கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”நீலம்பா ரித்த நவநீதன் மத்ததனில்,
பாலின்ப வெண்ணை பிசுபிசுக்க, -காலின்பம்
கொண்டு பருகுகிறாள் கோமாதா;, கோலமிதை
விண்டுரைத்த கேசவ் வியப்பு’’….கிரேசி மோகன்….
“விண்சார்ந்த இந்திரன் வீசிய மின்னலிடி
மண்சேரா வண்ணம் மலையெடுத்த, -மின்சாரக்
கண்ணமுது ,அந்தக் கிளிசுகர் கூறிய
வண்ணமிகு பாக வதம்”….கிரேசி மோகன்….