Blog

  • வடகிழக்கு இந்தியாவில் பருவ காலப்  பேய்மழை வெள்ளத்தால் பேரழிவுகள்

    வடகிழக்கு இந்தியாவில் பருவ காலப் பேய்மழை வெள்ளத்தால் பேரழிவுகள்

    Train coaches toppled over after mudslides triggered by heavy rains at the New Haflong railway station in Assam, India, on May 16, 2022

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    People wade through flood waters in Nagaon district of India’s Assam state on May 18, 2022

    At least 110 people have been killed in landslides and flooding triggered by heavy rains in the western Indian state of Maharashtra.

    தாரணி சூடேறித் தணல் சட்டியாகக்
    காரணி ஒன்றில்லை.
    சூரியக் கதிர்வீச்சு
    சுட்டெரிக்குது பூகோளத்தை
    வெப்ப யுகப் பிரளயம்
    தப்பா தெங்கும் அரங்கேறுது
    பேய் மழை, சூறாவளி
    பெரு வெள்ளம், தீப் பற்றல்
    பேரிழப்பு !

    பனிச்சிகரம் பரட்டைத் தலையாய்
    கரும் பாறையாக
    ஜீவ நதிகளில்
    நீரோட்டம் தளரும் !
    உயிர்வளப்
    பயிரினச் செழிப்புகள் சிதைந்து
    புலம்பெயரும் பறவை இனம்
    தளமாறிப் போகும்,
    பருவம்
    தடமாறிப் போகும் !

    *****************************

    வடகிழக்கு இந்தியாவில் பருவ காலப்  பேய்மழை வெள்ளத்தால் பேரழிவுகள்

    2022  ஆண்டு மே மாதம் 16-20 தேதிகளில்  பெய்த பருவ முன்னோடி மழை அடிப்புகளால், வடகிழக்கு இந்தியாவில், கௌகாத்தி, அஸ்ஸாம்  பெருமழைப் பிரதேசத்தில் 1900 கிராமங்களில் நிலச் சரிவுகளும், நிலப்பகுதி வெள்ளமும் பேரழிவைச் சுமார் 700,000 இல்லங்களை மூழ்க்கி உள்ளன.  இறந்தவர் எண்ணிக்கை குறைந்தது : 10.   உலகப் பெரும் நதிகளில் ஒன்றான பிரமபுத்திரா ஓடும் இமய மலைப் பிரதேசங்கள் அஸ்ஸாம், பங்களாதேஷ், திபெத் பகுதிகளில் சுமார் 1900 கிராமங்கள் மூன்று நாட்களாய்ப் பாதிக்கப்பட்டுள்ளன.

    Assam flooding: Half a million Indians flee floods in northeast brought by rain – CNN

    *****************************

    சூட்டு யுகப் பேய் மழை! உலகளாவிய காலநிலை மாறுதல்கள்

    “எங்கே நாம் போக வேண்டும் என்று ஏற்புடைய தெளிவானச் சிந்தனையைப் பெறுவது வரை, நாம் அந்த இடத்தை அடையப் போவது என்பது நிச்சய மில்லை.”

    டேவிட் கோர்டென் [David Korten]

    “கடந்த 20 – 40 ஆண்டுகளாக ஏறிக்கொண்டு வரும் பூகோளச் சூடேற்றத்துக்கு சூரியக் கதிர்வீச்சுகள் காரணமல்ல என்பது விஞ்ஞானக் கணிப்பு மூலமாக உறுதியாக்கக் பட்டிருக்கிறது.”

    டாக்டர் பியர்ஸ் ·பார்ஸ்டர் [Dr. Piers Forster, School of Earth & Environment]

    “வெற்றி பெறுவதே நமது முடிவான குறிக்கோள் என்னும் வாடிக்கை மாறி மக்களுக்குப் பணி புரிவதே முக்கிய குறிக்கோள் என்று நாம் வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    நமது திட்டங்களின் இறுதி விளைவுகள் என்ன ? மக்களுக்குக் கிடைக்கும் வேலைகள்.  நிதிவளச் செழிப்புக்கு ஏற்ப, வணிகத் தளங்களின் அமைப்புக்கு ஏற்ப, சூழ்வெளியை மாசுபடுத்தாத, குடிமக்களுக்கு இடரளிக்காத தொழிற்துறைப் பொறிநுணுக்கப் படைப்புகளை நிர்மாணிக்க முனைந்திருக்கிறோம்.  இந்த குறிப்பணித் திட்டங்களில் நாம் எப்போதும் அப்படி வெற்றி அடைவ தில்லை.  ஆனால் தொழிற்துறைகளில் மெய்யாக நடைபெறும் உதாரணக் குறைகளே பேரளவாக நமக்குத் தெரிகின்றன.”

    அசோக் கோசலா [Ashok Khosala, Founder of Development Alternatives]

    “ஒரு கருத்தைப் பற்றி நான் உறுதியாக இருக்கிறேன்.  நாமறிந்த தொழிற்துறை வாணிபங்கள் நமது நாகரீகக் கலாச்சாரம், உயிரின வளர்ச்சிகள் உட்படப் பூகோளத்தை நாசமாக்கி வருகின்றன.  உலகெல்லாம் பரவிச் சீராக இயக்கப்படும் அத்தகையப் பேரழிவு வணிக ஏற்பாடுகள் போல் இதற்கு முன்பு இருந்ததில்லை.”

    பால் ஹாக்கென், சூழ்வெளிக் காப்பாளர் [Paul Hawken, Environmentalist]

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்

    பூகோளச் சூடேற்றத்தால் விளையும் காலநிலை மாறுதல்கள்

    8.  உலக நாடுகளைச் சார்ந்த காலநிலை மாறுதல் அரங்கம் [Intergovernmental Panel on Climate Change (IPCC)] கூடி 130 உலக நாடுகளின் விஞ்ஞானிகள் செய்த முடிவுகள்:

    1988 இல் உலக நாடுகளின் சூழ்வெளித் திட்டக்குழு [United Nations Environment Program (UNEP)] உலகக் காலநிலை அரங்கு [World Meteorological Organization (WMO)] ஆகிய இரண்டு உலகப் பேரவைகளும் கூடி IPCC அரங்கை நிறுவின.  அதன் குறிக்கோள் என்ன ?  உலக நாடுகளில் ஏற்படும் காலநிலை மாறுதல்களின் பல்வேறு பண்பாடுகளை உளவி அறிவதும், அவற்றால் விளையும் சூழ்வெளிச் சமூகப் பாதிப்புகள், பிரதிபலிப்புகள் ஆகியவற்றை ஆய்வதுமே.

    a) 2100 ஆண்டுக்குள் பூகோளத்தின் உச்ச உஷ்ண ஏற்றம்:  1.8 முதல் 4 டிகிரி C  இடைநிலைக் கணிப்பு அளவு: 1.1 முதல் 6.4 டிகிரி C.

    b) முக்கிய கிரீன்ஹௌஸ் வாயுவாகக் கருதப்படுவது : CO2 [கார்பன் டையாக்ஸைடு], தொழிற்சாலைகளில் நிலக்கரி எரிப்பு, ஆயில் எரிப்பு, கானக அழிப்பு ஆகியவற்றால் சூழ்வெளியில் கார்பன் டையாக்ஸைடு மிகையாகச் சேமிக்கப் படுகிறது.

    c)  அடுத்த இரண்டு கிரீன்ஹௌஸ் வாயுக்கள் : மீதேன், நைட்டிரஸ் ஆக்ஸைடு ஆகியவை.  அவற்றின் சேமிப்பளவு கார்பன் டையாக்ஸோடு ஒப்பிடும் போது சிறிதாயினும் அவை விளைவிக்கும் பாதிப்புகள் மிகுதியானவை.  சூடேற்ற வீரியத்தில் மீதேன் CO2 விட 20 மடங்கும், நைட்டிரஸ் ஆக்ஸைடு CO2 விட 300 மடங்கும் உக்கிரமானவை.

    9.  பூதளச் சராசரி உஷ்ணத்தின் ஏற்றப் போக்கு:

    19 ஆம் நூற்றாண்டில் இருந்த பூதளச் சராசரி உஷ்ணம் (0.3 to 0.6) டிகிரி C ஏறி, 20 ஆம் நூற்றாண்டில் (0.8 to 0.9) டிகிரி C ஆக மாறி விட்டது.

    10.  1900 முதல் 1994 வரை பூதளம் மீது படிவுப்பனி (Precipitation Change Trend over Land)

    குளிர் காலத்தில் வடப் பூகோள உச்ச சிகரங்களின் தளத்தில் படிவுப்பனி வீழ்ச்சி மிகையாகி உள்ளது.  1960 ஆண்டுகளில் பூமத்திய ரேகைப் பகுதிகளிலும் அவற்றை அண்டிய பரப்புகளிலும் படிவுப்பனி வீழ்ச்சிகள் குறைந்துள்ளன.

    11.  சூடேறும் பூகோளத்தால் கடல்நீர் மட்ட உயர்ச்சி

    கடந்த 100 ஆண்டுகளாய் உலகெங்கும் கடல்நீர் மட்டம் 10 முதல் 25 செ.மீடர் (சுமார் 4 முதல் 10)  அங்குல உயரம் அதிகரித்துள்ளது.  இனி அடுத்த 100 ஆண்டுக்குள் (2100) கடல்நீர் மட்டம் (13 முதல் 94) செ.மீ (5 முதல் 36) அங்குலம் உயரும் என்று மதிப்பீடு செய்யப் படுகிறது.

    12. காலநிலை மாற்றத்தால் ஏற்பட வாய்ப்புள்ள தாக்குதல்கள்:

    கிரீன்ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு மிகையாகிப் போனால், காலநிலையில் பெருத்த மாறுதல்கள் நேரலாம்.  அதனால் சூழ்வெளியிலும், சமூகப் பொருளாதரப் பாதிப்புகள் உண்டாகும்.

    13.  பூகோள உஷ்ண மாற்றங்களின் தீர்க்க மதிப்பீடு [Global Temperature Projected changes]:

    கணினி மாடல்கள் மூலம் தீர்க்கமாய்க் கணித்ததில் [Computer Model Projections] 2100 ஆண்டுக்குள் பூகோளச் சராசரி உஷ்ணம் 1 முதல் 4.5 டிகிரி C ஏறிவிடும் என்று அறியப் படுகிறது.

    பூகோளம் சூடேற பரிதியின் கதிர்வீச்சுகள் காரணமல்ல !

    நவீன காலத்து வெப்ப மாறுதலுக்கு, சூரியனின் வெப்பசக்தி வெளியேற்றம் காரணமில்லை என்று ஒரு புதிய விஞ்ஞான ஆராய்ச்சி அழுத்தமாகக் கூறுகிறது. அந்த ஆய்வின்படிக் கடந்த 20 ஆண்டுகளில் பரிதியின் வெப்ப வெளியேற்றம் குறைவாக இருந்தாலும், பூகோளம் சூடேறி உள்ளது என்பது அறியப்படுகிறது.  ராயல் சொஸைட்டி அறிக்கை சொன்னதுபோல் தற்போதைய நவீன உஷ்ண ஏற்றத்துக்குச் சூரியனின் அகிலக் கதிர்கள் [Cosmic Rays] பொறுப்பானவை என்பது பிழையென்று நிரூபிக்க பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி வெப்பசக்தி மேலும், கீழும் ஏறி இறங்குகிறது.  அந்த சுற்றியக்கத்தின்படி 1985 ஆண்டு முதல் சூரிய வெப்பம் தணிந்து வருகிறது.  அந்த வருடங்களில் பூமியின் உஷ்ணம் மிகையானது போல் முந்தைய 100 ஆண்டுகளில் கூட நிகழ்ந்தது இல்லை.  IPCC விஞ்ஞானக் குழுவினர் பூகோள சூடேற்றத்துக்கு கிரீன்ஹவுஸ் வாயுக்கள் சூரிய வெப்பத்தை விட 13 மடங்கு ஆற்றல் வாய்ந்தது என்பதைக் காட்டியுள்ளார் !

    IPCC விஞ்ஞானிகள் 2007 அறிக்கைகளில் வெளியிட்ட தகவலில் முக்கியமானவை பின்வருமாறு:

    1.  ஆ·ப்ரிக்கா கண்டத்தில் 2020 ஆண்டுக்குள் 75 முதல் 250 மில்லியன் மக்கள் நீர் பற்றாக்குறைப் பாதிப்பில் இன்னல் அடைவார்கள்.

    2.  கிழக்கு, தென் கிழக்காசிய நாடுகளில் தானிய விளைச்சல் 20% அதிகமாகும்.  அதே சமயத்தில் மத்திய, தெற்காசியாவில் தானிய விளைச்சல் 30% குன்றிவிடும்.

    3.  சில ஆ·பிரிக்க நாடுகளில் மழை பெய்து வளமாகும் வேளாண்மை விளைச்சல்கள் 50% குறைந்து போய்விடும்.

    4.  பூகோளத்தின் உஷ்ணம் 1.5 முதல் 2.5 வரை ஏறினால் 20% முதல் 30% வரையான பயிரினங்கள், விலங்கினங்கள் மரித்திடும் வாய்ப்புகள் உள்ளன.

    5.  கடல்நீர் மட்டம் ஏறும்போது கடற்கரை நகரங்கள் உப்புநீரால் அடைபட்டு நீர்வளம், நிலவளம், மீன்வளம் ஆகியவற்றில் பெருஞ் சேதம் உண்டாக்கும்.

    உலக நாடுகளில் காலநிலை மாற்றத்தால் நேரும் பாதக விளைவுகள்

    1.  ஆசிய நாடுகள்

    ஆசியாவில் இந்தியா, சைனா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் உயிர் நதிகளுக்கு ஆண்டுதோறும் நீரோட்டம் அளித்து வருபவை உலகிலே உயர்ந்த இமாலய பனிச்சிகரங்கள் என்பதை அனைவரும் அறிவோம்.  பூகோளச் சூடேற்றத்தால் அடுத்து 20-30 ஆண்டுகளில் நீரோட்டம் பாதிக்கப்படும் என்பது உறுதியாக நம்பப் படுகிறது.  அதே சமயத்தில் வெள்ளம் அதிகரித்து கரைப் பகுதிகளில் உள்ள நகரங்களில் நீர் புகுந்து இன்னல் விளைவிக்கலாம் என்றும் அறியப் படுகிறது.  அத்தகைய வெள்ள அடிப்புகளால் மக்களை நோய் நொடிகள் பீடிக்கும், மக்கள் மரணம் அடைவார்.

    2.  ஐரோப்பிய நாடுகள்

    ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பூகோளச் சூடேற்றத்தால் ஓரளவு பாதகம் அடையும்.  2020 ஆண்டுக்குள் வட ஐரோப்பியப் பகுதிகளில் தானிய விளைச்சல் பெருகும்,  ஆனால் பல பகுதிகளில் நீர் வெள்ளப் பாதிப்புகள் உண்டாகும்.  தென் ஐரோப்பிய நாடுகளில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனைகள் எழுந்திடும்.  தானிய விளைச்சல்கள் குன்றும்.  மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வேனிற் கால மழைப் பொழிவுகள் குறையும்.  நீர்த் தட்டுப்பாடு நேரும்.  வெப்பப் புயல்கள் அடித்து மக்களைத் துன்புறுத்தும்.  கானகத் தீக்கள் பற்றும்.

    3.  வட அமெரிக்க நாடுகள்

    குளிர் காலத்தில் வெப்பம் மிகையானால் மேற்கு மலைப் பனிச்சிகரங்கள் உருகி நதிகளில் வெள்ளம் எழுந்து கரைப்பகுதி நகரங்களில் நதி வீடுகளை மூழ்க்கி விடும்.  வேனிற் காலத்தில் பனிச் சிகரங்கள் கரைந்து போய் நீர்த் தட்டுப்படு உண்டாகும்.,  வேனிற் காலத்தில் மின்னல் அடித்துக் கானகத் தீக்கள் பற்றிக் கொள்ளும்.  வெப்பப் புயல் அடிப்புகள் நேரும்.  கடல் மட்டம் உயர்வதாலும், கடல் நீர் சூடாவதாலும் சூறாவளிகள், ஹரிக்கேன்கள் தோன்றி மெக்ஸிகோ வளைகுடாப் பகுதிகளில் பேரளவு இடர்கள் உண்டாகும்.

    4.  லத்தின் அமெரிக்க நாடுகள் (தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகள்)

    மண்தள நீர்வளத்தில் வெப்ப ஏற்ற மாயினும் சரி, அல்லது இறக்க மாயினும் சரி, கிழக்கே அமேஸான் நதிப் பகுதிகளில் பூமத்திய ரேகைக் கானகங்கள் மறைந்து, வெற்றுப் பீடப் பகுதிகளாகி [Savannah] விடும்.  நிலவளம், நீர்வளம் வரட்சியாகி பாலைப் பரப்புகளாய் மாறி தானிய விளைச்சல்கள் தடைப்படும்.  சோயாபீன் விளைச்சல் வெப்பப் பகுதிகளில் அதிகரிக்கும்.  கடல் மட்டம் உயரும் போது, தணிவுப் பகுதிகளில் [கயானா, எல் ஸல்வடார், ரியோடி ஜெனிரோ கரைப் பகுதிகள்] கடல் வெள்ளம் பரவி சுவைநீர் நிலங்கள் உப்புநீர் நிலங்களாய்ப் பாதிப்பாகும்.  பனிச் சிகரங்களில் பனிச் சேமிப்புகள் குறைந்து போய் ஆறுகளில் நீரோட்டம் குன்றி நீர்ப் பற்றாக்குறை உண்டாகும்.

    5.  ஆர்க்டிக், அண்டார்க்டிக் துருவப் பகுதிகள்.

    பனிக்குன்றுகளின் பனித்தட்டுகள் நீர் உருகி மெலிந்து போகும்.  கடல் மிதப்பு பனி முகடுகள் கரைந்து போகும்.  இயற்கையான உயிர்வளப் பயிரினச் செழுமைப்பாடுகள் [Ecosystems] முறிந்து, புலம்பெயரும் பறவை இனங்கள் பாதகம் அடையும்.

    ++++++++++++++++++

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]
    (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3.  The Assault on Reason By Al Gore (2007)

    4.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    5.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    6.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    7.  The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)

    8.  Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

    9. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

    10 The Shrinking Glaciers of Kilimajoro, East Africa (2006)

    11. Global Warming Speed : “Earth is on Fast Track to Global Warming.” (2006)

    12. Good News For A Change – Hope for A Troubled Planet By: David Suzuki & Holly Dressel [2002]

    13. The End of Nature By: Bill McKibben [2006]

    14. ‘No Sun Link’ to Climate Change By: Richard Black, BBC Environment Correspondent.

    15. BBC News – Climate Change Around the World.

    16. BBC News – Billions Face Climate Change Risk

    Share
  • குறளின் கதிர்களாய்…(406)

    குறளின் கதிர்களாய்…(406)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(406)

    வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுத லின்று.

    -திருக்குறள் -83 (விருந்தோம்பல்)

    புதுக் கவிதையில்…

    தேடிவரும் விருந்தினர்க்குத்
    தின்னக் கொடுத்தே
    தினம் உபசிப்பவனின்
    வாழ்க்கை,
    அவன்
    வறுமையுற்றிடும் நிலையிலும்
    வருந்திடும்படி
    பாழ்படுவதில்லை…!

    குறும்பாவில்…

    வரும் விருந்தினரை வரவேற்று
    உபசரித்து வருபவனின் வாழ்க்கை, அவனது
    வறுமையிலும் வருந்திடப் பாழ்படுவதில்லை…!

    மரபுக் கவிதையில்…

    இல்லம் வந்திடும் விருந்தினரை
    இனிய முகத்துடன் வரவேற்றே
    இல்லை யென்றெதும் சொலாமலவர்
    இன்பம் பெறும்படி உபசரிக்கும்
    இல்லத் தலைவனின் வாழ்க்கையதும்,
    இன்னல் தந்திட வருகின்ற
    பொல்லா வறுமையே வந்தாலும்
    போகா தென்றுமே பாழ்பட்டே…!

    லிமரைக்கூ…

    வருவிருந்தை உபசரிப்போன் வாழ்வு
    உயர்ந்திடும் விருந்தோம்பலினால், வறுமையதில் வரினும்;
    வராதே பாழ்படுத்தும் தாழ்வு…!

    கிராமிய பாணியில்…

    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
    வாற விருந்த ஒபசரிக்கணும்,
    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
    நல்லபடியா ஒபசரிக்கணும்..

    வூட்டுக்கு வாற விருந்தாளிய
    மொகங்கோணாம வரவேத்து
    நல்லபடியா ஒபசரிச்சி
    அனுப்புறவன் வாழ்க்கயில
    வறுமையே வந்தாலும்
    அதுனால அவனுக்கு
    வருந்தும்படியாப்
    பாதிப்பு எதுவும் வந்திடாதே..

    அதால
    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
    வாற விருந்த ஒபசரிக்கணும்,
    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
    நல்லபடியா ஒபசரிக்கணும்…!

    Share
  • பேத்தியுடன் விளையாடும் தாத்தா

    பேத்தியுடன் விளையாடும் தாத்தா

    எங்கள் அப்பா சீ.குப்புசாமி, 2016 ஜனவரி 27ஆம் தேதி, தோள்பட்டைப் புற்றுநோயால் மறைந்தார். அவர் மறைவதற்கு இரண்டரை மாதங்கள் முன்பு 2015 நவம்பரில் தீபாவளி அன்று அம்பத்தூர் சென்று அவரைச் சந்தித்தேன். தோளில் உள்ள கட்டியைத் துண்டால் மறைத்துக்கொண்டு, என் மகள் நித்திலாவுடன் அவர் விளையாடும் காட்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காலமெலாம் நெஞ்சில் சுமக்கும் அப்பா!

    காலமெலாம் நெஞ்சில் சுமக்கும் அப்பா!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    பெற்றிடுவாள் அன்னை பெரிதுவப்பார் அப்பா
    உற்ற துணையாகி உழைத்திடுவார் அப்பா
    கற்பனைகள் நிறைத்து கனவுகாண்பார் அப்பா
    காலமெலாம் எம்மைச் சுமந்திடுவார் அப்பா

    கைப்பிடுத்து எம்மைக் குருசேர்ப்பார் அப்பா
    கற்பவற்றைக் கற்க கையணைப்பார் அப்பா
    கல்வியென்னும் பயிரில் களையெடுப்பார் அப்பா
    கற்றவரின் அவையில் அமர்கவென்பார் அப்பா

    வளர்ச்சியினைக் கண்டு மனமகிழ்வார் அப்பா
    தளர்ச்சியினைக் கண்டால் தாங்கிடுவார் அப்பா
    விளைச்சலினை நோக்கி அழைத்திடுவார் அப்பா
    விகற்பநிலை வந்தால் விலக்கிடுவார் அப்பா

    பொய்யென்னும் கருவைப் பொசிக்கிடுவார் அப்பா
    பொறாமையெனும் நினைப்பைப் போக்கிடுவார் அப்பா
    மெய்யென்னும் கருவை விதைத்திடுவார் அப்பா
    மேதினியில் வாழ்வின் விளக்காவார் அப்பா

    நல்லநட்பை நாளும் நாடச்செய்வார் அப்பா
    நல்லறிஞர் பெருமை நயந்துரைப்பார் அப்பா
    எல்லையில்லா அன்பை ஈந்துநிற்பார் அப்பா
    இனிமையிலா நட்பை எடுத்தெறிவார் அப்பா

    வறியநிலை கண்டால் வதங்கிடுவார் அப்பா
    நெறிபிறழ்ந்த வாழ்க்கை நினைவிருத்தார் அப்பா
    அறமுரைக்கும் வள்ளுவம் அகநிறைப்பார் அப்பா
    அரைக்கணமும் வரம்பைக் கடந்துவிடார் அப்பா

    இலக்கியத்தை இங்கிதத்தை எனக்குரைப்பார் அப்பா
    இலக்குவிட்டுப் போகாது காத்திடுவார் அப்பா
    சமயநெறி, தத்துவங்கள் போதிப்பார் அப்பா
    சன்மார்க்க வழியினிலே கூட்டிச்செல்வார் அப்பா

    நான்விரும்பும் அத்தனையும் செய்திடுவார் அப்பா
    தான்விரும்பும் நல்லவற்றை எனக்களிப்பார் அப்பா
    வானிறங்கும் மழைபோல வழங்கிடுவார் அப்பா
    வாழ்நாளில் தெய்வமாய் விளங்குகிறார் அப்பா

    நோய்நொடிகள் அணுகாமல் வைத்தியராய் இருப்பார்
    நோய்வந்தால் அதைத்தீர்க்கும் மருந்தாயும் இருப்பார்
    உண்ணுகின்ற அத்தனையும் ஒழுங்காக்கி நிற்பார்
    உடலுளத்தை மனமிருத்தி ஒழுங்கமைப்பார் அப்பா

    வரமாக வாய்த்திட்ட மகவென்று சொல்வார்
    வாழ்வினிலே பெற்றிட்ட செல்வமெனப் புகழ்வார்
    நிலமீது மலர்ந்திட்ட பெருவாழ்வே என்பார்
    நெஞ்சினிலே எனையிருத்திக் கொஞ்சிடுவார் அப்பா

    பட்டம் நான்பெற்றேன் பலபதவி வகித்தேன்
    பலபேரும் மதித்திடவே பாங்குடனே வாழுகிறேன்
    பக்குவமாய் என்னைப் பாதுகாத்தார் அப்பா
    பக்கத்தில் இல்லாமல் படமிருந்தே பார்க்கின்றார்

    அப்பாக்கள் அனைவருக்கும் அருமருந்து ஆவர்
    அவரிளமை அத்தனையும் அர்ப்பணித்தார் எமக்கு
    அப்பாக்கள் வாழ்வினிலே ஆண்டவனே ஆவார்
    அவரன்பை அவர்பணியை அகமிருத்தி வாழ்வோம்

    Share
  • ஜன்பட் லோகா, நாட்டுப்புற அருங்காட்சியகம்

    ஜன்பட் லோகா, நாட்டுப்புற அருங்காட்சியகம்

    கர்நாடகத்தின் ராமநகரத்தில் அமைந்துள்ள ஜன்பட் லோகா, நாட்டுப்புறக் கலை, தொழில், வாழ்வியல் அருங்காட்சியகமாகத் திகழ்கிறது. ஐந்தாயிரம் கலைப் பொருள்களுக்கு மேல் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தத்ரூபமாகக் கண்முன் எழச் செய்துள்ளனர். நவீனம் என்ற பேரலையில் பாரம்பரியத் தொழில்களும் கலைகளும் அடித்துச் செல்லப்படும் சூழலில், அருங்காட்சியகத்திலாவது இவற்றைப் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கியது அருஞ்செயல். இதோ ஜன்பட் லோகாவின் உள்ளே ஒரு சிறு உலா.

    படப்பதிவு – வைஷ்ணவி அஜய்
    படத்தொகுப்பு – சுதா மாதவன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பக்தர்களே இப்படிச் செய்யாதீங்க!

    பக்தர்களே இப்படிச் செய்யாதீங்க!

    பழநி மலையில் கண்ட காட்சி. பக்தர்களே இப்படிச் செய்யாதீங்க!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குரங்கு செய்வதைப் பாருங்கள்

    குரங்கு செய்வதைப் பாருங்கள்

    குழந்தையின் பால்புட்டிக் காம்பை வைத்துக்கொண்டு இந்தக் குரங்கு செய்வதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ரங்கன் என்கிற ரங்கப்பா

    ரங்கன் என்கிற ரங்கப்பா

    பாஸ்கர்

    ரங்கனோடு சினிமா பார்க்க முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் சிவாஜி வரும்போது அவன் என் தொடையைக் கிள்ளி, “பார்ரா” என்பான்.

    அவன் என்னோடு கோலி, கில்லி ஆடினவன். சிறு வயது முதல் சிநேகம். எனக்குத் தெரிந்து டெர்லின் சட்டை போட்ட முதல் நண்பன். மூணு மாசம் பெரியவன். கோலி அடிக்கும்போது அவன் விரலை அழுத்திச் செலுத்தும் வேகம் ஆர்யபட்டா தான். எதிர்கோலி எகிறி விழும். அது கலர் கலராய் சுழன்று ஓடுவதைப் பார்ப்பது ஆனந்தம்.

    மஹா ரசிகன்.. எனக்கு சினிமா ரசனயை ஊட்டிய பலருள் இவனும் ஒருவன். கபாலி காமதேனுவில் இவனுக்கு எல்லாம் அத்துப்படி. கும்பலில் புகுந்து இவன் டிக்கெட் வாங்கி வரும் போது, எனக்கு இவன் சிவாஜியை விடப் பெரிதாய்த் தெரிந்தான்.

    கருட மூக்கு. படிப்பில் கெட்டி. என்னவோ என் மேல் அவனுக்கு ஒரு அன்பு. கூடவே வைத்துக்கொள்வான் ஒரு தளபதி போல். ஒரு நாள் எனக்கு ஜுரம் வந்த போது பக்கத்திலேயே இருந்தான். எனக்கு நட்பு தாண்டி ஒரு மரியாதை வந்துவிட்டது.

    பத்தாம் வகுப்பில் இடம் மாறும்போது அவன் நகர்ந்து போனான். மைதானத்தில், தெருவில் என எங்குப் பார்த்தாலும் சுவாரஸ்யம் இல்லாமல் பேசினான். ஒரு நாள் அவன் குடும்பம் காலி செய்த போது கழிப்பறைக்குள் சென்று அழுதேன். வெளியே வந்த போது அவன் வீட்டில் யாரும் இல்லை.

    ஞாயிறு அன்று அபிச்வரியில் அதே கருட மூக்கைப் பார்த்தபோது கொஞ்சம் வயிற்றைக் கலக்கியது. இது மூன்றாம் வருடமாம். ஒருவேளை நான் பக்கத்தில் இருந்து, டேய், புனர்ஜன்மம் கணேசனைப் பத்மினி அடிக்கற காட்சி எனச் சொல்லி, தொடையைக் கிள்ளியிருந்தால் அவன் எழுந்துகொண்டிருப்பான்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(405)

    குறளின் கதிர்களாய்…(405)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(405)

    அன்பீனு மார்வ முடைமை யதுவீனும்
    நண்பென்னும் நாடாச் சிறப்பு.

    -திருக்குறள் -74(அன்புடைமை)

    புதுக் கவிதையில்…

    அடுத்தவரிடம் காட்டும் அன்பு
    அனைவரையும் விரும்ம்பும்
    ஆர்வத்தை உருவாக்கும்..
    அதுவே
    அறிந்து நட்பாகிடும்
    அருஞ்சிறப்பையும் தந்திடுமே…!

    குறும்பாவில்…

    அனைவரையும் விரும்பும்
    ஆர்வத்தை உருவாக்கும் அன்பதுவே
    நட்பெனும் சிறப்பையும் தருமே…!

    மரபுக் கவிதையில்…

    அடுத்தவர் தம்மிடம் வெறுப்பகற்றி
    அவரிடம் விருப்பொடு பழகுமார்வம்
    கொடுத்திடும் அன்பெனு மரும்பண்பே
    கூடியே வாழவும் வைத்திடுமே,
    தடுத்திடா உறவதால் தான்தருமே
    தரணியில் நட்பெனும் நல்லறமே,
    அடுத்ததால் வந்திடும் சிறப்பதுவே
    அகிலமும் அன்பினா லிணைந்திடுமே…!

    லிமரைக்கூ…

    அடுத்தவருடன் பழகுமார்வம் தருமே,
    அன்பதுவே நட்பெனும் நல்லறம் தருவதால்
    சிறப்பெல்லாம் சேர்ந்தே வருமே…!

    கிராமிய பாணியில்…

    அன்புகாட்டணும் அன்புகாட்டணும்
    அடுத்தவங்ககிட்ட அன்புகாட்டணும்,
    பகமயில்லாம நட்புவளர
    அன்புகாட்டணும் அன்புகாட்டணும்..

    அன்பானது
    அடுத்தவங்ககிட்ட பழகிற
    ஆர்வத்தக் குடுக்குமே,
    அதுனால
    அவுங்களோட நட்பாகிற
    செறப்பும் சேருமே..

    அதுனால
    அன்புகாட்டணும் அன்புகாட்டணும்
    அடுத்தவங்ககிட்ட அன்புகாட்டணும்,
    பகமயில்லாம நட்புவளர
    அன்புகாட்டணும் அன்புகாட்டணும்…!

    Share
  • திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க | நிர்மலா ராகவன்

    திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க | நிர்மலா ராகவன்

    திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய என்ன செய்ய வேண்டும்? சிக்கல்கள் எதனால் எழுகின்றன? அவற்றை எப்படித் தவிர்ப்பது, தீர்ப்பது? மகிழ்ச்சியை, இனிமையைப் பெருக்குவது எப்படி? அனுபவங்கள் வாயிலாக ஆலோசனை வழங்குகிறார் நிர்மலா ராகவன். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழநி மலையில் குரங்கும் குட்டியும்

    பழநி மலையில் குரங்கும் குட்டியும்

    பழநி மலையில் கண்ட குரங்கும் குட்டியும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிவியல் கடிதம் – 2: புறஊதா ஒளியில் சிதையும் நெகிழி

    அறிவியல் கடிதம் – 2: புறஊதா ஒளியில் சிதையும் நெகிழி

    2. புறஊதா ஒளியில் சிதையும் நெகிழி

    அன்பிற்குரிய அறிவியல் ஆர்வலனுக்கு,

    காலை வணக்கம்.

    நெகிழிக் கழிவுகளால் சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக, எளிதில் சிதைவடையும் பாலிமர்களை (பலபடிகள்) உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் பாலிலாக்டைடை (polylactide) அடிப்படையாகக் கொண்ட, எளிதில் சிதைவடையும் பாலிமர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சார்ந்த செய்தியைத் தான் இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறேன்.

    சிதைவடையக்கூடிய பாலிலாக்டைடு அல்லது பாலிலாக்டிக் அமிலம் (polylactic acid), கோப்பைகள், பைகள், மக்கும் மருத்துவச் சாதனங்கள், போன்றவற்றில் முக்கிய மூலப்பொருளாகத் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சோளம், மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மற்றும் கரும்பு ஆகியவற்றில் உள்ள சர்க்கரை புளிக்கவைக்கப்பட்டு லாக்டிக் அமிலம் பெறப்படுகிறது. பின்னர், லாக்டிக் அமிலத்திலிருந்து குறுக்கப் பலபடியாக்கல் (Condensation polymerization) முறையில் பாலிலாக்டைடு தயாரிக்கப்படுகிறது.

    பாலிலாக்டைடினால் ஆக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, கழிவுகளாக வெளியேற்றிய பின்னர், அவற்றைத் தொழில்துறை உரமாக்கல் முறையில் (62°C வெப்பநிலையும், 60%-மேலான ஈரப்பதமும் தேவைப்படும்) சிதைக்கப்படுகிறது. எனினும், பாலிலாக்டைடு இயற்கைச் சூழல்களில் அதாவது, மண்ணில் அல்லது நீரில், குறிப்பாகக் கடல் நீரில் எளிதில் சிதைவடைவதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

    எனவே, இயற்கைச் சூழலில் பாலிலாக்டைடின் சிதைவுறும் தன்மையைக் கூட்டுவதற்காகச் சில உத்திகள் கையாளப்படுகின்றன. அதில் ஒன்று, லாக்டைடை (lactide) மற்ற மோனோமர் உடன் சேர்த்துப் பலபடியாக்கல் (polymerization) முறையில் தயாரிப்பதாகும். இவ்வாறாகப் பெறப்படும் பாலிமர்கள் எளிதில் நீராற்பகுப்புக்கு உட்பட்டுச் சிதையக்கூடும். இதனால் சூழ்நிலைக்குத் தீங்கு நேரிடாது.

    இங்கு மோனோமர் பற்றியும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதாவது, மோனோமர் என்பது பாலிமரில் இருக்கும் ஓர் அடிப்படைத் தொகுதி அல்லது மூலக்கூறு. உதாரணமாக, பாலித்தீன் எனப்படும் பாலிஎத்திலீன் நெகிழி, எண்ணற்ற எத்திலீன் மூலக்கூறுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதில் எத்திலீன் மூலக்கூறு தான் மோனோமர்.

    சரி, நான் சொல்ல வந்த செய்தி இதுதான்.

    பாத் பல்கலைக்கழக (University of Bath) விஞ்ஞானிகள் தற்போது புறஊதா ஒளியை மட்டுமே பயன்படுத்தி எளிதில் சிதைவடையும் நெகிழியினைத் தயாரித்துள்ளனர். பாலிலாக்டைடில் வெவ்வேறு அளவு சர்க்கரை மூலக்கூறுகளை (மோனோமர்) இணைப்பதன் மூலம் நெகிழியின் சிதைவுத்தன்மை அதிகரிப்பதை ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

    பலபடியாக்கல் முறையில் சாந்தேட் (xanthate) மற்றும் லாக்டைட் (lactide) ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு பாலி(லாக்டைட்-கோ-சாந்தேட்) (poly(lactide-co-xanthate)) தயாரிக்கப்பட்டுள்ளது. பாலிலாக்டைடுடன் ஒப்பிடும்போது பாலி(லாக்டைட்-கோ-சாந்தேட்) புறஊதா ஒளியில் எளிதில் சிதைவடைகிறது. ஆய்வு முடிவுகளின்படி, புறஊதா ஒளியில் வைக்கப்பட்ட பாலி(லாக்டைட்-கோ-சாந்தேட்), 6 மணி நேரத்திற்குள் 40% சிதைவு அடைவது கண்டறியப்பட்டுள்ளது.

    ஆனால், இந்தப் பாலிமர் சிதைவடையும் வினை வழிமுறையைப் பற்றி இன்னும் விரிவாக ஆராய வேண்டும் என்கிறது இக்குழு.

    எனினும், கடல் நீர், மண் போன்ற இயற்கைச் சூழலில் பாலி(லாக்டைட்-கோ-சாந்தேட் எளிதில் மக்கும் தன்மையுடையதாக இருக்கும் என்று இக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் புதிய பாலிமரைத் தற்போதுள்ள நெகிழி உற்பத்திச் செயல்முறையின் மூலமே எளிதில் தயாரிக்க முடியுமாம். இதனால் தயாரிப்புச் செலவும் குறைவாகவே இருக்கும்.

    இப்படிக்கு
    கனிமவாசன்

    நாள்: ஜூன் 12, 2022

    Reference

    UV degradation of poly(lactic acid) materials through copolymerisation with a sugar-derived cyclic xanthate. C. Hardy, G. Kociok-Köhn, A. Buchard, Chemical Communications, 58 (2022) 5463.

    Share
  • காணாமல் போனவர்கள்

    காணாமல் போனவர்கள்

    பாஸ்கர்

    ஒவ்வொரு வருடமாக
    ஒன்றைத் தொலைத்துக்கொண்டு இருக்கிறேன்.

    சென்ற வருடம் வரை வந்த பூம்பூம் மாட்டுக்காரன்
    இப்போது வருவதில்லை.

    சின்ன பிராயத்தில்
    மலைப்பாம்பைச் சுற்றிய பிச்சைக்காரன்
    எங்கிருப்பான் எனத் தெரியவில்லை.

    திருவிழாவில் பயாஸ்கோப்பில்
    ஊமைப்படம் காட்டியவன்
    திரைக்குள் இருந்து வெளியே வரவில்லை.

    பல்லி மிட்டாய் தாத்தாவுக்கு
    அப்போதே வயது அறுபது.

    ராப்பிச்சை என்ற
    வர்க்கமே இப்போதில்லை.

    தரையைத் தட்டும் நேபாளி
    குச்சியோடு போனான்.

    இருட்டையும் வெளிச்சத்தையும்
    முழுங்கிக்கொண்டு
    நிற்கிறது மரம் .
    என்னைப் போல
    இவர்களையும் அது
    பார்த்துக்கொண்டு இருக்கிறது
    இன்றும்.

    Share