கிரேசி மோகன்

பார்அதன் வேருக்கு புல்லாங் குழல்நீரும்,
நூறு’களை’ போக்க நிவாரண, -போருக்கு
கண்ணன்கை காலில், கவசம் அணீந்தாலும்,
எண்ணமது கோதூளி யே’’….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்

பார்அதன் வேருக்கு புல்லாங் குழல்நீரும்,
நூறு’களை’ போக்க நிவாரண, -போருக்கு
கண்ணன்கை காலில், கவசம் அணீந்தாலும்,
எண்ணமது கோதூளி யே’’….கிரேசி மோகன்….
கிரேசி மோகன் அவர்களுக்கு வணக்கமும் பிரியங்களும்,
பாடலில் நூ -று -களை என்று “தளை” வருகிறது தோழர்
இதுபோல் பல வெண்பாக்களில் கனிச்சீர் / மாமுன் நேர் காண முடிகிறது
எது/ரா/வென – புளிமாங்கனி
வாய்க்/ குள்/ … மாதா – மாமுன் நேர்
மூளியாய் மூழ்க அவன் – கனிச்சீர்
இது உங்கள் கவனத்திற்காக மட்டும்….
விரைவில் துபையில் சந்திக்கலாம் …கிரேசி சார்
அப்துல் வதூத்
அன்பு கிரேசி அவர்களுக்கு
என் முந்தய கருத்தை திரும்பப்பெருகிறேன்.மேற்கண்ட வெண்பாவின் வாக்கிய அமைப்பில் ஏற்பட்ட சிறு குழப்பமே காரணம்.நூறு’களை’ என்று குறிப்பிட்டிருந்தது.
ஆகையால் நூ- றுக- ளை என்று பிரிப்பதற்கு பதிலாக நூ -று -களை என்று பிரித்து பார்க்க நேர்ந்தது. எழுத்தை மேற்கொளிட்டதால் ஏற்பட்ட குழப்பம் அது.
பார்அதன் வேருக்கு புல்லாங் குழல்நீரும்,
நூறு’களை’ போக்க நிவாரண, -போருக்கு
கண்ணன்கை காலில், கவசம் அணீந்தாலும்,
எண்ணமது கோதூளி யே
வெண்பா மார்கண்டேயரின் ( கிரேசி மோகன் ) மேற்கண்ட வெண்பா சரியே …!
*சுட்டிக்காட்டிய “வல்லமை” ஆசிரியருக்கு நன்றி
Leave a Reply