Blog

  • குறளின் கதிர்களாய்…(408)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(408)

    மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
    துன்பத்துள் துப்பாயார் நட்பு.

    -திருக்குறள் -106 (செய்ந்நன்றி அறிதல்)

    புதுக் கவிதையில்…

    குற்றமற்ற
    நல்லோர் உறவை
    நாளும் மறக்கலாகாது,
    துன்பம் வந்த காலத்தில்
    துணையாய் இருந்தே
    உதவியோர் நட்பை
    ஒருநாளும்
    விட்டு விலகிடக்கூடாது…!

    குறும்பாவில்…

    மறந்திடாதே குறையிலா நல்ல
    மனிதர்களின் உறவை, விட்டிடாதே துன்பத்தில்
    துணையிருந்தே உதவியோர் நட்பை…!

    மரபுக் கவிதையில்…

    குறைக ளேது மில்லாத
    குணத்தில் நல்ல மாந்தர்தம்
    உறவை யென்றும் கருதியேதான்
    உளத்தா லவரை மறவாதே,
    துறக்கக் கூடா தொன்றுண்டு
    துன்பம் வந்த வேளையிலே
    உறவாய்க் கூடத் துணையிருந்தே
    உதவி செய்தோர் நட்பதுவே…!

    லிமரைக்கூ…

    மறக்கக் கூடா உறவு
    மாசிலா நல்லோருடனானதே, வேண்டாம் துன்பத்தில்
    உதவியோர் நட்பின் துறவு…!

    கிராமிய பாணியில்…

    மறக்காத மறக்காத
    ஒருநாளும் மறக்காத,
    ஆபத்தில செய்த ஒதவிய
    ஒருநாளும் மறக்காத..

    கொணத்தில ஒசந்த
    கொறயே யில்லாதவங்க
    ஒறவ மனசால கூட
    ஒருநாளும் மறக்காத..

    அதுபோல
    துன்பப்படுற நேரத்தில
    தொணயாயிருந்தே
    ஒதவுனவுங்க நட்ப
    ஒருநாளும் உட்டு வெலகிடாத..

    அதால
    மறக்காத மறக்காத
    ஒருநாளும் மறக்காத,
    ஆபத்தில செய்த ஒதவிய
    ஒருநாளும் மறக்காத…!

    Share
  • கோவையில் ஒரு கொண்டாட்டம்

    கோவையில் ஒரு கொண்டாட்டம்

    கோவையில் அண்மையில் பிரெஞ்சு கார்னிவல் என்ற விழா நடைபெற்றது. குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லாத் தரப்பினரையும் கவரும் வகையில் நிகழ்ச்சியை அமைத்திருந்தார்கள். இந்த வண்ண மயமான, கோலாகல, கொண்டாட்டத்திலிருந்து சில துளிகள் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவையில் சந்தித்த வழிப்பயணி

    கோவையில் சந்தித்த வழிப்பயணி

    கோவை நகரப் பேருந்தில் இவரைச் சந்தித்தேன். படபடவெனப் பேசிக்கொண்டு வந்தார். ஆதரவற்ற நிலையில் உள்ளார். தமிழக அரசு, இவரைக் கண்டறிந்து, முதியோர் உதவித்தொகை வழங்க ஆவன செய்ய வேண்டுகிறேன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தேவையா?

    குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தேவையா?

    குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தேவையா? வங்கிப் பரிவர்த்தனைகளில் சிறுவர்கள் நேரடியாக ஈடுபடலாமா? அவர்கள் நிதியறிவு பெறத் தொடங்குவது எப்படி? எந்த வயதில்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சர்க்கரை வள்ளிக் கிழங்குப் பொரியல்

    சர்க்கரை வள்ளிக் கிழங்குப் பொரியல்

    அருமையான சுவையும் சத்தும் நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்குப் பொரியல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குழந்தைகளுக்கான முதலீட்டுத் திட்டங்கள்

    குழந்தைகளுக்கான முதலீட்டுத் திட்டங்கள்

    குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முன்கூட்டியே சேமிக்கத் தொடங்குவது அவசியம். அவர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றங்களுக்கும் இலக்குகளுக்கும் நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது. தரமான கல்வி, திறன்கூட்டும் பயிற்சிகள், போட்டித் தேர்வுகள், வெளிநாட்டு மேற்படிப்பு, திருமணம் போன்ற பலவற்றுக்கும் திட்டமிடுவது நல்லது. ஆனால், இதை எங்கே தொடங்குவது? குழந்தைகளுக்கான முதலீட்டுத் திட்டங்கள், வாய்ப்புகள் என்னென்ன உள்ளன? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மா​னிட உருவில் பூமிக்கு வந்த தெய்வங்களே மருத்துவர்கள்!

    மா​னிட உருவில் பூமிக்கு வந்த தெய்வங்களே மருத்துவர்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா   
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தேடிக் கண்டு கொண்டேன் – திரு
    மாலொடு நான்முகனும்
    தேடுத் தேடொணா தேவனை யென்னுள்ளே
    தேடிக் கண்டு கொண்டேன்

    என்னும் திருமுறைப் பாடல் இறைவனை உள்ளத்தினுள்ளே கண்டு கொண்டதாக உரைத்து நிற்கிறது. உள்ளத்தினுள் கண்ணுற்றேன் இறைவனை என்று சொல்லும் இந்தத் திருமுறைக்கு இப்போ என்னதான் அவசியம் என்று எண்ணுகிறீர்களாகண்கண்ட தெய்வம் என்கிறோம் கலியுக வரதன் என்கிறோம். பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்கிறோம். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறோம். கூப்பிட்ட  குரலுக்கு ஓடிவருவான் என்கிறோம். இப்படி எல்லாம்  நாங்கள்  நினைத்திருக்கும் கடவுளைக் கண்ணால் கண்டோமா என்றால் அதற்குச் சரியான பதிலை வழங்குவது கடினம். சரியான பதிலைத் தருகிறோம் என்று சிலர் முன்வந்தாலும்கூட அங்கும் சரியான பதில் கிடைக்குமா என்பதும் ஐயத்துக்குரியதே. கடவுளைக் காணமுடியுமாஎன்பது உலகத்தில் அன்று தொடக்கம் இன்றுவரை மனதுக்குள் பதிந்திருக்கும் பெரு வினாவாகும். எதிர்பாராமல் எதிர்பாரா நேரத்தில் யாராவது உதவி நிற்கும் வேளை அவரை “கடவுள் போல வந்தீர்கள்” என்று அழைப்பது நம்வாழ்வில் காண்கிறோம். தக்க சமயத்தில் கைகொடுக்கும் செயலைக் கடவுளின் செயலாகக் கருதுகிறோம். தக்க சமயத்தில் உதவு நிற்பவர்களைக்கூட  சமூகத்தில் கடவுள் வடிவிலேயே  காணும் நிலையும் காணப்படுகிறது.  தேவ உலகம் இருக்கிறது. அங்கு தேவன் இருக்கின்றான். அந்தத் தேவன் உதவிடுவான் என்னும் நம்பிக்கை சமுகத்தில் வேரூன்றி இருக்கிறது எனலாம்.

    கடவுளை நம்பாதவர்கூட தம்மை அறியாமலே “கடவுளே” என்று சொல்லு வதையும் காண்கிறோம். கடவுளுக்கென பல பெயர்கள் பல உருவங்கள் கொடுக்கப்பட்டாலும் “கடவுள் ஒருவரே” என்னும் கருத்தை மறுப்பதற்கும் இல்லை என்பதும் கருத்திருத்த வேண்டியதே ஆகும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட “கடவுளை இயற்கை வடிவில் காண்கிறார்கள்” என்பதும் நோக்கத்தக்க தாகும். அதுமட்டுமல்ல கடவுள் என்னும் பெயரை உச்சரிக்க விரும்பாதவர்கள் “எமக்கு மேற் பட்ட சக்தி” என்று அழைப்பதும் கருத்திருத்தக் கூடியதே.

    மனிதன் வாழுகின்ற இந்தப்பூமி இப்போது அவலத்தின் மடியில் அல்லற்பட்டு நிற்கிறது. ஆர்வருவார் காப்பாற்ற என்று அவலக்குரல் எழுப்புகிறது. சாதரண வாழ்க்கை சீர்குலைந்து நிற்கிறது. சட்டமா ஒழுங்காசமயமா கோவிலாஎன்றெல்லாம் எண்ணி நிற்கும் நிலையும் காணப்படுகிறது. இனத்துக் காய் சண்டைமொழிக்காகச் சண்டைமதத்துக்காய் சண்டைஎன்று சண்டை செய்த மனோபாவம் மங்கிப்போய் நிற்கிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்  உணர்வுடன் கலக்க ஆரம்பிக்கின்றது.  சாதிகள் பறக்கின்றன. தத்துவங்கள் பறக்கின்றன. ஏதுவரும் எனவறியா ஏக்கமே மிகுகிறது. போதிமரப் புத்தரும்சிலுவைதரும் கர்த்தரும்பிறை காட்டும் அல்லாவும்விடையேறும் பெருமானும்பள்ளி கொள்ளும் திருமாலும் எல்லாமே சரியென்னும் நிலையிப்போ எழுகிறது.

    எல்லாக் கடவுளும் எல்லா மதங்களும் இணைகின்ற புரட்சியைத்தான் இப்போது காணுகிறோம். இந்தப் புரட்சிக்கு வித்திட்டு சமத்துவத்தை சமநிலையை சமதர்மத்தை உருவாக்கியது கொடுமையான கொரனோ என்னும் நோயாகும்.

    இது ஏன் வந்ததுயார் பரப்பியதுஇதில் அரசியல் உண்டாபொருளாதார நோக்குண்டாஎன்றெல்லாம் வாதப்பிரதி வாதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் விமர்சனங்களையும் விதண்டா வாதங்களையும் வெளிப்படுத்துவதில் காலத்தை கழிக்கிறார்கள். தொலைக்காட்சிகள்முகநூல்கள், கைப்பேசிகள் யாவும் சரியான வகையில் பயன்படாமல் போகும் நிலையும் காணப் படுகிறது.

    இப்படியான விடயங்களை எதற்காக இங்கு காட்டுகிறீர்கள் என்னும் வினா உங்கள் எல்லோர் உள்ளத்திலும் நிச்சயமாக எழாமல் இருக்கவே முடியாது! அவசியம் கருதியே சொல்லும் நிலை! அனைவரின் மனத்திலும் அமரவேண்டிய நிலை! அதனாலேயே இத்தனை விளக்கங்கள்!

    கொரனோ வந்து கோரமாய்த் தாண்டவம் ஆடி, பல உயிர்களைப் பறித்தபடி இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்க்கவோ பேசவோ கைகுலுக்கவோ முடியாத நிலையைக் கொரோனா ஏற்படுத்திவிட்டது. உறவுகள் பிரிவுகள் ஆகிவிட்டன. கூடினால் ஆபத்து!  குலவினால் ஆபத்து! நினைக்கவே இருள் எம்மைச் சூழந்த உணர்வே எழுகிறது.

    இந்த நிலையில் வைத்தியர்களும் தாதியர்களும் எப்படி இருக்கிறார்கள் என்றால் மண்மீது வந்த மருத்துவ தெய்வங்களாய் மாறியிருக்கிறார்கள் என்று தான் கொள்ள வேண்டும். சாதாரண வேளையில் மருத்துவம் பார்ப்பதைவிட இக்கட்டான  நிலையில் மருத்துவம் பார்ப்பதும் கம்பியில் நடப்பது போல் என்றுதான் சொல்லவேண்டும். கொரனோ காலத்தில்  வைத்தியர்களின் சேவையையும், மருத்துவத்தின் துணையினையும், போற்றாமல் இருக்கவே முடியாது! தொற்றியவர்களைப் பராமரிக்கும் மருத்துவர்களே கொரனோவுக்கு இலக்காகி உயிரை இழக்கும் நிலைகூட நேர்ந்திருக்கிறது.  வைத்தியர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பவர்கள் மிகவும் குறைவென்றே சொல்லலாம். தங்களின் சிக்கல்கள் தீர்ந்தால் போதும் என்று எண்ணுபவர்கள் –  மருத்துவர்கள் படுகின்ற மனவுளைச்சல்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார்களா என்றால் – பெரும்பாலும் இல்லை.

    வைத்தியர்கள், தாதியர்கள் வானத்தால் வந்து குதித்தவர்கள் அல்ல. அவர்களும் எங்களை ஒத்தவர்களே. குடும்பம் அவர்களுக்கும் இருக்கிறது. அன்பான கணவன் ஆசையான குழந்தைஅன்பான மனைவி அணைத்திடக் குழந்தைஅப்பாஅம்மாசகோதரங்கள்என்று உறவுகளால் பிணைக்கப்பட்டே  இருக்கிறார்கள். அப்படி அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்தே விடுகிறோம். வைத்தியசாலை சென்றால் அது எந்த நேரமானாலும் எம்மைக் கவனித்துப் பராமரிக்கும் கடமை அவர்களுக்கு உண்டு என்பதை மட்டுமே நாமெல்லோரும் நினைவில் வைத்தபடியே இருக்கிறோமே தவிர – அவர்களும் மனிதர்களே அவர்களுக்கும் களைப்பு இருக்கும். அவர்களுள்ளும் பல நினைப்புகள் ஓடும் என்பதையெல்லாம் எவருமே எண்ணுவதே இல்லை. வைத்தியத்துக்குப் போய்விட்டால் சுகமாக்கி அனுப்புவது அவர்களது கடமை மட்டுமே என்றுதான் எண்ணுகிறோம். அப்படி நினைப்பதற்கு நாம் ஒருவரல்ல. எம்மைப் போல் பலரும் அங்கு வந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரையும் முகங் கோணாமல் சினங்காட்டாமல் பசியை நித்திரையை மறந்து மருத்துவர்கள் தாதியர்கள் வேலை செய்யவில்லை பணியாற்றுகிறார்கள் என்பதை எம்மில் பலரும் நினைத்துக்கூடப் பார்ப்பதே இல்லை.

