பிள்ளையார்!

-செண்பக ஜெகதீசன்

முக்கண்ணனின் மூத்த பிள்ளை                            Lord Ganesa
     முக்கனியும் விரும்பும் பிள்ளை,
திக்கெங்கும் நிறைந்த பிள்ளை
     தீதெல்லாம் அகற்றும் பிள்ளை,
எக்கணமும் அருளும் பிள்ளை
     எளியவர்க்கும் ஏற்ற பிள்ளை,
அக்கறையாய் அவனைப் பணிவாய்
   ஆனைமுகன் அருள்வான் இனிதே…!

Share

Comments

2 responses to “பிள்ளையார்!”

  1. பாலும், தெளிதேனும், பாகும், பருப்புமிவை
    நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய்
    துங்கக் கரிமுகத்துத் தூமணியே ! நீயெனக்குச்
    சங்கத் தமிழ்மூன்றும் தா.

    சி.ஜெயபாரதன்

  2. Shenbaga jagatheesan

    ஆன்மீகத்தின் ஆத்திச்சூடியே இதுதானே..
    திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *