Blog

  • பச்சைச் சூரியன்

    பச்சைச் சூரியன்

    2021 ஜூன் 13 அன்று மாலை சென்னையில் பலத்த காற்றுக்கு நடுவே பச்சைச் சூரியனைத் தரிசித்தேன். இந்த அரிய காட்சியைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வடதுருவக் கடற்பனிப் பரப்பளவு, முந்தைய கணிப்பை விட இரண்டு மடங்கு சுருங்கிவிட்டது

    வடதுருவக் கடற்பனிப் பரப்பளவு, முந்தைய கணிப்பை விட இரண்டு மடங்கு சுருங்கிவிட்டது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    • Arctic sea ice may be thinning twice as fast as previously thought, scientists say
    • The discovery raises concerns that parts of the region could be ice-free by 2040
    • It would cause global temperatures to rise and increase risk of extreme weather
    • Previous snow data was outdated and relied on Soviet expedition measurements

    Concerning: Sea ice in much of the Arctic may be thinning twice as fast as previously thought, scientists fear. The research vessel Polarstern is pictured drifting in Arctic sea ice

    Concerning: Sea ice in much of the Arctic may be thinning twice as fast as previously thought, scientists fear. The research vessel Polarstern is pictured drifting in Arctic sea ice

    Arctic seas: Researchers studied sea ice thickness in all seven Arctic coastal seas (pictured). In Laptev, Kara and Chukchi, waters increased by 70 per cent, 98 per cent and 110 per cent respectively, when compared with earlier calculations

    Arctic seas: Researchers studied sea ice thickness in all seven Arctic coastal seas (pictured). In Laptev, Kara and Chukchi, waters increased by 70 per cent, 98 per cent and 110 per cent respectively, when compared with earlier calculations

    Calculations: Researchers used new computer models to produce detailed snow cover estimates from 2002 to 2018 (pictured in red). These are more accurate than previous data from Soviet expeditions between 1954 and 1991 (green) and a modified version of these recordings which account for changes in sea ice throughout the year (blue)

    Calculations: Researchers used new computer models to produce detailed snow cover estimates from 2002 to 2018 (pictured in red). These are more accurate than previous data from Soviet expeditions between 1954 and 1991 (green) and a modified version of these recordings which account for changes in sea ice throughout the year (blue)

    Weakened ice sheets West Antarctica and Greenland, combined with the Atlantic Gulf stream and Amazon rainforest, could cause a 'climate domino effect'

    SEA LEVELS COULD RISE BY UP TO 4 FEET BY THE YEAR 2300 

    பூகோளச் சூடேற்றத்தால் மாறும் கடல் மட்ட உயர்ச்சி, தாழ்ச்சி நிகழ்வுகள்

    பூகோளக் காலநிலை மாற்றங்கள் புவியின்பனிதட்டுகளைத் தொடர்ந்து பலவீனப் படுத்தி, கடல்நீர் உஷ்ணத்தை உயர்த்தி, பனித்தட்டுகளும், க்டலும் ஒன்றை ஒன்று பாதித்து, உலக மாந்தருக்கு, காலநிலைச் சுழல்வீக்க விளைவை [Climate Domino Effect] உண்டாக்கியுள்ளன. இந்த புதிய காட்சிகளைப் புவித்தளக் கொந்தளிப்பு விளைவு [Earth System Dynamic] என்னும் புத்தகம் வெளியிட்டுள்ளது.

    2300 ஆண்டு காலத்தில் கடல்நீர் மட்டம் 4 அடி [1.2 மீடர்] உயர்ந்து விடும் என்று அச்சம் ஊட்டுகிறது புது வெளியீடு.

    2020 ஆகஸ்டு மாதம் ஜெர்மெனி நிபுணர், கீரீன்லாந்து 532 கிகா டன் [giga ton (1 gega ton = 1 X10^9 ton] பனிப் பளுவை இழந்துள்ளது என்று அறிவித் துள்ளார். இதுபோல் பேரளவு பனிப்பளு உருகி இழக்கப் படவில்லை என்றும் கூறியுள்ளார்.

    1. மெலிந்து போகும் வடதுருவக் கடற்பனித் தட்டுகள் காலநிலைச் சூடேற்றச் சுழல்வீக்க விளைவினை உண்டாக்கும்.
    2. ஆய்வாளர் மேற்கு அண்டார்க்டிகா, கிரீன்லாந்து, சூடான அட்லாண்டிக் வெப்ப ஓட்டப் பகுதி,, அமேசான் பெருமழைக் காடுகளை எடுத்துக்கொண்டார்.
    3. ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி, 2 டிகிரி செல்சியஸ் உஷ்ண உயர்ச்சிக்கு, மூன்று மில்லியன் கணனிப் போலிக் கணிப்புகள் [Computer Simulations] சூடேற்ற சுழல்வீக்கத்தை உறுதிப் படுத்தின.
    4. 2017 ஆண்டு முடிவு வரை, சுமார் 40% உலக ஜனத்தொகை கடற்கரை ஓரத்தில்தான் வாழ்ந்து பாதிக்கப் பட்டுளார்.

    Information:

    Melting ice sheets and rising sea temperatures could cause ‘climate domino effect,’ scientists warn | Daily Mail Online

    Global warming: Antarctica’s Pine Island glacier could COLLAPSE within 20 years, study warns | Daily Mail Online

    Share
  • போதி மரம்

    போதி மரம்

    பாஸ்கர்

    எழுபதுகளின் முடிவில் எம் ஜி ஆர் ஆட்சியில் மாணவர்களுக்குப் பதினைந்து ரூபாய் பஸ் பாஸ். இலவசமாக எங்கும் செல்லலாம். எங்களுக்குக் கொண்டாட்டம்-பிரயாணச் செலவு இல்லை. பசிக்குப் பொறை சிங்கள் டீ. எப்போதும் ஒரு நாயர் கடை எங்கேயும் உண்டு. படிப்பெல்லாம் பிடிப்பு இல்லை. வீட்டுக்காகக் கல்லூரிக்குச் சென்றோம். அரட்டை. சினிமா, பத்திரிகை சிவாஜி. இது தான் வாழ்க்கை. வாராவாரம் மாங்காடு, திருவேற்காடு. எங்கள் கும்பலின் அலட்டல் பேச்சு, பேருந்து முழுக்கக் கேட்கும். எல்லோர் பார்வையும் எங்கள் மீது. இதில் நடுவே ஆங்கில அலட்டல் வேறு.

    சிறு வயசு. என் பக்கத் துணை சந்திர மௌலி. சுருக்கமாய் மௌலி. காலை அஞ்சு மணிக்குக் கச்சேரி ஆரம்பம். இந்த பாசில் சுற்றாத ஊர் இல்லை. படிப்பறிவு குறைவாய் இருந்த எனக்குப் பள்ளியில் தர்ம பாஸ். கல்லூரியில் பஸ் பாஸ். எல்லாம் மடியில் விழுந்த ஆப்பிள். பல்லவனில் எல்லாத் திசையும் எங்களுக்கு அத்துபடி.. சில இருக்கைகளில் எங்கள் பெயரும் இருக்கும். எல்லாம் எங்கள் பால்பென் கைவண்ணம். வாழ்க்கை எல்லோரையும் ஈர்க்கவே என்று ஆணித்தரமாய் நம்பின காலம்.

    இந்த மயக்கம் அந்த வயதில் நிஜம். ஆனால் படிப்பு அதற்கு விலை என்பது எனக்குப் புரிய கொஞ்ச காலமானது. சேர்ந்து அரட்டை அடித்த கூட்டம் தனித்தனியாகப் படிக்கச் செல்ல நான் தனியானேன். மூணு வருஷம் காணாமல் போனது அன்று தான் தெரிந்தது. பெரிய வலி. நான் இன்னும் பட்டதாரி இல்லை எனப் புரிந்த பெரிய வலி. இனி காலை எழுந்து கல்லூரிக்கு வர வேண்டாம் என்பது சந்தோஷம் இல்லை. பெரிய துக்கம். புத்திசாலி இல்லையெனினும் என் காதல், அந்த கல்லூரி மேல் படர்ந்து இருந்தது.

    இந்த வலியில் இரண்டு மாதம் கழித்து பரீட்சை எழுதப் பேருந்தில் அமர்ந்தேன். டிக்கெட் டிக்கெட் என நடத்துநர் என்னைக் கேட்க, வேதனையான தொண்டையில் ஜெயின் காலேஜ் ஒன்னு என்றேன். என் வலி அவருக்குத் தெரியாது. விவரம் தெரிந்து நான் வாங்கின முதல் டிக்கெட். என்னால் இருக்கையில் கர்வமாய் அமர முடியவில்லை. மூணு வருஷப் படிப்பைத் தாண்டி அந்த பஸ் பிரயாணம் எனக்கு ஒரு போதி மரம்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(354)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(354)

    இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங்
    கழிபே ரிரையான்க ணோய்.

    – திருக்குறள் – 946 (மருந்து)

    புதுக் கவிதையில்...

    அளவறியாமல் உண்பதால்
    அடையும் இழிவினை
    அறிந்து,
    அளவோடு உண்பவனிடம்
    அளவிலா இன்பம் நிலைத்திடும்..

    அதுபோல
    அளவே இல்லாமல்
    அதிக உணவு உண்பவனிடம்
    அகலாமல் நோய் நிலைக்குமே…!

    குறும்பாவில்...

    இழிவறிந்தே அளவாய் உண்பவனிடம்
    இன்பம் என்றும் நிலைப்பதுபோல் அளவேயின்றி
    இரையுண்பவனிடம் நோய்தான் நிலைக்குமே…!

    மரபுக் கவிதையில்...

    உணவ ததிகமாய் உண்பதனின்
    உண்மை இழிவினை யறிந்தேதான்
    உணவை யளவாய் உண்பவனே
    உயர்வாய் இன்பம் பெற்றிடுவான்,
    உணர்வா யதனைப் போலத்தான்
    உரிய அளவினுக் கதிகமாகக்
    கணக்கே யின்றியே உண்பவனைக்
    கணமும் நீங்காப் பிணிகளுமே…!

    லிமரைக்கூ...

    உணவதிகம் உண்ணல் இழிவே,
    அறிந்தளவாய் உண்போனுக் கின்பம்போல் அளவிலாமல்
    உண்போனுக்குண்டு நோயால் அழிவே…!

    கிராமிய பாணியில்…

    திங்காதே திங்காதே
    தீனிய அளவுக்குமிஞ்சி
    திங்காதே திங்காதே..

    அதிகமாத் திங்கிறது அழிவுங்கிறத
    அறிஞ்சியேதான்
    அளவோட திங்கிறவனுக்கு
    இன்பம் நெலச்சிருப்பதுபோல,
    அளவில்லாமத் திங்கவுனவுட்டு
    அகலாம நோயிதான் நெலச்சிடுமே..

    அதால
    திங்காதே திங்காதே
    தீனிய அளவுக்குமிஞ்சி
    திங்காதே திங்காதே…!

    Share
  • அரசமரக் கன்றும் நவதானிய விநாயகரும்

    அரசமரக் கன்றும் நவதானிய விநாயகரும்

    பறவை எச்சத்தில் முளைத்த அரசமரக் கன்றை எடுத்துவந்து, அதனடியில் நவதானிய விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்கிறார், நாமக்கல் பாலமூர்த்தி. விநாயகருக்கு இருபுறமும் நாகர் சிலைகளுக்குப் பதிலாக, மரூள் தாவரத்தை நட்டுள்ளார். ஊரடங்கின் காரணமாக, கோவிலுக்குச் செல்ல முடியாத நிலையில், வீட்டுத் தோட்டத்திலேயே இயற்கையாக ஒரு கோவிலை எழுப்பியுள்ளார். இந்தப் புதிய முயற்சியைப் பாருங்கள், பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆண்குயில் – பெண்குயில் – காதல்

    ஆண்குயில் – பெண்குயில் – காதல்

    ஆண்குயிலையும் பெண்குயிலையும் ஒன்றாகப் பார்ப்பதே அரிது. அதிலும் அவை காதலிப்பதைப் பார்ப்பது இன்னும் அரிது. இதோ, இங்கே ஒரு பெண்குயிலை ஆண்குயில் எப்படி நெருங்குகிறது என்று பாருங்கள். இந்த நேரத்தில் ஆண்குயிலின் குரல் எப்படிக் குழைகிறது என்று கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இரஷியாவின் மகத்தான படைப்பாளி!

    இரஷியாவின் மகத்தான படைப்பாளி!

    -மேகலா இராமமூர்த்தி

    புதின எழுத்தாளர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாளர், தத்துவவாதி எனும் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட மாபெரும் படைப்பாளி, இரஷியாவைச் சேர்ந்த பியதோர் தாஸ்தயெவ்ஸ்கி. சமூக, அரசியல் ஆன்மிகத் தளங்களில் மனித உளவியலை மிக ஆழமாக ஆராய்ந்தவை அவருடைய படைப்புக்கள்.

    மருத்துவர் மிகையில் தாஸ்தயேவ்ஸ்கி – மரியா தாஸ்தயேவ்ஸ்கயா (Mikhail Dostoevsky and Maria Dostoevskaya) இணையரின் இரண்டாவது மகனாக நவம்பர் 11 1821இல் இரஷியாவிலுள்ள மாஸ்கோவில் பிறந்தார் பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி.

    குழந்தைப் பருவத்திலேயே இலக்கியத்துடனான அறிமுகம் தாஸ்தயெவ்ஸ்கிக்கு கிடைத்தது. மூன்று வயதுக் குழந்தையாக அவர் இருந்தபோதே வீரக்கதைகளையும் சாகசக் கதைகளையும் அவருக்கு வாசித்துக் காட்டிய பாட்டி அலேனா புரோலோவ்னா (Alena Frolovna), வீர சாகசக் கதைகளில் தாஸ்தெயெவ்ஸ்கிக்கு ஆர்வமேற்படக் காரணமாக இருந்திருக்கிறார். அவருக்கு நான்கு வயதானபோது அவரின் தாயார் விவிலியத்தை (Bible) வாசித்துக் காட்டி அவருக்கு எழுதவும் படிக்கவும் கற்பித்திருக்கின்றார்.

    இரஷியாவின் புகழ்வாய்ந்த படைப்பாளர்களான புஷ்கின் (Pushkin), கரம்சின் (Karamzin), டெர்சாவின் (Derzhavin) ஆகியோரின் படைப்புகள், கெதே (Goethe), ஷில்லர் (Schiller) போன்ற ஜெர்மானியப் படைப்பாளர்களின் படைப்புகள், ஹோமரின் படைப்புகள் முதலியவற்றை இளம் வயதிலேயே அறிமுகப்படுத்தித் தாஸ்தயெவ்ஸ்கியின் வாசிப்புத்தளத்தை விரிவுபடுத்தி அவருடைய சிந்தனைத் திறனையும் கற்பனை வளத்தினையும் மேம்படுத்தியிருக்கின்றனர் அவரின் பெற்றோர்.

    கல்வியில் கண்டிப்பு மிகுந்தவராகத் தாஸ்தயெவ்ஸ்கியின் தந்தை இருந்திருக்கின்றார் என்று தெரியவருகின்றது. செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கிலுள்ள இராணுவப் பொறியியல் கல்லூரியில் தாஸ்தயெவெஸ்கியும் அவருடைய சகோதரர் மிகையிலும் (Mikhail) கல்வி பயின்றுகொண்டிருந்த காலத்தில் அவர்களின் அருமை அன்னை காசநோயால் பாதிப்புற்று இறந்தார்.

    அறிவியல், கணிதம், இராணுவப் பொறியியல் போன்றவற்றில் ஈடுபாடின்மையால் அந்தக் கல்லூரிப் படிப்பு தாஸ்தயெவ்ஸ்கிக்கு விருப்பமானதாயில்லை. எனினும், அதற்காகக் கல்வியைக் கைவிட்டுவிடாது கற்றுத்தேறி பொறியாளர் எனும் தகுதியோடு அந்தக் கல்லூரியிலிருந்து வெளியில் வந்தார் தாஸ்தயெவ்ஸ்கி. தாயார் இறந்த இரண்டாண்டுகளுக்குள் வருந்தத்தக்க வகையில் அவருடைய தந்தையும் மறைந்தார்.

    ஆகஸ்டு 12, 1843இல் லெப்டினண்ட் பொறியாளராகப் பணியில் சேர்ந்து தம் சகோதரர் மிகையிலின் நண்பரான ரிசன்காம்ஃப் (Rizenkampf) என்பவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கினார் தாஸ்தயெவ்ஸ்கி.

    பிரெஞ்சு எழுத்தாளரான பால்சாக்கின் (Balzac) யூஜின் கிராண்டட் (Eugénie Grandet) எனும் புதினத்தை மொழிபெயர்த்து எழுத்துத் துறையில் அடியெடுத்து வைத்தார் தாஸ்தயெவ்ஸ்கி. அதைத்தொடர்ந்து மேலும் சில புதினங்களை அவர் மொழிபெயர்த்தார். எனினும், அம்மொழிபெயர்ப்புப் பணி அவருக்கு வெற்றியைத் தரவில்லை. போதாக்குறைக்கு அவருடைய சூதாட்டப் பழக்கங்களும், ஊதாரித்தனமான வாழ்க்கைமுறைகளும் அவரைப் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கின. இவற்றையெல்லாம் சமாளிக்க விரும்பித் தாமே புதினம் ஒன்றை எழுதும் பணியில் இறங்கினார்.

    அவ்வாறு தாஸ்தயெவ்ஸ்கி எழுதியதுதான் ஏழைமக்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஏழையினம் (Poor Folk) எனும் அவருடைய முதல் புதினம். ஒன்பது மாதங்களில் அப் புதினத்தை எழுதி, 1845ஆம் ஆண்டு மே மாதம் அவர் வெளியிட்டார். ஏழை மக்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான உறவையும் உணர்வுபூர்வமாய்ப் பேசுகின்ற அந்தப் புதினத்திற்குச் சிறந்த சமூகப் புதினம் எனும் பாராட்டை வழங்கினார் இரஷியாவின் புகழ்பெற்ற இலக்கிய விமரிசகரான பெலின்ஸ்கி (Vissarion Belinsky). இப் புதினத்திற்கு இரஷிய மக்களிடமும் நல்ல வரவேற்பு கிட்டியது.

    தம்முடைய இலக்கியப் பணிக்குத் தம் பொறியாளர் பணி இடையூறாக இருக்குமெனக் கருதிய தாஸ்தயெவ்ஸ்கி அப்பணியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர் எழுதிய இரண்டாவது புதினம் ‘இரட்டையர்’ (The Double) என்பது. அதற்குக் கிடைத்த எதிர்மறையான விமரிசனங்கள் அவர் உடல்நிலையைப் பாதித்தன; எனினும், அவர் எழுதுவதை நிறுத்தவில்லை.

    1846க்கும் 1848க்கும் இடைப்பட்ட காலத்தில் பல சிறுகதைகளை எழுதி வெளியிட்டார் தாஸ்தயெவ்ஸ்கி. திரு. புரோகார்ச்சின் (Mr. Prohartchin), குடியிருப்புமனைக் கிழத்தி (The Landlady), பலவீனமான இதயம் (A Faint Heart), வெண்ணிற இரவுகள் (White Nights) ஆகியவை அவற்றுள் சில.

    இதில் வெண்ணிற இரவுகள் என்ற சிறுகதை, ஓர் இளைஞன் தன் சொந்தக் கதையைச் சொல்லுகின்ற வகையில் அமைந்தது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் தனிமையில் வாழ்கின்ற அந்த இளைஞன் ஓரிளம்பெண்ணைச் சந்தித்துக் காதல் கொள்கின்றான்; ஆனால் அவள் அவனைக் காதலிக்கவில்லை. காரணம் அவள் தொலைந்துபோன தன்னுடைய காதலனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள்; அவனும் ஒருநாள் வந்து சேர்கின்றான்; அவர்கள் இருவரும் இறுதியில் இணைகிறார்கள்.

    தாஸ்தயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டதே 2003ஆம் ஆண்டு திரு. ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த ’இயற்கை’ என்ற தமிழ்த் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், தாஸ்தயெவ்ஸ்கி எழுதிய இந்தச் சிறுகதைகள் எவையும் எதிர்பார்த்த வரவேற்பை இரஷிய மக்களிடம் பெறவில்லை. அச்சமயத்தில் அவரைப் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து காத்தது, அவர் இணைந்திருந்த யுடோபியன் சோசியலிச பெடகாவ் வட்டமே (Utopian Socialist Betekov circle).

    அந்த வட்டம் கலைந்தபின்னர் 1846இல் கவிஞர் அலெக்சி ப்லஷேயேவ் (Aleksey Pleshcheyev) என்பவரின் தூண்டுதலினால் ’பெட்ராஷேவ்ஸ்கி’ என்ற இலக்கிய வட்டத்தில் (Petrashevsky Circle) இணைந்தார் தாஸ்தயெவ்ஸ்கி. இவ்வட்டம் இரஷியாவில் சமூகப் புரட்சிகள் நிகழவேண்டும் எனும் சிந்தனையைக் கொண்டிருந்தது.

    ஆதலால் இவ்வட்டம் குறித்து இரஷியாவின் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியான லிப்ராண்டி (Liprandi) என்பவரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    டிசம்பர் புரட்சி போலவோ, 1848இன் புரட்சிகள் போலவோ ஏதேனும் கிளம்பக்கூடும் என்று அஞ்சிய இரஷிய அரசாங்கம், தாஸ்தயெவ்ஸ்கியும் அவரது கூட்டாளிகளும் சதிகாரர்கள் என்று முத்திரை குத்தி ஏப்ரல் 23, 1849 அன்று கைது செய்தது. மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் வைக்கப்பட்டிருந்த அதிகப் பாதுகாப்பு கொண்ட பீட்டர்-பால் கோட்டையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். அவர்கள் மீதான விசாரணை நான்கு மாதங்கள் நடைபெற்றது; அதன்முடிவில் பெட்ராஷேவ்ஸ்கி வட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    ஆனால் அந்த தண்டனையானது நல்வாய்ப்பாகக் கடைசி நிமிடத்தில் ரத்துசெய்யப்பட்டுக் கைதிகள் சைபீரியாவிலுள்ள சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அங்கே நான்கு ஆண்டுகள் மிகக் கடுமையான வேலைகளுக்கு ஆட்படுத்தப்பட்டார் தாஸ்தயெவ்ஸ்கி; அக்காலக்கட்டத்தில் வலிப்பு நோயால் அவர் பெரிதும் துன்புற்றிருக்கின்றார். அவர் வாழ்நாள் முழுவதுமே அந்நோய் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி நலிவடையச் செய்தமை வருந்தத்தக்கதே.

    பிப்ரவரி 14, 1854இல் சிறையிலிருந்து விடுதலையானார் தாஸ்தயெவ்ஸ்கி. சிறைமீண்ட அவர் தமது சகோதரர்  மிகையிலிடம் பொருளாதார உதவி கோரியதோடு விகோ (Vico),ஹெகல் (Hegel), காண்ட் (Kant) போன்ற சிந்தனையாளர்களின் புத்தகங்களை அனுப்பி உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    தன் வரலாற்றையும் கலந்து அவர் எழுதிய பிணங்களின் வீடு (the house of the dead) என்ற புதினம், வ்ரெம்யா (Vremya) என்ற இதழில் 1861இல் வெளியானது. இரஷியச் சிறைகளைப் பற்றி முதலில் எழுதப்பட்ட புதினம் அதுவேயாகும். இரஷியாவின் மற்றொரு பெரிய இலக்கிய ஆளுமையான லியோ டால்ஸ்டாய் இப்புதினத்தைத் தாஸ்தயெவ்ஸ்கியின் தலைசிறந்த படைப்பு என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கின்றார்.

    கட்டாய இராணுவப்பணியும் இரஷிய அரசாங்கத்தால் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலத்தில் மேட்டுக்குடியைச் சேர்ந்த பிள்ளைகள் பலருக்குப் பாடங்கற்பிக்கும் ஆசிரியராகவும் தாஸ்தயெவ்ஸ்கி பணியாற்றியிருக்கின்றார். அப்போது இராணுவ அதிகாரி ஒருவரின் மனைவியான மரியா என்ற பெண்மீது தாஸ்தயெவ்ஸ்கிக்குக் காதல் பிறந்தது. சில ஆண்டுகளில் அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிடவே, மரியாவை மணந்துகொண்டார் தாஸ்தயெவ்ஸ்கி. எனினும் வலிப்புநோய் கொண்ட கணவரோடு மரியாவால் மகிழ்ச்சியாக வாழ இயலவில்லை.

    ஏழு ஆண்டுகளில் மரியா இறந்துவிடவே மகிழ்ச்சியற்ற அம் மணவாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.

    தம் தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் அதற்காகத் துவண்டு தம் எழுத்துப்பணிகளைக் கைவிடாத தாஸ்தயெவ்ஸ்கி, 1861இல் எழுதிய புதினம், ’நிந்திக்கப்பட்டவர்களும் அவமதிக்கப்பட்டவர்களும்’ (The Insulted and Humiliated). அதில் இரு முக்கியக் கதாபாத்திரங்களை எதிரெதிர் தன்மையும் மனநிலையும் கொண்டவர்களாக படைத்திருக்கின்றார் அவர்.

    இளவரசன் அலெக்சி ((Prince Alexey), அசட்டுத்தனங்கள் நிறைந்தவனாகவும் அதேசமயம் தெய்வீகத்தன்மை கொண்டவனாகவும் இருக்கின்றான்; அதற்கு மாறாக அவனுடைய தந்தை இளவரசர் வால்கோவ்ஸ்கி (Prince Valkovsky) அதிபுத்திசாலியாகவும் அதன் விளைவாகத் தீமையே வடிவானவராகவும் படைக்கப்பட்டிருக்கின்றார்.

    உலகப் பேரிலக்கியங்களில் சிறந்த ஒன்றாக இன்றளவும் போற்றப்படுகின்ற  குற்றமும் தண்டனையும் (Crime and Punishment) என்ற புதினத்தை 1866இல் எழுதினார் தாஸ்தயெவ்ஸ்கி. வறுமையில் வாடுகின்ற இளைஞன் ரஸ்கோல்நிகோவ் (Raskolnikov), எவ்வித நேர்மையான விதிமுறைகளையும் பின்பற்றாமல் அநியாயமான முறையில் அடகுக்கடை நடத்திவருகின்ற பெண்மணி ஒருத்தியை அவளுடைய பணத்தை அடையும் நோக்கில் கொன்றுவிடுகின்றான். அந்தப் பணத்தால் தன் வறுமை ஓடும்; வாழ்வில் இன்பம் கூடும் என்ற எண்ணத்துடனேயே அவன் கொலை செய்தான்; எனினும், அதன்பின்னர் அவன் எதிர்பார்த்த மகிழ்ச்சி அவனுக்குக் கிடைக்கவில்லை. அதற்கு நேர்எதிராக அக்கொலையானது அவன் மனநிலையை வெகுவாக பாதிக்கத் தொடங்கியது. அவன் நிம்மதியிழந்து குற்றவுணர்ச்சிக்கு ஆளானான். இறுதியில் அவனது நிலையென்ன என்பதை இந்நாவல் உணர்ச்சிவேகம் நிறைந்த அக ஓட்டங்களோடும் சுழன்றடிக்கும் சொற்றொடர்களோடும் விவரித்துச் செல்கின்றது.

    குற்றம் என்பது சார்புத்தன்மை உடையது; ஆனால் தண்டனை என்பது முழுமுற்றானது. இன்று செய்யப்பட்ட குற்றம் நாளை குற்றமில்லாததாக ஆகலாம்; அளிக்கப்பட்ட தண்டனையை நாம் ஒன்றும் செய்யமுடியாது. எனவே தண்டனை என்பது குற்றத்தை ஒருபோதும் சமன் செய்வதில்லை என்ற புதிய தரிசனத்தை இந்தப் புதினம் உருவாக்கியது.

    நீதி என்பது தண்டிக்கும் சமூக அதிகாரத்தின் கோணத்திலேயே பொதுவாக விவாதிக்கப்படுவது வழக்கம். ஆனால், தண்டனைக்குள்ளாகும் குற்றவாளியின் தரப்பிலிருந்து நீதியை இப்புதினம் அணுகியிருப்பது புதுமையே!

    தாஸ்தயெவ்ஸ்கியின் மற்றொரு சிறந்த படைப்பு அசடன் (The idiot). 1868இல் இந்தப் புதினத்தை அவர் எழுதினார். அசடனின் நாயகனாகிய பிரின்ஸ் மிஷ்கின் (Prince Myshkin), ’நிந்திக்கப்பட்டவர்களும் அவமதிக்கப்பட்டவர்களும் புதினத்தில் வருகின்ற பிரின்ஸ் அலெக்ஸியின் மற்றொரு வடிவமே.

    சுவிட்சர்லாந்தின் மருத்துவ விடுதியில் தங்கி வலிப்புநோய்க்குச் சிகிச்சை பெற்றுப் பின் இரஷியாவிற்குத் திரும்பிவந்து ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முயலும் பிரின்ஸ் மிஷ்கின் என்ற 17 வயது இளைஞனின் கதையிது. அவன், தான் சந்திக்கும் மனிதர்கள் வழியாக மானுட உறவுகளின் சிக்கலான பிணைப்பைக் கண்டுகொள்கின்றான். அந்த உக்கிரமான வேட்டை விளையாட்டில் தன்னுடைய நல்லியல்பு கெடாத ஒரு புனிதனாக அவன் கடந்துசெல்கின்றான்.

    இப்புதினத்தில் தாஸ்தயெவ்ஸ்கி தாம் மரணதண்டனைக்காகக் காத்திருந்த கடைசி நிமிடங்களை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்; சாவின் முன்னால் நிற்பவன் தனக்குக் கிடைத்துள்ள கடைசி ஐந்து நிமிடங்களை எப்படித் துளித்துளியாகப் பகிர்ந்து கொள்கிறான் என்ற விவரணை இப்புதினத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது.

    அசடனின் நாயகன் மிஷ்கினுக்கு இருக்கும் ஏசு கிறிஸ்துவின் சாயலைப்பற்றி மேனாட்டு இலக்கிய விமரிசகர்கள் நிறையவே எழுதியிருக்கின்றார்கள். சகமனிதர்களின் துயரங்களுக்கும், தன் சொந்தத் துயரங்களுக்கும் வேறுபாடு தெரியாதவன் மிஷ்கின். அந்த இயல்பே அவனை அனைத்து மானுடத் துயரங்களுக்கும் மேலானவனாக, அவற்றில் இருந்து மீட்பளிப்பவனாக ஆக்குகின்றது.

    இடியட் என்ற தலைப்பு இந்தப் புதினத்துக்கு ஏன் வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வாதப்பிரதிவாதங்கள் இன்றும் நீள்கின்றன. ’அப்பாவி’ என்பதே இப்புதின நாயகனை அடையாளப்படுத்தும் சரியான சொல் என்று ஒருசாராரும், இல்லை… வெளிப் பார்வைக்கு முட்டாள்போலத் தோன்றும் ஒருவன் உள்மனத்தில் தெய்வத்தன்மை பொருந்தியவனாயிருக்கின்றான் என்பதே இந்தத் தலைப்பின் உண்மையான பொருள் என்று இன்னொரு சாராரும் வாதிடுகின்றார்கள். தலைப்புக்கான காரணம் எதுவாயினும் தாஸ்தயெவ்ஸ்கியின் புதினங்களில் மிகவும் கலைநேர்த்தி கொண்டது என்ற பாராட்டைப் பலரிடம் பெற்றது அசடன் எனும் இந்தப் புதினமே.

    தஸ்தாயெவ்ஸ்கியின் மற்றொரு மகத்தான படைப்பு, கரமசொவ் சகோதரர்கள் (The Brothers Karamazov). மனித மனத்தின் இருண்மையைப் பொருண்மையாகக் கொண்டு விரிகின்ற நெடிய புதினமிது. ’பகுப்பாய்வு உளவியலின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட மருத்துவர் சிக்மண்டு பிராய்டால் (Sigmund Freud) ‘மிகச் சிறந்த கலைப் படைப்புக்களுள் ஒன்று’ என்று போற்றப்பட்ட புதினமிது.

    தாஸ்தயெவ்ஸ்கியைப் பொறுத்தவரை, புதினம் என்பதை நீண்ட கதையாடல் என்ற வகையில் மட்டும் கொள்ளாமல், அதனூடாகச் சமகாலச் சூழல், அடித்தட்டு மக்களின் இருண்ட வாழ்க்கை, மனித மனத்தின் கசடுகள், ஆன்ம விடுதலை, கடவுளின் இருப்பு என்று நிறைய வாதங்களைத் தம் புதினங்களில் அவர் முன்வைக்கின்றார். எனவே அவருடைய படைப்புக்கள், தர்க்கங்களும் தத்துவங்களும் அரசியல் விமரிசனங்களும் கொண்டவையாக அமைந்திருக்கின்றன. முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இணையாகத் துணைக் கதாபாத்திரங்களையும் உருவாக்கியிருப்பது அவரின் தனிச்சிறப்பு.

    இரஷியா உலகிற்களித்த இந்த மாபெரும் படைப்பாளியைப் பல பிரபலங்களும் அறிஞர்களும் போற்றியிருக்கின்றார்கள்.

    ஜெர்மனியின் சிறந்த தத்துவவாதியான பிரெட்ரிக் நீட்சே (Friedrich Nietzsche), ”நான் கற்றுக்கொள்வதற்கான விஷயங்களைக் கொண்டிருக்கும் ஒரே உளவியலாளர் தாஸ்தயெவ்ஸ்கியே” என்று புகழ்ந்துரைத்திருப்பதும், நோபல் பரிசுவென்ற நார்வே நாட்டு இலக்கியவாதியான கென்யூட் ஹாம்சன் (Knut Hamsun), ”மனித வடிவமைப்பின் சிக்கல்களை தாஸ்தயெவ்ஸ்கி அளவுக்கு ஆராய்ந்தவர் எவருமில்லை” என்று போற்றியிருப்பதும் இங்கே எண்ணத்தக்கன.

    புனைவிலக்கியத்தில் தமக்கெனத் தனிமுத்திரை பதித்த பியதோர் தாஸ்தயெவ்ஸ்கி 1881ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் நாள் தம்முடைய 59ஆவது அகவையில் காலமானார்.

    அவருடைய புகழ்பெற்ற புதினங்களான குற்றமும் தண்டனையும், அசடன், இரட்டையர் போன்றவற்றை மதுரை பாத்திமா கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா அவர்கள், சிறப்பாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கின்றார். புனைவிலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் படிக்கவேண்டிய புதினங்கள் இவை. தாஸ்தயெவ்ஸ்கியின் படைப்பாற்றலை நாமும் உணர்ந்துகொள்ள இவ்வாசிப்புத் துணைசெய்யும்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://en.wikipedia.org/wiki/Fyodor_Dostoevsky
    2. https://www.notablebiographies.com/De-Du/Dostoevsky-Fyodor.html
    3. https://www.hindutamil.in/news/literature/150622–4.html
    Share
  • மனம் எனும் மேடையில் ஆடுகின்றான்

    மனம் எனும் மேடையில் ஆடுகின்றான்

    தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றிய ‘மனம் எனும் மேடையில் ஆடுகின்றான்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சூடேறும் பூகோளம்

    சூடேறும் பூகோளம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    இந்த பூமி நமது
    இந்த வான்வெளி நமது
    இந்த நீர்வளம் நமது
    முப்பெரும் சூழ்வளத்தை
    துப்புரவாய் வைக்கும்,
    ஒப்பற்ற பொறுப்பு நமது.

    ++++++++++++++

    சூடு காலம் வருகுது ! புவிக்குக்
    கேடு காலம் வருகுது !
    நாடு, நகரம், வீடு, மக்கள்
    நாச மாக்கப் போகுது !
    புயல் எழுப்ப வருகுது !
    பூத மழை பொழியப் போகுது !
    நீரை, நிலத்தை, குளத்தை,
    பயிரை, உயிரை, வயிற்றை
    முடக்கிப் போட வருகுது !
    கடல் உஷ்ணம், நீர் மட்டம் ஏறி
    கரைநகர் மூழ்கப் போகுது !
    மெல்ல மெல்ல ஏறி வெப்பம்,
    மேலே மீறிப் போகுது !
    சூட்டு யுகப் பிரளயம்,
    வீட்டை நோக்கித் தாக்குது !
    உன்னை, என்னை, உலகின்
    கண்ணைப் பிதுக்கப் போகுது !

    ஓரிடத்தில் எரிமலை கக்கி
    உலகெலாம் பரவும்
    கரும்புகைச் சாம்பல் !
    ஓஸோன் குடையில்
    ஓட்டை விழுந்து,
    உருக்குலையும் வாயுக் கோளம் !
    துருவப் பனிமலைகள்
    உருகி
    உப்பு நீர்க் கடல் உயரும்!
    பருவ கால நிலை
    தாளம் தடுமாறிப்
    வேளை தவறி நாளை இன்றாகும்,
    கோடை நீடிக்கும்,
    குளிர் காலப் பனிமலைகள்
    வளராமல் போகும்
    துருவ முனைகளில் !
    நிலப்பகுதி நீர்மய மாகும் !
    நீர்ப்பகுதி
    நிலமாகிப் போகும் !
    உணவுப் பயிர்கள் சேத மாகும் !
    மனித நாகரிகம் நாசமடைந்து,
    புனித வாழ்வு வாசமிழந்து
    வெறிபிடித் தாடும்
    வெப்ப யுகப் பிரளயம் !

    **************

    பூகோளம் மின்வலை யுகத்தில்
    பொரி உருண்டை ஆனது !
    ஓகோ வென்றிருந்த
    உலகமின்று
    உருவம் மாறிப் போனது !
    பூகோள மஸ்லீன் போர்வை
    பூச்சரித்துக் கந்தை ஆனது !
    மூச்சடைத்து விழி பிதுக்க
    வெப்ப யுகப்போர் தொடங்கிவிட்டது !

    கோர நோய் பற்றும் பூமியைக்
    குணப்படுத்த தக்க மருத்துவம் தேவை !
    காலநிலை மாறுதலுக்குக்
    காரணங்கள் வேறு வேறு !
    கரங்கோத்துக் காப்பாற்ற
    வருவேன் எனக் கூறு கூறு !

    +++++++++++++

    தரணி எங்கும் தொழில்துறைகள்
    சூழ்வெளியில்
    கரும் புகை ஊட்டுமடா!
    கயவர் கூட்டம்
    காட்டு மரங்களில் தீ மூட்டுமடா!
    போரிலும் புகைதான்!
    ஈராக் எண்ணெய்க் கேணிகளும்
    எழுப்புதடா தீப்புகையே !
    தவறு செய்யும் மனிதர் கூட்டம்
    தப்பிக் கொண்டு போகும் !
    துப்புரவு செய்தி டாமல்
    தொழிற்சாலைகளின்
    கரிவாயு மூட்டம்
    விரிவானில் நாள் தவறாது
    அடுக்கடுக்காய்ச் சேருமடா!
    நிலவளம், நீர்வளம், கடல்வளம்,
    மனித நலம், உயிர் நலம்,
    பயிர்வளம்
    புனிதம் யாவும்
    இனிவரும் யுகத்தில்
    சிதைந்து போகுதடா!
    வெப்ப யுகப் பிரளயம்,
    வீதி முன் வந்து நிற்குதடா!

    ++++++

    எங்கெங்கு காணினும் வானில்
    இருட்புகை மூட்டமடா!
    ஈராக் எண்ணெய்க் கேணிகள்
    தீப்புகை எழுப்புதடா!
    தவறு செய்யும் மனிதர் கூட்டம்
    தப்பிடப் பார்க்குமடா!
    துப்புரவு செய்திடாமல்
    தொழிற்சாலைக்
    புகை போக்கி மூலம்
    கரிவாயு மூட்டம்
    விரிவான் நோக்கிப் போகுதடா!
    நிலவளம், நீர்வளம், கடல் வளம்,
    மனித நலம், உயிரினப் பயிர்வளம்
    புனிதம் சிதையப் போகுதடா!
    வெப்ப யுகப் பிரளயம்,
    வீட்டு முன்னே நிற்குதடா!

    ++++++++++++

    வெப்ப யுகப் பிரளயம்,
    குப்பெனவே
    உப்புக் கடல் உயர்ந்தது!
    நரக வாசல் திறந்து
    மாதிரிச் சூறாவளி,
    பூத வடிவில், பேய் மழையில்
    சூதகமாய் அரங்கேற்றும்,
    வேதனை நாடகம்!
    நியூ ஆர்லீன்ஸ்
    எழில் நகரம்
    ஒருநாள் அடித்த சூறாவளி மழையில்
    பெருநரகமானது!
    மந்தையாய் மூன்று லட்சம்
    மாந்தர்கள்
    வீடு, வாசல், ஆடை, வாகனம் விட்டு
    நாடு கடத்தப்பட்டார்!
    அந்தோ உலகில் நேர்ந்த முதல்
    விந்தையிது!

    ++++++++++

    நிலக்கரி எஞ்சின் மூச்சு நின்றது!
    மின்சார வண்டி உயிர் பெற்றது!
    நீராவி எஞ்சின்
    ஆயுள் ஓய்வெடுத்து
    டீசல்
    வாகனம் இழுத்தது!
    குறைவாக்கப்பட்டாலும்,
    தெரியாமல் தினமும்
    தொழிற்கூடம் வெளியாக்கும்
    கழிவுத் திரவங்கள் நதியில் கலக்கும்!
    எரிப்பில் விளையும்
    கரி வாயுக்களும்,
    கந்தக வாயுக்களும்,
    சூழ்வெளியில் கலந்து சூடேறும் பூகோளம்!
    புப்புசங்கள் நுகர்ந்து
    அப்பாவி மாந்தர் தீரா
    நோயில் வீழ்வார்,
    ஆயுளும் குன்றிவிடும்!

    ++++++++++++++

    பட்டப் பகலென்றும்,
    நட்டநடு நிசியென்றும்,
    பொட்டுப் பரிதிக்கு
    கட்டுவிதி யில்லை! ஆயினும்
    கால விதிக்கு அடிபணியும்!
    வெட்ட வெளியில்
    வெப்பத்தைக் கக்கிச்
    சுட்டு விடுவதும் அதுவே! கனல்
    பட்டெனத் தணிந்து,
    பார்மீது
    பனிக் குன்றைப்
    படைப்பதும் அதுவே!

    ++++++++++

    காலமும் சூழ்வளியும்
    கடல் மட்ட ஏற்றத் தணிவும்
    நீர், நிலவளத் தேய்வுகளும் சேர்ந்து,
    பயிர்கள் ஏதோ
    பசுமை மினுப்பில் தோன்றும்!
    யந்திர வாய்கள்
    புகைபிடித்து ஊதியதும்,
    பச்சை நிலங்கள் எல்லாம் வெளுத்து,
    பாலை மணலாகும்!
    காலநிலைச் சீர்பாட்டைப்
    பாழாக்கும் கேடுகள் பூமியைத்
    தாலாட்டுகின்றன!
    பால்போன்ற பனிக் குன்றுகள் உருகிக்
    கால்தடம் பதிக்கும்
    பசும்புல் தளமாகி
    ஆடு, மாடுகள் பசிக்கு மேயும்
    காடுகளாய்
    அங்கி மாற்றிக் கொண்டன!
    புனித மிழந்து புதையுது
    மனித நாகரிகம்,
    வெப்ப யுகப் பிரளயம்,
    உப்பி வந்து!

    +++++++++++

    குடுகுடுப்பைக்காரனாய்
    காலக் குயவன்,
    முடுக்கி விட்ட பம்பரக் கோளம்!
    உடுக்க டிக்கும்
    நடுக்கமுறும் நமது கோளம்!
    பல்லாயிரம் ஆண்டுக்கொருமுறை
    பரிதியைச் சுற்றி வரும்
    வட்ட வீதி நீளும்!
    முட்டை வீதி யாகும்!
    கோளத்தின் சுழலச்சு சரிந்து
    கோணம் மாறி
    மீளும் மறுபடியும்!
    பனிக் களஞ்சியம்
    துருவத்தின் ஓரத்தில் சேர்ந்து,
    பருவ காலத்தில்
    உருகி ஓடும்!
    காலக் குயவன்
    ஆடும்
    அரங்கத்தை மாற்றி,
    கரகம் ஆட வைப்பான்!
    சூட்டுக் கோளம் மீண்டும்
    மாறும்,
    பனிக்கோளாய்!

    +++++++++++++++

    பச்சை நிறத்தை ஒட்டி ஓரளவு
    மினுமினுக்கும்,
    இன்றைய மரங்களின் இலைகள்!
    ஆயினும்
    அவ்விதம் மின்னும் பசுமை தென்படுமா,
    கோலம் மாறும் போது,
    காலமும் கடல்மட்டமும்
    மனிதக்
    கைப்பிடியில் சிக்கி?
    புனித நிலத்தைப்
    புண்படுத்திப்
    பாலை மணலாய்ப் பாழாக்காதே
    மனிதா!

    +++++++++++++++++++

    தாரணி எங்கும்
    நீர், நிலம், நெருப்பு,
    வாயு, வானம் ஆகிய பஞ்ச பூதங்கள்
    ஆயுதங்களாய் மாறிக்
    கோர வடிவத்தில்
    பேரழிவு செய்யும்!
    எங்கெங்கு காணினும்
    பொங்கும் புகைமூட்டம்!
    வடதுருவப் பனிமலைகள் உருகி,
    கடல் மட்டம் ஏறும்!
    பருவக் காலநிலை மாறிப்
    பெரும்புயல் அடிக்கும், பேய்மழை இடிக்கும்,
    நிலப்பகுதி நீர்மயமாகி மக்கள்
    புலப்பெயர்ச்சி செய்ய நேரும்!
    மனித நலம், உயிரினம், பயிர்வளப்
    புனிதம் சிதைக்கும்
    சூட்டு யுகப் பிரளயம்,
    வீட்டு முன் வந்து நிற்குதடா!

    +++++++++++

    விரைவாய்க் கடல்மட்ட உயரம்
    ஏறும் போக்கைத்
    தெரிவிக்கும் பூகோளத் துணைக்கோள்கள் !
    பத்தாயிரம் அடிக்குக்
    கீழே உள்ள
    சுத்தக் கடல்நீர் சூடாகிப் போகும் !
    பனிக்குன்றும்,
    பனிச்சிகரமும் ஒரு காலத்தில்
    பனி சுமந்த
    பழங்கதை சொல்லா !
    நில வறட்சி, நீர் வறட்சி நெடுங்காலம்
    நீடித்துப்
    பயிர்வளர்ச்சி சிறுத்துவிடும் !
    வேகமாகத்
    தண்ணீர்ப் பூமி
    தாகமாய்ப் பிச்சை எடுக்கும்
    கண்ணீரோடு !

    ++++++++++++++

    சூட்டு யுகப் பிரளயம் !
    காட்டுத் தீ போல் பரவுது !
    ராக்கெட் மீது வருகுது !
    வானைத் தொடும் பனிமலைகள்
    கூனிக் குறுகிப் போயின !
    யுக யுகமாய் வழக்கமான
    இயற்கை அன்னையின்
    சூழ்வெளிச் சுற்றியக்கம் யாவும்
    சுதி மாறிப் போயின !
    பழைய பனிச்சிகரம் தேய்ந்து
    நழுவி அவ்விடத்தில்
    புதுப் பனிமலை வளரவில்லை !
    பருவ காலக் கோலங்கள்
    வயது வரும் முன்பே
    நடமாடி
    தடம் மாறிப் போயின !
    மனித நாகரிகம் மங்கிப்போய்
    புனித வாழ்வைப் புழுதி யாக்க
    துரித மாக வருகுது !
    பூத வடிவில்
    பாதகம் செய்யப் போகுது
    வெப்ப யுகப் பிரளயம் !

    ++++++++++++++

    தாரணி சூடேறித் தணல் சட்டியாகக்
    காரணியில்லை
    சூரியக் கதிர்வீச்சு மட்டும் !
    கடந்த இருபது ஆண்டுகளாய்
    வெப்ப யுகப் பிரளயம்
    காசினியில் அரங்கேற
    விஞ்ஞானம் கூறும் விந்தை
    கண்ணாடி மாளிகை
    விளைவு !
    பனிச்சிகரம் பரட்டைத் தலையாய்க்
    கரும் பாறையாக
    ஜீவ நதிகளில்
    நீரோட்டம் தளரும் !
    உயிர்வளப்
    பயிரினச் செழிப்புகள் சிதைந்து
    புலம்பெயரும் பறவை இனம்
    தளமாறிப் போகும் !
    வரலாறு
    தடமாறிப் போகும் !

    ++++++++++++

    மனிதர் படைக்கும்
    நச்சு வாயுக்கள் சேர்ந்து
    ஓஸோன் துளைகள்
    உண்டாகும் !
    மென்மையில் திண்மையாகும்
    வாயுக் கோளத்தின் உள்ளே மிதக்குது
    வண்ண நீர்க்கோளம் !
    தூய சூழ்வெளியில்
    பூமியின்
    ஆயுள் நீடிக்கவேண்டும் !
    ஓஸோன்
    ஓட்டைகள் ஊடே
    புற ஊதாக் கதிர்கள் நுழைந்து
    சூட்டு யுகப் புரட்சி
    நாடு நகரங்களில்
    நர்த்தனம் ஆடும் !
    நீரின்றி
    நித்திரையின்றி
    நிம்மதியின்றி
    நீண்ட காலம் தவிப்பர்
    நில மாந்தர் !

    +++++++++++++++

    நோய் பீடித்துள்ளது பூகோளத்தை !
    குணமாக்க மருத்துவம் தேவை !
    காலநிலை மாறுதலுக்குக்
    காரணங்கள் பல்வேறு !
    கரங் கோத்துக் காப்பாற்ற
    வரவேண்டும் பல்லறிஞர் !
    சிந்தனையாளர் பங்கெடுப்பும்,
    எரிசக்தி நிபுணர் ஒத்துழைப்பும்,
    செல்வந்தர் நிதி அளிப்பும்,
    புவிமாந்தர் கூட்டுழைப்பும்
    அவசியம் தேவை !

    ஜெஃப்ரி குளூகர்,
    [Jeffrey Kluger, Senior Writer Time Magazine]

    Share
  • எல்லா ஆன்மிகவாதிகளும் நல்லவர் அல்லர்

    எல்லா ஆன்மிகவாதிகளும் நல்லவர் அல்லர்

    ஜோதிர்லதா கிரிஜா

    ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்கிற நிலையில் நம்மில் பெரும்பாலோர் இருந்து வருகிறோம். மனத்தில் அமைதி இல்லை. மகிழ்ச்சியில்லை. திருப்தி என்பதோ இல்லவே இல்லை. நமக்குக் கீழே உள்ள வசதித்குறைவானவர்களையும், அங்கவீனர்களையும் பார்த்து நாம் மன நிறைவு அடையவேண்டும் எனும் ஞானம் நம்மிடம் கொஞ்சமும் இல்லை. மனிதர்களில் பெரும்பாலோர் நிம்மதியற்று அல்லாடுவதற்கு இந்தத் திருப்தியின்மையே அடிப்படையாகும்.

    நம்மில் அநேகர் கடவுள் நம்பிக்கையுடையவர்களே.  கடவுள் என்பதாய் ஒரு மாபெரும் சக்தியாளர் உள்ளார் என்பதே அந்த நம்பிக்கையாக இருந்த போதிலும், அவர் நமக்கு நல்லது செய்வார் எனும் நம்பிக்கை மட்டும் நமக்கு இருப்பதில்லை. தோல்விகளைக்கண்டு துவண்டு போவதும், அதையே நினைத்துக்கொண்டு இரவில் உறங்காமல் இருப்பதும் நம் இயல்பாகிவிட்டது.  ‘நான் யாருக்கும் கெடுதலே செய்ததில்லையே? அப்படி இருந்தும் நான் ஏன் இப்படி ஏமாற்றங்களுக்கும் நிம்மதியின்மைக்கும் ஆட்படுகிறேன்?’ என்று புலம்பாதவர்கள் உண்டா?

    அன்னீ பெசன்ட் அம்மையாரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அயர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து நம் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அரும் தொண்டும் பங்கும் ஆற்றியவர். ஆனால் அவர் இந்தியாவுக்கு வந்தது எதற்காக என்பது பலர்க்குத் தெரியாமலிருக்கக் கூடும். அவர் நம் நாட்டுக்கு வந்தது எதற்காக என்பது ஒரு சுவையான காரணத்தின்பாற் பட்டது. அவரது சொந்த வாழ்க்கைக்கும் அதற்கும் பெரும் தொடர்பு உண்டு.  அவர் வந்தது ஆன்மிகத் தேடலின் பொருட்டேயாகும்.

    அவருடைய குழந்தை ஒன்று சொல்லொணாத வலியை அனுபவித்து இறந்து போனபோது ஏற்கெனவே மாறுபட்ட கருத்துக்கொண்டிருந்த அவருக்குக் கடவுள் நம்பிக்கை அறவே போயிற்று என்று சொல்லப்படுகிறது.  ‘ஒரு பாவமும் அறியாத இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சு ஏன இவ்வளவு சிரமப்பட்டுச் சாகவேண்டும்?’ எனும் கேள்வி அவருள் எழுந்து அவரை வருத்தியது. இது போன்ற கேள்விகளுக்கு இந்தியாவின் பண்டைய நூல்களில்தான் விடை கிடைக்கும் என்பதாய்க் கேள்விப்பட்டு அவர் இந்தியாவுக்கு வந்தார்.

    இந்துமத நூல்களைப் புரிந்துகொள்ளுவதற்காக சம்ஸ்கிருதம் கற்றார். பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அளவுக்கு அவர் அந்த மொழியறிவைப் பெற்றார்! ‘கர்ம வினை’ என்பதாய் ஒன்று உள்ளது என்னும் அசைக்க முடியாத முடிவுக்கு வந்தார். மனிதன் திரும்பத்  திரும்பப் பிறக்கிறான் என்னும் நம்பிக்கையும் கொண்டார். அவ்வாறு இல்லையெனில், இந்தப் பிறவியில் எந்தப் பாவமும் புரியாத ஒருவர் துன்பப்படுவதற்குக் காரணமே இல்லை என்றும் நம்பினார்.

    தியோசாஃபிகல் சொசைட்டி எனப்படும் பிரும்ம ஞான சபையின்  உறுப்பினராகிப் பின்னர் அதன் தலைவியாகவும் பதவி ஏற்றார். இந்திய வேதாந்தம் பற்றி ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தார். இந்தக் கட்டுரையில் அவரை நினைவு கூர்ந்தமைக்குக் காரணம் அவர் தேடி யடைந்த ஞானம் நம்மில் பலர்க்கு இல்லாமற் போனதால்தான், நம் துன்பங்களுக்கெல்லாம் விடிவு ஏற்படும் என்று நம்பி ஆன்மிகவாதிகளின் ஆசிரமங்களுக்குப் போய்வருகிறோம் என்று சொல்லத்தான். இப்படிப் போவதில் எந்தத் தவறும் கிடையாது. அதது அவரார் விருப்பம், நம்பிக்கை ஆகியவற்றைப் பொறுத்த விஷயம்தான். இதில் மற்றவர் தலையீட்டுக்கோ கேலிக்கோ சிறிதும் இடம்  கிடையாதுதான்.

    ஆனால் நாம் தேடிப்போகும்   ஆன்மிகவாதிகள் உண்மையிலேயே மக்களுக்கு நல்லதைச் சொல்லவும் செய்யவும் தலைப்படும்  ஆன்மிகவாதிகள்தானா, இல்லாவிட்டால்   பணம் பண்ணும் வெறும் வியாபாரிகளா என்பதை நாம் விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இவர்களில் பலர் “பரிகாரம்” என்பதன் பெயரால் தங்களை நாடி வருபவர்களிடமிருந்து பணம், பொருள், நகைகள் போன்றவற்றைத் தந்திரமாய்ப் பறித்துக்கொள்ளுகிறார்கள். சிலர் இவற்றோடு தலைமறைவாகி விடுவதும் உண்டு.

    பரிகாரம் என்பது பச்சைப் பொய் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாவங்களுக்குரிய தண்டனையிலிருந்து எவராலும் தப்ப முடியாது. ஆன்மிகவாதிகளுக்குப் பெருந்தொகையைக் கொடுத்து  அவர்கள் மேற்கொள்ளப்போவதாய்ச் சொல்லும் பரிகாரங்களை நாம் செய்வது நாம் நம்பும் கடவுளையே ஏமாற்றப் பார்க்கும் அசட்டுத்தனமாகும். அவர் ஒன்றும் அப்படி யெல்லாம் ஏமாந்துவிடமாட்டார்.  நாம்தான் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளுகிறோம். உண்மையான பரிகாரம் என்பது வெறும் சடங்குகளிலோ, பூஜைகளிலோ இல்லை. ‘ போன பிறவியில் என்ன பாவங்கள் செய்தேனோ, இந்தப் பிறவியில் துன்பப்படுகிறேன். இனி எந்தத் தப்பையும் செய்யாதிருக்க அருள்வாய், ஆண்டவனே’ என்று வேண்டிக்கொண்டு நல்லவராக மாறுவதே உண்மையான பரிகாரமாகும். இந்த உண்மையான பரிகாரத்தாலும் கூட, தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று நாம் மனப்பால் குடிக்கக்கூடாது! இந்தப் பரிகாரத்தால், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுவதற்கும் அவற்றால் அதிகம் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கும் தேவையான மன உறுதி மட்டுமே கிடைக்கும். அவ்வளவுதான்!

    அனைத்துலக அளவில் புகழ் பெற்ற ஓர் ஆன்மிகவாதி  அளவிடற்கரிய ஆன்மிக சக்திகளைப் பெற்றவர். ஆனால் இவர் நம்பத் தகுந்தவரல்லர். தமிழகத்தில் ஒரு பெண்ணுக்கு அவள் பெற்றோர் திருமண ஏற்பாட்டைச்  செய்து அது சார்ந்த உறுதிவிழாவையும் முடித்துவிட்டிருந்த நிலையில், அந்தப் பெண் இந்தச் சாமியாரின் கூட்டம் ஒன்றுக்குச் சென்றாள். மயக்கும் விழிகளைக் கொண்ட அந்த “மெஸ்மிரிச” சாமியாரின் காந்தப் பார்வை அடிக்கடி அவள் மீது படிந்தது.  ஆன்மிக ரீதியில் மயங்கிப்போன அந்தப் பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்து அவருடைய குழுவில் இணைந்துவிட்டாள். பெற்றோரால் தடுக்க முடியவில்லை. அவர்கள் சாமியாரிடம் சென்றார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்டிடுந்ததை அவருக்குச் சொன்னார்கள். ஆனால், அவரோ, “அது அவளே செய்த தீர்மானம். அவள் சம்மதித்தால் அழைத்துக்கொண்டு செல்லுங்கள். நான் குறுக்கே நிற்கவில்லை!” என்று கையை விரித்துவிட்டார். அந்தப் பெற்றோரின் உள்ளங்கள் என்ன பாடு பட்டிருக்கும்! (இது சில ஆண்டுகளுக்கு முன் கேள்விப்பட்ட நிகழ்வு.)

    தமது யோகக் குழுவில் உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாதுஎன்று விதித்துள்ள இவர் தம் மகளுக்கு மணமுடித்துவைத்துள்ளாராம். இது எப்படி இருக்கிறது!  இவரைப்பற்றிச் சில பெற்றோர்கள் காவல்துறையில் முறையிட்டார்கள். ஆனால் காவல் துறை அதிகாரிகள் அந்த இளைஞர்களை விசாரணை செய்த போது இவரும் அவர்களுடனேயே இருந்தாராம்! இது ஒரு விசாரணையா!

    இவர் மணமான பெண்களையும் விட்டுவைப்பதில்லை. அவர்களில் சிலரும் குடும்பத்தைக் கவனிக்காமல் ஆசிரம வேலைகளுக்கு வருகிறார்களாம். ஒரு பெண்மணி நாள்தோறும் தன் இரண்டு வயதுக் குழந்தையை உறவுக்காரப் பெண்ணிடம் கொண்டுவந்து விட்டுவிட்டு அவரது ஆசிரமத்துக்குப் போய்ச் சேவை செய்துவருகிறாளாம். அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நேர்ந்த ஒரு பெண் என்னிடம் புலம்பியுள்ளார்! இளைஞர்களை இப்படி மூளைச்சலவை செய்து வசப்படுத்துபவர்கள் மேலும் சிலர் உள்ளார்களாம். இவர்களின் பெற்றோர்கள்  மனம் என்ன பாடு படும்!

    அடுத்தாற்போல், புட்டபர்த்தி பாபா என்ன சொல்லியுள்ளார்?  ‘முதலில் உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள். உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யுங்கள். அப்படிச் செய்யாத எவரும் இங்கே வரவேண்டாம். அவர்களுக்குக் கடவுளின் அருள் ஒருபோதும் கிடைக்காது’ என்று அறிவித்துள்ளார்.

    பணம் பறிக்கிற ஆன்மிகவாதிகள் அந்தப் பணத்தையெல்லாம் பொது நன்மைகளுக்காகச் செலவு செய்தாலும் ஒழிந்து போகிறது எனலாம். அப்படிச் செய்பவர்கள் ஒரு சிலரே. அமரர் புட்டபர்த்தி சத்திய சாய் பாபா, அமரர் மகா பெரியவர்,  சில சங்கர மடங்கள், ராமகிருஷ்ண மடங்கள், மாதா  அமிர்தானந்த மயி, சிவசங்கர் பாபா போன்ற சிலர் மட்டுமே விதிவிலக்குகளாவர்.

    எது எப்படி இருந்தாலும் ஆழ்ந்து சிந்தித்தால், தவறு நம்முடையதுதான் என்பதை உணரலாம். ஆண்டவனுக்கும் நமக்குமிடையே இடைத்தரகர்கள் எதற்கு? பணம் பிடுங்காத நல்ல ஆன்மிகவாதிகளைத் தேர்ந்தெடுத்தே நாம் செல்ல வேண்டும். எல்லாரையும் நம்பிவிடக் கூடாது. அதிலும், முக்கியமாய், பரிகாரம், பூஜை என்றெல்லாம் கதைவிட்டுப் பணம் பிடுங்குபவர்களிடம் போகவே கூடாது. பணம் செலவிட்டுப் பாவங்களைப் போக்கிக்கொள்ளவோ, தண்டனையிலிருந்து தப்பவோ முடியாது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

    கடவுளின் கணக்குப் பேரேட்டில் கழித்தலோ கூட்டலோ கிடையாது. ‘நான் மூன்று கொலைகள் செய்தவன். ஆனால், ஒரு சமயம் நீரில்  மூழ்கவிருந்த ஐந்து பேரைக் காப்பாற்றியுள்ளேன். எனவே ஐந்திலிருந்து மூன்றைக் கழித்துவிட்டு, நான் இரண்டு உயிர்களைக் காப்ப்பாற்றியதாய்க் கணக்குப் போடும் கடவுளே!’ என்று ஒருவன் கடவுளிடம் பேரம் பேச முடியாது.

    மூன்று கொலைகள் செய்ததற்குத் தண்டனை கிடைக்கும்; ஐந்து உயிர்களைக் காப்பாற்றியதற்கு வெகுமதியும் கிடைக்கும். அதுதான் கடவுளின் கணக்கு! இந்த எளிய கணக்கை நாம் புரிந்துகொண்டால் கோவில்களுக்குப் போவதோடும், வீட்டிலிருந்தவாறு பக்தியும் தியானமும் மட்டுமே செய்வதோடும் நிறுத்திக்கொள்ளுவோம். நம்பகமான ஆன்மிக வாதிகளிடம் மட்டுமே போவோம்.  இல்லையா?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 70

    பழகத் தெரிய வேணும் – 70

    நிர்மலா ராகவன்

    தேடிப் போகவேண்டிய செல்வம்

    அள்ள அள்ளக் குறையாதது அறிவு மட்டுமே.

    இது புரியாத சிலர், `எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிக்கொடுத்தால், பிறரும் புத்திசாலி ஆகிவிடுவார்களே! அப்புறம் என்னை யார் மதிப்பார்கள்?’ என்று கருமித்தனமாக யோசித்து, அதன்படி நடப்பார்கள்.

    அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால், தெளிந்த மனத்தையும் அன்பையும் வளர்க்காத அறிவால் யாருக்கு என்ன பயன்?

    பிறரது மதிப்புதான் கிடைக்குமா?

    தமிழில் கல்வி பயின்று, பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படித்த மாதுரி, “நான் இப்போல்லாம் தமிழிலே எதுவும் படிக்கிறதில்லே. விட்டாச்சு!” என்று பெருமை பேசுவாள்.

    தாய்மொழியான தமிழால் அவள் பெற்ற அறிவு அவளுக்கோ, பிறருக்கோ பயன்படவில்லை. அந்த அறிவைப் பெருக்கிக்கொள்ள அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    தான் அறிந்தவற்றை தன் சொந்த வாழ்க்கைக்கும் பிறருக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று யோசித்து, பிறரையும் சிந்திக்க வைப்பவரே அறிவாளி.

    அறிவாளி அதிகமாகப் பேசமாட்டார். ஒருவர் தானே பேசிக்கொண்டிருந்தால், பிறரது கருத்தை அறியமுடியாதே! பணிவுடன் பிறர் சொல்வதைக் கேட்பதாலும் அறிவைப் பெருக்கமுடியும்.

    அவசியம் என்று வரும்போது, சுருக்கமாகச் சொல்வார்.

    Any fool can know. The point is to understand (ஐன்ஸ்டீன்)

    நிறையப் படித்தும், மனப்பாடம் செய்தும், பற்பல விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பவர் அறிவாளி என்பதில்லை. தாம் அறிந்ததை – பிறர் கேளாமலேயே – சொல்லி, தமது விரிவான அறிவைப் பறைசாற்றிக் கொள்கிறவர் இவர்.

    பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தையைக் கேட்டுப்பாருங்கள், “இன்று என்ன படித்தாய்?” என்று.

    “எல்லாம்!” என்று கர்வத்துடன் பதில் வரும்.

    ஆனால், வளர்ந்தபின்னரும், “எனக்கு எல்லாம் தெரியும்!” என்று முழங்குபவன் அறிவிலி. அவ்வாறு நம்புவதால், மேன்மேலும் அறிவைப் பெருக்கிக்கொள்ளும் ஆர்வம் அவனுக்கு இருப்பதில்லை.

    பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பதால் அறிவு பெருகிவிடாது. அதை நாம்தான் தேடிப் போகவேண்டும். காலம் முழுவதும் தேடிக்கொண்டிருந்தாலும். எல்லாவற்றையும் அறியமுடியாது.

    ஒரு துணுக்கு: உனக்குத் தெரிந்ததைப் பற்றி எழுது. நிறைய ஓய்வு நேரம் கிடைக்கும்.

    அதாவது, ஒருவனுக்குத் தெரிந்ததைவிட, தெரியாதவைதான் அதிகம்.

    தனக்கு எவ்வளவு தெரியாது என்று தெரிந்து வைத்திருப்பவனைத்தான் அறிவாளி என்கிறோம்.

    அறிவைப் பெருக்கவேண்டுமா?

    எதையும் விரைவாகத் தெரிந்துகொள்ள ஒரே வழிதான். கேள்விகள் கேட்கவேண்டும்.

    குழந்தைகள் மூன்று வயதிலிருந்தே எல்லாவற்றையும் புரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவர்களது அறிவைப் பெருக்குவது வளர்ப்பவர்கள் கையில்தான் இருக்கிறது.

    `புத்திசாலி!’ என்று பிறரது பாராட்டைப் பெறும் குழந்தைகளை நிறைய கேள்விகள் கேட்கப் பழக்கியிருப்பார்கள் பெற்றோர்.

    `ஏன்? ஏம்மா? சொல்லு!’ இரண்டு வயதில் நான் என் குழந்தைகளுக்குப் போதித்த மந்திரம்.

    எதைப் பார்த்தாலும், அந்த வயதிலேயே என்னை அப்படிக் கேட்பார்கள். வயதாக ஆக, கேள்விகளும் தொடர்ந்தன.

    கதை

    என் வயிற்றில் இருந்த மூன்று மாதக் கருவைப் பற்றி ஆவலுடன் விசாரித்தாள் எட்டு வயதான மகள்.

    “அம்மா! இப்போ குழந்தை எத்தனை பெரிசா இருக்கும்?”

    “தெரியலியே!” என்று ஒப்புக்கொண்டேன். எப்படியும், நான் எதையாவது தேடிப் படித்து, சொல்லிவிடுவேன் என்று அவள் சமாதானம் அடைந்தாள்.

    நான் என்ன பதில் அளித்திருந்தாலும் அவள் ஏற்றிருப்பாள். ஆனால், உண்மையை உள்ளபடிச் சொல்வதுதான் சரி என்று நம்புகிறவள் நான்.

    அப்போது இணையம் கிடையாது. வாசகசாலைக்குப் போனேன்.

    “ஒரு கட்டை விரல் நீளம்,” என்று நான் சொல்லக் கேட்டு, “எனக்கு அவ்வளவு குட்டி பேபியைத் தூக்கத்தெரியாதே!” என்று கவலை தெரிவித்தாள் மகள்.

    “எனக்கும் தெரியாது. ஆனா, பெரிசாப் போயிடும்”.

    “நான் படுத்தாம சாப்பிட்டாதான், பெரியவளாப் போயிடுவேன்னு சொன்னியே! பேபி எப்படி சாப்பிடும்?”

    “அதுக்காக நான் சாப்பிடறேன்”.

    இந்த ரீதியில் கேள்விகள் தொடர்ந்தன.

    `அசடாப் போயிட்டே! இந்தமாதிரி கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது,’ என்று நான் கண்டிக்கவில்லை. ஏனெனில், குழந்தைகள் எந்தவிதமான கேள்விகள் கேட்டாலும், அதற்கான பதிலை அவர்களால் ஏற்க முடியும்.

    தர்மசங்கடமான சில கேள்விகளுக்குப் பதிலை ஒத்திப்போடலாம். “குழந்தை எப்படி ஒன் தொப்பைக்குள்ள போச்சு? ஏன் முழுங்கினே?”

    முதல்முறையாக நான் சிடுசிடுத்தேன். “நீ இன்னும் கொஞ்சம் பெரியவளாப்போனதும் சொல்றேன். இப்போ போய் விளையாடு”.

    கண்ணீருடன் அவள் முறைத்தாள். “என்னை அசடாக்கணும்னு பாக்கறே! அப்புறம் நான் எப்படி அம்மாவா ஆகமுடியும்?”

    சற்றுப் பொறுத்து, “ஏம்மா, நான் எது சொன்னாலும் நீ சிரிப்பே?”

    இவ்வாறு ஆரம்பிக்கும் அறிவுத் தாகத்திற்கு ஆரம்பம் உண்டு. ஆனால், முடிவே கிடையாது.

    அறிவினால் ஏற்படும் சக்தியைத்தான் Knowledge is power என்கிறார்கள்.

    எதற்கு அறிவைப் பெருக்குவது?

    புதிய சமாசாரங்களை ஆர்வத்துடன் கற்பதாலும், புதிய அனுபவங்களை நாடுவதாலும் அடையக்கூடிய நன்மைகள் பல.

    வீண் கவலை மறைந்துவிடும்.

    எந்த வயதிலும் உற்சாகம் குன்றாது, மேலும் பலவற்றை எளிதாகக் கற்க முடியும்.

    எல்லாச் சூழ்நிலைகளிலும், புதியவர்களுடன் பழக முடிகிறது.

    தன்னம்பிக்கையுடன், பிறரது மதிப்பையும் பெறலாம்.

    ஆனாலும், புதிதாக ஓர் அனுபவம் ஏற்படும்போது சற்று பயம் எழக்கூடும். இது இயற்கை. பயத்தைப் பொருட்படுத்தாது, துணிவுடன் இறங்கினால் அறிவு பெருகும்.

    நாம் பெறும் அறிவை நன்மை, தீமை இரண்டிற்கும் உபயோகப்படுத்த முடியும். இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் இருக்கிறது.

    நாம் பெற்ற அனுபவம் நம்மை நல்லவிதமாக மாற்றுவதாக இருக்கவேண்டும்.

    சில ஆண்டுகளுக்கு முன்னர், காதல், செக்ஸ் போன்ற வார்த்தைகள் நம்மிடையே சொல்லத்தகாதனவாக இருந்தன.

    இந்த `கெட்ட வார்த்தைகளை’ப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பியவர்கள் ரகசியமாகப் படித்தார்கள், கண்ட கண்ட படம் பார்த்தார்கள்.

    அவை சரியான விளக்கங்களை அளித்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

    கதை

    நான் வானொலியில், `செக்ஸ்’ என்ற தலைப்பில் பேசினேன்.

    உறவினர்கள் அதிர்ந்தார்கள், `வெளிப்படையாக எப்படித்தான் இதைப் பற்றியெல்லாம் பேசுகிறாயோ!’ என்று.

    அதன்பின், ஆங்கிலத்தில் நிறைய எழுதினேன்.

    `கடவுளைப்போல் படைப்புத் தொழிலை மனிதனும் செய்யும் வழி இது. சொல்லக்கூடாத வார்த்தை என்று சொல்லிச் சொல்லியே, இதைக் கெட்ட வார்த்தையாக ஆக்கியிருக்கிறார்கள். அதனாலேயே இதை முறைகேடான வழிகளில் அறியும் ஆர்வம் தூண்டப்படுகிறது,’ என்ற ரீதியில் எழுதினேன்.

    ஒரு திருமண வைபவத்தில் என்னைச் சந்தித்த இளைஞன் ஒருவன், “நீங்க `அதைப்பத்தி’ எழுதினது எல்லாத்தையும் நான் படிச்சிருக்கேன்,” என்றான், ரகசியக் குரலில்.

    “அந்த வார்த்தை சொல்லக் கூடாதது இல்லேன்னு புரிய வைக்கிறதுக்காகத்தான் நான் எழுதறேன்,” என்றேன், சற்று அலுப்புடன்.

    செல்வத்திற்கும், அறிவுத் தேடலுக்கும் இடையே ஓர் ஒற்றுமை: எவ்வளவுதான் அடைந்தாலும், திருப்தி என்னவோ கிடைக்காது.

    ஒருவர், `எதையாவது புதிதாகக் கற்றால், பணம் சம்பாதிக்க முடியுமா?’ என்று கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தால், அந்த இலக்கே தவறு.

    இப்படிப்பட்டவர்கள், தாம் நம்பியவை தவறு என்று ஒத்துக்கொள்ள பயந்து, புதிய விஷயங்களை அறிய ஆர்வம் காட்டமாட்டார்கள்.

    அறிவு எப்படித்தான் வளரும்?

    Share
  • இலண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

    இலண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

    இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உள்ளே ஓர் உலா.

    படப்பதிவு – நவ்யா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னையில் பயங்கர இடி, மின்னல்

    சென்னையில் பயங்கர இடி, மின்னல்

    முந்தாநாள் (2021 ஜூன் 7, திங்கட்கிழமை அன்று) இரவு 10.45 மணி முதல் 12 மணி வரை சென்னையில் பயங்கரமான இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நீளமான இடியும் மின்னலும் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தன. உச்சியை உலுக்கி, கிடுகிடுக்க வைக்கும் அந்த அசாதாரண நிகழ்வின் ஒரு பகுதி இங்குள்ளது. படக்கருவியை வான்நோக்கிப் பிடித்து, தரையைப் பார்த்தபடி இந்தக் காட்சிகள் பலவற்றையும் படம்பிடித்தேன். இதோ, நீங்களும் அந்த மெய்சிலிர்க்கும் அனுபவத்தைப் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு

    பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு

    சி. ஜெயபாரதன், B. Eng [Hons], P. Eng [Nuclear]

    சமீபத்தில் (2020) வெளிவந்த அகில நாட்டு பூகோளச் சூடேற்றத்தில், அணுமின்சக்தியின் பங்கு [IAEA CLIMATE CHANGE & NUCLEAR POWER ROLE REPORT] என்னும் வெளியீட்டில் அணுமின்சக்தி நிலையங்கள் பற்பல கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை வெளிவர உதவிய உலக தொழில்நுணுக்க மேதைகள் 210 பேர், 60 நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அறிக்கைக்குக் குறிநோக்கு [IPCC & PARIS AGREEMENT TARGET 1.5 C] 1.5 C உஷ்ணம் எச்சரிக்கை வரம்பு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தக் குறிநோக்கு 2050ஆம் ஆண்டுக்குள் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் குறைக்கப்படவேண்டும், மீள்புதிப்பு எரிசக்தி மின்சார நிலையங்கள் பெருக வேண்டும்,

    அத்துடன் பேரளவு அடித்தள மின்பளு ஏற்புக்கு [BASE LOAD NUCLEAR POWER PLANTS] அமைக்க வேண்டும் என்று அறிக்கை வலிவுறுத்துகிறது. மேலும் அந்த உஷ்ண வரம்பைத் தாண்டாமல் இருக்க. 400 மேற்பட்ட வழிமுறைகள் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்த 30 ஆண்டுகளில் உலக நாடுகள் சுமார் 50,000 MWe அணுமின் நிலையங்கள் கட்ட வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பெரு வெப்ப அணு மின்சக்தி நிலையங்கள், 200 MWe சிற்றளவு அணுமின் நிலையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேம்பாட்டு நீர்த் தணிப்பு அணுமின் நிலையங்கள் [ADVANCED WATER-COOLED REACTORS 9000 GWe CAPACITY (9000 1000 MWe)] கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    தற்போது 31 உலக நாடுகள் [இந்தியா உட்பட], 442 அணுமின் உற்பத்தி நிலையங்களை 392,000 MWe திறத்தில் இயக்கி வருகின்றன. புதிதாக 53 அணுமின் நிலையங்கள், 56,000 MWe திறத்தில் கட்டப்பட்டு வருகின்றன. 2050ஆம் ஆண்டுக்குள் 500, 000 MWe புதிய அணுமின் நிலையங்கள் கட்ட, குறைந்தது 50% நிதி ஒதுக்கு மேலாகத் தேவைப்படும். கடந்த பத்தாண்டு இயங்கிய அணுமின் நிலையங்கள் ஆண்டு ஒன்றுக்குச் சுமார் இரண்டு கெகா டன் கார்பன்டையாக்சைடு [2 gega ton CO2] அளவைக் குறைத்துள்ளன.

    With the adoption of the Paris Agreement in 2015, almost all Parties to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC) agreed to prepare nationally determined contributions (NDCs) to control GHG emissions and limit the increase of global mean surface temperature by the end of the century to below 2°C relative to pre-industrial levels. Since then, increasing scientific understanding of the significant risks associated with warming of 2°C, along with increasing societal concern, have established the need for more urgent and ambitious action to avoid the worst impacts of climate change, by limiting warming to 1.5°C.

    To reach this goal, carbon dioxide (CO2) emissions from electricity generation must fall to nearly zero by the middle of this century, even as electricity needs worldwide continue to grow and expand in end-uses such as transportation, heating and industrial energy use.

    Climate Change and Nuclear Power 2018
    http://www-pub.iaea.org/MTCD/Publications/PDF/CCNAP-2018_web.pdf
    https://www.iaea.org/publications/14725/climate-change-and-nuclear-power-2020
    English CCANP-18123  36   2018
    Book : 123 pages

     Download PDF (3.61 MB) Get citation details

    DESCRIPTION

    The 40th edition of RDS-1 contains estimates of energy, electricity and nuclear power trends up to the year 2050. The publication is organized into world and regional subsections, with global and regional nuclear power projections presented as low and high cases, encompassing the uncertainties inherent in projecting trends.

    DESCRIPTION

    THIS PUBLICATION PROVIDES AN UPDATE ON THE CURRENT STATUS OF NUCLEAR POWER AND PROSPECTS FOR ITS CONTRIBUTION, TOGETHER WITH OTHER LOW CARBON ENERGY SOURCES, TO AMBITIOUS MITIGATION STRATEGIES THAT WILL HELP THE WORLD LIMIT GLOBAL WARMING TO 1.5°C IN LINE WITH THE 2015 PARIS AGREEMENT. SINCE 2000, THE IAEA HAS ISSUED SUCH INFORMATION AND ANALYSIS REGULARLY, IN ORDER TO SUPPORT THOSE MEMBER STATES THAT CHOOSE TO INCLUDE NUCLEAR POWER IN THEIR ENERGY SYSTEM AS WELL AS THOSE CONSIDERING OTHER STRATEGIES. THE FOCUS OF THE 2020 PUBLICATION IS ON THE SIGNIFICANT POTENTIAL OF NUCLEAR ENERGY, INTEGRATED IN A LOW CARBON ENERGY SYSTEM, TO CONTRIBUTE TO THE 1.5°C CLIMATE CHANGE MITIGATION TARGET, AND THE CHALLENGES OF REALIZING THIS POTENTIAL. ENERGY SYSTEM AND MARKET RELATED FACTORS AFFECTING THE TRANSITION TO A LOW CARBON ENERGY SYSTEM ARE REVIEWED. THIS EDITION ALSO OUTLINES DEVELOPMENTS NEEDED TO REALIZE THE LARGE SCALE CAPACITY INCREASE REQUIRED TO RAPIDLY DECARBONIZE THE GLOBAL ENERGY SYSTEM IN LINE WITH LIMITING GLOBAL WARMING TO 1.5°C.

    Reference

    ttps://www.iaea.org/publications/14725/climate-change-and-nuclear-power-2020

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 132 (நாணனே)

    சேக்கிழார் பாடல் நயம் – 132 (நாணனே)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ‘நாணனே! தோன்றும் குன்றில் நாணுவோம்’  என்ன நாணன்,
    ‘காண நீ போதின், நல்ல காட்சியே காணும்; இந்தச்
    சேண் உயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
    கோணம் இல் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்’ என்றான்.

    வரலாறு

    முதல்வேட்டைஎனப்பட்ட கண்ணிவேட்டைக்குக்  கிளம்பினான்திண்ணன். அவ்வாறு வேட்டைபயின்று வளர்ந்து பதினாறாண்டு அகவை அடைந்தான். அந்த உடுப்பூர்வேடர்குலத்தார் கானகத்தில் வேட்டையாடிப் பன்றி, புலி, கரடி, காட்டுமான், கலைமான் ஆகியவற்றை வேட்டையாடி விருந்துண்டு வாழ்ந்தனர். அப்போது முதுமையால்தளர்ந்த வேடர்குலத்தலைவன் நாகன், ‘’என்முதுமையால் தளர்ந்தேன்! இனிஇந்தவேடர்குலத் தலைவன் என்னும் பொறுப்பைத் திண்ணனுக்கு அளிப்பேன்!  தேவராட்டியை அழைத்து , காடு கிழாளுக்கு பலியூட்டி. பூசைசெய்ய அழைக்க!’’ என்றான். வேட்டுவர்  குலத்தின் பூசைமகளாகிய மூத்த  வேட்டுவச்சி, ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு வந்தாள். அவளுக்கு  வேண்டிய உணவைஅளித்துப் போற்றிய காடன்,’’ என்மகன்   திண்ணனை வேடர்குலத் தலைவனாவதற்கு உரிய வழிபாடுசெய்து உதவுக”  என்றான், முதியோளும்‘’ இவன்வேடர் குலத்தலைவன் ஆவதற்குரிய சகுனங்கள் சிறப்பாக இருக்கின்றன!’’ என்றாள்.

    நாகனும் தன்முன் வந்து வணங்கிய  மகனைத் தழுவி, முறைப்படி தலைவனுக்குரிய முதல் சுரிகை, உடை தோல்  ஆகியவற்றை வழங்கினான் திண்ணனும் தந்தையை வணங்கி மறுநாள் அதிகாலையில் வேட்டைக்குப் புறப்பட்டான்.  தலைவனுக்கு உரிய வகையில், தலை, தோள், மார்பு, கை, இடை, ஆகியவற்றில் வீரம் காட்டும் அணிகளை அணிந்து கொண்டு காலில்  வீரக்கழல்  மற்றும் செருப்பும்  அணிந்து வேடர் கூட்டமாகிய தோழர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான்!

    எல்லாரும் எல்லாத்திக்கிலும்  பரவிச் சென்று பற்பல விலங்குகளை விரட்டி, திண்ணனார் வேட்டையாட உதவினர். அப்போது காட்டின் கொற்றவைக்கு பலியூட்டி முதியவள் வந்தாள். திண்ணனுக்குத் தலையில் சேடை என்னும் அட்சதை தூவி வாழ்த்தினாள். உடனே திண்ணன்  வேட்டைக்குப் புறப்பட்டதைச்  சேக்கிழார்,

    தாளில் வாழ் செருப்பர்; தோல் தழைத்த நீடு தானையார்;
    வாளியோடு சாபம் மேவு கையர்; வெய்ய வன் கணார்;
    ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண் இலார்;
    மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே.

    என்றுபாடினார். மேலும்  அவர் எய்த அம்பில் அடிபட்ட விலங்குகளை,

    தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலைமான்;
    வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா;
    நீள் உடல், விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா;
    மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே.

    என்று,  வேட்டையின் சிறப்பினை ஓசைநயம்படப் பாடினார்! காட்டுக்குள் நெடுந்தூரம்   வேட்டையாடிக்   கொண்டே விரைந்த  திண்ணனுடன், தொடர்ந்து  சென்ற  நாணனும் காடனும் ஓரிடத்தில் பெரிய காட்டுப்பன்றி இரண்டு துண்டாகி வீழ்ந்து கிடத்தலைக் கண்டனர்! ‘’நாம் பல காததூரம்  வந்தோம்! இவர்  தனியாக முன்னேறி வந்து,  ஆடவர்களின் தலைவனாகி இதனைக்   கொன்றான், அச்சோ!’’  என்று போற்றினர், அதனச் சுட்டு உணவாக்கிக் கொள்ள முயன்ற போது. தண்ணீரில் வேக வைக்க வேண்டுமே! என்று திண்ணன் கூறிய போது  நாணன் தண்ணீர்  ஓடும்  பொன்முகலி யாற்றைக் காட்டினான்.  அங்கே இப்பன்றியைக் கொண்டுபோவோம் என்று கூறிச்சென்ற திண்ணன், அங்கிருந்த மலையைக்  கண்டான். இவ்வாறு மலைக்காட்சியைக்  காட்டியபோது அங்கே மலையும், சாரலும். கோயிலும் ஒன்றாகி, ‘’நிர்விகற்பக்காட்சி’’ யாகப் புலப்பட்டது ; பின்னர் நெருங்கிச் சென்று காணும் போது, தனித்தனியாகிச்  ‘’சவிகற்பககாட்சி’’ ஆயிற்று. நற்காட்சி என்ற சித்தாந்த நிலையை இங்கே சேக்கிழார்  குறிப்பிட்டார்! இதனை இப்பாடலில் காண்போம்.

    ‘நாணனே! தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்
    காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
    சேண் உயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
    கோணம் இல் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்’ என்றான்.

    பொருள்

    “நாணணே! முன்னே தோன்றும் குன்றின்கண் சேர்வோம்” என்று திண்ணனார் சொல்ல, நாணன், “நீ அங்கே காணப் போவாயாகில் நல்ல காட்சியே காணப்படும்; சேணில் உயரும் இந்தத் திருக்காளத்தி மலையின்மேல் எழுந்து செம்மைபெறக் கோணமில்லையாகச் செய்யும் குடுமித்தேவர் இருப்பார்; நாம் கும்பிடலாம்” என்று சொன்னான்.

    தோன்றும் குன்றில் – முதலிற் கண்ணுக்குப் புலப்பட்டது குன்றின் உயர்ந்த சிகரமாதலின் அது அவர் கருத்தைக் கவர்ந்தது.

    நீகாணப்போதின்- காண்பதற்கென்று நீ போவாயானால். இவ்வகை யிடங்களுக்குப் போதுவார் பலரும் போய்வந்த மட்டில் அமைவரே யன்றி அங்குள்ள சிறப்புக்களைக் காணாமலே வருவர் என்பது கண்கூடு. ஆதலின், நண்ணுவோம் என்று தன் தலைவன் கூற அவ்வாணைக் குட்பட்டு உடன்படும் நாணன், அவ்வாறு நீ காணும்பொருட்டே செல்வாயனால், ஏனையோர் போலல்லாது நீ காணும் சிறப்பு இன்னதென்று கூறுவானாகி, அது நல்ல காட்சியே என அறிவுறுத்துகின்றான். அக்காட்சி இன்னதாம் என மேலும் வற்புறுத்திக் கூறுகின்றான் “குன்றின் நண்ணுவோம்; அதனைக் காணல்வேண்டும்; காண்பது நல்ல காட்சி; அஃது இதுவாம்” என்றவாறு. இக்குன்றவர் கடவுட்காட்சியில் வைத்தகருத்துப் பாராட்டத்தக்கது.

    காணநீபோதின் என்று நாணன் உரைத்தவாறு உண்மையில் நாயனார் காண்பதற்கே அங்குப் போகின்றார். ஏனையோர் போலல்லாது,

    “ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற் கண்டுகொண்டே
    நேர்பெற நோக்கி நின்றார்”  என்பது காண்க.

    நல்ல காட்சியே காணும் – காட்சி – காணப்படுவது. காணும் – காணப்படும்.  இவர்காணும் காட்சி இறைவனது அருள் திரு நோக்கம் பெற்று அவன் காட்டக்காணும் காட்சியாதலின் நல்ல காட்சியே என்றார். தோற்றமுமாம். நல்லகாட்சியாவது அகம் புறமாகிய கரணங்களால் எதனைக் காணவேண்டுமென்று நூல்கள் விதிக்கின்றனவோ அதனையே காணுதல்.

    “கண்காள் காண்மின்களோ – கடல் –  நஞ்சுண்ட கண்டன்றனை,
    யெண்டோள் வீசிநின் றாடும்  பிரான்றனைக் (கண்காள்)”

    என்றது தமிழ்மறை.

    இந்த …. கும்பிடலாம் – நல்லகாட்சி இதுவாமென்று நாணன் கூறியது. சேண்உயர் – வானில் உயர்ந்துவிளங்கும். உயர்ந்து தோன்றியதனால் முன்னர்த் “தோன்றும் குன்று” என்றார். அவ்வாறு திண்ணனார் “தோன்றும் குன்று” என்ற அதன் பெயரை அவருக்கு அறிவுறுத்துவான் இந்த என்று கையாற்சுட்டிக் காட்டித் திருக்காளத்திமலை என்று வாயினாற் பேர் கூறினான். “பெரிய தேக்கி னப்புறஞ் சென்றால் நீண்ட, குன்று” (743) என்று நாணன்கூறக் கேள்விமாத்திரத்தாலறிந்த நாயனார், இங்கு அதனைக்கண்ணுக்குப் புலப்படக் கண்டறிந்தபோது அவன் சொல்லியபடியே “தோன்றும் குன்று” என்று பேர்குறியாது கூறியது காண்க.

    மலைமிசைஎழுந்து செவ்வே – மலையினின்றும் வேரூன்றி முளைத்ததுபோல மேல் எழுந்து செம்மைபெற. கோணம்இல் – கோணத்தை இல்லையாகச்செய்யும். கோணம் – குற்றம். இது கோண் – கோணைஎனவும் வழங்கும்.

    “யான்செய்தேன் பிறர்செய்தாரென்னதியா னென்னுமிக்
    கோணை”

    (சிவஞானசித்தியார் – 10, சூத்திரம் – 2).

    குடுமித்தேவர் – குடுமி – உச்சி. மலையின் உச்சியிலிருப்பவர். தலையின்மேல் உச்சியிலிருப்பதால் தலைமயிர்க்கற்றை, குடுமி எனப்படும். கானவர் காளத்தியப்பரை இப்பெயராலறிந்து கும்பிட்டனர் என்க. வேதங்களுள் முடிவினிற்பது அதர்வணமாம். அதன் சிரம் அதர்வசிரசு எனப்படும். அதன்

    சிகையாயுள்ள அதர்வசிகை “ஏனையவற்றை யெல்லாங் கைவிட்டுமங்களஞ்செய்பவனாகிய சிவன் ஒருவனே தியானிக்கற்பாலன். அதர்வசிகை முடிந்தது” என்று முடிபுகூறுகின்றது. அவ்வுச்சியில் முடிந்தமுடிபாய் விளங்குபவன் இவ்விறைவன் என்பதும் குறிப்பாம். உபநிடதத்துச்சியில் விளங்கும் போதக்காட்சி என்னும் வழக்குங்காண்க.

    நாணன் மேலே  சொல்லியவை

    “குன்றினுக் கயலேயோடும் குளிர்ந்த பொன் முகலி”

    என்றது இவரை வழிப்படுத்திய முதல்உபதேச மொழி;

    இப்பாட்டிற் கூறியன இரண்டாவது உபதேச மொழிகளாம். மேலிருபாட்டிலும் முறையே தீர்த்த விசேடமும் தலவிசேடமும் கூறப்பட்டது போல இப்பாட்டால் மூர்த்திவிசேடம் கூறப்பட்டது காண்க.

    இறைவனை அறிந்து கொள்ளுதலாகிய நற்காட்சி மூலம்  அவரை அடைய வேண்டும் என்பதும், அடையும் வழிமுறையும் , அடைதலும் ஆகிய  சித்தாந்த  நெறி   இப்பாடலில்  விளக்கப்பெறுகின்றது. இறைவனை  அடையும் வழியை   முன்பே அறிந்தவர் மூலம் தெரிந்து  கொள்ளுதல் என்ற வகையில்  நாணன்  திண்ணனுக்குக்  கூறிய உபதேச  மொழியாகக்   கொள்ள வேண்டும். சமய உலகில்  உபதேசம்  எங்கிருந்து வேண்டுமானாலும்  கிட்டும் என்பது சாத்திரம்!

    Share