இலக்கியம்கவிதைகள்

இன்று வெட்டப்படாத ஆடுகள்!

-சேசாத்ரி பாஸ்கர்

எதுவும் கட்டப்படவில்லை
எல்லாம் அடர்த்தியாய் நின்றுகொண்டு
முட்டிமோதிக் கொண்டு
செந்நிறத்தில் ஆறு
கன்னங்கரேலாய் நான்கு, கழுத்துக் கீற்று வெண்மை
வெள்ளை நிறத்தில் ஒன்று நசுங்கிக் கொண்டு
ஈரமாய்ப் போன உடல்கள்!

தொட்டால் சிலிர்க்கும், உயிர்ப் பயம்
தொடுதலில் உதறல் , என் கை நடுக்கம்
எல்லாக் கண்களிலும் மிரட்சி
கண்கள் அரளும் பச்சை
பயத்திலும் புழுக்கை
பார்த்து மீண்டும் ஒன்று மேல் ஒன்று மோதி
நிராயுத பாணி நான்-
கண்களால் நன்றி சொன்னது!

குட்டி ஒன்று இரண்டின் காலடியில்
சீரிய கொம்புகள், குத்தினால் குடல் சரியும்
பாய்ச்சலாய்க் குதித்து ஓடும் பிறவிக் குணம்
மரண பயம் -எல்லாம் மறந்தன
இன்று வெட்டப்படாத ஆடுகள்!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க