இதுதான் வாழ்க்கை!

-மீ.விசுவநாதன்

பொதிய மலைக்குப் போறேன் – என்
புருசங் கூட நானும்!
அதிக ஆசை இல்ல – சேந்து
அருவி குளிச்சி வாறேன்!

மஞ்சப் பூசி நானும் – அந்த
மதகு நீரில் நிப்பேன்!
பிஞ்சு விரலப் பிடிச்சு – அவர்
பேசச் சிலையா நிப்பேன்!

கடல முட்டாய் வாயில் – வச்சுக்
கடிச்சுக் கடிச்சுத் தருவேன்!
சொடல மாடன் முன்னே – அவர்
சொகத்த வேண்டிக் கிடுவேன்!

ஆத்துத் தண்ணி போல – தேன்
அன்பு சொட்டும் புருசன்!
தோத்துப் போக மாட்டேன் – அவர்
தோளக் கட்டி நடப்பேன்!

ஒண்ணு ரெண்டு புள்ள – அவர்
கொணத்தப் போல பெறுவேன்!
மண்ணு வெளங்க ரெண்டும் – நல்ல
மனுச னாக்கி விடுவேன்!

 

 

Share

Comments

4 responses to “இதுதான் வாழ்க்கை!”

  1. நா. கோபாலசுந்தரம்

    இந்தக் கவிதை ஆத்மார்த்தம் என்பதன் விளக்கமாக உள்ளது. மனத்தின் வாசல் சொல்லே என்பதன் இலக்கணமே இக்கவிதை. வரிக்கு வரி ஆழ்ந்த காதலும்
    அசைக்கமுடியாத நம்பிக்கையும் வெளிப்படுகின்றன்.  மீ. விசுவநாதனுக்கு
    மனமார்ந்த பாராட்டு.

  2. V S Prakash

    Arumai . Yathartham aruviyagakk kotta nanum konjam kavithai manaiviyudan naigiren, en thathayai ninaigiran ! 

  3. g.Balasubramanian

    அருமை ! பலமுறை படித்து ரசித்தேன்.. உண்மை அன்பின் உருவகம்.. இதுதான் வாழ்க்கை..?? இதுவன்றோ வாழ்க்கை !! ..பாராட்டுக்கள்.

  4. போற போக்கில் மனசைப்
    புடிச்சி இழுத்துப் போறே
    நூறு வருசம் மேலும்
    நெறைஞ்சு வாழு தாயி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *