Blog

  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 30

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 30

    -மேகலா இராமமூர்த்தி

    அமளிமிசை கிடந்த வாலி வெளியில் எழுந்த அமளியையும் ஆரவாரத்தையும் கேட்டான். ஊழி முடிவில் பொங்கியெழும் ஆழிப்பேரலைபோல் விரைந்தெழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் கிட்கிந்தை மலை நிலத்தினுள் அழுந்திற்று.

    வாலியின் வாயிலிருந்து புகைவருமாறு அவன் கண்களிலிருந்து கிளம்பிய சினத் தீயினால், அமுதம் நிகர்த்தவளும் மூங்கில்போன்ற தோள்களை உடையவளுமான வாலியின் மனைவி தாரை, தன் நீண்டகூந்தல் எரியப் பெற்றவளாய், அவனுக்கு இடையில் வந்துநின்று வெளியில் செல்ல எத்தனித்த அவனைத் தடுத்தாள்.

    ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய
    வேயிடைத் தோளினாள் இடை விலக்கினாள்
    வாயிடைப் புகை வர வாலி கண் வரும்
    தீயிடைத் தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்
    . (கம்ப: வாலிவதைப் படலம்: 4059)  

    வாலியின் சினத் தீயினால் தாரையின் கூந்தல் எரிவதாய்ச் சொல்லி அவளுக்கு நிகழவிருக்கும் அமங்கலத்தைக் குறிப்பால் ஈண்டு உணர்த்துகின்றார் கம்பர். பெண்களின் கூந்தலைத் தொடும் உரிமை பெற்றவராய் – கூந்தற் கிழவராய் அவர்தம் கணவன்மாரைக் குறிப்பது தமிழர் மரபு.

    பாரி இறந்தபின்பு அவனுடைய மகளிரை அழைத்துக் கொண்டு அவர்களுக்கேற்ற கணவரை நாடிச்செல்லும் கபிலர், தம்மை வாழ்வித்த பறம்பு மலையைப் பார்த்து உளம்சோர,

    ”…பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
    நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
    சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
    கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
    நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.”
    (புறம்: 113) என்றுரைக்கும் பாடலில் பாரி மகளிர்க்கேற்ற மணாளரைக் குறிக்க, ’கூந்தல் கிழவர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைக் காண்க.

    தாரை தடுத்ததால் கோபமுற்ற வாலி, ”என்னைத் தடுக்காதே! வழிவிட்டு விலகு!” என்றுரைக்க, ”மன்னவா! உம்மைக் கண்டு இற்று ஓடிய உம் தம்பி, நற்றுணை ஒன்றைப்பெற்று உம்மை எதிர்க்க வந்திருக்கின்றான்; எனவே அவனோடு சமர்செய்யச் செல்லவேண்டாம்” என்றாள் தாரை.

    அதைக்கேட்ட வாலி நகைத்து, ”மயிலே! மந்தர மலையைத் தயிர் கடைவதுபோல் கடைந்து தேவாசுரர்களுக்கு அமுதத்தைப் பெற்றுத்தந்த ஆற்றலாளன் நான்! என்னை எதிர்க்கும் திறனுடையோர் ஆருளர் இங்கே? எமனும் எனைக்கண்டு அஞ்சுவான்; அதையும்மீறி அறிவற்றவர் எவராயினும் எனை எதிர்த்துவந்தாலும் அவர்தம் ஆற்றலிலும் வரபலத்திலும் பாதியை நான் பெற்றுவிடுவேன்; எனவே என்னைப் போரில்வெல்வார் எவருமில்லை!” என்றான் தாரையிடம்.

    அதனை ஏற்காத தாரை, ”அரசே! உம் உயிரைக் கொள்(ல்)வதற்காகச் சுக்கிரீவனுக்குத் துணையாகியிருக்கின்றான் இராமன் என்பவன் என நமக்கு வேண்டியவர்கள் அறிந்துவந்து சொன்னார்கள்” என்றாள்.

    அதனைக் கேட்டதும் வாலியின் சினம் மேலும் கூடிற்று. ”தீயவளே! வல்வினைகளிலிருந்து மீளும் வழியறியாது இறைவனின் அருள்வேண்டி வருந்தும் உலக உயிர்கட்கு, அறநெறியில் தான் வாழ்ந்து வழிகாட்டும் தூயவன் அந்த இராமன்; அவனைப் போயா சுக்கிரீவனுக்குத் துணைசெய்ய வந்தவன் என்கிறாய்! நீ பெண்ணல்லவா…அதனால்தான் பேதைமையோடு அவனைப் பிழைபட எண்ணிவிட்டாய்!” என்றான்.

    உழைத்த வல் இரு
          வினைக்கு ஊறு காண்கிலாது
    அழைத்து அயர் உலகினுக்கு
          அறத்தின் ஆறு எலாம்
    இழைத்தவற்கு இயல்பு அல
          இயம்பி என் செய்தாய்
    பிழைத்தனை பாவி உன்
          பெண்மையால் என்றான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4068)

    ”பிழைத்தனை பாவி உன் பெண்மையால்” என்ற தொடருக்கு ”நீ பெண்ணாக இருப்பதனால் உயிர்தப்பினாய்” என்று வாலி உரைத்ததாகவும் பொருளும் கூறுவர். அவள் இராமனைப் பற்றித் தவறாகக் கூறியதாகக் கருதியமையால் அவளைப் ‘பாவி’ என விளித்தான் வாலி.

    தொடர்ந்து பேசியவன்…”உலகினை வெல்லும் கோதண்டம் இராமன் கையில் இருக்க, மாவீரனான அவனுக்குப் புன்தொழில் புரியும் குரங்கின் நட்பெதற்கு? ஆதலால், நீ கவலைப்படாமல் இங்கேயே சிறுபொழுது இரு! கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தச் சுக்கிரீவனையும் அவனுக்குத் துணை வந்தோரையும் அழித்தொழித்துவிட்டுத் திரும்பி வருகின்றேன்!” என்று கூறிப் புறப்பட்டான். அதன்பின்னர் என்ன சொல்வது என்றறியாது திகைத்துநின்றாள் தாரை.

    நல்லதுணை கிடைத்திருப்பதனால்தான் வாலியினும் வலிகுறைந்த சுக்கிரீவன் துணிச்சலாய் வாலியை எதிர்க்க வருகின்றான் என்று கணித்த தாரையின் மதிநுட்பம் போற்றற்பாலது. வாலி அதனைப் பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தியமைக்குக் காரணம், தன் வல்லமை மீதும் இராமனின் நெறிதிறம்பா நல்ல குணங்களின்மீதும் அவன் கொண்டிருந்த அதீத நம்பிக்கையே எனலாம்.

    தன் அரண்மனைவிட்டு வெளியேறிய வாலி, கம்பீரமாகச் சுக்கிரீவனுக்கு எதிரே வந்துநின்றான். சுக்கிரீவன் போர்முழக்கம் செய்ய, பதிலுக்கு வாலியும் கர்ச்சித்தான். வாலியும் சுக்கிரீவனும் எதிரெதிர் நின்ற அந்தப் போர்க்கோலத்தைக் கண்டுவியந்து அவர்களின் வீரம் பற்றித் தன் இளவலிடம் இராமன் விதந்துகூற, இலக்குவன் அதை ஏற்கவில்லை.

    ”இந்தச் சுக்கிரீவன் தனக்கு முன்பிறந்த அண்ணனைக் கொல்லக் காலனை அழைத்து வந்துள்ளான். எள்ளுதற்குரிய இவனுடைய இழிபோர் கண்டு நான் எதனையும் உணரும் ஆற்றலற்றுள்ளேன்” என்று வேதனையோடு விளம்பிய இலக்குவன்,

    ”வீரனே! அறநெறி வழுவி தீச் செயல்களைச் செய்கின்றவர்களை நாம் நம்புதல் கூடாது! தன் தமையனையே பகைவனாகக் கருதிக் கொல்லும்பொருட்டு வந்துநிற்கின்ற சுக்கிரீவன், உறவல்லாத மற்றோருக்கு உற்ற துணையாதல் எங்ஙனம்?” என்று ஐயுற்றுக் கேட்டான்.

    ”சொந்தத் தமையனையே அழிக்கத் துடிக்கும் சுக்கிரீவன் நம்பற்கு உரியவன் அல்லன்” என்பதே இலக்குவன் கருத்தின் உட்பொருள்.

    இதேபொருளில் தெய்வப் புலமை வள்ளுவனார்,

    ”துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
    என்னைகொல் ஏதிலார் மாட்டு.”
    (குறள்: 188) என்று உரைத்திருப்பதை இங்கே பொருத்திக் காணலாம்.

    அதற்கு பதிலிறுத்த இராமன், ”ஐயனே! பித்துற்றதுபோல் விவேகமற்ற விலங்குகளிடத்து நாம் நல்லொழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா? சுக்கிரீவனை விடு! மானிடத் தாயர் வயிற்றிலே பிறந்தவர்களே ஆயினும் தமையனிடம் அன்புகொள்வதில் உத்தமன் பரதனை ஒத்தவர் யாருளர்?” என்று கேட்டான்.

    அத்தா இது கேள் என
          ஆரியன் கூறுவான் இப்
    பித்து ஆய விலங்கின்
          ஒழுக்கினைப் பேசல் ஆமோ
    எத் தாயர் வயிற்றினும்
          பின் பிறந்தார்கள் எல்லாம்
    ஒத்தால் பரதன் பெரிது
          உத்தமன் ஆதல் உண்டோ. (கம்ப: வாலிவதைப் படலம் – 4080)

    தன்னிழல்போல் தன்னையே தொடர்ந்துவரும் இலக்குவனிடமே இராமன் பரதனைப் புகழ்ந்துபேசுவது சிந்தனைக்குரியது. இராமன்பால் அளவற்ற அன்பும் மதிப்பும் கொண்டவன்தான் இலக்குவன். எனினும், இராமனைக் காணவந்த பரதனை ஐயுற்று அவன் தவறாகப் பேசிய இடங்கள் உண்டு. ஆனால் பரதனோ உடன்பிறந்தாரை இழித்துப் பேசியதாகச் செய்திகள் இல்லை. இராமன் திரும்பிவரும் வரையில் அவனுடைய காலணிகளையே இராமனாகக் கருதி அரியணையேற்றி, அயோத்திக்கு வெளியே நந்திகிராமம் எனுமிடத்தில் விரத வடிவினனாக அரசாண்டுவந்த உத்தமன் அவன். பரதனின் நிகரில்லா உயர்ந்த குணங்களை உணர்ந்துகொண்ட கங்கை வேடன் குகன், ”ஆயிரம் இராமன் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா” என்று அவனைக் கண்பனிக்கப் புகழ்ந்ததை ஈண்டுநாம் நினைவுகூரலாம்.

    எனினும், இலக்குவனின் அன்பை இராமன் குறைத்து மதிப்பிட்டதாக நாம் கொள்ளத் தேவையில்லை. தன்னுடைய தாயாகவும், தந்தையாகவும், தவமாகவும், செல்வமாகவும் இலக்குவனை இராமன் பாராட்டிய இடமும் உண்டு.  சுக்கிரீவனைப் போன்ற தன்னலமிகு தம்பியைப் பற்றிப் பேசும்போது, அவனுக்கு நேரெதிரான நற்குணங்களை உடைய உயர்ந்த தம்பி பரதனைப் பற்றிப்பேசுதல் பொருத்தமுடையதாயிருக்கும் என்று கருதியே இராமன் அவனை இங்கே ஏத்துகின்றான் எனக் கருதலாம்.

    தொடர்ந்து தன் கருத்தை இலக்குவனிடம் வெளிப்படுத்திய இராமன், “அப்பா! நம்மை நண்பராகப் பெற்றவரிடத்தில் நமக்குத் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்வதோடு நாம் நிறுத்திக்கொள்வது நல்லது; அதனைத் தாண்டி அவர் குற்றமற்றவரா? உத்தமரா? என்றெல்லாம் ஆராய்வது பயனற்றது” என்றான்.

    ”குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.”
    (குறள்: 504) என்பதுதானே வள்ளுவனாரின் வாய்மொழியும்?

    இவ் உரையாடலைத் தொடர்ந்து அண்ணலும் இளவலும் போரில் ஈடுபட்டிருந்த வாலி மற்றும் சுக்கிரீவன்மீது தம் பார்வையைப் பதித்தனர்.

    அவ்விருவரும் ஒருவரையொருவர் உரத்தோடு தாக்கினர்; கால்களால் உதைத்தனர்; கைகளால் ஒருவரையொருவர் புடைத்தனர்; வாயினால் கடித்தனர்; எதிரெதிரே நின்று இடித்தனர்; மரங்களைப் பிடுங்கியெடுத்து அடித்துக்கொண்டு உறுமினர்; மலைக்கூட்டங்களைப் பெயர்த்தெடுத்துத் அடுத்தவர் தலைமீது வீசித் தண்டித்தனர்; ஆர்த்தெழுந்து போர்முழக்கம் இட்டனர்; ஒருவரையொருவர் தீப்பொறி பறக்க நோக்கி விழிகளால் சுட்டனர்.

    உரத்தினால் மடுத்த உந்துவர்
          பாதம் இட்டு உதைப்பர்
    கரத்தினால் விசைத்து எற்றுவர்
          கடிப்பர் நின்று இடிப்பர்
    மரத்தினால் அடித்து உரப்புவர்
          பொருப்புஇனம் வாங்கிச்
    சிரத்தின்மேல் எறிந்து ஒறுக்குவர்
          தெழிப்பர் தீ விழிப்பர். (கம்ப: வாலிவதைப் படலம் – 4096)

    இவ்வாறு வாலியும் சுக்கிரீவனும் ஒருவருக்கொருவர் சளைக்காமலும் – சற்றும் களைக்காமலும் புரிந்த கடும்போரைக் கண்டு விண்ணவர் அனைவரும் அஞ்சி மருண்டனர்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • Good Bye Kalyanam Sir

    Good Bye Kalyanam Sir

    Seshadri Baskar

    I planned to meet Sri. V. Kalyanam and was in Touch with his daughter few months ago. In the last week of February I had an opportunity to meet him. Since the pandemic had been ruling I decided that I should spend little time with him with a simple exchange of pleasantries.

    I stood in front of him with my folded hands. He could not recognize any one but was able to see with his poor vision.

    Sit down was the one line he said. I sat in the chair in front of his bed. He could not speak and in no time he closed his eyes and slept. It was Shri Kalyanam, personal secretary of Mahathma Gandhi who served him for four years.

    He was literally near Gandhi when he was shot at by Nathuram Godse. Yesterday he passed away at the age of 99 and her daughter told they have an idea to celebrate his hundredth birthday celebrations this coming august in a low key. But that was not to be.

    Kalyanam Sir, my respects to you.

    Share
  • மே 8 – செஞ்சிலுவை சங்க நிறுவனர் ஹென்றி டியூனன்ட் பிறந்தநாள்

    மே 8 – செஞ்சிலுவை சங்க நிறுவனர் ஹென்றி டியூனன்ட் பிறந்தநாள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஒருவரையும் அவர் தொடங்கிய  அரும்பெரும் சேவையையும் நினைக்கும் நாளே மே 8. 

    இறை பக்தியும், மனித நேயமும், கருணையும் கொண்ட குடும்பத்தில் ஜெனீவா என்னும் இடத்தில் 1828ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் நாள், இம்மண்ணில் மலர்ந்தார்.

    ‘வளரும் பயிர் முளையிலேயே‘ தெரியும் என்பார்கள். ஹென்றி டியூனன்டும் பயனுள்ள பயிராய் முளைவிட்டார்.  மற்றவருக்கு உதவ வேண்டும், மற்றவர் படுகின்ற துன்பங்களைப் போக்க வேண்டும் என்னும் நல்ல சிந்தனைகள் ஹென்றியின் இளம் பருவத்திலேயே முகிழ்த்துவிட்டது எனலாம். சமுதாய நலன் சார்ந்து சிந்திப்பதற்கு அவரின் பெற்றாரும் உற்ற துணையாக விளங்கினார்கள். சிறையிலே கைதிகளுக்குக் கொடுக்கப்படுகின்ற கடுமையான தண்டனையை இவரின் மனம் ஏற்க மறுத்தது. அதனால் சிறைக்கூடங்களுக்கே சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களைத் தேறுதல்படுத்தினார்.

    வங்கித் தொழிலினைத் தேர்ந்தெடுத்து வளமாக வாழ்க்கையினை அமைத்தாலும் இவரின் சிந்தனை, துயரப்படுகின்றவர்கள் பக்கமே சென்றது எனலாம். 1859 ஜூன் மாதம் 25ஆம் திகதி இவர் வட இத்தாலிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது “சோல்பரினோ” யுத்தம் நடை பெற்றிருந்தது. ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலிய நாட்டுப்படைகளைச் சேர்ந்தவர்கள் மூன்று இலட்சம்பேர் பதினாறு மணித்தியாலங்கள் போரிட்டதன் காரணத்தால் ஏறக்குறைய நாற்பதினாயிரம் பேர் உயிர்போகும் தறுவாயில் குற்றுயிராய்க் கிடந்தார்கள். இப்படிக் கிடந்தவர்களை எவரும் கண்டுகொள்ளவே இல்லை. எவருமே இவர்களின்மீது அக்கறை காட்டாது இருந்தமை ஹென்றி டியூனன்டின் உள்ளத்தில் பெருந்தாக்கத்தினை உருவாக்கியது.

    அல்லல்பட்டு ஆற்றாமையினால் அவதியுறும் அவர்களின் நிலைமை ஹென்றி அவர்களிடம் – பரிவை, பக்குவத்தை, மனிதநேயத்தை, உதவிடும் உன்னதத்தை உருவாக்கிய என்பதுதான் உண்மையாகும்.இந்தக் காட்சி அவரின் வாழ்க்கைப் பாதையினையே மாற்றியது எனலாம். பகைமைகள் நிரம்பி, யுத்த மோகம் கருக் கொண்ட வேளையில் – அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாய் எண்ணாமல் துணிவுடன், துயரத்தில் அவதிப்படுகிறவர்களுக்கு ஹென்றி மேற்கொண்ட மனிதாபிமான பணிகள் புரட்சியானவை. புனிதம் மிக்கவை என்றுதான் சொல்ல வேண்டும்.

    “சோல்பரினோ நினைவுகள்” என்னும் இவரது நூல் இவரின் எண்ணங்களை வெளிச்சமிட்டுக் காட்டி நிற்கிறது எனலாம். போரின் கொடுமைகளைப் பார்த்த இவரின் மனத்தில் – அப்போர்களில் ஈடுபட்டவர்களின்  துயரங்களே முக்கியமாகப் பட்டன. அவர்களைக் காத்திட அவர் எடுத்த அரும்பெரும் பணிதான் “செஞ்சிலுவைச் சங்கமாய்” எழுந்தது. நடுநிலையில் இருந்து எந்தவித பாரபட்சமுமே காட்டாது உதவிக்கரம் நீட்டுவதே இந்த அமைப்பின் மையக்கருவாய் அமைந்தது என்பதுதான் முக்கியமாகும். “சோல்பரினோ நினைவுகள்” என்னும் நூலில் ‘ எங்கு போர் நடந்தாலும் காயமடைந்த வீரர்களுக்குப் பாரபட்சமின்றி உதவ சர்வதேச அமைப்பு உருவாக்கப்படவேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் எண்ணமாய் 1863இல் “செஞ்சிலுவைச் சங்கம்” மலர்ந்தது.

    வளமார்ந்த செல்வச் செழிப்பில் பிறந்து வளமுடன் வாழ்ந்த மனிதரான ஹென்றி அவர்களின் மனதில் “சேவை மனப்பான்மை” குடிகொண்ட காரணத்தால் – ‘எதையுமே எதிர்பார்க்காமல் எது தேவையோ அதனை உடனடியாக ஆற்றிடும் நிலையினை‘ அவர் ஆத்மார்த்தமாக்கிக் கொண்டு விட்டமை தான் இன்றும் அவரை உலகமே கொண்டாடும் நிலைக்கு வழிவகுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம். கிடைத்த வாழ்க்கையினால் ஆனந்தமாய் வாழ்ந்திருக்கலாம். ஆனால் மற்றவர்கள் போல் அதாவது சாதாரணமானவராக அவர் வாழ்க்கையினைப் பார்க்கவில்லை. அடுத்தவர் வேதனை அவர் வேதனையாகவே அவர் கண்டார். அதனால் உதவிக்கரம் நீட்டும் உயரிய அமைப்பாக இன்று செஞ்சிலுவை அமைப்பு உலகில் பரந்து விரிந்து செறிந்து பட்டொளி பரப்பி நிற்கிறது எனலாம்.

    மனித உயிர்களையும் அவர்களுக்கான ஆரோக்கியத்தையும் உறுதி செய்வது, இனம், மதம், நாடு, சாதி என்று பாராமல் துயரத்தில் பங்கு கொள்ளுவது, அரசியலை தவிர்த்து அகிம்சைவழியில் கவனம் செலுத்துதல், காய்தல் உவத்தலின்றி சேவையினையே கருவாய்க் கொண்டு செயலாற்றுதல் ஒற்றுமையினை மையப்படுத்திச் சேவையினை ஆற்றுதல், பொறுப்பாய், கடமை உணர்வுடன் செயற்படுதல் என்னும் உயரிய நோக்கங்களை ஆணி வேராக்கியே “செஞ்சிலுவை அமைப்பு” உலகம் முழுவது நூற்றுக்கு மேற்பட்ட கிளைகளை நிறுவி “மக்கள் தொண்டே மாபெரும் தொண்டு”, “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்று களப்பணி ஆற்றி கைகொடுத்து அரவணைத்து நிற்கிறது எனலாம். “செஞ்சிலுவைச் சங்கம்” “செம்பிறைச் சங்கம்” இரண்டுமே ஒன்றுதான். ஹென்றி அவர்களின் சிந்தனையில் “செஞ்சிலுவை” ஆகியது அரபு நாடுகளின் சிந்தனையில் “செம்பிறையாய்” ஆகியது. இதுதான் வித்தியாசமே அன்றி செயற்படும் வகை ஒரே நிலைதான் என்பதை கருத்திருத்தல் நன்றாகும்.

    “இடர்வரும் போதும் உள்ளம் இருக்கிடும் போதும் – உடன் பிறந்தவர் போல் உள்ளம் இரங்கிடல் வேண்டும், ஓடும் உதிரத்திலே வடிந்து ஒழுகும் கண்ணீரிலே தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதுண்டோ, எவர் உடம்பிலும் சிவப்பே இரத்த நிறமாகும் எவர் விழி நீர்க்கும் உவர்ப்பே இயற்கைக் குணமாகும் , பிறப்பினால் எவர்க்கும் உலகில் பெருமை வரமாட்டா சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கையே வேண்டும் ” என்னும் அரிய தத்துவத்தை அகமிருத் தியே ஹென்றி டியூனன்ட் என்னும் மாமனிதர் உதவிக்கரம் கொடுக்கும் உன்னத பணியினை ஆரம்பித்தார். அவரின் எண்ணங்களை உலகெங்கும் எடுத்துச் செல்லும் அமைப்புகளாய் “செஞ்சிலுவைச் சங்கமும்”, “செம்பிறைச் சங்கமும்” திகழ்கின்றன என்பதை அனைவரும் அகமிருத்துதல் அவசியமாகும். அற்புதமான பணியினை உலகினுக்கு அளித்திட்ட ஜெனிவாவின் புதல்வர் பிறந்த நாளினை கொண்டாடும் சிறப்பான தினமாக மலர்ந்ததுதான் மே மாதத்தில் வரும் எட்டாம்நாள் அதுவே  “உலக செஞ்சிலுவை நாளாகும்”. ஜொலித்து நிற்கிறது எனலாம்.

    வசதிபடைத்த ஹென்றி அவர்கள் பிற்காலத்தில் பிச்சைக்காரன் போலவே வாழ்ந்தார். “நான் ஓரிரு ரொட்டித் துண்டுகளில் வாழ்கிறேன். நான் அணியும் சாயம் போன கோட்டினை, செஞ்சிலுவைச் சங்கத்துக்கு உதவி கேட்க வரும் பொழுது மையால் கருப்பாக்கிக்கொள்ளுகிறேன். எங்கேனும் இருக்கும் கதவுகளின் ஓரமாய் இரவில் படுத்துக்கொள்ளுகின்றேன்.”

    நோபல் பரிசு கிடைத்தும் அதனையும் செஞ்சிலுவை அமைப்புக்கே வழங்கிய அன்பின் உருவத்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் தினந்தான் மே எட்டாம் நாளாகும்.

    Share
  • Traffic Ramaswamy

    Traffic Ramaswamy

    Seshadri Baskar

    We miss you Ramaswamy sir.

    You gave a lot of people the courage and helped us to question on the rights and your energy and courage drive us today. I had the opportunity to meet him few times with my friend Madhavan Srinivasan on some issues and had spoken to him on few matters concerned with civic matters.

    His grit and determination at this ripened age and emotive approach against the wrong acts is a moral guide as to how one should approach the civic issues.

    You are a driving force to many here today and I am one among them. I feel like missing my father once again.

    In Tears, Unable to control my emotions.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 65

    பழகத் தெரிய வேணும் – 65

    நிர்மலா ராகவன்

    ஓயாமல் யோசிப்பவர்கள்

    சிலர் எதுவும் செய்யாது, ஒரே இடத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள்.

    `என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டால், `யோசித்துக் கொண்டிருக்கிறேன்,’ என்ற பதில் வரும்.

    எத்தனை நேரம்தான் யோசிப்பார்கள்?

    இப்படிச் செய்தால், இல்லாத பிரச்னைகளும் இருப்பதுபோல் தோன்றும். அதனால், கனவிலும், எதிர்காலத்திலும் சிந்தனையைச் செலவிடுகிறவர்கள் எப்போதும் குழப்பத்தில்தான் ஆழ்ந்திருப்பார்கள்.

    கதை

    திருமணமான தன் மகளைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாள் கோமதி.

    திரும்பும்போது, மிகுந்த கவலையோடு காணப்பட்டாள்.

    `இனி தன்னை எப்போது பார்ப்பேனோ!’ என்ற கவலை அம்மாவுக்கு என்று மகள் நினைத்தாள். தாயைச் சமாதானப்படுத்த, “நான் மகிழ்ச்சியாகத்தானேம்மா இருக்கேன்,” என்றாள்.

    “நீ ரெண்டு சின்னக் குழந்தைகளையும் வெச்சுண்டு, தனியா எப்படி கஷ்டப்படப்போறியோன்னு கவலையா இருக்கு”.

    கோமதி தன் குழந்தைகளை வளர்க்கச் சிரமப்படவில்லை. பல உறவினர்கள் உதவியாக இருந்தார்கள். அவளால், காலத்திற்கேற்ப மாற முடியவில்லை. மகள் தனியாக இருக்கிறாளே, தன்னால் அடிக்கடி வந்து உதவி செய்ய முடியவில்லையே என்ற கவலை ஏற்பட்டிருந்தது.

    நிகழ்காலத்தில் இருப்பவர்கள் இவ்வாறு வேண்டாத யோசனையில் ஆழ்ந்துவிடுவதில்லை.

    கவலைப்படுவதால், பிரச்னை தீர்ந்துவிடுமா?

    அப்படியே பிரச்னைகள் வந்தால்தான் என்ன? சமாளிக்கத் துணிச்சல் வேண்டாமா?

    கதை

    விமான ஓட்டியான விக்ரம் தன்னுடன் வேலைபார்த்த ரஞ்சிதாவைக் காதலித்து மணந்தார்.

    திருமணத்திற்குப்பின் அவள் உத்தியோகம் பார்க்காது, தன் சிறு குழந்தைகள் இருவருடன் வீட்டிலேயே இருந்தாள்.

    கணவரோ, இரவு பகல் பாராது உலகெங்கும் சுற்ற வேண்டிய நிலையில், ரஞ்சிதா பெரும்பொழுது தனியாகவே இருக்க நேரிட்டது.

    குருட்டு யோசனை கிளர்ந்தது: விமானத்தில் தன் கணவருடன் சேர்ந்து, இளம்பெண்களும் நாடு விட்டு நாடு பயணித்துக் கொண்டிருப்பார்களே! தன்னிடம் செய்ததுபோலவே, அவர் அவர்களிடமும் தன் காதல் லீலையைத் தொடர்வாரோ?

    எப்போதாவது வீடு திரும்பும் கணவரிடம் இதைப் பற்றிப் பேச அஞ்சினாள் ரஞ்சிதா. மாறாக, தன் ஆண்குழந்தைகளை அளவுக்கு மீறி அடக்க ஆரம்பித்தாள்.

    தப்பித் தவறி, அக்கம்பக்கத்தில் இருக்கும் எந்தப் பெண்ணுடனாவது கணவர் பேசுவதைப் பார்த்துவிட்டால், அந்தப் பெண்ணை இவளுக்குப் பிடிக்காது போய்விட்டது. அவள் பேச முயன்றாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டு போவாள்.

    ஏன் அப்படி?

    ரஞ்சிதா கடந்த காலத்திலும், எதிர்காலத்திலுமே வாழ்ந்துகொண்டு இருந்தாள். கடந்த காலத்தின் அனுபவமும், எதிர்காலமும் அப்படி அமைந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் அவளை ஓயாது அலைக்கழைத்தன.

    நிகழ்காலத்தில் செல்வச்செழிப்புடன் இருந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அவள் கண்களுக்குப் புலப்படவில்லை.

    தான் நினைப்பது எல்லாம் நடந்துவிடாது என்று புரியாது, தன்னையும் வருத்திக்கொண்டு, குழந்தைகளிடமும் அளவுக்குமீறிய கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாள்.

    கணவருக்கு அவள் போக்கிற்கான காரணம் புரியவில்லை. ஆயாசத்துடன், பிறரிடம் கூறி, ஆறுதல் தேடினார்.

    ஒருவர் தன்னைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், `வாழ்க்கை ஏன் இவ்வளவு கரடு முரடாக இருக்கிறது!’ என்றுதான் தோன்றிவிடுகிறது.

    கதை

    விமலாவின் கணவர் உத்தியோகம் எதுவும் பார்க்கவில்லை.

    பொழுது போக ஏதாவது வழி வேண்டாமா?

    பிறர் பேச்சைக் கேட்டு, சூதாட்டத்தில் ஈடுபட்டு, சொத்தை அழிக்க ஆரம்பித்தார்.

    `இப்படியே போய்க்கொண்டிருந்தால், என்ன மிஞ்சும்?’ என்ற விமலாவின் கவலை நியாயம்தான். ஆனால், அது ஒன்றையே தன் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அளவுக்கு யோசித்தது மனச்சோர்வில் (depression) கொண்டுவிட்டது. தலைவலி, உடல் வலி, வயிறு சம்பந்தமான கோளாறுகள் என்று அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். கணவரைப் பார்த்தாலே பிடிக்காமல் போயிற்று. கத்தலே அவள் அவருடன் தொடர்புகொண்ட மொழியாகியது.

