மகளிர் தின வாழ்த்துக்கள்

சக்தி சக்திதாசன்

என் இனிய அன்பு உள்ளங்களே !

மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம். இத்தினத்தில் எனை இவ்வுலகில் ஈன்ற என் அன்னைக்கு, என்னை ஒரு மனிதனாய் உருமாற்றம் செய்ய அவள் செய்த அளப்பரிய தியாகங்களுக்கு, என்னை பண்புடை மனிதனாக வளர உதவிய என் சகோதரிகளுக்காக, சிதைந்து போன என் வாழ்வை தூக்கி நிறுத்தி இன்று என் அனுபவங்களை என் இனிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வழி சமைத்த என் மனைவி, என் உயிர்த்தோழி, என் அன்பு மனைவிக்காக, இன்று என்னோடு உடன் பிறக்காவிட்டாலும் அண்ணா என்றும் தம்பி என்றும் என்னைத் தம் உடன்பிறப்புகளாக கெளரவிக்கும் என் தமிழன்னை தந்த சகோதரிகளுக்காகவும் இதோ இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்

images

சக்தியெனக்கு கொடுத்தவள் என் அன்னை
சித்தியெனக்களித்தவள் என் அன்னை
புத்தியெனக்களித்தவள் என் அன்னை
முற்று முதலாய் அவளுக்கே என் வணக்கம்

தன்னில் ஒரு பாகம் கொடுத்து உலகில்
தந்தான் அந்த ஆதிமூலம் பெண்மையின் மகத்துவம்
எத்தனை வடிவங்கள் எடுத்துப் பெண்கள்
வித்தக விந்தைகள் புரிவர் இவ்வுலகில்

அன்னையாராக அன்பு மழை பொழிவர்
சகோதர சகோதரியராக பந்தம் வளர்த்திடுவர்
காதலியராக கனவுகளுக்கு உயிர் கொடுப்பர்
தொழியராக எம்முடன் துயர் பகிர்ந்திடுவர்

அன்றொருநஃஅள் எம் முப்பாட்டன் பாரதி
ஆணித்த்ரமாய் ஒலித்தான் பெண்ணின் பெருமை
அந்நிய நாட்டார் எம்மை அடிமை கொள்வது போல
அன்னை இனத்தை நாம் அடிமை கொள்ளலாகாது

தெள்ளிய உண்மை நிலைகளைத் தமிழில்
தெட்டத் தெளிவாய்ச் சொன்னவன் எம் பாரதி
உள்ளத்தில் வாங்கினோமா நாம் உண்மைகளை ?
உங்கள் இதயத்தைச் தொட்டுச் சொல்லுங்கள்

வேதனை பல தாங்கி உலகில் மாதர்கள்
சோதனை பல வென்று தன்னிரகற்ற
சாதனை கண்ட மகவுகள் தந்தனர் தோழரே !
போதனை அல்ல இது சத்தியம் என்பதே உண்மை

மகளிர் தினம் இதுவென்று உலகில் ந்2ஆம்
மார் தட்டிக் கொள்வதல்லை பெருமை
மகளிர் மாந்தருள் மாணிக்கமெனும் உண்மை
விளங்கிட எது செய்தோம் என்பதே கேள்வி ?

சமுதாயம் , கலாச்சாரம் எனும் போர்வையில்
மாதர்கள் கால்களில் பூட்டி விட்ட விலங்குகளை
சமத்துவம் எனும் சத்திய உளி கொண்டு என்று நாம்
உடைக்கின்றோமோ அன்றுதான் உன்மையான மகளிர் தினம்

எமையீன்ற அன்னையர்க்கு, எமைப் போல பல
உன்னத மகவுகளுக்காய் தம் வாழ்வை அர்ப்பணித்த
தியாகச் செம்மல்களாம் மகளீர் அனைவருக்கும்
வணக்கங்களோடு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *