-செண்பக ஜெகதீசன்
கண்ணியம் மிக்க மேய்ப்பனைக் 
கன்னி மரியாள் சேய்தனை,
புண்படச் சிலுவை சுமந்த
புனித வெள்ளிச் சுடரதை,
உண்மைப் பொருளதை உணர்த்திட
உயிர்த்தே எழுந்த பிதாவினை,
விண்ணின் மைந்தன் தேவனை
வழிபட, வந்திடும் நலமதே…!

Leave a Reply