Month: February 2014

  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    எண்ணங்களும் வார்த்தைகளும்தான் நம் மனத் திண்மையை அதிகரிப்பதோடு விளைவுகளுக்கு வித்தாகவும் இருக்கின்றன. எண்ணங்களைப் பற்றி கீதையில் கூட செய்தி உண்டு. கடைசிகால கட்டத்தில் என்ன எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறதோ அதுவாகவே மறுபிறவியில் மாறிவிட சாத்தியங்களைப் பற்றியும் கீதை பேசுகிறது. வார்த்தைகள் கூட அப்படித்தான்.

    1069274_10200403582107947_1677963781_nரிஷிகளின் சாபங்கள் பற்றி ஏகப்பட்ட கதைகளைப் படித்திருக்கிறோம். வார்த்தைகள் சாபங்களாக மாறும்போது அதன் பலன் என்ன என்பதையும் அகலிகை முதலானதாக நிறையவே படித்திருக்கிறோம். பொதுவாகவே வார்த்தைகளை நாம் அளந்துதான் பேசவேண்டும் என்பதைப் பெரியவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள். எதிர்மறை வார்த்தைகள் பேசும்போது உடனடியாக அது பலிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அதே போல நெஞ்சார நாம் வாழ்த்தி வார்த்தைகளாய்ப் பேசும்போது வார்த்தைகளை வெளியே விடும் நமக்கே ஒரு நல்ல திருப்தியைக்கூட தரும். இதைப் பற்றிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் படித்தேன். திரு சதீஷ்குமார் டோக்ரா அவர்கள் எழுதியது. இதோ அவர் எழுத்தில்.

    ஒரு வார்த்தை வெறும் ஓர் ஒலி அல்ல. இதற்கு அர்த்தமும் உண்டு — தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்று கூறியது போல.

    அர்த்தம் என்றால் என்ன?

    ஒருவர் “நேர்மை” என்ற வார்த்தையைச் சொன்னால் உங்கள் மனதில் என்னென்ன நடக்கிறது?

    உங்களுக்குத் தெரிந்த சில நேர்மையானவர்களின் படிமங்கள் உங்கள் மனதில் தோன்றுகின்றன. அந்த படிமங்களுடன் இணைந்த இனிமையான உணர்வுகளும், அனுபவங்களும் மனதில் எங்கோ ஆழத்தில் தோன்றி அங்கு நேர்மறை உள்ளுணர்வுகளைத் (positive feelings) தோற்றுவிக்கின்றன . அதே போல எதிர்மறையான ஒரு வார்த்தையைக் கேட்கும்போது எதிர்மறையான உள்ளுணர்வுகள் மனதில் தோன்றுகின்றன.

    “நாளை காலையில் சீக்கிரமாக எழுந்து உடற்பயிற்சி செய்வேன்” என்று சொல்வதற்கும், “நாளைக்கு தாமதமாக எழுந்திருக்க மாட்டேன்” என்று சொல்வதற்கும் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

    இரண்டாவது வாக்கியத்தின் அர்த்தத்தில் ஒரு சிறிய எதிர்மறை சாயல் இருக்கிறது. முதலாவது வாக்கியம் ‘சீக்கிரமாக எழுந்திருக்கும்’ நேர்மறை பிம்பத்தை நம் மனத்திரையின் மீது வீசுகிறது. ஆனால், இரண்டாவது வாக்கியமோ ‘தாமதமாக எழுந்திருக்கும்’ எதிர்மறை சாயலைக் கொண்டுள்ளது. நாம் அந்த வித்தியாசத்தை தெளிவாக உணரவில்லையானாலும் அது ஆழ்மனதைப் பாதிக்கும்.

    வார்த்தைகள் வெறும் ஒலி அல்ல. அவை மின்னூட்ட அணுக்களைப் போல (charged particles). நமது மனதை எப்படிப்பட்ட வார்த்தைகளுடன் நிரப்புகிறோமோ அவ்வாறே மாறுகிறோம். தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளாலா? சோகமும் தளர்ச்சியும் விளைவிக்கும் வார்த்தைகளாலா?

    உண்மைதான். நல்ல வார்த்தைகளால் ஊக்கமும் தன்னம்பிக்கையையும் நம்மால் அனைவருக்கும் வழங்கமுடியும்தானே.. இப்படிப்பட்ட ஊக்க மாதிரிகள் இந்தச் சமுதாயத்திற்கு நிறைய தேவை என்பதை மனதிற்கொண்டு, நல்லதொரு கட்டுரையைத் தந்த திரு சதீஷ்குமார் டோக்ரா அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி கொள்கிறோம். திரு டோக்ரா அவர்களுக்கு நம் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    http://dhiaanam.wordpress.com/

    கடைசி பாரா: குறவன் பாட்டு – கடைசிப் பகுதியிலிருந்து நகர வாழ்க்கையை நன்றாகக் காண்பிக்கிறார் திரு சச்சிதானந்தம்.

    அண்டை அயலாரைக் காண்பதற்கும் தயக்கம்,

    அன்பைப் பரிமாறிப் பேசிடவும் நடுக்கம்,

    அல்லல் கொண்டாலும் தனக்குள்ளே மறைக்கும்,

    அனாதை வாழ்க்கைக்குப் பெயர்தானோ நகரம்!

    Share
  • அம்மா

     

    எம். ரிஷான் ஷெரீப்

     

     

    (கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும் அம்மாவுடன் கதைப்பதற்கு இடமளிக்கப்படாத குழந்தை, நீதிமன்ற வளாகத்தில் சத்தமிட்டு அழுதது – செய்தி)

     

    இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மாhand-Cuff

    விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள்

    இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள்

    அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்

     

    அம்மா

    பகல் இரவுகளில் இனிய கதைகள் சொன்னவள்

    சோறு கஞ்சி சமைத்து

    என் நாவில் ஊட்டியவள்

     

    நிலவு உதித்திருக்கிறது

    இரவுத் தங்கத் தட்டின் மீது

    இருக்கக் கூடும் நீ ஊட்டும் பால்

    பசித்தாலும் கூட நான்

    கையேந்த மாட்டேன் அம்மா

     

    வந்துவிடு அம்மா என்னருகே

    என் பாற்பற்களால் கடித்துன்

    கை விலங்கை உடைக்கட்டுமா அம்மா

     

    – ஷஸிகா அமாலி முணசிங்க

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • அந்த முடிவு

     நிர்மலா ராகவன்

    “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?”

    தொலைகாட்சிப் பெட்டியிலிருந்து தன் கவனத்தைக் கஷ்டப்பட்டு மனைவியிடம் திருப்பினார் அம்பலம். முப்பது வருட தாம்பத்தியத்தில் அவர் கற்றுக்கொண்ட ஒரு பாடம், மனைவி பேச்சுக்கு எதிர்பேச்சு பேசாதிருந்தால் வாழ்வில் அமைதி நிலவும் என்பதுதான்.

    ஆறு மாதத்திற்குமுன் மணமாகிப் போன கடைக்குட்டி பார்வதி அன்று சாயங்காலம் திடுதிப்பென்று வந்திருந்தாள். அதுவும் தனியாக. ஏதோ புருஷன் பெண்டாட்டி சண்டையாக இருக்கும் என்று இவரும் எதுவும் கேட்கவில்லை.

    இப்போது, எல்லாரும் சாப்பிட்டு முடிந்து, தூங்கப்போகும் சமயத்தில் அவள் வரவின் காரணத்தை மனைவி ஒன்றுக்குப் பத்தாகக் கூற வந்திருப்பாள் என அசுவாரசியமாகப் பார்த்தார்.

    “ஏங்க? எதுக்காக கல்யாணம் பண்ணிக்கறது? இல்ல, எதுக்காகன்னு கேக்கறேன்!”

    நான்கு பிள்ளைகளைப் பெற்றபின் அவளுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் எழுந்தது? அம்பலத்திற்குச் சிரிப்பு வந்தது. மனைவியின் கோபத்தை உத்தேசித்து அடக்கிக் கொண்டார்.

    “அட, கேக்கறேன், இல்லே?” என்று முடுக்கினாள்.

    வாயில் வந்தது எதையாவது சொல்லித் தொலைத்தாலே ஒழிய இவள் அப்பால் நகர மாட்டாள் என்று, “ஏதோ.. பிள்ளை குட்டி பெத்து, கடைசி காலத்தை அவங்க நிழல்லே..,” என்ற் மென்று முழுங்கினார். இந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையாகப் பேசுவார்களா யாரேனும்!

    “இவரு கடைசி காலத்துக்குப் போயிட்டாரு! இங்க மொதலுக்கே மோசமா இருக்காம்!” நொடித்தபடி அவள் சொல்லாமல் சொன்னது லேசாகப் புரிய, அதை நம்ப முடியாது, திகைப்புடன் அவளைப் பார்த்தார்.

    அவர் கண்ணில் தேங்கியிருந்த கேள்விக்கு அதே ரீதியில் பதிலளித்தாள் மனைவி.

    “ஏதுடா, தங்கமானவங்களா இருக்காங்களே சம்பந்தி வீட்டுக்காரங்க; `ஒங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. நீங்க செய்யறதைச் செய்யுங்க’ன்னு அவங்க தேனாப் பேசினதில நான்கூட இல்ல ஏமாந்துட்டேன்!” ஆண்மை இல்லாத ஒருவனைத் தங்கள் பெண் தலையில் கட்டிவிட்டார்களே என்ற ஆத்திரத்தில் குமுறினாள் பொன்னம்மா.

    “இனிமே என்ன செய்ய முடியும்?”

    “என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? இனிமேதான் செய்யணும். `இந்த மாதிரி இருக்கு. எனக்கு அவரோட சேர்ந்து வாழ விருப்பமில்லே!’ அப்படின்னு பார்வதி கோர்ட்டில அடிச்சுச் சொன்னா, விவாகரத்து வாங்கிடலாம். ஜீவனாம்சம்கூட கிடைக்கும்!”.

    அம்பலத்துக்கு குழப்பம் அதிகரித்தது. “எதுக்கு அவசரம், பொன்னம்மா? மாப்பிள்ளை அம்மாவுக்கு ஒரே பிள்ளை! இன்னும் சின்னக் குழந்தைன்னே நினைச்சு, அருமையா நடத்தி இருப்பாங்க! அதான் இப்படி..! கொஞ்சம் விட்டுப் பிடிச்சா..!” மனைவியை எதிர்த்து, ஒரே மூச்சில் அவர் இவ்வளவு பேசியதே அதிகம்.

    அப்போது அவரே எதிர்பாராதவண்ணம் மகள் புயலென சீறியபடி உள்ளேயிருந்து வந்தாள்.

    “நான் இனிமே அந்த வீட்டுக்குப் போக மாட்டேம்பா. எங்க வீட்டுக்காரருக்கு சாப்பாடு போடக்கூட விடறதில்ல அவங்கம்மா. அவரும், `ஒரே களைப்பா இருக்கு. என்னைத் தொந்தரவு செய்யாதே’ன்னு தினமும் கட்டிலைவிட்டுக் கீழே படுத்துக்கிறாரு!” தன் இளமையும், பெண்மையும் கட்டியவருக்குக்கூட ஒரு பொருட்டாகப் படவில்லையே என்ற அவமான உணர்வில் அழுகை பொங்கியது அவளுக்கு.

    மகளுடைய துயரம் தாயையும் பாதிக்க, “இன்னும் என்ன கதை கேக்கறீங்க? பேசாம, நான் சொலறபடி செய்யுங்க!” என்று ஆணை பிறப்பித்துவிட்டு, “நீ வாடா, கண்ணு! யாரோ செய்யற தப்புக்கு நாம்ப எதுக்கு அழணும்?” என்று மகளை அணைத்தபடி உள்ளே அழைத்துப் போனாள்.