    இரத்தமும்சதையும்மரணமும்ஓலமும் அவர்களின் நாளாந்த வாழ்க்கை ஆகிவிட்டது. அவர்கள் படுக்கைக்குப் போனாலும் அவர்கள் கனவில்கூட  ஓலமிட்டு நிற்பவரும்மரணவாயில் நிற்பவரும்தான் வந்து நிற்பார்கள். கார் இருந்தும்நல்ல வீடிருந்தும்நல்ல படுக்கை இருந்தும்அவர்களுக்கு நல்ல நித்திரைதான் வந்திடுமாஒருகணம் நாம் நினைத்துத்தான் பார்த்ததுண்டா?

    நாளாந்தம் இதுதான் அவர்களது நிலை. ஆனால் இப்போது இந்த நிலை இன்னும் மோசமாகிவிட்டது. இதுவரை நாளும் பணிக்குச் சென்றால் பணி முடிந்த பின்னர் வீடு வந்திடலாம். சிறிது பொழுதாவது குடும்பத்துடன் இருந்திடலாம். ஆனால் கொரனோவின் கோரத்தால் மருத்துவர்களோ தாதிகளோ மருத்துவ மனையிலேயே இருக்கும் நிலை உருவாகியது.  அதனால்  பணிகூட அவர்களுக்குப்  பயமாகிவிட்டது. தொற்றிவிடும் எனும் பயத்தால் எட்ட நிற்கும் நிலை. தொற்றிவிடும் எனும் பயத்தால் தொடமுடியா நிலை. பெற்ற பிள்ளை வீட்டில். பெற்றவரும் வீட்டில். கட்டிய கணவனும் வீட்டில். தொட்டி லிலும் ஒரு பிள்ளை. பால் கொடுக்க தாயில்லை. பார்க்கத்துடிக்கும் பிள்ளைக்கு அம்மாவைப் பார்க்கவே முடியாத நிலை.

    மூன்றுபிள்ளைகளின் தாயான மருத்துவர் பிள்ளைகளைக் கட்டி அணைத்து முத்தமிட்டுப் பிரியவிருப்பின்றி மருத்துவமனை செல்கின்றாள். சென்றவள் வீட்டுக்கு வரமுடியா நிலை. சின்னக் குழந்தைகள் அம்மாவைக் காணாது அடம் பிடிக்கின்றன. அப்பாவினால் அம்மாவை அணுகமுடியாத நிலை. கை பேசியில் கதைக்கிறார்கள். காணொளியில் பிள்ளைகளுக்கு முத்தம் இடுகிறாள். இரண்டு வாரத்தின் பின் காணொலியில் முத்தமிட்ட தாய் காணாமலே போய்விடுகிறாள். கட்டியகணவன் கதறி அழுகிறான். மருத்துவமாது மனிதம் காக்க தெய்வமாகிறாள்!

    இங்கிலாந்தில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றியவர் இரண்டுபிள்ளைகளின் தந்தை. அர்ப் பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர். சகமருத்துவர்களால் பெருதும் மதிக்கப்பட்டவர். மருத்துவமனையிலேயே மனைவியைக் குழந்தையைத் தவிக்கவிட்டு மரணத்தை தழுவிக் கொள்ளுகின்றார். இந்தியரானவர் இங்கிலாந்து சென்று மருத்துவத்தில் பெரும்புலமை பெற்றார். மருத்துவத்துக்கே தன்னையே கொடுத்தும் விட்டார். மாடிமனை வீடிருந்தும் அவர் குடும்பத்தையே பார்க்காமலேயே பணியிலேயே பலியாகிவிட்டார்.

    வீடுசென்றால் மனைவிக்கும் குழந்தைக்கும் தொற்று பரவிடும் என்பதால் தனது வாகனத்தையே வீடாக்கி அதிலேயே தங்கி நோயாளரைக் கவனித்து வருகிறார் என்னும் செய்தியைப் பார்க்கும் பொழுது அவரை வணங்காமல் இருக்கத்தான் முடியுமாமனைவியுடன் குழந்தையுடன் கைபேசியில் மட்டுமே தொடர்பில் இருக்கும் அவரும் எங்களைப் போல் ஒருவர்தானே!

    வருகிறேன் என்று சொல்லி விடைபெற்ற மருத்துவர் திரும்பி வரவேயில்லை. இரண்டு வயதுக் குழந்தையை காணொளி வாயிலாகக் கண்டு தனது அன்பு முத்தத்தை அளிக்கிறாள் அந்த மருத்துவமாது. தாயைக் கண்ட குழந்தை அழுகிறது. அழுகை தாங்கமுடியாக் கணவன் குழந்தையுடன் மருத்துவமனை செல்கிறான். மனைவியோ பக்கம் வரமுடியாமல் தூரவே நிற்கிறாள். தாயைக் கண்ட மழலை தவித்து அழுகிறது. தாயும் தவிக்கிறாள். அழுகிறாள். பார்த்திருக்கும் ஏனைய பணியாட்களும் அழுகிறார்கள். கணவன் கலங்கிய கண்களுடன் அழுங்குழந்தையுடன்! இதுதான் மருத்துவர்களின் நிலை! அழுகையை ஓரங்கட்டிவிட்டு தனது பணியில் இறங்கிவிடுகிறாள் அவள். இது இறை நிலை அல்லவாவிருப்பை வெறுப்பை வெளிக்காட்டா நிலை! பற்றற்ற நிலை!  

    தன்கையால் உணவு கொடுத்து தயாளமாய் தடவிக் கொடுத்த பலரின் மரணத்தை கண்டதும் தற்கொலை முயற்சிக்கே பல தாதியர்கள் சென்று விடுகிறார்கள். பேசியபடி வந்தவர்கள் பேசாமலே ஆகிவிடுதலைக் காணும் தாதியர்கள் எப்படி இருப்பார்கள்மருத்துவர்கள் சேவை ஒருவிதம் தாதியர்கள் சேவை இன்னொருவிதம்மக்கள் சேவை மகேசன் சேவை” இதைத்தான் மருத்துவர்களிடமும் தாதியரிடம் காணுகிறோம். “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதை மகான்களே மொழிந்திருக்கிறார்கள். மகான்களின் வழியில் செல்லும் மருத்துவர்களும் தாதிகளும் மண்ணுலகில் இன்று “கண் கண்ட தெய்வம்” ஆகின்றார்.

    விதண்டாவாதம் பேசுவதும்விஷமத்தனமாய் கருத்துகளைப் பதிவிடுவதும் குறைசொல்லி நிறைவடைவதும்நாட்டு நிலை புரியாமல் செயற்படுவதும் சமூக அக்கறையின்மையினையே காட்டும். வீட்டுக்கே வரமுடியாமல் நாட்டினைக் காத்திட தம்வாழ்வினையே அர்ப்பணிக்கும் மருத்துவர்களையும் தாதியர்களையும் வணங்கவே வேண்டும். “மானிட உருவில் பூமிக்கு வந்த தெய்வங்களே”  இவர்கள் என்பதை யாவரும் மனமிருத்தல் அவசியமாகும்.

    கடவுளைக் காண்பது என்பது அரிதினும் அரிது. கடவுள் எப்படி வருவார்? எப்போது வருவார்? அப்படிவரும் பொழுது அவரின் தோற்றம் எப்படி இருக்கும்? என்று அறிந்திடும் ஆவல் அனைவருக்கும் ஏற்படவே செய்யும். அப்படி ஆவலுடன் இருப்பவர்களே…. கடவுள் வேறெங்குமே இல்லை. மருத்துவ உலகில் மலர்ந்து நிற்கும் மருத்துவர்களே – கடவுளின் தோற்றமாய் வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனமாகும். மருத்துவர்கள் அனைவருமே ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களேயாவர். தான் படைத்த மனிதர்களுக்கு  உதவுவதற்காக கடவுள் கையில் எடுத்த வழிதான் மருத்துவமும், மருத்துவர்களும் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? எம்பெருமான் சிவனே மருத்துவம் பார்ப்பதற்கு வைத்தியராக வந்தார் என்று புராணங்கள் வாயிலாக அமையும் செய்தியும் இங்கு கருத்திருத்த வேண்டியதேயாகும். கடவுளே வைத்தியர் உருவினையே அகங்கொண்டார் என்பதிலிருந்து மருத்துவர்களின் உன்னதம் வெளிச்சமாய் தெரிகிறதல்லவா? வைத்திய நாதன், வைத்தீஸ்வரன், என்பதெல்லாம் ஆண்டவனின் திருநாமங்களாய் அமைந்திருப்பதையும் நாம் அகமிருத்துதல் அவசியமாகும்.

    Share
  • ஆதிமூலமே | முகுந்த இராமானுஜ தாசர் பஜனை

    ஆதிமூலமே | முகுந்த இராமானுஜ தாசர் பஜனை

    ‘ஆதிமூலமே ஆதிமூலமே’ என்ற பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினரின் ஆடல், பாடல், பஜனை. தஞ்சை வீதிகளில் நின்று வேடிக்கை பார்த்தோரையும் தன்வசம் ஈர்த்து நடனம் ஆடவைத்த பக்தி நர்த்தனம். கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அகதியைப் போல் ஒரு பறவை – செம்போத்து

    அகதியைப் போல் ஒரு பறவை – செம்போத்து

    ராஜ கம்பீரம் உள்ள ஒரு பறவை, தமிழீழத்தின் தேசியப் பறவை, அகதியைப் போல் அலைகிறது. உணவுக்காகவும் நீருக்காகவும் அதன் தேடல் தொடர்கிறது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இப்படிப்பட்டவனை யசோதா எப்படி பெற்றாயோ!

    இப்படிப்பட்டவனை யசோதா எப்படி பெற்றாயோ!

    ‘இப்படிப்பட்டவனை யசோதா எப்படிப் பெற்றாயோ!’ என்ற இனிய பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினரின் ஆடல், பாடல், பஜனை இதோ. தஞ்சை வீதிகளில் நடைபெற்ற இயல்பான, சுவையான, எதிர்பாராத நிகழ்வுகள், புதுச் சுவை கூட்டியுள்ளன. கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சாம விநோதா | முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பஜனை

    சாம விநோதா | முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பஜனை

    ‘சாம விநோதா’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள். தஞ்சை 24 கருட சேவையில் நடைபெற்ற பஜனை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அவசரநிலை பிரகடனம் -1975 – நாற்பத்தேழு வருடங்கள் நிறைவு

    அவசரநிலை பிரகடனம் -1975 – நாற்பத்தேழு வருடங்கள் நிறைவு

    பாஸ்கர்

    கிட்டத்தட்ட நாற்பத்து ஏழு வருடங்கள் முன்பு இரவின் பிந்தைய நேரத்தில் அவசர நிலையை இந்திரா காந்தி கொண்டு வந்தார். சட்டங்களை மொத்தமாய்க் கையில் அள்ளி, எதிர்ப்போர் எல்லோரையும் அடைத்து, தனக்கு நிகர் யாரும் இல்லை என உலகுக்குச் சொல்லத் துடித்த ஒரு கோபமான சிந்திப்பு. அடக்கி ஆள்வது என்பதே ஆணவ புத்தி. அது ராணுவத்திற்கு சரி. ஒரு தேசத்தில் ஆட்சி செய்யும் அரசு செய்யக் கூடாது. எமெர்ஜென்சி இந்திராவுக்கு ஆயுதம்.

    எதிர்க்கட்சிகள் திரண்டு இணைந்தன. எவ்வளவு தேசாபிமானிகள் அந்த எதிர்ப்பில் இருந்ததன் நிலையே எவ்வளவு பெரிய தவறை இந்திரா செய்கிறார் என்பது புரிந்தது. இந்திரா அசையவில்லை. அவர் மகன் சஞ்சய் இன்னொரு பக்கம் மீறல். பிளுமோடி, ஜார்ஜ் பெர்னான்டெஸ், செழியன், மொரார்ஜி, ஜெயப்ரகாஷ் நாராயண் என்ற எவ்வளவு நல்ல மனிதர்கள் எல்லாம் குமுறினார்கள். தெற்கின் மொத்த குமுறலைச் சொன்னவர் காமராஜர். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திரா சுடப்பட்டு இறப்பார் என்றும் , ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் நடக்கும் என யார் அறிந்தார்?

    எனக்குத் தெரிந்து அவசர நிலையைப் பெரிதும் எதிர்த்து, கொஞ்சம் கூடப் பயப்படாமல் அச்சுறுத்தல் நிலையை எதிர்நோக்கி வாழ்ந்த துணிவான மனிதர் என்றால் அது சோ. ராமஸ்வாமி தான். எங்கள் கல்லூரிக் காலத்தில் இந்திரா செய்வது தப்பு எனப் புரிய வைத்ததே அவர் தான்.

    இந்திரா செய்வதெல்லாம் நகைச்சுவை என்றும் அவருக்கு நாம் பரிசளிக்க வேண்டும் எனச் சொல்லி ஒரு பைசாவை மணி ஆர்டர் செய்யச் சென்ற பலருள் நானும் ஒருவன். கச்சேரி ரோடு தபால் அலுவலகம் அப்போது தான் புதிதாய்த் திறந்த நேரம். ஊழியர் ஒன்றும் சொல்ல முடியாது. இதைச் செய்யச் சொல்லி துக்ளக்கில் பிரகடனம் செய்ததே சோ தான். எங்கும் கூடி நின்று பேச முடியாது. இரவுக் காட்சி அரிது. சென்சார் கெடுபிடி அதிகம். ஆனாலும் கட்சிகளை எல்லாம் தாண்டி எதிர்க்குரல் கொடுத்த சோ ராமஸ்வாமி நமக்கு கிடைத்த அரண்.

    இருபது வண்ண மலர் சூடிய அன்னை இந்திரா நடந்து வந்தார் எனப் பிரசார பாரதி அரசின் ஊதுகுழலாயிற்று. பிரகடனம் செய்த நான்கு மாதத்தில் காமராஜர் மறைந்தார். ஒன்பது மாதங்கள் நடந்த பல அத்துமீறல்களுக்குப் பின் எமெர்ஜென்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. அப்போது இந்திரா அம்மையாருக்கு வயது அம்பத்தெட்டு பின்னாளில் நானாஜி தேஷ்முக் இது பற்றியும் புத்தகம் எழுதினார். அவர் மட்டுமல்ல – இன்னல்களை அனுபவித்த தலைவர்கள் பலரும் எழுதினார்கள்.

    சில வருடங்கள் கழித்து அவசர நிலை நியாயம் தானோ எனச் சிலர் கூறி வந்த நிலைக்கு இந்திய அரசியல் சூழல் மாறியது. பின்னாளில் இதே சோ, சர்வாதிகாரமற்ற அவசர நிலை தேவை என்றே சொல்லிவிட்டார். ஆனாலும் பாரத சரித்திர வரைபடத்தில் அவசர நிலைப் பிரகடனம் ஒரு கருப்பு மசிக் குடுவை கவிழ்ந்தது உண்மை.

    Share
  • ஆஃப்கானிஸ்தானில் கோரப் பூகம்பம்! பேரழிவுகள்! பெரும் சிதைவுகள்!

    ஆஃப்கானிஸ்தானில் கோரப் பூகம்பம்! பேரழிவுகள்! பெரும் சிதைவுகள்!

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    இமயத் தொடரில் ஆட்டம்
    இயற்கை அன்னையின் சீற்றம்  !
    ஆஃப்கானியர் இன்னுயிர் இழந்தார்!
    எழுந்துநின்ற வீடுகள் மட்ட மாயின !
    எங்கெங்கு வாழினும் இன்னல்தான்!
    ஏழு பிறப்பிலும் தொல்லைதான் !
    அடித்தட்டு உதைத்தால் பூமி நடுக்கம்!
    மலைத்தட்டு அசைந்தால் பேரதிர்ச்சி !
    குடல்தட்டில் கோர  ஆட்டம்!
    சூழ்வெளி மட்டும் பாழ்வெளியில்லை !
    ஆழ்பூமிக்குள்ளும் புற்று நோய் !
    தோலுக்குள் எலும்பு முறிவு.
    கால் பந்து  தையல் போல்
    கடல்தட்டு முறிவுகளில்
    பாலமிட்டு
    காலக் குயவன் எல்லை போட்ட
    கோலப் பீடங்கள்
    ஞாலத்தில்
    கண்டப் பெயர்ச்சியைக்
    காட்டும்  !

