பி.தமிழ்முகில் நீலமேகம்
அன்னையும் பிதாவும்
கொடுத்த அறிவினை
சுடர் விட்டெரிய செய்யும்
தூண்டுகோல் !!!
கண்டிக்கும் வேளையில்
சற்று கரடு முரடு தான்
கற்றுத் தரும்
ஆசான்கள் எப்போதும் !!!
அவர்தம் உள்ளந்தனில்
மாணாக்கரின் நினைவுகள்
என்றென்றும் – நினைத்தாலே
இனிக்கும் கற்கண்டுகள் !!!
கற்ற கல்வியையும் -பெற்ற
அனுபவத்தையும் நாளும்
போதனை மூலம் உலகிற்கு
பரப்பிடும் ஒளி விளக்குகள் !!!
அன்றாடம் கற்பித்தலின் மூலம்
தானும் கற்றுக் கொண்டே
இருக்கும் வளர்ந்து விட்ட
பிள்ளைகள் -ஆசான்கள்!!
படத்திற்கு நன்றி : http://teachingwithcontests.com/wp-content/uploads/2011/03/comp.jpg


Leave a Reply