Tag: செய்திகள்

  • ஆழ்ந்த இரங்கல்கள்….

    பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் காலமானார்!

    1003782_724156124316453_5089466817522433708_n

    பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் அவர்கள் சென்னையில் இன்று காலமானார். ஆந்திர மாநிலம் பாலகோலில் 1969 பிப்ரவரி 28 ஆம் தேதி பிறந்த ஸ்ரீநிவாஸ், பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

    45 வயதான இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 9.30 மணிக்கு இயற்கை எய்தினார்.

    Share
  • திருக்குட நன்னீராட்டு விழா

    பசுபதிநாதர் கோயிலில் பூமாரி பொழிந்தது

    கோத்தா கினபாலு, மலேசியா

    k1
    விண்ணில் பறந்துவந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் இங்குள்ள ஸ்ரீபசுபதிநாதர் ஆலயத்தின்மீது பூமாரி பொழிந்து பக்தர்களைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின.

    பக்தர்கள் கோயில் வளாகத்தில் புடைசூழ்ந்து இந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுகளித்தனர்.

    k3

    கடந்த ஞாயிறன்று இக்கோயிலில் மூன்றாம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.
    சுமார் 100 கிலோ பூக்கள் ஹெலிகாப்டரிலிருந்து தூவிவிட, அவை பூமரியாகப் பொழிய, பக்தர்கள் அப்பூக்களைப் பிடித்து மகிழ்ச்சி அலையில் மூழ்கினர்.

    விண்ணிலிருந்து தேவர்கள் பூமாரிப் பொழிவதுபோல் அக்காட்சி பிரம்மிக்கவைத்தது.
    இதற்கு முன்னர் ஸ்ரீமுத்துக்குமார சிவாச்சரியார் அந்த ஆலயத்தின் உச்சிக் கலசத்தில் திருக்குட நன்னீராட்டி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.

    k4

    சுமார் எண்ணூறு பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஸ்ரீ பசுபதினாதரின் அபிஷேக நீரில் நனைந்து அருளைப்பெற்றனர்.

    சாபா மாநிலத்தின் சண்டாகான், தாவாவ் நகரங்களிலிருந்தும், லாபுவான் தீவு, தீபகற்ப மலேசியாவிலிருந்தும் பக்தர்கள் இந்நன்னீராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    சுமார் எட்டு லட்சம் ரிங்கிட் செலவில் புனரமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு சாபா மாநில அரசு இரண்டு லட்சம் ரிங்கிட் மான்யம் வழங்கியது. இத்தொகையை முதலமைச்சர் சார்பில் சாபா சிறப்புப்பணி அமைச்சர் டத்தோ தியோ ச்சி காங் நேரில் வழங்கினார்.

    k5

    மேலும், சாபா மாநில மஇகா தலைவர் டத்தோ வி. ஜோதி ஐம்பதினாயிரம் ரிங்கிட்டை இக்கோயிலுக்கு முதலமைச்சர் நிதியிலிருந்து கூடுதலாகப் பெற்றுத் தந்தார்.

    ஸ்ரீபசுபதிநாதர் ஆலயத்தலைவர் டத்தோ டாக்டர் க. மாதவன் மாநில அரசுக்கு கோயில் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, பிறசமய இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    Share
  • அம்பத்தூர் கம்பன் கழகதின் 63 வது கூட்ட நிகழ்வு

     unnamed (1)

    29.03.2014 அன்று அம்பத்தூர் கம்பன் கழகதின் 63 வது கூடத்தில் கூடத்தில் சேலையூர் சியோன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பில் பயிலும் மாணவன் நா.நரேன் கெளதம் “இராம காதையின் அச்சாணி இலக்குவன்” என்ற தலைப்பில் அருமையாக உரையாற்றியது மிகவும் சிறப்பாக இருந்தது. இக்கால மாணவர்கள் தெளிவாக உள்ளார்கள். இவர்களை சரியாக வழி நடத்தும் பொறுப்பை நாம் சரியாக செய்யவில்லை என்று எண்ணுகிறேன்.
    வாழ்த்துக்கள் நரேன்.

    (படத்தில் அம்பத்தூர் கம்பன் கழக பொருளார் திரு.குருமூர்த்தி நினைவு பரிசை மாணவனுக்கு வழங்குகிறார். உடன் அம்பத்தூர் கம்பன் தலைவர் பள்ளத்தூர் பழ. பழனியப்பன்,ஆலோசனை குழு உறுப்பினர் மு.ராம.சிவலிங்கம் மற்றும் செயலாளர் திரு.வி.சுப்ரமணியன்)

    by சித்திரை சிங்கர், அம்பத்தூர்
    கைபேசி:9789778442

    Share
  • சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014

     

    சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014
    ————————————————————————————————————-

    film1

    தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழா, முதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களுக்கும், பெண்கள் குறித்த பல்வேறு வகைத் திரைப்படங்களுக்கும், முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் ஊடகத்துறையை சார்ந்த பல பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன. இதற்கான பத்திரிகைச் சந்திப்பு மார்ச் 8, 2014 அன்று வாணிமஹாலில் நடைபெற்றது.
    · விளம்பர படங்கள் (Ad film)

    · குறும்படங்கள் (Short film)

    · முழு நீளத்திரைப்படம் (Featurefilm)

    · விளக்கத்திரைப்படம் ((Documentary film)

    film2

    (CWIFF) பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அனைத்து வகையான படங்களையும் வரவேற்கிறது. இவ்விழாவில் ஆண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். மாணவர்கள் அனுப்பும் திரைப்படங்களுக்கு பதிவுத் தொகையில் சிறப்பு சலுகை உண்டு. மேலும் மாணவர்கள் தரும் திரைப்படங்களுக்கு தனி முன்னுரிமை அளிக்கப்படுவதோடு அவர்கள் திரைப்படங்களை ஒரு நாள் முழுவதும் திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் நீதிபதிகள் குழுவினரால் தேர்வுசெய்யப்படும். இத்திரைப்பட விழாவுக்கான திரைப்படங்கள் பிவிஆர் திரையரங்கிலும்ஆர்.கே.வி ,ரிவ்யு அரங்கிலும் திரையிடப்படும்.

    film3

    திரைப்படங்களை பதிவு அஞ்சல் மற்றும் www.cwiff.com என்ற இணையத்தளம் மூலமாக அனுப்பலாம். படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 15, 2014.இத்திரைப்பட விழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசு தொகையும், விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

    இலங்கையை சேர்ந்த படைப்பாளிகள் மேலதிக விபரங்களுக்கு இந்த நிகழ்வின் ஆலோசனை சபை உறுப்பினராகவும் சர்வதேச ஊடக இணைப்பாளராகவும் இருக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மினுடன் தொடர்புகொள்ளலாம் (0094 771600795,vtvasmin@gmail.com)

    Ø விபரங்களுக்கு

    P.G.Udhayakumar,

    Festival Director

    Chennai Women’s International Film Festival,

    O/o Eventaa SouthIndia Productions,

    A division of M/s Dollphin Interactive Sciences pvt. ltd.,

    Ph: +91 98844 28927
    URL : www.cwiff.com,

    E-mail: info@cwiff.com

    Facebook: https://www.facebook.com/CWIFF2014

    twitter: https://twitter.com/CWIFF2014

     

    Share
  • ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு

     

    ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு
    தேதி: 23 மார்ச் 2014
    நேரம்: மாலை 5.00 – 8.30
    இடம்: விக்டோரியா ஸ்திரீட் நூலகம், தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்

    jeyanthi

    வரவேற்புரை

    முனைவர் சீதாலட்சுமி – முழுமையான ஒரு பார்வை
    இராம கண்ணபிரான் – குறுநாவல்கள் ஒரு பார்வை
    காயத்ரி – ஓர் இளம் வாசகியின் பார்வையில்
    திரு சுப்ரமணியம் நடேசன் – தேர்ந்தெடுத்த சில சிறுகதைகள் பற்றி
    மாதரசி கண்ணன் – காட்சிகளும் கதாப்பாத்திரங்களும் உரையாடல்களும்
    நடராஜன் – மொழியாடல், கதை சொல்லல்
    ஜெயசுதா சமுத்திரன் – ஒரு மாணவியின் வாசிப்பில்
    M.K.குமார் – எனது பார்வையில்
    பாரதி மூர்த்தியப்பன் – கதைகளாகும் உள்ளுர் சமூகப் பிரச்சினைகள், கருக்கள், களன்கள்

    கலந்துரையாடல்/கேள்வி பதில் அங்கம்

    ஏற்புரை/நன்றியுரை

    நிறைவு

    Share
  • சிங்களத்துக்குத் திருவாசகம்

    1a

    1 m jpg

    2m

    திருவாசகம் அருளியவர் மாணிக்கவாசகர்.

    சிங்கள மன்னன் தலைமையில்
    சிதம்பரத்துக்கு வந்த புத்த சமயத்தவருடன் சந்திப்பு.
    கருத்துப் பரிமாற்றம்.
    சைவ சமயக் கொள்கை விளக்கம்.
    புத்த சமய மன்னன்,
    அதுவும் சிங்கள மன்னன்
    சைவ சமயத்தைத் தழுவுகிறான்.

    ஆனாலும் திருவாசகம் சிங்களத்தில் இதுவரை இல்லை.
    இதோ இந்தத் தலைமுறையில் சிங்களத்தில் திருவாசகம்.
    1200 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் இருந்து சிங்களத்துக்கு.

    நேற்று 31.12.2013 முழுவதும் கல்முனையில் இருந்தேன்.
    மொழிபெயர்ப்பாளர் வடிவேலு
    பதிப்பாசிரியர் முகில்வண்ணண்
    தட்டச்சாளர் தம்பி
    யாவரும் திருவாசகம் சிங்கள மொழிபெயர்ப்புக்கு
    இறுதி வடிவம் கொடுத்தோம்.

    அச்சுக்குப் போகும் நிலை எய்தினோம்.
    விரைவில் அச்சாகும்.

    Share
  • தென்மராட்சிக் கல்வி வலையம் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய  தவத்திரு ஐயா மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த பாராட்டுகள்! இன்னும் பல நூறு ஆண்டுகள் தங்களுடைய இந்த அரிய தமிழ்ப்பணி நல்ல முறையில் தொடர்ந்து நடைபெற மனமார்ந்த வாழ்த்துகள்!!

    அன்புடன்

    பவள சங்கரி

    2014 மார்கழி முதல் நாள் (16. 12. 2013)

    மதி நிறை நன்னாள். முழுநிலா நாள் கலைவிழா. யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரியில் தென்மராட்சிக் கல்வி வலையத்தினரின் விழா.

    இலங்கையின் வடமாகாணத்தின் 12 கல்வி வலையங்களில் தென்மராட்சிக் கல்வி வலையம் ஒன்று.

    ஆசிரியர், தொடக்க, இடைநிலை, மேனிலை, உயர்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களும் முதல்வர்களும் இணைந்து நடத்திய, பெரும் எண்ணிக்கையில் கூடி மகிழ்ந்த விழா.

    தென்மராட்சியில் ஒருவரைப் பாராட்டிப் போற்றி மகிழ்வது அவர் கடமை. யாவரும் கல்வியாளர்கள். எனவே கல்வி சார்ந்த ஒருவரை, என்றும் மாணவனாக உள்ள என்னைப் பாராட்ட எண்ணினர். விழா நாளன்று யாழ்ப்பாணத்தில் இருப்பேன் என்பதை உறுதி செய்தனர். எனக்கும் தெரிவித்தனர்.

    விழாவின் நெடிய நிகழ்ச்சிகளில் நான் சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் காணொலியாக்கினேன். பார்க்க, பகிர்க. http://youtu.be/EHGsS4bSAIU

    வணக்கம் தென்னிந்திய புத்தக மற்றும் விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் 30 ஆண்டுகள் பதிப்புத் துறையில் இருந்தவர்களை 10.1.14 சென்னைப் புத்தகக் காட்சித் தொடக்கவிழாவில் விருது வழங்கிப் பாராட்டுகிறது.

    1952 தொடக்கம் என் தந்தையாரிடம் யாழ்ப்பாணத்தில் அச்சுத்தொழில், புத்தகப் பதிப்புத் தொழில் புத்தக விற்பனைத் தொழில் ஆகியவற்றில் பயிற்சி பெற்றேன்.

    1977 தொடக்கம் யாழ்ப்பாணத்திலும் 1980 தொடக்கம் சென்னையிலும் புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனைத் துறையில் ஈடுபட்டேன்.

    இன்றுவரை யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் புத்தகப் பதிப்பாளனாக, விற்பனையாளனாகத் தொடர்கிறேன்.

    1. சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தின் பதிப்பாளருக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது (கிஆபெ விசுவநாதம் கையால் பெற்றேன்) 2. சென்னைக் கம்பன் கழகம் சிறந்த பதிப்பாளருக்கான மர்ரே ராசம் விருது (நீதிபதி இஸ்மயில் கையால் பெற்றேன்) 3. மதுரை திருவள்ளுவர் சங்கம் சிறந்த பதிப்பாளருக்கான விருது (பழ. நெடுமாறன் கையால் பெற்றேன்) 4. அறவாணன் அறக்கட்டளை சிறந்த பதிப்பாளருக்கான விருது (குன்றக்குடி அடிகளார் கையால் பெற்றேன்) 5. மணிவாசகர் அறக்கட்டளை சிறந்த பதிப்பாளருக்கான விருது (சிலம்பொலி செல்லப்பனார் கையால் பெற்றேன்)

    இப்பொழுது தென்னிந்திய புத்தக மற்றும் விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் பாராட்டி விருது வழங்குகிறது.

    Share
  • தாயகம் கடந்த தமிழ் 2014

    தாயகம் கடந்த தமிழ் 2014

    கோயம்புத்தூர், இந்தியா

                                                                                              ஜனவரி 20, 21,22             

     

    தமிழ்ப் பண்பாட்டு மையம்,

    டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம்,

    டாக்டர் என். ஜி.பி. நகர், காளப்பட்டி சாலை,

    கோயம்புத்தூர் – 641 048

    தொடர்பு எண்:   0422 2369132

    மின்னஞ்சல்:     ctc@kmch.ac.in

                                                                                                                         

     

    நிகழ்ச்சி நிரல்

     

    20 ஜனவரி 2013 திங்கள்

    மாலை 6 மணி

    துவக்க விழா

     

    21 ஜனவரி 2013, செவ்வாய்

    காலை 9:30 மணி-11-30 மணி வரை

    .அமர்வு 1

    தாயகம் கடந்த தமிழ்: ஓர் அறிமுகம்

    தலைமை: முனைவர்.ரெ.கார்த்திகேசு

    பேரா. கிருஷ்ணன் மணியம்: மலேசியத் தமிழ் இலக்கியம்

    முனைவர்: சீதாலட்சுமி: சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்

    திரு.நாகரத்தினம் கிருஷ்ணா: ஐரோப்பிய அமெரிக்க தமிழ் இலக்கியம்

    முனைவர். ப. மருதநாயகம்: தாயகம் கடந்த தமிழ் ஓர் பார்வை

    காலை 11:30-11:40

    தேநீர்

    காலை 11:40- மதியம்1:00

    அமர்வு2

     

    தாயகம் பெயர்தல்: வலியும் வாழ்வும்

    தலைமை: திரு.மாலன்

    திரு.அ.முத்துலிங்கம் (கனடா)

    திரு.எஸ்.பொன்னுதுரை (ஆஸ்திரேலியா)

    டாக்டர்.சண்முக சிவா (மலேசியா)

    திரு.பாரதி கிருஷ்ண குமார் (இந்தியா)

    மதியம்1:00 முதல் 2:00

    பகல் உணவு

    மதியம்: 2:00 முதல் 3:20 வரை

    அமர்வு 3

    புதிய சிறகுகள்

    தலைமை: முனைவர்.சிற்பி பாலசுப்ரமணியம்

    முனைவர். சேரன் (கனடா)

    திருமதி. அனார். (இலங்கை)

    பேரா: பெருந்தேவி (அமெரிக்கா)

    திருமதி. இரா. மீனாட்சி (இந்தியா)

    மதியம் 3:20முதல் 3:30 வரை

    தேநீர்

    மதியம் 3:30 முதல் மாலை 5:00 வரை

    அம்ர்வு 4.

    தமிழ் கூறும் ஊடக உலகம்

    தலைமை: திரு.நாகரத்தினம் கிருஷ்ணா

    திரு.இளைய அப்துல்லா (இங்கிலாந்து)

    செல்வி. கலைமகள் (சீனம்)

    திரு. அழகிய பாண்டியன் (சிங்கப்பூர்)

    முனைவர். திருப்பூர் கிருஷ்ணன்(இந்தியா)

    மாலை: 6:00 மணி

     

    கலைநிகழ்ச்சிகள்

     

     

    ஜனவரி 22 2013 புதன்கிழமை

    காலை 9:30 முதல் 11:00 வரை

    அமர்வு 5.

    தொழில் நுட்பம் தரும் வாய்ப்புக்கள்

    தலைமை:முனைவர் சேரன்

    மின்னுலக இலக்கியம் : முனைவர். பொன்னவைக்கோ (இந்தியா)

    கைபேசியில் தமிழ்: முத்து நெடுமாறன் (மலேசியா)

    மின் அச்சு: டாக்டர் பத்ரி சேஷாத்ரி (இந்தியா)

    மின்நூல் பதிப்பு: திரு. திருமூர்த்தி ரங்கநாதன் (அமெரிக்கா)

    11:00 முதல் 11:10 வரை

    தேநீர்

    11:10 முதல் 1:00 வரை

    அமர்வு 6

    மொழிபெயர்ப்பு: வெளி உலகின் வாயில்

    தலைமை: முனைவர்.கா. செல்லப்பன்

    திரு.மா.லெனின் தங்கப்பா(இந்தியா)

    முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்(இந்தியா)

    கவிஞர் புவியரசு(இந்தியா)

    திரு. இந்திரன் (இந்தியா)

    மதியம்10:00மணி-2:00 மணி

    பகல் உணவு

    மதியம்2:00 மணி முதல்மாலை4:00 மணி வரை

    அமர்வு 7

    தாயகத்திற்கப்பால் தமிழ்க் கல்வி

    தலைமை: முனைவர் ப.க. பொன்னுசாமி

    பேரா. உல்ரிக்கே நிகோலஸ் (ஜெர்மனி)

    திருமதி. வெற்றிச் செல்வி (அமெரிக்கா)

    பேரா. வீரமணி (ஜப்பான்)

    திரு. அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா)

    டாக்டர்.ந. சுப்ரமணியம் (அமெரிக்கா)

     

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை

                                                                                                                                             நிறைவு விழா 

    தமிழ்ப் பண்பாட்டு மையம்:

    கோவை மெடிகல் சென்டர் மற்றும் மருத்துவ மையத்தின் தலைவரும், டாக்டர் என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் ‘தமிழின் வளம் தமிழர் நலம்’ என்னும் இலக்கோடு 19.03.2013 அன்று கோவையில் தொடங்கிய தொண்டு நிறுவனம் தமிழ்ப் பண்பாட்டு மையம்.

    தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நோக்கங்கள்:

    • 01. இலக்கியம் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த சந்திப்புகளை நிகழ்த்துதல்.
    • 02. தமிழ் வளம் பெருக்கும் நூல்களை வெளியிடுதல்.
    • 03. ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர் ஒருவர், சிறந்த தமிழ்ப் படைப்பாளி ஒருவர், வளரும் தலைமுறைத் தமிழார்வ அறிவியல்/ஊடகப் படைப்பாளி ஒருவர் என மூவரைத் தெரிவு செய்து அவர்களுக்கு முறையே ஒரு இலட்சம் பொற்கிழியும், விருதும் வழங்குதல்.

    தொடர்பு கொள்ள:

    தமிழ்ப் பண்பாட்டு மையம்,

    டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம்,

    டாக்டர் என். ஜி.பி. நகர், காளப்பட்டி சாலை,

    கோயம்புத்தூர் – 641 048

    தொடர்பு எண்:   0422 2369132

    மின்னஞ்சல்:     ctc@kmch.ac.in

    Share
  • Mahakavi Bharathi day celebrations at Sevalaya – tomorrow 11 AM

    Greetings from Sevalaya!

    We are pleased to inform you that we have a function to celebrate Mahakavi Bharatiyar’s birth anniversary on 11th December 2013 –Wednesday– At Sevalaya’s Mahakavi Bharatiyar Higher Secondary School, Kasuva Village, Near Tiruninravur at 11.00 AM.

    Mr. K. Chandrasekaran, M.A., .Ed., Chief Educational Officer, Tiruvallore district has kindly consented to be the Chief Guest to the occasion. As part of the programme prizes will be distributed to the children, from various Schools in Tamilnadu participated and won on the competition

    barathy 1

    barathy 2

    Share
  • ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

    பேரா. மு. ஆனந்தகிருஷ்ணன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

    œœœ

    பொருள்
    திருமண அழைப்பிதழ்கள் – அறிமுகமும் அனுபவமும்

    உரையாற்றுபவர்
    பேரா. பெருமாள்முருகன்
    (தமிழ் இணைப்பேராசிரியர், அ.அ.அரசு கலைக்கல்லூரி, நாமக்கல்)

    தேதி: 13 டிசம்பர் 2013
    நேரம்: மாலை 5.00 மணி

    இடம்:

    ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
    3ஆவது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
    தரமணி, சென்னை 600 113
    தொலைபேசி: 2254 2551/2254 2552

    (தேநீர்: மாலை 4.30 மணி)

    சொற்பொழிவு


    அச்சிடப்பட்ட அனைத்தும் சமூக ஆவணங்களாகத் திகழும் தன்மை கொண்டவை. அவற்றுள் பொதுமக்களிடையே புழங்கிவரும் திருமண அழைப்பிதழ்களுக்கு முக்கிய இடமுண்டு. சாதி அடிப்படையிலும், இடத்தின் அடிப்படையிலும், மொழியிலும் பல்வேறு வகைப்பட்டவையாக அழைப்பிதழ்கள் விளங்குகின்றன. அவற்றைச் சேகரித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவற்றிலுள்ள பல்வேறு செய்திகளை அறிமுக நிலையில் எடுத்துரைப்பதாகவும் இவ்வுரை அமையும்.

    பேரா. பெருமாள்முருகன்

    பேரா. பெருமாள்முருகன் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    œœœ

    Share
  • பாரதி விழா – 2013

     

    ஸ்டாலின் குணசேகரன்

    bhara 1

     

    bhara2

     

    bhara3

     

    bharat4

     

    bharat5

     

    bharat 6

     

    bharat 7

     

    bharat8

     

     

    Share
  • புரிந்துணர்வு ஒப்பந்தம்!

    மதுரையைச் சேர்ந்த லாப நோக்கற்ற சமூக முனைப்பு நிறுவனமான நேடிவ்லீட் பௌண்டேஷன் (Nativelead Foundation – N L F ), எஸ்.ஏ.பி லேப்ஸ் இந்தியா ( SAP Labs India) என்ற ஜெர்மனியைத் தலைமை இடமாகக் கொண்ட பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

    இது எஸ்.ஏ.பி லேப்ஸ்-இன் `நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணர்வு’ (Corporate Social Responsibility) திட்டத்தின் ஓர் அங்கமாகும். இந்த உடன்படிக்கையின் படி நேடிவ்லீட்( NLF) ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் 20 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் மத்தியில் தொழில் முனைப்பு பற்றிய பலவகையான பயிற்சிகளை மேற்கொள்ளும். இதன் நோக்கம் இந்திய கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகளை உலக சந்தைக்குக் கொண்டு வருவதாகும். புது யுக தொழில் முனைப்புகளை ஊக்குவிப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

    நேடிவ்லீட் நிறுவனம், பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் கல்வி முடித்த இளைஞர்கள் மத்தியில் புதிய தொழில்களில் முனைவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஊக்குவித்து அதற்கான பயிற்சிகள் மற்றும் தொடர்புளை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

    அதன் மூன்று ஆண்டு திட்டத்தின்படி இப்பிராந்தியத்தில் 100 கல்லூரிகளில் பயிலும் ஒரு லட்சம் மாணவர்கள் மத்தியில் தொழில் தொடங்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி 50 உலக தரம்வாய்ந்த இந்திய கண்டுபிடுப்புகள் மற்றும் தயாரிப்புகளை உலக சந்தைக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளும்.

    நிகழ்ச்சியில் பேசிய NLF நிறுவனத்தின் இயக்குனர் R சிவராஜா கூறியதாவது, இன்னும் சில வருடங்களில் இந்தியாவின் இளைஞர்களின் எண்ணிக்கை மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது மிக அதிகமாக இருக்கும் என கணக்கிடப் பட்டுள்ளது. இது நாட்டுக்கு ஒரு பெரிய சக்தியாக இருந்தாலும் இந்த இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றார்.
    .

    அதை எதிர் கொள்வதற்கான ஒரே வழி இப்போதிருக்கும் இளைஞர்கள் மத்தியில் தொழில் முனைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைத் தொழில் தேடுபவர்கள் என்ற நிலையில் இருந்து வேலை கொடுப்பவர்கள் என்ற நிலைக்குக் கொண்டு வருவதாகும் என்றார்.

    நேடிவ்லீட் நிறுவனத்தின் இத் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் எஸ்.ஏ .பி (SAP) நிறுவனம் தனது அதிநுட்ப கண்டுபிடிப்பான எஸ் .ஏ.பி ஹானா (SAP Hana technology) தொழில் நுட்பம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதைப் பயன்படுத்தி மாணவர்கள் பல சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடுப்புகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது.

    இதன்படி எஸ்.ஏ .பி (SAP ) நிறுவனத்தின் பணியாளர்கள் நேடிவ்லீட் ஒப்ந்தம் செய்திருக்கும் கல்லூரி மாணவர்களுடன் மூன்று கட்டமாக தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அவையாவது கற்பித்தல், புதிய உத்திகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் உதவுதல் மற்றும் அத்தகைய தேர்ந்த உத்திகளின் அடிப்படையில் புதிய தொழில்களைத் தொடங்க உதவுதல் ஆகியனவாகும்.

    நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.பி யின் துணை தலைவர் மாத்யு தாமஸ் கூறும் போது எஸ்.ஏ.பி ஆனது மாணவர்களைத் தொழில்முனைவோர் ஆக்குவதை அதன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் முக்கிய அங்கமாக கொண்டுள்ளது என்றும் அதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதலையும் கொடுக்க தயாராக உள்ளது என்றும் கூறினார்.

    எஸ்.ஏ.பி இன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய தொழில்களைத் தொடங்க தேவையான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் வசதியை இந்த சமூகப் பொறுப்புணர்வு திட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதே அதன் நோக்கம் ஆகும் என்றார்.

    நேடிவ்லீட் உடன் ஆன ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் நாட்டில் மாணவர்கள் தொழில்முனைவோராக தேவையான ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் கொடுத்து அவர்களுக்கும் நாட்டுக்கும் வளமான எதிர் காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என நம்புகிறோம் என்றார் .

    நிகழ்ச்சியில் எஸ்.ஏ.பி நிறுவனத்தின் ஆசிய தலைவர் – (சமூக பொறுப்புணர்வு), திருமதி.சின், குஞ்சன் பட்டேல் மற்றும் நேடிவ்லீட் நிறுவனத்தைச் சார்ந்த அஸ்வின் தேசாய், நாகராஜா பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.

    Share