Year: 2023

  • குறளின் கதிர்களாய்…(448)

    குறளின் கதிர்களாய்…(448)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(448)

    அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை
    யெண்ணி யிடத்தாற் செயின்.

    -திருக்குறள் -497 (இடனறிதல்)

    புதுக் கவிதையில்…

    செய்யும் செயலின்
    வழிமுறைகளைப்
    பலவகையாலும் ஆராய்ந்தறிந்தே
    தெளிவுடன்
    இடைவிடாமல் எண்ணி
    இடமறிந்து செய்தால்,
    அரசர்க்கு
    அஞ்சாமை தவிர
    அடுத்தொரு துணையே
    அவசியமில்லை…!

    குறும்பாவில்…

    செயலின் வழிவகைகளை நன்கறிந்தே
    தெளிவுடன் எண்ணியிருந்து இடமறிந்து செய்தால்,
    அஞ்சாமை தவிர துணைவேண்டாம்…!

    மரபுக் கவிதையில்…

    செய்யும் செயலைப் பல்வகையில்
    செம்மை யாக ஆராய்ந்தே
    தொய்வே யின்றி மனத்திலெண்ணி
    தொடரத் தக்க இடமறிந்தே
    உய்யும் வகையில் செயல்பட்டால்,
    உலகை யாளும் வேந்தனுக்கு
    மெய்யாம் மனத்தின் உறுதிக்குமேல்
    மேலும் துணையே வேண்டாமே…!

    லிமரைக்கூ…

    செயலைச் செய்வதன் முன்னே
    செயல்முறை தெரிந்தே இடமறிந்து செய்தால்,
    அஞ்சாமையே அருந்துணை பின்னே…!

    கிராமிய பாணியில்…

    செய்யணும் செய்யணும்
    எதயும் செய்யணும்,
    எடமறிஞ்சிதான்
    எதயும் செய்யணும்..

    செய்யிற செயலோட
    வெபரமெல்லாம் நல்லாத் தெரிஞ்சி
    மனசில வச்சிக்கிட்டு
    செய்யிறதுக்கு ஏத்த எடமறிஞ்சி
    செய்யிற ராசாவுக்கு
    எதுக்கும் பயமில்லாத
    தைரியம் தவிர வேற
    தொண வேண்டாமே..

    தெரிஞ்சிக்கோ,
    செய்யணும் செய்யணும்
    எதயும் செய்யணும்,
    எடமறிஞ்சிதான்
    எதயும் செய்யணும்…!

    Share
  • சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் | கனடாவுக்குக் குடிபெயர்ந்தது ஏன்?

    இந்திய அணுசக்தித் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, கனடா அணு உலைகளில் பணியாற்றச் சென்றது ஏன்? இந்திய அணு உலைகளில் இருந்த அரசியல் எத்தகையது? தில்லியில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றிய பஞ்சாபிப் பெண் விசா கொடுக்காமல் முட்டுக்கட்டை போட்டது ஏன்? இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு, கனடா நாட்டுக் குடியுரிமையை ஏற்றது ஏன்? குடியுரிமை ஏற்கும்போது கனடாவின் தேசிய கீதத்தைப் பாடாமல் வாய்மூடி இருந்தது ஏன்? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கனடா வேலை – போலிகளை நம்பாதீர்கள்

    கனடா வேலை – போலிகளை நம்பாதீர்கள்

    கனடா வழியாக அமெரிக்க எல்லைக்குள் சட்டத்துக்குப் புறம்பாக நுழைய முயன்ற குஜராத்திக் குடும்பம் ஒன்று, அண்மையில் குளிரில் உறைந்து மாண்டது. இப்படியான முயற்சிகளைத் தவிர்த்துவிட்டு, நேர்வழியில் கனடாவுக்கு வாருங்கள். தவறான ஆலோசனைகளை நம்பாதீர்கள். போலி வேலை, போலி விசா, போலி இணையத்தளங்களுக்கு மத்தியில் சரியானவற்றைக் கண்டறிவது எப்படி? கேனெக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வெருளும் கிறித்தவப் போதகர் சங்கம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
    சிவ  சேனை

    கடந்த தைப் பொங்கலின் பின்,
    மூன்று மாத காலத்தில்,
    சிவபூமியில் 31 ஊர்களில்
    மதமாற்றிகளின் 31 நிகழ்வுகளில்
    சைவ எழுச்சிப் பட்டியல் கீழே.

    இலங்கை கிறித்தவப் போதகர்மார் சங்கம்.
    ஊடகச் சந்திப்பு.
    சைவப் பெருமக்களின் திரளால் மிரளும் மதமாற்றிகள்.
    உருளும் அந்நிய ஊடுருவல்.
    வெருளும்  கிறித்தவப் போதகர் சங்கம்.
    மதமாற்றியார் இருளகற்றும் சிவபெருமான் திருவருள்.
    தளர்வறியா மனத்துடன்
    31 ஊர்களில் 31 நிகழ்வுகளைத் தடுத்த
    சைவப் பெருமக்கள் திருக்கூட்டம்.

    1. அச்சுவேலியில் சைவ மக்கள் திரண்டார்கள். மதமாற்றிகளான போதகர் உள்ளிட்ட ஒன்பதின்மர் காவல் துறைச் சிறையில்.

    2. கோப்பாய் இருபாலையில் சைவ மக்கள் திரண்டார்கள். மதமாற்றிகளான 80 வயதுப் போதகர் அருள் நங்கை உள்ளிட்ட மூவர் காவல்துறைச் சிறையில்.

    3. யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சைவ அமைப்புகள் திரண்டனர். நாக நாட்டின் தலைவி அருள்மிகு நாகபூசணி அம்மன் சிலையைக் காப்போம் என உறுதி பூண்டனர்.

    4. மட்டக்களப்பில் சைவ மக்கள் திரண்டனர். தமிழ் நிலமெங்கும் சுவரொட்டிகளால் அழைத்துத் திடலில் மதமாற்றிகள் நிகழ்த்த இருந்ததை நகரோரத் தேவாலயத்துக்குள் ஒடுக்கி முடக்கினர்.

    5. திருகோணமலையில் மண்டபத்தில் நிகழவிருந்த மதமாற்றிகள் நிகழ்ச்சி. கடற்கரைக்கு மாற்றினர். அங்கும் நிகழவிடாது சைவ மக்கள் திரண்டனர்.

    6. கொக்குவில் திடலில் மூன்று நாள் மதமாற்றிகள் நிகழ்வு. சைவ மக்கள் திரண்டனர், தடுத்தனர்.

    7. மாதம்பையில் மதமாற்றிகளின் மூன்று நாள் நிகழ்வுகள். நுழைவுக் கட்டணம் கொடுத்து வாருங்கள் என அழைத்த தமிழ் மொழி நிகழ்வுகள். மூன்று நாள்களும் நடைபெற விடாது மாதம்பைச் சைவ மக்கள் திரண்டு தடுத்தனர்.

    8. மானிப்பாயில் மூன்று நாள்கள், யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தில் ஒரு நாள். பெரும் செலவு செய்து மதமாற்றிகள் நிகழ்த்தவிருந்த நிகழ்ச்சிகள். மானிப்பாய்ச் சைவ மக்கள் திரண்டனர். தடுத்தனர்.

    9. ஒட்டுசுட்டானில் மதமாற்றிகளின் மூன்று நாள் நிகழ்வுகள். களியாட்டம் மது மாமிசம் எனத் திருவிழா. ஒட்டுசுட்டான் சைவ மக்கள் திரண்டனர் நிகழ்ச்சிகள் நடைபெறவே இல்லை.

    10. மன்னாரில் நாகதாழ்வு சாலையோரச் சந்திப்பு மூலையில் அந்தோனியார் சிலை. உடனேயே எதிர்ப்பக்க மூலையில் அருள்மிகு பிள்ளையார் வந்து அமர்ந்தார். சைவ மக்கள் திரண்டனர்.

    11. மன்னாரில் உயிலங்குளம் வட்டுப்பிதாதன்மடு நெடுஞ்சாலைச் சந்தி மூலையில் அந்தோனியார் சிலை. எதிர்ப்பக்க முனையில் அருள்மிகு பிள்ளையாருக்கு கருங்கல் கோயில் எழுந்தது. சைவ மக்கள் திரண்டனர்.

    12. கச்சதீவில் ஆக்கிரமிப்புப் புத்தர் சிலையை அகற்றுங்கள் என்ற குரலோடு இணைந்தது ஆக்கிரமிப்பு அந்தோனியார் கோயிலையும் அகற்றுங்கள் என்ற சைவ மக்களின் குரல்.

    13. மாவட்டபுரம் கீரிமலைச் சாலையில் அடாத்தாக மதமாற்றிகள் தேவாலயக் கட்டடம். நிறுத்தினர், திரண்ட சைவ மக்கள்.

    14. மாவிட்டபுரம் கீரிமலைச்சாலையில் முன்பள்ளிக்குள் அடாத்தாகப் புகுந்த மதமாற்றிகளை அகற்றினர் திரண்ட சைவ மக்கள்.

    15. கோண்டாவிலில் அருள்மிகு பிள்ளையார் கோயிலுக்கு எதிரே அனைத்துலகப் பின்னணி கொண்ட அசைவ உணவகம். சைவ மக்கள் திரண்டனர். உணவகத்தை மூடினர்.

    16. கோண்டாவில் அரசுப் பேருந்து வளாகத்துள் புதிதாக அந்தோனியார் சிலையா? கோண்டாவில் சைவ மக்கள் திரண்டனர். சிலை அங்கு வராது தடுத்தனர்.

    17. கொடிகாமத்தில் 18. புன்னாலைக்கட்டுனில் 19. ஏழாழையில் 20. பண்ணாகத்தில் அடாத்தாக மதமாற்றிகளின் நடவடிக்கைகள். சைவ மக்கள் திரண்டனர். குரல் கொடுத்தனர்.

    21. சுண்ணாகம் மயிலங்காடு திடலில் மூன்று நாள் மதமாற்றிகள் நிகழ்வு. முதல் நாள் நடைபெற்றது. அடுத்த இரு நாள்களும் நடைபெறவில்லை. சைவ மக்கள் திரண்டனர், தடுத்தனர்.

    22, 23 வவுனியாவில் இரு நிகழ்வுகள்,

    24. நெடுங்கேணியில் ஒரு நிகழ்வு,

    25. வெள்ளாங்குளத்தில் ஒரு நிகழ்வு,

    26, 27, 28, 29, 30, கிளிநொச்சியில் ஐந்து நிகழ்வுகள்,

    31. ஏழாலையில் ஒரு நிகழ்வு

    எனப் பிப்ருவரிக் கடைசியில் மதமாற்றிகளின் நிகழ்வுகள்.  எதையுமே நிகழ விடாது சைவ மக்கள் திரண்டு நிறுத்தினர்.

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 4

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 4

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


     

     

    Share
  • அட்சய திருதியை | ஒரு லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரம்

    அட்சய திருதியை | ஒரு லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரம்

    சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அட்சய திருதியை திருநாளை முன்னிட்டு ரூ.1 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். வையகத்தில் வளமும் செல்வமும் செழித்து ஓங்குக!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அன்னை தெரேசா போல் வாழ்கிறார் சோனியா காந்தி | ரூபி ஆர்.மனோகரன் பேச்சு

    அன்னை தெரேசா போல் வாழ்கிறார் சோனியா காந்தி. தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தெருமுனைக் கூட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் பேச்சு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அதானி ஒரு குழந்தை | ஆனந்த் சீனிவாசன் பேச்சு

    அதானி ஒரு குழந்தை | ஆனந்த் சீனிவாசன் பேச்சு

    அதானி நிறுவனங்களுக்கு ஷெல் நிறுவனங்கள் மூலம் 20 ஆயிரம் கோடி வந்தது எப்படி? ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் ஈடுபட, அதானிக்குப் பாரத ஸ்டேட் வங்கி எட்டாயிரம் கோடி கடன் கொடுத்தது எப்படி? ஜிவிகே ரெட்டியிடமிருந்து மும்பை விமான நிலையம், அதானி கைக்கு மாறியது எப்படி? அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார், ஆனந்த் சீனிவாசன். தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தெருமுனைக் கூட்டத்தில் அவரது பேச்சு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பூதக்கோள் வியாழன் பனிநிலவுக்கு ஈரோப்பிய விண்சிமிழ் ஏவப்பட்டுள்ளது

    பூதக்கோள் வியாழன் பனிநிலவுக்கு ஈரோப்பிய விண்சிமிழ் ஏவப்பட்டுள்ளது

    An Ariane rocket carrying the robotic explorer JUICE takes off from Europe’s spaceport in French Guiana. The European spacecraft has blasted off on a quest to explore Jupiter and three of its ice-encrusted moons. The robotic explorer set off on an eight-year journey Friday. (European Space Agency/The Associated Press)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    2023 ஏப்ரல் 14 ஆம் தேதி  ஈரோப்பியன் விண்வெளி ஆணையகம் [ESA] பூதக்கோள் வியாழன் நோக்கி ஏகி அதன் பனிநிலவு இரண்டை, ஈரோப்பா, கணிமீடு, உளவு செய்ய அனுப்பியுள்ளது. அந்த இரண்டு துணைக்கோள்தான் உயிரின மூலவிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று தேர்வு செய்யப் பட்டவை. ஈசாவின் பூதக்கோள் வியாழன் விண்வெளித் திட்டம் “சூஸ்’  [JUICE] [JUpiter ICy moons Exploration] என்று குறிப்பிடப் படுகிறது.  சூரிய மண்டலத்தில் நமது பூமிக்கு அப்பால்  அவ்விரண்டு நிலவுகளில் தான் உயிரின மூலவிகள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.  ஈசாவின் சூஸ் விண்சிமிழ் 6.6 பில்லியன் மைல்கள் கடந்து 8 ஆண்டுகள் பயணம் செய்து வியாழக் கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

     

    Jupiter, with its prominent Great Red Spot, hangs in space with Ganymede. (NASA/ESA and E. Karkoschka/Reuters)

    JUICE is taking a long, roundabout route to Jupiter, covering 6.6 billion kilometres.

    It will swoop within 200 kilometres of Callisto and 400 kilometres of Europa and Ganymede, completing 35 flybys while circling Jupiter. Then it will hit the brakes to orbit Ganymede, the primary target of the 1.6 billion-euro mission ($2.4 billion Cdn).

    Ganymede is not only the solar system’s largest moon — it surpasses Mercury — but has its own magnetic field with dazzling auroras at the poles.

    https://www.nasa.gov/mission_pages/juno/images/index.html
    https://youtu.be/paeuMCN-DdQ
    https://youtu.be/NGQF-Hf5h7Y
    https://youtu.be/NrkF5beDh10

    Share
  • அனுமன் பத்து

    அனுமன் பத்து ( 200423)

    முடியாத செயல்களும் முடிக்கும் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு …1
    இயலாது இராமன் துயரறுத்த ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…2
    படியாத அசுரரை அழித்த ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…3
    ஏய்க்கும் ஏமாற்றும் மாயர்வீழ ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…4
    ஆபத்தை அழித்து அருளால் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…5
    துன்பம் அணுகாது காப்பாய் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…6
    ராமஜய ராமஜப ராமசுப ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…7
    வாலிலே பலமோடு வரமாய்வா ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…8
    திக்கெலாம் நிறைந்து காக்கின்ற ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…9
    மறைவாய் மாயையது அணுகாது ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…10
    பத்தும் துதிக்க பத்திரம் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கி யருள்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(447)

    குறளின் கதிர்களாய்…(447)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(447)

    காலங் கருதி யிருப்பர் கலங்காது
    ஞாலங் கருது பவர்.

