கிரேசி மொழிகள்

மகா சிவராத்திரி!

கிரேசி மோகன் “இன்றுசிவ ராத்திரி ஈசன் இறைவியை மன்றில் கலந்து மகிழும்நாள் -ஒன்றாய் – நமச்சிவாய மந்திரத்தை நாளெல்லாம் ஓதி – உமைச்சுமையான் தாளிரெண்டை உன்னு “.

Read More »

நிறைகுடமாய் நீண்டதொரு பயணம்!

சாக்லேட் கிருஷ்ணா பவள சங்கரி ‘மார்க்கபந்து… மொதல் சந்து… அடடா பேரு கவிதை மாதிரி இருக்கே’ – வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் , திரு. கிரேசி மோகன் எழுதி, திரு கமல்ஹாசன் பேசிய ஆரம்ப நகைச்சுவை வசனம் இதுதான்.. படம் முழுக்க வயிறு நோக சிரிக்காமல் வெளியில் வர முடியாது! உலகம் முழுவதும் 285 திரையரங்குகளில், சுமார் 400 மில்லியன் இந்திய ரூபாய்களை வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் இது. கமல்ஹாசன், சினேகா, பிரபு, பிரகாஷ்ராஜ், நாகேஷ், மாளவிகா போன்ற பலரும் ...

Read More »

வேண்டுதல் வெண்பாக்கள் – சாக்லேட் – கிருஷ்ணா

கிரேசி மோகன்   வெண்ணை தயிர்பால் மண்ணை கோபியர்தம் கண்ணை உண்ட கிருஷ்ணா -உன்னையென் வாக்கிலெட்ட வைத்திடுவாய் வையம்காண் நாடகமாய் சாக்லேட் கிருஷ்ணா தலைப்பு….(1)….03-02-2008 சாக்லேட் கிருஷ்ணா பூஜை அழைப்பு ——————————————— கற்பகாம்பாள் சன்னிதியில் ———————————- மகோதரன் வேலவன் மாதாவின் சன்னிதியில் சகோதரன் சாக்லேட் கிருஷ்ணாவின் -முகாந்திர பூசை நடக்குது நாளைமணி ஆறதற்க்கு ஆசையுடன் எந்தன் அழைப்பு….(2)….26-4-2008 பதிலுக்கு சு.ரவி எழுதியது ———————————– தகவலே போதும் அழைப்பெதற்கு, தட்டா(து) அகமகிழ்ந்து நான்வருவேன் தானாய்-முகில்வண்ணன் சாக்லேட் கிருஷ்ணா வெற்றி நடைபோட வாக்தேவி தந்தாள் வரம்….(3)….26-4-2008 ———————————————————————————- ...

Read More »

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

ஹரிச் சுவடி —————- அந்தரி அண்ணா கோவிந்தா ஆவுடை அப்பா கோவிந்தா இந்திர லோகம் கோவிந்தா ஈ கொசு எனக்கு கோவிந்தா உந்தன் மலையில் கோவிந்தா ஊர்வேன் புழுவாய் கோவிந்தா எந்த நாளுமே கோவிந்தா ஏகாந்த சேவை கோவிந்தா ஐந்து பொறிகட்கு கோவிந்தா ஐயமிட்டிடு கோவிந்தா ஒன்றி உரைப்போம் கோவிந்தா ஓம் நம நாரண கோவிந்தா….

Read More »

‘நான் -யார்’ ரமண வழி வெண்பாவாக்கம்….

கிரேசி மோகன் ‘நான் -யார்’ ரமண வழி வெண்பாவாக்கம்…. ————————————————————————– வாழும் உயிர்கள் விரும்புவது ஆனந்தம், சூழுமா னந்தமுன் சொரூபமே, -பாழும் மனமில்லா தூக்கத்தில் மாசற்ற இன்பம், வினவு ‘நான் யார்’தான் வழி… தூல உடலோடு துய்த்திடும் ஐம்புலன்கள், கோலமதைக் காக்குமைம் காவலர்கள், -காலதேச சேதி உணர்வற்ற ஜீவனும்நீ அல்ல நேதிநேதி செய்தமீதி நீ…. களவுமனம் நீங்கும் களைப்புற்று, கூட்டுக் களவாணி புத்தி குலையும், -உலகம் பழுதில் படர்ந்திடும் பாம்பென்(று) அறிவாய்; கழுதைக்கு கற்பூரம் காட்டு…. மந்திர வாதிமனம் மந்திமனம், எண்ணத்தை உன்திறனாய்க் காட்டும் ...

Read More »

அக்கமகாதேவி

கிரேசி மோகன்   உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு ————————————————- காப்பு ——– சைவதிற்(கு) ஆண்டாள், சிவனின் மனம்புரிந்த மொய்விரித்தக் கூந்தலால் மேனிமூடும் -தெய்வத்தாய் அக்கமகா தேவியே அம்மல்லி கார்ஜுனரை சொக்கவைத்தத் தோழி சரண்….(0)…. —————————————————————— மனத்தலையைக் கொய்து மயானத்தில் நித்தம் தனித்தலையும் தேவாதி தேவன் -பனிதலையன் சென்னமல்லி கார்ஜுனன் சேவடி சேர்ப்பிக்க உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(1)…. கோலுக்குக் குரங்காக நூலுக்கு பொம்மையாய் தோலுக்குள் ஆடுகிறான் தாண்டவம் -மேலுக்கு சென்னமல்லி கார்ஜுனன் சொன்னபடி ஆடினால் உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(2)…. கரங்களில் ஓடு கிராமத்தில் பிச்சை கிறங்கிட ...

Read More »

மாட்டுப் பொங்கல்….

கிரேசி மோகன் ———————————————— ’’வீட்டுக்கோர் பிள்ளையாய் காட்டுக்கு சென்றாயர், கூட்டத் துடன்கலந்த கோபாலா, -மாட்டுக்குப், பொங்கலின்று, மீண்டும்நீ பூமிக்(கு) எழுந்தருள்வாய், எங்களை மானுடமாய் ஏற்று’’….கிரேசி மோகன்….

Read More »

ஆன்ம கண்ணன் -ஜீவன் ராதை….

கிரேசி மோகன் அருணாசல அன்பர் திரு.G.காமேஸ்வரன் இந்த ஓவியத்தை அனுப்பினார், வெண்பா எழுத பணித்து…. “கோடாக நீரில் கிழித்தாலும் , நிச்சலன , – ஆடாத நெஞ்சிலே ஆண்டாள்கண் -ணாடிபோல் ,- ஆற்றில் கிருஷ்ண அனுபவம் கொள்வதற்கு ,- நோற்றனள் மார்கழி நோன்பு “….கிரேசி மோகன்…. “பிம்பமாய்க் கண்ணன் பிரதிபிம்ப மாய்ராதை – அம்பலம் ஆனது ஆற்றுநீர் ; -தம்பலத்தை – ஆத்துநீரில் ஆடொன்று பாத்து சிலிர்த்ததாம் – ஆத்துமாதான் சிங்கமென்(று)அம் மே “….கிரேசி மோகன் ….அம்பலம் -கோவில் ….ஆட்டுமந்தையில் கலந்து விட்ட சிங்கம் ...

Read More »

பொங்கல் நல்வாழ்த்துக்கள்….

கிரேசி மோகன் ”எத்தைநாம் செய்தாலும் பித்தம் தெளியாது, இத்தரை வாழ்வின் இயல்பது: -இத்தையில், அத்தைதன் மீசைக்கும், ஆச்சரியம் கொள்ளாதே, சித்தத்தின் பொங்கல் சழுக்கு(குற்றம்)”…. ”கங்குலைப் போக்கும் கதிரவா தைத்திங்கள், பொங்கலை வைத்துப் பணிகின்றோம்: -எங்களுள், பொங்கிடும் காமத்துப் பாலைத் தணித்திடு, சங்கராந்தி சூர்யா சரண்”….கிரேசி மோகன்….

Read More »

அன்னபூர் ணாதேவி

கிரேசி மோகன் அக்ஷயப் பாத்திரமே அன்னபூர் ணாதேவி, தக்ஷன் மகளே தயைபுரி, -பிக்ஷையாய் ஞானவை ராக்கியம் நானடைய வேண்டுமம்மா; சோணை சிவனின் சதி”….கிரேசி மோகன்….

Read More »

ப்ரதோஷ நன்நாள்….

  “சந்தியா காலத்தில் சங்கரன் தாண்டவம், – நந்தியிரு கொம்பின் நடுவிலே, -தொந்தியார் ,- கந்தனார் காண கயிலையில் கற்பகப் – பந்தலிடப் பங்கில் படர்ந்து “….கிரேசி மோகன் .,.,

Read More »