Tag: அண்ணாகண்ணன்

  • மக்கள் தொலைக்காட்சியில் அண்ணாகண்ணன்

    மக்கள் தொலைக்காட்சியில் அண்ணாகண்ணன்

    2021ஆம் ஆண்டு எழுத்துத் துறை எப்படி இருக்க வேண்டும் என்று மக்கள் தொலைக்காட்சியிலிருந்து கேட்டார்கள். எங்கள் வீட்டுக்கே வந்து என் கருத்துகளைப் பதிந்தார்கள். அவர்களும் இவர்களும் என்ற இந்த நிகழ்ச்சியில், அச்சு எழுத்தாளர்கள், இணைய எழுத்தாளர்கள் சார்பில் கருத்துகளைப் பெற்றார்கள். என்னுடன் எழுத்தாளர்கள் வையவன், கே.பாரதி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். 01.01.2021 புத்தாண்டு அன்று காலையில் இந்த நிகழ்ச்சி, ஒளிப்பானது.

    என் கருத்துரையில், எழுத்துத் துறை, பத்திரிகைத் துறை, பதிப்புத் துறை, தமிழ் வளர்ச்சி ஆகியவை 2021இல் எப்படி இருக்க வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொண்டேன். என் கருத்துரை இங்கே. இதைப் பார்த்து, உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

     

    நன்றி – மக்கள் தொலைக்காட்சி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உண்மைச் சம்பவம் 1 – புறவழிச் சாலையிலே

    உண்மைச் சம்பவம் 1 – புறவழிச் சாலையிலே

    அண்ணாகண்ணன்

    சென்னைப் புறவழிச் சாலையில் எனக்கு நடந்த உண்மைச் சம்பவத்தை விவரித்துள்ளேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 10

    அண்ணாகண்ணன் காணொலிகள் 10

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    சண்டைச் சேவலின் கூவலும் எதிர்க்கூவலும்

    செங்கல்பட்டு அருகே நென்மேலி எனும் கிராமத்திற்கு நேற்று சென்றேன். அழகிய காட்சிகள் பலவற்றைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். இந்தச் சண்டைச் சேவல் கூவ, பதிலுக்கு எங்கிருந்தோ வேறொரு சேவல் கூவியது. வழக்கமாக, நாய் ஒன்று குரைக்க, பல இடங்களில் உள்ள நாய்கள் குரைக்கும். இங்கே சேவல்கள் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுகின்றன.

    தென்னங்கீற்றில் ஆனைச்சாத்தன்

    திருப்பாவையின் 7ஆவது பாடலில் ஆனைச்சாத்தன் இடம்பெற்று, உலகமெங்கும் இந்தப் பாடல் பாடப்படுகிறது. இந்த 7ஆம் நாளை ஆனைச்சாத்தன் நாள் (The day of Black Drongo) எனக் கொண்டாடினால் என்ன? 

    ஆண்டாள் பாடிய ஆனைச்சாத்தன் குருவிகளில் சில, நம் வீட்டருகே குடியிருக்கின்றன. இவை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் அமரும். முன்பு வாழையிலையில் அமர்ந்ததைப் பகிர்ந்தேன். தென்னங்கீற்றில் அமர்ந்த கோலம் இங்கே.

    பொன்வண்டு| Jewel Beetle | Ponvandu

    செங்கல்பட்டு அருகே நென்மேலி கிராமத்தில் இந்தப் பொன்வண்டைப் படம் பிடித்தேன்.

    இரைதேடும் நத்தை குத்தி நாரை

    நம் வீட்டுக்குப் பின்னுள்ள புல்வெளியில் நத்தை குத்தி நாரை, இன்று காலை இரைதேடியது. பின்னர் சிறகடித்துப் பறந்து, அருகில் உள்ள மதிலில் அமர்ந்தது. இந்த அழகான காட்சியைப் பாருங்கள்.

    Asian Openbill Stork On Air

    நத்தை குத்தி நாரை / அகலவாயன் / Anastomus oscitans / Asian openbill / Asian openbill stork

     

    Kingfisher – 2 | மீன்கொத்தி – 2

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 9

    அண்ணாகண்ணன் காணொலிகள் 9

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    செங்கல் அடுக்கும் கலை | Bricks over the head

    தலைக்கு மேல் 10 செங்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிச் செல்லும் கட்டடத் தொழிலாளர்கள். இடம்: தாம்பரம், சென்னை.

    Two Mynas | இரு மைனாக்கள்

    மின்கம்பியில் பாடியபடி ஊஞ்சலாடும் இரு மைனாக்கள்.

     

    சிறகடிக்கும் நீர்க்காகம் | Cormorant | Neer Kaagam

    இன்று பார்த்த நீர்க்காகம் தன் சிறகுகளை அடித்துக்கொண்டே இருந்தது. அதற்கு முன்னதாகப் பார்த்த நீர்க்காகம், அருகில் உள்ள குட்டையில் மூழ்கி எழுந்து வந்து, இதே போல் சிறகடித்தது. எனவே தன் சிறகுகளை உலர்த்தவே இவ்வாறு செய்கிறது.

     

    Kingfisher | மீன்கொத்தி

    Flying Parrot | பறக்கும் கிளி

    மார்கழி முதல் நாளில் கிளியொன்று பறக்கக் கண்டேன். இது, யாரைத் தேடிச் செல்கிறது?

    Sunset at Chennai – 22

    சென்னையில் சூரியன் அஸ்தமிக்கும் அழகிய காட்சி.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 8

    அண்ணாகண்ணன் காணொலிகள் 8

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    Morning Sun | காலைச் சூரியன்

    மேகங்களிலிருந்து வெளிப்படும் இன்றைய காலைச் சூரியன்

    நீர்க்காகம் | Cormorant

    நீர்க்காகத்தை இன்று முதல் முறையாகப் பார்த்தேன். தாம்பரத்தில் நம் வீட்டுப் பின்புறம் ஓர் எல்லைக் கல்லில் வந்து அமர்ந்தது. தன் பெரிய சிறகுகளை விரித்தபடி, அதை ஆராய்ந்தபடி, அலகால் குடைந்தபடி, காலால் முகத்தைச் சொறிந்தபடி, சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தது. சாதாரணக் காகம் ஒன்று, அதைச் சற்று சீண்டிப் பார்த்தது.

    Voice of Myna

    மைனாவின் இனிய குரலைக் கேளுங்கள்.

     

    Sunbird in the morning

    இன்று காலை கண்ட தேன்சிட்டு.

    Squirrel on Ashoka tree

    அசோக மரத்தில் ஓர் அணில்.

     

    Kitten on the tree

    பூனைக்குட்டி, புங்க மரத்திலிருந்து இறங்கும் காட்சி.

    Aulacophora | Pumpkin Beetle

    பூசணி வண்டு

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 7

    அண்ணாகண்ணன் காணொலிகள் 7

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    மஞ்சள் அழகி | Common Jezebel | Delias eucharis

    A lovely, colorful butterfly! I would suggest, we can declare this butterfly as a symbol of Holi festival.

    இந்த மஞ்சள் அழகி, மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து, உயரத்தில் ஓர் இலை மீது அமர்ந்தது. படக்கருவியைத் தலைக்கு மேல் பிடித்து எடுக்க வேண்டியதாய் இருந்தது. இதன் வண்ணங்களும் வடிவும் நம்மைக் கொள்ளை கொள்கின்றன. ஹோலிப் பண்டிகையின் அடையாளச் சின்னமாக இதை அறிவிக்கலாம்.

    புடலங்காய் காய்த்தது | Snake gourd | Trichosanthes cucumerina

    நம் வீட்டுத் தோட்டத்தில் புடலங்காய் காய்த்துள்ளது. சிறிய ரகப் புடலை எனத் தெரியாமல், இன்னும் நீளமாக வளரட்டும் என்று காத்திருந்த நேரத்தில் அது பழுத்துக் கொடியிலேயே காயந்துவிட்டது. ஆனாலும், அதே கொடியில் இன்று இன்னொரு புடலை பிஞ்சு விட்டுள்ளது, பார்க்க மிக அழகாக உள்ளது.

