Year: 2023

  • வாடிக்கையாளரை அதிர்ச்சியில் உறையவைத்த பொதுத்துறை வங்கி

    வாடிக்கையாளரை அதிர்ச்சியில் உறையவைத்த பொதுத்துறை வங்கி

    எம். எஸ். லட்சுமணன், காரைக்குடி

    வங்கி வாடிக்கையாளர் விழிப்புணர்வு பதிவு 

    நண்பர்களே சில நாட்களுக்கு முன்பாக காரைக்குடியில் கல்லூரி சாலையில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ள நான் என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கியின் ஏடிஎம் பிரிவிற்கு சென்றிருந்தேன்.

    ஏடிஎம் வழியாக பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம் வரவில்லை. என்னுடைய பாஸ்வேர்டு கொடுத்து, OTP கொடுத்து என அனைத்தையும் கொடுத்த பிறகும் பணம் வெளியாகவில்லை.

    PLEASE CONTACT YOUR BRANCH என்று அதனில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. . மேலும் எனது இணையத்தின் வழியாக (NET BANKING)  வங்கி கணக்கை ஆப்ரேட் செய்ய முயற்சி செய்தபோது, FREEZE ACCOUNT FREEZE என்று வந்தது.

    இதனைத்தொடர்ந்து வங்கியின் மேலாளர் அவர்களை சென்று சந்தித்தேன். தங்களுடைய ஆவணங்கள் எதுவுமே எங்களுடைய வங்கியில் இல்லை. எனவே உங்களது அக்கவுண்ட்டை நாங்கள் FREEZE செய்துள்ளோம். அதுவும் CENTRALIZE ஆக  இதுபோன்று  செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    கடந்த 20 ஆண்டுகளாக நான் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். எனக்கு எந்தவிதமான கடனும் அந்த வங்கியில் இல்லை. அப்படி இருக்கும் பொழுது எனது வங்கிக் கணக்கை பிரீஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

    பலமுறை நான் அவர்களுக்கு ஆவணங்களை நேரில் சென்று கொடுத்துள்ளேன். ஆனால் அவர்களோ சர்வசாதாரணமாக இதுபோன்று ஒரு அதிர்ச்சியான தகவலை என்னிடம் தெரிவித்தார்கள்.

    நான் முக்கியமான ஒரு மருத்துவ செலவுக்காக மருத்துவமனையில் இருந்து தான் ஏடிஎம் மூலம் பணம் எடுத்து கொடுப்பதற்காக சென்று இருந்தேன். ஆனால் இணையத்தின் வழியாகவும் எனது வங்கிக் கணக்கை இயக்க முடியவில்லை. ஏடிஎம்மில் இருந்தும் பணம்  எடுக்க முடியும் முடியவில்லை.

    முக்கியமான மருத்துவ செலவுக்கு கூட எனது அக்கவுண்டில் இருந்து எனது பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக வங்கி மேலாளரை நேரில் சந்தித்து கேட்டேன். மேலாளர் அவர்களோ  மிக அலட்சியமாக ஆயிரக்கணக்கான வங்கிக் கணக்குகளை நாங்கள் இது போல் ஃப்ரீஸ் செய்து உள்ளோம்.என்று கூறினார்.

    தங்களது ஆவணங்கள் எதுவுமே எங்களது வங்கியில் இல்லை. எனவே ஆவணத்தை கொடுங்கள். freeze செய்ததை  எடுத்து விடுகிறோம் என்று தெரிவித்தார் ஆவணம் பலமுறை அந்த வங்கிக்கு நான் நேரில் சென்று கொடுத்துள்ளேன்.

    அந்த ஆவணங்களை என்ன செய்தார்கள் என்பதே தெரியவில்லை.ஆவணங்கள் இல்லாமல்  இருக்க வாய்ப்பில்லை. ஆவணங்கள் இல்லை என்றால் மெயில் வழியாக, மொபைல் வழியாக  எனக்கு ஒரு தகவல் தெரிவித்து , குறிப்பிட்ட நாட்கள் கொடுக்க  கேட்டிருக்கவேண்டும்.

    ஏனென்றால் எனக்கு இணையத்தின் வழியாக அங்கே கணக்கு ஆப்பரேட் செய்யப்படுகிறது. எனவே எனது மெயில் அவர்களிடம் உள்ளது. மேலும் எனது மொபைல் நம்பரும் அவர்களிடம் உள்ளது.

    மொபைல் நம்பரில் ஒரு மெசேஜ் கொடுத்து அல்லது மெயிலில் ஒரு மெசேஜ் கொடுத்து எத்தனை நாளுக்குள் நீங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்திருக்கலாம்.

    ஆனால் அவர்களோ எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் அக்கவுண்ட் FREEZE  செய்து விட்டார்கள்.  இதை நான் ஒரு முக்கியமான வெளியூர் பயணத்தில் இருக்கும்போது ,   குறிப்பாக மும்பை, டெல்லி என்று வேறு மாநிலங்களில் பயணிக்கும் பொழுது , எனது வங்கி கணக்கில் போதிய அளவு பணம் இருந்தும் ,நானே  பணம் எடுக்க முடியவில்லை என்றால் எனது நிலைமை என்னவென்று  யோசியுங்கள்.

    முக்கியமான மருத்துவ செலவிற்கு அன்று என்னால் பணம் எடுத்து செலவுக்கு கொடுக்க இயலவில்லை.  நான் மேலாளரை சந்தித்து மேலாளரிடம் உங்களுக்கு என்ன ஆவணம் வேண்டுமோ அதனை ஈமெயில் வழியாகவும், மெசேஜ் வழியாகவும் எனக்கு தெரிவியுங்கள். நான் அவற்றை எடுத்து வந்து தந்து விடுகின்றேன்.என்று கூறினேன்.

    ஆனால் இப்பொழுது எனது கணக்கை எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் ஃப்ரீஸ் செய்ததை வன்மையாக ஆட்சேபித்து  பதிவு செய்கின்றேன் என்று அவரிடம் கூறினேன்.

    எனவே  எனது கணக்கை தற்பொழுது freeze இல்  இருந்து எடுத்து விடுமாறு  அன்போடு கேட்டுக் கொண்டேன். சில மணி நேரங்கள் அவரிடம் பேசிய பிறகு அவர் எனது கணக்கை ஆக்டிவேட் செய்தார்கள்.

    பலமுறை நான் ஆவணங்கள் கொடுத்தும் அதனை வங்கியின் இணையத்தில் ஏற்றாதது அவர்களுடைய தவறு தானே தவிர  அது எனது தவறு கிடையாது.

    ஆனால் முக்கியமான கட்டத்தில் வங்கியில் முன்பு கொடுத்த ஆவணங்கள்  இல்லை என்பதற்காக கணக்கை freeeze  செய்தது மிகவும் தவறானது  என்பதை பதிவு செய்துவிட்டு வந்தேன்.

    பொதுத்துறை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு உங்களுடைய கணக்குகள் ஃப்ரீஸ் ஆகி இருந்தால் அதனை சரி செய்து கொள்ளுமாறு இந்த தகவலின் மூலமாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    நன்றி

    Share
  • குறளின் கதிர்களாய்…(451)

    குறளின் கதிர்களாய்…(451)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(451)

    இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர்
    துன்பந் துடைத்தூன்றுந் தூண்.

    – திருக்குறள் – 615 (ஆள்வினையுடைமை)

    புதுக் கவிதையில்…

    இன்பம் தனக்கு வருதலை
    விரும்பாதவனாய்
    எடுத்த செயலை நன்முறையில்
    முடிக்கவே விரும்புபவன்,
    தன் உறவுகளுக்கு வரும்
    துன்பத்தைப் போக்கித்
    தாங்கி நிற்கும்
    தூணாய் ஆவான்…!

    குறும்பாவில்…

    தனக்குவரும் இன்பத்தை விரும்பாதவனாய்
    தொடங்கிடும் செயலை முடிக்க விரும்புபவன்,
    தன்சுற்றத்தாரின் துன்பந்தாங்கும் தூணாவான்…!

    மரபுக் கவிதையில்…

    இன்பம் தனக்கு வருவதையே
    என்றும் விரும்பா குணத்தவனாய்
    தன்னால் தொடங்கும் செயலதையே
    தரமாய் முடிக்க விரும்புவோனே,
    இன்ன லெல்லாம் போக்கியேதான்
    இனிய சுற்றம் நட்பதனின்
    துன்பந் தாங்கும் தூணாகித்
    துணையா யிருப்பான் காண்பீரே…!

    லிமரைக்கூ…

    விரும்பாமல் வந்திடும் இன்பத்தை,
    வினைமுடிக்க விரும்புவோன், இடர்போக்கித் தூணாய்த்
    தாங்குவான் சுற்றத்தாரின் துன்பத்தை…!

    கிராமிய பாணியில்…

    முடிக்கணும் முடிக்கணும்
    செயலச் செய்துமுடிக்கணும்,
    நல்லபடியாச் செய்துமுடிக்கணும்..

    தனக்கு வாற
    இன்பத்தயெல்லாம் விரும்பாம
    செய்யிற செயல
    செம்மயா முடிக்க விரும்புறவந்தான்,
    சொந்த பந்தங்களோட
    துன்பம் போக்கி
    அவுங்களோட
    துன்பம் தாங்குற
    தூணா இருப்பானே..

    அதால
    முடிக்கணும் முடிக்கணும்
    செயலச் செய்துமுடிக்கணும்,
    நல்லபடியாச் செய்துமுடிக்கணும்…!

    Share
  • சிரிப்பு யோக ரத்னா விருதுகள்

    சிரிப்பு யோக ரத்னா விருதுகள்

    சிரிப்பு யோகிகள் இதோ. தமிழகம் முழுவதும் சிரிப்பு யோகாவில் தொடர்ந்து சிறப்பாக இயங்கி, மக்களைச் சிரிக்க வைத்து, அரிய சேவை ஆற்றி வருவோர் இவர்கள். இந்தச் சிரிப்பு யோகிகள் பத்துப் பேருக்கு, சிரிப்பு யோக ரத்னா என்ற விருதினை அம்பத்தூர் சிரிப்பரங்கம் வழங்கிக் கெளரவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சிரிப்பாய்ச் சிரிக்கவைக்கும் ஆளுமைகளின் அணிவகுப்பு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 7

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 7

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • கட்டுமானத் துறையில் உள்ள வாய்ப்புகள் & சவால்கள்

    கட்டுமானத் துறையில் உள்ள வாய்ப்புகள் & சவால்கள்

    குதிரைப் பாய்ச்சலில் இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது. 2030க்குள் இந்தியப் பொருளாதாரம், 7 டிரில்லியன் டாலரைத் தொடும் எனக் கணிக்கிறார்கள். இதில் கட்டுமானத் துறையின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும். இந்தத் துறையில் உள்ள வாய்ப்புகள், சவால்கள் என்னென்ன? கட்டுமானப் பொறியாளர்களுக்கு (சிவில் எஞ்சினியர்கள்) எத்தகைய தேவை உள்ளது? சிவில் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கான வாய்ப்பு எப்படி உள்ளது? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒற்றைக் கம்பியில் இரு கிளிகள்

    ஒற்றைக் கம்பியில் இரு கிளிகள்

    ஒற்றைக் கம்பியைப் பற்றித் தொங்கியபடி ஆடும் இரு கிளிகள். சென்னை, நுங்கம்பாக்கத்தில் இன்று கண்ட காட்சி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மிகப் பெரிய எண்ணிக்கையில் பறவைகள் இடப்பெயர்வு

    மிகப் பெரிய எண்ணிக்கையில் பறவைகள் இடப்பெயர்வு

    நேற்று முடிச்சூர் ஏரி அருகில் மகிழுந்தில் சென்றபோது, இந்த அரிய காட்சியைக் கண்டேன். சட்டென்று இறங்கிப் படம் எடுத்ததில் இம்மட்டே எடுக்க முடிந்தது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பறவைகள் இடப்பெயர்வை நான் காண்பது இதுவே முதல் முறை. இன்று உலகளாவிய பறவைகள் இடப்பெயர்வு தினம் என்பது எதிர்பாராத ஒற்றுமை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோடாலி கருப்பூர் சீதா கல்யாணம்

    கோடாலி கருப்பூர் சீதா கல்யாணம்

    அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூர் ஸ்ரீ ராம நாராயணப் பெருமாள் பிரும்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற சீதா கல்யாணம்.

    படப்பதிவு – மது என்கிற ரங்காச்சாரி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வாழைப்பழத்தை உண்ணும் குரங்கு

    வாழைப்பழத்தை உண்ணும் குரங்கு

    கொடைக்கானலில் வாழைப்பழத்தை ரசித்து உண்ணுகிறது, இந்தக் குரங்கு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொடைக்கானலில் உள்ள லிரில் அருவி

    கொடைக்கானலில் உள்ள லிரில் அருவி

    கொடைக்கானலில் உள்ள லிரில் அருவி இதோ. லிரில் சோப்பு விளம்பரம் எடுத்த இடம் என்பதால் இந்த அருவியையே லிரில் அருவி என அழைக்கிறார்கள். காட்சி ஊடகத்தின் தாக்கம் எத்தகையது என்பதை இதைக் கொண்டே அறியலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நீலக் கண்கள் கொண்ட காட்டு மைனா

    நீலக் கண்கள் கொண்ட காட்டு மைனா

    நீலக் கண்கள் கொண்ட இந்தக் காட்டு மைனாவைக் கொடைக்கானலில் கண்டேன். என் கண்ணெதிரே சுவரிலிருந்து ஓர் இலையைப் பறித்தது. இது என்னுடையதாக்கும் என ஒரு குழந்தையைப் போல், அலகால் பற்றியபடியே இங்கும் அங்கும் சுற்றி வந்தது. கீழே போடமாட்டேன் என உறுதியுடன், இலையை வாயால் கவ்வியபடியே குரல் எழுப்பியது. அந்த அழகிய காட்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கட்டுமானத் துறையில் மந்தநிலையா?

    கட்டுமானத் துறையில் மந்தநிலையா?

    கடந்த பத்து ஆண்டுகளாக, நிலத்தின் விலை பெரிதாக ஏறவில்லை. கட்டப்பட்ட வீடுகள் பலவும் விற்கப்படாமல் உள்ளன. கட்டுமானத் துறையில் மந்தநிலை நிலவுகிறதா? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அஷ்டலட்சுமியில் ஐந்துபேர் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    மூன்றாவது மகள் பள்ளியிலிருந்து திரும்பியதும், புன்னகையுடன் கேட்டாள், ஞானம்: ‘இன்னிக்கு யாரோட சண்டை?”

    வலியப்போய் சண்டை போடமாட்டாள் என்று தெரியும்தான். வேடிக்கையாக இருந்தாலும், சற்று சலிப்பும் ஏற்பட்டது. எந்த வேளையில் அவளுக்கு வீரலட்சுமி என்று பெயர் வைத்தாளோ!

    “பின்னே என்னம்மா? `மூணும் பொண்களா!’ன்னு எங்களைப் பார்த்து சலிச்சுக்கிட்டா? அவங்களா எங்களுக்கு சாப்பாடு போடப்போறாங்க?”

    தாய் அதிர்ந்தாள். “ஒன்னைவிட பெரியவங்களோடேயா சண்டை போட்டே?”

    “சண்டை போடலேம்மா. நான் என்ன சொன்னேன், தெரியுமா?” அவள் குரலில் பெருமை. “இன்னும் நிறைய பொண்ணுங்க பிறக்கும் எங்க குடும்பத்திலேன்னு சொன்னேன்”.

    நிலைமை இன்னும் மோசமாக ஆகிவிடாது காப்பதுபோல், இரண்டாமவள் ஒரு பெரிய தாம்பாளம் நிறைய மாம்பழங்களைக் கொண்டுவந்தாள். “எல்லாம் நம்ப தோட்டதிலேருந்தும்மா!”

    அவளுடைய பூரிப்பு தாயையும் தொற்றிக்கொண்டது. “ரெண்டு கிலோ இருக்கும்போல இருக்கே!”

    “பள்ளிக்கூடம் லீவுதானே! எங்கேயாவது போகலாம்பா!” என்று கொஞ்சிய மகளைப் பார்த்துப் புன்னகைத்தார் நாராயணன்.

    “எங்கே போகலாம்? நீயே சொல்லு!”

    “குவால காண்டா (Kuala Gandah)!” என்றபடி வந்தாள் இந்திரா. முதலிலேயே பேசி வைத்துக்கொண்டு, தைரியமான தங்கையைத் தூது அனுப்பியிருக்கிறாள்!

    கர்ப்பிணியான மனைவி! “அம்மாவுக்கு முடியுமா?” என்று சற்று தயங்கினார்.

    “எல்லாம் முடியும்!” என்று உள்ளேயிருந்து குரல் எழும்பியது.

    யோசிக்க ஆரம்பித்தார். கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் போனால், கோலாலம்பூரிலிருந்து இரண்டே மணிதான். யானைகள் ஆற்றில் குளிப்பதைப் பார்க்கலாம். மரங்கள் அடர்ந்த இடமும் ரம்மியமாக இருக்கும்.

    சில வருடங்களுக்குமுன், யானை ஒன்றின் முதுகில் குழந்தைகளை ஏற்றுவார்கள். அந்த யானை ஆற்றில் நடந்து, பிறகு சாய்ந்துவிடும். எதிர்பாராவிதமாகத் தண்ணீரில் விழுந்த குழந்தைகளின் சிரிப்பும் அழுகையும்!

    பழைய நினைவுகளால் உற்சாகம் ஏற்பட, “புறப்படுங்க,” என்றார்.

    அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, அந்த இடத்தில் இன்னொரு மகள் பிறப்பாளென்று.

    “கஜலட்சுமின்னு எனக்கு ஏன் அக்கா இந்தப் பேர் வெச்சாங்க? எல்லாரும் கஜா, கஜான்னு கூப்பிடறாங்க! நான் யானைமாதிரியா குண்டா இருக்கேன்?” என்று சிணுங்கிய தங்கையிடம், “அப்படி இல்லேடி! யானைங்களைப் பாக்கப்போன இடத்திலே நீ பிறந்துட்டே. அதனால..!” என்று சமாதானப்படுத்தினாள் இந்திரா. முதல் குழந்தைகளுக்கே உரிய பொறுமையும் கருணையும் அவளிடமிருந்தது.

    “நல்லவேளை, ஜூவில சிங்கத்தைப் பாக்கப் போனப்போ நான் பிறக்கலே!” என்று சிரித்தாள் சிறுமி.

    ஒரு வருடத்துக்குள் பிறந்த விஜயலட்சுமி தான்மட்டுமல்லாது, அக்காள் நால்வரும் கல்வி, பேச்சுப்போட்டி, ஆடல், பாடல் என்று எதிலாவது சிறக்க தன்னாலானதைச் செய்தாள்.

    ஞானத்திற்குப் பரம சந்தோஷம். ஒவ்வொரு மகளும் பெயருக்கு ஏற்றாற்போல் வளர்கிறார்கள்.

    வயிற்றிலிருக்கும் ஆறாவது குழந்தை சந்தானலட்சுமியா?

    ஆனால், பிறந்ததோ ஆண்குழந்தை. அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. தன் கனவு பலிக்காமல் போய்விட்டதைக் கணவரிடம் கூறி வருத்தப்பட்டுக்கொண்டாள்.

    “சந்தானம்னு பேர் வைக்கலாம்!” என்று அவர் ஓர் உபாயம் கூறினார்.

    “இனிமே பிள்ளை பிறந்தா இவங்க உயிருக்கே ஆபத்து!” என்று டாக்டர் மிரட்டலாகக் கூற, வேறு வழி புலப்படாது, கருத்தடை சிகிச்சைக்கு உடன்பட்டாள் ஞானம்.

    அவளைப் பார்க்க வந்த கணவருக்கு மனம் பொறுக்கவில்லை. “இந்தச் சமயத்திலே அழக்கூடாதும்மா. பேத்தி பிறக்காம போயிடுமா? அந்தக் குழந்தைங்களுக்கு வித்யாலட்சுமி, தனலட்சுமின்னு பேர் வெச்சா போச்சு! அப்போ ஒன் ஆசைப்படியே நம்ப குடும்பத்துக்கு அஷ்டலட்சுமியும் வந்துடுங்க இல்லே?” என்றார்.

    மகள் எப்போது பெரியவளாகப் போகிறாள், எப்போது கல்யாணமாகி, தான் எப்போது பேத்திகளைப் பார்க்கப்போகிறோம் என்று புதிய கவலையில் ஆழ்ந்தாள் ஞானம்.

    Share
  • ஆராய்ந்து கொள்வோம் நட்பு!

    -மேகலா இராமமூர்த்தி

    மனித வாழ்க்கை செம்மையாகவும் சிறப்பாகவும் அமைவதற்கு இன்றியமையாதவை இரண்டு. ஒன்று சுற்றம்; மற்றொன்று நட்பு. ஒருவனைச் சுற்றியிருந்து செயற்படுவோர் அனைவரையும் நாம் சுற்றத்தினர் என்ற வகைப்பாட்டில் அடக்கலாம்; எனினும், பெரும்பாலும், அச்சொல் உறவினரைக் குறிக்கும் சொல்லாகவே பயன்பாட்டில் உள்ளது.

    உறவினராகிய சுற்றத்தைப் பொறுத்தவரை நம் தாய் தந்தையரையும், உடன்பிறப்புக்களையும் அத்தை மாமன், பாட்டன், பாட்டி போன்ற ஏனைய சுற்றத்தினரையும் தேர்வுசெய்யும் உரிமை நமக்கில்லை; அஃது இயற்கை நமக்களிப்பது; ஆனால், நம் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கிருக்கின்றது.

    நட்பைப் பொறுத்தவரை அதனைத் தெரிவுசெய்யும் முழு உரிமையும் வாய்ப்பும் நம்மிடமே இருக்கின்றன. எனவே, அவ்வாய்ப்பைச் சரியாகவும் திறம்படவும் நாம் பயன்படுத்தி நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு நமக்கு வழிகாட்டும் வகையில் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களைத் திருக்குறளில் வகுத்திருக்கின்றார் பொய்யில் புலவராகிய வள்ளுவர்.

    நட்பு:

    நட்பு என்பது நண்பர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிச் சிரிப்பதற்கான பொழுதுபோக்குப் பண்பன்று; நண்பன் நெறிகடந்து செல்லும்போது இடித்துத் திருத்துவதற்கும், ஆடை நழுவுகின்றபோது உடனே அதனைச் சரிசெய்கின்ற கைபோல, நண்பன் துன்பத்தில் இருக்கும்போது ஓடிச்சென்று உதவுவதற்கும் பயன்படும் உண்மையன்பே நட்பு என்கின்றார் வள்ளுவர்.

    நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்சென் றிடித்தல் பொருட்டு
    . (நட்பு – 784)

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு
    . (நட்பு – 788)

    அத்தகு நண்பர்களை ஆராய்ந்து கொள்ளவேண்டியதன் அவசியத்தை அடுத்த அதிகாரத்தில் விளக்குகின்றார் அவர். ”நற்பண்புள்ள குடியிற் பிறந்து, தனக்கு ஏற்படக்கூடிய பழிக்கு நாணுபவனே நண்பனாய் இருக்கத் தகுதியானவன்; அவனைப் பொருள் கொடுத்தாவது நட்புச் செய்க” என்று அறிவுறுத்துகின்றார்.

    குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
    (நட்பாராய்தல் – 794)

    நெடுநாளைய நண்பர்கள் பழகிய உரிமை காரணமாகச் சிறு தவறுகளைச் செய்யும்போது அவற்றைப் பொருட்படுத்தாது நட்பினைத் தொடர்க என்று ’பழைமை அதிகாரத்தில் நம்மைத் தெளிவிக்கும் வள்ளுவர், தீய நண்பர்களை இனங்கண்டு ஒதுக்கவேண்டியதன் அவசியத்தைத் ’தீ நட்பு’ அதிகாரத்தில் வலியுறுத்துகின்றார்.

    அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
    தமரின் தனிமை தலை.
    (தீ நட்பு – 814)

    ”போர்க்களத்தில் தன்மீது அமர்ந்திருக்கும் வீரனைத் தள்ளிவிட்டு ஓடும் அறிவற்ற குதிரையைப் போன்று நமக்கு உதவி தேவைப்படும் காலத்தில் உதவாமல் கைவிடும் நண்பர்களைவிடத் தனித்திருப்பதே மேல்” என எண்ணுகின்றது வள்ளுவர் உள்ளம். ”கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு” என இதே கருத்தை நட்பாராய்தல் அதிகாரத்திலும் அவ் அறிஞர் விளம்பியிருப்பது நினைவுகூரத்தக்கது.

    It is better to be alone than in bad company” என்று அமெரிக்காவின் மேனாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் குறிப்பிடுவதும் இதனைத்தான்.

    இவ்வாறே உள்ளத்தால் கூடாது வெறும் உதட்டளவில் கூடியிருக்கும் நண்பர்களும் ஆபத்தானவர்களே; விலக்கத்தக்கவர்களே என்கின்றார் வள்ளுவர் தம் ’கூடா நட்பு’ அதிகாரத்தில்.

    வில் வளைந்திருப்பது பணிவுபோல் வெளிப்பார்வைக்குத் தோன்றலாம்; ஆனால், அது வளைந்துகொடுப்பது எற்றுக்கு? அம்பினைப் பூட்டி எதிரியை வீழ்த்துவதற்கு. அஃதொப்ப, நம்முன் பணிவான சொல்லோடு நடந்துகொள்வோரெல்லாம் உண்மையாகவே நம்மைப் பணிகின்றார் என எண்ணினால் அது பேராபத்தில் முடியும்; அவர்தம் தொழுத கையுள்ளும் நம்மைக் கொல்லும் ஆயுதம் மறைந்திருக்கக் கூடும் என்று எச்சரிக்கின்றார் குறளாசான்.

    சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்.
    (கூடாநட்பு – 827)

    தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
    அழுதகண் ணீரும் அனைத்து.
    (கூடாநட்பு: 828)

    நண்பர்களின் இயல்பையும் அவர்களை நாம் தேர்ந்தெடுக்கும் முறைகளையும் வகுத்துரைத்து வள்ளுவம் நமக்கு வழிகாட்டுவதுபோன்றே, அறநூலான நாலடியாரும் பொருத்தமான உவமைகள் வாயிலாய் நண்பர்களின் இயல்பை மூன்றாய்ப் பிரித்து நமக்கு இனம் காட்டுகின்றது.

    நாலடியார் காட்டும் நட்பின் வகைகள்:

    நட்பில் கடைத்தரமானவர்கள் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்கள்; இடைத்தரமானவர்கள் தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்கள்; முதல்தரமானவர்கள் பனைமரத்தைப் போன்றவர்கள் என்கின்றது நாலடியார்.

    எந்த அடிப்படையில் இந்த வகைமை?

    பாக்குமரம் இருக்கின்றதே அது பலன் தரவேண்டுமானால் அதற்கு நிதமும் கவனிப்புத் தேவை; இல்லையேல் பட்டுப்போகும்; அதுபோல் நிதமும் நம்மால் பலனில்லையேல் கடைத்தரமானவர்களின் நட்பும் விட்டுப்போகும். தென்னை மரத்துக்கு நிதமும் கவனிப்புத் தேவையில்லை; ஆனால், அடிக்கடித் தேவை; இல்லையேல் பலன் தராது; அதுபோன்றதே இடைத்தரமானவர்களின் நட்பு. ஆனால், பனை மரம் எப்படிப்பட்டது தெரியுமா? நட்டபோது தந்த கவனிப்பே போதுமானது என்று தானாய் வளர்ந்து பலன்தரும் இயல்புடையது. அதுபோல் ஒருமுறை மனங்கலந்து பழகிவிட்டால் போதும்; இறுதிவரை அந்த நட்பைப் பேணி, நண்பர்களுக்கு உதவியாய் – உறுதுணையாய் இருப்பவர்களே உண்மையான நண்பர்கள்; உயர்ந்த நண்பர்கள் என்கின்றது நாலடியார்.

    கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
    இடையாயார் தெங்கி னனையர் தலையாயார்
    எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே
    தொன்மை யுடையார் தொடர்பு.
    (நாலடி: நட்பாராய்தல் – 216)

    நாலடியார், நட்பில் மூன்று வகையினரைக் காட்டுவதுபோல் கிரேக்கச் சிந்தனையாளரும் – மகா அலெக்சாண்டரின் ஆசானுமாகிய அரிஸ்டாட்டிலும் நண்பர்களை மூன்று வகையினராகப் பிரிக்கின்றார்.

    அரிஸ்டாட்டில் காட்டும் நட்பின் வகைகள்:

    1. மகிழ்ச்சிக்காக நட்புக்கொள்வோர் (Friendships of pleasure/delight)
    2. பயன்கருதி நட்புக்கொள்வோர் (Friendships of utility)
    3. நற்பண்புகளின் அடிப்படையில் நட்புக்கொள்வோர் (Friendships of virtue)

    இம்மூவரையும் எப்படி நாம் அடையாளம் காண்பது?

    மகிழ்ச்சிக்காக நட்புக்கொள்வோர்: இவர்கள், திரைப்படங்களுக்கும் உணவகங்களுக்கும் செல்வதற்கும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் முதலியவற்றுக்கும் துணைவேண்டி நட்புக்கொள்பவர்கள். இவர்களோடு பழகுவதால் நம் கையிருப்பும் கரைந்து, தீய பழக்கங்களுக்கும் நாம் அடிமையாவதுதான் கண்ட பலனாய் இருக்கும்; மற்றபடி வாழ்வின் முன்னேற்றத்திற்கு இவர்களின் நட்பு எள்முனையளவும் உதவாது.

    பயன்கருதி நட்புக்கொள்வோர்:  பணத்திற்காகவோ பதவி முதலிய அதிகாரங்களுக்காகவோ ஒருவரிடம் நட்புக்கொள்பவர்கள் இவர்கள். அலுவலகத்தில் நம்மிடம் பழகுபவர்களில் பெரும்பாலோர்கூட அங்கு நம்மிடமிருந்து கிடைக்கக்கூடிய உதவிகளுக்காகவும் ஆதாயங்களுக்காகவும் பழகுபவர்களே. எனவே, அவர்களையும் இவ்வகையில் அடக்கலாம். நம்மால் பலனில்லை என்றால் நட்பை முறித்துக்கொள்ளத் தயங்காதவர்கள் இவ்வகையினர்.

    நற்பண்புகளின் அடிப்படையில் நட்புக்கொள்வோர்: ஒருவரிடமிருக்கும் நல்ல பண்புகளுக்காகப் பழகுபவர்கள் இவர்கள். இவ்வாறு குணங்களைக் கண்டறிந்து கொள்ளும் நட்பே நல்ல நட்பாகவும் இறுதிவரை நீடிக்கும் நட்பாகவும் இருக்கும். இவர்கள், நண்பன் ஒரு தவறுசெய்யும்போது அதனை இடித்துத் திருத்துவார்கள்; நண்பனுக்குத் துன்பம் என்றால் அதனை நீக்க முயல்வார்கள்; நீக்க இயலாவிட்டால் அதில் தாமும் பங்கெடுத்துக்கொண்டு ஆறுதலளிப்பார்கள். இத்தகு நல்ல நண்பர்கள் கிடைப்பது வரமே!

    இவ்வாறு நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் துணையாயிருக்கும் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், அல்லாதோரை இனங்கண்டு விலக்குதற்கும் வள்ளுவமும் நாலடியாரும் அரிஸ்டாட்டிலின் சிந்தனைகளும் நமக்கு நல்வழிகாட்டுகின்றன. இவற்றின் அடிப்படையில் நண்பர்களை ஆராய்ந்து தேர்ந்தெடுப்போம்; வாழ்வில் உயர்வோம்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:
    1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார்
    2. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி.சு. பாலசுந்தரம் பிள்ளையவர்கள்.
    3. https://en.wikipedia.org/wiki/Nicomachean_Ethics

     

    Share
  • பச்சைக் கழுத்து மயில்

    பச்சைக் கழுத்து மயில்

    மயில் பச்சை என ஒரு நிறமே உண்டு. கோவையில் தற்செயலாக இந்தப் பச்சைக் கழுத்து மயிலைக் கண்டேன். எனது நல்வாய்ப்பு, அதன் பல்வேறு உணர்வுகளை, அசைவுகளை நெருங்கி நின்று படமெடுக்க முடிந்தது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share