    – திருக்குறள் – 485 (காலமறிதல்)

    புதுக் கவிதையில்…

    தவறாமல் தரணி முழுவதையும்
    தன்வயப்படுத்த எண்ணும் மன்னர்,
    தன்வலிமை மிகுந்திருந்தாலும்
    அதனைக் கருதாமல்
    அதற்குரிய காலத்தை எதிர்பார்த்தே
    அதற்காகக் காத்திருப்பார்…!

    குறும்பாவில்…

    அகிலமெலாம் அடையக் கருதும்
    அரசர் தம்வலிமையைக் கருதாமல் செயல்படத்
    தகுந்த காலத்திற்காகக் காத்திருப்பார்…!

    மரபுக் கவிதையில்…

    தரணி யெல்லாம் ஒன்றாகத்
    தனது சொந்த ஆட்சியிலே
    வரவே யெண்ணும் மாமன்னர்
    வலிமை தமக்கே உள்ளவற்றின்
    தரத்தைக் கருத்தில் கொள்ளாமல்
    தானாய் வெற்றி பெற்றிடவே
    வரட்டும் தக்க காலமென
    வாளா யிருப்பார் காத்திருந்தே…!

    லிமரைக்கூ…

    உலகெலாம் கொள்ள எண்ணம்
    கொண்ட வேந்தரும் வலிமையிருப்பினும் உரிய
    காலம்வரக் காத்திருப்பது திண்ணம்…!

    கிராமிய பாணியில்…

    காத்திருக்கணும் காத்திருக்கணும்
    காலம்வரக் காத்திருக்கணும்,
    காரியம் செய்யிறதுக்குச் சரியான
    காலம்வரக் காத்திருக்கணும்..

    ஒலகம் பூரா
    ஒண்ணாப் புடிக்க நெனைக்கிற
    ராசாவும் பெரிய
    படபெலமெல்லாம் இருந்தாலும்
    அவசரப்படாம
    அதுக்கு சரியான
    காலம் வரட்டுமுண்ணு
    காத்துக்கிட்டு இருப்பாரே..

    அதால
    காத்திருக்கணும் காத்திருக்கணும்
    காலம்வரக் காத்திருக்கணும்,
    காரியம் செய்யிறதுக்குச் சரியான
    காலம்வரக் காத்திருக்கணும்…!

    Share
  • Palani, owner of popular Easwari lending library, passes away.

    Palani, owner of popular Easwari lending library, passes away.

    Seshadri Baskar

    Book Lovers of Alwarpet, Mylapore and other adjoining areas know very well Mr Palani. He started his career as a paper dealer and rose to great heights. He developed the libraries in Many Locations and the famous and foremost that comes to mind is the one on Lloyds Road aka Avvai Shanmugam Salai.

    Before entering into the Book Business he was a scrap dealer and made this Huge success with all his sheer efforts. He had a Good Rapport with the schools nearby.

    Many old Students of DAV and National English school are still the Members of His Library.

    Mr T N Palani has Eleven Branches and his two sons look after them A Very unassuming Person is Mr Palani. He made the first Venture in 1955 and had completed his Sixty Eight Services in this Venture.

    Book Lovers and regulars to Easwari Will Miss Palani Sir. You had made the life of many meaningful with your wonderful Books.

    Goodbye Sir.

    Seen In Picture in the centre is Mr Palani flanked by His two Sons

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 3

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 3

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • புத்துணர்வூட்டச் சித்திரை கைகோக்கும்!

