நகைச்சுவை நாயகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

அன்பினிய சகோதரர் திரு கிரேசி மோகன் அவர்களுக்கு,
மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வாழ்க! பல்லாண்டு பல்லாண்டு!! சீரும் சிறப்புமாக!!
ஆசுகவி ஓவியர் திரு கேசவ் அவர்களின் கைவண்ணத்தில்​பிறந்தநாள் குழந்தையின் வண்ணக்காவியம்! வாழ்த்துகள் ஒவியர் பெருமானாரே!

crazy

சிரிப்பூட்டி, பாட்டுச் சிலிர்ப்பூட்டி, பக்தி
விருப்பூட்டி, வாழ்வில் உயிர்ப்பூட்டி, நெஞ்சகப்
பூட்டைத் திறக்கும் புதுக்கிரேசி மோகனின்
பேட்டையில் என்றும் லூட்டியே.என்றும் அன்புடன்
அண்ணாகண்ணன்

 

 

பொன்நகை ஆயிரம் தந்தாலும் வேண்டேன்crazy1
புன்னகை வேண்டியே தவமிருப்பேன்
போற்றிப்பாட வார்த்தைகள் தேடினேன்
வசப்படவில்லையேதும் திருமால் திருப்புகழும்
வெண்பாக்களும் அள்ளிச்சென்றன அனைத்தையும்
வரைய முனைந்தேன் உன் வரைவிலக்கணத்தை
கபடமற்ற நகையாய் கலகலவென கொட்டித்தீர்ந்தது
கிரேசியாய் இல்லாமல் கிலுகிலுப்பையாய் (சாக்லேட்)
கிருஷ்ணாவுக்கே கிச்சுகிச்சு மூட்டும் மோகனமாய்
பாசத்தைப் பனித்துளிக்குள் மறைத்து வைத்தாலும்
பதறாமல் அதை பதவிசாய்ப் படைக்கும் ஆற்றலும்
கள்ளமில்லாச் சிரிப்பும் கலகலப்பான பேச்சும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமையும்
உனக்கு மட்டுமே சாத்தியம் நீவிர் வாழிய வாழியவே!

அன்புடன்
பவளா திருநாவுக்கரசு​

 

 

Share

Comments

2 responses to “நகைச்சுவை நாயகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!”

  1. வெண்பாக் கவிமோக வேந்தரே ! உங்களைப்
    பண்பாய்த் தமிழ்ப்பாட்டாய்ப் பார்க்கிறோம் – எண்ணற்ற
    பாட்டுக்கள் ! நீங்கள் விடும்மூச்சும் பாட்டுக்கள் !
    ஏட்டுச் சுரைக்காய் இனிப்பு. 

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    சி. ஜெயபாரதன்
      

  2. அன்பு கிரேசி மோஹன் ஜி . திருமால் திருப்புகழைப்புகழ்வதா .கேசம் வண்ணம் கிரேசி எண்ணம் என்பதை புகழ்வதா! எல்லாமே சூப்பர் . நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் . நீடூழி வாழ வேண்டும் . என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *