சிறுகதை, கவிதைப் போட்டி – 2016 – வானமுதம் தமிழ் வானொலி ஒலிபரப்புச் சேவை

0

நவரத்தினம் அல்லமதேவன்

அவுஸ்திரேலியா மெல்பேண் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் வானமுதம் தமிழ் வானொலி ஒலிபரப்புச் சேவையின் பத்தாவது ஆண்டு நிறைவினையொட்டி உலகளாவியரீதியில் சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடாத்தியிருந்தது..

எமக்குக் கிடைத்த சகல தரமான ஆக்கங்கள் அனைத்தையும் நடுவர்கள் யாவரும் மிகவும் கவனத்தில் எடுத்துப் பரிசீலித்ததின் பிரகாரம் முதல் மூன்று பரிசுக்குரிய ஆக்கங்கள் யாவும் தரம் பிரித்துள்ளோம். அதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட ஆக்கங்கள் மற்றும் அவற்றிற்குரிய படைப்பாளிகளின் விபரங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

நவரத்தினம் அல்லமதேவன்.
போட்டி ஒருங்கிணைப்பாளர். +61 413 528 342
வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை..
மெல்பேண். அவுஸ்திரேலியா.

அவுஸ்திரேலியா மெல்பேண் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் வானமுதம் தமிழ் வானொலி உலகளாவியரீதியில் நடாத்திய கவிதைப் போட்டி – 2016

” உலக மொழியாக உயர்ந்த தமிழ் “ – கவிதை முதலாவது பரிசு பெறுபவர் ஏ.எம்.முகைதீன் (மூதூர் முகைதீன்) மூதூர். இலங்கை.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ் சென்ற திரு.பிரான்சிஸ் அன்ரனிப்பிள்ளை அவர்களின் நினைவாக அவருடைய மகன் திரு.ஜெயேந்திரா அன்ரனிப்பிள்ளை அவர்கள் வழங்கிய $150 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றது.

” செந்தமிழ் மொழியின் சிறப்பினைப் போற்றுவோம் ” – கவிதை இரண்டாவது பரிசு பெறுபவர் முஹம்மது ஹனிபா ஆதம்பாவா. சம்மாந்துறை. இலங்கை.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி முன்னாள் ஆசிரியரும், கலைஞரும், பௌராணிகரும், பண்டிதரும், கவிஞருமான காலஞ் சென்ற திரு.கதிரேசர்பிள்ளை அவர்களது 25 வது ஆண்டு நினைவாக அவரது பேர்த்தி திருமதி.கமலப்பிரியா கோகுலபாலன் அவர்கள் வழங்கிய $100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றது.

“தாயகங்களில் தமிழ் நிலைக்குமா” – கவிதை மூன்றாவது பரிசு பெறுபவர்கள் இருவர் திரு.சோ.இராசேந்திரம் (தாமரைத் தீவான்). திருகோணமலை. இலங்கை. நெருப்பலைப்பாவலர் இராம. இளங்கோவன். பெங்களூர். இந்தியா.

மெல்பேண் மணி என்ற புனை பெயரில் ஆக்கங்களைப் படைத்து வரும் படைப்பாளி எழுத்தாளர், கவிஞர், யாழ்ப்பாணம் கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியர் திருமதி கனகமணி அம்பலவாணர்பிள்ளை அவர்கள் வழங்கிய $50 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியா மெல்பேண் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் வானமுதம் தமிழ் வானொலி உலகளாவியரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டி – 2016

முதலாம் பரிசு பெறும் சிறுகதை “ இவர்கள் காத்திருக்கிறார்கள் ” முதலாம் பரிசு பெறுபவர் கனஹா கந்தசாமி ( புனைபெயர் சணா.கார்த்திஹா ) புசல்லாவ இலங்கை

யாழ்ப்பாணம் உரும்பராய் இந்துக் கல்லூரி முன்னாள் கனிஷ்ட அதிபரும், பண்டிதர், வித்துவான், சைவப்புலவருமான காலஞ் சென்ற சிவஸ்ரீ.இ.நவரத்தினக்குருக்கள் அவர்களது நினைவாக மகன் அல்லமதேவன் அவர்கள் வழங்கிய $200 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றது.

இரண்டாம் பரிசு இரண்டு சிறுகதைகள் பெறுகின்றன. “ஒரு மொட்டுக் கருகிவிட்டது” என்ற சிறுகதையினை எழுதியவர் திருமதி.அனுராதா பாக்கியராஜா. களுவாஞ்சிக்குடி. இலங்கை.

“கடேசி பெஞ்சும் கனவுகளும்”  என்ற சிறுகதையினை எழுதியவர் சோ.சுப்புராஜ் திருமுல்லைவாயில். சென்னை. தமிழ் நாடு.
இந்தியா.

திருகோணமலையைச் சேர்ந்த காலஞ் சென்ற திருமதி.பவாநிதி ஸ்ரீரஞ்சிதன் அவர்களது மூன்றாம் ஆண்டு நினைவாக அவரது மைத்துனன் திரு.ஸ்ரீரஞ்சன் ஸ்ரீரங்கநாதன் அவர்கள் வழங்கிய $150 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த இறைபதமடைந்தவர்களான திரு.மரியாம்பிள்ளை மனுவேற்பிள்ளை, ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை திருமதி.அன்னம்மா மனுவேற்பிள்ளை ஆகியோர் நினைவாக அவர்களுடைய புதல்வர்கள் அன்ரன் றொபேர்ட் மற்றும் அன்ரன் நியூட்டன் ஆகியோர் வழங்கிய $150 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசாக வழங்கப்படுகின்றது.

மூன்றாம் பரிசினைப் பெறுகின்ற சிறுகதை  “முப்பத்தொன்பது வயதுடைய வெங்கடேசனும் அவனது மூக்குச் சளியும்” மூன்றாவது பரிசு பெறுபவர் ஏ.பிரேம் ஆனந்த் ( புனை பெயர் குறிஞ்சி மைந்தன் ) டெல்லி. இந்தியா.

கிளிநொச்சி கரடிப்போக்கு விஞ்ஞானக் கல்வி நிலைய முன்னாள் அதிபர், ஆசிரியர், சைவப்புலவர், பண்டிதர் அமரர் தமிழ் ஐயா வே.மகாலிங்கம் அவர்களின் நினைவாக விஞ்ஞானக் கல்வி நிலைய இயக்குனரும், ஆசிரிய குடும்பமும், பழைய மாணவர்களும் இணைந்து வழங்கும் பரிசாக திரு.எட்வேட் பிலிப் மரியதாசன் வழங்கிய $100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *