செண்பக ஜெகதீசன்
சிறகாய் இருந்தது
இறகு-
பறவை பறந்திட..
உதிர்ந்தது ஒரு நாள்,
விழுந்தது
ஓடும் நீரில்..
உதவியது அப்போதும்-
எறும்புக்குப் படகாய்…!
செண்பக ஜெகதீசன்
சிறகாய் இருந்தது
இறகு-
பறவை பறந்திட..
உதிர்ந்தது ஒரு நாள்,
விழுந்தது
ஓடும் நீரில்..
உதவியது அப்போதும்-
எறும்புக்குப் படகாய்…!
-மோ. பவானி
முன்னுரை
குடும்பம், இன வாழ்வுடைய சமுதாயத்தின் அடிப்படையாக அமைகின்றது. முழுமைபெற்ற சமுதாய வாழ்வை மனிதா்களே மேற்கொள்ளத்தக்கவா்கள். குடும்பம் ஆண் பெண் சோ்க்கையில்தான் உருவாகின்றது. சமூகம் மனித இனத்துக்கு மட்டும் முதன்மையும் சிறப்பும் தருகின்ற ஓா் அமைப்பாகும். சமுதாயம் என்பது பலவகைக் குடும்பங்களின் கூட்டமைப்பு. சமுதாயத்தின் அடிப்படை அலகுகளாகக் குடும்பங்கள் கருதப்படுகின்றன. குடும்பம் என்பது ஆண் பெண் சோ்க்கை இல்லாமலோ அச்சோ்க்கையும் அவா்களுடைய சமுதாய இசைவில்லாமலேயே அதன்பயனாக மக்கட்பேறு இல்லாமலோ அமைவதில்லை. எனவே சமுதாயத்தின் அடிப்படை அலகும், உயிரியல் அமைப்புமான குடும்பங்கள் பற்றி அறிந்துகொள்வதாக, அக்குடும்பங்கள் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
குடும்பம்
ஊா் என்பது சிற்றெல்லை அமைப்பை கொண்டிருப்பதுபோல, குடும்பம் என்பது சிற்றெல்லை உறுப்பாக அமைகிறது. குடும்பம் என்பது கணவன் மனைவியும், பின் குழந்தைகளுமாக அமைவதாகும். குடும்பம் என்பது தொடக்கத்தில் கணவன் மனைவி என்று இருவா் மனவழியாகச் சோ்வதையும் பின் இரத்த உறவும், கொப்பூழ்க்கொடி உறவுமாகக் குழந்தைகள் சோ்வதையும் குறிக்கும். கணவன், மனைவி, மக்கள் என்றும் இவா்களோடு பெற்றோர்களும் சோ்வதைக் குறிக்கும். இதன் விளக்க அடிப்படையிலேயே குடும்பம் என்பது, ஓா் உயிரியல் அமைப்பாகிறது என்று பக்தவத்சலபாரதி குறிப்பிடுகிறார்.
குடும்பத்தின் தோற்றம்
குடும்பத்தின் தோற்றம் குறித்துப் பல்துறை அறிஞா்களால் பல்வேறு கோட்பாடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை, பாலுணா்வுக்கோட்பாடு, தந்தை தலைமைக்கோட்பாடு, தாய்த் தலைமைக்கோட்பாடு, ஒருதுணை மணக்கோட்பாடு, பல காரணிகோட்பாடு என ஐந்து கோட்பாடுகளைப் பக்தவத்சலபாரதி குறிப்பிடுகிறார். பிறிதொரு வகைப்பாட்டிலும் குடும்பத் தோற்ற நினைவுகள் கூறப்படுகின்றன. அவை, இரத்தஉறவு குடும்பம், குழுமனக் குடும்பம், நிறைவுபெற்ற பிணைப்புடைய மனக்குடும்பம், தந்தைத் தலைமைக் குடும்பம், தாய்த்தலைமைக் குடும்பம் என்பனவாகும், ஆயினும், இவற்றைப் படிமுறைகள் கோட்பாட்டின் உள்ளடக்கம் என்று குறிப்பிடுவதாகத் தெரிகிறது.
குடும்பம் என்பது கணவன், மனைவி, மக்கள், பெற்றோர், உடன்பிறந்தோர், அவா் தம் மனைவி, மக்கள் என இரத்த உறவுடையவா்களைக் கொண்டது. இரத்த உறவு அல்லாமல் பணியாட்கள் அல்லது வேலையாட்கள் குடும்ப உறவினா்களாக அமைவதும் உண்டு. இதனை காப்பியங்களில் காணமுடிகிறது. இவ்வகையான உறவுமுறைகள் கொண்ட குடும்பங்கள் சங்க காலத்திலும் இருந்தன என்பதைப் புறநானூறு எடுத்துரைக்கின்றது.
கருவாச்சி காவியம்
கருவாச்சி காவியத்தில் கொண்ணவாயன் என்னும் பதினைந்து வயதுச் சிறுவன் பெரியமூக்கி வீட்டில் பண்ணையாளராகச் சேர்ந்து காடு வீடு சார்ந்த தொழில்களைச்செய்து குடும்பத்தில் ஒருவன் போல இடம் பெற்று வளா்கிறான். இதனால் இரத்த உறவு இல்லாதவா்கள்கூடக் குடும்ப உறுப்பினா்களாக இருக்கக்கூடும் என்பது தெரிகிறது. இத்தகையவா்கள் நீண்ட நெடுங்காலமாகக் குடும்பங்களில் இடம்பெற்று வந்திருக்கிறார்கள் என்பதை இலக்கியக் குறிப்புகள், இலக்கணக் குறிப்புகள் போன்றவை உறுதிப்படுத்துகின்றன. இதனை,
“யான் கண்டனையா் என் இளையரும்“ (புறம் 191)
“ஏவல் மரபின் ஏனோர்
அடியோர் வினைவலோர்” (தொல்காப்பியம் 969, 970)
என்று கூறுகிறது.
கருவாச்சி காவியம்
கருவாச்சி காவியத்தில் பெரியமூக்கி குடும்பம் தாய்த் தலைமைக் குடும்பமாகும். இதற்குச் சூழலே காரணமாகும். கணவன் இறந்தபின் குடும்பப் பொறுப்பு அவளுக்காகிறது. இவளது குடும்பம் தாயும் மகளும் கொண்ட சிறு குழுக்குடும்பமாகும்.
குடும்ப அமைப்பு
குடும்பம் என்பது சிறுகுழுக் குடும்பமாகவும், பெருங்குழுக் குடும்பமாகவும் இருக்கும், ஓா் ஆணும் பெண்ணும் தம் சமுதாய இசைவில் மணவழியாகப் பிணைப்புக்கொண்டு குழந்தைகளோடு இருப்பது சிறுகுழுக் குடும்பமாகும். இவா்களோடு பெற்றோரும், அவா் தம் மணமாகா மக்களும் சோ்ந்திருப்பது பெருங்குழுக் குடும்பமாகும், இந்நிலைகளை,
கள்ளிக்காட்டு விவசாயக் கலாசாரத்தில் புருசன் பொண்டாட்டி உறவு என்பது வெறும் உரிமைகளை முன்னிறுத்தி ஏற்படுவதல்ல, கடமைகளை முன்னிறுத்தியே கட்டப்படுவது. மண்ணைக் கிண்டும் ஒருத்தனுக்கு வாக்கப்பட்ட வாழ்க்கை கட்டில் உற்பத்தியில் மட்டுமல்லாமல் காட்டில் உற்பத்தியிலும் அவள் வோ்வை விழுந்தாக வேண்டும். கள்ளிக்காட்டுக் கலாசாரத்தில் அப்படி இல்லை. இந்த சேலையும், அரைப்படி சோளமும் அவித்தக் கஞ்சியுமே அன்றாடங்களாகிவிட்ட ஒரு வறட்டு வாழ்க்கைக்கு வாக்கப்பட்டு வருகிற ஒரு பொம்பள திருடிக்கொள்வதற்குச் சௌகரியங்கள் ஏதும் இல்லாததால் பாடுகளை மட்டுமே பகிர்ந்து கொள்கிறாள். இக்குறிப்புவழி நோக்கும்போது உடைமை உறவுக்கு இடமில்லை உற்பத்தி உறவுக்கே இடமுண்டு அந்த உற்பத்தியே இருவரையும் இணைத்துக் குடும்பத்தை நடத்திச்செல்ல துணைபுரிகிறது என்பதும் தெரிகின்றது. இவற்றால் குடும்பத்தின் அகநோக்கமும், புறநோக்கமும் தெரிகின்றன.
சடையத்தேவா் கட்டையன் ஆகியோர் தந்தை மகன் உறவில் ஆண்களே வாழ்வதும் அதேபோல் பெரிய மூக்கி கருவாச்சி ஆகியோர் தாய்மகள் உறவில் பெண்களே வாழ்வதுமான இக்குடும்பங்கள் சிறுகுழுக் குடும்பங்களாகும். ஆண்களே இருப்பதும், பெண்களே இருப்பதுமான குடும்பங்கள் சமுதாயத்திலும் அவற்றில் மனைவி இல்லாமல் ஆடவனாகிய தந்தையும் மகனும் வாழ்கின்ற நிலையும், கணவன் இல்லாமல் மனைவியாகிய தாயும் மகளும் வாழ்கின்ற நிலையும் இருப்பதைக் காணமுடிகிறது.
காவக்காரச் சக்கனன் தன் மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் பலராக வாழ்வது பெருங்குழுக் குடும்பமாகும். இது கூட்டுக்குடும்பம் என்றும் சொல்லப்படும். இதில் மணமான மகனும், மனைவி மகளோடு சோ்ந்து வாழ்வதால் இதனை நோ்வழி விரிந்த குடும்பம் என்றும், அடிப்படைக்குடும்பம் என்றும் குறிப்பிடமுடிகிறது.
குடும்பம் என்ற அமைப்போ திருமணம் என்ற நிகழ்வோ நிறுவனமோ இல்லாத நிலை மனிதஇனத் தொடக்ககாலத்தில் இருந்தது என்று குறிப்பிடுவதுண்டு. பாலின உணா்வு, பால் வேறுபாடு தெளிவாகத் தோன்றிய பின்பே பாலியல் ஒழுங்கு பேணத் திருமணம் என்னும் நிகழ்வின்வழிக் குடும்பம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்திருக்க வேண்டும். இது வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்த விலங்கின வாழ்க்கையிலிருந்து பண்பாட்டுமயமாதல் தன்மைக்கு வளா்ச்சி பெற்றுவந்த தொடக்க நிலையாகும்.
கருவாச்சி காவியத்தில் காணப்படும் குடும்ப வகைகள்
சடையத்தேவா் மனைவி இல்லாமல் கட்டையன் என்னும் மகனோடு வாழ்வதும், பெரிய மூக்கி கணவனை இழந்து கருவாச்சி என்னும் மகளோடு வாழ்வதுமான நிலையைக்கொண்ட இவ்விரு குடும்பங்களும் சிதைந்த குடும்பம் என்னும் வகையைச் சோ்கின்றன. இதேபோல வளவி கப்பஞ்செட்டியார் மனைவியை இழந்து தன் பெண் மக்களோடு வாழ்வதும், உருமாப் பெருமாத்தேவா் மனைவியை இழந்து தன் பெண் மக்களோடு வாழ்வதுமான இவையும் சிதைந்த குடும்பம் என்னும் வகையைச் சோ்ந்தனவாகும்.
இப்புதினத்தில் வாழும் வைத்தியச் சிரங்கம்மா என்பவள் கணவனும் குழ்ந்தைகளும் இல்லாமல் தனி ஒருத்தியாக தன் ஒருத்திக்காகப் பல தொழில்களும் செய்துகொண்டு வாழ்வது தெரிகிறது. இதேபோலக் கேப்பக்களியான் என்பவனும் தனி ஆளாக வாழ்வதும் அறியமுடிகிறது.
தனிக்குடும்பம்
கணவன் மனைவி என்றிருவரோடு பிறக்கும் குழந்தைகளும் அடங்கிய குடும்பம் தனிக்குடும்பம். கணவன் மனைவி மக்கள் என்னும் உறவுகளோடு வாழும் ஒரு குடும்பம் முழுவடிவம் பெற்ற குடும்பம் எனப்படும். எனவே இதன்படி குடும்பத்தின் முழுவடிவம் இதில் கிடைப்பதால் இதனை அடிப்படைக்குடும்பம். என்று மானிடவியலாளா் கருத்து அடிப்படையில் குறிப்பிடலாம். இக்கருத்தின் அடிப்படையில் கருவாச்சி குடும்பத்தில் புனைவியல் உறவு வகையில் கொண்ணவாயன் சோ்ந்திருப்பதும் சோ்ந்து வாழ்வோருடன் அமைந்த குடும்பங்களாகின்றன.
சிதைந்த குடும்பம்
கணவன் மனைவி குழந்தைகள் என்று அமைந்திருக்கும் தனிக் குடும்பத்தில் கணவனோ, மனைவியோ இறந்துபோவதில் அமையும் குடும்பம் சிதைந்த குடும்பம் எனப்படும்.
இப்புதினத்தில் உருமாப் பெருமாத்தேவா், வளவி சுப்பஞ்செட்டியார், சடையத் தேவா் ஆகியோரின் குடும்பங்கள் மனைவியா் இல்லாமல் மக்களோடு வாழ்கின்ற குடும்பங்களாக இருப்பதால் இவை சிறுகுழுக் குடும்பமாதலோடு சிதைந்த குடும்பங்களாகவும் அமைந்திருக்கின்றன. பெரிய மூக்கி குடும்பம் கணவன் இல்லாமல் மகளோடு வாழ்வதால் இக்குடும்பம் சிறு குழுக்குடும்பம் சிதைந்த குடும்பம் என்னும் தன்மைகளை ஒருங்கே பெற்ற குடும்பமாக விளங்குகிறது.
குடும்பத்தின் சிறப்பியல்புகள்
குடும்பத்தின் கடமைகள்
குடும்பத்தின் கடமைகள் இரு நிலைப்படும் அவை,
குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினா்களுக்குச் செய்யக்கூடிய கடமைகள்
குழந்தையைச் சமூக வயமாக்குதல், பண்பாட்டு வயமாக்குதல், பண்பாடு சமூகமரபு இவைஒட்டிக் குழந்தையின் ஆளுமையை உருவாக்குதல் அன்பு, பாசஉணா்வு போன்றவற்றை வளா்த்தல், பழக்கம், பிறரிடம் நடந்துகொள்ளும் முறை ஆகியவற்றை வளா்த்தல், கற்பித்தல் போன்றவை குடும்பத்துக்கு மட்டுமே உரிய கடமைகளாகும். இவற்றோடு இனப்பெருக்கம் என்பதும் குடும்பத்திற்கே உரியதாகும். இனப்பெருக்கம் இன்றிக் குடும்பம் வளா்ச்சியுறாது. குடும்ப வளா்ச்சியின்றேல் சமுதாயம் இல்லை.
இவற்றுக்கு மேலாக ஒரு குழந்தையை மனிதனாக்கும் பெரும்பணி குடும்பத்தையே சாரும். அதனால்தான் மகனைச் சான்றோன் என்று பிறா் வாயால் சொல்லப்படுவதைத் தாய் விரும்புவாள் என்று திருக்குறள் குறிப்பிடக் காண்கிறோம்.
குடும்பத்தின் சமுதாயம் சார்ந்த கடமைகள்
சீலயச் சல்லடையாக்கி கொடிக்கள்ளிப்பாலில் புழுக்களை ஒட்டி விடும் வடிகட்டி மெடாவிலும் கொடத்திலும் நெப்பிக்கிட்டு இறங்கி வாராக பொம்பளைக மொடத் தன்னியாக கொதிக்க வைத்து குளிர வச்சுத் தண்ணிப்பந்தலும் போட்டுட்டா கருவாச்சி, ஊா் மந்தையில் கத்தாழக்கிழங்கு மஞ்சத் தண்ணியில் உப்புப்போட்டு ஊறவைத்தாள், கள்ளி கத்தாழமட்டை புளியம்பொட்டு போட்டு அடுப்பெரித்தாள். குழைய வேகவைத்தாள். அருவாள எடுத்து சின்ன சின்னதாக வகுத்து ஊா் மக்களைச் சாப்பிடச் சொன்னாள் என்று கருவாச்சி தன் ஊரில் நிலவிய கடும்பஞ்சத்தைப் போக்க மேற்கொண்டவை சமூகம்சார்ந்த பணிகளாகும். அதுவும் சமூகக் கூட்டுப்பணியாகும். மேலும் தோழிகளும், பெண்களுமான கனகமும், பவளமும், வாழ்வதற்காக அவா்கள் தனக்குத் திரும்பக் கொடுத்த அணிகலனை விற்றுப் பெட்டிக்கடை வைத்துக் கொடுத்தாள்.
கருவாச்சியின் இவ்வகை உதவிகளைத் தற்கொலை மனப்பாங்கு என்று மானிடவியல் அறிஞா் சண்முகலிங்கன் குறிப்பிடுகிறார். இந்த மனப்பாங்கு பிறர் நிலையைத் தன்னிலைபோல உணா்வதால் உண்டாகும் என்று கூறுகின்றார்.
முடிவுரை
கருவாச்சி காவியத்தில் காணப்படும் குடும்ப அமைப்பு முறைகளையும், குடும்பத்தை பலவகையாகப் பிரித்த முறைகளையும் கிராமிய மாந்தா்களின் நிலையைப் பற்றியும் இப்புதினத்தின் வழியாக அறிய முடிகின்றது.
பார்வை நூல்கள்
******
கட்டுரையாளர்
முனைவா் பட்ட ஆய்வாளா்
பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூா்
’’மாதவனின் காதினை மாதவள்(மாது அவள்) கிள்ளிடும்
போதினில் வானர(வான் ப்ளஸ் அரன் -அனுமார் ருத்திராம்ஸம்) போஜனம்: –தாதை(அப்பன்)
விருந்துண்ணும் முன்பு, குரங்கெண்ணம்(நன்றிக் கடன்) கொள்ள,
கருந்தா மரைக்கையில் கட்டு’’….!
(அல்லது)
திருந்தாத கள்ளனென்றாள் தாய்(யசோதா பாவம் கண்ணன்)’’….கிரேசி மோகன்….!
யசோதை உவாச….!
—————————————————
குறையெனக்குன் காட்சி நிறையெனக்குன் நாமம்
சரியெனக்குன் மாயையின் சூழ்ச்சி -அரியுனக்கு
இன்னும் தயக்கமேன் என்னைப் பிடித்திட
கண்ணா அவிழ்த்திடுகண் கட்டு….
மீண்டும் உரலிழுத்து மாமருதம் சாய்த்தரவத்
தாண்டவம் ஆடித் தயிருண்டு -வேண்டிய
ராதையை காதலித்து போதனையாய் கீதையை
யாதவா வந்திங்(கு) எழுது….!
——————————————————————————————————
——————————————————————————————————
கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்ட காரணம்
அன்னையின் அன்பினாலா அல்லது -கண்ணனே
ஓயாத லீலையின் மாயா வசப்பட்டு
ஆயாசம் ஆனதா லா….
பழிவாய் மணக்க பகலும் இரவும்
மொழிவாய் முகுந்தா முராரி -விழுவாய்
வணங்க வரதன் வளரடி தன்னில்
இணங்கும் இகபரம் இங்கு….
மூப்பும் பிணியும் முகமன் உரைத்திடும்
தோற்பும் பகையும் திரண்டெழும் -போப்போய்
மருதம் முறித்து மதயானை கொன்ற
வரதனை நெஞ்சே வணங்கு….
திருவிருந்த மார்பன் திருத்துழாய் மார்பன்
மருவிருந்த மார்பன் மகனாய்ச் -சிறையில்
கருவிருந்த மார்பன் தெருவிருந்த மண்ணை
பெருவிருந்தாய் உண்ட புதிர்….
சகஸ்ரமவன் நாமம் சகலமவன் ரூபம்
ரகஸ்யமவன் மாயை, ரசிப்போர் -அகஸ்மாத்தாய்
வானம் வசப்பட நானவன் தானென்ற
ஞானத்தில் நிற்பார் நிலைத்து….
பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
கண்ணனை நெஞ்சே கருது….
காயாம்பூ வண்ணத்தை கற்றோர்தம் எண்ணத்தை
ஆயர்தம் சின்னத்தை மண்ணையுன் -ஓயாத
மாயத்தை ஒப்பில்லா சீயத்தை நேயத்தில்
தாயொத்த தாயத்தைத் தேடு….கிரேசி மோகன்….!
-மேகலா இராமமூர்த்தி
தோழியின் இனிய இதயத்தை எண்ணி உளம்நெகிழ்ந்தவண்ணம் தலைவனும் தலைவியும் தம் பயணத்தைத் தொடரலாயினர். நடக்க நடக்க நீண்டுகொண்டே சென்றது சுரவழி. பகல்கழிந்து அந்திமாலையும் வந்து சேர்ந்தது! அப்போதும் தலைவனின் ஊர்நோக்கிய நெடும்பயணத்தை நிறுத்தாது, தலைவனும் தலைவியும் சென்றுகொண்டிருந்தனர். வழியில் எதிர்ப்பட்ட ஊரை அவர்கள் கவனித்திலர். ஆனால் அவ்வூரினர் களைத்துவரும் இவ்விளையோரைக் கவனித்துவிட்டனர். இவர்கள் உடன்போக்கு நிகழ்த்தும் காதலர்கள் என்பதையும் கணித்துவிட்டனர்.
நில்லாது சென்றுகொண்டிருந்த தலைவன் தலைவியைப் பார்த்து,
”சிறியபிடி போன்றவளுக்குத் துணைவ! பகலவன் வானைவிட்டு அகலும்நேரம் நெருங்கிவிட்டது. வணிகக்கூட்டம் வந்திருக்கின்றது என்றெண்ணி, பகைப்புலத்தில் கொள்ளும் பகைபோல், வளையணிந்த நெடுவேலேந்தி அவ்வணிகரின் பொருள்களைக் களவாடும் ஆவலில் எம் காவற்காடுவரைவந்து வணிகரைக் காணாது வறிதே பெயரும் ஆறலை கள்வர் முழக்கும் தண்ணுமையெனும் வாத்திய ஒலியைக் கேளுங்கள்! நீவிர் இருவரும் பயணம் மேற்கொள்வதை இவ்வேளையில் தவிர்த்தலே நலம்” என்று நவின்றனர்.
பாலைநிலத்திற் செல்லும் வணிகர்கூட்டத்தை எதிர்த்து, அவரது பொருளைக் கைக்கொள்ளல் ஆறலை கள்வரின் இயல்பு. ஆறலைகள்வர் தண்ணுமை ஒலியைக் கேள் என்று தலைவனுக்கு இடைச்சுர மக்கள் சொன்னதன் நோக்கம், அக்கள்வரால் இக்காதலருக்கு ஏதம்வரும் என்பதை உணர்த்தவே.
எல்லும் எல்லின்று பாடுங் கேளாய்
செல்லா தீமோ சிறுபிடி துணையே
வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென
வளையணி நெடுவேல் ஏந்தி
மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரலே. (குறுந்: 390 – உறையூர் முதுகொற்றனார்)
அம்மக்களின் விருப்பப்படியே அன்றிரவை அவ்வூரில் கழித்துவிட்டு மறுநாள்காலை தம் பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர் காதலர்கள்.
தலைவனுடன் செல்லும் பயணமாதலால் கல்லும் முள்ளுங்கூடத் தலைவியின் கால்களுக்கு மெத்தையாகவே இருந்தன. சிறிதுதூரம் சென்றதும் கண்ணிற்பட்ட நெல்லிமரத்திலிருந்து காய்களைப் பறித்துத்தின்ற தலைவி, அருகிருந்த சுனையின் அழுக்குநீரைக்கூட அமுதமாய் எண்ணிப் பருகினாள். நாவினித்தது! உடனே, நெல்லியைத் தின்னச்சொன்ன அருமைத்தோழியின் நினைவுவந்ததால் நெஞ்சினித்தது. இத்தகு உத்தமத் தோழியைப் பெற்றநான் பேறுபெற்றவள் என நினைந்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.
அவள் கண்ணீரைத் துடைத்த தலைவன் அவளை அன்பொடு நோக்கி, “கண்ணே! தம் வழிபடுதெய்வத்தை நேரிற்கண்ட மக்கள் எப்படி உளம் மகிழ்வரோ அவ்வாறு உனையடைந்ததால் நான் மகிழ்கின்றேன். நம் நடைப்பயணத்தால் நீ களைக்கலாகாது; ஆதலால் நிழல்காணுந்தோறும் இளைப்பாறு! மணல் காணுந்தோறும் வண்டலிழைத்து (சிற்றில்கட்டி) விளையாடு! அவசரம் ஏதுமில்லை” என்றான்.
இதனிடையே, தலைவியின் தமர்க்குத் தலைவி ஆடவன் ஒருவனோடு உடன்போக்கு மேற்கொண்ட விவரம் தெரியவர, அவர்கள் அடைந்த துயருக்கோர் அளவில்லை. தலைவியின் நல்வாழ்வை எண்ணியே நாளுங்கவலும் தம்மிடங்கூடச் சொல்லாமல் தன் வாழ்வைத் தானே முடிவுசெய்துவிட்ட அருமை மகளையெண்ணி நற்றாயும் செவிலித்தாயும் வெகுளியும் வேதனையும் அடைந்தனர்.
தோழியும் இதற்கு உடந்தையோ என்று ஐயுற்ற அவர்கள், அம்மடந்தையிடம் இதுகுறித்து விசாரிக்கலாயினர்.
அவளோ, “அயல்மணத்தைத் தலைவிக்கு நீங்கள் நிகழ்த்தவிரும்பும் இத்தருணத்தில், உம்மிடம் தன் காதலைச் சொன்னால் அதனை நீங்கள் ஏற்பீர்களோ… மாட்டீர்களோ என்றஞ்சி அவ்வஞ்சி தான்விரும்பிய காதலனோடு சென்றிருக்கலாம்” என்று பட்டும்படாமலும் பதில்சொல்லித் தனக்கும் தலைவியின் உடன்போக்குக்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று காட்டிக்கொண்டாள்.
தலைவியின் பிரிவால் அருமணி யிழந்த நாகம்போல அலமரலுற்றனர் தாயர் இருவரும். மகளின் எதிர்காலத்தை எண்ணியெண்ணி, பெற்றவளான நற்றாயும் பாலூட்டி வளர்த்த செவிலித்தாயும் புலம்பலாயினர்.
”பாலுமுண்ணாது, தனக்கினிய பந்தையும் விரும்பாது, மகளிர் கூட்டத்துடன் இடைவிடாது விளையாடுவதிலேயே நாட்டம்கொண்டிருந்த தலைவி, உலர்ந்த கிளையையுடைய ஓமை மரத்தினைக் குத்திய உயர்ந்த கொம்புடைய ஆண் யானை, வேனிற் தன்மையுடைய, மலையின் வெப்பம் மிகுந்த அடிவாரத்தில், மேகம் முழங்குகின்ற கடிய முழக்கத்தைக் கூர்ந்து கேட்கின்ற, மூங்கில்கள் உலர்ந்த, செல்லுதற்கரிய இடத்திலே, தலைவனோடு செல்லுதல் எளிது என நினைத்தாளோ?” என்று தலைவியின் மென்தன்மைக்கு வன்மைமிகு பாலைவழிப் பயணம் எப்படிப் பொருந்தும் என வருந்தினாள் நற்றாய்.
பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்
விளையாடு ஆயமொடு அயர்வோ ளினியே
எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை
ஓமை குத்திய உயர்கோட்டு ஒருத்தல்
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும்
கழைதிரங் காரிடை அவனொடு செலவே. (குறுந்: 396 – கயமனார்)
பெற்றவளைத் தொடர்ந்து வளர்த்தவளான செவிலித்தாய் தன் மனவருத்தத்தை வெளிப்படுத்தலானாள்…
”கையிலேந்திய செம்பொன்னாலாகிய பாத்திரத்திலுள்ள அழகிய பொரியோடு கலந்த பாலையும் மிகுதி என்று கூறி உண்ணாத, திரட்சியமைந்த குறிய வளையணிந்த, தளிர்போன்ற மென்மையையுடைய என்மகள், நிழல் அடங்கி அற்றுப் போன, நீர் இல்லாத கடத்தற்கரிய பாலை நிலத்திலே வீரக்கழலணிந்த தலைவன் தன்னைப் பாதுகாப்ப விரைந்து சென்று, நீர்வளமற்ற சுனையின் பக்கத்தில் உலர்ந்து வெம்மை கொண்ட கலங்கல் நீரை ’தவ்’வென்னும் ஓசைபடக் குடிக்கும் வலிமையை எங்ஙனம் பெற்றாள்?” என்று சொல்லித் துயருற்றாள் செவிலித்தாய்.
நிழலான் றவிந்த நீரில் ஆரிடைக்
கழலோன் காப்பக் கடுகுபு போகி
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே ஏந்திய
செம்பொற் புனைகலத்து அம்பொரிக் கலந்த
பாலும் பலவென உண்ணாள்
கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே. (குறுந்: 356 – கயமனார்)
இப்பாடலில் ‘செம்பொற் புனைகலத்து ஏந்தியபால்’ என்பது தலைவியின் தாய்வீட்டுச் செல்வநிலையை உணர்த்தி நிற்கின்றது. இத்துணை வளமையாய் வாழ்ந்தவள் வறண்டநிலத்தைக் கடக்கும் துன்பத்துக்கு ஆளாக நேர்ந்ததே என்பது செவிலியின் வேதனை. இவ்வாறு மாற்றி மாற்றித் தாயர் இருவரும் தம் மகளின் உடன்போக்கினைக் கடிந்தும், அவள் பிரிவினால் மனமொடிந்தும் புலம்பிக்கொண்டே இருந்தனர்.
ஒருவாறு சற்றே சமாதானமடைந்த செவிலி, ”நம்மைப் பிரிந்து, ஒளிபொருந்திய நெடிய வேலையுடைய தலைவனோடு, மடப்பத்தையும் மாமையையும் உடைய நம் மகள் சென்ற பாலைநிலம், கதிரவன் காயாது மரத்தின் நிழல் பொருந்தியதாய், மலையிடத்தேயுள்ள சிறிய வழியின்கண் மணல்மிகப் பரவப்பெற்று குளிர்ந்த மழை பெய்ததாகுக” என்று தலைவிசென்ற சுரவழி அவளுக்கு இடரளிக்காது இதமளிக்க வேண்டும் என்று கரங்குவித்து இறைதொழுதாள்!
ஞாயிறு காயாது மரநிழற் பட்டு
மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த்
தண்மழை தலையின் றாக நந்நீத்துச்
சுடர்வாய் நெடுவேற் காளையொடு
மடமா அரிவை போகிய சுரனே. (குறுந்: 378 – கயமனார்)
தலைவி சென்றபாதை அவளுக்கு இனிதாய் இருக்கவேண்டும் என்று செவிலித்தாய் வேண்டுவதை ஐங்குறுநூற்றுப் பாடலொன்றிலும் நாம் காணவியலும்.
மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும்
உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி யினிய வாகுக தில்ல
அறநெறி யிதுவெனத் தெளிந்தவென்
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே’’ (ஐங். 371)
தம் பிள்ளைகள் இன்னாதன செய்தாலும் அவர்களுக்கு இனியவே நினைப்பது தாயர்க்கே வாய்த்த தனிக்குணம் போலும்!
ஆனால், நற்றாயின் மனம் மகளைப் பிரிந்த துயரிலிருந்து சிறிதும் விடுபடவில்லை. கண்ணீரும் கம்பலையுமாக அவள் பித்துப்பிடித்தவள்போல் அமர்ந்திருப்பதைக் கண்ட செவிலிக்கு மனம் பதறியது. ஒருமுடிவுக்கு வந்தவளாய் நற்றாயின் கண்ணீரைத் துடைத்தவள், ”கவலாதே தோழி! சுரவழி சென்ற தலைவியின் கரம்பற்றி அழைத்துவந்து, விரைவில் ஒப்படைக்கிறேன் உன்னிடம்!” என்று சூளுரைத்துப் புறப்பட்டாள் தலைவியைத் தேடி!
[தொடரும்]
க. பாலசுப்பிரமணியன்
அறிவால் இறைவனை அடைய முடியுமா ?
சலனமற்ற மனத்தைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதை அடைய எப்படிப்பட்ட அறிவு நமக்கு வேண்டும்? எந்த புத்தகங்களைப் படித்தால் இந்த அறிவு நமக்குக் கிட்டும்? எந்த மொழியில் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்? எந்தக் காலத்தில் எழுதப்பட்ட புத்ததகங்களில் இந்த அறிவு நமக்குக் கிட்டும்? இப்படிப்பட்ட பல கேள்விகள் நமது மூளையைத் துளைத்துக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கேள்விகளுக்கெள்ளாம் பதில் கொடுக்கும் வண்ணம் கபீர்தாசர் கூறுகின்றார்.
“மூட்டை மூட்டையாகப் புத்தகங்களைப் படித்துவிட்டு எவரும் அறிஞர்கள் ஆவதில்லை. அன்பு என்ற இரண்டரை அட்சரத்தை எவன் படித்து அறிந்துள்ளானோ அவனுக்கு நிகர் யாருமில்லை.”
இறைவனை அன்புப்பூர்வமாக உணரவேண்டும். அறிவு என்பது என்ன? ஐம்பொறிகளால் நமக்குக் கிடைக்கும் உணர்வுகள் மூளையில் பரிசீலிக்கப்பட்டு நம்முடைய பழைய நினைவுகள் உணர்வுகள் ஆகிவயவற்றோடு விவாதிக்கப்பட்டு ஒரு புதிய கருத்தாக பொருளாகக் கிடைப்பதுதானே அறிவு? ஆனால் இந்த ஐம்பொறிகளுக்கப்பால் உணர்வுகளுக்கு அப்பால் எவ்வளவு அனுபவப்பூர்வமான அறிந்த, அறியாத அறிவு சாம்ராஜ்யம் இருக்கிறது? எனவே, இறைவனை அறிவதற்கும் அவனுடைய முழுமையை உணர்வதற்கும் நாம் படித்துச் சேர்த்த அறிவு மட்டும் போதாது. திருமூலர் கூறுகின்றார்
அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்
அறிவு அறியாமை யாரும் அறியார்
அறிவு அறியாமை கடந்தறி வானால்
அறிவு அறியாமை யழகிய வாறே.
அறிவையும் அறியாமையையும் கடந்து நிற்கின்ற பேரறிவை நாம் அறிந்தால் அது ஒரு பேரின்பமாக அமைந்துவிடும் .
வாழ்வில் பல ஆண்டுகள் இந்த அறிவைப் பின் தொடராது காலம் கழித்தபின் மனதில் தன் தவறுக்கு வருத்தம் ஏற்படுகின்றது. இது எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் வழக்கமாக ஏற்படுவதுதான். இந்தத் துயரை வெளிப்படுத்தும் மாணிக்கவாசகர் சொல்கின்றார்
ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே.
புறப்பார்வைக்குத் தென்படும் பல இடங்களில் இறைவனைத் தேடும் நாம் அவன் இருக்கும் உண்மையான இடத்தைக் கண்டுகொள்வதில்லை இந்த அறியாமையை விளக்கும் வண்ணம் பட்டினத்தார் கூறுகின்றார்
சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லினு மாசற்ற வகாயந் தன்னிலு மாய்ந்துவிட்டோர்
இல்லிலு மன்ப ரிடத்திலு மீசனி ருக்குமிடங்
கல்லிலுஞ் செம்பிலு மோவிருப் பானெங்கள் கண்ணுதலே
இந்தக் கருத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது பட்டினத்தாரின் அனுபவத்தில் வந்த மற்றொரு பாடல் –
எல்லா மறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி
வல்லா னறிந்துள னென்றுண ராது மதிமயங்கிச்
சொல்லான் மலைந்துறு சூழ்விதி யின்படி துக்கித்துப்பின்
எல்லாஞ் சிவன் செய லென்பர் காண் கச்சி யேகம்பனே
இந்த நிலையை அடைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?. அந்த அனுபவம் சலனமற்ற மனதிற்கன்றோ கிடைக்கும். அந்த சலனமற்ற நிலையை விளக்கும் திருமூலர் கூறுகின்றார்:
தூங்கிக் கண்டார் சிவ லோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவ யோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவ போகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வதெவ்வாறே
இந்த தூக்கம் நாம் நித்தம் இரவில் உறங்கும் உறக்கம் அல்ல. இது விழிப்புணர்விலிருந்தும் மயக்க நிலையிலும் இருந்து விடுபட்ட நிலை. உலக நடப்புக்களிலிருந்து விடுபட்ட நிலை. உணர்ந்தும் உணராத நிலை. யோகத்தில் ஆழ்ந்த நிலை. போகங்களிருந்து விடுபட்ட நிலை. இந்தத் தூக்கத்தில் ஒளிமயமாக அவன் மட்டும் உணர்வோடு ஒன்றி இருக்கும் நிலை.
இந்த நிலை எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதா ? இதற்கு என்ன முயற்சி செய்ய வேண்டும் ?
தொடருவோம்
-மோ. பவானி
முன்னுரை
நாடோடிகளாகத் திரிந்த மானிடச் சமூகம் ஓரிடத்தில் நிலையாகத் தங்கித் தங்கள் குடிகளை அமா்த்திச் சமுதாய அமைப்பினை உருவாக்கிய காலகட்டங்களில் தனக்குத்தெரிந்த சடங்கு முறைகளைத் தோற்றுவித்தனா். மனிதர்கள் தம் வாழ்க்கையைக் குறிக்கோளுடை.யதாக்கி ஒற்றுமையுடனும் ஒழுங்குநெறியுடனும் வாழத் தலைப்பட்டபோது ஏற்படுத்திக்கொண்ட ஒரு சம்பிரதாயச் சாத்திரமே சடங்கு ஆகும். மனித வாழ்வில் இடம்பெறும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து மக்களால் கையாளப்படுமானால் அவையே சடங்குகள் எனப்படும். அத்தகைய சடங்கு முறைகளைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
சடங்கின் நோக்கம்
மனித வாழ்வு சிறப்பாகவும், செழிப்பாகவும் தழைத்தோங்கச் செய்வது சடங்கின் முதன்மை நோக்கமாகக் கருதலாம். மகிழ்ச்சி, நம்பிக்கை, அமைதி, நோயின்மை, பீடைகள் நீங்கவும், சமுதாயம் ஒருமைப்பாட்டுடன் செயல்படவும், குடும்பஉறவுகள் வலுப்பெறவும் சடங்குகள் தேவையானதாகக் கருதப்படுகின்றன. மனிதன் நம்பிக்கையுடன் செயல்படவும் மனநிறைவு கொண்டு வாழவும் சடங்குகள் தேவையாக அமைகின்றன.
சடங்கு நடத்தப்படுவதால் ஏற்படும் நன்மைகள்
சமுதாயத்தில் சடங்குகள் நடத்தப்படுவதால் பல நன்மைகள் விளைகின்றன. சமுதாயத்தில் ஒருமைப்பாடு தழைத்தோங்குகிறது. உறவினா்களுக்கிடையே நல்லுறவு, கட்டுப்பாடுகள் போன்றவை நிலைபெறுகின்றன. நம்முன்னோர்களை நினைவுபடுத்திக்கொள்வதோடு, வழிவழியாக வந்த மரபுகளும், பண்பாடுகளும் பாதுகாக்கப்படுகின்றன.
சமுதாயத்தில் சடங்கு நடத்தப்படுவதால் ஏற்படும் நன்மையினை அழகர் சடங்குகளின் மூலம் ஓர் இனத்திற்கும் மற்றோர் இனத்திற்கும் உள்ள வேறுபாட்டையும், அச்சடங்குகளைச் செய்கின்ற மக்களின் மனநிலைகளையும், அவர்கள் வாழும் இடங்களையும் அவர்களுடைய கல்வி, நாகரிகம், பண்பாடு, ஒழுக்கம், மதம் போன்றவற்றையும் அவர்களுடைய எதிர்காலச் சமுதாயம் எப்படி இருக்கும் என்பதையும் அறியமுடிகின்றது.
வாழ்வியல் சடங்குகள்
மனிதவாழ்வில் இரண்டறக் கலந்துள்ள சடங்குகள் அவனின் வாழ்க்கைச் சூழல்களுக்கு தகுந்தபடி மாற்றம்பெறுகின்றன. சடங்குகளை மங்கலம், அமங்கலம் என இருவகையாகப் பகுத்துக் காண்பதும், பிறப்பு, காதுகுத்துதல், பூப்பு, திருமணம் முதலான சடங்குகள் மங்கலச் சடங்குகள் என்றும், இறப்புத் தொடா்பான சடங்குகள் அமங்கலச் சடங்குகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. கள்ளிக்காட்டுக் கிராமிய மக்களின் வாழ்வில் இடம்பெற்ற வாழ்வியல் சடங்குகளை வைரமுத்து தெளிவாக எடுத்துக்காட்டுகிறார்.
எனும் ஐந்து நிலைகளில் வகைப்படுத்தியுள்ளார்.
பிறப்புச் சடங்குகள்
சமுதாயத்தில் வாழக்கூடிய மனித இனத்தின் மாபெரும் செல்வம் குழந்தைச் செல்வமாகும். மழலைச் செல்வம் இல்லையெனில் அவா் பெற்றிருந்த செல்வத்தால் யாதொரு பயனும் இல்லை. குடும்பத்தின் செல்வமாக விளங்கும் குழந்தைக்கு எவ்விதத் தீவினையும் நிகழாமல் இருப்பதற்காக மக்கள் மேற்கொள்ளும் சடங்கு முறையே பிறப்புச் சடங்குகள் எனலாம்.
குழந்தை பிறப்பதற்கு அறிவியல் முறையான காரணம் கண்டறிய இயலாத பழங்குடியினா் அவற்றைக் காக்கச் சடங்குகளின் துணையை நாடினர். இச்சடங்குகள் மந்திரம், சமயம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திச் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறாகத் தொடா்ந்து இச்சடங்கு முறைகள் இன்றளவும் மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. பிறந்த குழந்தைக்கு நலன்வேண்டிச் செய்யப்படும் சடங்குகள் பிறப்புச் சடங்குகள் என்று ஞானசேகர் விளக்கிக் காட்டுகிறார்.
பிறந்த குழந்தை நலமுடன் வாழவேண்டும் என்ற நல்ல நோக்கத்தினாலேயே பிறப்புச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. குழந்தைக்கு சடங்குகள் நடத்துவதன் நோக்கத்தினை நடேச சாஸ்திரி என்பவர் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.
குழந்தைச் செல்வத்தின் முக்கியத்துவத்தாலும் நன்மக்கள் போற்றும் இறையருளின் இன்றியமையாலும் பல்வேறு சடங்குகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
தேனைத்தொட்டு வைத்தல்
பிறந்த குழந்தையின் நாக்கில் சீனியைக் கரைத்து அதை விரலால் தொட்டு வைப்பதற்கு தேனை வைத்தல் என்று பெயர்.
பேயத்தேவரின் மகள் செல்லத்தாயிக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்குப் பேயத்தேவரும் அவர் மனைவி அழகம்மாளும் தேனைத்தொட்டு வைக்கும் காட்சியினைக் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்தின் வழியே காட்சிப்படுத்துகின்றார் வைரமுத்து.
பிறந்த குழந்தைக்குச் தேனைத்தொட்டு வைப்பது என்பது, அந்த ஊர் வழக்கம். வசம்பின் நுனியில் எண்ணெய்தொட்டு குழந்தையின் வாயில் மூன்றுமுறை வைக்கும்போது ஓம்புத்தி போயி ஏம்புத்தி வரவேண்டும் என்று சொல்லிச் சொல்லி வைப்பது மரபு. எனத் தேனைத்தொட்டு வைக்கும் சடங்கு முறையினைக் கிராம மக்கள் பின்பற்றிய விதத்தினை எடுத்துரைக்கிறார். குடும்பத்தில் அனுபவம் வாய்ந்த நல்ல குணநலன்களை உடையவா்களின் பண்புநலன்கள் அக்குழந்தைக்கு அமைய வேண்டும் என்ற நோக்கில் இச்சடங்கு முறை அமைந்துள்ளமையை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
காதுகுத்தும் சடங்கு
காதுகுத்தும் சடங்கு கிராமமக்களின் தவிர்க்க இயலாத சடங்கு முறையாகும். குழந்தை பிறந்த சில மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ காதுகுத்தும் சடங்கு நடைபெறும். குழந்தைப் பருவத்தில் காது குத்தவில்லை எனில் இறப்பதற்குள்ளாகவும், இல்லை இறந்த பின்பாவது காது குத்தியே அடக்கம் செய்யும் வழக்கம் இன்றளவும் மக்களிடையே நிலவி வருகின்றது.
வைரமுத்து படைப்பில் இடம்பெறும் காது குத்தும் சடங்கு முறையினை,
என்ற நிலைகளில் வகைப்படுத்தியுள்ளார்.
கள்ளிக்காட்டு கிராம மக்களின் வாழ்வில் காதுகுத்தும் சடங்கு மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்துள்ளமையைக் கருவாச்சி காவியம் எனும் புதினம் வழியாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். காது குத்தும் சடங்கில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினையும், மக்களின் மனநிலையினையும் வாழ்வியல் பின்புலங்களையும் இதன்மூலம் காட்டுகிறார்.
காதுல ஓட்ட போட்டதும் சலசலன்னு இரத்தம் ஒழுகுதா இல்லையா? இரத்தம் ஒழுங்குமுறையா இருந்தா செத்த நேரத்துல ஒறையனும் அப்படி ஒறையலனா சக்தி இருக்கா இல்லையான்னு சோதிக்கிறதுதான் காது குத்தாம். இது ஒரு வைத்தியன்கணக்கு என்று காதுகுத்துச் சடங்குகள் நடைபெறுவதற்குரிய காரண காரியங்களை மேற்கண்ட கூற்று வழியே ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும் மருத்துவ ரீதியான அடிப்படையிலும் இச்சடங்கு நன்மையை மட்டும் விளைவிக்கும் நிலையினை எடுத்துரைக்கிறார்.
திருமணச் சடங்கு
கிராமப்புற மக்களின் வாழ்வியல் பின்புலங்களைத் தெளிவாக உணர்த்த வைரமுத்து ஒவ்வொரு சடங்கு முறையினையும் நுட்பமாகக் கவனித்துத் தம் படைப்பு வழியே பதிவு செய்துள்ளார். மனித வாழ்வின் திருப்புமுனைச் சடங்காகக் கருதப்படும் திருமணச் சடங்கின் மேன்மையையும் தேவையினையும் தெளிவுபடுத்தும் ஆண், பெண் இருவரும் இணைந்து வாழும் திருமண வாழ்வினை,
ஓா் ஆணும் பெண்ணும் உறவுகொள்ளச் சடங்குகள் சம்பிரதாயங்களோடு சம்மதம் வாங்கிக் கொண்டால் ஊர் அதைக் கல்யாணம் என்கிறது என்று விளக்கம் தருகின்றார்.
நாகரிகம் வளா்ச்சியடையாத பொழுதும் கிராமங்களில் திருமணச் சடங்குகள் இன்றளவும் சிதையாமல் பின்பற்றப்பட்டு வருவதைத் தம் படைப்பின் வழியே அடையாளப்படுத்துகின்றார். இதுவே வைரமுத்துவின் படைப்பில் காணலாகும் திருமணச் சடங்குகளாகுகின்றன.
எனும் இருநிலைகளில் வகைப்படுத்தி ஆராயலாம்.
இறப்புச் சடங்குகள்
இறப்பு என்பது மனித வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இறுதி நிகழ்வாகும். இறப்பில் சிலர் இயற்கையாகவும், சிலர் நோய்வாய்ப்பட்டும் இறப்பர். மனிதா்களின் வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்த்தும் நிகழ்வே இறப்பு எனலாம். வாழ்க்கையில் மனிதர்கள் தம்முடைய குடும்பத்தோடும், உறவினர்களோடும், சமுதாயத்தோடும் வாழ்ந்து வரும்போது “இறப்பு” ஒரு மிகப்பெரிய மாறுதலை உண்டாக்குகிறது.
இறப்பு மனித வாழ்வின் இறுதிநிலை என்றாலும், அதற்குப் பின்னர் மீண்டும் இவ்வுலகில் பிறக்கிறான் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே பரவலாக நிலவிவருகின்றது. இதனாலயே மற்ற நிலைகளில் கடைப்பிடிக்கும் சடங்கு முறைகளைக் காட்டிலும் இறந்தவர்களுக்குச் செய்யும் ஈமச்சடங்குகள் மனித வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்நிலை பழங்குடியினர் முதல் தமக்கென ஒரு நாகரிகத்தைக் கொண்டிருக்கும் பல்வேறு சாதிக் குழுவினர் வரை அனைவரிடமும் காணக்கூடியதாகும் என்று வாழ்வியல் களஞ்சியம் எடுத்துரைக்கிறது.
வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் மனிதர்கள் இறந்துவிட்டால் அவர்களை அடக்கம்செய்யும் முறை இல்லாமல் காணப்பட்டது. இறந்தவர்களின் உடலைப் பறவைகளும், மிருகங்களும் சிதைத்து உணவாக உட்கொள்ளும் நிலையே இருந்தது. மனிதர்களின் நாகரிக வளர்ச்சியால் சமுதாயத்தில் இறந்த மனிதனை அடக்கம் செய்யும் வழக்கம் ஏற்படத் தொடங்கியது எனலாம். உலக மக்கள் இறந்தவர்களின் உடலினை அடக்கம்செய்யப் பல வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர்.
பண்டை நாளில் திபெத் மக்களும், அமெரிக்க ஆஸ்திரேலிய மக்களும் பிணத்தைப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவாக விட்டுவிடுவர். மத்தியத்தரைக் கடற்கரைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இறந்தவா்களைத் தங்கள் குகைகளில் புதைத்தார்கள். திபெத் மக்கள் மேற்கு ஆப்பிரிக்க ஆதிகுடிகள், பாலிவேசிய மக்கள் பிணத்தைக் கடலிலோ, ஆற்றிலோ எறிந்து இருக்கிறார்கள். அந்தமானியர், நாகர், அஸ்ஸாம்வாசிகள், தோண்டுகள் மக்கள் மரத்தின்மேல் பரண்கட்டிப் பிணத்தை அதன் மீது வைத்துவிடுவர். மேலும் சிந்துசமவெளி மக்கள் பிணத்தை உட்காரும் நிலையில் தாழிகளில் வைத்து அடக்கம் பண்ணி அடைத்தனர் என்று கலைக்களஞ்சியம் எடுத்துரைக்கிறது.
கள்ளிக்காட்டு கிராம மக்களின் வாழ்வியல் இடம்பெறும் சிறப்புச் சடங்கின் நிலைப்பாட்டினை வைரமுத்து தன்னுடைய படைப்புகளில் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார். கிராம மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ள இறப்பு குறித்த நிகழ்வுகள் வழியே மக்களின் வாழ்வியல் பின்புலங்களையும் எடுத்துரைக்கின்றார். இதனை,
எனும் இரு நிலைகளில் வகைப்படுத்தி ஆராயலாம்.
இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள்
உடலைவிட்டு உயிர்பிரிந்த பின் அவ்வுடலுக்குச் செய்யப்படும் சடங்குகள் இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள் எனலாம். வைரமுத்து தம் நாவல்களில் கிராமமக்களின் வாழ்வியலில் நடைபெறும் இறப்பு குறித்த நிகழ்வுகளையும், சடங்கு முறைகளையும் தெளிவுபட எடுத்துக்காட்டுகிறார்.
பேயத்தேவரின் மனைவி அழகம்மாள் இறந்த செய்தியினை உறவினர்களுக்கும், பிற ஊர்களுக்கும் சொல்லச் சொல்லும் நிலையினைக் கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் நாவல்வழியாகக் கவிஞர் எடுத்துரைக்கிறார். அப்போது தான் ஊர் ஊருக்கு எழவு சொல்லப் போய்க்கொண்டிருந்த மாதாரிக் கொத்தன் தொங்கித் துவண்டுவரும் பேயத்தேவரைக் கண்டு யப்பே! நான் என்னத்தச் சொல்லுவேன் ஆத்தா எழவு சொல்லவும் நான் உசுரோட இருக்கனே என்றான். அழுக்குத் துண்டை வாயில் வைத்து அடைத்துக்கொண்டு போடா….. போயி பொழுதோட சொல்றா என்றார். பேயத்தேவர். கண்ணீா்பேய் உடைந்த வார்த்தைகளால் எனும் பகுதியில் இறந்தவுடன் இறப்புச் செய்தியினைச் சொல்வதற்கு ஆள் அனுப்பும் நிலையினைக் கிராம மக்கள் கையாண்டுள்ளமைத் தெளிவாகக் காட்டுகிறார்.
இறப்புச் செய்தியினைப் பிறருக்குத் தெரிவிக்க ஆண்களே சென்று வந்துள்ளனர். கிராமப்புறங்களில் இவ்வேலையினை வெட்டியான் என்னும் இனமக்களே செய்துவந்துள்ளனா் என்பதை வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் புதினம் வழியே புலப்படுத்தியுள்ளார்.
”யப்பே! வண்டி நாய்க்கரு செத்துப் போயிட்டாரப்பே”ன்னு எழவு சொல்லி நின்னான் நச்சர்வரம் வெட்டியான் என்று பேயத்தேவரின் உற்ற நண்பராக விளங்கும் வண்டி நாயக்கர் இறப்புச் செய்தியைப் பெறுவதன் வழிச் சுட்டிக்காட்டுகின்றார்.
முடிவுரை
மனிதர்களின் வாழ்வில் எந்தவொரு செயலாக இருந்தாலும் நன்கு நடைபெற வேண்டும் என்று கருதி முறையாகச் செய்யப்படுகின்ற செயல்பாடுகள் சடங்கு என்ற வடிவம் பெறுகின்றது எனலாம். தாயும், சேயும் எவ்வித நோய்நொடியும் தாக்காமல் இருக்கத் தீட்டுக் கழிக்கும் சடங்குகளும், காதுகுத்தும் சடங்குகளும் கிராம மக்களின் வாழ்வில் தவிர்க்க இயலாத சடங்கு முறைகளாகும். இன்றும் அவை நடைமுறையில் இருப்பதை வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளதைக் காணமுடிகின்றது.
பார்வை நூல்கள்
*****
கட்டுரையாளர்
முனைவா்பட்ட ஆய்வாளா்
பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூா்
எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா
பிறந்திடும் போது இறப்பினைப் பற்றி
நினைந்திடும் மனிதர் உலகினி லுண்டா
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையினில் தானே
பெரும் போராட்டம் நடக்குது இங்கே
சொத்துக்கள் சேர்ப்பதும் சொகுசெலாம் காண்பதும்
நித்தியம் என்று நினைக்கிறார் மனிதர்
எத்தனை இடர்கள் வருமென நினையா
இருப்பதைப் பெருக்க நினைக்கிறார் நாளும் !
வாழும்வரை வாழுங்கள் வகைவகையாய் சுவையுங்கள்
நாளைபற்றி நினைக்காமல் நன்றாக மகிழுங்கள்
ஊணுறக்கம் தனைமறந்து உழையுங்கள் உழையுங்கள்
உங்களுக்குப் பின்னாலே உங்கள்சொத்து யாருக்கு
உயிருடம்பில் இருக்கும்வரை உங்கள்சொத்து உங்களுக்கே
உயிர்பிரிந்து போனபின்னால் உங்கள்சொத்து என்னவாகும்
பிள்ளைகளும் பேரர்களும் பிய்த்தெடுத்து நிற்பார்கள்
அவர்களுக்குள் போராட்டம் ஆரம்பம் ஆகிவிடும் !
மனைவி பிரிந்துவிட்டால் வாழ்க்கையே கசந்துவிடும்
மகிழ்ச்சி அமைதியெல்லாம் மங்கியே இருந்துவிடும்
சேர்த்துவைத்த சொத்தெல்லாம் பார்த்துநிற்கும் ஓரக்கண்ணால்
சிந்தனையோ எமைவிட்டு சிதறியே சென்றுநிற்கும்
ஆறுதலைக் கூறிநிற்க வந்திடுவர் சிலமக்கள்
ஆஸ்த்திதனை மனமெண்ணி வந்தணைவார் சிலமக்கள்
தேறுதலும் ஆறுதலும் உயிருள்ள உடம்பினுக்கே
உயிர்பிரிந்து போனபின்னர் உங்கள்சொத்து யாருக்கோ !
இல்லறத்தில் இருந்திடுங்கள் இன்பமாய் வாழ்ந்திடுங்கள்
பிள்ளைச்செல்வம் பெற்றிடுங்கள் பேணி வளர்த்திடுங்கள்
நல்லகல்வி கொடுத்திடுங்கள் நற்றுணையாய் இருந்திடுங்கள்
நாளுமவர் உயர்ச்சிக்காய் நாழுமே உழையுங்கள்
ஆளாக்கி விட்டபின்னர் அன்புடனே இருந்திடுங்கள்
அவர்களுக்கு வேண்டியதை ஆசையுடன் கொடுத்திடுங்கள்
அவர்கள்தான் கதியென்று அடிமனதில் பதியாது
அன்றாடம் வாழ்வுதனை அகமகிழ வாழுங்கள் !
எதிர்பார்ப்பு எப்பவுமே ஏமாற்றம் தந்துவிடும்
இருக்கின்ற வாழ்வுதனை பொறுப்புடனே வாழுங்கள்
கிடைக்கின்ற வாய்ப்புகளை முடக்கிவிட நினைக்காதீர்
மடத்தனமாய் மகிழ்ச்சியினை மழுங்கடிக்க முயலாதீர்
கொடுத்துநிற்கத் தயங்காதீர் குதூகலத்தைத் தொலையாதீர்
எடுத்துவைத்துச் சேமித்து இல்லையென வாழாதீர்
பிடித்தமுடன் வாழுங்கள் பேராசை விட்டிடுங்கள்
அடுத்தவர்கள் வியந்துநிற்க ஆனந்தமாய் வாழுங்கள் !
இருக்கும் வரையினிலே இன்பமாய் வாழுங்கள்
கொடுக்கும் பொருளையெல்லாம் கொடுத்துமே மகிழுங்கள்
சேர்த்துவைக்கும் எண்ணமதைச் சிந்தனையில் கொள்ளாதீர்
ஆர்க்குமே பாராமாய் இருந்துவிட நினையாதீர்
வாழுகின்ற வாழ்நாளில் வண்ணமுற வாழுங்கள்
செய்கின்ற அத்தனையும் சீராகச் செய்யுங்கள்
உங்கள்வாழ்வு உங்களிடம் என்பதையே உணருங்கள்
உயிர்பிரிந்தால் வாழ்வெமக்கு உதவிடுமா சிந்தியுங்கள் !
-முனைவர் சு. செல்வகுமாரன்
கவிதைமொழியின் சொற்பயன்பாடு பற்றிக் குறிப்பிடும் க. பூரணச்சந்திரன் “நடைமுறை ரீதியான எழுத்தாளன் சொற்களை பயன்படுத்தும்போது ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தம் மட்டுமே தரமுயலுவான். ஆனால் கவிஞனோ எத்தனை அர்த்தங்களை ஒரு சொல் தருகிறதோ அத்தனையையும் பயன்படுத்த முயற்சி செய்வான்.
கவிதை மொழியைப்பற்றிய ஒரு தவறான கருத்து என்னவென்றால், கவிஞர் மிக அழகான, ஒலிநயத்துடன் கூடிய சிறப்பான சொற்களைப் பயன்படுத்துவார் என்பதுதான். உண்மையில் கவிஞர்கள் தேடுவது மிக அர்த்தப்பாங்கான – அர்த்தச்செறிவான சொற்களைத்தான். சொற்கள் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பொருள் தருகின்றன. மொழியில் பல தளங்களும் விதங்களும் இருக்கின்றன. கவிஞன் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். அவன் தேர்ந்தெடுக்கும் சொல் மிக உன்னதமானதாக – எளிமையானதாக அழகுத்தன்மை உள்ளதாக – அற்றதாக, ரொமான்ண்டிசத் தன்மை வாய்ந்தாக – யதார்த்தத்தன்மை கூடியதாக, பழங்காலச் சொல்லாக – புதிய சொல்லாக, கலைச்சொல்லாக – சாதாரணமாகப் புழங்குவதாக, ஓரிரு அசை கொண்டதாக – பல அசைகள் கொண்டதாக, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஒரு தளத்தில் இயங்கும் கவிதைக்கு வேறுஒரு தளத்திலிருந்து கூடச் சொற்கள் ஆளப்படலாம். இதைச் சிறப்பாகச் செய்தால் ஒரு வியப்பதிர்ச்சி உருவாக்கும். கவிதையின் ஆழத்தைக் கூட்டும். கவிஞனின் தொழிலே சொற்களை மேலும் மேலும் தேடிச் செல்வதும் கண்டுபிடிப்பதும்தான். அச்சொற்களின் இரகசியத் தொடர்புகள் புலப்படும் சமயத்தில் கவிதையின் ஆழமும் கனமும் கூடுகின்றன. வெடித்துச் சிதறும் ஒரு வெடிகுண்டின் அழுத்தத்தைப் போல அதில் அழுத்தம் கூடுகிறது.” 14 என்று குறிப்பிடுவது கவிதைமொழியின் இயக்கம் குறித்துப் புரிந்துகொள்ள உதவுகிறது.
முல்லைக்கலிப் பாடல் (3) ஏறுதழுவுதல் பற்றியதான தோழியின் கூற்றாக அமைகின்றது. இப்பாடலில் ஏறுதழுவுதல் தொடர்பான நிகழ்வினைக் காணாதவரும் கண்டுகொள்கின்ற விதமாய் புலவர் காட்சிப்படுத்தும் விதம் படைப்பாக்க மொழிசார்ந்த ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாய் உள்ளது.
“அவர் மிடை கொள
மணிவரை மருங்கின் அருவி போல
அணிவரம்பு அறுத்த வெண்காற் காரியும், ….” 15
“ஓவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற
சேஎச் செவி முதற்கொண்டு, பெயர்ந்து ஒற்றும்….” 16
ஆயமகளிர் தங்களுக்குரிய பரண்களில் வந்தமர்கின்றனர். அப்போது தொழுவினுள் பசுக்களைப் புகச்செய்கின்றனர். அந்தப் பசுக்கள் பல்வேறு விதமாக அழகுபடவும், வன்மம் மிக்கதாகவும் விளங்குகின்றன. அவற்றினை காட்சிப்படுத்தும் புலவன் மலையினின்று வீழும் அருவி போல அழகின் எல்லை மீறிய வெள்ளிய கால்களை உடைய கரிய எருதுகளையும், விண்மீன்கள் பூத்து விளங்கும் அந்திவான் போல வெள்ளிய புள்ளிகள் கொண்ட வெள்ளை எருதுகளையும், இறைவனின் தலையில் சூடியுள்ள பிறை போல வளைந்த கொம்புகளை உடைய சிவந்த எருதுகளையும் பொருந்துகின்ற மாறுபாட்டினை உடைய வலிய பிற ஏறுகள் பலவற்றையும் தொழுவினுள் புகவிட்டனர் என்பதாக பதிவு செய்கின்றார். இன்னொரு இடத்தில் காயாம் பூக்கண்ணி சூடி ஏறுதழுவுகின்ற பொதுவன் ஒருவன் இடையறாத வேகத்துடன் கோபம் கொண்டு தன்னை நோக்கி வந்த சிவந்த நிறமுடைய ஒரு எருதினை அதன் செவியடியிற் பற்றிக் கொண்டு அதன் வலியை அடக்கிய அழகைத் தலைவிக்கு தோழி மூலம் காட்சிப்படுத்துகின்றார்.
இதற்கு நல்லுருத்திரனார் ஒரு தொன்மத்தை ஒப்புமை செய்கின்றார். பகைவிடுத்த பிடரி மயிர் கொண்ட குதிரையை வாயைப் பிளந்து, கொன்ற சமயத்தில் மாயனும் இத்தகையனோ? என்று என் நெஞ்சம் அச்சம் கொண்டதாக தோழிக் கூறுவதாக அமைகின்றது. பாடல் ஆயர் வாழ்வியல் தொடர்பான பல விவரங்களை பதிவுசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுருங்கச் சொன்னால் அவையே முல்லைக்கலிப்பாடலின் அடிக்கருத்தியலாகவும் விளங்குகின்றது. ஆக முல்லைக்கலியைப் பொறுத்தமட்டில் கருத்தியலை அழகியல் உறுப்புக்களைக் கொண்டு காட்சிப்படுத்துகின்றவிதமுமே கவிதையினை வளமையுடையதாகவும், செழுமையுடையதாகவும் இனங்காணச் செய்கின்றது. அத்தோடு கவிதையில் இயல்பாய் அமைந்து விடுகின்ற உணர்ச்சியும், கட்டமைப்பும் கூட முல்லைக்கலிப் பாடலின் வளமைக்கு காரணமாக அமைகின்றன.
முல்லைக்கலிப் பாடல் (4) தோழி, தலைவி கூற்றாக அமைந்துள்ள உரையாடல்களாகவே அமைந்துள்ளன. அவர்களின் உரையாடல்கள் வெவ்வேறான காட்சிப்படுத்தல்களை நிகழ்த்துகின்றன. பாடலின் முதல்பகுதி ஏறுதழுவுலுக்காக தொழுவத்தில் விடப்பட்ட வெவ்வேறு எருதுகளின் வலிமை குறித்தனவாகவும், வலிமையும் கொலைத்தன்மை மிக்கதுமான எருதுகளை அடக்கிவிடும் ஆயன் எத்தகைய சிறப்பு மிக்க ஆயர்குலத் தலைவியை அடையலாம் என்பதனையும் விவரணைவதாக அமைகின்றன.
“அவ்வழி, முள்எயிற்று ஏர் இவளைப் பெறும், இது ஓர்
வெள்ஏற்று எருத்து அடக்குவான்.
ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில்பெறும், ….” 17
அதாவது, எருதுகள் நிறைந்திருக்கும் இந்தத் தொழுவத்தினிடத்தே நிற்கின்ற ஒப்பிடுதற்கு அரிதான பலம் பொருந்திய வெள்ளை ஏற்றின் கழுத்திலே கிடந்து அடக்குபவன் முள்எயிற்று அழகியான இவளைப் பெறுவான் என்பதும், கூரிய கொம்புகளை உடைய கார் என்று சொல்லக் கூடிய எருதின் சினத்தை அஞ்சாது தழுவி அடக்குபவன் ஒளிமிக்க அணிகலன்களையுடைய தலைவியின் நீண்ட கூந்தலிலே துயிலுகின்ற பாக்கியத்தைப் பெறுவான் என்பதும், குரால் நிறம் உடையக் கண்களைக் கொண்ட கொலைத்தொழில் மிக்க ஏற்றை அடக்குபவன் வெருவுதலையுடைய பிணை மானைப் போல பார்க்கும் வலிபடர்ந்த கண்களை உடைய இந்த நல்லவளைப் பெறுவான் என்பதும், மிகுதியான வலிமையுடைய சிவந்த எருதின் சினத்தை அஞ்சாமல் அடக்கி ஆள்பவன், வரிபொருந்திய காதணியினையும், மூங்கில் போன்ற தோள்களையும் உடைய தலைவியுடன் துயிலுறுதலைப் பெறுவான் என்றும் ஆயர்கள் முறைப்படி அறிவித்தல் செய்து பல விண்மீன்கள் சூழ்ந்த அழகிய சந்திரனைப் போலப் பல பெண்கள் சூழ்ந்திருந்த அந்தப் பரணிடத்தே தலைவியையும் அழகு நிரம்பியவளாக கொண்டு சேர்த்தனர் என்பதாகக் காட்சிப்படுத்தி நம் மனக்கண்ணில் நிறுத்தப்படுவதன் மூலம் தலைவியின் சிறப்பு உணர்த்தப்படுகிறது.
இங்கு ஆயர்குலப் பெண்கள் ஏறுதழுவல் மூலமாகத் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட நிலையினை விவரிக்கும் டாக்டார் மு.வ “ஏறுதழுவுதல் என்ற ஒரு வழக்கம் முல்லை நிலத்துக்கு உரியது. அது மற்ற சங்க நூல்களில் இல்லாமல் கலித்தொகையில் மட்டும் காணப்படுகிறது. அப்பகுதியில், ஆயர்களின் வீரமும் அஞ்சாமையும் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஆயர் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதனால், அவளுக்கு உரிய கணவன் வீரம் மிக்கவனாக இருத்தல் வேண்டும். இன்ன காளையைத் தழுவி அடக்கவல்ல வீரனே அவளை மணப்பதற்கு உரியவன் என்று பலரும் அறியத் தெரிவிப்பது வழக்கம். அவ்வாறே வேறு குடும்பத்துப் பெண்களுக்கும் திருமண ஏற்பாடாக ஏறுகள் குறிக்கப்படும். இந்த ஏறுகளைத் தழுவி அடக்குவதற்கு வீரர்கள் காத்திருப்பார்கள். இதற்கு ஒரு நாள் குறிக்கப்படும் அன்று அஞ்சாமல் களத்தில் புகுந்து ஏறுகளை எதிர்த்து, அவற்றின் கொம்புகளால் குத்துண்டும் புண்பட்டும் வெற்றி பெறும் வீரர்களை அந்தந்தப் பெண்கள் மணந்து கொள்வார்கள். இவ்வாறு நிகழ்வதே ஏறுதழுவுதல் என்பது. இன்ன ஏற்றை அடக்கித் தழுவும் வீரனுக்கே உரியவள் இப்பெண் என்று பலமுறை சொல்லிப் பலர் அறியச் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது.” 18 எனக் குறிப்பிடுவது முதன்மையானதாகும்.
மேலும் முல்லைக்கலிப் பாடல் (14) தலைவியை தலைவன் உரிய காலத்தில் வரைந்து கொள்ளாத நிலையில், தலைவியை அயலானுக்கு மணம்செய்து கொடுக்க வீட்டில் முயல்கின்றனர். அந்தத் தருணத்தில் தலைவி தோழியின் வாயிலாகத் தலைவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வரைவு கடாவுகின்றாள். அப்பாடலின் இறுதிப் பகுதியாக இடம்பெற்றுள்ள
“தருமணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்…” 19
என்னும் வரிகள் ஆயமகளிரின் திருமணம் தொடர்பான நிகழ்வு அல்லது சடங்கில் பெண் எருமையின் கொம்பினை வைத்தல் என்பது இனவரைவியல் நோக்கில் ஆராயப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனைப் போலவே ஆயர்குலப் பெண்களின் கற்பொழுக்கமும் வலியுறுத்தப்படுவது உணர்த்தப்படுகின்றது. இது குறித்து தம் கருத்தினை பதிவு செய்யும் ராஜ்கெவுதமன்,
“(114) தலைவி கூற்றாக உள்ள பாடலாகும். ஆயர்குடிப் பிறந்த பெண் ஒருவனோடு மட்டுமே மணவாழ்க்கை உண்டு என்பதில் கௌரவம் கொள்ளுகிறாள்.
தலைவி தருமணல் தாழப்பெய்து வீட்டைச் செம்மண்ணால் பூசி பெண் எருமையின் கொம்போடு எமர் (வீட்டார்) இங்கு அயரும் பெரும்மணம் எல்லாம் தனித்து ஒழிய – (முன்னர்) வரிமணல் முன்துறையில் சிற்றில் புனைந்து ஆடிய ஆயத்தாரிலிருந்து நான் தனிநீங்கி அவனோடு புணர்ந்த ஒருமணம்தான் அறிவேன். இந்த உலகமே பெறினும் அருநெறி ஆயர்மகளிருக்கு இருமணம் கூடுதல் இயல்பு இல்லை. (என்று பிறர் வரைவு கேட்டுவந்த போது தலைவி கூறுகிறாள்.)
ஆணுக்கு வீரம் மாதிரி, பெண்ணுக்குக் களவு மணம் புரிந்த ஒருவனே கணவன் என்ற மதிப்பீடு ஆகியுள்ளதை இங்கே காண இயலும். தொல்காப்பியம் கற்பு பற்றி வரையறுத்த நெறி இந்தியத் துணைகண்டம் முழுமைக்கும் உரிய நெறியாக இருந்தது.” 20
முல்லைக்கலிப் பாடல்கள் நிறைந்த வர்ணிப்புகளைக் கொண்டுள்ளன. அவை முல்லைநில மக்களின் வாழ்வில் முக்கியத்துவம் பெற்ற ஏறுதழுவுதல், குரவையாடுதல், ஆயர்குலப் பெண்களின் கற்புநெறி உள்ளிட்ட செய்திகளைத் தமிழ்ப் பண்பாட்டு முறையியலோடு வெளிப்படுத்துவது ஆகியன இதன் நோக்கமாகவும் கருத்தியலாகவும் அமைகின்றன. இங்கு பாடுபொருள் முக்கியத்துவம் பெறுகின்றது. அப்படியாயின் கவிதையின் வளத்திற்கு வெறுமனே அணிசார்ந்த அமைப்புகளும், மொழியும் மட்டுமே காரணியாக இருக்க முடியாது. மாறாக இலக்கியத்தின் அடிநாதமாக விளங்கக்கூடிய பாடுபொருளும் அதன் வளமைக்கும் செழுமைக்கும் காரணியாக அமைவதை நாம் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆக கவிதையின் வளமை என்பது ஒரு பெருங்கடல் போன்று விரிந்தும் நீண்டும் செல்லத்தக்கது.
சான்றெண் விளக்கம்
-ஆ.ஜெயகணேஷ்
முன்னுரை
பாணர் குறித்த செய்திகள் சங்கப் பாடல்களிலும் தொல்காப்பியத்திலும் காணப்படுகின்றன. இப்பாணர் மூன்று வகையினர் என்று கூறுவர் அறிஞர் பெருமக்கள். அவற்றுள் மண்டைப்பாணர் என்றொரு வகையையும் கூறியுள்ளனர். மண்டைப்பாணர் என்றொரு வகைப் பாணர் மரபில் இருந்தனரா? மண்டை என்பது பாணர்க்கு மட்டும் உரிய ஒன்றா? மண்டை என்பது யாழ்க்கருவி போல் இசைக்கருவியா? மண்டைப்பாணர் என ஏன் அழைக்கின்றனர்? போன்ற வினாக்கள் தோன்றுகின்றன. எனவே, ~மண்டைப் பாணர் என்றொரு வகையினர் சங்க காலத்தில் இருந்தனரா? என்னும் சிக்கலை முன்னிறுத்தி இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
மண்டை என்பது என்ன?
மண்டை என்பது சங்ககால இரவலர்கள் உணவுபெற்று உண்பதற்கு வைத்திருந்த ஓர் உணவுப் பாத்திரம் ஆகும். மன்னரது அரண்மைக்குச் சென்ற இவர்கள், மன்னனைப் புகழந்துபாடி முடித்தபின்பு அரசர்கள் கொடுக்கும் கள், சோறு போன்ற உணவுகளை இம்மண்டையில் பெற்று உண்டுள்ளனர். அரண்மனைக்காரர்களும் அம்மண்டையில்தான் உணவுகளை வழங்கியுள்ளனர். இம்மண்டை இரவலர்களின் உண்கலமாக விளங்கியுள்ளன எனப் புறநானூற்றுப் செய்யுட்கள் கூறியுள்ளன. இதனைப் பின்வரும் தலைப்பின் கீழ் காணலாம்.
புறநானூற்றில் மண்டை இடம்பெறும் சூழல்
புறநானூற்றுப் பாடல்கள் பல செய்திகளை எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் மண்டை என்பதைக் குறித்து சில பாடல்கள் கூறியுள்ளன. அவற்றினை எடுத்துக்காட்டி இப்பகுதியில் ஆராயப்பட்டுள்ளது.
விறலியை ஆற்றுப்படுத்திய ஒளவையார், ‘கவிழ்ந்து கிடக்கும் உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்? என ஏங்கிக் காட்டில் இருந்த சில்வளை விறலியே!, சேய்மைக்கண்ணன்றி அண்மையிலேயே நெடுமானஞ்சி உள்ளான். அவன்பால் செல்வையாயின், அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருட்களை, ஒரு பொழுதும் ஈரம் பார்க்காத மண்டை நிரம்ப ஊன் கொடுப்பதில் வல்லவன். அவனை நாடிச் செல்க’ எனக் கூறியுள்ளார். இதனை,
“ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்
சுரன்முத லிருந்த சில்வளை விறலி
செல்வை யாயிற் சேணோ னல்லன்
முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே” (புறம்.103)
என்னும் செய்யுளால் அறியலாம். இச்செய்யுளில் மண்டை என்னும் சொல் “கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரென” என்னும் அடியிலும் “பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை” என்னும் அடியிலும் இடம்பெற்றுள்ளது. உணவு இருந்தால் மண்டை மலர்தல் தன்மையுடையது; உணவு இல்லையெனில் அது மலர்தல் தன்மையற்றது என உணர்த்தப்பட்டுள்ளது. ஆகையால் மண்டையில் புரவலர்கள் உணவினை இட்டு, அதனை மலரச்செய்தல் தன்மை இன்மையால் அது கவிழ்ந்து காணப்பட்டது என்ற செய்தியை “கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரென” என்னும் அடி உணர்த்துகிறது. பொழுது இடைப்படாமையால் புலராத மண்டையைப் “பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை” என்றார். இவ்விரண்டு இடங்களிலும் மண்டை இடம்பெற்ற சூழல் உண்கலம் என்னும் பொருள் விளங்க அமைந்துள்ளது. மேலும், விறலிக்குரிய உண்கலமாக மண்டை அமைந்திருக்கிறது. எனவே, மண்டை என்பது இரவலர்கள் உணவுபெற்ற உணவுப் பாத்திரம் எனத் தெளிவாகிறது.
அடுத்து வருகின்ற செய்யுளும் இச்செய்தியை உணர்த்தியுள்ளது. அதாவது, ‘இவ்வுலகில் வள்ளல்கள் இறந்தொழிந்தனர். இரப்போர் குறிப்பறிந்து ஈயும் வேந்தரும் இலராயினர். இந்நிலையில் ஏங்கி நிற்காது (வறுமையுற்று) கவிழ்ந்த என் இரவல் மண்டையை ஈத்து மலர்ப்பவர் யாவருளர் என இரவலர் வினவினர்’ என்னும் செய்தியை,
“ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
ஏலாது கவிழ்ந்தவென் னிரவல் மண்டை
மலர்ப்போர் யாரென வினவலின்” (புறம்.179:1-3)
என்னும் செய்யுளடிகள் கூறுகின்றன. புரவலர் கொடுக்கும் பொருளை நிமிர்ந்து ஏந்திய மண்டை, அவர்கள் இன்மையால் அத்தன்மையை இழந்து, ஏலாது கவிழ்ந்தது என்னும் கருத்து உணர்த்தப்பட்டுள்ளது. இரத்தலைப் பெற்ற மண்டையாதலால் “என் இரவல் மண்டை” என்றார் இரவலர். என் இரவல் மண்டை என்று கூறப்பட்டுள்ளதிலிருந்து மண்டை என்பது இரவல் பாத்திரம் என அறிய முடிகிறது. மேலும், ஒளவை.சு.து. அவர்கள், “மண்டை-உண்கலம். அடிகுவிந்து வாய்விரிந்து இருப்பதனாலும் ஏற்கும்பொழுது அதன் வாய்தோன்ற ஏந்துவதும், ஏலாப்பொழுது கவிழ்த்து வைப்பதும் இயல்பாதல்பற்றி, ‘ஏலாது கவிழ்ந்த மண்டை’ என்றும் இட்டு ‘மலர்ப்போர்’ என்றும் கூறினார்” (2009:599) என்பார். இக்கருத்திலிருந்து இரவலர்கள், வேந்தர்கள் ஈயும் பொருளை அல்லது உணவைப் பெற மண்டையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என அறிய முடிகிறது. எனவே, மண்டை என்பது இரவலர்கள் இரந்துண்ணும் பிச்சைப் பாத்திரம் அல்லது உணவுப் பாத்திரம் என்பதை இச்செய்யுள் அடிகள் உணர்த்தியுள்ளன.
பாரி இறந்தது குறித்துப் பாடிய கபிலர், ‘பாரியின் குன்றம், இவர் இருந்த காலத்தில், தன்னிடம் வந்த பாணர்க்கு மண்டை நிறையத் தரும் பொருட்டு இனிய கள் வடிக்கப்பட்டது. இப்பொழுது அத்தன்மையை இழந்தது’ எனக் கூறியுள்ளார். இதனை,
“ஒருசா ரருவி ஆர்ப்ப வொருசார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க வுக்க தேக்கள் தேறல்
கல்லலைத் தொழுகு மன்னே” (புறம்.115:1-4)
என்னும் அடிகள் உணர்த்துகின்றன. கள்ளைப் பாணர்க்கு மண்டை நிறைய ஊற்றிக் கொடுப்பர் என்னும் கருத்திலிருந்து மண்டை உணவு வழங்கப்பட்ட உண்கலம் என்பது தெளிவாகிறது. “பாணர் மண்டை” என்றதற்குப் பாணருடைய மண்டை என்று விளக்கம் கூறுவர் உரையாசிரியர்கள். எனவே, பாணர்க்கு மண்டையில் கள்நிறையக் கொடுத்துள்ளனர் என்னும் செய்தியின் மூலம் பாணரது உண்கலமாக மண்டை விளங்கியிருக்கிறது என அறிய முடிகிறது.
மன்னனிடம் பரிசில் பெறச்சென்ற பெருஞ்சித்தரனார், ‘நெருப்புத் தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய, நெய்யினால் வறுத்தெடுத்த கொழுவிய ஊனையும் கள்ளையும் மண்டையோடு பெற்று மாறிமாறி உண்வோமாக, உன்னைக் காண வந்தேன் என்னுடைய தலைவா’ எனக் கூறியுள்ளார். இதனை,
“நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
பரூஉக்கண் மண்டையொ டூழ்மாறு பெயர
உண்கு மெந்தைநிற் காண்குவந் திசினே” (புறம்.125:2-4)
என்னும் அடிகளால் அறியலாம். இச்செய்யுள் அடிகளில் இடம்பெற்ற மண்டை, ஊனும் கள்ளும் உணவும் பெறப் பயன்படுத்திய பாத்திரமாக இடம்பெற்றுள்ளது. அரசனது அரசவையில் ஊனும் கள்ளும் மண்டையோடு சேர்த்தே வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசர்கள் அரண்மனைக்கு வரும் இரவலர்க்கு உணவு வழங்க மண்டையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என அறிய முடிகிறது. மேலும், ஒளவை.சு.து. அவர்கள், பரூஉக்கண் மண்டை என்பதற்குக் “கள்ளையுடைய உடலிடம்பரிய மண்டை” (2009:416) எனக் கூறியுள்ளார். எனவே, மண்டை என்பது அனைத்து இரவலர்களுக்கும் உரிய ஒன்றாக திகழ்ந்துள்ளது என இச்செய்யுள் மூலம் தெளிவாகிறது. அடுத்து வருகின்ற செய்யுள் அடிகளும் இக்கருத்தைக் கூறியுள்ளன.
தன் தலைவன் இறந்ததால் வருத்தமுற்ற ஆவூர் மூலங்கிழார், ‘வண்டுகள் வந்துபடியும் மதுவினால் ஒழியாத மண்டையொடு மிக்க சோற்றினை யாவர்க்கும் குறையாமல் வழங்கும் பெரிய இல்லமாக விளங்கியது. மன்னன் இறந்ததனால் அம்முற்றம் நீரற்ற ஆற்றின் ஓடம் போலப் பொலிவையிழந்தது’ எனக் கூறியுள்ளார். இச்செய்தியை,
“அந்தோ வெந்தை யடையாப் பேரில்
வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
வெற்றியாற் றம்பியி னெற்றற் றாகக்
கண்டனென் மன்ற” (புறம்.261:1-5)
என்னும் அடிகளால் அறியலாம். இச்செய்யுள் அடிகள் இரவலரது மண்டையில் உணவு வழங்கியதைக் கூறி நிற்கவில்லை. மாறாக அரசர்கள் அரசவையில் இரவலர்களுக்கு உணவு வழங்குவதற்காக வைத்திருந்த மண்டையில் உணவு கொடுத்துள்ளனர் என்பதை உணர்த்தியுள்ளன. அதாவது இரவலர்களுக்கு மண்டையோடு சேர்த்தே சோற்றினை வழங்கியுள்ளனர். தற்பொழுது அன்னதானம் செய்பவர்கள் உணவினை ஒரு தட்டில் வழங்குவது போன்று சங்கக்காலத்தில் மண்டையில் வழங்கியுள்ளனர். இச்செய்தியை இரண்டு செய்யுட்களும் கூறியுள்ளன. எனவே, அரசர் மண்டையை இரவலர்களுக்கான உணவுப்பாத்திரமாக பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
வரிசையால் உயர்ந்த முதுகுடி மறச் சான்றோர் ஒருவரைச் சிறப்புற நோக்கி அவர்க்குக் கள் வழங்குமாறு வேந்தன் பணியாளரை ஏவிச் சிறப்பித்தான். அதனை வியந்துநோக்கிய பாணனைக் கழாத்தலையார் அழைத்து, ‘பாணனே! தன்பாலுள்ள அன்பால் தனக்காகக் கள் முகந்தெடுத்துத் தந்த பசும் பொன்னாலாகிய மண்டையை, உனக்கு நல்குவாயாக எனச் சொல்லிச் செய்யும் அச்சிறப்பை வியந்து நோக்குதலை ஒழிக’ என்றார். இதனைக்,
“காதலின்
தனக்குமுகந் தேந்திய பசும்பொன் மண்டை
இவற்கீ கென்னு மதுவுமன் றிசினே
கேட்டியோ வாழி பாண” (புறம்.289:5-8)
என்னும் அடிகள் உணர்த்துகின்றன. அரசவையில் இரவலர்களுக்கென்று இருக்கும் மண்டையில் கள்வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இப்பாடல் அடிகளும் உணர்த்தியுள்ளன. தலைசிறந்தவர்களாயின் பசும்பொன் மண்டையில் உணவு வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இதனை ஒளவை.சு.து. அவர்களும் ‘சிறந்தார்க்கன்றிப் பிறர்க்குக் கொடுக்கப்படாது என்றதற்குப் ‘பசும் பொன் மண்டை’ எனக் கூறினார்” (2010:313) என்று கூறுவார். எனவே, சங்க காலத்தில் பொன்னால் செய்யப்பட்ட மண்டை உண்கலம் இருந்துள்ளது என்றும் சிறப்பானவர்களுக்கே அதில் உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிய முடிகிறது.
பாணனைச் சிறப்பு செய்வதற்காகப் பசும்பொன் மண்டையில் உணவு வழங்கப்பட்டுள்ளது என்னும் செய்தி கூறப்பட்டுள்ளது. இப்பசும்பொன் மண்டை பாணருடையது அல்ல; இது அரண்மனைக்குரியது. எனவே, மண்டை பாணர்க்கே உரியதல்ல என்பது இச்செய்யுள் மூலம் தெளிவாகிறது.
மண்டையில் கள் நிரம்பியிருந்தது என்னும் செய்தியை,
“தேஎங் கொண்ட வெண்மண்டையான்” (புறம்.352:1)
என்னும் அடியால் அறியலாம். மண்டையில் கள் கொடுக்கப்பட்டதையே பெரும்பாலான பாடல்கள் கூறுகின்றன. ஒளவை.சு.து. அவர்களும், “மண்டை, கள் முதலியன உண்டற்குரிய மட்கலம்” (2010:511) என்று கூறுவார்.
மேற்காட்டப்பட்ட செய்யுட்கள் மண்டை என்னும் உண்கலம் விறலி, பாணர், இரவலர் ஆகியோர்க்குரியது எனக் கூறின. உழவர்க்குரிய உண்கலமாகவும் மண்டை விளங்கியது என்பதைப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்று கூறியுள்ளது. அதாவது, ‘ஊரில் விழா ஒன்றும் இல்லையாயினும், உழவரது மண்டையில் பெரிய கெடிற்று மீன் உணவுடன், பூவுடன் கலந்த கள்ளும் நிறைந்திருக்கும்’ என்னும் செய்தியை,
“விழவின்று ஆயினும் உழவர் மண்டை
இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து” (புறம்.384:8-9)
என்னும் அடிகள் கூறுகின்றன. உழவர் தங்களுடைய மண்டையில் மீனுடன் கள்ளும் வைத்து உண்டுள்ளனர் என்னும் கருத்தின் மூலம் உழவர் உண்கலமாகவும் மண்டை விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது.
மண்டை என்னும் உண்கலம் கிணைவரிடத்திலும் இருந்துள்ளது. தடாரியை இசைத்து நின்ற இரவலன், ‘வெப்பம் கப்பிய என் மண்டை உண்கலத்தில் தெளிந்த மதுவை நிரம்பப் பெய்து, உண்ணத் தந்ததும் அல்லாமல் தன் கலத்தில் தான் உண்ணுதற்குரிய மான் இறைச்சிப் பொரியலையும் கொக்கின் நகம் போலும் அரிசிச் சோற்றையும் என் சுற்றத்தாரும் உண்க என்று வழங்கினான் என் தலைவன்’ எனக் கூறினான். இதனை,
“மதியத் தன்னவென் னரிக்குரற் தடாரி
இரவரை நெடுவா ரரிப்ப வட்டித்
துள்ளி வருநர் கொள்கல நிறைப்போய்
………………………………………………………….
அழல்கான் றன்ன வரும்பெறன் மண்டை
நிழல்காண் டேற னிறைய வாக்கி
யானுண வருள லன்றியுந் தானுண்
மண்டைய கண்ட மான்வறைக் கருனை
கொக்குகிர் நிமிர லொக்க லார
வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரைவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு
புரையோன் மேனிப் பூத்துகிற் கலிங்கம்
ஊரைசெல வருளியோனே” (புறம்.398:12-29)
என்னும் செய்யுள்அடிகள் கூறுகின்றன. மண்டையைக் காணும்தோறும் உணவின்மை தோன்றி வயிற்றுத் தீயை எழுப்பி வெதுப்புதலின், “அழல்கான் றன்ன மண்டை” என்றார். இவ்வாறு உணவின்றி வெப்பமிகுந்திருந்த என் வயிற்றிற்கு மண்டையில் உணவுவழங்கிக் குளிரச் செய்தான் தலைவன் என்று தடாரியை இசைத்து நின்ற இரவலன் உணர்த்தியுள்ளான். தடாரியை இசைத்து நிற்பவன் கிணைவன் எனப் பல பாடல்கள் கூறியுள்ளன. இப்பாடலும் மண்டை என்பதை உணவு உண்ணும் கலமாக வெளிப்படுத்தி உள்ளது. எனவே, மண்டை என்பது இங்குக் கிணைவர்க்குரிய உண்கலமாகக் கூறப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.
மண்டை என்பது உணவு பெறும் அல்லது உணவு பெற்றுண்ணும் உண்கலம் (உணவுப் பாத்திரம்) என மேலே எடுத்துக்காட்டப்பட்ட செய்யுட்கள் நமக்கு உணர்த்தின. இம்மண்டை பாணர் என்பவருடன் மட்டும் இணைத்துக் கூறப்படவில்லை. இரவலர், உழவர், கிணைவர், விறலி ஆகியோருடன் இணைத்தும் கூறப்பட்டுள்ளன. மேலும், அரண்மனைக்கு வரும் இரவலர்களுக்கு உணவு வழங்கவும் இம்மண்டை விளங்கியிருக்கிறது. இம்மண்டையில் கள் வழங்கப்பட்டதைப் பல பாடல்களும் சோறு வழங்கப்பட்டதைச் சிலப்பாடல்களும் கூறியுள்ளன. எனவே, மண்டை என்பது கள், சோறு முதலியன உண்டற்குரிய உண்கலம் எனவும் இம்மண்டை அனைத்து இரவலர்களுக்கும் பொதுவானது எனவும் தெளிவாக அறிய முடிகிறது.
உண்கலமாக விளங்கிய ஒன்று ஏன் மண்டை என்னும் பெயரால் அழைக்கப்பட்டது? என்னும் வினா எழலாம். மண்டை என்பதற்கு விளக்கம் கூறிய ஒளவை.சு.து. அவர்கள், ‘மண்டை, கள் முதலியன உண்டற்குரிய மட்கலம்” (2010:511) என்று கூறியுள்ளார். இவரது விளக்கம் மண்டை என்பது மண்ணால் செய்யப்பட்ட பொருள் என்பதாக அமைந்துள்ளது. மண்ணால் செய்யப்பட்டதனால் மண்டை என அழைக்கப்பட்டதா? என்னும் ஐயம் எழலாம். சங்ககால மக்கள் பயன்படுத்திய பெரும்பாலான பொருட்கள் மண்ணால் செய்யப்பட்டவை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும், மண்டையானது பொன்னால் செய்யப்பட்டதாகவும் இருந்துள்ளது எனப் பாடல் கூறியுள்ளது. எனவே, மண்ணால் செய்யப்பட்டதனால் இப்பெயர் பெற்றிருக்காது என்பது தெளிவாகிறது. தமிழில் உள்ள சில சொற்களுக்கு விளக்கம் கூறுவதென்பது மிகக் கடினமான ஒன்றாகும். இன்னும் சில சொற்களுக்கு விளக்கமே கூறமுடியாது. இது தமிழ்மொழிக்கு மட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். அவ்வகையில் மண்டை என்னும் சொல் அமைந்துள்ளது. எனவே, மண்டை என்னும் உண்கலம் நம் மண்டையின் ஓடு போன்று இருந்திருக்கலாம். ஆதலால் மண்டை எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.
மண்டைப்பாணர் குறித்த விளக்கமும் விவாதமும்
ச.காஞ்சனா தேவி அவர்கள், “மண்டை என்னும் உண்கலத்தை உடையவர் மண்டைப் பாணர் ஆவர்” (செம்மூதாய் சதாசிவம், 2015:73) என்று கூறியுள்ளார். இவ்விளத்தையே பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளார்கள். எனவே, ஒருவரது விளக்கமே இங்குப் போதுமானதாக அமைகிறது.
உண்கலம் என்பது ஒவ்வொரு இரவலரிடத்தும் இருக்கின்ற ஒன்றாகும். ஏனெனில் அரசர் குலத்திற்கு இரக்கச் செல்லும் இவர்கள் அக்குலத்தார் இட்டு வழங்குகின்ற உணவுகளை அவ்வுண்கலத்தில்தான் பெற்றிருப்பர். அரசர் குலப் பெண்டிரும் இரவலர்களுக்கு உணவுகளை இட்டு வழங்கியதைப் பாடல்கள் எடுத்துக்கூறியுள்ளன. அவ்வகையில் இரந்துண்டு வாழும் ஒவ்வோர் இரவலரிடத்தும் ஓர் உண்கலம் இருந்திருக்கிறது. அவ்வுண்கலம் மண்டை என்னும் பெயரில் அழைக்கப்பட்டுள்ளது அல்லது வழங்கப்பட்டுள்ளது எனப் பாடல்கள் கூறுகின்றன. இரவலர்களுள் ஒருவரான பாணர்களிடத்தும் இம்மண்டை என்னும் உண்கலம் இருந்துள்ளது. இவர்களும் அம்மண்டையில் உணவுகளைப் பெற்று, உண்டு வாழ்ந்து வந்துள்ளனர். அறிஞர்கள் கூறுவது போன்று மண்டை என்பது பாணர்களுக்கும் உண்கலமாக அமைந்துள்ளது. இதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் மண்டை என்பது உண்கலம் எனக் கூறிய அறிஞர்கள், ஏன் மண்டைப் பாணர் என்றொரு வகையைக் கூறினர்? மண்டை அனைவருக்குமுரிய ஒன்று என இவர்கள் அறியவில்லையா? மண்டை என்னும் உண்கலத்தைப் பெற்றிருந்திருந்ததால் இவர்களை மண்டைப் பாணர் எனக் கூறலாமா? போன்ற வினாக்கள் எழுகின்றன.
பாடுதல் தொழிலைச் செய்தவர் பாடுநர் என்றும் ஆடுதல் தொழிலைச் செய்தவர் ஆடுநர், கூத்தர் என்றும் யாழில் பண்ணிசைத்தவரைப் பாணர் என்றும் பறையிசைத்தவரைப் பறையர் என்றும் துடி இசைத்தவரைத் துடியர் என்றும் கிணை இசைத்தவரைக் கிணையர் என்றும் கூறியுள்ளனர்; அவர்களும் தங்களை அவ்வாறே அழைத்துக் கொண்டனர். இப்பெயர் ஒவ்வொருவரிடமும் உள்ள இசைக்கருவியை வைத்தும் அவர்களிடம் காணப்பட்ட கலைத்திறன் வேறுபாடு வைத்தும் தொழில் அடிப்படையிலும் அழைக்கப்பட்டதாகும். இவர்கள் அனைவரிடமும் மண்டை இருந்துள்ளது; மண்டையில் உணவு வழங்கப்பட்டுள்ளது. மண்டை அனைவருக்கும் பொதுவானதாக விளங்கியுள்ளது. இம்மண்டை என்னும் உண்கலம் ஓர் இசைக்கருவி போலவும் அதனை இசைத்துப் பாணர்கள் வாழ்ந்தது போலவும் பாணர்க்கே இது உரியது போலவும் மண்டைப் பாணர் என்றொரு வகையைக் கூறுகின்றார்கள் அறிஞர்கள். இரவலர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த மண்டையைப் (உண்கலம்), பாணர்க்குரியதாகக் கருதி மண்டைப் பாணர் என்றொரு வகையினர் இருந்தனர் எனப் பிரித்துக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? இம்மண்டையை உழவரும், கிணைவரும், விறலியும் வைத்திருந்தனர் எனவும் உணவும் உண்டுள்ளனர் எனவும் பாடல்கள் கூறியுள்ளன. இச்செய்தியினால் மண்டை விறலி, மண்டை உழவர், மண்டைக் கிணைவர் என்னும் வகைகளைக் நாம் கூற முடியுமா? முடியாது. கூறினாலும் அதனை ஏற்கவியலாது. ஏனெனில் மண்டை என்பது அனைத்து இரவலர்களுக்கும் பொதுவானதாகும். எனவே, மண்டைப் பாணர் என்றொரு வகை இல்லை என்பது புறநானூற்றுச் செய்யுட்கள் மூலம் தெளிவாகிறது.
முடிவுரை
‘மண்டைப்பாணர் என்றொரு வகையினர் சங்கக்காலத்தில் இல்லை’ என்பது இக்கட்டுரையின் முடிவாக அமைகிறது. மண்டை என்பது கள், சோறு முதலியன உண்டற்குரிய ஒன்றாக விளங்கியுள்ளது. இம்மண்டையில் விறலி, பாணர், உழவர், கிணையர் போன்றோரும் உணவுபெற்று உண்டுள்ளனர். ஆதலால் இம்மண்டை அனைத்து இரவலர்க்குமுரிய பொதுவான உண்கலம் என்பது உணர்த்தப்பட்டது. இதனைப் பாணர்க்கு மட்டும் உரியது எனக் கருதுவதும் மண்டைப்பாணர் என்றொரு வகை இருந்தனர் என்று கூறுவதும் தவறாகும். மேலும், பாணர்க்கு மட்டும் உரியதாகக் கருதுவதற்கும் அவற்றினால் ஒரு வகையைக் கூறுவதற்கும் இது(மண்டை) இசைக்கருவியும் அன்று. எனவே, மண்டை என்பது இரவலர்களுக்குரிய பொதுவான உண்கலம் என்னும் கருத்தின் மூலம் மண்டைப் பாணர் என்றொரு பாணர் வகையினர் இல்லை என்பது இக்கட்டுரையின் முடிவாகக் கூறப்படுகிறது. மேலும், நாம் மண்டைப்பாணர் என்றொரு வகையைத் தனியாகக் கூறுவது ஏற்புடையதல்ல என்பதும் இக்கட்டுரை முடிவின் மூலம் உணர்த்தப்படுகிறது.
துணை நூற்பட்டியல்
சிந்து.மூ
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
கற்பகம் பல்கலைக் கழகம்
ஈச்சனாரி.
மனித இனம் தோன்றியகாலம் முதலே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றியது எனலாம். மனிதனது உள்ளத்தில் தோன்றம் உணர்வுகளின் வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியமாகத் தோன்றுகிறது. வாய்மொழி இலக்கியமாக விளங்குகின்ற நாட்டுப்புறப் பாடல் ஏட்டிலக்கியமாக மாறியதில் முன்னோடியாக இருந்தது தாலாட்டுத்தான். தாலாட்டு மனித வாழ்வோடு தொடர்புடையது. மிகத் தொன்மையான தாலாட்டின் சிறப்பை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.
பெயர்க்காரணம்
‘தால்’ என்றால் நாக்கு. நாவினை ஆட்டிப் பாடுவதால் தால் + ஆட்டு தாலாட்டாயிற்று. குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்கும் தாய் அவ்வெலியை அடக்கத் தன் உதடுகளைக் குவித்து நாவினை ஆட்டிக் குரலையிடுவதே தாலாட்டாகும். தாலாட்டு நாட்டு வழக்கில் “ராராட்டு“ எனவும் வழங்கிவருகிறது. மேலும் தாலாட்டைத் தாராட்டு, தாலேலோ, ஓராட்டு, ரோரோட்டு, ராராட்டு, தொட்டில் பாட்டு, ஓலாட்டு, திருத்தாலாட்டு எனப் பல்வேறு பெயர்கள் இன்றைய உலக வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் வழங்கப்படுகிறது.1
“தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் தாலாட்டு”2 என்பர் தமிழண்ணல். குழந்தைக்கு முதன்முதலில் புலனாகும் உணர்வுகளில் கூர்மையானது, குறிப்பானது செவியுணர்வே. தாயையும், பிறரையும் வேறுபடுத்தி உணர குழந்தைகளுக்கு உதவுவது அவரவர் குரலே இக்கருத்தின் வழி, தாலாட்டுப் பாடலில் குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள பிணைப்பு தெளிவாக வெளிப்படுகிறது. பிறப்பின் போது பாடப்படும் தாலாட்டும், இறப்பின் போது பாடப்படும் ஒப்பாரியும் மனிதனுக்குக் கிடைத்தற்கரியதாய் உணரலாம்.
தாலாட்டுப் பாடல்களின் தோற்றம்
‘தாலாட்டு’ என்ற சொல்லாட்சியை மையமாகாக் கொண்ட இடைக்கால இலக்கியங்கள் “தாராட்டு” என்றும், பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் “தாலேலோ” என்றும் குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம்.
தொல்காப்பியர் “குழவி மருங்கினும் கிழவதாகும்”3 என்று தொல்காப்பியத்தில் குழந்தைக்குரிய பருவகளைச் சுட்டிக்காட்டுகிறார்.மேலும், சங்க இலக்கியத்தில் புறப்பாடலாக விளங்கும் பரிபாடலிலும் “வரையழி வாலருவி வாதாலாட்ட”4 என்ற பாடல்வரிகள் தாலாட்டினைப் பற்றிக் கூறுகிறது.
தமிழ் மொழியில் முதன் முதலாகத் தாலாட்டுப் பாடல்களைப் பாடியவர் பெரியாழ்வார். குலசேகர ஆழ்வாரும், பிள்ளைத்தமிழ்ப் புலவர்களும் தாலாட்டினைத் தாய்ப்பருவம் என்று தனித்துறையாக வளர்த்தனர். ஞானசம்பந்தர் தாலாட்டு, நம்மாழ்வார் தாலாட்டு போன்ற தாலாட்டுச் சிற்றிலக்கியங்கள் அதன் வளர்ச்சியைக் காட்டுவன எனலாம். தற்காலத்தில் தாலாட்டுப் பாடல்கள் சூழ்நிலைகளால் உணர்ச்சி வசப்படும் பாடல்களல்ல, தாயின் ஓய்விலே குழந்தை தவிழும் போது பிறக்கின்ற பாடலாகும் என்பதை உணரமுடிகிறது.
தாலாட்டிசைக்கும் காலம்
குழந்தை அழும் போது அதன் அழுகையை அடக்கித்துயிலச் செய்யத் தாய் தாலாட்டுப் பாடுகிறாள். குழந்தைப் பிறந்த ஓரிரு வாரங்களிலிருந்து மூன்று வயது வரை குழந்தை தூங்க இத்தாலாட்டுத் தேவைப்படுகிறது. எனவே, அக்காலமே தாலாட்டிற்குரிய காலாமாகும். 96 வகைத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் பிள்ளைத் தமிழ் இலக்கியமும் ஒன்றாகும். அது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும். ஒவ்வொரு பிள்ளைத் தமிழும் பத்துப் பருவங்களால் பாடப்பெறும். ஒவ்வொரு நிலையிலும் குழந்தையின் அழகினையும், சிறப்பினையும் உயர்வாகப் பாடப்படும்,
தாலாட்டுப்பாடலின் அமைப்பு
தாலாட்டுப் பாடல்கள் குறுகிய அளவு உடையன.ஆனால் பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களுக்கு அடிவரையரை இல்லை என்றே கூறலாம். குழந்தையின் உறக்க நிலைக்கேற்பவும், தாயின் மனநிலைக்கேற்பவும் தாலாட்டுப் பாடல்கள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ அமையப்பெறுகிறது.
தாலாட்டு சமுதாயத்தில் பெறுமிடம்
சமுதாயத்தில் பெண் தன் கருத்தை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு இடம். தன் எண்ணத்தை வெளிப்படுத்த தாய்க்கு வேறு இடம் இல்லாததால் தாலாட்டில் வெளியாகின்றது எனத் தாலாட்டுப் பிறக்கும் நிலையை விளக்கியுள்ளமை தாலாட்டின் பயன் நிலையைச் சுட்டுவதாய் உள்ளது.
இருவர் கொள்ளும் காதலைவிட, உடன் பிறந்தவர் கொள்ளும் வாஞ்சையை விட, உலகளக்கும் அருளினையும் விட பிள்ளைப் பாசமே ஆழமானது. இத்தகைய ”தாயும், சேயும் என்ற உறவுப் பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலை தான் தாலாட்டு”5 ஆகும்.
தாலாட்டில் பாடுப்பொருளாக வருவன
தாலாட்டின் பிரிவுகள்
1.குழந்தை பற்றியன
குழந்தையின் நிலையைப் பற்றித் தாலாட்டுப் பாடுதல் ஒரு வகையாகும்.
“என்
தேனே தினைமாவோ – என் சாமி
சிவந்தானோ மாங்கனியோ – என்
மாங்கனியே யாரடிச்சோரோ”
என்ற பாடலில் குழந்தையின் நிலையிணை விளக்குகிறது.
2.குழந்தைக்கு உரிமையானப் பொருட்களைப் பற்றியன
குழந்தையின் சிலம்பு பற்றிக் கூறும் போது,
“என் போல் திருப்பங்கண்ணாய்
ஒருகால் சிலம்பு அசைய – என்
மறுச்சு திருப்பங்கண்ணாய் – என்
வலதுகால் சிலம்பு அசைய”
என்ற பாடல் சான்றாகும்.
3.தாய்மாமன் சீர் வரிசை
‘தாயில்லாப் பெண்ணுக்குச் சீர் இல்லை என்பார்கள்’.அதுபோல தமையன் இல்லாப் பெண்ணக்குச் சீர் மட்டுமல்ல பலமும் குறைந்து விடுகின்றது.தாலாட்டுப் பாடல்களில் அதிகமாகச் சொல்லப்படும் உறவுநிலை தாய்மாமன் உறவுநிலையேயாகும்.
பெண்கள் தன் உடன்பிறந்தோர் கொடுக்கின்ற சீதனங்களை அவ்வபொழுது ஞாபகப்படுத்திக் கொள்வதுண்டு. குழந்தைப் பிறந்தவுடன் தாய்மாமன், குழந்தையின் பாலுக்காகப் பசு மாடு வாங்கிக் கொடுத்தல் வழக்கம். இதனை ‘ஆச்சிமாடு கொடுத்தல்’ என்று அழைப்பர்.
“மழைக்கால் இருட்டுலே
மாரளவு சன்னிலிலே
குடப்பால் கொண்டுவரும்
குணமுள்ளார் உன் மாமன்”
என்ற வரிகள் மூலம், தாய்மாமன் குழந்தைக்கு எவ்வளவு இன்னல்களுக்கு இடையில் பால் கொண்டு வரும் நிலையினை உணர்த்துகிறது.
தாலாட்டுப் பாடல்கள் தாயின் மனவோட்டத்தில் அமையப் பெற்று ,குழந்தையை தாயானவள் எல்லா நிலையிலும் வர்ணித்துப்பாடக்கூடிய நிலையைக் காணமுடிகிறது.
முடிவுரை
அடிக்குறிப்பு
1.டாக்டர் சு.சத்திவேல் , நாட்டுப்புற இயல் ஆய்வு.ப-43
3.வ.த.இராமசுப்பிரமணியம் (உரையாசியர்),தொல்காப்பியம் பொருளதிகாரம் நூ-82
4.அறிஞர்.வ.வே.சுப்பிரமணியன் சங்க இலக்கியம் மூலமும் தெளிவுரையும்,பரிபாடல்
பா-6,52வது வரி
-சிறீ சிறீஸ்கந்தராஜா
ஒளியைத் தேடி
நான் மட்டும் தனியாக இருக்கும் அந்த நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. யன்னலின் திரையை நீக்கி வெளியே பார்க்கிறேன். நான் நினைத்தது போலவே புகையிலைத் தரகர் பொன்னம்பலந்தான் நின்றுகொண்டிருந்தார்.
கதவைத் திறக்காமலே அண்ணன் வீட்டிலில்லை என்பதை அவரிடம் கூறிவிடலாமா என ஒருகணம் யோசிக்கிறேன். ஆனால் அப்படிச் செய்யவில்லை.
பொன்னம்பலம் உள்ளே வந்து கதிரையில் உட்காருகிறார். நான் அவருக்குத் தேநீர் தயாரிப்பதற்காகச் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.
பொன்னம்பலத்திடம் எல்லோரும் மரியாதையுடன்தான் பழகுவார்கள். அதற்குக் காரணம் அவர் தனது தொழிலிற் காட்டும் நேர்மையாகத்தான் இருக்க வேண்டும்.
பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது கண்ட பொன்னம்பலத்தின் இளமைத்தோற்றம் இன்றும் அப்படியே இருக்கிறது. அவர் அப்போதெல்லாம் வியாபார விஷயமாக எங்கள் வீட்டுக்கு வருவார். அப்பொழுது எங்கள் தந்தை உயிரோடு இருந்தார்; குடும்பமும் நல்ல நிலையில் இருந்தது.
அண்ணனுக்கு அரசாங்கத்தில் ஆசிரியத் தொழில் கிடைத்த பின்னர் தோட்டத்தைக் கவனிப்பதற்கு நேரம் இல்லாமற் போய்விட்டது. எங்களிடம் இப்போது விற்பனைக்குப் புகையிலைக் கன்றுகளும் இல்லை.
எங்கள் தந்தை இறந்தபின்பு எங்களுக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களோ பல. அப்போது பொன்னம்பலந்தான் எங்களுக்கு உதவியாக இருந்தார். அவர் ஒருவர்தான் இப்பொழுதும் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார்.
அண்ணன் சிறிது நேரத்திற்கு முன்புதான் வெளியே சென்றார். பொன்னம்பலம் அதனைக் கவனித்த பின்புதான் இங்கு வந்திருக்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக பொன்னம்பலம் என்னிடம் பழகும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் நான் அதனை உணர்ந்து கொண்டவள்போல அவரிடம் காட்டிக்கொள்வதில்லை.
தேநீரைக் கிளாஸில் ஊற்றிப் பொன்னம்பலத்திடம் கொடுக்கிறேன். அதனை வாங்கும்போது அவருடைய கை எனது விரல்களிற்படுகிறது.
பொன்னம்பலம் சிரிக்கிறார். அவருடைய உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலோ என்னவோ முகத்தில் அசடு வழிகிறது.
“பூமணி ! நீ எவ்வளவு வடிவாய் இருக்கிறாய்! ” பொன்னம்பலம் இப்படிக் கூறியதைக் கேட்க எனக்கு உள்ளூர ஆசையாக இருந்தாலும் ஏதோ ஒரு வித பயமும் இருக்கத்தான் செய்கிறது.
பொன்னம்பலம் எழுந்து நிற்கிறார்.
“பூமணி! நான் …. …. உன்னை ஒண்டு கேட்கிறேன். நீ அண்ணனிட்டைச் சொல்லுவியோ?”
நாக்கு மேலே ஒட்டிக்கொண்டதுபோல அவரது குரல் தடுமாறுகிறது. உடல் சிறிது நடுங்குகிறது. அவர் சொல்லி முடித்ததும் எச்சிலை விழுங்குவது நன்றாகத் தெரிகிறது. அவரது முகம் மாறி விட்டது.
அண்ணனிடம் சொல்லமாட்டேன் என்பதற்கு அடையாளமாக, நான் தலையைமட்டும் அசைக்கிறேன். அவர் கேட்கப்போவது என்ன என்பதை அறிய எனக்கு ஆவலாக இருக்கிறது.
அண்ணன் வருவது தூரத்தே தெரிகிறது. பொன்னம்பலம் சமாளித்துக்கொண்டு கதிரையில் உட்காருகிறார். நான் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.
அண்ணனும் பொன்னம்பலமும் முன் கூடத்திற் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொன்னம்பலம் சிறிது காலமாக அண்ணனிடம் பேசுவதெல்லாம் எனக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும்.
அவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்பதற்கு எனக்கு கொள்ளை ஆசை.
“பூமணிக்கு வயசு முப்பதாகுது. இனிமேலும் அவளுக்கு கலியாணஞ் செய்து வைக்காமல் இருக்கிறது சரியில்லைத் தம்பி.”
பொன்னம்பலம் அண்ணனிடம் கூறிய வார்த்தைகள் என் காதிலும் விழுகின்றன.
அண்ணன் மௌனமாக இருக்கிறார். அவரால் என்னதான் செய்யமுடியும்?.
ஏழெட்டு வருடங்களாக எனக்குத் திருமணஞ் செய்து வைப்பதற்கு ஏறாத வாசற் படிகளெல்லாம் ஏறியிறங்கிவிட்டார். பலன்தான் கிட்டவில்லையே.
எனக்குப் பெரிய இடத்தில் கைநிறையச் சம்பளம் எடுக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையைக் கட்டிவைக்க வேண்டுமென்பது அண்ண னுடைய விருப்பம்
நான் மணப் பருவம் எய்திய நாளிலிருந்தே அண்ணன் அதனை என்னிடம் அடிக்கடி கூறுவார். அதனாலேதான் என் மனதிலும் அந்த ஆசை வேரூன்றி விட்டதோ என்னவோ!
நான் பெரியவளாகிச் சில மாதங்களுக்குள் என்னைத் தனது மகனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமென மாமா விரும்பினார். ஆனால் நான் அதனைத் துளிகூட விரும்பியதில்லை. என் தோழி சுகுணா ஓர் என்ஜினியரைத் திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிறாள். நான் மட்டும் ஒரு கமக்காரனுக்கு வாழ்க்கைப்படுவதா?
பெரிய இடங்களில் எனக்குத் திருமணம் பேசியபோதெல்லாம் அத்திருமணம் நடந்துவிடாதா என என் மனம் ஏங்குவதுண்டு. எனக்கு அழகில்லை என்றார்கள் சிலர். எங்களுடைய அந்தஸ்து போதாதென்றார்கள் வேறு சிலர். எங்களால் கொடுக்க முடியாத அளவு சீதனம் கேட்டுத் தட்டிக்கழித்தனர் பலர். இப்போது எனக்கு வயது அதிகமாகிவிட்டது என்ற காரணமும் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.
பேசுகிறவர்கள் எதையும் பேசிவிட்டுப் போகட்டும் எனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கத்தான் போகிறது.
அன்று சுகுணா தனது கணவர் சந்திரனுடன் வந்திருந்தாள். அவளுடைய கணவனைப் போன்று அவளுடைய குழந்தையும் அழகாகத்தான் இருக்கிறான். முன் கூடத்தில் அண்ணனுடன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நான் மட்டும் சமையலறையில் அந்தக் குழந்தையுடன் கொஞ்சிக்கொண்டிருந்தேன்.
நானும் ஒரு நாள் சுகுணாவைப்போல ஒரு பெரிய உத்தி யோகத்தரைக் கலியாணஞ் செய்வேன். எனக்கும் அழகான ஓரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையை எப்பொழுதும் என்னிடம் வைத்துக் கொஞ்சுவேன். அப்போது என் கணவர் தன்னிடம் எனக்கிருந்த அன்பு குறைந்து விட்டதென்று செல்லமாகக் குறைப்படுவார்.
நான் சுகுணாவின் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதன் கன்னங்களை மாறி மாறி முத்தமிடுகிறேன். குழந்தை கன்னங் குழியச் சிரிக்கிறான். அவனுடைய மிருதுவான கேசங்கள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.
குழந்தை தன் பிஞ்சுக் கரங்களால் என் மார்புச் சட்டையைப் பிடித்து இழுக்கிறான். கற்பனையில் எனக்கு ஏதேதோ ஆசைகள் எழுகின்றன. எனக்கு நாணமாக இருக்கிறது.
நான் வழுகியிருந்த மேலாடையைச் சரிப்படுத்துகிறேன். பால் கொடுக்கலாமென்றால், பாற்காரன் காலந்தாழ்ந்தும் இன்னும் வரவில்லையே!
சுகுணா வந்து குழந்தைக்குப் பாலூட்டுகிறாள். குழந்தை செய்யும் குறும்புத்தனங்களை எனக்குச் சொல்லும்போது அவளுக்கு பெருமை யாக இருக்கிறது. சுகுணாவைப்போல் நானும் என்றுதான் பெருமைப் படப் போகிறேனோ?
சுகுணாவின் பேச்சு திசை திரும்புகிறது. “பூமணி! அண்ணர் உமக்கு எப்ப கலியாணஞ் செய்துவைக்கப் போகிறார்?”
“இப்ப என்ன அவசரம் ? ஆறுதலாய்ச் செய்யிறது. கலியாணஞ் செய்தால் சுதந்திரமாய் இருக்கேலாது. குழந்தை குட்டியென்று பெரிய கரைச்சல்….”
சுகுணா சிரிக்கிறாள். அவளும் இப்படித்தான் திருமணம் நிறைவேறுமுன்பு சொல்லிக்கொண்டிருந்தாளா? அல்லது எனது ஆதங்கத்தைப் புரிந்துகொண்டிருப்பாளா?
சுகுணாவும் அவளது கணவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள்.
அண்ணன் என்றும்மில்லாத மகிழ்வுடன் இருக்கிறார்.
“பூமணி! கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார். நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைத்து விட்டது. சுகுணாவின் கணவன் சந்திரனுக்கு ஒரு தம்பி இருக்கிறானாம், கொழும்பில் ஒரு கம்பனியில் வேலை; கைநிறையச் சம்பளம் கிடைக்கிறது. நானும் சந்திரனும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அவர்களுக்கு இந்தச் சம்பந்தத்தில் நல்ல சந்தோஷம். வருகிற மாதமே திருமணத்தை நடத்திவிடவேண்டுமென்று சொல்கிறார்கள். ”
அண்ணா இதனை என்னிடம் கூறும்போது உணர்ச்சி வசப்படுகிறார். ஆனந்த மிகுதியால் அவரது கண்கள் கலங்குகின்றன.
என்னுள்ளமும் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. என்னுடைய நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் நான் ஒரு பெரிய உத்தியோகத்தரின் மனைவியாகி விடுவேன்.
அண்ணனிடம் எந்தப் பதிலையும் சொல்ல என்னால் முடிய வில்லை. சமையல் அறைக்குள் ஒடிவிடவேண்டும் போல் இருக்கிறது. எனது மகிழ்ச்சியைக் கண்டுகொண்டால் அண்ணன் கேலி செய்வார். எனக்கு வெட்கமாக இருக்கும்.
எனக்குத் திருமணஞ் செய்துவைக்க அண்ணன் இவ்வளவு காலமும் எவ்வளவு கஷ்டப்பட்டார். இப்போது திருமணம் தானாகவே வந்து கைகூடப்போகிறது. ஏதாவது காரணங்களால் இம்முறையும் என் திருமணம் குழம்பிவிடாமல் இருக்கவேண்டுமே.
“பூமணி, எங்கள் இருவருக்கும் ஒரே பந்தலில் திருமணம் நடக்கப்போகிறது. சந்திரனின் தங்கையைத்தான் நான் திருமணஞ் செய்யப்போகிறேன்.”
‘ஐயோ அண்ணா!’ என்று அலற வேண்டும்போல இருக்கிறது. எனக்கு எல்லாம் ஒரே நொடியில் விளங்குகின்றன.
சந்திரனின் தங்கை ஒரு குருடி. எனக்கு வாழ்வளிப்பதற்காக ஒரு பிறவிக் குருடியை அண்ணன் திருமணஞ் செய்யப்போகிறார். அண்ணா வுக்கு முன்னால் என்னால் நிற்கமுடியவில்லை. நான் சமையல் அறைக்குள் ஒடுகிறேன்.
அண்ணன் சிரிக்கிறார். திருமணத்தைப்பற்றிச் சொன்னதும் எனக்கு வெட்கம் ஏற்பட்டுவிட்டதென நினைத்துச் சிரிக்கிறாரா? எனக்கு எல்லாமே மங்கலாகத் தெரிகின்றன.
இரவில் படுக்கும்போது தூக்கமே வருவதில்லை, என் தலையே வெடித்துவிடும்போல் இருக்கிறது.
அண்ணா! எனக்குத் திருமணஞ் செய்துவைப்பதற்குப் பணம் வேண்டுமென்ற காரணத்தால், நான் பெரியவளாகியதும் நீ மேலே தொடர்ந்து படிக்காமல், உன் உயர்வைக் குறுக்கிக்கொண்டு ஊரிலேயே உத்தியோகத்தில் அமர்ந்துகொண்டாய்.
உழைக்கத் தொடங்கியதும் உனது பணத்தில் உனக்காக ஒன்றும் செலவு செய்யாது என் திருமணத்திற்காகப் பணத்தைச் சேர்த்து வைத்தாய்.
அழகான பெண்ணுடன் வசதியான வாழ்க்கையை உனக்கு அமைத்துத்தரப் பலர் முன்வந்தபோதும் எனது திருமணத்தின் பின்புதான் உனக்கு திருமணம் என்று திடசித்தம் செய்துகொண்டாய்.
இப்போது எனக்காகக் குருட்டு வாழ்க்கை நடத்தவும் திட்டமிட்டு விட்டாயா?
நான் இதற்கு ஒரு போதும் சம்மதிக்கமாட்டேன். இந்தத் திருமணம் நடக்க ஒரு போதும் விடமாட்டேன்.
****
http://www.sirukathaigal.com/tag/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/
****
ஞானம் (இதழ்)
https://ta.wikipedia.org/s/a7c
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S.Selvaragu-PRO
நியூஸ்7தமிழில் “மக்கள் மனசுல யாரு “என்ற மாபெரும் கருத்துக்கணிப்பின் முடிவுகள் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. ரஜினி, கமல், விஜய் மூவரில் திரையுலகிலிருந்து அரசியலுக்கு அடுத்து யார் வருவார்? வந்தால் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புள்ளியியல் வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலின்படி வயது, பாலினம், மதம், கல்வித்தகுதி மற்றும் தொழில் அல்லது பணி அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. நியூஸ்7 தமிழ் மற்றும் குமுதம் குழுமம் இணைந்து நடத்தும் “மக்கள் மனசுல யாரு” மாபெரும் கருத்துக்கணிப்புக்கான முடிவுகள் இந்தவாரம் 27, 28, 29, 30மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
”கொஞ்சல்போல் கொஞ்சி கயிறுடன் காத்திருக்க,
மிஞ்சுகிறான் ஆய்ச்சியவள் மைந்தன்: -அஞ்சியவன்
வாய்க்குளே பார்த்திட வையம் தெரிகிறது:
தாய்க்குள்ளே தாமோ தரன்’’….கிரேசி மோகன்….!