Blog

  • ஸ்குவாட் பிரிவில் வலுத்தூக்கும் போட்டி

    ஸ்குவாட் பிரிவில் வலுத்தூக்கும் போட்டி

    சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டி, சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. இதில் ஸ்குவாட் பிரிவில் ஆண்கள் ‘துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்’ எனத் தோளுயர்த்தி, தலைநிமிர்ந்து வலுத்தூக்கும் எழுச்சிமிகு தருணங்கள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெஞ்சு பிரஸ் வலுத்தூக்கும் போட்டி

    பெஞ்சு பிரஸ் வலுத்தூக்கும் போட்டி

    சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டி, சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. இதில் பெஞ்சு பிரஸ் பிரிவில் ஆண்கள் வலு தூக்கி, திறம் காட்டும் எழுச்சிமிகு காட்சி இதோ. எழுக இந்தியா!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னை மாவட்ட வலுத்தூக்கும் போட்டி – மகளிர்

    சென்னை மாவட்ட வலுத்தூக்கும் போட்டி – மகளிர்

    குழந்தை முதல் குடும்பம் வரை தூக்கிச் சுமக்கும் பெண்களுக்கு எடை தூக்குவது எளிதே. சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டியில், பெண்கள் வலு தூக்கி வாகை சூடும் காட்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(452)

    குறளின் கதிர்களாய்…(452)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(452)

    அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
    றோம்புதல் தேற்றா தவர்.

    -திருக்குறள் – 626 (இடுக்கண் அழியாமை)

    புதுக் கவிதையில்…

    செல்வம் வந்து
    சேர்ந்த போது,
    பெற்றோம் இதுவெனப்
    பற்றுடன் அதனைப்
    பிறர்க்குக் கொடுக்காமல்
    பேணிப் பாதுகாக்கும்
    இயல்பே இல்லாதோர்,
    வறுமை வந்து
    வாட்டும் போது
    இழந்தோம் என்றே
    இடர்ப்பட மாட்டார்…!

    குறும்பாவில்…

    செல்வம் தம்மிடம் சேரும்போது
    பெற்றோமெனப் பற்றுடன் சேர்த்து வைக்காதோர்,
    வறுமையில் இல்லையென இடர்ப்படார்…!

    மரபுக் கவிதையில்…

    தேடிச் செல்வம் வரும்போதில்
    திரண்ட ஆசை கொண்டேதான்
    நாடி யதன்மேல் பற்றுடனே
    நம்பிக் காக்க விருப்பில்லார்,
    வாடி நிற்க வைத்துவிடும்
    வறுமை வந்த போதினிலும்
    கூடித் துன்பம் வந்தாலும்
    கொடுமை யென்றே இடர்ப்படாரே…!

    லிமரைக்கூ…

    செல்வத்தின் மீதே பற்று
    கொண்டது சேரும்போது விரும்பாதோர் வருந்தாரே
    வறுமையில் இடரினைப் பெற்று…!

    கிராமிய பாணியில்…

    போவாத போவாத
    தொவண்டு போவாத,
    துன்பத்தக் கண்டு
    தொவண்டு போவாத..

    காசுபணம் சேரும்போது
    அதுல ஆசவச்சி
    அடுத்தவுங்களுக்கும் குடுக்காம
    சேத்து வைக்கக்
    கொஞ்சமும் விரும்பாதவன்,
    வறும வந்து
    துன்பம் வந்தாலும்
    தொவண்டு போகமாட்டான்..

    அதால
    போவாத போவாத
    தொவண்டு போவாத,
    துன்பத்தக் கண்டு
    தொவண்டு போவாத…!

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 8

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 8

    மீனாட்சி பாலகணேஷ்

    முருகப்பெருமான் மீதான இன்னும் சில பிள்ளைத்தமிழ் நூல்களின் நயங்களைப் பார்ப்போமா?

    4. காரைநகர் பயிரிக்கூடல் சுப்பிரமணியசுவாமி பிள்ளைத்தமிழ்

    இப்பிள்ளைத்தமிழ் அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவரால் இயற்றப்பட்டது. 1987ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இது கடற்புற ஊராகிய காரைநகரின் நடுவே அமைந்த பயிரிக்கூடல் எனும் தலத்தில் நாவல் மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு அமைந்திருக்கும் கோவிலில் எழுந்தருளி பக்தர்கட்கு அருள்புரிந்து வரும் ஸ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானைக் குழந்தையாகப் பாவித்துப் பாடிய நூலாகும்.

    பிள்ளைத்தமிழின் இலக்கணத்திற்கேற்ப பத்துப் பருவங்களால் பத்துபாட்டுகளைக் கொண்டு பாட்டுடைத்தலைவனாம் முருகப் பெருமானை வழுத்திப் பாடியுள்ளார் புலவர்.

    தாலப் பருவத்து ஒரு பாடல் அழகான தொன்மங்களை விளக்குகிறது. பார்க்கலாமே!

    குதிரை வாங்கச் சென்ற மணிவாசகரை ஈர்த்துக் குருந்தமரத்தடியில் அமர்ந்து தனிப்பெரும் குருவாய் அவருக்கு ஞானம் கொடுத்த சிவபிரானுக்கு மதுரமான பிரணவப்பொருளை அவர் செவிக்கு இனிமையாக உரைத்த குருமணி முருகனாவான். வாழ்வை வெறுத்து வானளாவிய திருவருணைக் கோபுர மீதிருந்து குதித்த அருணகிரிநாதரைக் கையிற்றாங்கிக் காப்பாற்றி, “சும்மாவிரு, சொல்லற,” எனப் புகன்ற ஆறுமுகத்தவன் அவன். பயிரிக்கூடலிலுறை முருகனே தாலோ தாலேலோ என்பது பொருள்.

    குதிரைக் காகப் பவனிவரும்
    கோல வமைச்சன் தனையீர்த்துக்
    குருந்தின் கீழே இருந்துதனிக்
    குருவாய் ஞானம் கொடுத்தவர்க்கு
    மதுரப் பொருளைச் செவியுவக்க
    ………………………………………
    எடுத்துச் “சும்மா விரு” என்ற
    ஒருமூன் றருண முகத்தானே
    …………………………………..
    முதல்வா தாலோ தாலேலோ.
    இன்னுமொரு பாடலைக் காணலாமா?

    ஒரு அம்புலிப்பருவப்பாடல். குழந்தை முருகனைப் பலவிதமான பழங்களாக உருவகித்துப் பாடுகிறார்.

    நமச்சிவாயப் பொருளான நல்லபழம்; ஆனைமுகன் கையில் தாங்கும் பழம். நடராசபதியான சிவபிரான் உவந்திடும் பழம்; உபாசனை செய்யும் அடியார்கள் சுவைக்கும் பழம்; இமயமலை அழகி, கார்த்திகைப் பெண்டிர் கௌரி, சூலினி, இரட்சகி, சங்காரி, ஜனனி, இலிங்கபூஷணி, பராசத்தி ஆகியோர் பாலூட்டியருளும் இன்பக் குழந்தைப்பழம், சமய தத்துவாதீத தனிப்பழம், சதுர்மறை தந்த பழம், கலைத்தேன் பழம், பழமுதிர்சோலை அழகராய் நின்ற பழம், சண்முகப்பழமுமிவனே, இவன்ய்டன் அம்புலீ ஆடவாவே என்கிறார்.

    நமசிவயப் பொருளான நல்லபழம் ஆனைமுகன்
    நயந்துகை தாங்கும்பழம்
    நடராச பதியுவந் திடுபழம் உபாசிக்கும்
    …………………………..
    சமயதத் துவாதீத தனிப்பழம் சதுர்மறை
    தந்தபழம் கலைத்தேன்பழம்
    ………………………………………….
    ஆனந்த வீடுதரும் ஞானக் குழந்தையுடன்
    அம்புலீ யாடவாவே.
    இன்னும்பல அருமையான பாடல்கள் உள்ளன.

    5. சிவசுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்

    பறாளை  விநாயகப் பெருமான் கோயிலின் வடக்குப் புறமாக அமைந்தது இந்த சிவசுப்பிரமணியர் கோயில். இப்பெருமான்மீது  புலவர் வை. க. சிற்றம்பலம் அவர்களால் 1997-ல் இயற்றப்பட்டதே இப்பிள்ளைத்தமிழ்.

    பருவத்திற்கு ஒரேயொரு பாடலால் அமைந்த அருமையான பிள்ளைத்தமிழ் இது. ஒரே பாடல் தான் எனினும் சொன்னயமும் பொருணயமும் ஒவ்வொரு பாடலிலும் சிறந்து விளங்குகிறது. காப்புப் பருவத்து ஒரே பாடல் திருமால், சிவபிரான், சிவகாமியம்மை, ஐங்கரன், மற்றும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப மற்ற தெய்வங்கள் அனைவரையும் வாழ்த்தி குழந்தையைக் காக்க வேண்டுகிறது.

    செங்கீரைப்பருவத்தின் பாடலொன்று மிக அருமையான பொருத்தமான கருத்துக்களைக் கொண்டிலகுகின்றது. குழந்தை முருகன் சங்குவளையணிந்த கைகளை ஊன்றியபடி செம்பவள வாயில் கனிந்த முறுவலுடன் உல்லாசமாக, கால்களில் கிண்கிணியாட, சிலம்பாடத் தாளூன்றித் தவழுகின்றான்.  கூடவே ‘கீர் கீரெ’னப் புரியாத மழலை பேசுகிறான். அந்தப் பருவத்து, ஐந்தாறுமாதக் குழந்தைகளின் மொழி நமக்குப் புரியாத மொழி. அதனைக் ‘கீர்’ என்பார்கள். (நல்ல சொற்களைக் கூறுபவர் நல் + கீரர்= நக்கீரர்). இத்தகைய சொற்களின் முன்பு ஒரு மங்கலச் சொல்லையும் சேர்த்துச் செங்கீர், செங்கீரை என்பர். அதனாலும் இப்பருவம் செங்கீரைப்பருவம் எனப்படும். இத்தகைய புரியாத மழலை, “எங்கு நீ, அங்கு நான் என்றும் உன்னுடனிருப்பேன்,” என முருகன் கூறும் சொற்களாக அடியாருக்கு, ஈண்டு புலவருக்குத் தோன்றியுள்ளது மிக அருமை.

    சங்குவளைக் கரமூன்றிச்
    செம்பவள வாய்கனியச்
    சல்லாப வுல்லாசமாய்ச்
    சார்ந்தகிண் கிணியாடச்
    சூழ்ந்தமணிச் சிலம்பார்ப்பத்
    தாளூன்றிக் கீர்கீரென
    எங்குநீ அங்குநான்
    என்றபடி மழலைமொழி
    இசைத்திட அடியெடுக்கும்
    …………………………………………

    அடுத்து சிறுதேர்ப்பருவப் பாடல். அற்புதமான இறைத்தத்துவத்தை முன்வைக்கிறது. வான், மண், பாதாளம் ஆகிய மூவுலகங்களும் கொண்டு வடிவமைக்கப்பட்டது இப்பிரபஞ்சம் எனும் திருத்தேர். அதன் வட்டமான நடுப்பீடமே பிரணவக்குறியாகும். அதில் வந்தமர்ந்து இருப்பவன் முருகப்பெருமான். அவனுக்கு அடியவர்கள் தங்கள் வினைகள் தீருமாறு வேண்டிக்கொண்டு, தேங்காய் உடைத்து, வேதங்கள் எனும் புரவிகளை ஓட்டுவித்து வீதிவலம் கொண்டு செல்கிறார்கள். அவனும் நானிருக்க பயமேன் என்று கூறி நனவிலும் கனவிலும் நற்காட்சி காட்டித் துணை நிற்கிறான். அத்தகைய முருகனைச் சிறுதேருருட்டியருள வேண்டும் இனிய பாடலிதுவாகும்.

    வானுலகு மண்ணுலகும்
    வல்லபா தலவுலகும்
    வடிவமையுந் திருத்தேரிலே
    வட்ட நடுப் பீடமே
    பிரணவக் குறியாகி
    வந்ததனில் வீற்றிருந்து
    பானிலவு திருநீற்றின்
    அடியவர்தன் வினையோடப்
    பணிந்துதேங்கா யுடைத்து
    பகர்வேதப் பரிகடவி
    அரிய மணி வீதிவரும்
    பாலகும ரேச முருகா
    ………………………………..
    கருத்தாழமும் கொண்ட பாடல்களைக் கொண்ட சிறந்த நூல்.

    6. திருநல்லூர் திருமுருகன் பிள்ளைத்தமிழ்

    நல்லை எனப்படும் திருநல்லூரானது ஆறுமுக நாவலர் பெருமானின் ஊராகும். இது முருகப்பெருமான் விரும்பியுறையும் சிறந்த ஒரு பதியாகும். திருநல்லூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் இந்நூல் பண்டிதர் சி. கார்த்திகேசு (சேந்தன்)  எனும் புலவரால் இயற்றப்பட்டது. இவர் சேந்தன் குழந்தைக்கவிகள் எனும் நூலில் பிள்ளைகட்குரிய பலவற்றையும் பாடியுள்ளார். நல்லை நாற்பது எனும் நூலில் நல்லூர்க் கந்தன்மீது அழகான கீர்த்தனங்களைப் பாடியுள்ளார். இப்பிள்ளைத்தமிழ் நூலும் பல நயமிகுந்த பாடல்களுடன் பொலிவதனைக் கண்ணுறலாம்.

    அம்புலிப்பருவப் பாடலொன்றில் முருகனின் சிறப்புகளை அழகுற எடுத்தோம்புகிறார் புலவர். இது தானம் எனும் உபாயத்தில் சேருமெனக் கொள்ளலாம். முருகனின் சிறப்புகளைக் கூறி, இத்தகைய பெருமை படைத்த எம் சிறு முருகனுடன் ஆடவா என விளிக்கும் கூற்றாக அமைந்த பாடல்.

    பலகோடி சென்மங்களை எடுத்து எடுத்துக் களைத்தாலும் பார்ப்பதற்கு அரிதானவன் எம் முருகன். பக்தியினால் மட்டுமே அவனையடையலாம்; மற்றபடி பற்றுதற்கு அரிதானவன்.          நால் கல்நெஞ்சத்தவர் ஆயினும் உள்ளம் கசிந்துருகிக் கந்தா எனக்கூறி, கண்ணீர் பொழிந்து நிற்பதனைக் கண்டால் விரைந்து தனது கருணை எனும் மழையைப் பொழிபவன். பொல்லாத சூரபதுமனின் சுற்றம் உறவு அனைத்தையும் அழித்துப் பொடியாக்கினவன். பின்பு அவன் குற்றங்களை மன்னித்து உயிர்களக் காத்த உயர்ந்த தயாளன். இப்படிப்பட்ட அல்லல் அகற்றிடும் முருகனுடன் விளையாட வாராய் அம்புலியே!அணிநல்லூர் முருகனுடன் ஆடவாராய் அம்புலியே!

    பல்கோடி சென்மம் எடுத்தெடுத் திழைத்தும்
    பார்ப்பதற் கரிதானவன்
    பக்தியாம் ஒன்றினால் பற்றலாம் அன்றிப்
    பற்றுதற் கரிதானவன்
    கல்லெனும் நெஞ்சினர் ஆயினும் கசிந்துநாம்
    கந்தா எனக்கனிந்து
    ……………………………………………………
    பொறுத்தவன் பிழையினுக் கிடுக்கண் தவிர்த்து
    பொன்னுயிர் காத்த மேலோன்
    ………………………………………………..
    அம்புலீ ஆடவாவே.

    சிற்றில் சிதையேல் என வேண்டும் சிறுமியர் பலப்பல கதைகளை முன்வைக்கின்றனர். புலவரின் கற்பனைவளம் வியக்கத்தக்கதாம். அவற்றுள் ஒன்று இந்தக்கதை! ‘வள்ளியெனும் குறத்தி தினைமாவையும் தேனையும் பிசைந்து உனது வாயில் ஊட்ட, உண்டு நீ களித்ததையும், பின் மானையொத்த அவளுடைய எச்சிலை உண்டு களிக்கும் அழகையும் மற்றும் இவையனைத்தையும் கண்டு மற்றவர்களுக்கு அதனைக் கூறினோமோ? இல்லையே! கூனற்பிறை நெற்றியை உடைய பல சிறுமியர் கூடி, மண்ணைக் குழைத்துச் சேர்த்து, பேசிக்கொண்டு பாடுபட்டுக் கட்டிய சிறிய இவ்வீட்டை நீ உன் காலால் சிதைக்கவேண்டா! அடியாரின் குறைகளைத் தீர்க்கும் மருந்தானவன் அல்லவோ நீ! சிற்றிலைச் சிதைக்காதே’ என வேண்டுகின்றனர்.

    கானக் குறத்தி வள்ளியெனும்
    கன்னி உவந்து தினைமாவை
    கமழுந் தேனிற் பிசைந்துனது
    கனிவா யூட்டக் களித்தநீயும்
    மானொத் தவளின் மிச்சிலையும்
    வாயிற் சுவைக்கும் அழகினையும்
    மகிழ்ந்து சுவைத்த ததுகண்டும்
    மற்றோர்க் கதனை விண்டோமோ
    …………………………………………
    வான முயர்புகழ் திருநல்லூர்
    வண்ணா சிற்றில் சிதையேல்
    மருவு மடியர் பிணிதீர்க்கும்
    மருந்தே சிற்றில் சிதையேலே.

    ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களில் இவ்வாறு பலப்பல சுவையான பாடல்கள்!

    (வளரும்)

    Share
  • சென்னை மாவட்ட வலுத்தூக்கும் போட்டி – 2023

    சென்னை மாவட்ட வலுத்தூக்கும் போட்டி – 2023

    சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டி, சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. 40 முதல் 79 வயது வரை உள்ள ஆண்களும் பெண்களும் இதில் உற்சாகமாகக் கலந்துகொண்டு வலு தூக்கித் தங்கள் வல்லமையைக் காட்டினார்கள். வீழ்வேன் என்று நினைத்தாயோ என வீறு கொண்டு எழுந்த வேங்கைகளின் புஜபல பராக்கிரமங்களைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 8

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 8

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும் . . . (2)

    அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும் . . . (2)

    சக்தி சக்திதாசன்

    வாழ்வின் தேடல்கள் பலவகைப்படும். அத்தேடல்களின் வழி நாம் எமது வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்கிறோம். சிலருக்கு அத்தேடல்களின் வழியான வாழ்க்கை வெற்றியாக அமைகிறது சிலருக்கு அதுவே வேதனைகளின் காரணமாகிறது.

    ஆன்மீகம் என்பது மதங்களைக் கடந்த ஒரு மார்க்கம் என்பதைப் புரிந்து கொள்வதர்கு முன்னால் வாழ்வில் பல மைல்களைக் கடந்து போய்விடுறோம். சிலருக்கு அது புரியப்படாமலே போய்விடுகிறது.

    இது எல்லாவற்றையும் கடந்தவர் நமது கவியரசர் என்றால் மிகையாகாது. ஆன்மீகத்தை அதன் உண்மை வடிவிலேயே கண்டு கொண்டவர் என்பதுவே உண்மையாகிறது.

    உள்ளத்தின் உணர்வுகளைப் பேசினார். அதை சத்தியத்தின் வாக்காகவே கூறினார். வாழ்வின் யதார்த்தங்களுக்கு மதம் எனும் சாயத்தைப் பூசிப்பார்க்க முனைந்து அதன் மூலம் மதங்களைக் கடந்த ஆன்மீகத்தின் வாசற் கதவைத் தட்டிப்பார்த்தார்.

    அவரது பாடல்களில் சோகம் இருக்கும், காதல் இருக்கும், ஆனந்தம் இருக்கும், பரவசம் இருக்கும், பக்தி இருக்கும் ஆனால் அனைத்தினுள்ளும் கொஞ்சம் மூழ்கிப் பார்த்தால் ஏதோ ஒரு ஓரத்தில் ஆன்மீகம் கலந்திருக்கும்.

    அவரது ஆன்மீக எழுத்துகளில் இழைந்தோடும் எளிமை மனித வாழ்க்கையின் அடிப்படையை எம்மோடு பேசும்.

    அவசரமான வாழ்க்கை வாழ்கிறோம். அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் ஒரு அவசர கதியிலேயே நடக்கிறது. எதையும் நிதானமாக, ஆழமாக சுவைத்துப் பார்த்து ரசிக்க முடியாதவாறு வாழ்க்கையின் வேகம் எம்மை இழுத்துச் செல்கிறது.

    இந்த நிலையில்தான் இன்றைய வாழ்வில் ஒரு சமநிலையைப் பேணுவதற்காக எமது தாயக நாடுகளில் மட்டுமல்லாது மேலை நாடுகளிலும் யோகா, தியானம் போன்ற ஆன்மீக வழிகாட்டுதல்கள் பிரசித்தி பெற்று வருகின்றன.

    அறுபதின் நடுப்பகுதிகளைக் கடந்த ஒரு நிலையில் தான் தியானம் எனும் ஒரு வழியின் மூலம் ஆன்மீகத்தின் உண்மைநிலையை அறியக்கூடிய சூழல் எனக்கு உருவாகியது.

    அத்தகைய ஒரு சூழலில் அத்தியான அனுபவத்தினுள் நுழைந்த எனக்கு எனது எழுத்துகளின் மானசீகக் குருவான கவியரசர் கண்ணதாசனின் பாடலின் வரிகள் ஏதோ எனக்காகவே ஒலிப்பது போன்று தென்பட்டது. அவரது ஆன்மீக அறிவியலுடன் கூடிய வரிகளைக் கொண்௶ட பாடலது.

    அது எந்தப் பாடல் என்று கேட்கிறீர்களா?

    அன்னை வேளாங்கண்ணி எனும் திரைப்படத்தில் நவரசத் திலகம் முத்துராமன் அவர்களுக்காக காந்தர்வக் குரலோன் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலித்த பாடல் அது.

    ஆனந்தமானது , அற்புதமானது – நான் அந்த மருந்தைக் கண்டு கொண்டேன் – அந்த

    ஞாலத்திலே என்னை அறிந்து கொண்டேன்

    நிதானத்திலே உண்மை புரிந்து கொண்டேன்

    ஆகா ! என்னே அருமையான வரிகள் ஒரு மதங்கடந்த ஆன்மீக கோணத்திலே பார்த்தால் எமது உள்ளத்துக்கு எது தேவையோ , ஒரு அமைதியான வாழ்க்கைக்கு எது தேவையோ , எமது தேடல்கலின் விடையாக எது தேவையோ அதைக் கன்டு கொள்ளும் வழிக்கு சைகை காட்டுவது போல கவியரசர் எமக்கு அற்புத வரிகளைத் தந்திருக்கிறார்.

    தியானம் எனும் ஒரு சாதனத்தை மதங்கடந்த ஆன்மீகத்தை நான் முதற்தடவையாக உளச்சுத்தியோடு கையாண்டபோது அதன் பயனாக என் மனம் கண்ட உணர்வுகளை அப்படியே வரிகளாக்கித் தந்தது போன்ற ஒரு எண்ணமே என்னுள்ளத்தில் இவ்வரிகள் ஏற்படுத்திய தாக்கம்.

    இத்தனை சிறிய விதையிலிருந்து
    எத்தனை பெரிய மரம் வந்தது
    அத்தனை மரமும் இத்தனை காலமும்
    அதற்குள் எப்படி குடி கொண்டது

    மிகவும் எளிமையான கேள்விகள் . இயற்கையின் அதிசயம் . வாழ்வில் ஒவ்வொரு நாளும் நாம் எத்தனையோ பெரிய மரங்களைக் கடந்து செல்கிறோம். அம்மரத்தின் கனி பழுத்து விதையாகி அதன்கீழ் விழுந்து பரவிக் கிடப்பதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் எத்தனை பேரின் உள்ளத்தில் இத்தகைய கேள்விகளை இயற்கையை நோக்கி வீசக்கூடியதாக இருந்தது . நிச்சயமாக எனக்கு இருக்கவில்லை . இக்கேள்விகளில் ஏதாவது மதச்சாயம் தென்படுகிறதா ?

    இதுதான் எமது கவியரசரின் அறிவியல் ஆன்மீகத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை .

    பத்தாம் மாதம் பிறப்பது என்பதை
    பரம்பொருள் யாருக்கும் எழுதி வைத்தான்
    இத்தனைநாளில் இறப்பது என்பதை
    இரகசியமாக ஏன் வைத்தான் ?

    நாமனைவரும் எமது அன்னை வயிற்றிலிருந்து பத்து மாதங்களில் இவ்வுலகில் தவழுவோம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆனால் எப்போ எமது ஆன்மா எமது உடல் எனும் சட்டையை அகற்றி விட்டு வெளியேறப் போகிறது என்பது மட்டும் எவருக்குமே தெரியாத ஒரு விடயமாக இருக்கிறது. இதுகூட மதங்களைக் கடந்த ஒரு உண்மைதானே ! இதை எத்தனை அழகாக , எளிமை பூத்த வரிகளினூடாக கவியரசர் யாத்துத் தந்திருக்கிறார் .

    உடலெனும் கூடு வீழ்வதன் முன்னே
    அவனுடன் கூடுதல் ஆனந்தம்
    உயிரெனும் காற்று ஓடிடும் முன்னே
    தத்துவக் காற்றே பேரின்பம்

    ஆகா ! தத்துவங்களை இத்தனை எளிமையாக பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய வல்லமை படைத்தவர் என் எழுத்துக்களின் மானசீகக்குரு கவியரசர் என்பதற்கு மேற்கண்ட வரிகளை விட வேறேதும் சான்றுகள் ௹தேவையோ ?

    உயிரெனும் காற்று எமது இறுதிச் சுவாசத்தின் வழி ஆன்மாவுக்கு வெளியேறும் வாசலைக் காட்டுகிறது. அவ்வான்மா அகன்றதும் உடலென்ன வெறும் கூடுதானே !

    இங்கென்ன கவியரசர் கூற வருகிறார் ?

    அந்நிகழ்வு நடப்பதன் முன்னரே ” அவனுடன் கூடுதல் ஆனந்தம் ” என்கிறார். இங்கேதான் கேள்வி எழுகிறது யார் அந்த ” அவன் ” ?

    சிவனா ? அல்லாவா ? இயேசுவா ? அனைவர்க்கும் பொதுவான ஆன்மாவே அந்த அவன் என்கிறார் எனலாம் அல்லவா ?

    அப்படியானால் அந்த அவனுடன் ஆன்மாவுடன் உயிர் பிரிவதன் முன்னால் கூடுவது எப்படி ?

    ஆம் ஆன்மாவுடன் பேசும் மொழி, ஆன்மாவுடன் இணையும் வழி தியானம் ஒன்றே அதற்கு மதமில்லை, மொழியில்லை, இனமில்லை. அனைவருக்கும் பொதுவானது. அனைவராலும் கைக்கொள்ளப்படக்கூடியது. இப்போது மீண்டும் ஒருமுறை கூறிப்பாருங்கள்,

    ஆனந்தமானது , அற்புதமானது நானந்த மருந்தைக் கண்டு கொண்டேன்.

    எத்தனை அழகாக ஆன்மீக அறியலுடன் எம்மை இணைத்திடும் வரிகளவை.

    நம்பிக்கையுடனே இறைவனைத் தேடு
    நாளைய பொழுதே அவன் வருவான்
    நன்மை, தீமையில் அவனை நாடு
    நன்மை மட்டும் அவன் தருவான்

    ஆமாம் நாம் எதைச் செய்தாலும் அதை நம்பிக்கையுடன் தான் செய்ய வேன்டும். நம்பிக்கை இல்லாமல் செய்யும் எந்தச் செயலும் வெற்றியளிக்காது. இது யாவரும் அறிந்த சத்திய வார்த்தைகள்.

    இறைவன் எமக்குள்ளேதான் இருக்கிறான். அப்படியானல் எங்கே அவனைத் தேடு என்கிறார் எமது கவியரசர்?

    ஓ ! எமக்குள்ளே தேடச் செல்கிறாரோ இக்கவிச்சக்கரவர்த்தி?

    உன்னையறிந்தால் , நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்றுன் சொன்ன வித்தகரல்லவா இவர்.

    எமக்குள்ளே தேடும்போது அங்கே நாம் யாரைக் காண்கிறோம் எம்மது ஆன்மாவின் மூலத்தை அறிகிறோம். அப்போது அங்கே உறைந்திருக்கும் இறைவனை அடையாளம் காண்கிறோம். அதற்கான பாதைதானே தியானம்?

    எமக்குள்ளே உறைந்திருக்கும் அவ்விறைவன் மதச்சாயம் கொண்டவரா? மதங்களைக் கடந்தவராயிற்றே, அனைவர்க்கும் பொதுவான இறையல்லவா அவன்?

    அழிந்து போகும் உடலல்ல நாம், சிதைந்து போகும் மனமுமல்ல நாம். நிலையான ஆன்மாவே நாம். அந்த ஆன்ம நிலையில் நாமனைவரும் ஒன்றே ! ஒரு பரமத்தின் துகள்களே!

    இங்கேதான் எமது கவியரசரின் அறிவியலுடன் கூடிய ஆன்மீகம் துலங்குகிறது. அவருடைய ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் அவர் புதைத்து வைத்திருக்கும் ஆன்மீக அதிசயங்கள் அளப்பரியன .

    இது என்னுடைய பார்வையின் கோணமே! இதே வரிகள் வேறோருவர் பார்வையில் வித்தியாசமான ஆன்மீக விளக்க்லங்களை அளிக்கலாம். இதுதான் கவியரசர் படைப்புகளின் மகுடமாகிறது. அதனால்தான் அவரது பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் இன்றுவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    என் அன்பு உள்ளங்களே! நான் ஒரு ஆன்மீக அறிஞல்லன். ஒரு சாதாரண பாமரனே! ஆன்மிக அறிவியல் எனும் ஆழியின் கரையோரத்தில் கால்களை நனைக்கும் ஒரு வழிப்போக்கனே நான். எனது எழுத்துக்களின் மானசீகக்குருவான கவியரசரின் படைப்புகளில் ஒளிந்திருக்கும் ஆன்மீக அறிவியலை சுவைக்கும் நோக்கத்தில் என்னோடு உங்களையும் இணைத்துக் கொள்கிறேன்.

    இப்போது மீண்டும் அந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்களேன்.

    மீண்டும் வருவேன்

    Share
  • சிரிப்பு யோகா முத்திரைகள்

    சிரிப்பு யோகா முத்திரைகள்

    சிரிப்பு யோகா, புதிய புதிய வடிவங்கள் எடுத்து வருகிறது. அந்த வகையில் பண்ருட்டியைச் சேர்ந்த லயம் எஸ்.எம்.வெங்கட், சிரிப்பு யோகா முத்திரைகளில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் இவரும் பால்குடி மாறாப் பாலகனாகிய இவர் மகனும் இணைந்து வழங்கிய சிறப்பு முத்திரைகளும் பயிற்சிகளும் இதோ இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தனி வீடா? அடுக்குமாடியா? விவசாய நிலமா? எதில் முதலீடு செய்யலாம்?

    தனி வீடா? அடுக்குமாடியா? விவசாய நிலமா? எதில் முதலீடு செய்யலாம்? எதில் லாபம் அதிகம்? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜிப்ரீஷ் மொழியில் கலக்கும் டாக்டர் சுரேஷ்

    ஜிப்ரீஷ் மொழியில் கலக்கும் டாக்டர் சுரேஷ்

    வெற்று ஒலிகளால் நாமே உருவாக்கும் மொழி, ஜிப்ரீஷ் மொழி. இது, புதுச் சுவையுடன் புத்துணர்வு தரும். நம் மன இறுக்கத்தைத் தளர்த்தும். கவலையை, கோபத்தை, வருத்தத்தைப் போக்கும். இந்த மொழியில் சண்டையும் போடலாம். மனைவியை / கணவரை இந்த மொழியில் திட்டினால், அவருக்கு ஒன்றும் புரியாது. அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் டாக்டர் சுரேஷ் வழங்கிய ஜிப்ரீஷ் மொழிப் பொழிவு இதோ.

    Gibberish Language by Dr.Suresh from Ambur at Ambattur Laughtorium.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எனது இறுதிப் பயணம்

    எனது இறுதிப் பயணம்

    சி. ஜெயபாரதன்,  கனடா

    அடுக்கப்பட்டுள்ளன
    எரிக்கட்டைகள்
    சுடு காட்டில்,
    படுக்கும் கட்டில் !
    மீளாத் தூக்கம்.
    தீ மூட்டக் காத்திருந்தார்.
    உயிர் நீத்த உடல்
    விழித்திருக்கும் இமை மூடாது.
    முடியவில்லை
    இன்னும் என் பணி !
    ஆத்மா
    சுற்றிச் சுற்றி வருகுது
    உடலை
    துணைக்கோள் போல் !
    கர்ணனைக் கொல்ல முடியவில்லை.
    போர்க் களத்தில் !
    தர்மம் காக்கும் கர்ணனை.
    தங்கிச் செழிக்கும்
    கருணைக் கனடாவுக்கு
    அங்க தானம்
    அளிக்க வேண்டும்.
    கண்ணோ, கணையமோ,
    காற்றுப் பையோ,
    கிட்னியோ
    எடுத்துக்கொள்வீர்.
    படுத்துக்கொள்கிறேன்
    பக்குவமாக.
    கடேசிக் கொடை.
    செத்தும் கொடுப்பான்
    சிங்கார வேல்
    மைந்தன்.

    ********

    இறப்பில்லை எனக்கு

    இப்பிறப்பு தொடுவானில்
    அத்தமனம் ஆச்சு!
    எனக்கினி இறப்பில்லை
    எனக்கினி பிறப்பில்லை.
    எந்தன்
    செந்தமிழ் நூல் படைப்புகள்
    நூறாண்டு வாழும்.
    பாரதி சீடன் பாரதன்
    பேர் மீளும்.

    Share
  • கனடா எந்த வகையில் சிறந்தது? | சி.ஜெயபாரதன்

    அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன், இந்திய அணுசக்தித் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, கனடாவுக்குக் குடிபெயர்ந்து சென்றார். கனடா எந்த வகையில் சிறந்தது என்பதைத் தம் அனுபவங்களின் வாயிலாக விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கைகளில் வண்ணம் தீட்டும் கைவண்ணம்

    கைகளில் வண்ணம் தீட்டும் கைவண்ணம்

    போத்தீஸ் ஜவுளிக் கடையில் துணி வாங்குபவர்ககளுக்கு ஓர் இலவசச் சலுகை. அவர்களின் கைகளில் வண்ண ஓவியம் வரைந்து, ஓவியர்கள் கைவண்ணம் காட்டுகிறார்கள். நித்திலா, ஹரி நாராயணன் கைகளில் ஓவியம் வரையும் காட்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முதலீட்டின் அடிப்படை விதிகள்

    முதலீட்டின் அடிப்படை விதிகள்

    முதலீட்டின் அடிப்படை விதிகள் பத்தினை நமக்கு விளக்குகிறார், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக். உங்கள் முதலீட்டுக் கணக்குகளை இவற்றுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share