    புத்துணர்வூட்டச் சித்திரை கைகோக்கும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    முன்பனி பின்பனி மாறிய பின்னே
    இளவேனில் துளிர்க்கச் சித்திரை மலரும்
    தைப் பொங்கலுண்டு  தளர்வகலும் வேளை
    புத்துணர் வூட்டச் சித்திரை  கைகோக்கும்

    பெற்றோரும் மகிழ்வர் பிள்ளைகளும் மகிழ்வர்
    உற்றவரும் மகிழ்வர் உறவுகளும் மகிழ்வர்
    மணமேடை அமர மங்கலநாள் அமைய
    சிறப்பான நாளை சித்திரையே திறக்கும்

    வருடத்தின் தொடக்கம் சித்திரையே என்போம்
    சித்திரையே தொடக்கமாய் பஞ்சாங்கம் காட்டும்
    பஞ்சாங்கம் பார்ப்போம்  பலன்களையும் அறிவோம்
    நெஞ்சாரச் சித்திரையை வரவேற்று மகிழ்வோம்

    மருத்துநீர் வைப்போம் மகிழ்வாய் நீராடுவோம்
    புத்தாடை உடுத்திப் புத்துணர்வு பெறுவோம்
    பெற்றவர்கள் பெரியவர்கள் ஆசியினைப் பெறுவோம்
    கற்றுத் தந்த ஆசானைக் கண்டாசி வாங்கிடுவோம்

    கோவிலுக்குச் செல்வோம் குறையகலப் பிரார்த்திப்போம்
    வாழ்வெல்லாம் வளங்கொழிக்க மனமார வேண்டிடுவோம்
    நாடெங்கும் நலஞ்சிறக்க நாம்வேண்டி வணங்கிடுவோம்
    நல்லமனம் தருகவென நாமிறையைத் தொழுதிடுவோம்

    உறவுகளைக் கண்டிடுவோம் உளமகிழச் சேர்ந்திடுவோம்
    சுவையான பட்சணங்கள் பரிமாறி மகிந்திடுவோம்
    இனிப்பான சுவையோடு எல்லாமே ஈந்திடுவோம்
    எல்லோரும் சித்திரையைக் கொண்டாடி இன்புறுவோம்

    செந்தமிழர் சிங்களவர் சித்திரையை வரவேற்பார்
    சொந்தமெனச் சித்திரையைக் கொண்டாடிக் குதூகலிப்பார்
    பாற்சோறு பலகாரம் பக்குவமாய்ச் செய்திடுவார்
    பட்டாசு மத்தாப்பு வெடித்துமே மகிழ்ந்திடுவார்

    உவப்புடனே ஊஞ்சலேறி உளமகிழ ஆடிடுவார்
    உல்லாசம் பொங்கிவர ஊஞ்சலாடிப் பாடிடுவார்
    இளையவரும் முதியவரும் இணைந்துமே இருந்திடுவார்
    எல்லோரும் ஊஞ்சலாடி, சித்திரையை இருத்திடுவார்

    கொடியேற்றம் ஒருபக்கம் கோவில்களில் நடக்கும்
    தேரோடும் திருவிழாவும் சிறப்பாக நடக்கும்
    மதுரையில் கள்ளழகர் கால்வைப்பார் வைகையிலே
    மீனாட்சி திருக்கோவில் திருவிழாவாய் ஜொலிக்கும்

    இசையோடு இயலும் இங்கிதமாய் ஒலிக்கும்
    இளைஞரொடு முதியவரும் இணைந்துமே ரசிப்பார்
    களைகட்டும் கலைவிழா களிப்பளித்து நிற்கும்
    காதலுடன் சித்திரையும் கைகோத்துச் சிரிக்கும்

    Share
  • ஸ்ரீ சத்தியநாராயணம் – முத்துசாமி தீட்சிதர்

    ஸ்ரீ சத்தியநாராயணம் – முத்துசாமி தீட்சிதர்

    சத்தியநாராயண பூஜை நடக்கும் இடங்களில் எல்லாம் ‘ஸ்ரீ சத்தியநாராயணம்’ என்ற பாடல் பாடப்பெறுகிறது. முத்துசாமி தீட்சிதர் இயற்றிய இந்தப் பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share