வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 17.12.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
கடற்கரை மணலில் பதிந்த காலடித்தடங்களைப் புகைப்படப்பெட்டிக்குள் அடக்கிவந்திருப்பவர் திரு. ராமச்சந்திரன். இந்தக் காலடித்தடங்களை வைத்துக் கவிபாடுங்கள் என்று இவ்வாரப்படக்கவிதைப் போட்டிக்கு இதனைத் தெரிவுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் நம் நன்றிக்கு உரியவர்கள்.
ஆறடி நிலத்தில் வாழ்க்கை அடங்கும்வரை மனிதர்களின் காலடிகள் பயணப்பட்டுக் கற்றுக்கொள்ளத்தான் எத்தனை விஷயங்கள் இத்தரை மீதினில் கொட்டிக்கிடக்கின்றன! இலட்சிய மனிதர்களின் காலடிச் சுவடுகளோ பின்னர்க் காலத்தின் சுவடுகளாகவே மாறி வரலாற்றில் தடம்பதித்துவிடுகின்றன!
இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்துள்ள கவிதைகளை இரசித்துவருவோம்.
”நிலத்தில் பதிந்த மனிதக் காலடி நிலவில் பதிந்த நாளொரு நன்னாள். அவை செவ்வாயிலும் வெற்றித்தடம் பதிக்கும் நாளே நமக்குப் பொன்னாள்!” என்று தன் ஆசை பகர்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.
நிலத்தில் தடங்கள்
நிலத்தில் நடக்கும் கால்கள் நேற்றுப் பகலில் நிலவில் தடம் பதித்து வரலாற்றுக் கல்லை நிலைநாட்டும் ! எளிய மனிதனின் பூதகர மான எட்டு வைப்பு ! ஆறறிவு மானிடன் பேரளவு முயற்சியில் ஆற்றிய ஏழறிவுச் சாதனை ! தவழப் பயின்று தட்டுத் தடுமாறி நடக்கப் பழகி இறக்கை யின்றிப் பறந்து பிற அண்டத்தில் தடங்கள் இட்டு மீண்டான் ! அடுத்துப் பதினைந்து ஆண்டுகளில் செந்நிறக் கோள் செவ்வாயில் தடம் வைத்து வெற்றி விண்ணவனாய் மீள்வான், மண்ணிலே தடம் வைத்த மனிதன் !
***
கடற்கரையில் பதிக்கும் வெற்றுத் தடங்கள் கடலலைகளால் அழியலாம்; ஆனால் வாழ்வில் பதிக்கும் வெற்றித்தடங்களோ காலக் கடலலைகளால் அழிக்கமுடியாதவை என்பது திரு. செண்பக ஜெகதீசனின் திண்ணமான எண்ணம்.
கடற்கரையில் காலடித்தடங்கள் தொடர்பயணத்திற்குஏற்றவையல்ல..
மனித வாழ்க்கை போன்று மனிதக் காதலும் நிலையற்றதாய் மாறிவரும் நிலையினை, கடலலை போல் அது விரைந்து மறையும் விந்தையைத் தன் கவிதையில் அழகுறக் காட்சிப்படுத்தியுள்ளார் திருமிகு. ஜோ. குமாரி எலிசபெத். (புதிய கவிஞருக்கு நல்வரவு!)
காலடித் தடங்களுக்குப் புதிய சிந்தனை முகங்களைத் தம் கவிதைகளில் தந்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…
காலத்தால்அழியாதகாலடிகள்
காலடிகள் காணாமல் போகும் ஒருநாள் – ஆனால் காவியம் படைத்தும் உள்ளது சில காலடிகள்…
அண்ணல் இராமன் காலடி ஸ்பரிக்க அங்கே எழுந்தாள் அகல்யை உயிர் சிலிர்க்க
மூன்றடி மண்தான் கேட்டான் மாதவன் -ஆனால் மூவுலகமும் வசமானது அவன் காலடியாலே
அஹிம்சையைப் போதித்தது புத்தனின் காலடி அவ்வழி நடந்தது அண்ணல் காந்தியின் காலடிகள்
ஞானக் குஞ்சொன்று பிறந்தது காலடியிலே அஞ்ஞானம் மாண்டதும் அவர் காலடியிலே
அறிஞரைப் போல மெய்யடியார்களைப் போல அவர் வழி நடந்து பதிப்போம் நம் காலடிகளை
வரமாகப் பெற்ற இவ் வாழ்க்கைப் பாதையில் தரமாக விட்டுச் செல்வோம் நமது காலடிகளை
ஞாலத்தில் பிறந்த மாந்தர் அனைவரும் காலடித்தடம் பதித்துத்தான் நடக்கிறார்கள். என்றாலும், அனைவரின் தடங்களும் பின்பற்றுவதற்கேற்ற வழித்தடங்களாய், வாழ்க்கைத்தடங்களாய் மாறுவதில்லை. அத்தகு திறனும் ஆற்றலும் ஒருசிலருக்கு மட்டுமே வாய்க்கும் வரம்!
”காலடியில் பிறந்த ஆதிசங்கரரின் காலடி அத்துவைதத்திற்குப் பாதை அமைத்தது. கருணைக்கடலாம் சித்தார்த்தரின் காலடி சத்தியத்துக்குப் பாதை அமைத்தது. அதன்வழி நடந்த அண்ணலின் காலடியோ அகிம்சைக்குப் பாதை அமைத்தது!” என்று காலத்தால் அழியாத காலடிகளின் வரிசையைக் காதலுடன் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திருமிகு. ராதா விஸ்வநாதனைஇவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
ராமச் சந்திரன் எடுத்த இந்தப் படத்திற்குஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 10.12.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
தூளியில் துயிலுகின்ற இந்தத் தூமலரின் தோற்றம், உறங்கிக்கொண்டே ஆடும் ஆனந்த நடனமாய்க் காட்சிதந்து நம்மைக் கிறங்க வைக்கின்றது!
இவ்வழகிய புகைப்படத்தை அருமையாய் எடுத்திருக்கும் திரு. யெஸ்மெக்கிற்கும், இதனைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் நம் நன்றி!
இவ்வாரக் கவிதைப் போட்டிக்கு வந்துள்ள கவிதைகள் அடுத்து நம் பார்வைக்கு!
*****
”பெரியவர்கள் செய்யும் பித்தலாட்டங்களை இந்தப் புதுமலர் கண்ணுறாமல் கண்வளர்வதே நல்லது; அதனை எழுப்பாதே!” என அறிவுறுத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
எழுப்பாதே…
பிள்ளை உறங்கட்டும், பெரியவர்களே அதை எழுப்பவேண்டாம்..
பார்க்கவேண்டாம் அது நீங்கள் படும் பாட்டை- பணத்துக்காக..
மனிதம் மறந்து பணத்தை நினைக்கும் மனது அதற்கு வரவேண்டாம்..
இறப்பு மறந்து இரக்கமின்றி அதைக் கறக்கும் வழிகளை அது காணவேண்டாம்..
சேர்த்த பணத்தை நன்றாய்ச் செலவிடாமல், மண்ணில் புதைத்து மண்ணில் புதைவதைக் கண்ணில் காணவேண்டாம்..
தூயதை மறந்து தீயதை வளர்க்கும் பணம்படுத்தும் பாட்டை அது பார்க்கவே வேண்டாம்..
அதனால், பிள்ளை உறங்கட்டும், பெரியவர்களே அதை எழுப்பவேண்டாம்…!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
யெஸ்மெக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 03.12.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்திதேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
திரு. அருண் வீரப்பன் எடுத்திருக்கும் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளிப்பதிவாளருக்கும் தேர்வாளருக்கும் நம் நன்றிகள்!
முதியோர் மேற்கொள்ளவேண்டிய துறவை மழலையர் மேற்கொண்டிருப்பதைக் காணும்போது நம் மனம் சிந்தனையில் ஆழ்கின்றது. ஆசைகளைப் பணயம் வைத்து இவர்கள் மேற்கொண்டிருக்கும் துறவுப் பயணம் வெற்றிப் பயணமா அல்லது வெற்றுப் பயணமா? விடை காலதேவனின் கையில்!
சரி…சிந்தனை வளமிகு நம் கவிஞர்கள் இது குறித்து என்ன எண்ணுகிறார்கள் எனக் கண்டுவருவோம்!
*****
பொய்ம்மையை பெருக்கிப் பொழுதினைச் சுருக்காமல் மெய்ம்மையைத் தேடிப் புத்தனின் வழியில் பயணப்படும் இந்த இளம் துறவிகளை வாழ்த்திப் போற்றுகின்றார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.
பிரமசரியம், கிருகஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் என்ற வடவர் வாழ்வியல்முறையும் அதனையே வழிமொழியக் காணலாம்.
ஆகவே, துறவுநிலை என்றால் என்னவென்றே அறியாத இளம்பிள்ளைகளை அவ்வறத்தில் ஈடுபடுத்துவது பலவந்தமான திணிப்பே; அவர்களுக்கு அதுவும் ஓர் வேடிக்கை விளையாட்டே என்ற உண்மையைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்அறிவிக்கின்றேன்.
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
அருண் வீரப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன்தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 26.11.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
இவ்வாரப் போட்டிக்கான படத்தை எடுத்துத்தந்திருப்பவர் திருமதி. ராமலக்ஷ்மி. தேர்வாளர், வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்களுக்கு நம் நன்றிகளை உரித்தாக்குவோம்!
அன்னையவள் கரந்தவழும் அலைபேசி படம்பிடிப்பது யாரை என்று ஆவலுடன் பார்வையிடுகின்றதோ இந்த மழலை?
இதற்கான விடையைக் கண்டுபிடிக்க நம் கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள்.
***
”பிள்ளையைக் கவனியாது கைப்பேசியில் அன்னையவள் எடுக்கும் இந்தப் படம், பொய்வாழ்வே மெய்யென்று அப்பிள்ளைக்குச் சொல்லாமல் சொல்லித்தரும் பாடம்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
அழுதபிள்ளைக்குப் பாலூட்டாமல் அவசியமற்ற செயல்களில் சிந்தையைச் செலுத்தும் அன்னையைச் சாடுகின்றார்திரு. சி. ஜெயபாரதன்.
சேயிக்குப் பசி! தாய்ப்பால் கேட்கிறது! தாயிக்கு மோகம்! ஆண்பால் தேடுது! பெண்பாலுக்கு ஆண்பால்! அழுத பிள்ளைக்குப் பாலூட்டும் அன்னை இல்லை! தவமிருந்து பெற்ற பிள்ளை தவியாய்த் தவிக்குது! பிள்ளை இல்லாதவள் அந்த பிரம்மாவைத் துதிப்பாள்! பிள்ளை உள்ளவள் காதலன் தேடி கல்லாகிப் போனாள்!
தீமைகளை அழிக்கவும், தீயவர்களை ஒடுக்கவும் கோபாவேசம் கொண்டு பொங்கி எழுபவள் அன்னை பத்ரகாளி. திருவக்கரை, தில்லை, திருவாலங்காடு, மதுரை ஆகிய தலங்களில் உக்கிரமாகக் காட்சியளிக்கும் காளி அன்னை சினந்தணிந்த அன்பு அன்னையாக புதுச்சேரியிலும், மதுரகாளியாகவும், சிறுவாச்சூரில் லலித காளியாகவும் அருள்பாலிக்கிறாள். அந்தியூர் எனும் அரிய தலத்திலும் சாந்த நாயகியாக அமர்ந்து அருள்புரிகிறாள்.
பொதுவாக நாட்டுப்புறப் பாடல்கள், வில்லுப்பாட்டுகள், கும்மிப் பாடல்கள் போன்றவைகள் பத்ரகாளியம்மனை சிவபெருமானின் துணைவியாக, பராசக்தியின் அம்சமாகவும், திருமாலின் இளைய சகோதரியாகவும் குறிக்கப்படுவதால் சைவம், வைணவம் என இரண்டையும் பாலமாக இணைக்கும் தெய்வம் அன்னை பத்ரகாளி எனக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தாய்த்தெய்வம் என்று மக்களால் அன்பாக போற்றப்படும் பத்ரகாளியன்னை, மாகாளி, ஓம் காளி, கொற்றவை, எல்லைப் பிடாரி, பத்ரகாளி என பல்வேறு திருநாமங்கள்கொண்டு போற்றப்படுகிறாள். காளி என்றால் கறுத்தவள் என்றும் பொருள்படும். பீடையை அறுப்பவள் பிடாரியானாள். தீமைகளை, தீயவர்களை, தீய எண்ணங்களை அழித்து நல்லவைகளை நிலைநாட்டுபவர்கள் பேராண்மை பெற்று விளங்க எண்ணுவோர் காளியை வழிபடுகின்றனர். அதாவது அன்னை அருள்வடிவாய் காட்சியளிக்கும்போது பவானியாகவும், ஆண் சக்தியாக அருள்பாலிக்கும்போது துர்க்கையாகவும் விளங்குகிறாள் என்கின்றனர் ஆன்றோர். அந்த வகையில் பழம்பெரும் நகரமான அந்தியூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன் சகல செல்வங்களும் அருளும் வடிவுடை அன்னையாகத் திகழ்கிறாள். இவள் வீற்றிருக்கும் ஆலயமோ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது!
ஈரோட்டிலிருந்து வடக்கு புறம் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அந்தியூர். செல்லீசுவரர் திருக்கோவில் மற்றும் அழகராசப் பெருமாள் திருக்கோவிலும் அருகிருக்க இக்கோவில் அந்தியூர் கோட்டையின் உட்புறத்தில் மேற்குப் புறமாக அமைந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களுடன், கொங்கர்களும் தனியாட்சி செய்துவந்த நாடு கொங்கு நாடு என்பது. 24 உட்பிரிவுகள் கொண்ட கொங்கு நாட்டில், பவானி ஆற்றின் வடபுறம் உள்ள வடகொங்கு வடகரை நாடு என்பதும் ஒன்றாகும். இந்த வடகரை நாட்டின் தலைநகராக இருந்தது அந்தியூர்.
கொங்கு நாட்டின் வடக்கு எல்லையாக இருப்பது பர்கூர் மலைத்தொடர். சங்க காலச் சிறப்புமிக்க நகரங்களில் முக்கியமானது அந்தியூர். அக நானூறு எனும் சங்க இலக்கியத்தின் 71 ஆம் பாடலைப் பாடிய ‘அந்தி இளங்கீரனார்’ என்ற புலவர் அந்தியூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து இவ்வூரின் பழமையை அறிய முடிகிறது. பண்டைக் காலத்தில் மூன்று சுற்றுகளுடன் அகழிப்பாதுகாப்பும் கொண்ட வராக நதிக்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்கோட்டை இன்று அழிந்துவிட்டாலும் கோவில்கள் இவ்வூரின் பழம்பெருமையை எடுத்துரைக்கின்றன.
அந்தியூரின் தென்கிழக்கு மூலையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயம். கோவிலின் முன்புறம் அறுபது அடி நீளமுள்ள குண்டம் காணலாம். குண்டத்தின் மேற்குப்புறம் கம்பீரமான வடிவுடைய பெரியதொரு கணபதியைக் காணலாம். திருக்கோவில் வாயிலில் அழகும், அச்சமும் ஒருங்கே அமையப்பெற்ற கம்பீரத் தோற்றத்துடன் இரண்டு பூதகணங்கள் காவல்புரியும் காட்சி மெய்சிலிர்க்கச்செய்பவை. மகாமண்டபத்தில் முருகன் மற்றும் பிள்ளையார் திருவுருவங்கள் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.