     

    பொன்வண்டு | Ponvandu

    பொன்வண்டு, அரிதாகவே தென்படும். என்றைக்காவது தென்பட்டாலும் நம் எதிரே உட்காராமல் பறந்துவிடும். அப்படியே உட்கார்ந்தாலும் அந்நேரத்தில் நம் கையில், படக்கருவி இருக்காது. படக்கருவி, கையில் இருந்தாலும் அதில் சேமிப்பகம், சேமக்கலன் போதுமான அளவு இருக்காது. இன்று இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அமைந்த பொற்கணத்தில் இந்தப் பொன்வண்டைப் படம் பிடித்தேன். சில நாள்களுக்கு முன், இதை அரை நிமிடம்தான் பதிவு செய்ய முடிந்தது. அந்தக் குறை நீங்க, இன்று ஆறு நிமிடம் காட்சி தந்தார். பொறுமையாக, விதவிதமாக எடுக்க முடிந்தது. இதைப் படமெடுக்கையில், இடையே ஒரு குளவி சுற்றிச் சுற்றி வந்து அச்சுறுத்தியது. எனினும் இதை வெற்றிகரமாகப் பதிவு செய்தேன். அரிய காட்சி, பார்த்து மகிழுங்கள்.

     

    சுழலும் சந்தன முல்லை | Rotating Santana Mullai | Jasminum Auriculatum

    நம் வீட்டு மாடித் தோட்டத்தில் உள்ள சந்தன முல்லையில் இன்று ஒரு புதுமையைப் பார்த்தேன். செடியிலிருந்து விழுந்தும் விழாத ஒரு முல்லை மலர், தலைகீழாகத் தொங்கியபடி சுழன்றுகொண்டிருந்தது. எவ்வளவு காற்று அடித்தபோதும் விழாமல் சுழன்றுகொண்டே இருந்தது. சில பந்தங்கள் ஆழமானவை. அவ்வளவு எளிதில் விட்டு விலகுவதில்லை.

    Common Moorhen | தாழைக் கோழி

    இன்று கண்ட தாழைக் கோழி.

    வாழை இலையில் ஒரு கரிச்சான் | Black Drongo on Banana leaf

    வாழை இலையில் கரிச்சான் என்கிற இரட்டைவால் குருவி அமர்ந்திருப்பதைச் சற்றுமுன் பார்த்தேன். இதோ உடனுக்குடன் பகிர்கின்றேன். இதன் அலகு ஓரத்தில் வெண்புள்ளி ஒன்று இருப்பதை இன்றுதான் கவனித்தேன்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 6

    அண்ணாகண்ணன் காணொலிகள் 6

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    பவழமல்லி பூத்தது

    நம் வீட்டு மாடித் தோட்டத்தில் பவழமல்லி பூத்துள்ளது. மகிழ்ச்சி.

    வெட்சிப் பூவில் வண்ணத்துப்பூச்சி

    இட்லிப் பூ என அழைக்கப்படும் வெட்சிப் பூவில் வண்ணத்துப்பூச்சி தேனருந்தும் அற்புதக் காட்சி.

    பொன்முதுகு மரங்கொத்தி

    பொன்முதுகு மரங்கொத்தியை இன்று முதல் முறையாகக் கண்டேன். நம் வீட்டு வேப்பமரத்தில் சிறிது நேரம் இளைப்பாறியது.

    Loten’s Sunbird | Purple Sunbird 2

    நம் தோட்டத்தில் இன்று கண்ட ஊதா தேன்சிட்டு.

    Black Drongo

    கரிச்சான் | இரட்டைவால் குருவி | கரிக்குருவி | ஆனைச்சாத்தன்

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கவிதை மட்டும்: அண்ணாகண்ணன் தேர்ந்தெடுத்த கவிதைகள்

    கவிதை மட்டும்: அண்ணாகண்ணன் தேர்ந்தெடுத்த கவிதைகள்

    கவிதை மட்டும் என்ற வாட்ஸாப் குழுவை நண்பர், இயக்குநர் ஏகம்பவாணன் நடத்துகிறார். இந்தக் குழுவில் தினந்தோறும் ஒரு தலைப்பு அறிவித்து, கவிதைப் போட்டி நடத்துகிறார். அதே போன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை நடுவராக அறிவிக்கிறார். வரக்கூடிய கவிதைகளை அந்த நடுவரிடம் ஒப்படைத்து, சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார். அந்த வகையில், 2020 நவம்பர் 5ஆம் நாளுக்கான கவிதைப் போட்டிக்கு என்னை நடுவராக அறிவித்தார். வரப்பெற்ற கவிதைகளைத் திறனாய்ந்து, பரிசுக்கு உரிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கினேன். அந்தப் பதிவு இங்கே. பரிசு பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 4

    அண்ணாகண்ணன் காணொலிகள் 4

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    Ponvandu | பொன்வண்டு | Sternocera

    இன்று கண்டேன் ஒரு பொன்வண்டு

     

    ஒரு ஜோடி தவிட்டுக் குருவிகள்

    இந்த ஜோடி என்ன செய்கிறது என்று பாருங்கள்.

     

    இரையைக் கொத்தும் இளம் கொக்கு

    ஓர் இளம் இந்தியக் குளத்துக் கொக்கு (மடையான்), புல் மீது அமர்ந்தபடி, இரையைக் கொத்தி உண்ணுகிறது. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து என்ற குறளுக்கு இணங்க, இந்த இந்தியக் குளத்துக் கொக்கு காத்திருந்து கொத்துகிறது. அதன் கழுத்து எவ்வளவு நீளும் என்பதையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

     

    தாழைக் கோழிகளின் சண்டை

    இரண்டு ஜோடி தாழைக் கோழிகள், நம் வீட்டுப் பின்புறத்தில் உண்டு. அவற்றுக்குள் ஏதோ தகராறு. இரண்டு தாழைக் கோழிகள், பல முறைகள் அடித்துக்கொண்டன. வெவ்வேறு இடங்களில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. நடுவில் ஒரு தாழைக்கோழி தடுக்கப் போய், அதற்கும் நாலு சாத்து விழுந்தது. அந்தப் பரபரப்பான சண்டைக் காட்சியை இங்கே பாருங்கள்.

    Six birds | ஆறு பறவைகள்

    ஒரே வரிசையில் ஆறு பறவைகள் (மடையான், மைனா, உண்ணிக் கொக்கு)

     

    Evening sky at Chennai – 16

    Male Cuckoo

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 3

    அண்ணாகண்ணன் காணொலிகள் 3

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    தோசை சாப்பிடும் அணில்

    நம் வீட்டுத் தோசையை வெளுத்துக் கட்டும் அணில்.

    Rain drops | மழைத்துளிகள்

    புரவிப் புயல், சென்னை தாம்பரத்தில் நம் பகுதியில் சில்லென்ற சூழலையும் சிறு தூறலையும் நாள்முழுக்கத் தந்துள்ளது. நீர்ப்படுகை மீது மழைத்துளிகள் வரையும் வட்டங்களும் ஓவியங்களும் தனி அழகு. பார்த்து மகிழுங்கள்.

    Squirrel is biting Neem stick

    வேப்பங்குச்சியைக் கடிக்கும் அணில்.

    Two Red-vented Bulbuls

    புரவிப் புயல் நாளில் இரு சின்னான்கள். இடம்: சென்னை

     

    வேப்பமர உச்சியிலே சின்னான்

    Red-vented Bulbul is singing on the top of Neem tree

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 2

    அண்ணாகண்ணன் காணொலிகள் 2

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    கத்தரிக்காய் காய்த்தது

    நம் வீட்டுத் தோட்டத்தில் கத்தரிக்காய் காய்த்தது.

     

    Black Drongo on electric line

    மின் தடத்தில் ஊஞ்சலாடும் கரிச்சான் | இரட்டைவால் குருவி | கரிக்குருவி | ஆனைச்சாத்தன்

     

    நினைத்ததை நடத்தியே முடிப்பவன்!

    உச்சியில் இரட்டைவால் குருவி

    ஹாஹாஹா, இந்தப் படத்தைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். இதை எடுக்கும்போது என் கை மெல்ல ஆடியது. ஆனால், படத்தைப் பார்த்தால், கம்பத்தை யாரோ இங்கும் அங்கும் நகர்த்த, உச்சியில் இரட்டைவால் குருவி அசையாமல் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது, இல்லையா?

    Do your duty!

    What ever the situation, do your duty!

    On a rainy day in Cyclone Puravi, the pigeon is busy as usual!

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆள்காட்டிப் பறவையின் குரல்

    ஆள்காட்டிப் பறவையின் குரல்

    அண்ணாகண்ணன்

    இன்று காலை எழுந்தவுடன், ஆள்காட்டிப் பறவையின் உரத்த பாடலைக் கேட்டேன்.

    கணந்துள்–ஆள்காட்டி (Lapwing) என்ற தலைப்பில் சற்குணா பாக்கியராஜ், வல்லமை மின்னிதழில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

    பறவையியலாளர்கள் ஆள்காட்டியின் குரலை, ”loud and penetrating” என்று குறிப்பிடுகின்றனர். பறவைகளின் தந்தை என்று போற்றப்படும் முனைவர் சலீம் அலி, இந்தப் பறவைகளின் குரலை வர்ணிக்கும் போது, “மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, இரட்டை அசையில், “twit, twit” என்று இரண்டு வினாடிக்கொரு தடவையும், இடைஇடையே, மிகவும் உயர்ந்த குரலில் “twit-twit-twit-twit”, என்று இரக்கமான குரலும் கொடுக்கும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சூழ்நிலைக்கேற்றவாறு, குரலை உயர்த்தியோ, தாழ்த்தியோ, “Did-he-do-it?” என்று வருத்தம் தோய்ந்த குரல் கொடுக்கும்” என்கிறார் (The Book of Indian Birds, Salim Ali. p.139-140).

    இந்தக் காணொலியில் உள்ளது எந்த ஆள்காட்டிப் பறவையின் குரல் என்பதை நீங்களே கண்டுகொள்ளுங்கள்.

     

    முகப்புப் படத்திற்கு நன்றி : https://www.wikiwand.com/en/Red-wattled_lapwing

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • டிரோன் மூலம் டெலிவரி

    டிரோன் மூலம் டெலிவரி

    அண்ணாகண்ணன்

    அத்தியாவசியப் பொருள்களை டிரோன் மூலம் டெலிவரி செய்ய முயலலாம். புயல், மழை, வெள்ளம் போன்ற நேரங்களில், மனிதர்களால் செய்ய முடியாத பணிகளை டிரோன் போன்ற எந்திரங்களால் செய்ய முடியும்.

    ஹெலிகாப்டர் அல்லது விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசி எறிவதை விட, விமானத்திலிருந்து டிரோன்கள் பறந்து பயனாளிகள் கையில் சேர்ப்பது போல் செய்தால் இன்னும் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் இருக்கும்.

    டிரோன்களைப் பொருள் விநியோகத்திற்கு மட்டுமின்றி, இருளான பகுதிகளில் ஒரு தற்காலிக நகரும் மின்விளக்காகவும் தொலைபேசி, இணையம் ஆகியவற்றை வழங்கும் ஒரு நகரும் கோபுரமாகவும் பயன்படுத்த முடியும்.

    பொருள்களைக் கொண்டு சேர்ப்பதுடன், அவரவர் வீட்டிலிருந்து குப்பைகளைத் திரட்டிக்கொண்டு வந்து சேர்க்கும் பணிகளிலும் இவற்றை ஈடுபடுத்தலாம். சற்றே பெரிய டிரோன்களைத் தனி வாகனமாகவும் பொது வாகனமாகவும் பயன்படுத்தும் முயற்சிகளும் தொடங்கியுள்ளன. எனவே, விமானப் போக்குவரத்தைக் கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துவது போல், டிரோன் போக்குவரத்தையும் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் தேவை உள்ளது. இதற்கெனத் தனி ஆணையத்தை உருவாக்க வேண்டும்.

    Share
  • உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு

    உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு

    அண்ணாகண்ணன்

    உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு தொடங்கியுள்ளது. அவருடன் பற்பல கவியரங்குகளில் நான் கலந்துகொண்டுள்ளேன். மனத்தில் தோன்றியதை ஒளிவுமறைவு இல்லாமல் பேசுவார். ஒருமுறை என்னைப் பார்த்து, நீங்க அழகா இருக்கீங்க, நடிக்கப் போலாமே என்றார்.

    உ.வே.சா. கவியரங்கில் நான் கவிதை படித்த பிறகு, தன் பையிலிருந்து ஒரு ரூபாய் கொடுத்துப் பாராட்டினார். சும்மா பாராட்டக் கூடாது, ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்டணும் என்பார். அவரை ஒரு முறை பேட்டி கண்டேன். அதை இங்கே படிக்கலாம். http://annakannan.blogspot.com/2005/07/blog-post_30.html

    இந்தப் படத்தில் சுரதா, 1996ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 24 மணி நேரத் தொடர் கவியரங்கில் நான் பங்கேற்றதைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்குகிறார்.

    இந்த நூறாவது ஆண்டில் சுரதா அவர்களின் நினைவைப் போற்றுவோம்.  அவருடனான உங்கள் அனுபவங்களையும் அவரது படைப்புகள் பற்றிய உங்கள் பார்வைகளையும் வல்லமையுடன் பகிருங்கள்.

    Share
  • அஞ்சலி: க்ரியா ராமகிருஷ்ணன்

    அஞ்சலி: க்ரியா ராமகிருஷ்ணன்

    அண்ணாகண்ணன்

    தமிழ்ப் பதிப்பியலை, அகராதியியலை நவீன கண்ணோட்டத்துடன் அணுகி, தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப, புதிய பரிமாணங்களுடன் மிளிரச் செய்த க்ரியா ராமகிருஷ்ணன், இன்று (17.11.2020) மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன்.

    க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களை நான் ஓரிரு முறைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன். முதல் முறை, 2004 காலக்கட்டத்தில் அமுதசுரபியில் நான் பொறுப்பில் இருந்தபோது, வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிப்பித்தேன். அப்போது ஒரு கூட்டத்தில் அவர், க்ரியா ராமகிருஷ்ணனை எனக்கு அறிமுகம் செய்வித்தார். க்ரியா என மெய்யெழுத்தில் தொடங்குமாறு ஏன் வைத்தீர்கள் எனக் கேட்டேன். அதுதான் அதன் உச்சரிப்பு என்றார். அப்படியானால், ராமக்ருஷ்ணன் என்றுதானே எழுத வேண்டும். அங்கு மட்டும் ஏன் கிருஷ்ணன் என எழுதுகிறீர்கள் எனக் கேட்டதாக ஞாபகம்.

    க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் சைக்கிள் உள்ளிட்ட பிறமொழிச் சொற்கள் எப்படி இடம்பெற்றன? என அதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்களிடம் கேட்டேன். ஆனால், பிறகு இதற்கான தேவையைப் புரிந்துகொண்டேன். தமிழர் நாவில் புழங்கும் சொற்கள் அனைத்தையும் திரட்டித் தொகுக்கும் முயற்சியில் ராமகிருஷ்ணன், ஒரு முன்னோடி.

    க்ரியா வலைத்தளத்தையும் (https://www.crea.in) செயலியையும் அவர் உருவாக்கியிருந்தார். தமிழில் அதிக அளவு சொற்களைத் திரட்டி, சொல்வங்கி ஒன்றை அவர் வைத்திருந்தார். தமிழில் மென்பொருள் கருவிகளை உருவாக்கும் நண்பர்கள், சொற்றொகுதிகள் தேவை எனக் கேட்டபோது, விக்கிப்பீடியாவையும் க்ரியாவையும் பரிந்துரைத்துள்ளேன்.

    க்ரியா ஆண்ட்ராய்டு செயலியைத் தரவிறக்கினால் 10 முறைகள் மட்டுமே இலவசமாகத் தேட முடியும்; அதற்கு மேல் தேடுவதானால், ரூ.199 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டிருந்தார். இதற்காக அந்தச் செயலிக்கு மிகக் குறைவான மதிப்பீடு அளித்து, அவரை வசைமாரி பொழிந்திருப்பதைக் காணும்போது வருத்தமாக உள்ளது. தமிழ் மென்பொருள்கள், தமிழ்ச் செயலிகள், தமிழுக்காக உருவாகும் தொழில்நுட்பக் கருவிகளின் வணிகச் சந்தை, மிக பலவீனமாக இருக்கிறது. இந்த இடர்களை எதிர்கொண்டே, கடந்தே தமிழுக்கும் தமிழ்கூறு நல்லுலகிற்கும் தொண்டாற்ற வேண்டியிருக்கிறது.

    புதிய சிந்தனை, புதிய ஆக்கங்கள், சமரசம் இல்லாத தரம், செம்மை ஆகியவற்றை முன்னிறுத்தி, 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றி உழைத்த க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு, தமிழுலகிற்குப் பேரிழப்பு. அவர் என்றென்றும் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

    அவரது முக்கியமான ஒரு நேர்காணல் இங்கே – https://tamil.asiavillenews.com

    படத்துக்கு நன்றி: ஆசியாவில்லி

    Share