    ++++++++++++++

    ஆஃப்கானிஸ்தான் வட கிழக்குப் பகுதியில் ஒரு பெரும் பூகம்பம்

    2022 ஜூன் 22 இல் ஆஃப்கானிஸ்தான் வட கிழக்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் ஓர் அசுரப் பூகம்பம் நேர்ந்து, 1150 பேருக்கு மேல் மாண்டதாகவும், சுமார் 1500 பேர் காயம் அடைந்ததாகவும்  இரண்டாம்  நாள் செய்தியில் அறிய முடிந்தது.  ஏராளமான வீடுகள் தரை மட்டமாயின.  இடிந்த வீடுகளுக்குள் புதைபட்டோர் எண்ணிக்கை தெரியாது.  சென்ற ஆண்டு கைப்பற்றிய தாலிபான் வன்முறை அரசினர், அமெரிக்க நாட்டின் உதவி நாடியுள்ளார்.  பொதுமக்கள் இராணுவ உதவியின்றி, யந்திர சாதனங்கள் இல்லாமல் உயிருடன் இருப்போரைக் காப்பாற்ற இயலாது அவதிப்படுகிறார்.  நில நடுக்கத்துடன் பெருமழையும் பெய்து, நிலச்சரிவுகளும் உண்டாகி, இடர்ப்படுவோரைக் காப்பாற்ற முடியாது திண்டாடினர்.  20 ஆண்டுகளுக்கு முன்பு 2002இல் இதுபோன்ற ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த அடித்தட்டுப் பிளவுகள் [Tectonic Faults] இந்தோனேசியாவில் தொடங்கி, மலேசியா, தாய்லாந்து, பர்மா, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ஈரான் வரை செல்கின்றன.

    Rescuers in Afghanistan search for survivors of deadly quake | Watch (msn.com)

    An aftershock shook a hard-hit area of eastern Afghanistan on Friday, two days after an earthquake rattled the region, razing hundreds of mud-brick homes and killing 1,150 people, according to state media. The temblor was the poverty-stricken country’s deadliest in two decades.

    Pakistan’s Meteorological Department reported a 4.2 magnitude quake in southeastern Afghanistan. The Reuters news agency pointed out that its epicenter was in almost the exact same place as Wednesday’s quake. Afghanistan’s state-run Bakhtar News Agency said the aftershock took five more lives and injured 11 people.

    The nation of 38 million people was already in the midst of a spiraling economic crisis that had plunged millions deep into poverty with over a million children at risk of severe malnutrition.

    ****************

    https://www.cbsnews.com/video/afghanistan-earthquake-taliban-international-aid/

    Death toll rises in Afghanistan earthquake | Watch (msn.com),

    Deadly aftershock hits Afghanistan 2 days after devastating earthquake – CBS News

    Share
  • ‘விலை’நிலங்கள் – நெருங்கி வரும் ஆபத்து

    ‘விலை’நிலங்கள் – நெருங்கி வரும் ஆபத்து

    சித்திரை சிங்கர் 

    கிராமங்களுக்கு அழகு சேர்ப்பவை அங்குள்ள வயல்களும் வரப்புகளும் மட்டுமே. அப்படிப்பட்ட விளைநிலங்களை விலை நிலங்களாக்கும் முயற்சி, கிராமப்புறங்களிலும் தொடங்கி உள்ளதை நாம் அறிவோம்.

    ண்ட பூமி காரணமாக விளை நிலங்கள் “விலை” நிலங்களாக மாற்றுவது ஒரு புறம் என்றாலும் பல இடங்களில் நில உரிமையாளர்களின் சரியான பராமரிப்பு இல்லாமலேயே..! இன்னும் மனம் திறந்து சொன்னால் விவசாயிகளின் வாரிசுகள் பணி நிமித்தமாக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதால் விவசாயத்தையும் தங்கள் குடும்பத்தையும் கவனிக்க யாரும் இல்லாத காரணத்தால் விளைநிலங்களை “விலை” நிலங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

    நாட்டின் பாதுகாப்பு கருதி ராணுவத்திற்கு இளைஞர்களை அரசாங்கம் திரட்டுகிறது. விவசாயிகளின் நலன் காக்க விளைநிலங்களின் நலன் காக்க, ஒவ்வொரு விவசாயக் குடும்பத்தில் இருந்தும் ஒருவர் கண்டிப்பாக விவசாயப் பயிற்சி பெற வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு சட்டமாக இயற்ற வேண்டும். மேலும் நாட்டில் விவசாயக் கல்விமுறையை ஊக்குவிக்கச் சிறப்புச் சலுகைகளை வழங்க அரசு முன் வர வேண்டும்.

    இத்தகு மாற்றங்களுக்கு உதவிட, விவசாயிகள் தங்கள் குடும்பங்களைச் சார்ந்த வாரிசுகள் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைக் கண்டிப்பாக விவசாயம் சார்ந்த  நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள விவசாய நிகழ்வுகளை அறிந்துகொள்ள முன் நிறுத்துதல் முக்கியம்.

    நாட்டின் பாதுகாப்புக்கு விவசாய நிலங்கள் “விலை நிலங்களாக” மாறாமல் இருப்பதும் முக்கியம்.

    Share