பரமனுமிவன் ரசிகன் ஆனதனால் பக்கத்தில் அழைத்துக் கொண்டானோ என்றெண்ணத் தோன்றுகிறது!

 

 

ஓங்குபுகழ் நடிப்பினிலே ஓர் இமயம் சிவாஜிதான்..bss

ஒருவரும்நிகரில்லை என்பதை ஒப்புவரே..

நீண்டநெடும் வரலாறாய் நடிப்பிற்கு அவன் உலகம்!

ஒவ்வொரு அசைவும் உன்னத நடிப்பைத்தரும்!

 

பழம்பெருமை பேசுதற்கும் படத்தாலே உத்வேகம்தந்த

பராசக்தி கணேசனை பைந்தமிழர் மறக்கமாட்டார்!

புராணப் புருஷர்களும் பாத்திர ஏந்தல்களும்.. மனதில்

பதியவைத்ததில் நடிகர்திலகம்தவிர வேறு எவருமிலர்!

 

கப்பலோட்டியதமிழனும் கர்ணனெனும் பாத்திரமும்

எவர்மனத்தில் இருந்தாலும் எடுத்துநீங்கள பாருங்கள்!

நடிகர்திலகம் எனும் நவரசநாயகனின் உதிரம்கூட பேசும்!

தங்கப்பதக்கத்தில் கம்பீரம் தற்பெருமை உதிர்க்கும்!

 

கவியரசர்பாடலுக்கு உதட்டசைவு மட்டுமல்ல..bsiva

உயிர்கொடுத்து நடித்ததனால் காலங்களை வென்று

உச்சரிப்பில் உச்சம்தொட்ட ஒரே நடிகன் சிவாஜி!

கெளரவம் பாரிஸ்டர் என்றெடுத்த பாத்திரங்கள் எல்லாமே

 

ஒன்றையொன்று வென்றதுண்டே தவிர.. இங்கே வேறு

ஒருவர் வென்றதாக வரலாறில்லை!  பாசமலர் போல

காவியங்கள் இங்கு உண்டா? பக்தியிலும் பாமாலை

பரவசமாய் ஊட்டி நின்றார்! பரமனுமிவன் ரசிகன் ஆனதனால்

பக்கத்தில் அழைத்துக் கொண்டானோ என்றெண்ணத் தோன்றுகிறது!

 

உங்களுடன் நான்..

காவிரிமைந்தன்

Share

Comments

One response to “பரமனுமிவன் ரசிகன் ஆனதனால் பக்கத்தில் அழைத்துக் கொண்டானோ என்றெண்ணத் தோன்றுகிறது!”

  1. sathiyamani

    Thirumal perumai kondathanal vaikunthamamum  adainthirukalam !
    jnaaoli petrathanl jesus udan kalanthirurukkalam!
    pava mannippu petrathanal allahudanaum amarnthurukalam!
    pathiramaai marum koodu vittu kodu payum kalai arinthavar nam nadikar thilakam!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *