மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++
உன்னைக் கூட்டிச் செல்லவா ?
ஆப்பிள் தோப்புக்கு போகிறேன்.
எதுவும் மெய்யல்ல !
எதையும் பற்றித் தொங்காதே !
ஆப்பிள் தோப்பிலே நீ
எப்போதும் கிடக்காதே !
விழிகளை மூடிக் கொண்டு
வாழ்வது எளிது !
பார்ப்ப தெல்லாம் புரியாது
திரிக்கப் படுகிறது !
அடுத்தவன் உடலுக்குள் புகுந்து
நடிப்பது கடினம் !
எல்லாம் நடக்குது எப்படியோ !
எனக்கொரு கவலையும்
இல்லை !
இருவரும் ஆப்பிள் தோப்புக்கு
ஏகுவோம் ! வா !
எதுவும் மெய்யல்ல !
எதையும் பற்றித் தொங்காதே !
ஆப்பிள் தோப்பு என்றும் உனக்கு
வாழும் இடமில்லை !
எனக்குத் தெரியும் நன்றாய்
ஆப்பிள்
பூப்பதில்லை என்றும்
என் மரத்தில் !
மேலிருக் கலாம், அன்றி
கீழிருக் கலாம் எனக் கூறுவாய் !
உனக்குத் தெரியுமா ?
ஆப்பிள் தோப்புக்கு போவோம்.
எதுவும் மெய்யல்ல !
எதையும் பற்றித் தொங்காதே !


Leave a Reply