மூக்குத்தியின் ரத்தம்

-கவிஜி 

அகம் கிழித்துக்
குருதி பீய்ச்சும் சாந்த
முகம்!
புறம் தாண்டிய பேருந்து
ஜன்னலோடு
நசுங்கிப் போன
எதிர் வாகனப் பயணத்தில்
மைல் கல்லாய்
உறைந்து சிதறியிருக்கலாம்
மூக்குத்தியின் ரத்தம் தோய்ந்த
படிநிலையோடு…
அகம் அடங்காத் தவம் மட்டும்
இப் பேருந்துக்குள்
தொடரலாம், இறந்த கால
எச்சங்களோடு…!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *