’’அமரர் தேவன்’’….

கிரேசி மோகன்

சமீபத்தில் (புத்தகத்தை தள்ளிவைத்துதான்…. சமீபத்தில் வைத்துப் படித்தால் கண் கெட்ட பிறகு தேவனைப் படித்த கதையாகிடும்…) ‘’அமரர் தேவனின்’’ ஜஸ்டிஸ் -ஜகன்னாதன், ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ராஜத்தின் மனோரதம்…etc etc….(உபயம் அல்லையன்ஸ் பிரஸ் நண்பர் ஸ்ரீனிவாசன்…. படிக்கும்படி ஊக்குவித்தவர் -நண்பர் ரகுநாதன் ஜெயராம்…. இருவருக்கும் நன்றி) வாசித்துக் கொண்டிருக்கிறேன்…. என்ன ஒரு ஹுயுமர் தேவனுக்கு…. எங்கப்பா சொன்னார் ‘’நம்மாத்துக்கு பக்கத்தாம் தேவன்(neibhour)…. உன்னை தோள்ள தூக்கி வச்சுண்டுருக்கார்’’…. ஒருவேளை அதான் ‘’ஹ்யூமர்’’ எனக்கு வந்துதோ….! இருக்கலாம்….! அப்புறம் ஒரு அனக்டோட் தேவனை பத்தி சொன்னார்…. நானும் அதை அப்புறமா சொல்றேன்….’’தேவரின் தெய்வம்’’ மாதிரி ‘’கிரேசியின் தெய்வம் தேவர்(மரியாதையாக)….

2b130d71-5a37-4d18-a1b9-9c8bd28f7dc4

இணைத்த படத்தில் அடியேன் ராஜா….அருகில் இருப்பது நெய்வேலி பொறியாளர் சாமா என்கிற சாமிநாதன்….பால்ய நண்பன்…5வது ஷோவிலேயே அபார்ட் ஆச்சு “எல்லோரும் இந்நாட்டு மன்னர்”….பிறகு பிறந்தது “அல்லாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்”… தொடர்ந்து நாடகப் பயணம்….இதுதான் முன்கதைச் சுருக்கம்…”அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே…. இந்த நானுக்(கு) அந்த’தில்’ இல்லையே”…. ஏன் ஏன் ஏன்….!

‘’சாக்லேட் கிருஷ்ணா’’ வின் அமோக வெற்றிக்கு ஒரு காரணம் ‘’அதிதி தேவனோ பவ:’’….இவர் ‘’லண்டன் வுட் ஹவுஸ்’’….வுட் -ஹவுஸ் தமிழ்நாட்டு தேவன்….

“ஜஸ்டிஸ் ஜகன்னாத ,ஸ்ரீமான் சுதர்சன
மிஸ்டர்வே தாந்த மகாதேவர் -வெஸ்ட்க்(கு)
இவர்போக வுட்ஹவுஸ் ,இங்கு பிறந்து
டவர்போல நின்றார் தமிழ்க்கு”….

“வல்லாரை உண்ணாமலே வந்தது ஞாபகம்,
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”எனக்; -கல்லூரி
தாக்கம் அமரரவர் தேவன் நகைச்சுவையே
சாக்லேட் கிருஷ்ணா சிரிப்பு”….கிரேசி மோகன்….
—————————————————————————————————————-

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *