வெருளும் கிறித்தவப் போதகர் சங்கம்

0

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
சிவ  சேனை

கடந்த தைப் பொங்கலின் பின்,
மூன்று மாத காலத்தில்,
சிவபூமியில் 31 ஊர்களில்
மதமாற்றிகளின் 31 நிகழ்வுகளில்
சைவ எழுச்சிப் பட்டியல் கீழே.

இலங்கை கிறித்தவப் போதகர்மார் சங்கம்.
ஊடகச் சந்திப்பு.
சைவப் பெருமக்களின் திரளால் மிரளும் மதமாற்றிகள்.
உருளும் அந்நிய ஊடுருவல்.
வெருளும்  கிறித்தவப் போதகர் சங்கம்.
மதமாற்றியார் இருளகற்றும் சிவபெருமான் திருவருள்.
தளர்வறியா மனத்துடன்
31 ஊர்களில் 31 நிகழ்வுகளைத் தடுத்த
சைவப் பெருமக்கள் திருக்கூட்டம்.

1. அச்சுவேலியில் சைவ மக்கள் திரண்டார்கள். மதமாற்றிகளான போதகர் உள்ளிட்ட ஒன்பதின்மர் காவல் துறைச் சிறையில்.

2. கோப்பாய் இருபாலையில் சைவ மக்கள் திரண்டார்கள். மதமாற்றிகளான 80 வயதுப் போதகர் அருள் நங்கை உள்ளிட்ட மூவர் காவல்துறைச் சிறையில்.

3. யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சைவ அமைப்புகள் திரண்டனர். நாக நாட்டின் தலைவி அருள்மிகு நாகபூசணி அம்மன் சிலையைக் காப்போம் என உறுதி பூண்டனர்.

4. மட்டக்களப்பில் சைவ மக்கள் திரண்டனர். தமிழ் நிலமெங்கும் சுவரொட்டிகளால் அழைத்துத் திடலில் மதமாற்றிகள் நிகழ்த்த இருந்ததை நகரோரத் தேவாலயத்துக்குள் ஒடுக்கி முடக்கினர்.

5. திருகோணமலையில் மண்டபத்தில் நிகழவிருந்த மதமாற்றிகள் நிகழ்ச்சி. கடற்கரைக்கு மாற்றினர். அங்கும் நிகழவிடாது சைவ மக்கள் திரண்டனர்.

6. கொக்குவில் திடலில் மூன்று நாள் மதமாற்றிகள் நிகழ்வு. சைவ மக்கள் திரண்டனர், தடுத்தனர்.

7. மாதம்பையில் மதமாற்றிகளின் மூன்று நாள் நிகழ்வுகள். நுழைவுக் கட்டணம் கொடுத்து வாருங்கள் என அழைத்த தமிழ் மொழி நிகழ்வுகள். மூன்று நாள்களும் நடைபெற விடாது மாதம்பைச் சைவ மக்கள் திரண்டு தடுத்தனர்.

8. மானிப்பாயில் மூன்று நாள்கள், யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தில் ஒரு நாள். பெரும் செலவு செய்து மதமாற்றிகள் நிகழ்த்தவிருந்த நிகழ்ச்சிகள். மானிப்பாய்ச் சைவ மக்கள் திரண்டனர். தடுத்தனர்.

9. ஒட்டுசுட்டானில் மதமாற்றிகளின் மூன்று நாள் நிகழ்வுகள். களியாட்டம் மது மாமிசம் எனத் திருவிழா. ஒட்டுசுட்டான் சைவ மக்கள் திரண்டனர் நிகழ்ச்சிகள் நடைபெறவே இல்லை.

10. மன்னாரில் நாகதாழ்வு சாலையோரச் சந்திப்பு மூலையில் அந்தோனியார் சிலை. உடனேயே எதிர்ப்பக்க மூலையில் அருள்மிகு பிள்ளையார் வந்து அமர்ந்தார். சைவ மக்கள் திரண்டனர்.

11. மன்னாரில் உயிலங்குளம் வட்டுப்பிதாதன்மடு நெடுஞ்சாலைச் சந்தி மூலையில் அந்தோனியார் சிலை. எதிர்ப்பக்க முனையில் அருள்மிகு பிள்ளையாருக்கு கருங்கல் கோயில் எழுந்தது. சைவ மக்கள் திரண்டனர்.

12. கச்சதீவில் ஆக்கிரமிப்புப் புத்தர் சிலையை அகற்றுங்கள் என்ற குரலோடு இணைந்தது ஆக்கிரமிப்பு அந்தோனியார் கோயிலையும் அகற்றுங்கள் என்ற சைவ மக்களின் குரல்.

13. மாவட்டபுரம் கீரிமலைச் சாலையில் அடாத்தாக மதமாற்றிகள் தேவாலயக் கட்டடம். நிறுத்தினர், திரண்ட சைவ மக்கள்.

14. மாவிட்டபுரம் கீரிமலைச்சாலையில் முன்பள்ளிக்குள் அடாத்தாகப் புகுந்த மதமாற்றிகளை அகற்றினர் திரண்ட சைவ மக்கள்.

15. கோண்டாவிலில் அருள்மிகு பிள்ளையார் கோயிலுக்கு எதிரே அனைத்துலகப் பின்னணி கொண்ட அசைவ உணவகம். சைவ மக்கள் திரண்டனர். உணவகத்தை மூடினர்.

16. கோண்டாவில் அரசுப் பேருந்து வளாகத்துள் புதிதாக அந்தோனியார் சிலையா? கோண்டாவில் சைவ மக்கள் திரண்டனர். சிலை அங்கு வராது தடுத்தனர்.

17. கொடிகாமத்தில் 18. புன்னாலைக்கட்டுனில் 19. ஏழாழையில் 20. பண்ணாகத்தில் அடாத்தாக மதமாற்றிகளின் நடவடிக்கைகள். சைவ மக்கள் திரண்டனர். குரல் கொடுத்தனர்.

21. சுண்ணாகம் மயிலங்காடு திடலில் மூன்று நாள் மதமாற்றிகள் நிகழ்வு. முதல் நாள் நடைபெற்றது. அடுத்த இரு நாள்களும் நடைபெறவில்லை. சைவ மக்கள் திரண்டனர், தடுத்தனர்.

22, 23 வவுனியாவில் இரு நிகழ்வுகள்,

24. நெடுங்கேணியில் ஒரு நிகழ்வு,

25. வெள்ளாங்குளத்தில் ஒரு நிகழ்வு,

26, 27, 28, 29, 30, கிளிநொச்சியில் ஐந்து நிகழ்வுகள்,

31. ஏழாலையில் ஒரு நிகழ்வு

எனப் பிப்ருவரிக் கடைசியில் மதமாற்றிகளின் நிகழ்வுகள்.  எதையுமே நிகழ விடாது சைவ மக்கள் திரண்டு நிறுத்தினர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.