    பிரச்னை என்று வந்துவிட்டால், அதைப் பற்றி ஓயாமல் யோசிப்பதால் மட்டுமே தீர்வு காண முடியாது. அது மறைந்தும் விடாது.

    பின் எப்படி விடுபடுவது?

    ஓயாத சிந்தனை வேண்டாமே!

    உடற்பயிற்சி, தியானம் இரண்டும் மனத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவரும் வல்லமை கொண்டவை.

    ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபட்டு, அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடலாம்.

    கதைப்புத்தகம் படிப்பதும் நல்ல வழக்கம்தான். பிறருடைய வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களில் ஆழ்ந்து போகையில், நம்மையே மறந்துவிடுவோம்.

    நம்மை வாட்டுவதைப் பிறரிடம் பகிர்ந்துகொண்டால், சற்று நிம்மதி கிடைக்கும். ஆனால், ஓயாமல் தன் சோகக் கதையையே சொல்லிக்கொண்டிருப்போரைக் கண்டால் பிறர் அஞ்சி விலகும் அபாயம் உண்டு.

    `நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் எத்தனைபேர் இருக்கிறார்கள்!’ என்று சற்றே யோசித்தால், எதையும் ஏற்கும் நெஞ்சுரம் வரும்.

    நானாக இருந்தால்!

    ஒரு காரியத்தை எவ்வாறு செம்மையாகச் செய்யலாம் என்று, ஆரம்பத்திலேயே சிந்திக்க வேண்டுவது அவசியம்.

    நாம் ஒரு காரியத்தைச் செய்து முடித்தபின், அதைக் கேட்டு மற்றொருவர், `நானாக இருந்தால், இப்படிச் செய்திருப்பேன்,’ என்பார். அவர் உருப்படியாக எதையும் செய்திருக்க மாட்டார். ஆனால், முனைந்து செய்பவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பார்.

    அத்தகையவரை அலட்சியம் செய்ய வேண்டியதுதான். நாம் எப்படி யோசிக்கவேண்டும், அல்லது நடக்கவேண்டும் என்று பிறர் தீர்மானிப்பதை இம்மிபிசகாது ஏற்பது தோல்வியில்தான் முடியும்.

    கனவில் சுகம் காண்கிறவர்கள்

    கதை

    பாலன் ஒரு போட்டிக்குக் கதை எழுதி அனுப்பியிருந்தான்.

    கண்டிப்பாக, முதல் பரிசு தனக்குத்தான் என்ற நம்பிக்கை ஏற்பட, பரிசுத்தொகையில் என்னென்ன வாங்கவேண்டும் என்று பட்டியல் தயாரித்தான். அந்த இன்பக் கனவிலேயே ஓரிரு மாதங்கள் கழிந்தன.

    போட்டி முடிவு வந்தது — எதிர்பார்த்த பரிசுதான் வரவில்லை. முடிவு அவன் கையில் இல்லை என்று உணராததால் வந்த வினை!

    ஏமாற்றம் குடும்பத்தில் உள்ளவர்கள்மேல் ஆத்திரமாக மாறியது.

    நடப்பதற்குமுன் திட்டமிடுவானேன், ஏமாற்றத்தால் நொறுங்கிப்போவானேன்!

    ஓயாமல் சிந்திப்பவர்கள்:

    `இப்படி நடந்துவிட்டால்,’ என்ற அச்சம் கொண்டவர்கள்.

    `பிறர் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ!’ என்று குழம்புகிறவர்கள்.

    அவமானகரமாக, அல்லது மரியாதைக்குறைவாக, எப்போதோ நடந்த ஒன்றைப்பற்றியே எண்ணி எண்ணி ஆத்திரப்படுகிறவர்கள்.

    தான் செய்த தவற்றையே யோசித்து, `இப்படிச் செய்திருக்கலாமே!’ என்று நடந்து முடிந்ததை மாற்ற எண்ணுகிறவர்கள்.

    எங்கே ஆரம்பிப்பது?

    ஒரு காரியத்தைப் பற்றி அதிகமாக யோசித்து, `முடியாது. எதற்கு வீண் வம்பு!’ என்று கைவிடுவதற்குள், அதைச் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.

    ஒரு காரியத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வெளிவந்து பயமுறுத்தும்.

    ஒரு பெண் என்னிடம் கூறினாள், “ஆண்களும் தப்பு செய்வாங்கன்னு எழுதலாமான்னு தோணும். ஆனா, இதையெல்லாம் எழுதலாமா, கூடாதான்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்!” என்று.

    நல்லவேளை, நான் அப்படி எழுத ஆரம்பிக்கும்போது எந்தவிதமான யோசனையும் எழவில்லை. யோசித்துக் குழம்பியிருந்தால், நிம்மதியும் பறிபோயிருக்கும்.

    எழுதியபின், பெண்களின் பாராட்டு கிடைத்தது. ஆண்கள்தான் சிறிது கோபப்பட்டார்கள். ஆனால், தங்களுக்குள், `அவள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது,’ என்று அரைமனதாக ஒத்துக்கொண்டதாகக் கேள்வி!

    ஒரு மூத்த பத்திரிகையாளர், “நீங்க எழுதும்போதெல்லாம், `என்ன, இப்படி எழுதறாங்களே!’ன்னு இருக்கும். இப்போ, என் மகளுக்குக் கல்யாணமாகி, அவ புருஷன் அவளை எல்லாவிதத்திலும் கட்டுப்படுத்தறதைப் பாக்கறப்போதான் உண்மை புரியுது,” என்று என்னிடம் தெரிவித்தார், வருத்தத்துடன்.

    தன்னுடைய உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளாது, பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கலாம், அல்லது இருக்கவே கூடாது என்று எண்ணமிடும் ரகத்தைச் சேர்ந்தவர் அவர்.

    ஆக்ககரமாக ஏதாவது செய்பவர்கள் சிந்தனையிலேயே ஆழ்ந்துவிடுவதில்லை. யோசிப்பார்கள், ஆனால், ஓர் அளவோடு.

    என்னைப் பார்த்துச் சிலர் அதிசயப்பட்டுக் கேட்டு இருக்கிறார்கள், “நீ சிரித்துக்கொண்டே இருக்கிறாயே! உன் வாழ்வில் எந்தக் கஷ்டத்தையும் அனுபவித்து இருக்கமாட்டாய். இல்லையா?” என்று.

    எனக்கு லேசான சிரிப்புதான் வரும்.

    மனிதனாக அவதரிக்கும் கடவுளுக்குக்கூட கஷ்டம் உண்டே! நான் மட்டும் என்ன, விதிவிலக்கா?

    Share
  • குரு கிருபை | தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி

    குரு கிருபை | தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி

    தபோவனம் சத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றி, பூஜ்யஸ்ரீ முரளீதர சுவாமிகள் இயற்றிய ‘குரு கிருபை இல்லாமல் ஹரி கிருபை இல்லை’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். குருவருளும் திருவருளும் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நம்ம வீட்டுத் தக்காளித் தோட்டம்

    நம்ம வீட்டுத் தக்காளித் தோட்டம்

    நம்ம வீட்டுத் தக்காளித் தோட்டத்தில் எத்தனை வகையான தக்காளிகள் இருக்கின்றன என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 127 (வெண்ணீறு)

    சேக்கிழார் பாடல் நயம் – 127 (வெண்ணீறு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    போர்க்களம்  புகுந்த  அதிசூரன் ஏனாதி  நாத்தனாரின்  வாள்வீச்சின்  வலயத்தில் சிக்கினான். எவ்வாறோ  மறைந்து  வெளியேறித் தப்பித்தான். அன்று  இரவெல்லாம் சிந்தித்து ‘’நாம்  நம் நாட்டு வீரர்களைக் கொல்லும் வகையில் திரண்டு போர் புரியாமல், தனிஇடத்தில் சந்தித்து வாட்போர் புரியலாம்‘’ என்று செய்தி அனுப்பினான்.ஏனாதிநாதரும்‘’ அவ்வாறே  ஓரிடத்தில்  வாளுடன் போர் புரிவது  நல்லது‘’ என்றார்.  தம்முடன் இருந்த சுற்றத்தார்  அறியாவகையில் அந்த  இடத்தில் வாழும் கேடயமும் ஏந்தி ஏனாதி நாதர்  காத்து நின்றார்.  திருநீறு பூசிய அடியாரை, நாயனார் எவ்விடத்திலும் தீங்கு புரியார்  என்பதை  அறிந்து, என்றும் திருநீறு பூசி அறியாத  அதிசூரன்,  அன்று  திருநீறணிந்து போர்க்களத்துக்கு  வந்தான். அதனைச்  சேக்கிழார்,

    ‘’வெண் நீறு நெற்றி விரவப் புறம் பூசி,
    உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு,
    வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு,
    புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான்’’

    என்று பாடுகிறார்  இப்பாடலின் பொருள்:

    திருவெண்ணீற்றினை நெற்றி முழுதும் பொருந்தும்படி புறத்திற் பூசி, நெஞ்சினுள்ளே வஞ்சனையாகிய கறுப்பினையும் உடனே கொண்டு அழகிய

    சுடருடைய வாளினையும் மணிகளிழைத்த பலகையினையும் கைகளிற் கொண்டு, புண்ணியப்போர் வீரராகிய ஏனாதிநாதருக்குத் தான் சொல்லிவிட்ட அந்த இடத்திற் புகுந்தான்.

    விளக்கம்:

    திருநீறு என்பது  பாவம் அறுத்து   திருவருளைத்  தரும் புண்ணியம்   மிகுந்த  வீபூதியைக்  குறிக்கும். அதற்குரிய மேன்மையைக்  குறிக்காமல் இங்கே, வெண்  நீறு என்று குறித்தது, இங்கு அது இவனுக்குத் திருநீறு பூசிய பயன் தந்து பாவமறுக்காமல் அதற்குமாறாகப் பாதகப்பயனே தந்து, வெண்ணீறு  ஆகும் அளவில் மட்டும் நீன்ற தென்பார்,  ‘திருநீறு’  என்னாது வெண்ணீறு என்றார். இங்கு இவன்பால் திருநீற்றின் நிறமாத்திரம் வெண்மையாய் நின்ற தென்பார் பின்னர், கறுப்புமுடன் கொண்டென்று உடன் சேர்த்துக் கூறியதும் காண்க.

    நெற்றிவிரவப் புறம்பூசி – தாங்கிய நெற்றியினார் என  முன் பாட்டில்  கூறிய பொருள் இங்கு நினைவு கூர்க. “பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்” என்று திருக்கூட்டச்சிறப்பிற் கூறியபடிக்கில்லாமல், 1. பொய்யாக வேடமிடுதற்காக  2. நீறு புறத்தேயும், 3. அதற்கு மாறாகக் கறுப்பு உள்ளத்தேயும் இருந்தது என்று குறிக்கப் புறம் பூசி என்றும், கறுப்பு முடன் கொண்டு என்றும் கூறினார்.

    இது அவனது நான்காவது வஞ்சனை. கறுப்பாகிய வஞ்சம், கோபம் முதலிய தீக்குணங்கள் தாமதகுணத்தின்பாற்பட்டவை. தாமதத்தின் நிறம் கறுப்பு என்ப. நெற்றி விரவ நீறுபூசுதல் நல்லசெயலாக விதிக்கப்பட்டது. அதனைக் குற்ற மென்று கூறலாகாது; குற்றம் வேறாக அவன் உள்ளத்தில் நின்ற தென்று எச்சரிப்பார் நெஞ்சில் கறுப்பும்  உடன் கொண்டென்று உடன் கூறினார். திருநீற்றுப் பொலிவுடன் இது சேர்த்தெண்ணத் தகாதென்பார் இழிவு சிறப்பும்மை தந்து கறுப்பும் என வோதினார்.

