-ராதா மரியரத்தினம்

சூனியப் பிரவாகத்தில் நிற்கிறேன்
கனவா நனவா என்று கூட​
உணரமுடியா நிலை
எங்கோ குருதி கசிவது போன்ற​ உணர்வு
தடவிப்பார்க்கிறேன்
மையிருட்டு என்பதை உணர்கையில்              maayai
பிடரி வேர்க்கிறது
காலசர்ப்பமாய் ஏதோ ஒன்று
காலைச் சுற்றுகிறதே
’ஆ’வென​ அலறி வீழ்கிறேன்
அவிழ்க்கப்படாத​ முடிச்சாய்!
விரியும் வாழ்க்கைதான்
இவைகள் என்று நானுணரும் போது
கண்கள் குத்திட்டு நிற்கிறது!

பாம்பும் பல்லியும் ஓநாய்களும் வல்லூறும்
நிறைந்து கிடக்கின்ற​ இந்த​
வாழ்வெனும் மாயையில்
வாயை அகல விரித்து
நிற்கின்ற​ முதலைகள்
எது கிடைத்தாலும் விழுங்கக் காத்திருக்கும்
இவற்றையெல்லாம் கடந்து
நான் செல்ல​ வேண்டிய​
இலக்கு வெகுதூரம்!

பிரமித்து நிற்கிறேன்
என்னுடம்பில் இருந்து
கசியும் குருதி கொண்டு
ஓநாய்கள் மோப்பம் பிடிக்கக் கூடும்
உடலிலிருந்து ஏதோ
வெளியேறுவதாய் உணர்கையில்
உடல் இலேசாகி மேலே பறக்கிறேன்
புல்லாங்குழலின் இசையாய்
என் உடலில் ஒன்பது துவாரங்களிலும்
உன்னத​ இசை, ஒருவித​ நறுமணம்
ஒளி ஒழுகும் வழியொன்று புதிதாய்த் தெரிந்தது
என் தோள்களைத் தொட்டுத் தூக்குமோர் உணர்வு
அப்போதுதான் தெரிந்தது
என் மூதாதையர்கள் என்னோடு இருப்பது…
நிம்மதிப் பெருமூச்சு விட்டவனாய்த் தூங்குறேன்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.