தமிழ்நாட்டரசின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு வானொலியில் ஆற்றிய உரை இங்கே. அன்று அவர் பேசிய பலவும் இன்றும் பொருந்துவது நம்மை வியப்பில் ஆழ்த்தும். 55 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்போடு திகழும் இந்தக் குரலைக் கேளுங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.