அன்னை பத்ரகாளியின் திருக்கோவில் அர்த்த மண்டபத்தில் அன்னையின் உற்சவ மூர்த்தம் பொங்கும் புன்னகை தவழ வீற்றிருக்கிறாள். கருவறையில் மகிசாசுரமர்த்தினியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெண்களுக்கு மாங்கல்ய வரம் அருள்பவள் அன்னை என்பது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. அன்னை எட்டு கைகளில், உடுக்கை, கட்கம், கபாலம், சூலம் ஏந்தி, சுடர்விட்டு பரவும் தீச்சுவாலைகள்கொண்ட தலை, மண்டை ஓடு, கிரீடம், மகிசனின் தலைமேல் கால்களை ஊன்றியபடி, நாகம், மணி, கிண்ணத்துடன் அருள்பாலிக்கிறாள்.
களப்பலி வீரர் சிற்பம்! – நவகண்டம்
மூதுபுகழ் கொண்ட கொங்கு நாட்டில் வீரப்பெண்மணிகளின் வரலாறு எண்ணற்றவை. தங்கள் நாட்டு மன்னன் போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தங்கள் தலையை வெட்டி வெற்றித் தெய்வமாகிய காளி அன்னைக்கு காணிக்கையாக்கும் வழமை இருந்துள்ளது. கி.பி. 1265 – 1285 காலத்திய ராஜகேசரி வர்மன் என்கிற வீரபாண்டித் தேவரின் கல்வெட்டுகள் இதற்கு ஆதாரமாக உள்ளன. அவ்வழக்கத்தின்படி பெண் வீரர்களும் தங்களையே களப்பலி கொடுத்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக அந்தியூர் சிறீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் தமது தலையைத் தாமே வெட்டிக்கொண்டு பலி கொடுக்கும் வீரப்பெண்மணிகளின் சிலைகள் கேட்பாரற்று குப்பைமேட்டில் மண்ணில் புதைந்து கிடக்கும் அவலத்தைப் பார்க்க வருத்தமாகத்தான் இருந்தது.. பழம்பெரும் ஆலயங்கள் புதுப்பிக்கப்படும்போது இதுபோன்று வரலாற்று ஆவணங்களின் அருமை தெரியாமல் அழிக்கப்பட்டுவிடுகின்றன.
வேண்டியவருக்கு வேண்டியபடி வரமருளும் அன்னை அந்தியூர் பத்ரகாளியம்மன் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குபவள். ஆயிரம் கண்ணுடையவள் அன்னை என்று பார் போற்றக்காரணம் தீவினை எங்கு எவ்வடிவில் நடந்தாலும் அதைத் தடுத்து பக்தர்களை ஆட்கொண்டு நல்லறம் காத்து நிற்கிறாள் என்பதாலேயே.
பக்தர்களைக் காப்பதில் அம்மனின் கருணைக்கு முன்பு எந்த சக்தியும் ஈடாகாது. ஒரு முறை, அந்தியூரின் வடக்கே உள்ள எண்ணமங்கலம் என்னும் இடத்தில் இளம் பெண் ஒருத்தி கணவனால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியிருந்தாள். கணவனின் கொடுமையை தாங்க முடியாத ஒரு நிலையில் தன் கைக்குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து விட்டாள். அன்னை இவ்வாலயத்தின் பூசாரியின் கனவில் தோன்றி அதனை உணரச்செய்ய அந்த பூசாரியும் உடனே எழுந்து ஓடிவந்து கிணற்றில் குதித்த அந்த பெண்ணையும், குழந்தையையும் தக்க தருணத்தில் ஓடி வந்து காப்பாற்றிவிட்டார். இந்தச் சம்பவத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். இன்றும் இதுபோன்று அம்மன் பக்தர்களின் கனவில் வந்து பலன் சொல்வதாக மிகுந்த நம்பிக்கை உலவுகிறது. அம்மன் தலையின்மீது பூ வைத்து வாக்கு கேட்பதும் நடைபெறுகிறது. நாள்தோறும் அம்மனுக்கு நான்கு கால வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
சிங்கத்தை வாகனமாகக் கொண்ட இக்காளிதேவி தாய்த் தெய்வம் என்று கருதப்படுபவள். இவள் கொற்றவை என்றும், சாமுண்டா, பத்ரகாளி என்றும் அழைக்கப்படுகிறாள். பத்ரகாளி அன்னையின் கோவில்கள் அனைத்தும் வடக்கு முகமாக அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. காளியன்னை ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு திருநாமம் கொண்டு அழைக்கப்பெறுகிறாள். மாகாளி, ஓம் காளி, எண்ணெய்முத்துக்காளி, சீலக்காளி, கல்கத்தா காளி, கடுக்காளி, பாதாள காளி, கரிய காளியம்மன், வீரகாளி, வீரசூரகாளி, வீரமாகாளி, பொங்காளியம்மன், உச்சினி மாகாளி போன்றவை. அபிதான சிந்தாமணி, தமிழ் அகராதிகள் போன்றவைகளும் காளிதேவியின் பல்வேறு திருநாமங்கள் குறித்து தெரிவிக்கின்றன.
சப்தகன்னிமார்
மதலோலை எனும் தேவலோகப் பெண், துருவாச முனிவரின் சாபத்தின்படி அம்பரன், அம்பன் என்ற இரு அசுரர்களை மக்களாகப் பெற்றிருக்கிறாள். அவர்கள் இருவரும் அசுர குணத்தின்படி ஊரில் பல பெண்களுடன் திருமணம் செய்துகொள்ளாமலே உறவு வைத்திருந்தனர். இந்தச் செயல்கண்டு வெகுண்ட தேவர்கள் சிவபெருமானிடன் முறையிட்டனர். சிவபெருமான் அவ்விரு அசுரர்களையும் அழிக்கும்பொருட்டு உமாதேவியாரை, மைத்துனர் திருமாலுடன் அனுப்பிவைத்தார். அந்த அசுரர்களை அழிக்க அருள் வடிவான அன்னை உமாதேவியார் கோபாவேசமான பத்ரகாளி உருவெடுத்து அவ்வசுரர்களை அழித்தார் என்கிறது புராணம்.
திருவிழாக்கள்:
ஆண்டுதோறும் பங்குனித் திங்களில், அருள்மிகு பத்ரகாளியம்மன் குண்டம் பெருந்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்து இத்திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.
நவராத்திரி விழா 9 நாட்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
திருவாதிரை விழா, சித்ரா பௌர்ணமி, தீர்த்தக் குடவிழா, துர்காச்டமி – 108 சங்கு வைத்து பூசை செய்வது போன்ற விழாக்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
காளி வழிபாட்டிற்குரிய நாள் செவ்வாய் கிழமையென்றும், எந்த நோயையும் தீர்க்க வல்லவள் என்றும் சிவபுராணம் கூறுகிறது.
பத்ரகாளி அம்மன் கருவறைச் சுவர்களில் ‘மீன் சின்னங்கள்’ பொறிக்கப்பட்டுள்ளவை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கல்வெட்டு ஆய்வின்படி இக்கோவில் கட்டப்பட்டது கி.பி.1265 – 1285 என்பதால் அக்காலகட்டத்தில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்கள் யாரேனும் இக்கோவிலை அமைத்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.
Thenkasi, Kasi Viswanathar temple- Tirunelveli disrict – Tamil Nadu
Tenkasi is a small town which is at a distance of 50 kms. from Tirunelveli and also has a railway station. The main deity Kasi Viswanathar , a huge Sivalingam which is wonderful and has exceptional grace. This is a swayambhu Lingam. At the background of the temple we could see the Podighai hills full of herbs and medicinal plants and picturesque view. Tenkasi is located at 8.97°N 77.3°E. It has an average elevation of 143 metres (469 ft) and it is surrounded by the western ghats in three sides. This temple has a magnificent tower that stands 180 feet tall . This temple is in Tiruvenlveli district of Tamilnadu and is 5 kms from Coutrallam This is the second highest gopuram in Tamil nadu. The Gopuram of the temple welcomes pilgrims with a pleasant cool breeze straight from the nearby Thirikooda Malai. Pandya kings were patrons of the temple. Each pillar of this temple is adorned with excellent sculptures of Gods and Godesses. Lord Siva’s consort is known as Ulgammal.
திருநெல்வேலி மாவட்டத்தில், 50 கி.மீ தொலைவில், கேரள நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குள் வரும் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது தென்காசி, காசி விசுவநாதர் ஆலயம்.
சுமார் 4 ஏக்கர் பரப்பளவில், 700 ஆண்டுகளுக்கு முன்பு பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ஆலயம் இது. 180 அடி உயரத்தில் அழகான கலை வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள இதன் கோபுரம் தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம். வடக்கே காசியிலுள்ள விசுவநாதரை தரிசித்த பலனை இங்குள்ள ஈசுவரனை தரிசிப்பதன் மூலம் பெறலாம் என்ற நம்பிக்கை பரவலாக உண்டு. இங்குள்ள அம்மனின் பெயர் உலகம்மன் . இத்திருத்தலத்தில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை . குறிப்பாக, இரட்டை சிற்பங்களாகிய வீரபத்திரன்-வீரபாகு, இரண்டு தாண்டவ மூர்த்திகள், இரண்டு தமிழ் அன்னைகள், ரதி- மன்மதன் , மஹாவிஷ்ணு, கம்பீரமான காளி தேவி போன்ற அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.
Kuttralanatha Swamy temple, at Kuttralam, Tamil Nadu
Kuttralam is a popular tourist resort in Southern Tamilnadu known for its waterfalls, amidst picturesque surroundings – and is a source of inspiration of many a literary work.
The Chitrasabha is a stand-alone structure that is located a few blocks away from the Kuttralanathar temple at Kuttralam in southern Tamilnadu.
Architecturally the Chitrasabha resembles that of the other Nataraja Sabhas elsewhere in Tamilnadu, and its interior is decked with hundreds of murals, depicting images from the Indian epics. The five dance halls of Shiva are Chidambaram, Madurai, Tiruvalankadu, Tirunelveli and Kuttralam.
Chitrasabha is a wooden structure, every inch of these walls are lined with murals depicting scenes from the epics. Nataraja along with Tripura Sundari and Shri Yantra and 16 forms of Ganapathi , episodes from the lives of 63 Saivite saints, Nayanmars, based on the Tamil work called “Periya Puranam” sung by Sekkizhar are also depicted in these paintings. The story of Madurai Meenakshi is one of the masterpieces depicted in these murals.
The 400-year old murals, belonging to the Nayaka period, are located in a mantapa called Chithra Sabhai, in the temple.
They were originally painted using plant pigments and natural dyes. Art historians allege that most of these murals have now been repainted between 2010 and 2013, using modern garish colours, violating conservation norms. Many murals had been repainted by introducing new colours and even 3-D techniques. The faded portions of some murals had been re-touched and chemical cleaning had been done.
Photographs are strictly prohibited inside Chithra Sabha.Paintings courtesy through internet.
திருக்குற்றாலம்
நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையில் குற்றாலம் உள்ளது.
ஆடல்வல்லான், திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் சித்திர சபையும் சிறப்பான ஒன்று. சித்திர சபை குற்றாலநாதர் ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ளது. இதன் எதிரே தெப்பக்குளமும் , சுற்றிலும் மதில் இருக்க, நடுவே சித்திர சபை அழகாக அமைந்துள்ளது. மரத்தாலான அற்புதக் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபையின் ஓவியங்கள் மிகப்பழமையானவை. 400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மரக்கோவிலின் கூரை சிதம்பரத்துக் கோவிலின் கூரையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த சித்திர சபையில் உள்ள இரண்டு மண்டபங்களில் ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் இருக்கின்றன. இக்கூடத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சிறு மேடையில் திருவாதிரை நாளில் நடராசப் பெருமான் காட்சி தருகிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் தீட்டப்பட்டிருக்கின்றன. இச்சித்திர சபையின் வெளிச்சுற்றில் ஊர்த்துவதாண்டவம், பத்திரகாளி, முருகன், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி ஆகிய உருவங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள், துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்தகோலம், இரணிய வதம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகாவன் ஆகியவை அழகுற வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. சித்திர சபை எதிரில் தெப்பக்குளமும், நடுவில் மணிமண்டபமும் அமைந்துள்ளன.
சபையின் உள்ளே நடராசர் திருவுருவம் அன்னை சிவகாமியுடன், தேவர்கள் தொழுமாறு அழகாக வண்ணச்சித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வதி கல்யாணச் சிற்பம், குற்றாலநாதர் அகத்தியருக்குக் காட்சி தந்தது, சுப்பிரமணியரின், விநாயகரின் பல்வகைச் சிற்பங்கள் முதலான ஏராளமான சிற்பங்கள் இச்சபையில் உள்ளன. இச்சித்திர சபையின் வெளிச்சுற்றில் ஊர்த்துவதாண்டவம், பத்திரகாளி, முருகன், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி ஆகிய உருவங்கள் அழகுற தீட்டப்பட்டுள்ளன.
சித்திர சபையின் ஓவியங்கள் புகைப்படம் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இணையப்படங்களுக்கு நன்றி.
“உற்றாரையான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரையான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே”. (திருவாசகம்)
இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தை எடுத்தவரும், அதன் தேர்வாளரும் ஒருவரே; அவர்தான், நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பன்! அவருக்கு நம் நன்றியை முதலில் பதிவுசெய்துவிடுவோம்!
மாடுகள் ஒன்றோடொன்று முட்டிக்கொள்ளும் இக்காட்சி, ”வடித்த சோற்றுக்கஞ்சி அகன்ற தெருவினில் ஆறாய் ஓட, அந்தக் கஞ்சியாற்றில் நின்றபடி இரு எருதுகள் பொருததாலே அது சேறாய் மாறியது” என்று புகார் நகரத்தின் சோற்றுவளம் பேசும் பட்டினப்பாலை வரிகளை எனக்கு நினைவூட்டுகின்றது.
இக்காட்சி நம் கவிஞர்களுக்கு எத்தகைய நினைவுகளைக் கிளறியிருக்கின்றது என்பதை அறிந்துவருவோம் இனி!
***
ஆறாமறிவை அடையாத உயிர்களெல்லாம் சண்டையின்றிச் சமாதானமாய் வாழ்ந்திருக்க, ஆறறிவு படைத்த மனிதன்மட்டும் எப்போதும் சண்டையிட்டு மண்டையை உடைத்துக்கொள்கிறானே, ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்பதை உணர மறுக்கிறானே என்று வருந்துகின்றார் திரு. சி.ஜெயபாரதன்.
காளைச் சண்டைகள், கோழிச் சண்டைகள், யானைச் சண்டைகள், ரோமா புரியில் மானிட விலங்குச் சண்டைகள், அனுதினம் ஆண் பெண் சண்டைகள், ஆயுதப் போர்கள், அணுகுண்டு யுத்தம், உலகப் போர்கள், யுக யுகமாய் நேர்வதைத் தவிர்த்தாயா ? தடுக்க நீ முயன்றாயா ? கலை உலகில், சண்டை இல்லாத திரைப் படங்கள் குறைவு ! சண்டையில் மண்டை உடைந்தாலும் மாந்தர் மரணம் அடைந்தாலும், சண்டைகள் குறையா ! பிறவிக் குணமாய்ப் பிறப்புரி மையாய் பரம்பரை வழக்கமாய் மரண கீதம் பாடுகிறோம் ! ஆறறிவு படைத்த மனிதா ! ஈரறிவுள்ள எறும்பினம், தேனீக்கள் சேர்ந்து வாழ்வதைக் காணடா ! தேன் திரட்டும் ஆக்க வினையைப் பாரடா ! ஊக்கமுடன், பொறுமையுடன், ஒன்று சேர்ந்து வாழடா ! மூடச் சண்டையில் நிம்மதி ஏதடா ? ஒற்றுமையே வேத மென்று ஓதடா !
***
இவ்வாரம் அதிகமான கவிதைகளைக் காண முடியாதது சற்று ஏமாற்றத்தையே அளிக்கின்றது.
இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.
ஆறாவதாய்…
இனத்துடன் இனம் மோதுவது மனிதனின் க(வ)லை…
இதை இப்போது கற்றுக்கொண்டுவிட்டன கால்நடைகளும்!
மனிதனைப் பார்த்து மாடுகளுக்கும் வந்தது- இந்த ஆறாம் அறிவு!
”ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் ஆறாமறிவு பெற்ற மானுடனின் உயர்பண்புகளல்லவா! ஒற்றுமையை விரும்பும் மாடுகளே! நீங்கள் ஒருவரோடொருவர் பொருதழிவதைப் பார்த்தால் அந்த ஆறாமறிவு உங்களுக்கும் வந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகின்றதே!” என்று வேதனையோடு வேடிக்கை செய்திருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
திருமதி. ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 19.11.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 12.11.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
கிடந்தும் தவழ்ந்தும் இருக்கும் குழந்தை உருண்டு புரண்டெழுந்து அழகாகக் குத்துவிளக்கு போல எழுந்தமர்ந்து கொள்ளும்போது அதனைக்காணும் தாயின் மகிழ்ச்சி அளவிட இயலாதது. குழந்தையிடம், ‘கை வீசம்மா கைவீசு,’ என்றும், கைகளைக்கொட்டிச் சப்தமெழுப்பிச் சப்பாணி ( சஹ+ பாணி= சப்பாணி) கொட்டவும் கற்றுக் கொடுக்க முயல்வாள் அன்னை.
சந்தன மரங்கள் அடர்ந்து செறிந்த சோலைகளைக்கொண்ட ஊர் திருப்பேரை எனும் திருமாலின் தலமாகும். இங்கு சின்னஞ்சிறுவனான, கருமுகில்வண்ணனான ஒரு குழந்தை உள்ளான். தெய்வக்குழந்தையான திருப்பேரை நாதனவன். பெயரும் மகரக்குழைக்காதன்! அவனைச் சப்பாணி கொட்டுமாறு வேண்டும்போது அக்கரங்களால் அவன்செய்த செயல்களைக் கூறுவது தானே முறைமை? அதற்கு நம் புலவரின் கற்பனை வளம் ஊற்றாகப் பெருகுகிறது!
தன் சிவந்த கரங்கள் இன்னும் சிவக்கச் சப்பாணி கொட்டி விளையாடுகிறான் அந்தக்குட்டன்! யாரவன்? அவன் செய்த அரும்பெரும் செயல்களைப் பெருமையுடன் அடியாரான புலவர் விளக்குவதனைப் பார்க்கலாமா?
விசுவாமித்திரர் ஆகிய பெருந்தவ முனிவர்களின் தவத்தினை நாசம் செய்து பெரும் குற்றம்புரிந்து வந்த கருமை நிறங்கொண்ட தாடகை எனும் ஒரு அரக்கியை வதைத்தான். அவளுடைய கொடிய உயிரினைக் குடிக்கும் வண்ணம் வில்லினில் கணைகளைத் தொடுத்தான்; அவளை மிக எளிதாகக் கொன்றும் விட்டான். அவனே ஸ்ரீராமன் எனும் தசரதன் குலக்கொழுந்து. ‘இராமன் கணைகளைத் தொடுத்துத் தாடகையை அழித்தான்,’ என மட்டும் கூறாது, அதனை இன்னுமே விளக்கி, அக்கொடியவளின் உயிர் எவ்வாறு போயிற்றென விளக்குவதும் இன்னொரு புலமைநயம்: அம்பினால் அடிபட்டவளின் உடலிலிருந்து கொழுங்குருதி பெருக்கெடுக்கின்றது. நரிகள் அவளைச் சுற்றிச் சூழ்ந்து தசையினைப் பிடுங்கி உண்கின்றன. இயமன் இவ்வண்ணம் அவளது உயிரைக் குடிக்குமாறு செய்தான் ‘இராமன் எனும் இந்தத் தென்திருப்பேரையூர் உறையும் சிறுவன்’ என அவன் மேலேற்றிக் கூறுவார் புலவர்.
தாடகை வதத்தைப்பற்றிக் கம்பர் கூறுகிறார்:
‘மார்பில் தைத்த அம்பினால் உண்டான புண்ணிலிருந்து பெருகிய இரத்தம் மாலையின் செவ்வானப் பரப்பு தரையில் வீழ்ந்ததுபோல, பாலைவனம் முழுதும் கடலாக மாறும்படி விழுந்து பரவியது,’ என்றும், ‘தாமரைமலரில் வாழும் பிரமனுக்கு ஒப்பான மாமுனி விசுவாமித்திரனின் கட்டளையை மறுக்காதவன் இராமன்; அவன் செய்யும் முதல்போர் (கன்னிப்போர்) இது. எமன் ஒருபக்கம் இந்த அரக்கர்குலத்தின் உயிரை உண்ணவேண்டும் எனும் ஆசையால் திரிந்து கொண்டிருக்கிறான்; ஆனாலும் வாளேந்திய அரக்கர்களைக் கண்டு அவனுக்கு ஒரு தயக்கம்; அச்சம். இன்று அவனுடைய ஆசையும் கொஞ்சம் நிறைவேறியது!’ எனவும் கவிதைநயம் மிளிரக் கூறுகிறார்.
வாச நாள்மலரோன் அன்ன மாமுனி பணி மறாத காசு உலாம் கனகப் பைம்பூண் காகுத்தன் கன்னிப்போரில் கூசிவாள் அரக்கர் தங்கள் குலத்து உயிர்குடிக்க அஞ்சி ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே. (தாடகை வதைப்படலம்)
கம்பரின் சொல்லாற்றலின் தாக்கத்தை இப்பிள்ளைத்தமிழ்ப் பாடல்களிலும் உணர முடிகின்றது. இவன் இவ்வாறு தாடகையினை அழித்ததனால் கௌசிகன் எனும் விசுவாமித்திர முனிவனின் வேள்வி வேதமுறையினின்று வழுவாமல் நடைபெறுமாறு முடித்தும் தந்தான்.
இந்நூலின் பாட்டுடைத்தலைவனை இராமனாகக்கொண்டு அவன் சிவதனுசை முறித்து, சானகியை மணந்ததையும், தாடகை முதலான அரக்கர்களையும் அழித்த வீரச்செயல்களையும், இன்னும் பலவற்றையும் புலவர் பாடியுள்ளார். இந்நூலை இயற்றியவர் இன்னாரென அறிய இயலவில்லை. இனிய எளிய சொற்களைக்கொண்டு மிக அருமையாக இப்பிள்ளைத்தமிழ் நூல் அமைந்துள்ளது.
அடுத்து சிற்றில் பருவத்திலிருந்து ஒரு மாறுபட்ட கற்பனைகொண்ட பாடலைக் காணலாமா?
சிறுவன் திருப்பேரைநாதன் சிறுமிகள் இழைத்து விளையாடும் சிற்றிலைக் காலால் எற்றி உதைத்து அழிக்க முற்படுகிறான். அச்சிறுமிகள் மிகுந்த வாக்குசாதுரியத்துடன் அவனுடன் வார்த்தையாடுவது நமக்கு வியப்பினைத் தருகின்றது!
இவர்கள் பாடுபட்டு வண்டல் மண்ணைக்கொழித்து, பதமாக நீர்சேர்த்துப் பிசைந்து, சிற்றில் இழைத்திருக்கிறார்கள். சிற்றில் இழைத்து விளையாடும்போது தாய் தந்தையாராகத் தம்மைக் கருதிக்கொண்டு பாவைகளை வைத்தும் விளையாடுவார்கள் சிறுபெண்கள். சிற்றிலை அழிக்க இச்சிறுவன் ஓடோடி வருகிறான். இவனோ அரசகுமாரன்; அவனிடம் ஒரு சிறுபெண், பெரிய பெண்மணி போல நீட்டி முழக்கிக் கூறுகிறாள்: “ஆசையாக, அன்பாக இந்தக் குழந்தையை நான் மார்போடு அணைத்துக்கொண்டு முலைப்பால் கொடுக்கிறேன். பின்பு அமுதம்போலும் புனல்நீரில் நீராட்டி, அதன் அழகான கடைக்கண்களுக்கு மையும் தீற்றியுள்ளேன். கழுத்தில் பொன்னாரத்தைத் திருத்தமாக அணிவித்து, பட்டாடையும் உடுத்தியுள்ள எனது குழந்தைக்கு புகழ்வாய்ந்த பெரியோனான உனது பெயரையே நான் இடுவேன். எப்போது? நாங்கள் பாடுபட்டுக் கட்டியுள்ள மாளிகை, மாடங்கள், அரங்கங்கள், வேதிகை கொண்ட இச்சிற்றிலை நீ அழிக்க ஓடோடி வரலாகாது காண்பாய்! எங்கள் சிற்றிலை அழிக்கமாட்டேன் எனக்கூறினால் நானும் கூறியபடி என் குழந்தைக்கு உன் பெயரை இடுவேன். நாங்கள் சின்னஞ்சிறு பேதைப்பெண்கள்; காலால் எங்கள் சிற்றிலை நீ எற்றினால் உன் மென்மையான (அடியார் தொழும்) திருவடியில் வண்டல் துகள்கள் ஒட்டிக்கொண்டு உறுத்துமே ஐயா!
“ஆகவே அலைகள் வீசும் பொருநை நதிக்கரையிலமைந்த திருப்பேரையின் நாதனே! சிற்றில் சிதையேலே!” என வேண்டுவதாகப் பாடியுள்ளார். ஒப்பற்ற கற்பனை நயம்கொண்டு, சிறுமித்தன்மையின் பேதைமையையும் விளக்கிக்காட்டும் இனிய பாடல்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}