Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • ஆடிப்பூரம்

    ஆடிப்பூரம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் கண்ணன் கூறுகிறார். திருவெம்பாவையினைத் தந்து சிவனை முன்னுறுத்துகிறார் மணிவாசகப் பெருமான் மார்கழியில். ஆண்டாள் நாச்சியாரும் வந்து திருவாய் மொழியினை வழங்கித் திருமால் பெருமையைப் பேசுகின்றார். சைவமும் வைணவமும் சங்க மிக்கும் சமய நிகழ்வாய்சமய விழாவாய் “மார்கழியில் திருவெம்பாவையும் திருப்பாவையும்” அமைகிறது அல்லவா! ஆனால் மார்கழியில் மங்கல நிகழ்ச்சிகளுக்கு இடங் கொடுக்காமல் விட்டு விட்டோம். இந்த வகையில் இணைவதாய் ஆடியும் வந்து நிற்கிறது. ஆனால் ஆடியும்  – மார்கழி போல் மகத்தான மாதமேயாகும். மார்கழியில் சைவமும் வைணமும் சங்கமிப்பது போல – ஆடியிலும் சங்கமிக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    ஆடியில் வருகின்ற பூரம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். ஆடிப்பூரம் சைவ ஆலயங்களிலும். வைணவ ஆலயங்களிலும் மிகவும் முக்கியத்துவம் மிக்க சமய நிகழ்வாய்சமய விழாவாய் இடம் பெறுவதை நாம் காணக்கூடியதாகவே இருக்கிறது. ஆடிப்பூரம் அம்மனின் அற்புதத் திருவிழாவாகும். மக்களையும்உலகினையும் காப்பதற்கு அம்பாள் சக்தியின் உருவாய் அவதரித்த தினமாய் ஆடிப்பூரம் கொள்ளப்படுகிறது. அதே வேளை வைணவம் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாகவும் கொள்ளப்படுகிறது. உமாதேவி அவதாரம் செய்ததாய் சிவபுராணம் சொல்லுகிறது. ஶ்ரீவில்லிபுத்தூரில் துளசிச் செடிக்கு அருகில் குழந்தையாய் ஆண்டாள் நாச்சியார் அவதாரம் செய்ததாக வைணவவர்கள் நம்புகின்றார்கள். சக்தியின் அவதாரமாகவே ஆண்டாளின் அவதாரம் கொள்ளப்படுகிறது என்பதும் நோக்கத்தக்கது. இந்த ஆடிப்பூர தினத்தில்த்தான்சித்தர்களும், யோகிகளும்தவத்தைத் தொடங்குவார்கள் என்று புராணங்கள் புகலுவதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    உலகத்தின் நன்மைக்காகவே அவதாரங்கள் நிகழ்கின்றன. இராமராய்கிருஷ்ணராய்பகவான் விஷ்ணு அவதாரம் செய்தார் என்பதைப் புராணங்கள் எடுத்துரைத்து நிற்கின்றன. அந்த அவதாரங்களுக்குத் துணையாக லக்ஷ்சுமி தேவி – சீதையாய்ருக்மணியாய் பூமியில் அவதாரம் செய்கிறார்கள். ஆனால் ஆண்டாள் நாச்சியார் அவதாரம் இம்மண்ணில் நிகழ்ந்த வேளை அவளுக்குதுணையாகஇணையாக பகவான் விஷ்ணு எந்தவித அவதாரமும் மேற் கொள்ளவே இல்லை என்பதுதான் மிகவும் முக்கியமாகும். ஆனால் சிலையாய் இருந்த கண்ணனையே மனத்தில் உறுதியாய் இருத்தி அவனையே மணப்பேன் என்னும் வைராக்கியத்தை உலகுக்கே காட்டிய பெண்ணாய் வைணவத்தின் மாமலர் ஆண்டாள் நாச்சியார் போற்றப்படுகிறார் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். அப்படியான அந்த ஆண்டாள் நாச்சியாரைக் கொண்டாடும் அற்புத நாளாகவும் ஆடிப்பூரம் அமைகிறது என்பதும் சிறப்பல்லவா! பெரியாழ்வார் என்பவர் வைணவத்தில் மதிப்பக்கப்படுகின்ற மிகச்சிறந்த அடியார் ஆவார். அவரின் வளர்ப்பு மகளாய் ஆண்டாள் நாச்சியார் ஆவது ஆண்டவனின் திருவருளே.

    சைவமும்வைணமும்பெயரளவில் இரண்டாக இருந்தாலும் – இறைவனை உறவாய் ஆக்கிக் கொள்ளுவதில் ஒன்றுபட்டே நிற்கின்றன. தாயாய்தந்தையாய்சகதோழனாய்காதலனாய்காதலியாய்என்றெல்லாம் எண்ணி கசிந்து உருகிப் பின்னிப் பிணைந்து நிற்பதை யாவரும் மனங்கொள்ளுதல் வேண்டும். இந்த வகையில் உலகினைக் காத்து நிற்கும் பெருஞ்சக்கியான அம்பாளை பல நிலைகளில் கண்டும்அந்தச் சக்திக்கு தங்களின் விருப்பங்கள் எது எது இருக்கிறதோ அத்தனையையும் நிறைவேற்றிப் பார்ப்பதில் பேரானந்தம் அடைகிறார்கள். அப்படிப் பேரானந்தம் அடையும் பாங்கினை ஆடிப் பூரம்காட்டி நிற்கிறது என்பதே முக்கிய நிலையாகும். இங்கே செய்யப்படும் செயல்களுக்கு முக்கிய காரணம் – பக்தியின் பரவசம் என்றுதான் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

    ஆண்டாள் நாச்சியார் கண்ணனையே கணவனாக்குவேன் என்று ஒரே பிடிவாதமாய் இருக்கிறார். கடவுளை மானிட உருவில் இருக்கும் ஒரு பெண் கணவனாய் கொள்ளுதல் பொருந்துமா என்று விமர்சனம் செய்வது பொருத்தமற்றதாகும். இங்கு பக்தியின் உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. மணிவாசகப் பெருமான் எந்தளவுக்கு சைவத்தில் முக்கியத்துவத்துவப்படுத்தப் படுகிறாரோ அவ்வாறே ஆண்டாளும் அமைகிறார். ஆண்டாள் தன்னுடைய பதினைந்தாம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலந்ததாய் சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாகவே திருப்பாவையையும்நாச்சியார் திருமொழியையும்தந்திருக்கிறார். ஆண்டாளின் இவ்விரு படைப்புக்களுமேதத்துவத்தையும்பக்தியையும்தேனாய் இனிக்கச் செழுந்தமிழில் பொக்கிஷமாய் அமைந்திருகிறது. இப்படிப் பெருமைக்குரிய ஆண்டாள் நாச்சியாரை அகத்தினில் அமர்த்திட ஆடிப்பூரம் அமைகிறது என்பது மனங்கொள்ளத்தக்கது. வைணவ ஆலயங்களில் ஆடிப்பூரம் மிகவும் பக்திபூர்வமாய் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சைவ ஆலயங்களில் அம்பாளை முன்னிறுத்தி ஆடிப்பூரம் பெருவிழாவாய் கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்கு பத்து நாட்கள் திருவிழாவாய் ஆடிப்பூரம் அமைவதையும் காணலாம். உலகத்தின் இயக்கத்துக்குக் காரணமான சக்தியே அம்பாளாய் இருப்பதாய் எண்ணும் அடியார்கள் தங்கள் விருப்பத்துக்கு அமைய – அம்பாளுக்குப் பலவித அலங்காரங்களைச் செய்து தங்கள் ஆராத பக்தியைக் காட்டி நிற்பதைக் காணக்கூடியதாக ஆடிப்பூரம் காணப்படும். அம்பாளுக்கு வளையல்களால் அலங்காரம் செய்வதுஅம்பாள் பூப்படைந்து விட்டாள் என்று பலவித சடங்குகளை ஆற்றுவதுஎன்று ஆடிப்பூரத்தை ஆனந்த விழாவாக ஆக்கியேவிடுவார்கள்.

    அம்பாளையும் தங்கள் குடும்பத்தில் ஒரு உறவாகவே எண்ணி – தங்கள் குடும்பப் பெண்கள் எப்படி யெல்லாம் அலங்கரிப்பார்களோ அப்படியே அலங்கரித்து பேருவகையும்பேரானந்தமும் பெறுவதை ஆடிப்பூரத்தில் கண்டிடலாம். மஞ்சள் காப்புசந்தனக்காப்புகுங்குமக் காப்பு என்றெல்லாம் நடத்திவளைகாப்பும் நடத்துவார்கள்.

    அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படும் வளையல்கள் பலவகையாய் அமையும். அந்த வளையல்கள் நிறைவில் அனைவருக்கும் அருட் பிரசாதமாய் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    திருமணம் ஆகாதவர்க்குத் திருமணம் விரைவாய் திருமணம் ஆவதற்கும்மனக்கசப்பினால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும்ஆடிப்பூரத்தின் வழிபாட்டால் நல்ல பலன் கிடைக்கிறது என்னும் நம்பிக்கை யாவரிடமும் நிறைந்தே இருக்கிறது. தோஷங்கள் கொண்ட தம்பதியர்களுக்குத் தோஷங்கள் நீங்கிவிடும் என்னும் நம்பிக்கையும் இருக்கிறது.

    சைவமும்.  வைணவமும் சங்கமிக்கும் சயயப் பெருவிழா ஆலயங்கள் தோறும் நடக்கும்  ஆடிப்பூரம் அமைந்த ஆடி மாதத்தை எப்படி ஒதுக்கிட முடியும்ஆடிப்பூரம் அம்மனுக்கு உரிய பக்குவமான நாளாகும். பக்தர்கள் மனக்குறைகளைக் களையும் பாங்கான நாளாகும். அமங்கலமே ஆடியென எண்ணும் எண்ணத்தை அகத்தைவிட்டே அகற்றிடுவோம். ஆடியும் ஆடியில் வருகின்ற அத்தனை நாட்களுமே அம்மனுக்குரிய மங்கல நாட்களேயாகும். ஆடிப்பூரம் வாழ்வில் மனமகிழ்ச்சியையும்மனவமைதியையும்மன எண்ணங்களையும் நிறைவேற்றித் தரும் உன்னத நாளாகும். அது மட்டுமல்ல சைவமும் வைணவமும் சக்தியை முன்னிறுத்திச் சங்கமித்து ஒரே நிலையில் பயணப்படும் பக்தி நிறை நாளுமாகும் என்பதை மனமிருத்துதல் வேண்டும்

    ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெலாம்
    பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக்
    காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்புமங்கை
    சேர்த்தாளை முக்கண்ணியைய  தொழுவார்க்கு    ஒருதீங்கில்லையே

    இன்றே திருவாடிப்பூரம் எமக்காக
    அன்றே ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத
    வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
    ஆழ்வார் திருமகளாராய்

    திருவாடிப்பூரத்துச்  செகத்துதித்தாள் வாழியயே
    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியவே
    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியவே

    பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
    வேதம் அனைத்திற்கும் வித்தாகும் – கோதைதமிழ்
    ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை
    வையம் சுமம்பதும் வம்பு .

    Share
  • ஆடியும் நல்மாதமே!

    ஆடியும் நல்மாதமே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    ஆடி என்பது அமங்கலம் இல்லை
    ஆன்மீகக் கருக்கள் நிறைந்த நல்மாதம்
    பீடை என்பது பொருந்தாக் கருத்தே
    பீடுடை என்பதே சிறப்புடைச் சிந்தனை

    அமங்கலம்  என்பது ஆடியாய் ஆகுமா
    அம்மனின் மாதம் ஆடியே ஆகும்
    படையலும் பாட்டும் பரவசம் அனைத்தும்
    பக்தியாய் மலரும் பாங்குடை மாதம்

    ஆடியில் செவ்வாய் ஆடியின் வெள்ளி
    ஆடியின் பூரம் ஆடியின் கார்த்திகை
    ஆடித்தபசு ஆடியமாவாசை ஆடிப் பெளர்ணமி
    ஆடியில் ஆண்டவன் நினைப்பதை உணர்த்தும்

    ஆடியில் ஆறுகள் நீரைப் பெருக்கும்
    ஆடிப் பெருக்கென அனைவரும் குவிவார்
    அம்மனை எண்ணி உருகியே நின்று
    ஆடிப் பாடிப்  படைத்துமே மகிழ்வார்

    அமாவாசை மாதங்கள் அனைத்திலும் உண்டு
    ஆடியில் மட்டும் அதன்நிலை சிறப்பே
    பிதிர்க்கடன் தீர்த்திடப் பொருத்தமாய் அமையும்
    ஆடியின் அமாவாசை என்பதே சிறப்பு

    இறையினை உறவாய் ஆக்கிடும் பாங்கை
    உலகிடை சைவமே அணைத்துமே நின்றது
    அம்மனை உறவாய் கண்டநம் அடியவர்
    அம்மனும்  ருதுவாய் ஆகினார் என்றனர்

    ஆடியின் பூரம் ஆனந்தத் திருவிழா
    ஆடியே உமையின் அவதாரம் ஆகும்
    அம்மனே ஆண்டாளாய் வந்ததும் ஆடியே
    அரங்கனை ஆண்டாள் அணைந்ததும் ஆடியே

    அம்மனை எண்ணிடும் அகநிறை மாதம்
    ஆடிக் கூழினைக் காய்ச்சிடும் மாதம்
    அம்மனின் கோவிலில் கூழைப் படைத்து
    அம்மனை ஏற்றியே போற்றிடும் மாதம்

    கூழொடு கொழுக்கட்டை சேர்த்துமே செய்து
    யாவரும் படைத்துமே பாடியே மகிழ்வார்
    வீடுகள் தோறும் கூழது வாசம்
    ஆடியை ஆனந்தம் ஆக்கியே நிற்கும்

    ஆடிப் பிறப்பு அனைவர்க்கும் மகிழ்வே
    கூடிப் பனங்கட்டி கூழுமே குடிக்கலாம்
    ஆடியை ஒதுக்குதல் அறிவுடை ஆகா
    ஆடியும் அருமையாய் அமைந்த நல்மாதமே

    Share
  • வானளவு உயர வாழ் வளித்தார் அப்பா!

    வானளவு உயர வாழ் வளித்தார் அப்பா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஈன்றெடுத்தாள் அம்மா  எனைச் சுமந்தார் அப்பா
    சான்றோனாய் என்னைச் சபை வைத்தார் அப்பா
    நான் தடுக்கும் வேளை தாங்கிடுவார் நாளும்
    வானளவு  உயர வாழ்வளித்தார் அப்பா

    ஊனுருக எனக்குப் பால் கொடுத்தாள் அம்மா
    உயரோங்கி நிற்க உழைப்பீந்தார் அப்பா
    தனக்கெனவே எதுவும் சேர்க்காத அப்பா
    எனக்கெனவே தேடிக் குவித்திட்டார் வாழ்வில்

    விருப்பென்று எதையும் வெளியிடார்  அப்பா
    பொறுப்புடனே யாவும் ஆற்றிடுவார் அப்பா
    என் உயர்வு ஒன்றே தனக்கான தென்பார்
    கண்மணியாய்க் கருத்தில் இருத்தினார் அப்பா

    தோளேற்றி என்னை, சுகங்காண்பார் அப்பா
    தோழனாய் இப்போது ஆகிவிட்டார் எனக்கு
    வாழ்வினிலே எனக்கு வரம் ஆனார் அப்பா
    வணங்குகின்ற தெய்வமாய்த் தெரிகிறார் அப்பா

    ஊண் உறக்கம்  மறந்து உழைப்பாரே  அப்பா
    உலகமே நான் எனவே நினைப்பாரே அப்பா
    தோள் கொடுத்து என்னைச் சுமந்தாரே அப்பா
    சுகம் அனைத்தும் கொடுத்து மகிழ்ந்தாரே அப்பா

    நாவினிக்கப் பேசு எனவுரைப்பார் அப்பா
    நலஞ் சிறக்கும் நட்பை நாடென்பார் அப்பா
    கோபமெனும் குணத்தை மறந்துவிடு என்பார்
    குணம் என்னும் குன்றேறி நின்றிடுவாய் என்பார்

    குறை காணின் களைவார் நிறைவானால் மகிழ்வார்
    பொறை நிறைக வென்றே  மனமெண்ணி நிற்பார்
    நரை காணு முன்னே பலதேடு என்பார்
    அரை குறையாய்க் கருமம் ஆற்றாதே என்பார்

    ஊற்றுப் போல் நில்லு உறங்காது வெல்லு
    காற்றைப் போல் இயங்கு கண்ணியத்தை ஏந்து
    நாற்றாக விளங்கு நல் விளைச்சல் நல்கு
    என்றப்பா  நாளும் எடுத்துரைத்து நிற்பார்

    இடர் வரா எனக்கு அணையாவார் அப்பா
    படர் துன்பம் அனைத்தும் துடைத்திடுவார் அப்பா
    விட முடைய அனைத்தும் வெறுத்திடுவார் அப்பா
    நட  முன்னே என்று வழியாவார் அப்பா

    இலக்கியம் ஆவார் இலக்கணம் ஆவார் எங்களப்பா
    குலைத்திடு தலைக்கனம் கொண்டிட மாட்டார் எங்களப்பா
    நிலைத்திட நினைப்பார் நிம்மதி நிறைப்பார் நெஞ்சிலப்பா
    நிமிர்ந்துமே நிற்பார் நீள்நிலம் வியக்க எங்களப்பா

    அப்பாவை எண்ண எண்ண அளவில்லா ஆனந்தம்
    அப்பாவின் அருகிருந்தால் அனைத்தும் என் வசமாகும்
    அப்பா என் வாழ்வினுக்கு அருமருந்தாய் ஆகிவிட்டார்
    அப்பாவை ஆண்டவனாய் அனு தினமும்  போற்றுகிறேன்

    Share
  • உழைப்பவர் தினம்!

    உழைப்பவர் தினம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    உழைத்துமே உயர்ந்திடு வோமே
    உதிரமே உழைப்பவர் பலமே
    உலகமே ஏத்திடு தினமே
    உயர்வுடை மே தினமே

    உண்ணும் உணவும் உழைப்பே
    ஓடும் காரும் உழைப்பே
    விண்ணில் பறக்கும் யாவும்
    எண்ணி லடங்கா உழைப்பே

    விருந்தும் மருந்தும் உழைப்பே
    விளக்கின் வரவும் உழைப்பே
    அருந்தும் அனைத்தும் உழைப்பே
    அனைவரும் மதிப்போம் உழைப்பை

    வானுயர் கட்டடங்கள் உழைப்பே
    வான்வெளிப் பயணங்கள் உழைப்பே
    நீள்கடல் ஆராய்ச்சி உழைப்பே
    நிம்மதி தருவதும் உழைப்பே

    முத்தினை எடுப்பதும் உழைப்பே
    முடியினில் வைப்பதும் உழைப்பே
    சொத்தினைக் குவிப்பதும் உழைப்பே
    சுகத்தினைக் கொடுப்பதும் உழைப்பே

    ஆடைகள் அனைத்தும் உழைப்பே
    ஆலைகள் பெருக்கம்  உழைப்பே
    வீடுகள் அனைத்தும் உழைப்பே
    வீதிகள் பெருக்கம் உழைப்பே

    உழைத்திடும் கரங்கள் ஓங்கிட வேண்டும்
    உழைத்திடும் வர்க்கம் விழித்தெழ  வேண்டும்
    உழைப்பவர் உரிமை காத்திட வேண்டும்
    உழைப்பவர் தினத்தைப் போற்றிடல் உயர்வே

    முதலாளி சிறக்கத் தொழிலாளி உழைப்பார்
    தொழிலாளி சிறக்க வழியெதும் உண்டா
    முதலாளி நினைத்தால் தொழிலாளி சிரிப்பார்
    தொழிலாளி முதலாளி தோழமை வேண்டும்

    மேதினம் என்பது   விழித்தெழு தினமே
    மேதினம் என்பது   வியர்வையின் தினமே
    உழைப்பவர் உயர்வை உரைத்திடும் தினமே
    உரத்துரைப் போமே உழைப்பவர் நலமே

    Share
  • புத்துணர்வூட்டச் சித்திரை கைகோக்கும்!

    புத்துணர்வூட்டச் சித்திரை கைகோக்கும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    முன்பனி பின்பனி மாறிய பின்னே
    இளவேனில் துளிர்க்கச் சித்திரை மலரும்
    தைப் பொங்கலுண்டு  தளர்வகலும் வேளை
    புத்துணர் வூட்டச் சித்திரை  கைகோக்கும்

    பெற்றோரும் மகிழ்வர் பிள்ளைகளும் மகிழ்வர்
    உற்றவரும் மகிழ்வர் உறவுகளும் மகிழ்வர்
    மணமேடை அமர மங்கலநாள் அமைய
    சிறப்பான நாளை சித்திரையே திறக்கும்

    வருடத்தின் தொடக்கம் சித்திரையே என்போம்
    சித்திரையே தொடக்கமாய் பஞ்சாங்கம் காட்டும்
    பஞ்சாங்கம் பார்ப்போம்  பலன்களையும் அறிவோம்
    நெஞ்சாரச் சித்திரையை வரவேற்று மகிழ்வோம்

    மருத்துநீர் வைப்போம் மகிழ்வாய் நீராடுவோம்
    புத்தாடை உடுத்திப் புத்துணர்வு பெறுவோம்
    பெற்றவர்கள் பெரியவர்கள் ஆசியினைப் பெறுவோம்
    கற்றுத் தந்த ஆசானைக் கண்டாசி வாங்கிடுவோம்

    கோவிலுக்குச் செல்வோம் குறையகலப் பிரார்த்திப்போம்
    வாழ்வெல்லாம் வளங்கொழிக்க மனமார வேண்டிடுவோம்
    நாடெங்கும் நலஞ்சிறக்க நாம்வேண்டி வணங்கிடுவோம்
    நல்லமனம் தருகவென நாமிறையைத் தொழுதிடுவோம்

    உறவுகளைக் கண்டிடுவோம் உளமகிழச் சேர்ந்திடுவோம்
    சுவையான பட்சணங்கள் பரிமாறி மகிந்திடுவோம்
    இனிப்பான சுவையோடு எல்லாமே ஈந்திடுவோம்
    எல்லோரும் சித்திரையைக் கொண்டாடி இன்புறுவோம்

    செந்தமிழர் சிங்களவர் சித்திரையை வரவேற்பார்
    சொந்தமெனச் சித்திரையைக் கொண்டாடிக் குதூகலிப்பார்
    பாற்சோறு பலகாரம் பக்குவமாய்ச் செய்திடுவார்
    பட்டாசு மத்தாப்பு வெடித்துமே மகிழ்ந்திடுவார்

    உவப்புடனே ஊஞ்சலேறி உளமகிழ ஆடிடுவார்
    உல்லாசம் பொங்கிவர ஊஞ்சலாடிப் பாடிடுவார்
    இளையவரும் முதியவரும் இணைந்துமே இருந்திடுவார்
    எல்லோரும் ஊஞ்சலாடி, சித்திரையை இருத்திடுவார்

    கொடியேற்றம் ஒருபக்கம் கோவில்களில் நடக்கும்
    தேரோடும் திருவிழாவும் சிறப்பாக நடக்கும்
    மதுரையில் கள்ளழகர் கால்வைப்பார் வைகையிலே
    மீனாட்சி திருக்கோவில் திருவிழாவாய் ஜொலிக்கும்

    இசையோடு இயலும் இங்கிதமாய் ஒலிக்கும்
    இளைஞரொடு முதியவரும் இணைந்துமே ரசிப்பார்
    களைகட்டும் கலைவிழா களிப்பளித்து நிற்கும்
    காதலுடன் சித்திரையும் கைகோத்துச் சிரிக்கும்

    Share
  • பக்தியாய் பாடிப் பரவிடுவோம் வாருங்கள்!

    பக்தியாய் பாடிப் பரவிடுவோம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    வேதத்தின்   முதல்வன் விடமுண்டன் கண்டன்
    ஆதியந்தம் இல்லான் அருளொளியாய் நிறைவான்
    சோதியென எழுந்தான் துடுக்கொழிய வைத்தான்
    மாலயனின் மயக்கம் போக்கியவன் நின்றான்

    மாலயனின் மயக்கம் போக்கிய நாளுலகில்
    மகாசிவ ராத்திரியாய் மலர்ந்ததென  வுரைப்பார்
    சீலமுடன் சிவனை சிரத்தையுடன் எண்ணி
    விரதமதை விரும்பி நோற்றிடுவார் அடியார்

    பசித்திருக்க வேண்டும் தனித்திருக்க வேண்டும்
    விழித்திருக்க வேண்டும் மெய்யுணர்தல் வேண்டும்
    ஆலமதை உண்ட அருட்கடலாம் சிவனை
    அகமிருத்தி விரதம் அனுட்டிக்க வேண்டும்

    அப்பனுக்கு ஒன்று அம்மைக்கு ஒன்பது
    இப்புவியில் விரதமதை ஏற்கின்றார் அடியார்
    எல்லாமே இராத்திரியாய் இருப்பதுதான் சிறப்பு
    இறையுணர்வை ஊட்டுவதே இதன் நோக்கமாகும்

    விரதமெனும் வார்த்தை வெறும் வார்த்தையல்ல
    பவவினைகள் போக்கும் பாங்கான வார்த்தை
    உடலுளத்தைத் தூய்மை ஆக்கிவிடும் வார்த்தை
    உணர்வுடனே செய்தால் உயர்நிலையே வாய்க்கும்

    ஆன்மீகக் கருத்துக்களை அலட்சியமாய் நோக்கும்
    அவலமது அலையலையாய் எழுகிறது நாளும்
    அறிவியலை நிறைத்தபடி ஆன்மீகம் அமைந்திருக்கு
    அதை உணர்ந்தால் அலட்சியமும் அகன்றோடிப்போகும்

    பிறக்கின்ற நாளெல்லாம் பெம்மானை நினைக்க
    இருக்கின்ற வகையினிலே இணைத்தார்கள் முன்னோர்
    வையத்து வாழ்வார்கள் வாழ்வாங்கு வாழ
    மனஞ்சிறக்க விரதமெலாம் வண்ணமுற வைத்தார்

    புராணக் கதையெல்லாம் பொருந்துமா என்பார்
    பூதலத்தில் கருத்துரைக்க தேர்ந்த வழியன்றோ
    கதையுரைத்து கதையுரைத்து கடவுளுணர் வூட்டும்
    காரியத்தை புராணமாய் கண்டார்கள் முன்னோர்

    மூடத் தனமென்று முழஞ்சுழிக்க வேண்டாம்
    முன்னோர்கள் சிந்தனையில் முகிழ்த்ததுதான் புராணம்
    முன்னைப் பழம்பொருளாய் முதலுக்கும் முதலாக
    விண்ணிற்கும் பரம்பொருளை விளக்கியதும் புராணமன்றோ

    திருமுறைகள் போற்றுகின்ற செம்பொருளாம் சிவனை
    சிவராத்திரி தினத்தில் சிந்திப்போம் வாருங்கள்
    சித்தர்க்குச் சித்தராம் திருச்சிற்றம் பலத்தானை
    பக்தியாய் பாடிப் பரவிடுவோம் வாருங்கள்

    Share
  • காதல்!

    காதல்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    காதல் இல்லா வாழ்க்கை
    களை இழந்த வாழ்க்கை
    காதல் இல்லா வாழ்க்கை
    கருத் திழந்த வாழ்க்கை 
    காதல் என்னும் நினைப்பு
    களிப்பு தரும் நாளும்
    காதல் என்னும் உணர்வு
    களிப் பளிக்கும் மருந்து   !

    மனித மனம் இணைய
    மருந் தாகும் காதல்
    மனித குணம் சிறக்க
    வழி வகுக்கும் காதல்
    மனித குலம் செழிக்க
    வழி சொல்லும் காதல்
    வைய வாழ்வு மலர
    வழித் துணையே காதல்  !

    இளமை வரும் காதல்
    முதுமை வரை வளரும்
    இல்ல மெலாம் ஒளிர
    ஏற்ற துணை காதல்
    அன்பு அறன் கருணை
    அளிப்ப தென்றும் காதல்
    அகில வாழ்வில் என்றும்
    அருங் கொடையே காதல்   !

    காதல் என்று சொன்னால்
    களிப்பு அங்கே பெருகும்
    காதல் என்று நினைத்தால்
    கல கலப்பு குவியும் 
    காதல் இல்லா வாழ்க்கை
    பாலை வனம் ஆகும்
    காதல் அது நிறைந்தால்
    வசந்தம் அங்கு வீசும்  ! 

    Share
  • தைப்பூசத் திருநாள்

    தைப்பூசத் திருநாள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தந்தைக்கு உபதேசம் செய்த குருநாதன்
    தாயின்றி உருவான ஞான குருநாதன்
    வந்திக்கும் அடியார்க்கும் வரமருளும் நாதன்
    வள்ளிதெய்வ யானையுடன் காட்சிதரும் நாதன்

    ஆறுபடை வீடமர்ந்த ஆறுமுக நாதன்
    அருணகிரி தமிழ்பாட அருள்புரிந்த நாதன்
    வீறுடைய அசுரர்தமை வெற்றி கொண்டநாதன்
    வியந்துமே போற்றுகின்ற வெற்றிவேல் நாதன்

    தந்தைக்கு குருவான தயையுடைய நாதன்
    தைப்பூசத் திருநாளில் அவதாரம் செய்தார்
    சிந்தைக்குள் புகுந்திருக்கும் அகந்தையினை அகற்ற
    கந்தனாய் தைப்பூசம் வந்துதித்தார் காக்க

    சிதறிய பொறிகள் மலர்களில் வீழ்ந்தன
    அழகுடை குழந்தைகள் அறுவர் தோன்றினர்
    கார்த்திகைப் பெண்கள் கைகளில் எடுத்தனர்
    கனலது கந்தனாய் உருவினைப் பெற்றது

    ஆணவ அரக்கரை அழித்திட வேலினை
    அன்னை உமையவள் கொடுத்தனள் கையினில்
    வேலவன் வாகையைச்  சூடிய நாளதாய்
    பூசத் திருநாள் பொலிந்தது புவியினில்

    கந்தன் கோவில்கள் ஒளியினில்  மிதந்திடும்
    காவடி பலபல சன்னதி நிறைந்திடும்
    கற்பூர சட்டிகள் தலைகளில் அமர்ந்திடும்
    தைப்பூசத் திருநாள் சந்தோஷம் தந்திடும்

    ஒளியினில் இறைவனைக் கண்டிடும் திருநாள்
    உணர்வுகள் இறையுடன் கலந்திடும் திருநாள்
    பலபல இடங்களில் மிளிர்ந்திடும் திருநாள்
    பாங்குடை தைப்பூச திருநாள் ஆகும்

    மங்கல நிகழ்வுகள் தொடங்கிடும் திருநாள்
    மனைகளில் மகிழ்வுகள் நிறைந்திடும் திருநாள்
    பொங்கலைத் தொடர்ந்து அமைந்திடும் திருநாள்
    எங்களின் வாழ்வினில் தைப்பூசத் திருநாள்

    உழவர்கள் புதிரை எடுத்திடும் திருநாள்
    உணர்வுடன் அதனைப் பகிர்ந்துண்ணும் திருநாள்
    கற்றிட ஏட்டினைத் தொடங்கிடும் திருநாள்
    காதுகள் குத்தியே மகிழ்ந்திடும் நன்னாள்

    புதியன பலபல தொடங்கிடும் பொன்னாள்
    புலனெலாம் நன்னெறி புகுந்திடும் நன்னாள்
    இறையது ஒளியாய் எழுந்திடும் திருநாள்
    இகமதில் தைப்பூச திருநாள் ஆகும்

    Share
  • பொங்கல் பொங்கி மகிழ்வோமே!

    பொங்கல் பொங்கி மகிழ்வோமே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    தை பிறக்கப் போகுதடி தங்கமே தங்கம்
    தளர் வகலப் போகுதடி தங்கமே தங்கம்
    கை நிறையப் போகுதடி தங்கமே தங்கம்
    கை யணைத்து நிற்போமே தங்கமே தங்கம்

    பொங்கல் வரப்போகுதடி தங்கமே தங்கம்
    புத்துணர்வு பெற்றிடுவோம் தங்கமே தங்கம்
    மங்கலங்கள் வரவெண்ணி தங்கமே தங்கம்
    பொங்கலிட்டு மகிழ்வோமே தங்கமே தங்கம்

    உறவுகளைக் கூட்டிடுவோம் தங்கமே தங்கம்
    உவகையுடன் பொங்கிடுவோம் தங்கமே தங்கம்
    அறவுணர்வை அகமிருத்தி தங்கமே தங்கம்
    அனைவருமே பொங்கிடுவோம் தங்கமே தங்கம்

    புதுப்பானை எடுத்திடுவோம் தங்கமே தங்கம்
    புத்தரிசி வாங்கிடுவோம் தங்கமே தங்கம்
    அடுப்பெடுத்து வைத்திடுவோம் தங்கமே தங்கம்
    அதில்பானை ஏற்றிடுவோம் தங்கமே தங்கம்

    மங்கலமாய் கோலமிட்டு தங்கமே தங்கம்
    மண்பானை அலங்கரித்து தங்கமே தங்கம்
    பாலூற்றி பக்குவமாய் தங்கமே தங்கம்
    பால்பொங்க பார்ப்போமே தங்கமே தங்கம்

    பொங்கிவரும் வேளையிலே தங்கமே தங்கம்
    போட்டிடுவோம் புத்தரிசி தங்கமே தங்கம்
    வெந்துவரும் வேளையிலே தங்கமே தங்கம்
    வெல்லத்தைப் போட்டிடுவோம் தங்கமே தங்கம்

    குடும்பமாய் சூழ்ந்தபடி தங்கமே தங்கம்
    குதூகலத்தில் மிதப்போமே தங்கமே தங்கம்
    பொங்கல்தரும் வாசனையோ தங்கமே தங்கம்
    பூரிப்பை வழங்குமடி தங்கமே தங்கம்

    வாசலிலே கோலமிட்டு தங்கமே தங்கம்
    மங்கலமாய் விளக்கேற்றி தங்கமே தங்கம்
    ஆதவனைப் பார்த்தபடி தங்கமே தங்கம்
    அவர்க்குப் பொங்கல் படைப்போமே தங்கமேதங்கம்

    புத்தாடை உடுத்திடுவோம் தங்கமே தங்கம்
    புறப்படுவோம் கோவிலுக்கு தங்கமே தங்கம்
    பெரியவரை வணங்கிடுவோம் தங்கமே தங்கம்
    பெற்றவரை அணைத்திடுவோம் தங்கமே தங்கம்

    பட்டாசு வெடித்திடுவோம் தங்கமே தங்கம்
    மத்தாப்புக் கொழுத்திடுவோம் தங்கமே தங்கம்
    பட்சணங்கள் பலகொடுப்போம் தங்கமே தங்கம்
    பகிர்ந்தளித்து உண்டிடுவோம் தங்கமே தங்கம்

    பட்டிமன்றம் நடத்திடுவோம் தங்கமே தங்கம்
    பல்சுவைகள் வழங்கிடுவோம் தங்கமே தங்கம்
    இட்டமுடன் இணைந்திடுவோம் தங்கமே தங்கம்
    இறைநினைப்பை நிறைத்திடுவோம் தங்கமே தங்கம்

    கஷ்டங்கள் அகலவெண்ணி தங்கமே தங்கம்
    கடவுளைநாம் வேண்டிடுவோம் தங்கமே தங்கம்
    கலகலப்பு நிறைகவென தங்கமே தங்கம்
    கைகூப்பி இறைஞ்சிடுவோம் தங்கமே தங்கம்

    அரசியலார் அறம்நடக்க தங்கமே தங்கம்
    ஆண்டவனை வேண்டிடுவோம் தங்கமே தங்கம்
    தர்மமது தலைநிமிர தங்கமே தங்கமே
    தாழ்பணிந்து இறைஞ்சிடுவோம் தங்கமே தங்கம்

    போரரக்கன் நோயரக்கன் போய் அகல
    பொங்கல் திருநாளினிலே வேண்டி நிற்போம்
    சாந்தியெனும் பேரொளியே எழுந்து நிற்க
    சங்கற்பம் எடுத்திடுவோம்  தங்கமே தங்கம்

    Share
  • பொங்கலென்னும் மங்கலத் திருநாள்!

    பொங்கலென்னும் மங்கலத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா      
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்று – பொங்கல் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்போம். வறுமை அகல வேண்டும். வாய்மை நிலைக்க வேண்டும். பொறுமை பொலிய வேண்டும். பொய்மை அகல வேண்டும். அறிவு பெருக வேண்டும். ஆன்மீகம் சிறக்க வேண்டும். அன்பு நிலைக்க வேண்டும். அறியாமை மறைய வேண்டும்.

    பொங்கல் என்றாலே புத்துணர்வு வருகிறதல்லவா! பொங்கல் என்றாலே பூரிப்பு பெருகிறது அல்லவா! பொங்கல் என்றாலே ஆனந்தம் பெருக்கெடுக்கிறது அல்லவா! அதனால்த்தான் பொங்கலோ பொங்கல்“ என்று பொங்கலை மகிழ்வாய் வரவேற்றுப் பொங்கியும் மகிழுகின்றோம்.

    உறவுகள் கூட வேண்டும். ஒற்றுமை ஓங்க வேண்டும். பிரிவுகள் மறைய வேண்டும். பெரியவர் வாழ்த்த வேண்டும். இளையவர் சிறக்க வேண்டும். இன்பமே இருக்க வேண்டும். இதுதானே பொங்கலின் உட்பொருளாய் அமைந்திருக்கிறதல்லவா!

    பொங்கலின் சிறப்புகள் எங்கள் தமிழினத்தின் ஏற்றமிகு பண்பாட்டுப் பெட்டகமே ஆகும். புத்தரிசிபுதுப்பானை கோலம்மாவிலைவாழையிலைமஞ்சள்கரும்புஅது தரும் சுவையான சர்க்கரையும் வெல்லமும். வெற்றிலைபழங்கள்நிறைகுடம்குத்துவிளக்குஇலக்குமியாய் எங்களின் பசுக்கள்அது அன்பாய் பொழியும் அமுதாம் பசும்பால், அத்தனையும்  பொங்கலுக்கு வாய்த்திட்ட பொக்கிஷங்கள் அல்லவா!

    இனிப்பாய் இருக்க வேண்டும். சிறப்பாய் இருக்க வேண்டும். பொறுப்பாய் உழைக்க வேண்டும். நன்றியாய் இருக்க வேண்டும். நலிந்தோர்க்கும் நல்கவேண்டும். பொங்கிய பொங்கலை நாமும் உண்ண வேண்டும். மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழவும் வேண்டும்.

    உதவும் மாடுகளுக்கு நன்றி. உழைக்கும் உழைப்புக்கும் நன்றி. ஒளி கொடுக்கும் ஆதவனுக்கும் நன்றி.

    மண்ணுக்கும் நன்றி. விண்ணுக்கும் நன்றி. மண்போட்ட விதை முளைக்க வைத்திட்ட மாமழைக்குக்கும் நன்றி. இத்தனைக்கும் உரித்தாய் அமைந்திருக்கும் உன்னதத் திருநாள் தான் எங்களின் பொங்கல்த் திருநாள்“. அந்தத் திருநாளைப் பற்றி அறிவதும் அகத்திருத்துவதும் அவசியம் அல்லவா!

    தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர் ந்து வரவேண்டும் என்பதே யாவரதும் ஆசையாகும்.

    “தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்               
    தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்                                               
    முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்                                     
    முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்                                           
    குத்து விளக்கேத்தி வச்சு (வைத்து) தங்கமே தங்கம்                               
    கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்”  –  

    என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங்கலை, உயிர்த் துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டி நிற்கிறதல்லவா?  அப்படி ஒரு காலம் இருந்தது. அந்தக் காலம் எங்கள் ஆழ் மனதில் அமர்ந்திருக்கிறதல்லவா? அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரதும் ஆசை!

    “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்                             
    உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”

    “உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர்                                        
    பழுதுண்டு வேறோர் பணிக்கு 

    “சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது” இவையெல்லாம் பொங்கலை மனமிருத்தும் அமுத வாக்குகள்.

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம்இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறதுஇந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன? பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும். இதுவா பொங்கல் திருநாள்!

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள்உழைப்புக்கு உதவிடும் விலங்குகள், உழைப்புக்கு உதவிடும் கருவிகள் கவனத்தில் கொள்ளப்படுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்பதை மனமிருத்தல் வேண்டும்.

    உலகிலே  உயிர் வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது. நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இவையாவும் தைப்பொங்கலுடன் இணைத்து வைத்தார்கள் எங்கள் முன்னோர்கள். இதனால் பொங்கல் சிறப்பான விழாவாக அமைகிறது லென்பதும் நோக்கத்தக்கது.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம் கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப்படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறான். விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன. இதனால் தைப்பொங்கல்  என்பது  நன்றியினை நவில்கின்ற பெருவிழா அமைகிறது என்பது முக்கிய கருப்பொருள் எனலாம்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள் “பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாததாகும்.

    கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசிபால் சர்க்கரைகரும்புஇஞ்சிமஞ்சள்வாழைமாவிலைஇவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள். எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவைகள் தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை எனலாம்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் தொடக்கமாய் வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டுமென்று எண்ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமாவருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம்உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனத்திலுள்ள பொறாமை வஞ்சகம். பொய்கபடுசூதுவாதுஇவற்றையெல்லாம் ஞானம் என்னும் தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும்பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் “காணும் பொங்கல்” அமைகிறது. உற்றார் உறவினரைபெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த் தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல்போகித்திருநாள்காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரத்தில் வாழ்கின்றவர்களுக்கோ.  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைத்தான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம். மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாபமாகவே இருக்கும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – தைப்பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா!  நன்றி நவிலும் விழா! உழைப்பாளரின் உன்னத விழா! கூட்டுறவின் விழா! மத பேதமற்ற மகோன்னத விழா! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்! உதவுவதை உளமிருத்த பொங்கல் திருநாளில் அனைவரும் சங்கற்பம் எடுத்திடுவோம். கற்பவர்க்கு இயலுமான வரை கைகொடுக்க எண்ணிடுவோம். ஏழையாய் இருப்பார்க்கு இயன்றவரை இருப்பதைக் கொடுத்திடவும் எண்ணிடுவோம். கற்கின்ற மாணவர்கள் ஏழ்மையால் உழலுவதைக் கைகட்டி நின்று பார்க்கும் மனநிலையைக் கைவிட்டு அவர்களைக் கையணைப்போம். உள்ளங்கள் அன்பாய் அருகணைய வேண்டிடுவோம். பொங்கல் திருநாள் புத்தொளியை தந்திடட்டும்! பொங்கல் திருநாள்  புதுப்பாதை திறந்திடட்டும்!

    தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
    பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்
    அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு

    அத்தனையும் தித்திக்கிற நாள்தான்                                  
    எங்கள் தை பிறக்கும் நாள்தான்
    ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
    அன்பாகச் சேர்ந்துமே பொங்கி மகிழ்வோம் 

    Share
  • பிறக்கும் வருடம் சிறக்கட்டும்!

    பிறக்கும் வருடம் சிறக்கட்டும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    பிறக்கும் வருடம் சிறக்க
    மனத்தால் இறையை வேண்டிடுவோம்
    அடக்கும் ஆணவம் அகல
    அகத்தால்  இறையை வேண்டிடுவோம்

    தொடக்கும் காரியம் துலங்க
    துதித்தே இறையை வேண்டிடுவோம்
    நலமும் வளமும் பெருக
    நாளும் இறையை நாடிடுவோம்

    உற்றார் உறவின் இணக்கம்
    உயர்வாய் இருக்க வேண்டிடுவோம்
    கற்றார் பெருக நாட்டில்
    கருதி இறையை வேண்டிடுவோம்

    பசியும் பிணியும் அகல
    பாங்காய் இறையை வேண்டிடுவோம்
    அறிவும் தெளிவும் பிறக்க
    அன்பாய்  இறையை வேண்டிடுவோம்

    போரின் எண்ணம் தொலைய
    பொறுப்பாய் இறையை வேண்டிடுவோம்
    வாதம் புரியும் கூட்டம்
    மறைய இறையை வேண்டிடுவோம்

    ஏழை என்னும் சொல்லை
    இகத்தில் அகற்ற வேண்டிடுவோம்
    கோழை என்னும் சொல்லை
    குவலயம் அகல வேண்டிடுவோம்

    வேலை இல்லை என்னும்
    வேதனை போக்க வேண்டிடுவோம்
    இருக்கும் தொழிலை நன்றாய்
    பெருக்க இறையை வேண்டிடுவோம்

    நல்ல தலைமை எழுந்து
    நாட்டை ஆள வேண்டிடுவோம்
    சொல்லும் சொல்லை காக்க
    தூய தலைமை வேண்டிடுவோம்

    கொள்ளை அடிக்கும் தலைமை
    குழியுள் விழ  வேண்டிடுவோம்
    வல்ல தலைமை நாட்டில்
    வளர  இறையை வேண்டிடுவோம்

    பொய்மை உரைக்கும் கூட்டம்
    பொசுங்க   இறையை வேண்டிடுவோம்
    வாய்மை என்னும் வசந்தம்
    வாய்க்க இறையை வேண்டிடுவோம்

    தாய்மை போற்றும் எண்ணம்
    தளரா  இருக்க வேண்டிடுவோம்
    காய்தல் உவத்தல் இன்றி
    கருணை  பெருக வேண்டிடுவோம்

    அன்பு அறன்  வாழ்வில்
    அமைய அனைவரும்  வேண்டிடுவோம்
    அதர்மம் அசுத்தம் வாழ்வில்
    அகல  அனைவரும் வேண்டிடும்

    துன்பம் துயரம் போக
    என்று மிறையை வேண்டிடுவோம்
    குன்றா மகிழ்வே நிறைய
    நன்றாய் இறையை வேண்டிடுவோம்

    Share
  • மங்கலம் தருகின்ற மார்கழி மாதம் !

    மங்கலம் தருகின்ற மார்கழி மாதம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    மார்கழி என்றாலே மனமெல்லாம் குளிரும்
    நீர்பெருகி நிற்கும் நிலம்மகிழ்ந்து சிரிக்கும்
    ஊர்முழுக்க விழித்து உவந்தேற்று நிற்கும்
    கார்மேகம் வானைக் கவ்வியே இருக்கும்

    ஆறு குளமெல்லாம் ஆர்ப்பரித்து நிற்கும்
    வீறுடனே நீரும் வெளியில் வரப்பாக்கும்
    ஊரவரின் கவனம் நீர்பெருக்கை நோக்கும்
    மார்கழியும் மகிழ்வாய் வந்துமே நிற்கும்

    குளிர்வுடைய மாதம் குறைவதனைத் தருமா
    கீதைதந்த கண்ணன் மார்கழியைப் புகழ்ந்தான்
    தேவரது மாதம் மார்கழியாய் சிறக்க
    நாமதனைப் பீடை எனவுரைத்தல் தகுமா

    சீர்காழிச் செல்வர் சம்பந்தர் பிறந்தார்
    சேந்தனார் தேரை தமிழ்பாடி அசைத்தார்
    சிவனாரின் நடனம் சிரேஷ்டர்கள் கண்டார்
    சிறப்புகள் அனைத்தும் சேர்ந்ததே மார்கழி

    தோடுடை செவியனைத் தொழுதேற்றும் மாதம்
    மாதொரு பாகனை மனமிருத்தும் மாதம்
    மாசிலா மனத்துடை மாணிக்க வாசகர்
    வழங்கிய திருவெம்பா முழங்கிடும் மாதம்

    மாலவன் மாண்பினைப் போற்றிடும் காலம்
    மாண்புடை திருப்பாவை மலர்ந்திடும் காலம்
    ஊனையும் உருக்கிடும் உன்னதத் தமிழை
    உவந்துமே ஆண்டாள் வழங்கிய காலம்

    ஆதியந்தம் இல்லா அருட்பெரும் சோதியை
    வீதியெங்கும் பாடி வியந்தேற்றுங் காலம்
    தாளல யமோடு பாடிவரு மடியார்
    காலையது வேளை காட்டிவிடு காலம்

    வண்ணத் தமிழ்பாடி வாலைக் குமரியெலாம்
    எண்ணரிய பரம்பொருளை இறைஞ்சுகின்ற காலம்
    கண்விழிக்கா கன்னியரை கனிவான தமிழ்பாடி
    உண்ணா முலையானை உவந்தேற்றும் காலம்

    கண்ணுக் கினியானை கனிவான தமிழாலே
    காரிகைகள் வீதியெலாம் பரவிநிற்கும் காலம்
    பெண்ணுக் கினியானை பேரருளைத் துயிலெழுப்ப
    மண்பிறந்தார் தமிழ்பாடி மனமுருகும் காலம்

    சைவமும் வைணவமும் சங்கமிக்கும் காலம்
    சபரிமலை நாதனை உவந்தேற்றும் காலம்
    ஐயப்பா சரணமென அடியார்கள் ஒலிக்கும்
    உய்விக்கும் பாடலெலாம் உளமமரும்  காலம்

    மனங்குளிரும் மாதம் மண்சிரிக்கும் மாதம்
    உளம்மகிழ இறையை உவந்தேற்றும் மாதம்
    மனமுறையும் அழுக்கை துடைத்தெறியும் மாதம்
    வருடமதில் நிறைவாய் வாழ்த்துரைக்கும் மாதம்

    அருளான மாதம் அழகான மாதம்
    ஆனந்தத் தமிழை அரவணைக்கும் மாதம்
    தேவரது மாதம் திருமிக்க மாதம்
    யாவருக்கும் நலமே நல்கிவிடும் மாதம்

    Share
  • செந்திரு விளக்கதை ஏற்றிடும் காலம்!

    செந்திரு விளக்கதை ஏற்றிடும் காலம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மாலயன் மருளது போக்கிய காலம்
    மலரடி திருமுடி உணர்த்திய காலம்
    தேவரும் தெரிசனம் கண்டநற் காலம்
    திருவிளக்கு ஏற்றிடும் கார்த்திகைக் காலம்

    கந்தனை வந்தனை செய்திடு காலம்
    கனற்பொறி குழந்தையாய் ஆகிய காலம்
    நொந்திடு அடியவர் பவவினை போக்கிட
    செந்திரு விளக்கதை ஏற்றிடும் காலம்

    ஒளிர்வளர் விளக்காய் ஒளிர்ந்திடும் காலம்
    தெளிவதைக் கருத்தில் அமர்த்திடும் காலம்
    பொலிவுடன் பேரொளி தோன்றிய காலம்
    போற்றியே தீபத்தை ஏற்றுவோம் வாரீர்

    ஆண்டவன் நினைப்பை அகற்றிய ஆணவம்
    தாண்டவம் தகர்ந்த தகைவுடைக் காலம்
    நீண்டிடும் மாயையை நிர்மல மாக்கிய
    நிலைபெறு சக்தியை உணர்த்திய காலம்

    நெறிபிறழ் நினைப்பினை நீக்கிய காலம்
    அறிவெனும் உண்மையை அமர்த்திய காலம்
    பொறிபுலன் சிவனருள் புகுத்திய காலம்
    போற்றிடும் கார்த்திகை பொன்னிகர் காலம்

    ஆலயம் எங்கணும் தீபங்கள் ஒளிரும்
    அனைவரும் தீபத்தை நாடியே நிற்பார்
    வீதிகள் வீடுகள் ஒளியினை நல்கும்
    விளக்குகள் ஏற்றிடும் சிறப்புடைக் காலம்

    ஒளியிலே இறையினை இருத்திடும் காலம்
    உவப்புடன் தீபத்தை ஏற்றிடும் காலம்
    மனவிருள் போக்கிட வந்திட்ட காலம்
    மண்ணிலே மலர்ந்த மாண்புடைக் காலம்

    அண்ணா மலையினை அகத்தில் அமர்த்திட
    உண்ணா முலையாள் ஒளிர்ந்திட்ட காலம்
    அருட் பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை
    அளவிலா ஆற்றலை அருளிய காலம்

    மரத்தில் மறைந்த மாமத யானையை
    பரத்தில் மறைந்த பார்முதல் பூதத்தை
    இருத்தி மனத்தில் ஏற்றுவார் தீபத்தை
    கொளுத்துவார் சொக்கப் பனையைக் கோவிலில்

    மாதொரு பாகனை மனமதில் இருத்தி
    மங்கலம் பொங்கிட தீபத்தை ஏற்றி
    தீமைகள் அகல கார்த்திகை விளக்கை
    சிறப்புடன் ஏற்றிடச் சேருவோம் வாரீர்

    விஞ்ஞான உண்மை விளக்கினில் இருக்கு
    மெஞ்ஞானம் அதனுள் வியாபித்தே இருக்கு
    ஒளியினை அறிவாய்க் கொண்டிடும் வேளை
    ஒளியினை உணர்வாய் ஆக்கிடும் சமயம்

    இருளது சூழின் எதுவுமே தெரியா
    இருளது இருப்பு மருளவே வைக்கும்
    ஒளியது வந்தால் தெளிவது பிறக்கும்
    தெளிவது சிவமாய் ஒளியென ஒளிரும்

    அகமதில் இருளை அகற்றிட வேண்டும்
    அருளெனும் ஒளியை இருத்திட வேண்டும்
    அருளெனும் ஒளியை அளிப்பது இறையே
    இறையினை எண்ணி ஏற்றுவோம் விளக்கினை

    Share
  • திருமூலர் தத்துவம் சிந்தையில் இருத்துவோம்!

    திருமூலர் தத்துவம் சிந்தையில் இருத்துவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. அவற்றுள் எங்கள் தமிழ்மொழியும் ஒன்றாகும். ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பினை எங்கள் தமிழ் மொழி தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதாவது பக்தியை இலக்கியமாக்கிய தனித்துவம் எனலாம். ஏனைய மொழிகள் பக்தியைத் தனியாகவே பார்த்தன. ஆனால் எங்கள் தமிழ் மொழி அதனை வாழ்வுடன் இணைத்து இலக்கியமாகக் கண்டது. இதன் காரணமாகப் பக்தியின் வழியில் சென்ற அடியார்களின் மனத்தினின்று உதித்த சிந்தனைகள் அத்தனையும் திருப்பாடல்களாய் தமிழை வளம்படுத்தி வழிகாட்டியாய் அமைகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது எனலாம். அந்த வகையில் பன்னிரு திருமுறைகள் வந்து அமைகின்றன.

    பன்னிரு திருமுறைகளைத் தந்தவர்கள் பல இடங்களைச் சேர்ந்தவர்கள். பல அனுபவங்களைப் பெற்றவர்கள். அவர்களின் அனுபங்கள் ஆண்டவனின் பாற்பட்டதாகவும் அதேவேளை உலகியல் நிலைப்பட்டதாகவும் அமைந்தே இருந்தது. ஒன்பதாம் திருமுறைவரை அமைந்த திருப்பாடல்கள் ஒரே வகையினவாய் இருப்பதைக் காணமுடிகிறது. பத்தாம் திருமுறையாக  அமைகின்ற திருமுறை யானது  ஒன்பது திருமுறைகளையும் விட வித்தியாசமானதாக அமைவதனைக் காணக் கூடியதாக இருக்கிறது. தேவாரம்திருவாசகம்திருப்பல்லாண்டு என்று திருமுறைகள் வருகின்ற நிலையில் பத்தாவதாய் வருகின்ற திருமுறை திருமந்திரம்”   என்னும் சிறப்புப் பெயரினைத் தாங்கி வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் முக்கியமாகும். சிறப்புப் பெயரினைத் தாங்கி வருகின்ற திருமந்திரத்தைப் பற்றி அறிவது அனைவருக்கும் அவசியம் அல்லவா!

    இந்தத் திருமந்திரம் தமிழுக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷமாகும். இதனைத் தத்துவ நூல் என்பதா,  சமய நூல் என்பதாமருத்துவ நூல், என்பதா அறிவியல் நூல் என்பதா அல்லது புதுமைக் கருத்துக்களை உரத்துச் சொல்லும் புரட்சி நூல் என்பதா! இப்படிப் பல நிலையில் பன்முகங் கொண்டதாக இத்திருநூல் அமைந்திருக்கிறது என்றுதான் எண்ணிட வைக்கிறது. அந்த அளவுக்கு தமிழ்ப் பக்தி உலகில் திருமந்திரம் தனித்து வமான ஒரு நூலாக மிளிர்ந்து நிற்கிறது என்பதை மறுத்துரைத்துவிடல் இயலாது.

    இப்படிப் பல புதுமைகளைக் கொண்ட திருமந்திரத்தைத் தந்தவரின் வரலாறும் கூட புதுமையாகவே காணப்படுகிறது. இவரின் தொடக்கமே எம்பெருமான் உறைகின்ற கயிலாயமாகிறது. அங்கிருந்து ஏதோ ஒரு நோக்கத்துக்காக அவரின் வருகை பிறப்பாய் அமைகிறது. வந்தவருக்கு அவர் வந்த உடலே வாய்க்காது விட வேறொரு உடலிற் புகுந்து அந்த உடலுக்கு உரியயவனின் பெயருடன் இம்மண்ணில் நிற்கும் ஒரு புதுமை நிகழ்கிறது. அப்பொழுதுதான் அவருக்குத் தான் தாங்கிய உடலுக்கு உரித்தான வனின் பெயரான மூலன் என்னும் பெயர் வாய்க்கிறது. திருவருட்சக்தி அவரிடம் நிறைந்த காரணத்தால் மூலன் – திருமூலன் ஆகும் நிலை ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. அதுவும் நிரந்தர மாகவில்லை என்பதையும் அவர்பற்றிய கதை எடுத்து இயம்புகிறது.

    திருமந்திரம் எமக்களித்த அந்தத் திருவருளாளரைப் பற்றிய செய்தி பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமானால் எடுத்துச் சொல்லப்படுகிறது. திருத்தொண்டர் தொகையினைப் பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரை “நம்பிரான்” என்று உயர் நிலைப்படுத்தியே அறிமுகம் செய்கிறார் என்பது நோக்கத்தகது. சம்பந்தப் பெருமானை “எம்பிரான்” என்றவர் திருமூலரை “நம்பிரான்” என்று சுட்டுவது மனமிருத்த வேண்டிய கருத்தாகும்.

    திருமூலர் வரலாறு எப்படி இருந்தாலும் அதைப்பற்றி விவாதிப்பது அவசியம் அற்றதாகும். அவரால் அளிக்கப்பட்ட பொக்கிஷமான “திருமந்திரம்” என்பதே கவனித்தில் கொள்ளப்படுதல் வேண்டும். திருமந்திரம் எப்படிப் பாடப்பட்டது யாரால் பணிக்கப்பட்டது என்பதுதான் மிகவும் முக்கியமான செய்தியாகும்.

    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே

    இறைவன் தன்னைப் படைத்ததற்கான சரியான விடையைத் திருமூலரே தருகிறார். “தமிழ் கொண்டு தன்னைப் பாடவே இறைவன் படைத்தான் பணித்தான்” என்பதுதான் அந்த மறுமொழியாகும். இதுதான் அவரின் பிறப்பின் நோக்கமாகும். இங்கே தமிழ் என்று அழுத்திச் சொல்லப்படுவது கருத்திருத்த வேண்டியதேயாகும். திருமூலர் இறைவன் விருப்பப்படி தமிழில் நன்றாகவே பாடினார். அறம் பாடினார். பொருள் பாடினார். இன்பம் பாடினார். தத்துவம் பாடினார். யோகம் பாடினார். ஆரோக்கியம் பாடினார். ஒழுக்கம் பாடினார். நிலையாமை பாடினார். விஞ்ஞானம் மொழிந்தார். அதேவேளை அரிய மெஞ்ஞா னமும் மொழிந்தார். எதைப் பாடினாலும் இறைவனை அகமிருத்தியே அத்தனையும் தந்துநின்றார் என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். சைவசித்தாந்தம், யோக சாத்திரமுறை, விஞ்ஞானமுறை என்று திருமந்திரம் இருந்தாலும் அடிநாதமாய் அமைந்திருந்திருந்தது – பரம்பொருளை உணர் ந்து கொள்ளுதலே என்பதை மறந்துவிடக் கூடாது.

    திருமந்திரம் ஒன்பது தந்திரங்களையும்  மூவாயிரம் பாடல்களையும் கொண்டது. ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடி மூவாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கிறார் என்பது வரலாறு. இதில் நாம் நுழைந்து விவாதம் செய்ய வேண்டியதில்லை. திருமூலரைச் சித்தர் என்றே அழைப்பது வழக்கம். சித்தர்கள் வாழ்வானது விசித்திரமானது. அறியமுடியா பல அதிசயங்கள் கொண்டது என்பதுதான் பொதுவான ஒரு கருத்து நிலையாகும். அவரின் பிறப்போ அல்லது அவரின் மறைவோ பற்றிய சர்ச்சைகளை விட்டு விட்டு அவரின் சிந்தனைக் கருவூலமான திருமந்திரத்தையும் அதன் மூலம் யாவரையும் திரும்பிப் பார்த்திட வைத்திட்ட திறத்தையுமே நாமனைவரும் எம்மகத்தில் அமர்திட வேண்டும். அதுதான் மிகவும் பொருத்த மானதுமாகும்.

    மூவாயிரம் பாடல்களும் தமிழுக்குக் கிடைத்த வைரங்கள். அவற்றில் அறிவார்ந்த பல கருத்துகள் பொதிந் திருக்கின்றன என்பதை அனைவருமே ஒத்துக் கொள்ளுவார்கள். அறிவார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்த திருமூலர் கையாண்ட மொழி நடையினை வியந்துமே பார்க்க வேண்டி இருக்கிறது. இலகுவான சொல்லாக இருக்கும். படிக்கும் பொழுது ஒரு கருத்தை எமக்குள் ஏற்படுத்தும். ஆனால் உள்நுழைந்து பார்க்கும் பொழுதுதான் திருமூலர் தெரிவார். அவர் எம்மைத் திரும்பிப் பார்க்க வைத்திடக் கையாண்ட சித்தும் தெரிய வரும். அந்த அளவுக்கு ஆழம் நிறைந்திருக்கும். அதேவேளை கவிதை அழகும் செறிந்திருக்கும். அதற்குள் பக்தியும்தத்துவமும்புதைந்தும் இருக்கும். இப்படியான சிறப்பினை வேறெதிலுமே காணமுடியாது. ஆனபடியால்த்தான் அது திருமந்திரம் என்னும் பெயரினைத் தாங்கிடும் பெருமைக்கு ஆளானது எனலாம்.

    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை அனைவருமே தேடுகின்றோம். அந்த அருட்சோதியை வேண்டிப் பல இடங்களைத் தேடியும் ஓடுகின்றோம். மனம் அங்கலாய்த்தபடியே இருக்கிறது. அருட்பெருஞ்சோதியை அறிய முடியாமல் இருப்பார்க்கு திருமூலர் புதுமையாய் ஒரு கருத்தைச் சொல்லி புதுப் பாதையையும் காட்டுகின்றார். இது யாருமே சிந்திக்கா சிந்தனையாகும்.

    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந் திருப்பாரே

    சித்தம்  போக்கு சிவன் போக்கு என்று சொல்லுவதை நாமெல்லாம் கேட்டிருக்கின்றோம். இதன் அர்த்தம் சிவபெருமானின் போக்கானது அன்பு நிலையேயாகும். இதனைக் கருத்திருத்தியே திருமூலரும் சிவனை “அன்பாய்” காணுகின்றார். ஆகவேதான் சிவன் வேறல்ல – அன்பு வேறல்ல. இரண்டுமே ஒன்று தான் என்று உரக்கக் கூறுகிறார். ஆண்டவனை அன்பாய்க் காணுவதே மிகவும் உகந்த நிலை என்பதுதான் திருமூலர் எண்ணமாகும். பரம்பொருளை அன்புடன் இணைத்து அப்பரம்பொருளுக்கு அன்புதான் பெயர். அந்த அந்த அன்புதான் சிவன் என்று காட்டும் பாங்கில் யாவரையும் திரும்பிப் பார்த்திட வைக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். விளங்காதவருக்கும் விளங்கப் பண்ணிடும் உத்தியாய் இருக்கிறதல்லவா?

    உடம்பினைப்பற்றி அதனுள் இருக்கும் உள்ளத்தினைப் பற்றியெல்லாம் பலரும் பலவாறு பார்த்திருக்கிறார்கள். ஆனால் திருமூலர் பார்வையோ யாவரையும் விட வித்தியாசமானதாய் அமைந்திருக்கிறது. உடம்பு இழுக்கா என்றால் இல்லையே என்கிறார். அதற்குத் தக்க காரணமும் தருகிறார். அங்குகூட பரம்பொருளையே உட்புகுத்தியும் நிற்கிறார்.

    உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

    உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
    உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
    உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
    தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே

    உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
    மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
    பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
    கள்ள மனமுடைக் கல்வி இலோரே

    தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ
    வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
    தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
    ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.

    உடம்பினைப் பற்றிய பார்வையும், அதனூடாக வெளிப்பட்ட புதுமையான சிந்தனையும், திருமூலர் உலகினுக்கு உணர்த்திய பெருந் தத்துவமாய் இருக்கிறது அல்லவா! இந்தப் பாடல்களை அறிவால் அணுகுவதைவிட உணர்வால் உள்ளிருத்துவதே உகந்ததாகும்.

    யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
    யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
    யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
    யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே

    இந்தப் பாடலை நாமனைவரும் தெரிந்தே வைத்திருக்கிறோம். பாடலைப் பாடமாக்குவதோ அல்லது பாடலின் பொருளைக் கூறுவதோ இங்கு முக்கியம் அல்ல. இப்பாடல் ஊடாக திருமூலர் சமூகத்துக்கு எதனை உணர்த்திட விரும்புகிறார் என்பதே மிக மிக முக்கியமானதாகும். பரம்பொருளைப் பூசிப்பதற்கு ஒரு பச்சிலையே போதும் என்கிறார். பரம்பொருளைப் பூசித்தால் மட்டும் போதுமா என்று கேட்டு விட்டு – பசுவுக்குப் புல்லுக்கொடு. உண்ணும் போது யாராவது வந்தால் ஒரு கைப்பிடி உணவு கொடு. இப்படி யெல்லாம் உனக்குச் செய்வது கஷ்டமாக இருந்தால் நல்லதாக ஒரு வார்த்தையினையாவது மற்றவரைப் பார்த்துச் சொல்லிவிடு. என்று குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவதுபோல எமக்கெல்லாம் எடுத்துரைக்கின்றார். பரம்பொருளை நாடுவதும், பூசிப்பதும் எவ்வளவு முக்கியமோ அதே முக்கியத்து வத்தை பசுவுக்கு வாயுறை கொடுப்பதற்கும், உண்ணும்போது ஒரு கைப்பிடி கொடுப்பதற்கும், இன்னுரை மற்றவர்க்கு வழங்குவதற்கும் திருமூலர் கொடுத்து நிற்கிறார் என்பதுதான் அகம் அமர்த்திட வேண்டிய கருத்தாகும். மகேசன் சேவையுடன் சமூகச் சிந்தனையும் மிகவும் அவசியமானதுதான் என்பதையே திருமூலர் எண்ணிச் சொல்லுகிறார் என்பதே கருத்திருத்த வேண்டிய கரு எனலாம். இந்தப் பாடலின் மூலம் நல்ல அறமும் உணர்த்தப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். அறங்களை இலகுவாக்கி அதனையாவது இருக்கும் காலத்தில் செய்யுங்கள் என்று நல்ல குருவாய் நல்லதொரு உபதேசத்தை வழங்கியவர் – மனித வாழ்வினையும், அதன் நிலையாமையினையும் படம்பிடித்துக் காட் டுகிறார். திருமூலரைத் தவிர எவராலுமே இப்படி விளக்கிடவும் முடியாது. உணர்த்திடவும் முடியாது என்பதுதான் உண்மை.

    அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
    மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
    இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார்
    கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே    

    ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
    பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
    சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
    நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே

    வந்தார். நன்றாகவே அதுவும் சுவையாகவே உண்டார். அழகான மனைவியுடன் இன்பமாய் இருந்தார். இட துபக்கம் சிறிது வலிக்கிறது என்றார்.நோவினால் படுத்தார். படுத்தவர் படுத்தே விட்டார். எழவே இல்லை! ஒரு நாடகம் போல காட்டி மனித மரணத்தினை திருமூலர் சமூகத்துக்கு உணர்த்தி நிற்கிறார். இங்கே நிலையாமையும் இருக்கிறது. மருத்துவமும் இருக்கிறது. இடப்பக்கம் நொந்தால் இருதய நோய். அதனால் உயிராபத்து வரும். இதனை எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் திருமூலர் என்னும் சித்தர் பெருமான் சொல்லி இருப்பது எம்மையெல்லாம் அவர் பக்கம் திருப்பிப் பார்த்திட வைத்திடும் நிலைதானே!

    படுத்தவர் எழவேயில்லை. படுத்தவர் பெரிய அந்தஸ்த்தில் உள்ளவர். வசதிகள் வாய்ப்புகள் நிறைந்தவர். ஆள் பலம் படைத்தவர். அரசியலில் உயர்நிலையில் இருப்பவர். அனைவரையும் ஆட்டிவைத்தே வாழ்ந்தவர். அவரிப்போ எழமுடியாமல் வீழ்ந்துவிட்டார். ஊரிருப்பவர்கள் எல்லோரும் வந்தார்கள். ஒலிக்கி அழுதார்கள். சற்று நேரங்கழித்து – அந்தஸ்த்திலிருந்தவரின் பெயரினைச் சொல்லாது எப்பதான் இந்தப் பிணத்தை எடுக்கப் போகிறார்களோ என்று சொல்லி நிற்கின்றார்கள். நிலைமை உடனேயே மாறி விட்டது என்கிறார் திருமூலர். அதுமட்டுமா? ஆடவைத்து நின்றவரின் ஆட்டம் அடங்கிய பின் பிணம் என்னும் பெயருடன் சூரையங் காட்டுக்குக் கொண்டு சென்று தீயிட்டு எரித்து, அங்குள்ள நீர் நிலையில் மூழ்கி எழுந்து – அந்தஸ்த்தில் இருந்தவரையே நினைப்பிலிருந்து அகற்றியே விட்டார்கள். இதுவும் ஒரு படமாக காட்டப்படுகிறது அல்லவா! இதுதான் வாழ்கை! இதுதான் வாழ்கையின் நிதர்சனமான நிலை! 

    உலகிலே இருக்கின்ற அனைவருக்கும் இப்படி ஒரு தத்துவத்தை மிகவும் பக்குவமாய் அதேவேளை உறைக்கும்படியும் உரைத்தவர் திருமூலர் ஒருவரே என்பதுதான் இங்கு மனத்திருத்த வேண்டிய உண்மையாகும். 

    திருமுறைகளை ஆலயங்களில் பாடும் பொழுது திருமந்திரம் அங்கு இடம்பெறுவதைக் காணவே முடிவதில்லை. திருமந்திரம் என்பது ஒரு சாத்திர நூல். அது தோத்திர நூல் அல்ல. அது நிலையாமையினை உணர்த்தும் நூல். தத்துவங்களை உள்ளடக்கிய நூல்.சாதாரண மானவர்களுக் கெல்லாம் விளங்காத நூல். சித்தரின் நூல்.முத்தியினை முன்னிறுத்தும் நூல். விளங்குவது கடினம். என்றெல்லாம் பல கருத்துகள் இருப்பதனால் திருமூலரையோ அல்லது திருமந்திரத்தையோ நாடுவதும் தேடுவதும் குறை வாகவே இருக்கிறது. கோவில்களில் கூட புராணங்கள் பற்றியே விரிவுரைகள் பெரும்பாலும் இடம் பேறும். திருமந்திரம் என்றாலே அது ஒரு மந்தி நூல் என்று எண்ணுவதே வழக்கமாகிவிட்டது. ஆம்… அது மந்திர நூல்தான். நிறை மொழியான பலகருத்துக்கள் அதில் இருப்பதால் அது மந்திர நூல் அதாவது உயர்வானசிறப்பானமதிப்பான மந்திர நூல் ஆகையால்த்தான் திரு என்னும் அடை மொழி இணைக்கப்பட்டு “திருமந்திரம்” ஆகி திரும்பிப் பார்த்திட வைத்திருக்கிறது.

    நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
    மறைமொழி தானே மந்திரம் என்ப
    ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
    கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
    பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
    அழிந்தன கண்டும் அறம்அறி யாரே

    Share
  • திரையில் மலர்ந்த தீந்தமிழ் பற்றிய ஒரு பார்வை

    திரையில் மலர்ந்த தீந்தமிழ் பற்றிய ஒரு பார்வை

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் … ஆஸ்திரேலியா 

    இலக்கியமும்.  இலக்கணமும் இங்கிதமாய் கொண்டமொழி எங்கள் இன்தமிழ் மொழி.அந்த மொழி இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழைப் பெற்று நிற்கின்ற மொழி.வரலாறு படைத்த மொழி.பேச்சு மொழியா யும் எழுத்து மொழியாயும் ஏற்றமுற்று இருக்கும் மொழி.சங்கம் வளர்த்த  மொழி. சன்மார்க்கம் சொன்ன மொழி.அறத்தை உரைத்த மொழி அன்பைப் பொழிந்த மொழி.என்றுமே இளமையாய் இருக்கும் மொழி. அதுதான் தீந்தமிழ் மொழி. சிறப்பான மொழி. மண்ணில் நல்லவண்ணம் வாழவைக்கும் மொழி.அந்த மொழி பட்டி தொட்டியெங்கும் பரவிட வைப்பதற்கு வாய்த்த ஒரு ஊடகம்தான் வெள்ளித்திரைவெள்ளி த்திரையில் எங்கள் தமிழ் எழிலுடன் கொஞ்சி உலாவந்த பாங்கினை பார்ப்பது பரவசமாய் அமையும் அல்லவா பார்ப்போமா ! நீங்கள் ஆயத்தமா வாருங்கள் பார்ப்போம் ! திரையில் மலர்ந்த தீந்தமிழை !

    திரையில் காட்சிகளைப் பார்ப்பதும் காட்சிக்கு ஏற்ற வசனங்களைக் கேட்பதும் அந்தக் காட்சிகளுக்கு ஏற்றதான பாடல்களை இசையுடன் கேட்பதும் எல்லோருக்குமே பிடித்தமாய் இருக்குமல்லவாஇந்த விருப் பம்தான் திரைத்துறையை வளரும் நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது எனலாம்.

    நாடகங்களில் வசனம் வந்தது,பாட்டும் வந்தது. ஆரம்பகாலங்களில் வந்த திரைப்படங்கள் நாடகப் பாணி யிலே வந்தனகாரணம் ஆரம்ப நிலை எனலாம். ஆனால் காலம் மாற கருத்துகளும் மாற காட்சிகளும் மாறின.மாறிய மாற்றங்களுக்கெல்லாம் திரையும் இடங் கொடுக்கவேண்டியது அவசியமாய் அமைந்தது.

    1931 ஆம் ஆண்டு அக்டோபர் 31 என்னும் நாள் திரைத்துறையில் மிகவும் முக்கியத்துவம் மிக்க நாளாகும். அன்றுதான் “ “காளிதாஸ்” என்னும் பெயரில் பேசும் திரைப்படம் வெளி வருகிறது. பேசும் படந்தான் தமிழைத் திரையில் உலவவிட்டது எனலாம். அந்தவகையில் திரையில் தமிழைப் பேசவைத்த பெருமை முதல்வந்த காளிதாசுக்கும் அதன் குழுவினருக்குமே உரித்தான தெனலாம்.

    மேடையில் பெரும்பாலும் புராண இதிகாசக் கதைகளே நாடகங்களாக நடிக்கப்பட்டன. ஆரம்ப காலங் களில் வெளிவந்த திரைப்படங்களும் நாடகப் பாணியில் புராண இதிகாசக் கதைகளையே திரையில் காட்டி நின்றன. அங்கு மேடை நாடகங்களில் கையாளப்பட்ட தமிழே ஆரம்ப திரைத்தமிழாய் மலர்ந்ததது என்பதை மனமிருத்தல் வேண்டும். அது அக்காலப் போக்கு எனலாம். அப்படியான நேரத்தில் வசனங்க ளிலும் பாடல்களிலும் சமஸ்கிருதம் கலந்து தமிழ் திரையில் வந்தது. அதனை அப்போதைய திரைத் தமிழாகவே கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த நிலையில் மாற்றம் வராமல் இல்லை. அந்த மாற்றம்தான் நல்ல இலக்கியத் தமிழைஅழகான தமிழைஉணர்ச்சி கொப்பழிக்கும் தமிழைஉயிரோ ட்டமான தமிழை திரையில் கொண்டுவந்த கொடுத்த மாற்றம் எனலாம்.

    இந்தமாற்றத்துக்கு வித்தாக பல வசனகர்த்தாக்களும்பாடல் ஆசிரியர்களும்  வந்தமைந்தார்கள் என்பது தான் முக்கியமாகும். இலக்கியத் தமிழை இளங்கோவனும் சாரியும் திரையில் மலரச் செய்தார்கள். உத்தம புத்தரனில் சாரியின் தமிழ் திரையில் தீந்தமிழாய் மலர்ந்ததுகண்ணகியில் இளங்கோவன் தமிழ் தித்தி த்தது. அடுத்து அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி வந்தது. அண்ணாவின் தமிழ் எதுகை மோனையாய் தீந்தமிழை திரைக்கு எடுத்து வந்தது. அடுக்குமொழி அண்ணாத்துரை என்றுதான் அவர் அழைக்கப்பட்டார். “சட்டம் ஓர் இருட்டறை! அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு ! அந்த விளக்கு ஏழைகளுக்குக் கிடைப்ப தில்லை!” இந்தவசனத்தை மறந்தவர்களும் இல்லை! மறக்கத் தான் முடியுமா? அவரின் இளவலாய் வந் தார் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் மலர்ந்த கலைஞர் அவர்கள் .கலைஞர் தீட்டிய வசனங்கள் இன்றளவும் பலரின் மனங்களில் சிம்மாசனமிட்டு இருக்கிறது எனலாம். கலைஞரின் வசனங்களை மனப்பாடம் செய்து பலரும் ஒப்புவித்து காட்டிப் பெருமைப்படுவதும் உண்டு. அந்த அளவுக்கு திரையில் தீந்தமிழை மலர்ந்திட வைக்கும் மாயம் கலைஞர் தமிழுக்கு இருந்திருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது.

    திரைத்தமிழில் திருப்பமாய் பராசக்தியின் வசனங்கள் அமைந்தன.

    நானே பாதிக்கப்பட்டேன் “நேரடியாகப் பாதிக்கப்பட்டேன் ! சுயநலம் என்பீர்கள் ! என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது ! ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் ! அதைப்போல ,

    …… பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை … என் பாதையில் !

    படமெடுத்து ஆடும் பாம்புகளே நெழிந்திருக்கின்றன ! தென்றலைத் தீண்டியதும் இல்லை … நான் … ஆனால்

    தீயைத்தாண்டியிருக்கிறேன் !

    தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான்

    பிறக்க ஒரு நாடு ….. பிழைக்க ஒரு நாடு ! தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா !

    காணவந்த தங்கையைக் கண்டேன் ! கண்ணற்ற ஓவியமாக ! கைம்பெண்ணாக ! தங்கையின் பெயரோ கல்யாணி ! மங்களகரமான பெயர் ….

    ஆனால் …. கழுத்திலே மாங்கல்யம் இல்லை ! செழித்துவளர்ந்த குடும்பம் !

    சிரழிந்துவிட்டது ! கையிலே பிள்ளை ! கண்களிலே கண்ணீர் !

    ………. யார் குற்றம் விதியின் குற்றமா அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறுவளர்க்கும் வீணர்களின் குற்றமா இப்படி உணர்ச்சிப்பிளம்பாய் கலைஞரின் தீந்தமிழ் திரையில் வந்து மலர்ந்துபோய் இருந்தது. மறக்க முடியா வசனங்கள் அல்லாவா ?

    இதேபோல் மனோகரா வந்தபொழுதும் கலைஞரின் தீந்தமிழ் திரையினை நிறைத்து நின்றது. கலைஞரின் பூம்புகார் வசனங்களும் திரையில் தமிழைக் கொட்டியது எனலாம். கலைஞர் காலம் திரையில் தமிழ் ஒலித்த காலம் எனலாம்.

    கலைஞரின் மறக்கமுடியா தமிழை மனோகரா கொட்டியது.

    ” கட்டளையா இது ….. ? கரைகாண முடியாத ஆசை… மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து …. கண்ணே ..முத்தே ..தமிழ்ப்பண்ணே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி .. தந்தால் ஆனகட்டிலிலே…. சந்தனத் தொட்டிலிலெ …வீரனே ..! என் விழி நிறைந்தவனே ..! தீரர் வழிவந்தவனே….. என்றெல்லாம் யாரைச் சீராட்டிப் பாராட்டி னீர்களோ … அவனை அந்த மனோகரனை …சபிநடுவே நிறுத்தி… சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்களது தணியாத ஆசைக்கும் பெயர் கட்டளையா தந்தையே !

    ” கோமளவல்லி … கோமேதகச்சிலை ..கூவும் குயில்… குதிக்கும் மான் … என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல் புத்திக்காரியின் கொள்ளிக் கண்களை …கொடிய நாக்கை … என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு .. அதை எதிர்த்தால் உம்மையும்… உமக்குப் பக்கத் துணை வந்தால் அந்தப் பட்டளத்தையும் பிணமாக்கி விட்டு …” என்று கனல்பறக்கும் தீந்தமிழை கலைஞர் திரையில் கொட்டி நிற்பார். அதனை சிவாஜிகணேசன் உயிராக்கி தமிழ் உள்ளமெலாம் உறைய வைப்பார்.

    யார் கள்வன் என் கணவன் கள்வனா? அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர்நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி! இதுகோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை! இது கோவலன் தேவியின் சிலம்பு நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு? ( பூம்புகார் )

    கலைஞருடன் கைகோர்த்து கலையுலகில் வலம்வந்தவர் கவியரசர் கண்ணதாசன். நகரத்தாரிடமிருந்து முத்தையாவாக வந்தவர் கண்ணதாசனாய் கவி மன்னனாய் நாடறிய ஏடறிய உயர்ந்தார். அவரின் கைவண்ணத்தில் திரையில் வசனமாயும் பாடல்களாயும் தீந்தமிழ் செழித்து நின்றது 

    நான் சாதாரண குடியில் பிறந்தவன்பலமில்லாத மாடுஉழ முடியாத கலப்பைஅதிகாரம் இல்லாத பதவிஇவைகளை நாங்கள் விரும்புவதேயில்லை”.

    மக்களின் நிலையறியாதவன் நானா?, நீங்களா?. நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கி றவர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கின்றவன்.

    என் உருவம் மாறி இருக்கிறது. என் உள்ளம் மாறவில்லை.” “அப்படி என்றால் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள்.” “தவறுபணக்காரர்கள் இருப்பார்கள்ஏழைகள் இருக்க மாட்டார்கள்.” “என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டுநம்பிக்கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.

    மக்கள் திலகத்தின் நாடோடிமன்னனில் கவியரசரின் தமிழ் அருவியைப் பருகாதார் இருக்கவே முடியாது ! மக்கள் திலகம் வாழ்க்கையில் இவ்வசனங்கள் உரமாய் வரமாய் வந்தமைந்தது எனலாம்.

    மக்கள் திலகத்தின் மதுரை வீரனில் திரையில் கவியரசரின் தீந்தமிழ் பொழிகிறது கேளுங்கள் !

    தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்துமஞ்சள் அழிந்துகூந்தல் அவிழ்ந்துகுங்குமம் கலைந்துபச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!

    அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?

    வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்றுவெட்டி வீழ்த்திக் கொண்டான் கையைபொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்த தும்சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!

    மன்னிப்பு!

    வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ

    பள்ளிக்கூடமே போகாத ஒருவர் தீந்தமிழை திரையில் கொண்டுவருகிறார். கேட்டுத்தான் பாருங்களேன் !

    கலைவாணி ! கருணாகரி ! கல்விக்கரசி … சொல்லின் செல்வி ! கற்றவர் போற்றும் கலாதேவி ! வித்தை படித்தவர் வணங்கும் வேதவல்லி ! காவிய நாயகர்கள் பாராட்டும் கலை உலகில் நாயகியே ! நற் சான்றோர்க்கு அருள் புரியும் நாமகளே ! வெள்ளைத் தாமைரைப் பூவில் அமர்ந்து வீனை மீட்டிப் பண்பாடி விவேகத்தை வழங்கும் அருள்வடிவே வணக்கம் !

    திருவே ! திருவின் உருவே ! திருவை அளிக்கும் உலகிற்கு திருமகளே ! தினம் துதிக்கும் தொண்டர்க்கு திரவியத்தை அள்ளி வழங்கும் திருவருளே ! தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து…. திக்கெட்டும் செல்வச் சிறப்போடு செழிக்க வைக்கும் திருப்பெரும் வடிவே ! திருப்பாற்கடலில் தோன்றிய திவ்வியப் பொருளே … நின் திருமலரடி தொழுகின்றேன் ..வணக்கம்

    இப்படித் தீந்தமைழை திரையில் காட்டியவர் வேறு யாருமல்ல… நவராத்திரியை, திருவருட்செல்வரை, திருவிளையாடலை, குலமகள் ராதையை எமக்களித்த ஏ,பி. நாகராஜன் அவர்கள்.

    “அங்கம் புழுதிபட அறுவாளில் நெய் பூசி …பங்கப்பட இரண்டு கால் பரப்பி … சங்கதனை கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ … என் கவிதையை ஆராய்ந்து சொல்லத்தக்கவன்”

    “சங்கறுப்பது எங்கள் குலம் …சங்கரனார்க்கு கேது குலம் … சங்கை அரிந்துண்டு வாழ்வோம் …அரனே உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை ” தீந்தமிழ் சொட்டுகிறதல்லவா திரையில் !திரு விளையாடலில் வரும் இத்தமிழைப் பாடமாக்கிப் பாருங்கள் !

    “உன்னை ஒழிப்பத்ற்கென்றே உலகில் தோன்றியவன் ! வேலோடு வந்திருப்பவன் ! உன்னால் வேதனைப்படும் அமர்களை விடுவிக்கப் போகிறவன் ! வேலன் .. ! வேதற்கிற்கு சீலன் ! பார்வைக்குப் பாலன் ! பகைவர்க்குக் காலன் ! கந்தனென்பார்  கடம்பனென்பார் ! கார்த்திகேயனென்பார் ! சண்முகனென்பார் ! ஆறுமுகனென்பார் ! உன்னையும் வதைத்தபின்.. சூரனையும் வதைத்த சூரனென்பார் ! சொல்லுக்கும் பொருளுக்கும் முத்தமிழுக்கும்… தமிழ் இனிமைக்கும்… ஆயகலை அறுபத்து நான்கிற்கும்.. முன்னைப் பழமைக்கும் .. பின்னைப் புதுமைக்கும் … தலைவன் அவன் ! அவனே வேலவன் ! அவனனுப்பிய தூதுவன் வீரபாகுத் தேவன் ! கேட்கக் கேட்க தமிழ் இன்பம் பெருகுதல்லவா ?

    பாடசாலை நாட்களில் பாடமாக்கி பேச்சுப் போட்டி ஒத்திகைக்கு நாங்கள் ஒப்புவித்த தீந்தமிழ்தான் இது …. இத்தமிழை உணர்ச்சி பொங்கிடப் பேசினால் தமிழ் ஆசிரியர் தலைகால் தெரியாமல் மகிழ்ச்சியில் மிதப்பார். கேட்டுத்தான் பாருங்களேன் .

    “நீல வானிலே செந்நிறப் பிளம்பு ! அந்த வட்ட ஒளியின் பெயர் சூரியன் ! சுட்டெரிக்கும் செஞ்சுடர் அது ! அதுதான் நீ என் நெற்றியிலே இட்ட இந்த வட்டநிறமான இரத்தநிறப் பொட்டு ! பரமனுக்கு முக்கண் ! அது … தேவையில்லை .. ஒரு வீரனுக்கு.. இந்த வெற்றி வடு ஒன்றே போதும் ! வாளை ஓட்ட அவர்கள் மீது வேலைப் பாய்ச்ச ! இதனால் விளைவது என்ன வெண்ரு கேள் ! வெண் மணல் நிலமெல்லாம் … செக்கர் வானம் போல் .. செம்பவள மலைபோல் . செப்புத் தகடடித்த செப்பநிட்ட தரைபோல் … மாணிக்க கரைகட்டி மடை திறந்த நெருப்பாற்றை இடையில் ஓடவிட்ட அழகுபோல் …எதிரியின் இரத்தம் குபுகுபுவென பொங்கி யெழுந்து .. எங்கும் நிறைந்த பொருளாய் .. நம் ஏற்றமிகு செயலாய் .. களத்தில் நிறையப் போவதுதான் ..!

    “திறைவரிவட்டி. வானம் பொழிகிறதுபூமி விளைகிறதுஉனக்கேன் கொடுப்பது வட்டி எங்களோடு வயலுக்கு வந்தாயாஏற்றமிறைத்தாயாநீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயாநாற்று நட்டாயாகளை பறித்தாயாகழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் கலையம் சுமந்தாயாஅங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயாஅல்லது நீ மாமனாமச்சானாமானங்கெட்ட வனே! எதற்குக் கேட்கிறாய் திறையாரைக் கேட்கிறாய் வரிபோரடித்து நெற்குவிக்கும் மேழிநாட்டு உழ வர் கூட்டம்பரங்கியரின் உடலையும் போரடித்துதலைகளை நேர்க்கதிர்களாய் குவித்துவிடும் ! ”  சக்தி கிருஷ்ணசுவாமியின் திரையில் வந்த தீந்தமிழ் எப்படி இருக்கிறது ? ஒரு முறை நீங்களும் பேசித்தான் பாருங்களேன் !

    இடைக்காலத்தில் இடம் பெற்ற ஒரு திரைத்தீந்தமிழ்

    ஆண்களுடைய கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகித்தான் தீர வேண்டும் என விதி இருந்தால் அந்த விதியை ஒழுங்குபடுத்த வேண்டாமா? 1

    மண்புழுக்களாக இருக்கும் பெண்களை பாதிக்கக் கூடிய மனுதர்மம்மனுநீதிமனு சாஸ்திரம் இவைகளை திருத்தி எழுத வேண்டாமா?

    அன்று தன் தந்தை செய்த அதே தவறை இன்று அவருடைய மகன் செய்கிறான். இது வம்ச பரம்பரை! வாழையடி வாழை! வீண் பழிக்கு ஆளான இந்தப் பாவப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வழங்குங்கள்! வஞ்சகம் அறியாத அவள் வயிற்றில் வளரும் அந்தப் பூந்தளிரைக் காப்பாற்றிஅதன் தந்தை இதோ இந்த ராஜாதான் என்று நீதி வழங்குங்கள்!  நீதி வழங்குங்கள்! ( விதி– ஆரூர்தாஸ் )

    இலக்கிய பாங்கான வசனங்கள், இலட்சியப் பாங்கான வசனங்கள், அரசியல் பூசிய வசனங்கள், ஆன்மீ கம் தழுவிய வசனங்கள் , என்றெல்லாம் வனங்களை தீந்தமிழால் நிறைத்து திரைவாயிலாக வெளிக் கொணர்ந்தவர்கள் என்னும் வகையில் பல ஆளுமைகள் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். ஆனால் தீந்தமிழைத் திரையில் வசனமாய் தந்த காலம் சற்று தளர்வினை நாடிவிட்டதுபோல் தெரிகிறது. காரணம் காலத்தின் கோலமது ! இன்று திரையில் தமிழ் வருகிறது ! ஆனால் அது பேச்சுத்தமிழாய் வட்டாரத் தமி ழாய் வலம்வந்து அன்னியத்தையும் அரவணைத்து நிற்கிறது எனலாம்.

    வசனத்தின் வழியில் திரையில் தீந்தமிழ் தவழ்ந்ததுபோல் பாட ல்களின் வாயிலாகவும் திரையில் தமிழ் இசையுடன் கலந்து உள் ளங்களை நிறைத்தது. அது இன்னும் தொடர்கிறது என்று தான். சொல்ல வேண் டும்.

    பாபநாசம் சிவன் தொடக்கம் இக்கால பா.விஜய் வரை தீந்தமிழ் செப்பி நிற்கும் திரையிசைப் பாடல்க ளைத் தந்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் பங்களிப்பும் நல்ல தமிழை, இலக்கியத் தமிழை திரையில் இசை யின் மூலம் கொடுத்து யாவர்மனத்திலும் தமிழைப் பதியச் செய்ய வேண்டும் என்பதுதான் என்பதில் எள்ளளவும் ஐய்யம் இல்லை. திரையில் தமிழ் தந்த கவிஞர்களை அறிமுகம் செய்து அவர்களின் பங்களி ப்பைப் பற்றி எடுத்துச் சொல்லுவ தென்றால் அதற்கு பல மணி நேரங்கள், பல நாட்கள் எடுக்கும் என்பதால்  அந்தச் சமுத்திரத்தினுள் இருந்து சில முத்துக்களை பொறுக்கலாம் என்று எண்ணுகிறேன்.

    மருதகாசியின் தென்றலைத் தொட்டுப் பார்ப்போம் — இன்றும் மனதில் பதிந்து பாடினால் பரவசம் தரும் தீந்தமிழ் அல்லவா ?

    உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
    அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே

    – சத்தியமே லட்சியமாய் கொள்ளடா

    – ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை

    – மணப்பாரை மாடு கட்டி

    தஞ்சையின் மைந்தன் தஞ்சை ராமையாதாஸின் தீந்தமிழும் நெஞ்சில் நிற்கிறது

    – பிருந்தாவனமும் நந்தக்குமாரனும்

    – மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ  

    எந்த முத்தை எடுப்பது ? எந்தமுத்தைப் பார்ப்பது என்பதுதான் சிக்கலான நிலை. என்றாலும் முயல்கிறேன்.

    அச்சம் என்பது மடைமையடா ! மயக்கமா கலக்கமா ! எனத் தொடங்கியவர்

    கண்ணதாசன் என்னும் பெரிய சமுத்திரம். அந்த சமுத்திரத்தில் மூழ்கினால் வெளியில் வரவே முடியாது. அத்தனை உயர் முத்துக்களும் அங்கேதான். மூழ்கி எடுத்த முத்துக்கள் உங்களுக்கு –

    அந்தாதியாய். வாழ நினைத்தால் வாழலாம்வழியா இல்லை பூமியில்‘ எனத் தொடங்கி பலே பாண்டியா‘ படத்திற்காக கண்ணதாசன் எழுதியிருக்கும் பாடலில் இடம்பெற்றிருக்கும் பின்வரும் வரிகள் அந்தாதி நலம் பொருந்தியவை:

    பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்!

    மூன்று முடிச்சு‘ படத்தில்

    வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்

    நீரலைகள் மிதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

    நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்

    கனவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

    மலர்க்கணைகள் பாய்ந்துவந்தால் மடியிரண்டும் பஞ்சணைகள்

    பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும் தலையணைகள்

    தலையணையில் முகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்

    புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்.. என்ற முத்திரைப் பாடல் முழுக்க அந்தாதியில் அமைந்த அற்புதமான பாடல்.

    பல அணிகளைக் கவியரசர் கையாண்டிருப்பார். அவையெல்லாம் முத்துக்கள்.

    உவமை அணி :.’குடும்பத் தலைவன்‘ திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதிய அற்புதமான பாடல்:

    திருமணமாம்திருமணமாம்! தெருவெங்கும் ஊர்வலமாம்!
    ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்!…
    அவள் கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம்!
    ஒரு கூடை நிறையப் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்!

    மாலை சூடும் அந்த மணமகளின் பருவ அழகினை ஐந்து அருமையான உவமைகளை அடுக்கிக் கையாண்டு படம்பிடித்துக் காட்டுவார் கண்ணதாசன்:

    சேர நாட்டு யானைத் தந்தம்போல் இருப்பாளாம்! – நல்லசீரகச் சம்பா அரிசி போலசிரித் திருப்பாளாம்!…செம்பருத்திப் பூவைப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்!செம்புச் சிலை போல உருண்டு திரண்டிருப்பாளாம்! – நல்லசேலம் ஜில்லா மாம்பழம் போல்கனிந் திருப்பாளாம்!

    தற்குறிப்பேற்ற அணி

    தாயைக் காத்த தனயன்‘ படத்திற்காகக் கண்ணதாசன் படைத்திருக்கும் பாடலின் தொடக்க வரிகள்..

    மூடித்திறந்த இமையிரண்டும் பார் பார்!‘ என்றன!

    முந்தானை காற்றில் ஆடி வா வா!‘ என்றது!

    இமை இரண்டும் மூடித் திறப்பது இயல்பு. இது காதலனைப் பார்பார்‘ என்பது போல் இருக்கின்றதாம். இதே போல் முந்தானை காற்றில் ஆடுவது என்பதும் இயல்பாக நிகழ்வதுதான். இது வா வா‘ என்று காதலியை நோக்கி அழைப்பது போல் உள்ளது எனக் கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி.ம்நெமும்த்துக்கள்ஞ்சிரண்டின் நினைவலைகள்

    நி முத்துக்கள் குவிகின்றன…….

    மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுளவெல் லாமுறங்கும்
    கண்ணுறங்கேன் எம்மிறைவர் காதலாற் பைங்கிளியே” என்னும்
    வரிகளும்கம்பர் இயற்றிய
    நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
    தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்”
    பாடலில் பயின்று வரும் வரிகள் -திரையில்

    (படம்: மாலையிட்ட மங்கை).
    காட்டில் மரமுறங்கும் கழனியிலே நெல்லுறங்கும்
    பாட்டில் பொருளுறங்கும் பாற்கடலில் மீனுறங்கும்
    காதல் இருவருக்கும் கண்ணுறங்காது அதில்
    காதலன் பிரிந்துவிட்டால் பெண்ணுறங்காது”

    இனிவேறொரு பாடலைப் பார்ப்போம்:
    இருந்தவளைப் போனவளை என்னை அவளைப்
    பொருந்த வளைபறித்துப் போனான்–பெருந்தவளை
    பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
    மாத்தத்தன் வீதியினில் வந்து”. தனிப்பாடல்திரட்டில் காணப்படும் கம்பரின் பாடல்.

    கண்ணதாசன் புதிய பூமி என்ற திரைப்படத்தில்
    சின்னவளை முகம் சிவந்தவளை நான்
    சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு;
    என்னவளைக் காதல் சொன்னவளை
    நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு” என்ற பாடலில் வளை என்ற சொல் பலமுறை வருமாறு இயற்றியுள்ளார். னைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெலாம் கனவலைகள்

    இராமச்சந்திர கவிராயர் இயற்றிய கீழ்க்கண்ட பாடல் மிகப் புகழ்பெற்றது:

    கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
    குடிக்கத்தான்  கற்பித் தானா?
    இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
    கொடுத்துத்தான்  இரட்சித் தானா?
    அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
    நோவத்தான்  ஐயோ! எங்கும்
    பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
    புவியில்தான்  பண்ணி  னானே.”
    இந்தப் பாடலால் கவரப்பட்ட

    கவிஞர் கண்ணதாசன்
    பாவமன்னிப்பு என்ற படத்தில் ” அத்தான்என்னத்தான்,

    அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி” என்ற திரைப்படப் பாடலை இயற்றினார்.

    இனிதிருக்குறளில் பயின்றுவரும் கீழ்க்கண்ட பாடல் எவ்வாறு கவிஞர்க்கு உதவியது என்பதைப் பார்ப்போம்:

    யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்”.(குறள்:1094). இப்பாடலின் கருத்தை

    வாழ்க்கைப் படகு என்னும் திரைப்படத்தில்

    “நேற்றுவரை நீயாரோ நான்  யாரோ?
    இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ?
    காணும்வரை நீ எங்கே நான் எங்கே?
    கண்டவுடன் நீ அங்கே நான் இங்கே
    உன்னைநான் பார்க்கும் போது
    மண்ணை நீ பார்க்கின்றாயே;
    விண்ணை நான் பார்க்கும் போது
    என்னை நீ பார்க்கின்றாயே.” என்ற திரையிசைப் பாடலில் திருக்குறள் கருத்து பதியப் பட்டிருக்கும்.னவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகளமலர்க்கணைகள் பாkEய்ந்துவந்தால் மடியிரண்டும் பஞ்சணைகள்

    கேள்விகளும் பதிலுமாய் சில முத்துக்கள்

    கண்ணிலே நீர் எதற்கு?
    காலமெல்லாம் அழுவதற்கு

    நெஞ்சிலே நினைவெதெற்கு?
    வஞ்சகரை மறப்பதற்கு

    இன்பமெனும் மொழி எதற்கு?
    செல்வத்தில் மிதப்பதற்கு

    துன்பமெனும் சொல்லெதெற்கு?
    உள்ளமென்ப துள்ளவர்க்கு

    கையிலே வளைவெதெற்கு?
    காதலியை அணைப்பதற்கு

    காலிலே நடையெதெற்கு?
    காதலித்துப் பிரிவதற்கு

    பாசமென்ற சொல்லெதெற்கு?
    பார்த்திருந்து துடிப்பதற்கு

    ஆசை கொண்ட வாழ்வெதெற்கு?
    அன்றாடம் சாவதற்கு

    பூவிலே தேனெதெற்கு?
    வண்டு வந்து சுவைப்பதற்கு

    வண்டுக்குச் சிறகெதெற்கு?
    உண்ட பின்பு பறப்பதற்கு

    கொடியசைந்ததும் காற்று வந்ததா
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா
    நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
    மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா

    பாடல் வந்ததும் தாளம் வந்ததா
    தாளம் வந்ததும் பாடல் வந்ததா
    பாவம் வந்தது ராகம் வந்ததா
    ராகம் வந்ததும் பாவம் வந்ததா
    கண் திறந்ததும் காட்சி வந்ததா
    காட்சி வந்ததும் கண் திறந்ததா
    பருவம் வந்ததும் ஆசை வந்ததா
    ஆசை வந்ததும் பருவம் வந்ததா

    கவியரசர் திரையிசைத் தீந்தமிழ் தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும்.காலங்கருதி அந்த ஆழிக்குள் இருந்து மேலெழுகின்றேன்.

    கவியரசர் பாட்டா வாலி பாட்டா என்று அடையாளம் காணா வகையில் கவித்துவத்தை திரையில் தீந்தமிழால் பதித்தவர் வாலிபக் கவிஞர் வாலி. அவரின் முத்துக்குவியல்களும் அழவில. தொட்டுப்பார்த்த முத்துக்களைத தந்திருக்கிறேன் …..kaகவியரசணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும்தலையணைகள்

    அத்தைமடி மெத்தையடி ,
    ஆடி விளையாடம்மா,
    ஆடும்வரை ஆடிவிட்டு..,
    அல்லிவிழி மூடம்மா..,
    அத்தைமடி மெத்தையடி……. ,காமுகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்

    மூன்றாம்பிறையில் தொட்டில்கட்டி..,
    முல்லை மல்லிகை மெத்தையிட்டு..,
    தேன்குயில்கூட்டம் பண்பாடும்..,
    மான்குட்டிகேட்டு கண்மூடும்..,
    இந்த மான்குட்டிகேட்டு கண்மூடும் ,பு

    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான்
    மலர்ந்தேன்
    சுட்டால் பொன்
    சிவக்கும்
    சுடாமல் கண்
    சிவந்தேன்துக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்..

    பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
    இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
    சுவை அறிந்தேன்

    பால் மனம் பால் இந்த மதிப்பால்
    தந்த அழைப்பால் உடல் அணைப்பால்
    சுகம் தெரிந்தேன்

    உந்தன் பிறப்பால் உள்ள வனப்பால்
    வந்த மலைப்பால் கவி புனைந்தேன் (2)

    அன்பின் விழிப்பால் வந்த விருப்பால் (2)
    சொன்ன வியப்பால் மனம் குளிர்ந்தேன்

    விழி சிவப்பால் வாய் வெளுப்பால் (2)
    இடை இளைப்பால் நிலை புரிந்தேன்

    இந்த தவிப்பால் மன கொதிப்பால் (2)
    கண்ட களைப்பால் நடை தளர்ந்தேன்

    முத்து சிரிப்பால் முல்லை விரிப்பால் (2)
    மொழி இனிப்பால் என்னை இழந்தேன்

    இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
    இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
    தொட்ட சிலிர்ப்பால் தன்னை மறந்தேன்

    வைரமுத்து – திரையில் கால்பரப்பி இன்றும் தொடர்கிறார். இவரின் தீந்தமிழ் திரையினை வளமூட்டி , உரமூட்டி நிற்கிறது என்பதை மறுத்துவிட முடியாது.கவியரசர் வாலிக்குப் பின் திரையினைத் தமிழால் ஆளும் பேராளுமைதான் வைரமுத்து! தமிழ்த் திரைப்பாடல்களில் மிக நீளமான பாடலாக இவர் எழுதிய சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடல் கருதப்படுகிறது.

    தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக்கேட்டேன்
    நிலவில் நனையும் சோலைக் கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
    நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
    தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
    துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
    பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்

    திரைப்பாடலில் அதிகமாக புதிய சொற்களைப் புகுத்திய பெருமைக்குரியவர். பொன்மாலைஅந்திமழைதாவணி விசிறிகள்தீயின் தாகம்ஆனந்த தாகம், , அமுதகானம்பன்னீர் மேகம்ஒளிமகள்இளஞ்சிரிப்புபூக்களின் மாநாடு, , பொன் வானம், , சேலைப் பூக்கள்ஆசை நதிபூவுக்குள் பூகம்பம்இதயம் கருகும் ஒரு வாசனை,

    அடுக்குத் தொடரும் இரட்டைக் கிளவியும் பாம்புபாம்பு‘ என்பது அடுக்குத் தொடர்; ‘பாம்பு‘ எனப் பிரித்தாலும் இது பொருள் தரும். சலசல‘ என்பது இரட்டைக் கிளவி; ‘சல‘ என்று பிரித்தால் இது பொருள் தராது. இதுதான் அடுக்குத் தொடருக்கும் இரட்டைக் கிளவிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு.

    இதனைக் கவிஞர் வைரமுத்து ஜீன்ஸ்‘ படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் தமக்கே உரிய தனித்தன்மை துலங்க நயமாகப் புலப்படுத்தியுள்ளார்:

    சலசல சலசல இரட்டைக்கிளவிதகதக தகதக இரட்டைக்கிளவிஉண்டல்லோ… தமிழில் உண்டல்லோ?பிரித்து வைத்தல் நியாயம் இல்லைபிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லைஒன்றல்லோ… ரெண்டும் ஒன்றல்லோ?’

    வைரமுத்து திரையில் கொட்டிய தீந்தமிழ் இன்னும் தொடர்கிறது.அத்தமிழைப் பேசுவதாக இருந்தால் அதற்குத் தனியாக ஒரு நிகழ்ச்சியே வேண்டும்.

    திரையில் தீந்தமிழினைத் தந்த ஆளுமைகள் பலர் இருக்கிறார்கள்.இன்னும் வந்து கொண்டும் இருக்கிறார்கள். நேரம் கருதி , காலம் கருதி பலவற்றை சொல்ல முடியா நிலையில் இருக்கிறேன்.என்றாலும் சொல்லாமல் இருக்கவோ தொடாமால் இருக்கவோ முடியாதிருக்கிறது. ஆசையால் சில …..

    ஐய அணி‘ என்பது அதிசய அணியின் ஒரு வகை. தெய்வப் பெண்ணோமயிலோகனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோஎன் நெஞ்சம் மயங்குகின்றதே!‘ என்னும் பொருளைத் தரும் திருக்குறள் காமத்துப் பாலின் முதல் குறட்பாஐய அணியில் அமைந்தது.

    மாஞ்சோலைக் கிளிதானோமான்தானோ?
    வேப்பந் தோப்புக் குயிலும் நீதானோ? –
    இவள்ஆவாரம் பூதானோநடை தேர்தானோ?
    சலங்கைகள் தரும் இசை தேன்தானோ?’

    எனக் கிழக்கே போகும் ரயில்‘ படத்திற்காக கவிஞர் முத்துலிங்கம் பாடி இருக்கும் பாடல் ஐய அணிக்கு நல்ல உதாரணம்.

    முரண் அணி :ஒன்றுக்கொன்று மாறுபட்ட சொல்லும்பொருளும் வருவது முரண் அணி.

    இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம்
    இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்

    என ஒருதலை ராகம்‘ படத்திற்காக டி.ராஜேந்தர் எழுதிய பாடலில் முரண் அணி இடம் பெற்றது. தாய் குழந்தைக்காகப் பாடுவது தாலாட்டுகவிஞரோ இது குழந்தை பாடும் தாலாட்டு‘ என்கிறார். பூபாளம் காலையில் பாடப்பெறுவதுகவிஞரோ, ‘இது இரவு நேர பூபாளம்‘ என்கிறார். இதே போல இது மேற்கில் தோன்றும் உதயம்‘ என்றும், ‘நதியில்லாத ஓடம்‘ என்றும் பாடுவது அழகிய முரண்கள் ஆகும்.

    இன்னும் என் தாகம் அடங்கவில்லை. நிறைவாக கே.டி.சந்தானம் என்னும் ஆளுமையின் தீந்தமிழைக் கேட்டுப்பாருங்கள்.

    வெண்நிலவைக் குடைபிடித்து
    வீசுதென்றல் தேர் ஏறி
    மென் குயில்தான் இசை முழங்க
    மீன் வரைந்த கொடியசைய
    கண்கவரும் பேரழகி
    கனகமணிப் பொற்பாவை
    அன்ன நடை ரதியுடனே
    அழகுமகன் வில்லேந்தி
    கண் முல்லைதாமரை,மா
    தனி நீலம்அசோகமென
    வண்ணமலர்க் கணை தொடுத்தான்
    வையமெல்லாம் வாழ்கவென்றே!

    அனங்கன் அங்கஜன் அன்பன்
    வசந்தன் மன்மதன் என்றும்
    வணங்கும் என் உயிர் மன்னவா
    மண் உயிர் பிம்பம் வழங்கும்
    உன் புகழ் சொல்லவா

    கதம்பம் செண்பகம் தங்கும்
    கருங்கூந்தல் கவின் பொங்கும்
    கனிந்து ஓங்கும் கயர் கன்னியே
    அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே

    ஆடலும் பாடலும் அன்பின்
    ஊடலும் கூடலும் இன்பம்
    தேடலும் உன் செயல் அல்லவா
    நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா

    அழகு தமிழே பழகும் இசையே
    அமுத நிலையே உனது செயலால்
    அந்தரங்கச் சிந்து பாடுவார்
    சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்

    மனம் கொஞ்சும் மலர் மஞ்சம்
    அடைந்துள்ளம் குளிர் தங்கம்
    கலந்தன்பின் நலம் காணுவோம்
    குணம்கொள் பெண் அணங்கே
    உன் மனம் கொண்டே மனம் தந்தேன்
    இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்

    Share