Blog

  • தாம்பரம் சுவரோவியங்கள்

    தாம்பரம் சுவரோவியங்கள்

    தாம்பரம் மேம்பாலச் சுவர்களை அலங்கரிக்கும் அழகு திகழும் ஓவியங்கள் இதோ. கல்லூரி மாணவர்களின் கைவண்ணம், கலை வண்ணமாக மிளிர்வதைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பசுக்களைக் கொல்லாதே | சிவசேனையின் களப்பணிகள்

    பசுக்களைக் கொல்லாதே | சிவசேனையின் களப்பணிகள்

    ‘பசுவைத் தெய்வமாக மதிக்கின்றோம். இந்த மண்ணில் பசுக்களைக் கொல்லாதே. இந்த மண்ணின் மரபுகளை மதித்து இருப்பதானால் இரு, இல்லாவிட்டால் வெளியேறு’. இதுவே சச்சியின் குரல், சிவசேனையின் முழக்கம். யாழ்ப்பாணத்திலும் தமிழ் ஈழம் நெடுகிலும் நடைபெற்ற களப்பணிகள், போராட்டங்கள், எழுச்சிகள் குறித்து விவரிக்கிறார், மறவன்புலவு சச்சிதானந்தன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உயிரைக் காத்த வரதன் | முகுந்த இராமானுஜ தாசர் நேர்காணல்

    உயிரைக் காத்த வரதன் | முகுந்த இராமானுஜ தாசர் நேர்காணல்

    தன் உயிரைக் காஞ்சி வரதன் காத்து அருள் பாலித்தது எப்படி? உயிரில், உணர்வில் தேவராஜன் கலந்தது எப்படி? தாமே இயற்றிய பாமாலைகளால் இறைவன் புகழைப் பாடுகிறார் முகுந்த இராமானுஜ தாசர். அவரது நேர்காணலின் இரண்டாவது பகுதி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ராக்கெட்ரி நம்பி விளைவு – சில கேள்விகள்

    ராக்கெட்ரி நம்பி விளைவு – சில கேள்விகள்

    நடிகர் மாதவன், முதன்முதலாக இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்படத்தைப் பார்த்தேன். இந்தக் கேள்விகளை, உறுத்தல்களைத் தவிர்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்து என்ன?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(409)

    குறளின் கதிர்களாய்…(409)

    செண்பக ஜெகதீசன்

    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க்கு அணி.

    – திருக்குறள் -115 (நடுவு நிலைமை)

    புதுக்கவிதையில்…

    வாழ்க்கையில் தீவினையால்
    வந்திடும் துன்பமும்,
    நல்வினையால்
    நாடிவரும் வளவாழ்வும்
    எல்லோர்க்கும் உள்ளதுதான்
    என்பதை உணர்ந்தே
    அதற்காக
    நல்லறமாம்
    நடுவு நிலைமையில்
    நெஞ்சம் தடுமாறாமல்
    நேராயிருப்பதே
    மேலானவர்களுக்கு
    மேலும் அழகே…!

    குறும்பாவில்…

    வருமிடரும் வளவாழ்வும் எல்லோர்க்கும்
    உள்ளதுதானென உணர்ந்தே நடுநிலை மாறா
    நற்பண்பே மேலானவர்களுக்கு அழகு…!

    மரபுக் கவிதையில்…

    வாழ்வினில் செய்த தீவினையால்
    வந்திடும் இடர்கள் பலவுடனே
    தாழ்விலா நல்ல செயலெல்லாம்
    தந்திடும் வளங்கள் பெருகியேநல்
    வாழ்வதும் எல்லா மக்கட்கும்
    வருமென நன்றாய் உணர்ந்தறிந்தே
    தாழ்ந்திடா நடுவு நிலைமாறாத்
    தன்மையே அழகு சான்றோர்க்கே…!

    லிமரைக்கூ…

    இன்பமும் துன்பமும் வருமே
    எல்லோர்க்கும் என்பதுணர்ந்தே நடுநிலை மாறாதிருத்தல்
    சான்றோர்க்கு அழகைத் தருமே…!

    கிராமிய பாணியில்…

    மாறாத மாறாத
    நடுவுநெலய மாறாத
    நீதி நெலைக்க வாழ்வு செறக்க
    நடுவுநெலய மாறாத..
    எல்லாருக்கும் வரும் வாழ்க்கயில
    எறக்கமாத் துன்பமும்,
    ஏத்தமாச் செல்வப் பெருக்கும்..
    இதயெல்லாம் நல்லா ஒணர்ந்து
    இதுனால
    நடுவுநெலயில மாறாமயிருக்கும்
    நல்ல கொணமே
    பெரியவங்களுக்கு அழகு
    பெரும எல்லாமே..
    அதால
    மாறாத மாறாத
    நடுவுநெலய மாறாத
    நீதி நெலைக்க வாழ்வு செறக்க
    நடுவுநெலய மாறாத…!

    Share
  • தேவராஜன் போட்ட பிச்சை | முகுந்த இராமானுஜ தாசர் நேர்காணல்

    தேவராஜன் போட்ட பிச்சை | முகுந்த இராமானுஜ தாசர் நேர்காணல்

    பஜனைகளில் புதிய வீச்சையும் விறுவிறுப்பையும் கூட்டி, அர்ப்பணிப்புடன் ஆனந்த நர்த்தனம் ஆடி, திக்கெட்டும் சென்று திருப்பணிகள் ஆற்றி வரும் முகுந்த இராமானுஜ தாசர் அவர்களின் நேர்காணல் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கனடாவில் படிப்பதால் என்ன நன்மை?

    கனடாவில் படிப்பதால் என்ன நன்மை?

    கனடாவில் படிப்பதால் என்ன நன்மை? ஒரே பணிக்கு இந்தியாவைக் காட்டிலும் கனடாவில் ஊதியம் அதிகமாக இருக்குமா? கனடா குடியுரிமை வாயிலாக அமெரிக்காவில் பணியாற்ற முடியுமா? விரிவாகப் பதில் அளிக்கிறார்,கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிவசேனை எதற்காக? | மறவன்புலவு க.சச்சிதானந்தன் நேர்காணல்

    சிவசேனை எதற்காக? | மறவன்புலவு க.சச்சிதானந்தன் நேர்காணல்

    காவி உடை, களப் போராட்டங்கள், சிவசேனை என அடுத்தடுத்து அதிரடியாக இயங்கிக்கொண்டிருக்கிறார், மறவன்புலவு சச்சிதானந்தன். அவரது சமூக, அரசியல் பணிகள் இலங்கையில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. அவர் மீது விசாரணைகளும் விமர்சனங்களும் கூடவே எழுகின்றன. இந்தப் பணிகளுக்கு இப்போது என்ன தேவை? இதோ அவருடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தீராநதி

    தீராநதி

    பாஸ்கர்

    முடியவில்லை இப்போதும் தனிமையின் தருணங்கள்
    ஊஞ்சலை அசைத்துவிட்டு இரைச்சலில் திளைக்கிறேன்
    ரேடியோவை அலறவிட்டு அமைதியை விரட்டுகிறேன்
    சுவர்ப்படங்களில் பேசியபடி பகல் பொழுதைக் கழிக்கிறேன்
    தபால்காரன் தலையைக் காண கால்கடுக்க நிற்கிறேன்
    பெருமரத்தின் நிழலில் எனை நினைத்தே இணைகிறேன்
    யாருமற்ற பகலும் இங்கே இருளில்லாத இரவு தான்
    தூக்கமற்றுப் போனதெல்லாம் துக்கமில்லை இங்கெனக்கு
    தூங்காமல் போனதும் சோகமில்லை எப்போதும்
    அடுத்து என்ன என்பதிலும் பெரிதான ஏக்கமில்லை
    பகிர்தலில்லை நகர்தலில்லை கணத்தோடு ஈடில்லை
    பழியாய் நான் பதுங்கி நிற்கிறேன் குழி ஏதுமில்லாமல்
    முடிவின் ஆரம்பமே முத்தமிட வருவதெப்போ?

    Share
  • நித்திலாவின் யோசனைகள் – 5

    நித்திலாவின் யோசனைகள் – 5

    நித்திலாவின் புதிய யோசனை. உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கனடாவில் உதவித் தொகையுடன் படிப்பது எப்படி?

    கனடாவில் உதவித் தொகையுடன் படிப்பது எப்படி?

    கனடாவில் கல்வி உதவித் தொகையுடன் படிப்பது எப்படி? இதை வழங்கும் கல்வி நிறுவனங்கள் எவை? இதைப் பெறுவது எப்படி? இதற்கான தகுதிகள் என்னென்ன? பதில் அளிக்கிறார்,கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முதலமைச்சர் அண்ணா வானொலி உரை

    முதலமைச்சர் அண்ணா வானொலி உரை

    தமிழ்நாட்டரசின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு வானொலியில் ஆற்றிய உரை இங்கே. அன்று அவர் பேசிய பலவும் இன்றும் பொருந்துவது நம்மை வியப்பில் ஆழ்த்தும். 55 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்போடு திகழும் இந்தக் குரலைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 108 வேல் பாடல் | பிரேமா நாராயணஸ்வாமி

    108 வேல் பாடல் | பிரேமா நாராயணஸ்வாமி

    108 முறைகள் ‘வேல்’ என்ற சொல் இடம்பெறும் பாடல், இது. 78 வயதில் இதை இயற்றி, இசையமைத்து, கணீர் என்று பாடுகிறார், பிரேமா நாராயணஸ்வாமி. கேட்டு மகிழுங்கள். வேல்! வேல்! வெற்றிவேல்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி? – 2

    குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி? – 2

    குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி? தம் அனுபவங்களின் வாயிலாக நிர்மலா ராகவன் முக்கியமான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்கியுள்ளார். இந்த இரண்டாம் பகுதியைப் பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கரையும் காலம்

    கரையும் காலம்

    பாஸ்கர்

    நாற்பது வருடங்கள் கழித்துப் பள்ளியில் கூட்டம்
    வந்தோர் எல்லோரும், கூடப் படித்தவர்கள்
    எவர் பெயரும் நினைவில்லை முகமும் புரியவில்லை
    முட்டியிட்ட கால்களும் பிரம்படியும் இன்றும் வலித்தன
    வகுப்பறை ஈரப்பதம் இன்னும் அப்படியே இருக்கிறது
    பெரிய வாத்திகளின் புகைப்படம் சற்று மிரள வைக்கிறது
    மணியடிக்கும் கண்ணையா முகம் மனத்தில் நிற்கிறது
    வேல்முருகன் ஐஸ் ஆயா என் தாயார் போலிருப்பாள்
    எவ்வளவோ குட்டு பட்டும் புத்தி மட்டும் உசரவில்லை
    வந்தோர் யாவரும் குழுக்குழுவாய் பிரிந்தனர், பேசினர்
    அன்று போலவே இன்றும் தனியாய் நின்று இருந்தேன்
    போட்டோ என்ற போது ஓரத்தில் நிற்க வைத்தார்கள்
    ஒருத்தர் மட்டும் முதுகில் தட்டி, சாப்பாட்டு ராமா என்றார்
    சிரித்துவிட்டுப் பெயர் கேட்க யாரையோ கட்டிப் பிடித்தார்
    யாரோ பழம் கொடுத்தார், எவரோ பூ கொடுத்தார்
    வாத்திகள் மலர்ந்தனர், மாணவர்களாக மாறினர்
    வாசனைகள் மாறின – கார்கள் திரும்பப் பறந்தன
    கட்டடத்தைப் பார்த்தவாறு கால்கள் இயங்கின
    பேருந்தில் அமர்ந்த பெரியவரிடம் சொன்னேன்
    “நல்லா படிச்சிருக்கலாம் இல்ல”

    Share