    நீதிமன்றத்தில் பேசவும் வாயெழாது, அவமானத்துடன் தலைகுனிந்த வண்ணம் பிறர் தன்னை விமர்சிப்பதைக் கேட்டு, அங்கமெல்லாம் சுருங்கியவனாக நின்றிருந்த மாப்பிள்ளை கிருஷ்ணனின் நிலை பொன்னம்மாவைப் பாதிக்கவில்லை. `இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்ததற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்!’ என்று நினைத்துக் கொண்டாள்.

    அப்போது அவள் எதிர்பார்க்கவில்லை, தான் பெற்ற பிள்ளைகளே தன் முடிவை வன்மையாக எதிர்ப்பார்கள் என்று.

    “எங்களையும் ஒரு வார்த்தை கேக்கணும்னு ஒங்களுக்குத் தோணலியா? ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் ஆவறதே பெரும் பாடு. ஜாதி, ஜாதகம், சீருன்னு ஆயிரம் பிடுங்கல்! நம்ப மாப்பிள்ளைக்கோ நல்ல வேலை! பாக்கவும் லட்சணமா இருக்காரு!” என்று மூத்த மகன் இன்னொரு ஆண்மகனுக்குப் பரிந்து பேசியபோது, பொன்னம்மாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. தன்னை ஒருவன், அதிலும் தன் வயிற்றில் பிறந்த மகன், தட்டிக் கேட்பதாவது!

    “அழகும், பணமும் இருந்தா மட்டும் ஒருத்தன் ஆம்பளையாகிட முடியுமா?” என்று விரசமாகக் கத்தினாள். தங்கள் குடும்பத்துடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு பெற்ற பிள்ளைகளே போனபோதும் கலங்கவில்லை.`என் மகளுக்கு படிப்பிருக்கு. சுயமா நிக்கற தெம்பிருக்கு!’ என்று திமிராகச் சொல்லிவந்தாள்.

    பார்வதியும் அதை நம்பினாள். ஆனால், இடையில் எதுவும் நடக்காததுபோல, பழையபடியே வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, தான் எதையோ இழந்துவிட்டது போன்றதொரு வெறுமை ஏற்பட்டது அவளுக்கு.

    தன்னையொத்த பெண்கள் கணவன்மாரோடு உரசியபடி நடப்பதைப் பார்க்கும்போதும், தாம் பெற்ற குழந்தைகளைக் கொஞ்சுவதைப் பார்க்கும்போதும் அவளுக்குத் தன்மேலேயே பரிதாபம் மிகும். எல்லாருக்கும் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் இன்பங்கள் தனக்கு மட்டும் ஏன் அரிதாகப் போய்விட்டன?

    உலகத்தைச் சரிவரப் புரிந்து கொண்டிருக்காத வயதில் அம்மா சொற்படி கேட்டு நடந்தது தவறோ?

    இந்த அப்பாதான் ஆகட்டும், குடும்பத் தலைவராய் லட்சணமாய், யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கக் கூடாதா!

    `என்ன முடிவு?’ என்று உடனே விரக்தி எழும்.

    கணவருடன் சேர்ந்து இருந்திருந்தால், உலகை வேண்டுமானால் ஏமாற்றி இருக்கலாம். ஆனால், தனக்குள் பொங்கிப் பொங்கி எழுந்த அவமான உணர்ச்சியையும், விரக தாபத்தையும் எப்படி சகித்து இருக்க முடியும்!

    ஆரம்பத்தில் அனுசரணையாக இருந்த அம்மாகூட, தெரிந்தவர்களும், உறவினர்களும் காட்டிய பராமுகத்தால் மாறிப்போனாள். `துக்கிரி! எந்த வேளையில் பிறந்திச்சோ! இதுக்கு ஒரு நல்லது செய்யப்போய், எனக்கு யாருமே இல்லாம போயிட்டாங்க!’ என்று மகளைக் கரிக்க ஆரம்பித்தாள்.

    இப்படி ஒரு அம்மாவுடன் காலமெல்லாம் எப்படித் தள்ளப் போகிறோம் என்ற மலைப்பு எழுந்தது பார்வதிக்கு.

    ஆயிற்று, இப்போதே முப்பத்தி இரண்டு வயதாகிவிட்டது. இன்னும் இப்படியே இருபது இல்லை, முப்பது வருடங்கள் தள்ளிவிட்டு.. நினைக்கும்போதே அயர்ச்சியாக இருந்தது.

    வயிற்றுப்பாடு ஒரு பிரச்னையாக இல்லைதான். ஆனால், தனிமை?

    படைத்தவன் மனிதர்களுக்குத் துன்பத்தைத் தருவதே அவர்களைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளத்தானாம். பார்வதி அடிக்கடி கோயிலுக்குப் போக ஆரம்பித்தாள். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கோயில்.

    அங்கெல்லாம் அம்மாவின் ஓயாத புலம்பலைக் கேட்காமல் இருப்பதே நிம்மதியாக இருந்தது.

    அன்று கோலாலும்பூர், ஈப்போ ரோடிலிருந்த தண்டாயுதபாணி கோயிலுக்கு வந்திருந்தாள். சிறுவயதில் அண்ணன்மார்களுடன் ஓடிப் பிடித்து விளையாடிய மகிழமரம் ஒரு சிறு நெகிழ்ச்சியை உண்டடுபண்ணியது. ஆலமரத்தடியில் அக்கடா என்று இருந்த பிள்ளையார் இப்போது ஒரு சிறு கோயிலுக்குள். கலை, இந்து மத சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடக்கும் பெரிய `செட்டியார் ஹால்’.

    அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த முருகனைப் பிரார்த்தித்துவிட்டு, பிரதட்சணம் செய்யப்போனாள். நீண்ட உட்பிராகாரம், வெளிப் பிராகாரம் இரண்டின் தரையிலும் சலவைக்கல் பதிக்கப்பட்டு இருந்தது.

    “பாப்பா! ஓடாதே!”

    எங்கோ கேட்ட குரலாக இருக்கவே, திரும்பினாள்.

    அவளைப் பார்த்துச் சற்றே துணுக்குற்றவன், “நல்லா இருக்கீங்களா?” என்று விசாரித்தான், உபசாரமாக.

    இனியும் தன் மனைவியாக இல்லாதவளை ஒருமையில் விளிப்பது மரியாதை இல்லை என்ற அவனது பண்பு பார்வதியை என்னவோ செய்தது.

    “ம்!” என்றாள் முனகலாக. அவள் பார்வை எல்லாம் கிருஷ்ணனின் பிடியிலிருந்து திமிற முயற்சித்துக் கொண்டிருந்த குழந்தையிடமே பதிந்து இருந்தது.

    “என் பெண்!” அவன் குரலில் எக்காளம் இல்லை. சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனால், அது அவளுடைய கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்தது.

    `தீர யோசியாது, விளக்கம் தர எனக்கொரு சந்தர்ப்பமே அளிக்காது, பலபேர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினாயே!’ என்று கூறாமல் கூறுகிறாரோ?

    “அத்தை..ம்.. ஒங்கம்மா நல்லா இருக்காங்களா?” பேச்சை மாற்றினாள்.

    “கேசில தீர்ப்புச் சொன்னதுமே அம்மா இருதய நோயாளியா ஆகிட்டாங்க. அவங்க போய் பத்து வருஷமாயிடுச்சு!”

    எதையோ சொல்லலாமா, வேண்டாமா என்று தயங்கியவனாய், முன்னாள் மனைவியையே பார்த்தான் கிருஷ்ணன்.  பின், ஒரு முடிவுக்கு வந்தவனாக, வேகமாகப் பேசினான்: “இப்ப நினைச்சா, அதிசயமா இருக்கு — இருபத்து நாலு வயசிலே நான்தான் எவ்வளவு ஜடமா இருந்திருக்கேன்! அப்பாவைத்தான் தெரியுமே! சினிமாப் பாட்டே வீட்டிலே கேக்கக்கூடாது, ஆண்-பெண் விவகாரம் எல்லாம் வாய்விட்டுப் பேசற விஷயம் இல்லே, அப்படி, இப்படின்னு ஏகக் கண்டிப்பு! பதினஞ்சு வயசில, நான் ஒரு பொம்பளை படம் வரைஞ்சதுக்காக கையை மடக்கச் சொல்லி, இரும்புத் தடியால போட்டிருக்காரு பாரு, ஸாரி, பாருங்க!”

    `உரிமையுடன், ஒருமையில் பேசுங்களேன்!’ என்று கதறவேண்டும்போல இருந்தது பார்வதிக்கு.

    “அம்மாதான் ரொம்ப அழுதாங்க. `எனக்கு இப்படி ஒரு கொறைன்னு நீ சொல்லவே இல்லியேடா! வீணாலும் ஒரு கல்யாணத்தைச் செஞ்சுவெச்சு, அந்தப் பொண்ணோட பாவத்தைக் கொட்டிக்கிட்டோமே!’ன்னு!

    தாயின் நினைவில் சற்று நேரம் மௌனித்திருந்தவன், தொடர்ந்து பேசினான். “ரொம்ப ஒருஷம் சிகிச்சை குடுத்தாங்க எனக்கு. ஒடம்பு, மனசு எல்லாத்துக்கும்தான். நான் ஆம்பளைதான்னு உறுதியானதும், உன்கிட்ட ஓடி வந்து அதைச் சொல்லணும்போல இருந்திச்சு. நீதான் அந்த சந்தோஷத்தை என்கூட பங்கிட்டுக் கொள்ளணும்னு ஒரு வெறி. ஆனா, அதே சமயத்திலே தயக்கமாவும் இருந்திச்சு!”

    எப்பேற்பட்ட இழப்பு அவளுடையது! எங்கே அவனெதிரே அழுதுவிடப் போகிறோமோ என்று பயந்தவளாக, “இருட்டப் போகுது. போகணும்,” என்று முணுமுணுத்தாள் பார்வதி.

    “வா பாப்பா!” என்றபடி, கிருஷ்ணன் நடக்க, அடக்க முடியாது கேட்டாள் பார்வதி. “இவங்கம்மா வரலியா?”

    திரும்பியவன், ஒரு வரட்சியான சிரிப்பை உதிர்த்தான். “எனக்குப் பொண்டாட்டி ராசி இல்ல போலிருக்கு. இந்தக் குழந்தையைப் பெத்துப் போட்டுட்டு, இவங்கம்மாவும் போயிட்டாங்க. அதாவது, செத்துப் போயிட்டாங்க!”

    `உன்னை மாதிரி, உயிரோடேயே கொண்டவனை நிர்க்கதியாக விடவில்லை!’ என்று அவன் மறைமுகமாக பழிப்பதாக எடுத்துக்கொண்டு, குன்றிப்போனாள் பார்வதி.

    `வீட்டுக்கு வாங்க,’ என்று அவனை அழைக்க ஆசையாக இருந்தது. ஆனால், எந்த முகத்துடன் அழைப்பது?

    “யாருப்பா இது?” என்ற குழந்தையின் கேள்விக்கு, “ரொம்ப வருஷத்துக்கு முந்தி எனக்குத் தெரிஞ்சவங்கம்மா,” என்று மாஜி கணவன் அளித்த விடையிலேயே அவன் அவளைவிட்டுத் தொலைதூரம் சென்றுவிட்டது தெரிந்தது.

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (13)

    ராமஸ்வாமி ஸம்பத்

    ராமன் அனுமனிடம், “ஸீதைக்கு ராவணனின் முடிவு பற்றிய செய்தியைச் சொல்வாயாக” என்றான். அன்னையிடம் இம்மகிழ்ச்சியான சம்பவத்தைக் கூறியதும் அவள் அனுமனை நோக்கி பரிவோடு “உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்?” என்றாள், “அன்னையே, எனக்கு அனுமதி கொடுங்கள். தங்களைக் கொடுமைப் படுத்திய இந்த அரக்கிகளை துவம்சம்  செய்கிறேன்” என்றான். அவ்வாறு செய்யவேண்டாம் என அறிவுரை செயது, ஸீதை சொல்வாள்: ”இவ்வுலகில் யார்தான் தவறு செய்யவில்லை? மேலும் இவர்கள் தங்கள் யஜமானனின் ஆணைப்படிதானே நடந்தார்கள். எய்தவன் செய்த தவறுக்காக அம்பை நோகலாமா?”

    ராவணனின் இறுதிச் சடங்கு முடிந்ததும் விபீஷணனுக்கு லக்ஷ்மணன் பொன்முடி சூட்டினான். பின்னர் ராமன் விபீஷணனை ஸீதா பிராட்டியை அழைத்து வருமாறு பணித்தான்.

    ஸீதை வந்து சீற்றம் பொங்கும் முகத்தைக் கொண்ட ராமனைப் பணிந்தாள். “ஸீதே! உன்னைச் சிறை மீட்டதோடு எனது க்ஷத்திரியக் கடமை முடிந்து விட்டது. ஏறக்குறைய ஓர் ஆண்டு இன்னொருவனால் சிறைப்படுத்தப்பட்ட உன்னோடு என்னால் இனி வாழமுடியாது. நீ எவரோடு வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்” என்று அனல் கக்கும் சொற்களை மொழிந்தான்.

    “ஆரியபுத்திரரே! உயர்ந்த குலத்தோன்றலான தங்களிடமிருந்து இத்தகைய வார்த்தைகள் வரலாமா? என் கற்புநெறி தாங்கள் அறியாததா? தங்கள் நோக்கம் புரிகிறது. இதற்குப்பின் எனக்கு என்ன இருக்கிறது?” என்றாள் ஸீதை. கண்ணீர் அருவிபோல் பொங்கி எழ, “லக்ஷ்மணா, நீ உடனே உலர்ந்த கட்டைகளைக் கொண்டு வந்து தீ மூட்டு” என்று தன் கொழுந்தனுக்கு ஆணையிட்டாள்.

    லக்ஷ்மணனுக்கும் அங்கு உள்ள அனைவருக்கும்  ஒன்றுமே புரியவில்லை. ‘இது என்ன விபரீதம்?’ என்று நினைத்து அண்ணனை நோக்கினான். ராமன் மெளனமாக இருந்தான். தீ மூட்டப்பட்டது. ஸீதை அக்கினிக்குள் பிரவேசித்தாள்.

    அடுத்த கணம் அக்கினி தேவன் தோன்றி அன்னை ஸீதையை பவ்யமாக அழைத்துவந்து ராமனிடம் ஒப்படைத்தான். “ராமா, நெருப்பை நெருப்பு என்ன செய்யமுடியும்? இது உனக்குத் தெரியாமல் போய்விட்ட்தே! என் அன்னை புனிதத்தையே மேலும் மெருகேற்றக் கூடியவள்” என்றான்.

    மலர்ந்த வதனத்தோடு ராமன் ஸீதையை மெல்ல அணைத்தவாறு, “என் ஆருயிரே! உன் கற்புநெறியை உலகுக்குப் பறைசாற்றவே இந்த நாடகத்தை ஆடினேன். என்னை புரிந்துகொள்” என்றான்.

    பிரமன் இந்திரன் உள்ளிட்ட தேவர்களெல்லாம் வானில் கூடி ராமனையும் ஸீதையையும் வாழ்த்தி வணங்கினர். தசரதனும் அங்கு தோன்றி ராமனை தன் மடியில் அமர்த்தி உச்சிமுகர்ந்து, ஸீதையைப் பார்த்து ”என் மகனுக்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்” என்றான்.

    ”தந்தையே! அன்னை கைகேயியையும் தம்பி பரதனையும் தாங்கள் அவர்கள்மீது கொண்ட கோபத்தை நீக்கி ஏற்றுக் கொள்ளவேண்டும்“ என்று ராமன் கேட்க தசரதனும் “அப்படியே” என்றான்.

    பிரமதேவன் ராமனை நோக்கி, ஐயனே! தாங்கள் திருமால் என்பதை தாங்களே அறியவில்லை. அதனால்தான் இந்த குழப்பம்” என்றார்.

    அவரை வணங்கி ராமன் “நான் என்னை மனிதனாகவும் தசரதன் புத்திரனாகவும் மட்டுமே அறிவேன். மற்றவற்றை நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றான்.

    இந்திரன் ராமனுக்கு ஒரு வரம் அளிப்பதாகச் சொன்னான். “அப்படியானால் இந்த போரில் எனக்காக உயிர்த்தியாகம் செய்த வானரர்களுக்கு புத்துயிர் அளிக்கவேண்டும்” என்றான் ராமன். உடனே மாண்ட வானரர் அனைவரும் உயிர் பெற்றனர்.

    ராமனுக்கு திடீரென்று பரதன் வைத்த கெடு நினைவுக்கு வந்த்து. ”எப்படி அக்கெடு தீர்வதற்குள் அயோத்தி சேர்வது?” என அனுமானத்தோடு கேட்ட ராமனிடம் விபீஷணன், “கவலை வேண்டாம். புஷ்பக விமானத்தின் மூலம் நாம் அனைவரும் நாளையே அயோத்தி சேர்வோம்” என்றான்.

    அனைவரும் விமானத்தில் ஏறினர். போகும் வழியில் ராமன் ஸீதைக்கு நளனால் கட்டப்பட்ட சேது அணை, வானரர்களின் கிஷ்கிந்தை முதலியவற்றை சுட்டிக்காட்டினான்.

    வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தைக் கண்டு அவர் ஆசிகளைப் பெறுவதற்காக விமானம் அங்கு இறங்கியது. முனிவர் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்தார். ராமன் அனுமனை அழைத்து உடனே அயோத்தி சென்று பரதனிடம் தான் திரும்புவதை முன்னறிவிக்குமாறு பணித்தான்.

    பதினான்கு ஆண்டுகள் மனவருத்தத்தோடு ராமன் வரும் வரை காத்திருந்த பரதன்,  ‘அண்ணன் வருவதற்கான அறிகுறிகளே காணப்படவில்லையே’ என நினைந்து, பிராணத் தியாகம் செய்ய முயல்கையில் அனுமன் அங்கு தோன்றி “பரதா! அவசரப்படாதே. நம் அண்ணல் இன்னும் சில நொடிகளில் இங்கு அன்னையோடும் இளவலோடும் வந்து சேருவார்” என்ற மகிழ்ச்சிகரமான தகவலைச் சொன்னான். அரை நாழிகை கடந்தபின் புஷ்பக விமானம் நந்திகிராமத்தில் இறங்கியது. அண்ணனைக் கண்ட பரதனின் ஆனந்தத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. பல ஆண்டுகளுக்குப்பின் தன் மகனின் முகத்தில் புன்முறுவலைக் கண்ட கைகேயி மனம் மகிழ்ந்தாள்.

    பரதனைப் போலவே ராமன் வரும் வரை காத்திருந்த அசேதனப் பொருள்களான ராம பாதுகைகள் ”எம் ஐயன் காட்டிலும் மேட்டிலும் கற்கள்மீதும் முட்கள்மீதும் காப்பில்லா கால்களுடன் நடக்கையில் நாம் மட்டும் பதினான்கு ஆண்டுகள் பரதாழ்வாரின் பூஜாபீடத்தில் அமர்ந்திருக்கிறோமே! என்னே நம் தலைவிதி!” என்று வருந்தியவாறு இருந்தவை “ஆஹா, மீண்டும் அண்ணல் பாதங்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் நமக்கு விரைவில் கிடைக்கப் போகிறது”  என நினைந்து பொலிவு பெற்றன. இவ்வடிநிலை போல அயோத்தி அரியணையும் அரசாங்கக் கருவூலத்திலிருந்த ரகு வம்சத்தின் மணிமுடியும் “பதினான்கு ஆண்டுகள் ராமன் வரும் வரை காத்திருந்து தவமிருந்தோம். நமக்கும் ஒரு விடிவு காலம் வந்துவிட்டது” என மகிழ்ந்தன. சோகத்தின் உருவாக இருந்த அயோத்தி நகரமே இன்பக்கடலில் திளைத்தது.

    நாடு திரும்பிய ராமனைப் பரதன் கண்ணீர் ததும்பும் கண்களோடு ஆலிங்கனம் செய்து கொண்டான். பின்னர் அவருடைய பாதுகைகளை பூஜா விதானத்திலிருந்து எடுத்து பக்தி பரவசத்தோடு அவருக்கு அணிவித்தான். அன்னைமார்களில் ராமன் முதலில் கைகேயியை வணங்கினான். “ராமா, என் மீது கொண்ட கோபம் தீர்ந்துவிட்டதா?” என்று கேட்ட சிற்றன்னையிடம் ராமன், “அன்னையே தாங்கள் எதுசெய்தாலும் என் நன்மையை மனத்தில் கொண்டுதான் செயல்படுவீர் எனபது எனக்குத் தெரியாததா?”  என்றான்.

    ஒரு நல்ல நாள் பார்த்து ராமனுக்கு முடிசூட்ட குலகுரு வசிஷ்டர் ஏற்பாடு செய்தார். ஸ்ரீ ஸீதாராம பட்டாபிஷேக வைபவத்தை கம்பர் வர்ணனையில் காண்போமே!.

    அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த

    பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி பற்ற

    விரை செறி கமலத்தாள்சேர் வெண்ணையூர்ச் சடையன் தங்கள்

    மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான்  மெளலி.

    [அரியணையை அனுமன் தாங்கவும், அங்கதன் உடைவாளைக் கையில் கொண்டு நிற்கவும், பரதன் வெண்மையான கொற்றைக் குடை பிடிக்கவும், மற்ற இரண்டு தம்பியரான லக்ஷ்மணனும் சத்திருக்கனனும் வெண்சாமரை வீசவும், மணம் மிக்க செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளான திருமகள் பொருந்தப் பெற்றுள்ள திருவெண்ணெய்நல்லூர் தலைவனான சடையப்ப வள்ளலின் முன்னோராக உள்ளவர் எடுத்துக் கொடுக்க, ராமனுக்கு வசிஷ்டன் முடி சூட்டினான்]

    ஸ்ரீ  ஸீதாராமன் திருவடிகளே சரணம்!

    (முற்றும்)

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – 18

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -18

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு :  வையவன்

    ஓவியம் :  ஓவித்தமிழ்

     
     jey
    jey 1
    தகவல் :

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    கவிஞருடனும் நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டிருந்த கே.ஆர்.பாலன் எங்களில் ஒருவரானார்.  அனுபவரீதியாக பழுத்த பழம்போல் காட்சியளித்த அவர். திரையில் பல படங்களைத் தயாரித்த பெருமைக்குரியவர்.  எளிமையானவர். இனிமையாகப் பழகக்கூடியவர். இவரிடமிருந்து திரைத்துறைபற்றிய பல்வேறு செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது.   அப்படி பெறப்பட்ட செய்திதான் கவிஞர் வாலி அவர்களின் பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்கிற  பாடலின் உருவாக்கம் பற்றி நான் எழுதிய வாழும் தமிழே வாலி என்கிற நூலில் இடம்பெற்ற பகுதியாகும். 

     

    ஏ.வி.எம். நிறுவனத்தார் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த ஒரே படம்.. எம்.ஜி.ஆர். நடிப்பில் சண்டைக்காட்சிகளே இல்லாத படம் என்று பல தனித்துவங்களை உள்ளடக்கிய படம் அன்பே வா..  கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடல்கள் முழுவதுமாக இடம்பெற்ற இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சி பதிவான பின்னணி சுவையானது.  

     

    ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களது இயக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் கைவண்ணத்தில் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி!!

     

    முழுக்க முழுக்க காதலர்கள் இடையே உருவாகும் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்! கண்ணுக்கு குளிர்ச்சியாக சிம்லாவில் அன்றைய நாளில் படப்பிடிப்பு!  நாகேஷ் – மனோரமா நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்!  இத்திரைப்படத்தின் பாட்டுப்புத்தகம் கூட ஆர்.பி.எம். ரெக்கார்டு போன்று வட்டவடிவில் வந்தது இன்றும் நினைவில் உண்டு.  

     

    எம்.ஜி.ஆர். ரசிகர்களால் எண்ணிக்கை பாராமல் பார்க்கப்பட்ட பட வரிசையில் அன்பே வாவிற்கு தனி இடம் உண்டு!  புதிய வானம் புதிய பூமிலவ் பேர்ட்ஸ்நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்.. ஏ.. நாடோடி.. போக வேண்டும் ஓடோடி.. அன்பே வா.. அன்பே வா.. என்னும் பாடல்களுடன்.. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்!!

     

    இந்தத் திரைப்பாடலுக்கு கவிஞர் வாலி எடுத்துக்கொண்ட நேரம்  சற்றே வித்தியாசமானது.  இசையமைப்பு (Tune)கொடுக்கப்பட்டு எழுத முயன்றும் ஏனோ வார்த்தைகள் சரியாக பிடிபடாமல்நேரம் கடந்து கொண்டே சென்றது. பாடல் கிடைத்துவிட்டால்,பதிவு செய்யப்பட்டு பாடல்காட்சியை படம்பிடித்துவிடாலாம் என்று படக்குழுவினர் காத்திருக்க.. அமைக்கப்பட்ட இசையோ.. அருமை என அனைவராலும் ஏற்கப்பட்.. அந்த முழுநாளும் பாடல் பிறக்காமல் முடிந்துவிடுகிறது.  வீட்டிற்குச்சென்ற கவிஞர் சற்றே வருத்தமுடன் காணப்பட்டார்.  இரவு உணவு கூட வேண்டாம்.  பால் மட்டும் போதும் என்று கூற அவரின் மனைவி.. அவ்வாறே பால் எடுத்துச்செல்கிறார் அந்த அறைக்குள்.. கவிஞரின் கற்பனையில் வரி ஒன்று  தோன்றுகிறது..

     

    பாவலன் மறந்த பாடலில் ஒன்று

    பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று..

    தலைவனை அழைத்தேன்.. தழுவிட துடித்தேன்..

    பாடலின் பல்லவி பின் வருகிறது.. தான் எழுத மறந்த பாடலிது என்பதையே வரியாக்கி அந்த இசைக்கட்டுக்குள் கெட்டிக்காரத்தனமாக வைத்த வாலியைப் பாராட்டலாமே!

    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. கண்மூடுதே சொர்க்கம்.. கை மூடுதே வெட்கம்.. 

    எம்.ஜி,ஆர். சரோஜாதேவி.. இணைந்து குதிரை சாளர வண்டியிலே அந்தக் குளம்படிச்சத்தமே பின்னணி இசையாய் தொடரசெந்தூர வண்ணங்கள் வானம் முழுவதும் சிதறிவிழ.. மனக்கண்களில் இன்றும் தெரியும் இனிய பாடலாய்..

     

    http://www.youtube.com/watch?v=UMgp2hO5l_8

     

     

    ராஜாவின் பார்வை ராணியின் – Rajavin paarvai
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 107 (03.02.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    அனைத்தும் அறிந்த அறிவுடையவன்,
    அறநெறியைக் கடைப்பிடிப்பவன்,
    அறிவின் எல்லையைக் கடந்து நிற்பவன்,
    உயிர்களுக்கு இன்பம் தருபவன்,
    வினைகள எல்லாம் வென்றவன்,
    தகுந்ததைச் செய்யும் சித்தமுடையவன்,
    செயல்களுக்கு மூலமானவன்,
    தருமத்துக்கு முதலானவன்;

    தேவர்களின் தலைவன்,
    புனிதமானவன் பழமையானவன்,
    புலவன் ஆனவன் சினத்தைக் கடந்தவன்,
    தேவர்களுள் முதல்வன், இவ்வுலகின் தலைவன்,
    பரமன் சிறந்த குணம் உடையவன்,
    இவ்வுலகிற்கு விளக்கானவன்;

    தத்துவங்களை அறிந்தவன்,
    ஐம்புலன்களையும் அடக்கியாள்பவன்,
    விண்ணிலிருந்து இயங்குபவன்,
    அனைத்துக்கும் மூல காரணமானவன்,
    சித்திகள் அறிந்த சித்தன்,
    பெரியவன் தலைமைப்பண்பில் சிறந்தவன்,
    ஒளியாக விளங்குபவன்,
    இறைவன் ஆசிரியன் இயல்பான நற்குணத்தினன்,
    எம்முடைய அரசன் குறைவில்லாப் புகழை உடையவன்.

    குணத்தில் சிறந்த கோமான்,
    எல்லார்க்கும் நன்மை செய்பவன்,
    எல்லாச் செல்வமும் உடையவன்,
    சுயமாகத் தோன்றியவன்,
    நான்கு முகங்களைக் கொண்டவன்,
    அங்கம் பயந்தோன், அருகன்,
    அருள் தரும் முனிவன்;

    பண்ணவன், எண்வகைக் குணங்களையுடைவன்,
    விளங்குவதற்கரிய பழம்பொருளானவன்,
    விண்ணவன், வேதத்தின் முதல்வன்,
    அறியாமை இருளை நீக்குகின்ற ஒளியானவன்.

    இத்தகைய சிறப்புப்பெயர்களையும் குணங்களையும்
    வேதத்தின் ஒளியாக விளங்குபவனுமாகிய
    அருகதேவனைச் சார்ந்து இருந்தால் அன்றி
    பிறவி எனும் மூடிய அறையில் இருந்து
    வெளியேற முடியாது…

    இங்ஙனம் சாரணன் அவனும்
    அருகனின் புகழதனை எடுத்தியம்பினன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  176 – 191

    Share
  • இதுதானா ஆப்புங்கறது..?

    பவள சங்கரி

    காட்சி – 1

    ஹலோ, ஹலோ.. ஏனுங்க எவ்ளோ நேரமா போன் அடிக்குதே. அப்புடி என்னதான் செய்வீங்க. போன் அடிச்சா உடனே எடுக்கணும்கறது குட் மேனர்ஸ் . இதுகூட தெரியாதாக்கும்..

    ஆமாம்மா எங்களுக்கு வேற பொழப்பே இல்லை பாரு.  போனையே பாத்துக்கிட்டு எப்ப அடிக்கும்னு உக்கார்ந்திருக்கோமாக்கும்.  மனுசன் காலையிலருந்து, பேல் போட்றதுக்கு மாடா உழைச்சுக்கிட்டிருந்தா உனக்கு கிண்டலா இருக்குது. பேசமாட்ட பின்ன. சுகமா வீட்டுல ஃபேனுக்கடிய உக்காந்துக்கிட்டு, ஹாயா வேலைக்காரிகிட்ட அதிகாரம் பண்ணிக்கிட்டு, நேரத்துக்கு ஜூஸ் குடிச்சு உடம்பையும் பாத்துக்கிட்டு மேடம் சுகமா இருக்கணும்னா நாங்க இங்க இப்புடி கடந்து உழைச்சாத்தானே ஆச்சு. சரி வேலை கடக்குது. என்னத்துக்கு போன் பண்ணின அதச்சொல்லு.

    ஏனுங்க என்ன இப்படி சொல்றீங்க. நானும்தானே பிசினஸ் பன்றேன். சும்மாவா இருக்கேன்.  சூரத் மில்ஸ் புடவை வியாபாரம் வீட்டில் வச்சே எப்படி விவரமா பன்றேன்னு போய் நம்ம அக்கம் பக்கத்து தெருவுல வச்சிக் கேட்டுப்பாருங்க.  எதோ எனக்கு உண்டானதை நான் சம்பாரிச்சுட்டுதானே இருக்கேன்.

    ஆமா, லட்சம், லட்சமா சம்பாதிக்கிறீங்களாக்கும். ஆர்டர் போடற புடவைல பாதி உனக்கு புடிச்சிப்போவுது. மீதி உங்க அக்கா தங்கச்சிக எடுத்தது போக பத்துப் புடவை விப்பியா , அதுல எத்தனை லட்சம் சம்பாதிப்பீங்களாம். என்னைக்காச்சும் என் பாக்கெட்டுக்கு வேட்டு வக்காம இருந்தா சரிதான் தாயீ.. அதுசரி போன் பில்லு ஓடிக்கிட்டிருக்கு, சீக்கிரம் மேட்டருக்கு வா.

    ஆமா நீங்கதான் ரேட் கட்டர் போட்டிருக்கீங்களே அப்புறம் என்னவாம்? சரி, சரி, நானும் மேட்டரை சொல்லத்தான அவசரமா உடனே போன் பண்ணினேன். அதுக்குள்ள உங்க பிரதாபத்தைச் சொல்லி என்னை டைவர்ட் பண்ணிப்புட்டீங்க. ஒரு ஆச்சரியமான விசயம். சொன்னா நீங்க அசந்து போயிடுவீங்க. நம்ம வீட்டுக்கு இப்ப ஒரு வி.ஐ.பி வரப் போறாங்களாம். எனக்கு போன் வந்துது.

    என்னது, வி.ஐ.பி.யா நம்ம ஊட்டுக்கா? அட அது யாரு? யாரு போன் பண்ணது உனக்கு?

    அதாங்க, அன்னைக்கு நாம ஹோட்டலுக்கு போனப்ப ஒருத்தர் வந்து நீங்கதான சூரத் சாரீஸ் கடை ஓனரான்னு கேட்டாரே, தன்னைக்கூட ஒரு ஜவுளிக் கடைகாரருன்னு அறிமுகப்படுத்திக்கிட்டாரே. அவருதான் போன் பண்ணினார்.

    என்னவாம். எதுக்கு போன் பண்ணினார் ?

    அதொன்னுமில்லீங்க, யாரோ ஒரு பெரிய ஜவுளிக் கடை முதலாளியாம்.  மல்டி மில்லியனராம், நம்ம வீட்டிற்கு பிசினஸ் பற்றி பேச வரப்போறாராம். என் பிசினஸ் டெக்னிக் ரொம்ப பிடிச்சிருக்காம் அவருக்கு, அதனால என்னோட பேச வேண்டுமாம்.  அவரு ரொம்ப பெரிய ஆளாம். பெரிய பெரிய அரசியல் தலைவரெல்லாம் கூட அவுங்க வீட்டில் வந்து தங்குவார்களாம். அவங்க வீடுகூட அவ்ளோ பெரிசாம்.

    அதுசரி. அவுங்களுக்கு நம்ம ஊட்டுல என்ன வேலையாம்?

    அதாங்க பிசினஸ் விசயமா பேசணுமாம். சொன்னேனே. சரி நீங்க சீக்கிரமா வீட்டுக்கு வந்துடறீங்களா. எனக்கு ஒரே டென்சனா இருக்குப்பா…

    அட ஏம்மா நீ வேற. எனக்கே இன்னைக்கு வேலை நிறைய இருக்குன்னு மதியம் சாப்பாட்டுக்கே வர முடியாதுன்னு கடக்கறேன். இன்னைக்கு ராத்திரிக்குள்ள பேல் போட்டு சரக்கை அனுப்பணும். இரண்டு ஆளுங்க வேற லீவு. நானே இங்க வேலை செய்துட்டிருக்கேன்.  சரி போனை வைக்கிறேன்.

    காட்சி  2

    ஐயா, வாங்க வணக்கமுங்க.  நீங்க வரப்போறதா அண்ணாச்சி போன் பண்ணினார். ரொம்ப மகிழ்ச்சிங்க.  காபி சாப்பிடலாங்களா?

    இல்லம்மா, நான் வெளியே எங்கேயும் எதுவும் சாப்பிடறதில்ல. எங்க வீட்டம்மாவோட ஸ்டிரிக்ட் ரூல் அது. என் ஆரோக்கியத்துல அவங்களுக்கு அவ்வளவு அக்கறை. மதியம் சாப்பாடு வீட்டிலருந்துதான் வரும். சாரிம்மா. உங்களையும் வருத்தப்பட வைக்க முடியல. மோர் மட்டும் கொஞ்சம் போல கொடுங்க.

    சரிங்க ஐயா. இதோ எடுத்துட்டு வறேன்.

    இப்ப நான் வந்த விசயமே, இந்த ஊரில நீங்கதான் சூரத் மில்ஸ் புடவைகள் ஏஜென்சி எடுத்திருக்கிறீங்க இல்லையா?  இவ்வளவு நாள் இந்த ஊரிலேயே இருந்துகிட்டு உங்களைப்பற்றி தெரியாமையே இருந்திருக்கிறேன்.  ரொம்ப சந்தோஷமம்மா. குடும்பத்தையும் கவனிச்சிக்கிட்டு வியாபாரத்தையும் நல்லபடியா செய்யுறதுன்னா அதுக்கு ரொம்ப சாமர்த்தியம் வேண்டும்.  ரொம்ப சர்வ சாதாரணமா போகிற போக்கில் நீங்கள்லாம் வீட்டில இருந்துகிட்டே அருமையா பிசினஸ் பண்ணுறீங்க. இன்றைய பெண்கள் குடும்ப பாரத்தை சுமப்பதிலும் பங்கெடுத்துக் கொள்வது பாராட்டப்பட வேண்டிய விசயம். வாழ்த்துகள் அம்மா.

    [அதற்குள் 4 முறை அந்த அதிபருக்குப் போன் வந்துவிட, அவர் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு நம்ம கதை நாயகி தாரணியிடம் பேசுவதில் முக்கியத்துவம் கொடுத்தது அவளுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. தன்னம்பிக்கை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. சே, இவரல்லவோ பெரிய மனிதர் என்று அவரை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி வைத்துவிட்டாள்]

    சரிம்மா ரொம்ப அவசரமா போக வேண்டியதிருக்கிறது. நீங்க உங்க சரக்கையெல்லாம் நம்ம கடைக்கே கொடுத்துடலாம். உங்களுக்கும் வியாபாரம் பெருகுவதோடு, எளிதாகவும் இருக்கும் இல்லையா. எங்க கடையில ஒரு பக்கம் இருந்துட்டுப்போவுது. உங்களுக்குரிய கமிஷன் வந்துடும். சரியா. நீங்களும் எங்களோட பார்ட்னர் ஆயிடுவீங்க. கொஞ்ச நாள்ல நீங்களும் எங்க கடை மாதிரியே ஒரு கடை ஆரம்பிச்சுடலாம். எல்லாரும் நல்லா இருக்கோணும் அதான் நம்ம ஆசையே. என் பொண்ணாட்டம் இருக்குற உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிப்போச்சிம்மா. நீங்களும் சீக்கிரம் முன்னுக்கு வரணும். சரிம்மா நல்லதும்மா. நான் கிளம்பறேன். மத்த விசயங்களெல்லாம், இதோ இவரு என்னோட பி.ஏ. அவர் பார்த்துக்குவார். நான் வரட்டுமாம்மா.

    காட்சி  3

    அம்மா, வணக்கங்க. இதோ இந்த பங்குதாரர் ஒப்பந்தம் இருக்கு இதுல இருக்குறதை படிச்சுப் பார்த்து கையெழுத்து போட்டால் நல்லாயிருக்கும்மா.

    ஏனுங்க இது என்னங்க இவ்வளவு பெரிய தொகை பங்குப் பணமா எழுதியிருக்கீங்க. நாங்க இவ்வளவு பணமெல்லாம் போட முடியாதுங்களே.  அதனால எனக்கு இது ஒத்து வராதுங்களே. சாரிங்க.

    அம்மா, ஐயாவும் இதை யோசிச்சாங்க. அதான் இன்னொரு டீல் கூட சொல்லியிருக்காங்க. அதாவது நீங்க பணமே தர வேண்டாம், ஒர்க்கிங் பார்ட்னரா சேர்ந்துக்கலாம்.  முதலே போடாமல் பார்ட்னர் ஆகலாம். தினமும் சில மணி நேரம் கடையில் வந்து இருந்தால் போதும். வேற ஒன்னும் நீங்க செய்ய வேண்டியதில்லை.

    அப்படீங்களா.. எங்க வீட்டுக்காரர்கிட்ட கேட்டுக்கிட்டு உங்களுக்குப் போன் செய்யறேனுங்க..

    காட்சி  4

    ஏனுங்க, என்னங்க நான் நடந்ததெல்லாம் சொன்னேனே. இங்க பாருங்க இந்த பார்ட்னர்ஷிப் டீட்.

    ஏம்மா, இது எங்கயோ உதைக்குதே. அவ்ளோ பெரிய பிசினஸ்மேன் நம்மகிட்ட டீல் வச்சுகிறதுக்கு என்ன காரணம்னு புரியலியே.  கொஞ்சம் யோசிக்கலாம்மா. அவசரப்படாதே,

    அட ஏனுங்க நீங்க வேற எதுக்கெடுத்தாலும் சந்தேகம்தான் உங்களுக்கு. ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. அதைப்போய் நாம் மிஸ் பன்றது எனக்கு நல்லதா படலை.

    நான் கொஞ்சம் நிதானமா யோசிச்சு முடிவெடுக்கலாம்னுதான் சொல்றேன்.  அவசரப்பட்டு, புது வெள்ளம் வந்து பழைய செல்வத்தையெல்லாம் அடிச்சிக்கிட்டுப் போயிடக்கூடாது. அவசரப்படாதே, அவ்ளோதான் நான் சொல்ல முடியும். அப்பறம் உன் இஷ்டம்.

    ஏனுங்க, அவ்ளோ பெரிய பிசினஸ்காரங்க நமக்காக எவ்ளோ நாளைக்கு வெயிட் பண்ணுவாங்க. இது ஒரு சாதாரண டீல் அவங்களுக்கு. விட்டா நமக்குத்தான் நட்டம். அவ்ளோ பெரிய மனுஷர் அவர், நம்ம வீட்டை தேடிக்கிட்டு வறார். நாம அதுக்குரிய மரியாதையை கொடுக்கணுமில்லையா. நான் கையெழுத்து போடலாம்னுதான் இருக்கேன்.

    அப்பறம் உன் இஷ்டம்.  இந்த சூரத் மில்ஸ் டீலர்ஷிப் உனக்கு ரொம்ப முக்கியம். உங்க பரம்பரையா வந்துட்டிருக்கு. உங்க அப்பாவுக்காக உனக்குக் குடுத்திருக்காங்க. இந்த ஊருக்கு உனக்கு மட்டுமே கொடுத்திருக்காங்க. பார்த்து நடந்துக்க. அதுக்கு ஏதும் பிரச்சனை வந்துடப் போறது.

    இல்லைங்க நான் முடிவு பண்ணிட்டேன். ரிஸ்க் எடுக்காம வெற்றி பெற முடியாது.

    காட்சி  5

    ஏனுங்க, ஏனுங்க, நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்கமாட்டீங்களே.  எனக்கு மனசே சரியில்லைங்க. அவிங்க கடைக்குப் போகவே எனக்கு புடிக்கலை. அங்க மரியாதையே இல்லைங்க எனக்கு. என்னையும் அங்க வேலை செய்யிற சேல்ஸ் கேர்ள்ஸ் மாதிரி நடத்துறாங்க. தப்பு பண்ணிட்டோம்னு தோணுதுப்பா. பேசாம வெளீல வந்துடலாம்னு தோணுது. ஒரே டென்சனா இருக்கு.

    இதைத்தான் நான் முதல்லியே சொன்னேன். அவசரப்படாதேன்னு. என் பேச்சைக் கேட்டியா நீ. நாளைக்குப் போய் அந்த பெரியவர்கிட்ட பேசிப்பாரு. என்ன சொல்றார்னு பார்க்கலாம்.

    அவரைப் பார்க்கவே முடியலைங்க.  பிசியா இருக்கார்னு சொல்றாங்க. இல்லேனா வெளிநாடு போயிருக்கறதா சொல்றாங்க. ஒன்னுமே புரியலைங்க.

    சரி, அமைதியா இரு. விசாரிச்சுப் பார்க்கலாம். எதை எடுத்தாலும் எடுத்தோம், கவுத்தோம்னு செய்யிறதே உனக்கு வாடிக்கையாப்போச்சு.

    தாரணியின் கணவன் மனது கேட்காமல் அந்தக் கடை முதலாளி பற்றியும், கடை நிலவரம் பற்றியும் தன் நண்பர்களிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது. சூரத் மில்ஸின் ஓனரின் மகனுக்குத்தான் இந்தப் பெரியவரின் மகளை சமீபத்தில் திருமணம் முடித்திருக்கிறார்கள் என்றும் பரம்பரையாக நல்ல நட்பின் அடிப்படையில் தாரணிக்குக் கொடுத்திருக்கும் டீலர்ஷிப்பை தங்களுக்கு மாற்றிக்கொள்ளவே இப்படி சாணக்கியத்தனம் செய்திருக்கும் அந்தப் பெரிய மனிதரின் திட்டம் புரிந்து போனது.  தாரணியிடம் இதைச் சொல்லி சமாதானப்படுத்த வேண்டும் என்று நொந்தபடி வீடு வந்தான் அவள் கணவன்.

    ஏனுங்க இதுக்குப்பேர்தான் ஆப்பு வக்கிறதா?  தெரியாமப் போச்சே எனக்கு. அடக்கடவுளே. உள்ளதும் போச்சே..

    முற்றும்.

    Share
  • வார ராசி பலன்:03-02-14-09-04-14

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: சுய தொழில் புரிபவர்கள், நவீன இயந்திரங்கள் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்து இலாபம் பெறலாம். மாணவர்கள்,  இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகும். இந்த வாரம், கர்ப்பிணிப் பெண்களின் நோய்கள் தீர்ந்து, ஆரோக்கியம் சீராக இருக்கும். பணியில் உள்ளவர்கள், எதிர்பார்த்த,  வங்கிக் கடன் விரைவில் கிடைக்கும். கலைஞர்களின் முயற்சிகள் வெளி நாட்டு பயண வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். பொது வாழ்வில் இருப்போர்கள் தங்களுடைய கொள்கைகளைக் கட்டிக்காக்க போராட வேண்டியிருக்கும். திறமையான திட்டமிடுதல் மூலம்,   கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள், வேண்டிய லாபத்தை ஈட்டுவார்கள்.
    ரிஷபம்:  கலைஞர்களுக்கு வார முதல் பகுதி,  அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். பணியில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு போட்டிகளில் பங்கேற்கும் பணியில் உள்ளவர்கள்,  புதிய வீடு வாங்கி மகிழ்வர்.  பெண்களுக்கு, வீட்டுப் பராமரிப்பு செய்யவும் மற்றும் அலங்காரப் பொருட்களை  வாங்கவும் வேண்டிய பணம் கிட்டும். தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆதரவால், சுய தொழில் புரிபவர்களுக்கு தொழிலில் இருந்த இடையூறுகள் படிப்படியாய் குறையும். கிடைக்கும் நல்ல  தொடர்புகள், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்புமுனைகளை உண்டாக்கும்.
    மிதுனம்:  இதமான அணுகுமுறை மூலம் வியாபாரிகள் பாக்கிகளை எளிதில் வசூலிக்கலாம். இந்த வாரம் உறவுகள் பாராமுகமாய் இருந்த போதிலும், அவர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கென்று பணமும், நேரமும் செலவு செய்யும் நிர்ப்பந்தமிருக்கும். முதியவர்கள் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும். பெண்கள் இதமாகப் பேசினால் உறவுகள் தொடர்கதையாகும் என்பதை அவ்வப்போது நினவில் கொள்வது நல்லது. விலை உயர்ந்த ஆடைவகைகள், நவீன பொருட்கள் ஆகியவை மாணவர்கள் வசமாகும்.
    கடகம்: வெளிடங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் தங்கியிருப்பவர்கள் அதிகமாக ஆசைப்படுதலையும், வீண் செலவுகளையும் சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறையை ஓரளவு சமாளித்துவிட முடியும். யாரையும் குற்றம் சாட்டிப் பேசாமலிருந்தால், கலைஞர்களின் குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது. பணியில் இருப்பவர்கள் கடனில் வண்டி வாங்குவதை சற்று ஆறப் போடவும். மாணவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தை சாதிக்கலாம். வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்பவர்கள் அதிக லாபத் திற்கு ஆசைப்படாமலிருந்தால், தங்கள் பெயரை நிலை நிறுத்துக் கொள்ளலாம்.
    சிம்மம்: நெருங்கிப் பழகிய பங்குதாராரர்கள் கருத்து வேறுபாடால் உங்க ளை விட்டுப் பிரியலாம். எனவே வியாபாரிகள் எதிலும் நிதானமாய் இருப்பது நல்லது. பணி புரிபவர்கள் எந்த விஷயத்திலும் விடாப்பிடியாய் இருப்பதைக் குறைத்துக் கொண்டால் வாக்குவாதங்கள், இராமல் வேலைகளை செய்ய முடியும். மாணவர்கள் விரும்பிய உணவு வகைகளை உண்பதிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், ஆரோக்கியம் குன்றாம லிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கை நல்ல முறையில் பயன்படுத்தவும். முதலீடுகள் தொடர் பான விஷயங்களில் கலைஞர்கள் எச்சரிக்கையாய் செயல்படுவது அவசியம்.
    கன்னி: கலை நயத்துடன் செய்யும் காரியங்களால், அலுவலக விழா ஆகியவற்றில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் பிரச்னைக் குரிய விஷயங்களில் இருக்கும் சட்ட சிக்கல்களை உணர்ந்து முடிவெடுப்பது நல்லது. பெண்கள் வரவு, செலவு இரண்டிலும் கவனமாக இருந்தால், பொருளாதாரம் சறுக்கா மல் இருக்கும். மாணவர்கள் கூட்டாக செயல்படும் போது அடுத்தவரின் கருத்துக் களுக்கு மதிப்பு கொடுத்து செயல்பட்டால், கருத்து வேறுபாடு தோன்றாது. கலைஞர்கள் உடனிருப்பவர்கள் நடுவே வீண் போட்டி, கருத்து பேதம் ஆகி யவை வளர இடம் கொடாதீர்கள். கட்டுக்கோப்பாய் வேலைகளை முடிக்கலாம்.
    துலாம்:குடும்ப, ஒற்றுமை சிறக்க, பெண்கள் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். வியாபாரிகள் பணியாளர்களின் சிறப்பான ஆதரவைப் பெற, அவர்களிடம் இன்முகத் தோடு நடந்து கொள்வது அவசியம். பொது வாழ்வில் உள்ளவர்கள் பிறர் குற்றம் சொல் லாத அளவில் தங்கள் பொறுப்புகளை முடிப்பது நல்லது. கலைஞர்களை முக்கியமான பொறுப்புகள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கலாம். சுய தொழில் புரிபவர்கள் வாக்கு றுதிகளை பூர்த்தி செய்யும் பொருட்டு கடுமையான உழைப்பில் இறங்க வேண்டி யிருக்கும். கடன்பட்டாவது குடும்ப உறுப்பினர்களை திருப்தி படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். பங்குச் சந்தையில் அதிக முதலீடு வேண்டாம்
    விருச்சிகம்: இந்த வாரம் மேற்கொள்ளும் பயணம் ஆதாயத்தை ஏற்படுத்தும் விதமாக அமைவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் செயலாற்றுவார்கள். பெண்கள் பணியின் தன்மை அறிந்து செயல்பட்டால், பணிகள் தடங்கலின்றி நடைபெறும் . கலைஞர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, பணியில் இறங்கி தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வர். பொது வாழ்வில் உள்ளவர்கள் செயல்படுத்தும் திட்டங்களில், அடுத்து வரும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால், தவறுகளைக் களைந்து, முன்னேற முடியும்.மாணவர்கள் விரும்பிய பொருள் கிடைப்பதில் இழுபறி இருக்கும்
    தனுசு: பெண்கள் செலவுகளில் சிக்கனமாய் இருந்தால் பொருளாதாரச் சறுக்கல்கள் குறையும். இந்த வாரம் உதவுவதாக வாக்குறுதி அளித்தவர்கள் கடைசி நேரத்தில் பின்வாங்குவதால், சில தடுமாற்றங்கள் தோன்றி மறையும். பணியில் இருப்பவர்கள் கவனக் குறைவிற்கு இடமின்றி செயலாற்றினால், பதவிக்குரிய கௌரவத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். .பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு அதிக நேரம் உழைப்பீர்கள். மாணவர்கள் மனதில் பட்டதை மறைக்காமல் பேசுவதால், சில எதிர்ப்புகளுக்கு ஆளாக நேரிடும். தந்தை வழி உறவுகளால், எதிர்பாராத விரயங்களோடு மன உளைச்சலும் வந்து சேரலாம்.
    மகரம்:இந்த வாரம் கலைஞர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களில் பட்டும் படாமலும் நடந்து கொண்டால், மன உளைச்சலை தவிர்த்து விடலாம். அதிக அலைச்சல், தூக்கம் கெடுதல் ஆகியவை அன்றாட வாழ்வை பாதிக்காமல் பார்த்துக் கொண்டால், பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் தங்கள் வேலையில் ஈடுபட முடியும். மாணவர்கள் சலிப்புக்கு இடம் தராமல், பணியில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் பண ஓட்டத்திற்கு ஏற்றவாறு செலவுகளை சுருக்கிக் கொண்டால், கடன் வாங்கும் சூழலைத் தவிர்த்து விடலாம். வாய்ப்பும், அதிர்ஷ்டமும் உங்களை தேடிவர வியாபாரிகள் சுறுப்பாகவும், சாமர்த்தியமாகவும் செயல்படுவது நல்லது .
    கும்பம்: வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல், காசோலை வழங்குதல், ஆகியவற்றில் முறையாக செயல்பட்டு உங்கள் கௌரவம் நிலைக்குமாறு செய்து கொள்ளுங்கள். இந்த வாரம் மாணவர்கள் செய்ய மறந்த வேலைகளுக்காக அபராதம் கட்ட நேரிடலாம். எனவே விழிப்புடன் இருப்பது நல்லது. பெண்கள் அற்ப காரணங்களுக்காக, பிறரிடம் சண்டை, வாக்கு வாதத்தில் இறங்க வேண்டாம். சாமர்த்தியமாக இருந்தால் கலைஞர்கள் வருவதை சிக்கென பிடித்துக் கொண்டு, வரவை அதிகரித்துக் கொள்ளலாம். பணியில் இருக்கும் பெண்கள் தக்க சமயத்தில், உங்களின் சிரமங்களை, எடுத்துச் சொல்லி, தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
    மீனம்: சரளமான பணவரவு பெண்கள் மனத்தில் மகிழ்ச்சியையும், உதட்டில் புன்னகையையும் பூக்கச் செய்யும். பிறர் உங்களை தூண்டிவிட்டாலும், நேர்மையான வழியிலேயே செல்லும் வியாபாரிகளுக்கு நற்பெயர் என்றும் நிலைத்திருக்கும். முதியவர்கள் ஆரோக்கிய நலிவுக்குரிய மருந்துகளை முறையாக உட்கொண்டால், மருத்துவச் செலவுகளை கட்டுக்குள் வைத்து விட லாம். மாணவர்கள் வாகனம் ஓட்டுகையில், உரிய விதிகளை கடை பிடிப்பது அவசியம். இந்த வாரம் கலைஞர்களுக்கு வாகனங்கள் திடீர் செலவு வைக்கும். மனை வாங்குகையில் நம்பிக்கையான நபர்களை அணுகுங்கள். நல்ல தேர்வாக அமையும்.

    Share
  • சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]

    A Rogue Aseroid

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    Rogue Asteroids are the Norm in our Solar System

    http://www.youtube.com/watch?v=Pu1t1Fevajk

    http://www.youtube.com/watch?v=A8VVAZ1JAzs

     

    21 ஆம் நூற்றாண்டில் ஒரு முரண்கோள் பூமியோடு மோதி அபாயம் விளைவிக்கும் எதிர்பார்ப்பு முந்தி நினைத்ததை விட 20% மிகையானது.  ஹெர்ச்செல் விண்ணோக்கி மூலம் நோக்கியதில் ஒரு விண்கல் [Space Rock :  Apophis 99942] சில வருடங்களில் பூமியை நெருங்கி விடும் என்று ஈசா கணிக்கிறது !

    ஐரோப்பிய விண்வெளித் துறையக விஞ்ஞானிகள்.

     

    Asteroids-1

    [பிப்ரவரி 15, 2013]

    http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded

    [Meteor Strike Injures 1200 People in Russia]

    “சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ ஒரு முரண்கோள் அல்லது வால்மீன் மோதும் அபாயம் நேர்ந்து, மனித நாகரீக வாழ்வுக் கலாச்சாரம் முரணாகி மனித இனம் அழியப் போகிறது.”

    கார்ல் சேகன்

    “என்றாவது ஒரு நாள் நிச்சயம் ஒரு முரண்கோள் வழி தவறி நமது பூமியைத் தாக்க வருகிறது என்று முன்னறிவிக்கப் படலாம் ! அப்போது நீங்கள் என்ன செய்வீர் ?  ஒன்று செய்ய முடியும். முரண்கோளின் சுற்றுப் பாதையை மாற்றி விடலாம். அதாவது அதன் பாதையை மாற்ற ஒரு விண்கப்பலை ஏவி, முரண் கோளில் வீழ்ந்து மோதச் செய்ய வேண்டும்.”

    ஆன்டி செங்  [Chief Scientist, John Hopkins’ Applied Physics Laboratory]  

     

    Asteroid close encounter

     

    இம்மாதிரிப் பூமி-முரண்கோள் நெருங்கிக் குறுக்கிடுவது இன்னும் குறைந்தது இரண்டு நூற்றாண்டுகள் நிகழலாம்.  இந்தப் பூத முரண்கோள்  இரட்டை முரண்கோள் [Binary Asteroid] என்று குறிப்பிடப் படுகிறது.   [Asteroid 1998 QE2] எனப்படும் இந்த முரண்கோளை 2000 அடி அகலத் துணைக்கோள் ஒன்று சுற்றி வருகிறது.  இது ஓர் அபூர்வக் காட்சி !  650 அடி நீளத்துக்கு [200 மீடர்] மேற்பட்ட முரண்கோள்களில் 16% எண்ணிக்கை இரட்டை முரண்கோள் அல்லது மூன்று முரண்கோள் ஏற்பாடுகளாய் [Binary or Triple Systems] அமைந்துள்ளன.

    நாசா விண்வெளி விஞ்ஞானிகள்

     

    Fig 1F Asteroid Belt Between Mars & Jupiter

    சூரிய மண்டத்தில் சுற்றித் திரியும் மூர்க்க முரண்கோள்கள்

    நாசாவின் சமீபத்தைய கணக்குப்படி சுமார் 10,000 அண்டக் கற்கள் [Space Objects] புவி நெருங்கும் முரண் கோள்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் சுமார் 1300 முரண்கோள்கள் பூமியைத் தாக்கும் அபாய எதிர்பார்ப்பு உடையவை என்று முத்திரை இடப்படுகின்றன. நாசா விஞ்ஞானிகள் கண்ணும் கருத்துமாய் அவற்றின் போக்கைக் குறித்துக் கொண்டுள்ளனர்.  அவற்றால் இப்போது எந்த அபாயமும் இல்லை என்று நாசா உறுதி அளிக்கிறது.  ஆனால் பூமிக்கு மேல் விழுந்து தாக்கப் போகும் ஒரு முரண்கோள் அபாய  எதிர்பார்ப்பு 1200 ஆண்டுகளில் ஒன்று என்று அறிவிக்கிறது !

    முன்பு மதிப்பீடு செய்தபடி, சராசரி விட்டம் 270 மீடர் [880 அடி] அளவீட்டில் 60 மீடர் [200 அடி] கூடக் குறைய இருப்பின், அதன் பயங்கரப் பளு வீழ்ச்சிப் பூமியில் 500 மெகா டன் குண்டு வெடிப்பை உண்டாக்கும்.

    சூரிய மண்டலக் கோள்கள் உண்டான ஆரம்பமான காலங்களில் பற்பல முரண்கோள்கள், வால்மீன்கள் பூமிக்கு அருகே நெருங்கித் தாக்கி ஏராளமான நீர் வெள்ளத்தைக் கொட்டின என்பதாக யூகிக்கப் படுகிறது.

     

    Fig 1A Comets

     

    சுற்றும் இரட்டை முரண்கோள் அமைப்பு [Binary System Asteroid] ஒன்று பூமியை நெருங்கிக் கடக்கிறது ! 

    2013 மே மாத 29 ஆம் தேதியன்று இரண்டு மைல் [300 கி.மீ.] நீட்சியுள்ள ஒரு முரண்கோள்  [Asteroid 1998 QE2] பூமிக்கு வெகு அருகில் 3.6 மில்லியன் மைல் [5.8 மில்லியன் கி.மீ.] தூரத்தில் கடந்து செல்கிறது.   அந்த எதிர்பாராத நெருக்க நகர்ச்சியால் பூமிக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் உறுதி அளிக்கிறார்.   அதே சமயத்தில் அந்த முரண்கோளைச் சிறு துணைக்கோள்  ஒன்று சுற்றி வருகிறது !  இந்த இரட்டை முரண்கோள் அமைப்பானது, பூமியைக் கடப்பதை விஞ்ஞானிகள் முதன் முறைக் கண்கொள்ளாக் காட்சியாய் கண்டு வியப்புறுகிறார் !   பூமி-நிலவுக்குள்ள இடைவெளி போல் 15 மடங்கு தொலைவில் முரண்கோள் கடந்தது என்று அறியப் படுகிறது.  இந்த முரண்கோள் மனிதக் கண்களுக்குப் புலப்படாது.   ஆனால் ரேடார் தேடலில் காண

    ​ ​

    முடியும்.   காலிஃபோர்னியா, பியூட்டரிகோ ரேடார்கள் மூலம் வானியல் விஞ்ஞானிகள் இதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.  இவ்வித விண்ணோக்குப் பயிற்சிகள் மூலம், விஞ்ஞானிகள் மற்ற முரண்கோள் நகர்ச்சிகளைப் பற்றிக் கற்றுக் கொள்ள முடிகிறது. 

    Asteriods -1

     

    “2013 ஏப்ரல் மாதத்தில் வால்மீன் இஸான் [Comet ISON] , சூரியனை மிகவும் நெருங்கி வருவதால் முதன்முறையாக அதன் ஒளிவெள்ளம் பளிச்செனத் தெரிகிறது.  அத்துடன் ஆவியாகும் பனியுறைவுப் பகுதி [Volatile Frosting] இயக்கம் குன்றிய கீழடுக்கில் புலப்படுகிறது.  இப்போது வால்மீன் சூரியனை மிக்க நெருங்கி, அதன் நீர்வெள்ளம் உட்கருவிலிருந்து [Comet Nucleus] வெளியேறி, உட்பகுதியின் அந்தரங்கங்களைத் தெளிவாய்க் காட்டுகிறது.”

    காரன் மீச் [வானியல் ஆய்வுக்கூடம், ஹவாயி பல்கலைக் கழகம், ஹானலூலு]

    “வால்மீன்கள் தம் வடிவ அமைப்பிலே ஒரு சீரான கட்டுருவில் இருப்பதில்லை !   அதன் மேற் பகுதி கொந்தளித்து வெளியேறிப், புதிய உட்பகுதி தெரிய வழி வகுக்கிறது.  இந்த வான்மீனின் போக்கை நாங்கள் அடுத்த ஆண்டும் கூர்ந்து நோக்கி ஆய்ந்து வருவோம்.  குறிப்பாக வால்மீன் பரிதிக் கனல் நெருக்கச் சூழ்நிலையில் அகப்பட்டு, பிளவு பட்டுத் துண்டு துண்டாகி, அதன் உட்பனிப் பாறைத் தோற்றம் தென்பட்டால்,  அந்நிகழ்ச்சியை வரும் 2013 நவம்பர் மாதத்தில் நாங்கள் காண மிக்க ஆர்வமோடு இருக்கிறோம்.”

    ஜாக்லீன் கீன் [வானியல் ஆய்வுக்கூடம், ஹவாயி பல்கலைக் கழகம், ஹானலூலு]

     

    Fig 4 Asteroid Hitting the Earth

     

    சூரியனை  நோக்கி நேரே பாயும் தீவிர வால்மீன் ! 

    2013 மே மாதம் 31 இல் ஹவாயி விண்ணாய்வு நோக்கி “ஜெமினி” அடுத்தடுத்து வால்மீன் இஸானைப் [Comet C/2012 (ISON)] படமெடுத்து, அது பரிதியை நேராக மோதப் போவதாய்க் காட்டியுள்ளது.  இந்த அபூர்வ விண்வெளி வான வேடிக்கை விந்தைக் கண்காட்சி 2013 நவம்பர் அல்லது டிசம்பரில் நேரும் என்று ஜெமினி வானியல் விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்.   ஆனால் வால்மீனுக்குத் தகுதியான உட்பொருள் உள்ளதா என்பது தெரியாததால், வான வேடிக்கை நேராமலும் போய்விடலாம்.

    ஜெமினி விண்ணோக்கி கால அடிப்படையில் அடுத்தடுத்துக் கண்ட வால்மீன் நகர்ச்சியில் அது சூரியனுக்கு அப்பால் சுமார் 455-360 மில்லியன் மைல் [730-580 மில்லியன் கி.மீ] அல்லது [4.9 – 3.9 AU (Astronomical unit)] [1 AU= mean distance between Earth and Sun] தூரத்தில் எதிர்நோக்கி வருகிறது.  அது பூதக்கோள் வியாழனைச் சுற்றும் வால்மீனின் தூரத்துக்குள் வருகிறது.   அப்போது வால்மீனின் குப்பைப் பனிக்கோளத்தின் [Dirty Snowball] தூசிகள் ஏற்கனவே வெளியேறிப் போய்விட்டன என்று தெரிகிறது.  சூரியப் புயலும், கதிர்வீச்சு அழுத்தமும்  [Solar Wind & Radiation Pressure] நேர் எதிரே சுற்றிவரும் வால்மீனின் நீர் மய / அயனி நீண்ட வாலை உருவாக்குகின்றன.

     

    Spectacular Comet ISON

     

    வால்மீன் இஸான் 2012 ஆண்டில் ரஷ்யப் பொழுதுபோக்கு வானியலரால்  [Russian Amateur Astronomers] கண்டுபிடிக்கப் பட்டது.   ஓர்ட் முகில் அரங்கில் [Oort Cloud Region] உண்டாகும் வால்மீன் முதலில் சூரியனை நெருங்கிச் சுற்றிவரும் போது,  அதன் இயக்கம் உக்கிரமாய் இருந்தும், அண்டிக் கதிரடி பட்டதும் தூள் தூளாகி ஆவியாகி விடுகிறது !   வால்மீன் இஸானை நாசாவின் ஹப்பிள் தொலை

    ​ ​

    நோக்கியும் கண்டுள்ளது.  2004 இல் நாசா ஏவிய சுவிஃப்ட்டு துணைக்கோளின் புறவூதா நோக்குகள்

     ​ ​

    [NASA’s Swift Satellite Ultraviolet Observations]  வால்மீன் இஸான், ஆண்டு ஆரம்பம் முதல்  விநாடிக்கு 850 டன் தூசியை வெளித்தள்ளுகிறது என்று கணித்துச் சொல்கின்றன.   அதிலிருந்து விஞ்ஞானிகள் வால்மீன் “கோமாவின் உட்கரு”  [Coma’ Nucleus] 3 முதல் 4 மைல்கள் [5-6 கி.மீ] இருக்கலாம் என்று ஊகிக்கிறார்.   அதாவது  இஸான் வால்மீனின் “கோமாத் தலை” சுமார் 3000 மைல் [5000 கி.மீ] இருக்க வேண்டும் என்று கணிக்கிறார்.    2013 நவம்பர் 28 தேதி  வால்மீன் இஸ்கான் 800,000 மைல் தூரத்தில் [1.3 மில்லியன் கி.மீ] பரிதிக் கனல் கொந்தளிப்பு மண்டலத்தைத் [Corona] தொடப் போகலாம்.   அதற்குச் சற்று முன் வால்மீன் பேரொளிச் சுடரோடு பட்டப் பகலில் சூரியனோடு தென்படுவதைக் கருமை நிறக் கண்ணாடி மூலம் பார்க்கலாம் !  அதற்குப் பிறகு வால்மீனுக்கு என்ன கதி நேரும் என்பது கண்ணுக்குப் புலப்படாது ! 

     

    Asteroid Impact -2

     

    முரண்கோள் மோதுதலைத் தடுக்க விண்வெளிக் கோல் உந்துக் கோள் நகர்ச்சி [Cosmic Billiards] முறைகள் பயன்பாடு :

    முரண்கோள் தாக்கலிலிருந்து பூமியைப் பாதுகாக்க ரஷ்ய வானிய வல்லுநர்கள் ஒரு புதிய முறையை அறிவித்துள்ளார்.   அம்முறை இதுதான்.  பூமிக்கு அருகில் சுற்றி வருகின்ற  முரண்கோள் நகர்ச்சியைக் கட்டுப்படுத்திப் பூமிக்கு அண்மையில் ஈர்த்துப் புவிச் சுற்றில் சுற்ற இழுத்துக் கொள்ள வேண்டும்.   பூமியைப் பயமுறுத்தும் முரண்கோள்களை ராக்கெட் மூலம் அப்பால் தள்ளப் புவிச் சுற்று முரண் கோளை ஏவு தளமாக வைத்துக் கொள்ளலாம்.  அல்லது  புவிச் சுற்று முரண் கோளைப் பயமுறுத்தும் முரண்கோளுக்கு நேராக நகர்த்தி, 50,000 – 100,000 மைல் செல்ல ஏவு கோளாக உந்து விசை அளிக்கலாம்.  இம்மாதிரி விண்வெளிப் பில்லியர்டு விளையாட்டுகளை [Cosmic Billiard Games]  கணனி மாடல் மூலம் பயிற்சி செய்து இயலுமா அல்லது இயலாதா என்று பன்முறை ஆய்வு செய்ய வேண்டும்.  தற்போதுள்ள பொறி நுணுக்கத் திறமையில், மனிதரற்ற 2 டன் ராக்கெட் ஒன்றை, முரண்கோள் ஒன்றுக்கு அனுப்பி அங்கே இறக்கி விட முடியும்.    அத்தகைய ராக்கெட் ஒன்றை 1 பில்லியன் டாலர் செலவில் 10 அல்லது 12 ஆண்டுகளில் டிசைன் செய்து தயாரிக்க முடியும்.  பூமியை எப்போது முரண்கோள் தாக்கும் என்று முன்னுரைக்கவோ, எச்சரிக்கை செய்யவோ நீண்ட காலம்  கிடைப்ப தில்லை.   ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, போன்ற உலக நாடுகள் நாசா, ஈசா போன்ற விண்வெளி ஆய்வு நிறுவகங்கள் மூலமாய் பொறி நுணுக்கத் துறைமையை விருத்தி செய்து, முரண்கோள்களை அப்பால் தள்ள விண்வெளி விதிமுறைகளைக் கைவசம் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

     

     Asteroid impact -3

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண்பாறைகள், முரண் கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”

    டிமிட்ரி ரோகோஜின்  [Dmitry Rogozin, ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி]

    “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும்.  இந்நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 25 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.”

    நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program]

    Meteor Closeby travel

     

    ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] [40,000 mph] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது ! எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது.  30-50 கி.மீ. [10 -15 மைல்] உயரத்தில் நேர்ந்தது அந்த வெடிப்பு.  வெடிப்பு ஆற்றல் : 470 கிலோ டன் டியென்டி [TNT].   வெடிப்பொலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந்துள்ளன.  50 பேர் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றார்.  விளைந்த சேதாரச் செலவு :  சுமார் 33 மில்லியன் டாலர்.  பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன் என்று கணிக்கப் படுகிறது. ரஷ்யா நகரத்தில் சிதறி விழுந்து பாதகம் விளைவித்த அந்தப் பயங்கர விண்கல் அசுர வெடிப்பு ஏற்கனவே ஓர் விண்வெளித் துண்டுடன் மோதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ரஷ்யப் பேராசிரியர் எரிக் காலிமாவ் [Eric Galimov of Vernadsky Institute of Geochemistry]  கூறுகிறார்.

     

    Russian Meteor piece

    அதாவது அந்த அசுர வெடிப்பு மோதல் விண்வெளியில் நேர்ந்த பிறகே அவற்றின் சிதறல் துண்டுகள் பூமியின் சூழ்வெளியில் இறங்கி எரியத் தொடங்கின என்பது அறியப் படுகிறது.  வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது.  அந்த ஒளிமயமான தோரணக் காட்சி பூமியின் ஈர்ப்பு விசையால் குவிந்து வளைந்து வந்தது.  இறுதியில் முறிந்து ஒளிச்சக்தி ஒலிச் சக்தியாய் வெடித்து பேரதிரவை உண்டாக்கியது !  150 அடி நீளமுள்ள பெரிய முரண் கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளம் உள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது !   இப்போது ரஷ்ய அரசாங்கமே முன்வந்து, விண்கல் வீச்சைக் கண்காணிக்க வேண்டும் என்றும், விழுவதற்கு முன்னே மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், ஐக்கியக் கூட்டுப் பணியாகப் விண்வெளிப் பாதுகாப்பு முறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வெளிவந்துள்ளது !

    Location of Impact

     

    விண்கற்கள் தாக்குதலைத் தடுக்கும் உலகக் கூட்டியக்கப் பாதுகாப்பு:

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண் பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண்

    ​ ​

    பாறைகள், முரண் கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”

     ​ ​

    என்று  ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி,  டிமிட்ரி ரோகோஜின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இந்தச் சிறப்பு அறிவிப்பு  மாஸ்கோவில் “தந்தையர் நாட்டு நினைவு “நாளில் அவர் அறிவித்தார்.   மேலும் இந்த விண்கல் விண்வெளிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பேரவைக் குடையின் கீழ் அமைக்கப் பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.   இத்தகைய  மாபெரும் பாதுகாப்புத் திட்டம் அமெரிக்கா போன்ற ஆற்றல் மிக்க பெருநாடும் தனித்துச் செய்து முடிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

     

    Asteroid impact on Earth -1

     

    தற்போது உலக நாடுகளிலுள்ள ஏவுகணை முறிப்பு ஏற்பாடு & வான வெளி எதிரடிப்புப் பொறி நுணுக்கங்கள்  [Anti-Missile System & Aerospace defense Technologies] பூமியி லிருந்து ஏவுகணை ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு தாக்கப் போவதை மட்டுமே தடுப்பவை.   அவை விண்வெளி

    ​ ​

    யிலிருந்து வீழும் விண்கற்களின் பயணத் திக்கைக் கண்காணித்து, மாற்றி அமைத்து, மாந்தரைப் பாதுகாக்க  முடியா.   விண்கல், விண்பாறை, முரண்கோள், வால்மீன்கள் எனப்படும் அகிலவெளிப் பகைத் தூள்கள் செல்லும் திக்குகளை நுணுக்கமாய்க் காண முடியா !   விண்பாறை வீழ்ச்சிப் பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைக்க மாந்தரை எச்சரிக்கை செய்யவோ, அபாயத்தி லிருந்து பாதுகாக்கவோ வேண்டு மென்றால், ரஷ்யா, அமெரிக்கா, சைனா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வல்லரசு நாடுகள் பல பங்கெடுக்க வேண்டும்.   மேலும் உலக நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் துணைக் கோள்கள், விண்வெளிப் பொறி நுணுக்கக் கருவிகள்  மேன்மைப் படுத்த வேண்டும். 

     

    Damage Potential

    இந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலானது.   வெகு தூரத்தில் பயணம் செய்து கொண்டு, வேகமாய்ப் பாய்ந்து வரும் விண்கல்லின் பளு, பரிமாணம், வேகம் அறிவதுடன், சூரியனைச் சுற்றும் வீதி [Solar Orbit], திசைப்போக்கு, நகர்ச்சி ஆற்றலும் தொடர்ந்து கருவிகளால் கண்காணிக்கப் படவேண்டும்.   அதற்குப் புவியிணைப்புச் சுற்றில் சுற்றி வரும் [Geosynchronous Orbit] மூன்று அல்லது நான்கு துணைக்கோள்கள் ஏவப் பட வேண்டும்.   அந்தத் துணைக் கோள்கள் பூமியைத் தாக்கப் போகும் ஒரு விண்கல் நகர்ச்சியைத் தொடர்ந்து நோக்கி வந்தால், அதைத் தகுந்த நேரத்தில் தாக்கித் திசை திருப்பவோ, முறிக்கவோ பூமியிலிருந்து ஏவு கணைகள் அனுப்ப வேண்டும்.   அந்த விண்வெளி நுணுக்கச் சாதனையில் அபாய எச்சரிக்கை செய்யவும்,  பூமியில் விழும் இடத்தை முன்பே அறிவதும் அவசியம் ஆகிறது.   விண்கல்லின் திசைமாற்ற ஏற்ற காலப் பொழுதும், மனிதரற்ற கணைகள் அனுப்பித் திசை திருப்பவும் தேவையான கால நேரம்  பூமி வல்லுநருக்கு அதிகம் கிடைப்பதில்லை.

     

    Meteor hits Russia

    Antarctica Meteorite

    ஒலியதிர்ச்சி விபத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி.  சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார்.  நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர்கள் அனுப்பப் பட்டிருப்ப தாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார்.  முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க முயன்றார்.  இதுவரை எதுவும் கிடைத்தாகத் தெரிய வில்லை.

     

    Asteroid Impact-1

    1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி  ஏற்பட்டுள்ளது.  அதற்குப் பிறகு 2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது.  “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும்.  இந்த நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.

    இம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.

     

    ++++++++++++++++++++

    தகவல்: 

    படங்கள் : நாசா, ஈசா, பல்வேறு விண்வெளி வலைப் பக்கங்கள்.

    1. http://www.telegraph.co.uk/news/worldnews/europe/russia/9872020/Meteoroid-falling-over-Russia-caught-on-camera.html
    2. http://www.telegraph.co.uk/news/newsvideo/9872507/The-science-behind-Russian-meteor-strike.html
    3. http://www.telegraph.co.uk/science/space/9872991/Asteroid-passing-Earth-is-closest-ever-of-this-size.html
    4. http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded 
    5. http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/10-ton-meteor-explodes-over-russia-injuring-hundreds-this-am.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheDailyGalaxyNewsFromPlanetEarthBeyond+%28The+Daily+Galaxy+–Great+Discoveries+Channel%3A+Sci%2C+Space%2C+Tech.%29
    6.  http://rt.com/news/meteorite-crash-urals-chelyabinsk-283/
    7.  http://rt.com/news/scientists-explain-chelyabinsk-bolide-337/
    8. http://en.wikipedia.org/wiki/Tunguska_event  [February 19, 2013]
    9. Russia Calls for United Meteor Defense [February 26, 2013
    10. Meteorite’s Powerful Blast Explosion Due to Space XCollisions [February 28, 2013]
    11. Antarctica Team Finds Largest Chondrite Meteorite in Past 25 Years [March 1, 2013
    12. http://www.nasa.gov/vision/universe/watchtheskies/swift_media.html [November 1, 2004]
    13. http://science.nasa.gov/science-news/science-at-nasa/2013/24apr_hubbleison/  [April 24, 2013]
    14. http://en.wikipedia.org/wiki/Swift_Gamma-Ray_Burst_Mission  [May 17, 2013]
    15. http://earthsky.org/space/big-sun-diving-comet-ison-might-be-spectacular-in-2013 [April 24, 2013]
    16. Massive Asteroid with its Moon to Pass Earth today [May 29, 2013]
    17. http://en.wikipedia.org/wiki/C/2012_S1  [May 22, 2013]
    18. New Images of Comet ISON, Hurtling Toward the Sun  [May 31, 2013]
    19. Scientists Suggest Cosmic Billiards to Protect Earth from Asteroids’ Attacks [Moscow] [May 31, 2013]
    20. http://zeenews.india.com/news/space/new-images-show-comet-ison-speeding-towards-sun_852031.html [[May 31, 2013]
    21. http://www.smh.com.au/technology/sci-tech/rogue-asteroid-a-fifth-bigger-than-first-thought-20130110-2chj8.html [January 10, 2013]
    22. http://www.dailymotion.com/video/xru9ma_rogue-asteroid-1280x720hb_shortfilms  
    23. http://science.time.com/2013/06/27/nasas-proposed-asteroid-capture-mission-animation/ [June 27, 2013]
    24. http://www.spacedaily.com/reports/Rogue_asteroid_a_fifth_bigger_than_thought_space_agency_999.html  [January 9, 2013]

      +++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (February 1, 2014)

    http://jayabarathan.wordpress.com/

    Space Documentary – Asteroid The Doomsday Rock

    Let’s talk Astronomy”Rogue Asteroids”

    Meteorite crash in Russia: Video of meteor explosion that stirred panic in Urals region
    Share
  • தமிழர் பெருமை

    தமிழர்பெருமை

     தமிழர்பெருமை
    தமிழர் என்று பெருமை கொள்கிறோம் .
    இந்தியர் என்று கர்வம் கொள்கிறோம்.
    உலக விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் அளித்த பங்கு என்ன?பத்துக்கு ஐந்து என்ற வீதத்தில் தமிழர் அழியாத பெருஞ்சொத்தாக  உலக விஞ்ஞானத்தை வளர்த்திருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
    தெரிந்தவர்கள் தம் சந்ததிக்கு  அறிவித்திருக்கிறார்களா?
    எங்கோ உலகின் வடபகுதியில் கர்மயோகி போல்

    காரியமாற்றுபவர் ஒருவர் உண்டு.எத்தனை பேர் அறிவோம்?
    வீண் பெருமைக்கும் வெட்டியாகவும் விரயம் செய்யும் பணத்தில் ஒரே ஒரு சிறிய கூறு செலவிட்டு உங்கள் எதிர்கால சந்ததிக்கு வழி காட்டலாமே!
    வாங்கிப்படியுங்கள். ஆசிரியர்க்கொரு வணக்கம் சொல்லுங்கள் வாழ்த்துக் கூறுங்கள்.
    To buy: mail to vaiyavan.mspm@gmail.com

    Share