Tag: முருகன்

  • என்ன கவி பாடினாலும்

    என்ன கவி பாடினாலும்

    மதுரை சோமு பாடிப் புகழ்பெற்ற ‘என்ன கவி பாடினாலும்’ என்ற உருக்கமான பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நீயல்லால் தெய்வம் இல்லை

    நீயல்லால் தெய்வம் இல்லை

    சீர்காழி கோவிந்தராஜன் பாடிப் பெரும்புகழ் பெற்றது, ‘நீயல்லால் தெய்வம் இல்லை’. இந்த இனிய பாடலை வைகாசி விசாகமான இன்று, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

    ஏது பிழை செய்தாலும்

    ‘ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி, தீது புரியாத தெய்வமே’ என்ற பாடல், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் இயற்றியது. இந்தப் புகழ்பெற்ற பாடலை, வைகாசி விசாகமான இன்று, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

    அறுபடை வீடுகளுள் ஒன்றான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று வந்தோம். திரும்பிய புறமெங்கும் திருமண ஜோடிகள், காதுகுத்து, முடி காணிக்கை, புது வாகனத்துக்குப் பூஜை, பக்தர்களே எடுத்து வந்து அளிக்கும் பிரசாதம் என மங்கல நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.

    வரிசையில் நிற்கும் பக்தர்களின் தாகம் தீர்க்க, தண்ணீர் கொடுத்தவண்ணம் உள்ளனர். பக்தர்கள் நடக்க எளிதாக, கம்பளம் விரித்து அதில் தண்ணீர் ஊற்றுகின்றனர். பஞ்சாமிர்தப் பிரசாதம் தாராளமாகத் தருகின்றனர்.

    விதானத்தை அலங்கரிக்கும் அறுபடை முருகன் ஓவியங்கள் தனி அழகு. கோவிலுக்கு உள்ளே குரங்குகள் இயல்பாக ஓடி, ஆடி விளையாடுகின்றன. அதில் ஒரு குரங்கு, வேங்கடாசலபதியின் தலைமேல் ஏறி அமர்ந்துவிட்டது. இந்த அழகிய திருக்கோவிலுக்குள் ஒரு சிறிய உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருத்தணியில் ஒரு நல்ல சேவை

    திருத்தணியில் ஒரு நல்ல சேவை

    திருத்தணி முருகன் கோவிலில் ஒரு நல்ல சேவை

    திருத்தணி முருகன் திருக்கோவிலில் பக்தர்களுக்குப் பஞ்சாமிர்தப் பிரசாதம் வழங்கும் காட்சி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முத்துமலை முருகன் – உலகின் மிக உயரமான முருகன் சிலை

    முத்துமலை முருகன் – உலகின் மிக உயரமான முருகன் சிலை

    உலகின் மிக உயரமான முருகன் சிலை என்ற பெருமையை, சேலம் மாவட்டம், புத்திர கவுண்டம்பாளையம், ஏத்தாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ள முத்துமலை முருகன் பெற்றுள்ளார். அழகும் அருளும் கனிவும் மிகுந்த முருகப் பெருமானின் இந்தத் திருக்கோவிலுக்குள் ஓர் உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வடிவேலவா கந்தா | நாகி நாராயணன் பாடல்

    வடிவேலவா கந்தா | நாகி நாராயணன் பாடல்

    முருகனுக்கு உகந்த பங்குனி உத்திரத் திருநாளில், ‘அலைபாயுதே கண்ணா’ மெட்டில் ‘வடிவேலவா கந்தா’ என்ற பாடலை இயற்றிப் பாடியுள்ளார் நாகி நாராயணன். திறமைக்கு வயது ஒரு தடையில்லை. 68 வயதிலும் இவர் கணீர் எனப் பாடுவதைக் கேளுங்கள். ஊக்கம் இருந்தால் உங்களால் முடியும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பால முருகனுக்குப் பால்குட அபிஷேகம்

    பால முருகனுக்குப் பால்குட அபிஷேகம்

    சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு பால முருகனுக்காக ஏராளமானோர் பால்குடம் எடுத்தனர். அபிஷேக ஆராதனை விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவிலிருந்து சில காட்சிகள் இங்கே. வேல்! வேல்! வெற்றி வேல்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நீல மயில் மீது ஞால வலம் வந்த

    நீல மயில் மீது ஞால வலம் வந்த

    ‘நீல மயில் மீது ஞால வலம் வந்த’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். அழகன் முருகன் அருளால் எல்லா வளங்களையும் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முருகா என்றதும் உருகாதா!

    முருகா என்றதும் உருகாதா!

    ‘முருகா என்றதும் உருகாதா மனம் மோகன குஞ்சரி மணவாளா’ என்ற, கொஞ்சும் தமிழில் அமைந்த திரைப்பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இந்த சூரசம்ஹார நாளில் முருகப் பெருமான் அருளைப் பெற்று மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 108 வேல் பாடல் | பிரேமா நாராயணஸ்வாமி

    108 வேல் பாடல் | பிரேமா நாராயணஸ்வாமி

    108 முறைகள் ‘வேல்’ என்ற சொல் இடம்பெறும் பாடல், இது. 78 வயதில் இதை இயற்றி, இசையமைத்து, கணீர் என்று பாடுகிறார், பிரேமா நாராயணஸ்வாமி. கேட்டு மகிழுங்கள். வேல்! வேல்! வெற்றிவேல்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவில் சுவர்களில் தேர்வு எண்கள்

    கோவில் சுவர்களில் தேர்வு எண்கள்

    10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. வழக்கமாக, தாங்கள் தேர்ச்சி பெற வேண்டும், நல்ல மதிப்பெண் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கடவுளை வேண்டுவோர் ஏராளம். இங்கே தங்கள் பதிவு எண்களைக் கோவில் சுவர்களில் மாணவர்கள் எழுதி வைத்துள்ளனர். இடம் – குன்றத்தூர் முருகன் கோவில்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழநி முருகன் தீர்த்தக்காவடிகள்

    பழநி முருகன் தீர்த்தக்காவடிகள்

    பழநிக்குச் சென்றபோது, பழநி முருகனுக்காகத் தீர்த்தக்காவடி எடுத்து, பாத யாத்திரையாக வரும் பக்தர்களை முதல் முறையாகக் கண்டேன். கலசத்தில் இருப்பதை நான் தண்ணீர் என்றபோது, தீர்த்தம்னு சொல்லணும் எனத் திருத்தினார்கள். தீர்த்தக்காவடிகளுடன் இதோ ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • போகர் ஜீவ சமாதி | பழநி

    போகர் ஜீவ சமாதி | பழநி

    போகர், நவபாஷாணத்தால் பழநி தண்டாயுதபாணி சிலையை உருவாக்கியவர். சித்த மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் போன்ற பலவற்றில் பேரறிவும் ஞானமும் கொண்டிருந்தார். சீனாவில் போகர், போயாங் வேய் (Boyang Wei) என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் போகர் 7000 உள்பட, தமிழில் 64 நூல்களை எழுதியுள்ளார். பழநி மலை உச்சியில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் வளாகத்தில் இவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது. இங்கே அண்மையில் சென்று இவரையும் இவர் வழிபட்ட மரகதலிங்கத்தையும் வழிபட்டோம். இதோ சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழநி முருகன் கோவில் – படியேறிச் சென்று தரிசித்த அனுபவம்

    பழநி முருகன் கோவில் – படியேறிச் சென்று தரிசித்த அனுபவம்

    பழநிக்குச் செல்ல வேண்டும் என்பது எங்கள் நீண்ட கால விருப்பம். இறையுதிர்காடு தொடர்கதையை விகடனில் படித்த பிறகு அந்த விருப்பம், இன்னும் அதிகரித்தது. போகர், நவபாஷாணத்தால் முருகன் சிலையை வடித்ததை, முருகனின் அற்புத சக்திகளை இந்திரா சௌந்தர்ராஜன் அழகுற அதில் எழுதியிருப்பார். இறையருளால் சில நாள்கள் முன், பழநிக்குச் சென்றோம். மலை உச்சிக்குப் படியேறிச் சென்றோம். எங்கள் மகன் ஹரி நாராயணனும் (மூன்று வயது) பிஞ்சுப் பாதங்களால் படியேறி வந்தான். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருச்செந்தூர் முருகன் கோவில்

    திருச்செந்தூர் முருகன் கோவில்

    திருச்செந்தூருக்குச் சென்றோம். மகனுக்கு மொட்டை போட்டு, முடி காணிக்கை செலுத்தினோம். கடலில் குளித்தோம். நாழிக்கிணற்றில் குளித்தோம். அருள்மிகு சுப்பிரமணியசுவாமியைத் தரிசித்தோம். கடற்கரையில் புதையல் தேடுவோரையும் கண்டோம். இதோ ஒரு சிறு தொகுப்பு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share