தீராநதி
பாஸ்கர்
முடியவில்லை இப்போதும் தனிமையின் தருணங்கள்
ஊஞ்சலை அசைத்துவிட்டு இரைச்சலில் திளைக்கிறேன்
ரேடியோவை அலறவிட்டு அமைதியை விரட்டுகிறேன்
சுவர்ப்படங்களில் பேசியபடி பகல் பொழுதைக் கழிக்கிறேன்
தபால்காரன் தலையைக் காண கால்கடுக்க நிற்கிறேன்
பெருமரத்தின் நிழலில் எனை நினைத்தே இணைகிறேன்
யாருமற்ற பகலும் இங்கே இருளில்லாத இரவு தான்
தூக்கமற்றுப் போனதெல்லாம் துக்கமில்லை இங்கெனக்கு
தூங்காமல் போனதும் சோகமில்லை எப்போதும்
அடுத்து என்ன என்பதிலும் பெரிதான ஏக்கமில்லை
பகிர்தலில்லை நகர்தலில்லை கணத்தோடு ஈடில்லை
பழியாய் நான் பதுங்கி நிற்கிறேன் குழி ஏதுமில்லாமல்
முடிவின் ஆரம்பமே முத்தமிட வருவதெப்போ?