அண்ணாகண்ணன் காணொலிகள் 7
அண்ணாகண்ணன்
இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.
மஞ்சள் அழகி | Common Jezebel | Delias eucharis
A lovely, colorful butterfly! I would suggest, we can declare this butterfly as a symbol of Holi festival.
இந்த மஞ்சள் அழகி, மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து, உயரத்தில் ஓர் இலை மீது அமர்ந்தது. படக்கருவியைத் தலைக்கு மேல் பிடித்து எடுக்க வேண்டியதாய் இருந்தது. இதன் வண்ணங்களும் வடிவும் நம்மைக் கொள்ளை கொள்கின்றன. ஹோலிப் பண்டிகையின் அடையாளச் சின்னமாக இதை அறிவிக்கலாம்.
புடலங்காய் காய்த்தது | Snake gourd | Trichosanthes cucumerina
நம் வீட்டுத் தோட்டத்தில் புடலங்காய் காய்த்துள்ளது. சிறிய ரகப் புடலை எனத் தெரியாமல், இன்னும் நீளமாக வளரட்டும் என்று காத்திருந்த நேரத்தில் அது பழுத்துக் கொடியிலேயே காயந்துவிட்டது. ஆனாலும், அதே கொடியில் இன்று இன்னொரு புடலை பிஞ்சு விட்டுள்ளது, பார்க்க மிக அழகாக உள்ளது.
பொன்வண்டு | Ponvandu
பொன்வண்டு, அரிதாகவே தென்படும். என்றைக்காவது தென்பட்டாலும் நம் எதிரே உட்காராமல் பறந்துவிடும். அப்படியே உட்கார்ந்தாலும் அந்நேரத்தில் நம் கையில், படக்கருவி இருக்காது. படக்கருவி, கையில் இருந்தாலும் அதில் சேமிப்பகம், சேமக்கலன் போதுமான அளவு இருக்காது. இன்று இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அமைந்த பொற்கணத்தில் இந்தப் பொன்வண்டைப் படம் பிடித்தேன். சில நாள்களுக்கு முன், இதை அரை நிமிடம்தான் பதிவு செய்ய முடிந்தது. அந்தக் குறை நீங்க, இன்று ஆறு நிமிடம் காட்சி தந்தார். பொறுமையாக, விதவிதமாக எடுக்க முடிந்தது. இதைப் படமெடுக்கையில், இடையே ஒரு குளவி சுற்றிச் சுற்றி வந்து அச்சுறுத்தியது. எனினும் இதை வெற்றிகரமாகப் பதிவு செய்தேன். அரிய காட்சி, பார்த்து மகிழுங்கள்.
சுழலும் சந்தன முல்லை | Rotating Santana Mullai | Jasminum Auriculatum
நம் வீட்டு மாடித் தோட்டத்தில் உள்ள சந்தன முல்லையில் இன்று ஒரு புதுமையைப் பார்த்தேன். செடியிலிருந்து விழுந்தும் விழாத ஒரு முல்லை மலர், தலைகீழாகத் தொங்கியபடி சுழன்றுகொண்டிருந்தது. எவ்வளவு காற்று அடித்தபோதும் விழாமல் சுழன்றுகொண்டே இருந்தது. சில பந்தங்கள் ஆழமானவை. அவ்வளவு எளிதில் விட்டு விலகுவதில்லை.
Common Moorhen | தாழைக் கோழி
இன்று கண்ட தாழைக் கோழி.
வாழை இலையில் ஒரு கரிச்சான் | Black Drongo on Banana leaf
வாழை இலையில் கரிச்சான் என்கிற இரட்டைவால் குருவி அமர்ந்திருப்பதைச் சற்றுமுன் பார்த்தேன். இதோ உடனுக்குடன் பகிர்கின்றேன். இதன் அலகு ஓரத்தில் வெண்புள்ளி ஒன்று இருப்பதை இன்றுதான் கவனித்தேன்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)