,மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிருதம்,நெல்லிக்காய் பொடி, கரும்புசாறு, இவற்றுடன் 108 மூலிகை திரவியங்களை கொண்டு பிரத்தியோகமாக தயாரித்த மூலிகைப்பொடிகளினால் மஹா திருமஞ்சனமும், தன்வந்திரி ஹோமமும் நடைபெற்றது

தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ மையத்தின் சார்பாக இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை திருமதி.நிர்மலா முரளிதரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தன்வந்திரி மந்திரம் ஜபம் செய்தனர்.வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு S.A. ராமன் அவர்கள் துவக்கி வைத்து ஆயுர்வேத மருத்துவத்தின் மகிமையை சிறப்புரையாற்றினார். இம் மருத்துவ முகாமில் சிறப்பு விருந்தினராக மகாலட்சுமி காலேஜ் நிர்வாகி டாக்டர் திரு.பாலாஜி அவர்களும் மற்றும் R.I.T. கல்லூரி சேர்மன் திரு. போஸ் அவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு இடங்களிலிருந்து வருகை புரிந்த ஆயுர்வேத மருத்துவர்கள் ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பை எடுத்துறைத்தனர் ,.இம் மருத்துவ முகாம் தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ மையத்தின் R.M.O. டாக்டர்.திருமதி. மீரா சுனில்குமார் தலைமையில் நடைபெற்றது ,. .இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று இலவச மருத்துவ ஆலோசனை பெற்று இலவசமாக மருந்து மாத்திரைகளை பெற்று பயன் பெற்றனர்.
இந்த முகாம் நாளையும் நாளை மறுநாளும் காலை 10.00 மணிமுதல் நண்பகல் 2.00 மணிவரை நடைபெறுகிறது. என்று தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சென்னை. செப்.18. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷூக்கு
குவைத் நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள்
சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் கவிஞர் மு.முருகேஷ்.
கடந்த முப்பதாண்டு காலமாக தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்.
இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள், 6 கட்டுரை நூல்கள்,
6 தொகுப்பு நூல்கள், ஒரு சிறுகதை நூல், 100–க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் மகாகவி பாரதி எழுதிய சிறு கட்டுரை மூலமாக
தமிழில் 1916-ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்த ஹைக்கூ கவிதைகளைத் தமிழ் வாசகர் மத்தியில் பரவலாக கொண்டு சென்றதிலும், இளைய தமிழ்க் கவிஞர்களை ஒரு இயக்கம் போல் ஒருங்கிணைத்து, தமிழகம் முழுவதிலும் ஹைக்கூ கவிதைத் திருவிழாக்களை நடத்தியதில் முன்னோடியானவர் கவிஞர் மு.முருகேஷ். ‘இனிய ஹைக்கூ’ எனும் கவிதை இதழைத் தொடங்கி, எண்ணற்ற கவிஞர்களை அறிமுகம் செய்தவர்.
2009-ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற உலக ஹைக்கூ கிளப் மாநாட்டில்
தமிழகப் பிரதிநிதியாக பங்கேற்றவர். அம்மாநாட்டில் நடைபெற்ற உலகு தழுவிய
பன்மொழிக் கவிதைப்போட்டியில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுள்ளார். இவரது ஹைக்கூ கவிதைகள் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் மற்றும் உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ‘நிலா முத்தம்’ எனும்பெயரில் தனிநூலாகவே மலையாளத்தில் வெளியாகியுள்ளது.
இவரது ஹைக்கூ கவிதைகள் பல்கலைக் கழகப் பாடத்திட்டதில் இடம்பெற்றுள்ளன.
இதுவரை இவரது ஹைக்கூ கவிதைகளை 6 மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்விற்கும், இரு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்விற்கும் எடுத்துக்கொண்டு உள்ளனர்.
குவைத் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வளைகுடா வானம்பாடி
கவிஞர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா வெற்றித் தமிழ் விழா கடந்த செப்.16 அன்று
குவைத்திலுள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ் ஹைக்கூ கவிதையில் தொடர்ந்து கால்நூற்றாண்டுகளாக
செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேஷைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில்,
‘குறுங்கவிச் செல்வன்’ எனும் விருதினை இந்திய-குவைத் தூதர் சுனில் ஜெயின் வழங்கினார்.
விழாவில், மலேசியன் – குவைத் தூதர்அகமது ரோசியன் அப்துல்கனி, குவைத் நேஷனல் நூலக பொது மேலாளர் காமல் அல்-அப்துல் ஜலீல், வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்க நிறுவனர் செம்பொன்மாரி கா.சேது, திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கவிஞர் அ.வெண்ணிலா, கிராமிய பாடகர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படக்குறிப்பு:
குவைத் நாட்டில் நடைபெற்ற வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா
வெற்றித் தமிழ் விழாவில் தமிழகத்து கவிஞர் மு.முருகேஷூக்கு ‘குறுங்கவிச் செல்வன்’ எனும்
விருதினை இந்திய-குவைத் தூதர் சுனில் ஜெயின் வழங்கியபோது எடுத்த படம்.
அருகில், மலேசியன் – குவைத் தூதர்அகமது ரோசியன் அப்துல்கனி மற்றும்
கவிஞர் அ.வெண்ணிலா உள்ளனர்.
Attachments area
அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 15-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் ஆய்வரங்கம், மக்கள் அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கம் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் மாநாடு நடைபெற உள்ளது.
கண்காட்சி அரங்கம்
15 வது உலகத்தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டவுள்ளது. அது மாநாடு நடக்கவுள்ள செப்டம்பர் 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களும் நீடிக்கும். கண்காட்சியில் 20,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் கணிமை சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த எல்லா நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்றுப பயன்பெறலாம். தென் தமிழகத்தில் உங்கள் தொழில் வாய்ப்புகளை பெருக்க இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
Fees per stall Rs.5000/- உத்தமம் உறுப்பினர்களுக்கு
Fees per stall Rs.7000/- உத்தமம் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு
மேலும் விபரங்களுக்கு
இந்த உலகத்தமிழ் இணைய மாநாடு உங்கள் தயாரிப்புகளை உலகமெங்கும் அறிமுகப்படுத்திட இது ஒரு சரியான வாய்ப்பு. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்!
நன்றி!
என்றும் அன்புடன்
செல்வமுரளி
ed@infitt.org
Selva.Murali |
Mobile : +91-99430-94945
Mail ID :- murali@visualmediatech.com
பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன்
உணர்வுகளை மலரச் செய்யும் கவிதை உங்களுக்குக் கைவரக் கூடியதா?
ஒரு காட்சியை, ஓர் அனுபவத்தை, ஒரு திரைப்படத்தை, ஓர் அற்புதத்தை உங்களால் உணர்வுபூர்வமாகவும் பார்க்க இயலுமா?
மலர்களின் மகரந்தப் புன்னகையை, மழலையரின் பேதமற்ற உலகை, காதலின் யெளவனத்தை, பால்திரியா பொதுமையின் இலக்கணத்தை, இனம் பிரியா மானுட இலட்சணத்தை, பேதங்களின் அவலட்சணத்தை, உரிமைக்குரல்களின் முழக்கத்தை, நியாயத்தின் தர்மாவேசத்தை மொழிபெயர்க்க அறிந்தவரா நீங்கள்?
அப்படியானால் இந்தப் போட்டி உங்களுக்குத் தான்..
ரியாத் தமிழ்ச்சங்கம் – எழுத்துக்கூடம் சார்பில் கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி – 2016 நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் வெல்வோருக்குக் கீழ்க்காணும் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.
முதல் பரிசு – 10,000 இந்திய உரூபாய்கள்
இரண்டாம் பரிசு – 5000 இந்திய உரூபாய்கள்
மூன்றாம் பரிசுகள் (இருவருக்கு) – தலா 2500 இந்திய உரூபாய்கள்
உலகின் எந்த மூலையிலிருந்தும் தமிழர்கள் பங்கேற்கும் அரிய சந்தர்ப்பம்.
சிந்தனைச் சிறகை விரியுங்கள் – சிறந்த கவிதையை வடியுங்கள் – சிறப்பான பரிசுகளை வெல்லுங்கள் – கலந்து கொள்வதற்கான ஒரே தகுதி : தமிழராய் இருப்பது மட்டுமே…
விதிமுறைகள் :
1. தமிழ் மொழி அறிந்த, உலகின் எப்பகுதியில் வசிப்பவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.வயது வரம்பு இல்லை.
2. கவிஞர்கள் தமக்குப் பிடித்தமான எந்தத் தலைப்பிலும் தம்மைக் கவர்ந்த எந்தச் சிந்தனையிலும் கவிதை எழுதலாம் என்றாலும் மதநெறி, தனி மனிதத் தாக்குதல் மற்றும் பாலியல் போன்ற விதயங்களை விலக்கியதாகப் பாடுபொருள் அமைந்திருக்க வேண்டும்.
3. குறைந்த அளவில் 15 வரிகளும் அதிகமாய் 40 வரிகளுக்கு மிகாமலும் இருத்தல் நலம்.
4. தமிழ்க்குழுமங்கள் மற்றும் நாளேடுகளில் கவிதைப் போட்டியும் அதன் முடிவும் அறிவிக்கப்படும்
5. சிறந்த முதல் மூன்று கவிதைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்
எப்படி கலந்துகொள்வது?
1. கவிதைகளை ஒருங்குறி (Unicode) அமைப்பில் நேரடி மின்னஞ்சலாகவோ அல்லது இணைப்புக் கோப்பாகவோ (Using MS Word) rtskavithaipotti2016@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
2. தட்டச்சு வடிவம், இயலாவிடில் நல்ல தெளிவான உயர்தர தெளிவுறு (High-resolution) அமைப்பில் ஒளிவருடி (Scan செய்து) இணைப்புக் கோப்பாகவும் அனுப்பலாம்.
3. கவிதை அனுப்புவோர் தங்களின் முழு அஞ்சல் முகவரி , தொடர்பு தொலைபேசி/அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
4. இந்தக் கவிதை இதுவரை எந்த அச்சு ஊடகத்திலும் – இணையத்திலும் – இணைய மடலாற் குழுமத்திலும் – செய்திக் குழுமங்களிலும் இன்னபிற ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்ற உறுதிமொழி மற்றும் ஆக்கியவர் கையொப்பமிட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
5. கவிதைகளை அனுப்புகையில் “ரியாத் தமிழ்ச் சங்கம் – கல்யாண் நினைவு கவிதைப் போட்டி 2016” என அஞ்சலிலும், மின்னஞ்சலிலும் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
விதிமுறைகள் :
1. நடுவர்களின் முடிவே இறுதியானது; உறுதியானது; அதன் மீதான மேலதிகக் கருத்து விவாதங்கள் அனுமதிக்கவோ அங்கீகரிக்கவோ படமாட்டாது.
2. ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்கள் – ஆட்சி மன்ற குழுவினர் – அதன் உள்ளமைப்பு உறுப்பினர்கள் யாரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
3. இந்தப் போட்டியை எந்த நேரத்திலும் எந்த நோக்கத்திற்காகவும் நிறுத்தவோ விதிமுறைகளை மாற்றிக் கட்டமைக்கவோ ரியாத் தமிழ்ச்சங்க அமைப்புக்கு முழு உரிமை உண்டு.
4. போட்டியில் பங்கு பெறுவோரிடமிருந்து படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2016 செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நள்ளிரவு இந்திய நேரம் 00:00 மணி வரை.
5. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைகள் ரியாத் தமிழ்ச்சங்க ஆண்டு விழா மலரில், வலைத்தளத்தில், மடலாற்குழுமத்தில் உரியவர் பெயரோடு வெளியிடப்படும்.
இங்ஙனம்
பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன்
முத்துசாமி வெற்றிவேல்
ஷேக் முஹம்மது
தலைவர் – ஒருங்கிணைப்பாளர்
கலை இலக்கியப் பிரிவு (எழுத்துக்கூடம்)
ரியாத் தமிழ்ச்சங்கம்
ரியாத், சவூதி அரேபியா