    வண்ணச்சுடர்வாள் – மணிப்பலகை என்பன  தனிப் பொருளுடையன; நாயனார் ஏந்தியவற்றைச் சுடர்வாள் – பொற்பலகை  என்ற ஆசிரியர், இங்கு மாற்றலனாகிய பாதகனால் ஏந்தப்பட்டுப் பாதகத்துக்குத் துணையாய் நின்ற இப்படைகளை இழிவாகக்  கருதாமல் இவ்வாறு அடைமொழிகள் தந்து சிறப்பித்தது  ஏனெனில், பகைவன் ஏந்தியவை என்று காணாது,-  “அண்டர்பிரான் சீரடியா ராயினார்”  ஒருவர் ஏந்திய படைகளாக நாயனார் இவற்றை நற்பாவனையிற் காண்டலாலும்,- இவை அவர்தந் திருமேனியுந் தீண்டும் பேறு பெறுதலாலும், – “பற்றலர்தம்  கைவாளால்  பாச மறுத்தருளி”  என்றபடி இவை இறைவனது திருவருட் சொரூபமாகிப் பாசமறுக்கும் கருவிகள்  ஆயினமையாலும்,  இவ்வாறு சிறப்பித்தார் என்க. அன்றியும் அவனது தீச்செயலுக்குக் காரணமாய் நின்றது அவனது வஞ்சகக் கறுப்பேயன்றி வாளும் பலகையுமன்று என்பதும் குறிப்பு.

    புண்ணியப் போர்வீரர் – என்ற தொடர்,  அதிசூரன் போல வஞ்சனை நெறியாகிய மறநெறியாற் போர் புரியாது அறநெறியாற் போர் புரிபவர் என்பார் இவ்வாறு கூறினார். புண்ணியம் என்னும் அடைமொழி பாவப்போரை நீக்குதலின் இது   பிறிதினியைபு நீக்கிய விசேடணம்.

    சொன்ன இடம் – முன்னர் ‘வேறிடம்’, ‘அக்களம்’ என்றபடி பிறர்கண்ணுக்குப் புலப்படாது வஞ்சிக்க ஏற்றதாய் அவன்தானே குறித்த இடம்!  அவன்தன் வஞ்சகத்தை முற்றுவித்தற்கு இந்த மறைவிடத்தை ஒருபெருஞ் சாதனமாகக் கொண்டான் என்பது உணரத்தக்கது.

    புகுந்தான் என்ற சொல்,  அவர் தனிநின்றாராக,  இவன் எண்ணியபடி வலிந்து புகுந்து மூண்டு மறம்பூண்டான் என்பதை  உணர்த்தியது.

    Share
  • கதவைத் தட்டும் மயில்

    கதவைத் தட்டும் மயில்

    திருப்பூரில் வாழும் இரா.சுகுணாதேவி (வழக்குரைஞர்), தன் வீட்டைச் சுற்றி வசிக்கும் மயில்களுக்கும் பறவைகளுக்கும் உணவளித்துக் காத்து வருகிறார். காலையில் அவர் வீட்டுக் கதவை யாரோ தொடர்ந்து தட்டவே, யார் என்று பார்த்தால், இந்த மயிலார். வாசலில் வைத்த அரிசியும் நீரும் தீர்ந்துவிட்டதாம். கதவைத் தட்டிக் கேட்கிறார். இப்படியில்ல, உரிமையாக் கேட்கணும்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எக்செல் மூலமாக வரவு, செலவு, வட்டி கணக்கிடுவது எப்படி?

    எக்செல் மூலமாக வரவு, செலவு, வட்டி கணக்கிடுவது எப்படி?

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையைக் கணக்கிடுவது எப்படி? காப்பீட்டுப் பாலிசி ஒன்றின் உண்மையான வளர்ச்சி விகிதத்தை அறிவது எப்படி? தொடர் முதலீட்டின் இறுதியில் பெறப் போகும் தொகையைக் கண்டறிவது எப்படி? வீட்டு பட்ஜெட்டை நுணுக்கமாகத் தயாரிப்பது எப்படி? Goal Seek தெரிவு மூலமாக நம் இலக்கை எட்டுவது எப்படி? நிதி நிறுவனங்கள் காட்டும் வட்டிக் கணக்கீட்டைச் சரிபார்ப்பது எப்படி? மைக்ரோசாப்ட் எக்செல் தரும் வாய்ப்புகள் என்னென்ன? இதோ வழிகாட்டுகிறார், ஸ்ரீராம் நாராயணன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 13

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 13

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    நன்னூலில் உவமங்கள் – 2

    முன்னுரை

    உள்ளத்தில் மென்மையும் முகத்தில் மலர்ச்சியும் அறிவில் அடர்த்தியும் பண்பில் நடுவுநிலையும் கொண்டிருப்பதே நல்லாசிரியர் ஒருவருக்கு இருக்க வேண்டிய இயல்பு என்பதற்கு மலர், மலை, துலாக்கோல் முதலியவற்றை உவமமாகச் சொல்லிக் காட்டிய பவணந்தியார், அல்லாசிரியருக்கு அவற்றினும் முரண்பட்ட பொருட்களை உவமமாக்கியிருக்கிறார். ‘இனிய கனி’ என்பதற்கு ‘ஔவை உண்ட நெல்லிக்கனி’ என்றும் ‘இன்னாத காய்’ என்பதற்குக் ‘காஞ்சிரங்காய் எட்டிக்காய்’ என்றும் பரிமேலழகர் எழுதிய முரணுரையைப் போன்றது இது. கற்பித்தல் பணி என்பது கருத்துக்களின் நிரலான வெளிப்பாடு. குழப்பத்தினின்றும் நீங்கித் தெளிவை நோக்கி நகர்வது. கற்றல் என்பது எளிதில் பெறக்கூடியது. ஏக்கத்துடன் கூடிய முயற்சியின் பயன். இந்தப் பண்புகள் இல்லாதவர்களையே பவணந்தியார் ஆசிரியர் அல்லாதவர் என்கிறார். அத்தகையோரை அடையாளப்படுத்தும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    கருத்துக்களின் வெளிப்பாடும் கழற்சிக்காய் குடமும்

    கழற்சிக்காய் என்பது ‘கழிச்சிக்கொட்டை’ என்றும் ‘கழிச்சிக்காய்’ என்றும்  பொதுவாக வழங்கப்படுவது. அது அக்காலப் பெண்களின் விளையாட்டுக் கருவி. பல்லாங்குழியில் புளியங்கொட்டை, சோழியைப் போல.

    “கைபுனை குறுந்தொடி தந்தப் பைப்பய
    முத்த வார்மணல் கொற்கழங்கு ஆடும்”

    என்பது பெரும்பாணாற்றுப்படை. விளையாட்டுக் காய்களை விளையாட்டு முடிந்ததும் ஒரு சிறிய கூடை அல்லது குடத்தில் இட்டு நிரப்பி வைத்துப், பிறகு தேவைப்படுகிறபோது கொட்டிப் பயன்படுத்திக் கொள்வது நடப்பியல். இந்த நிகழ்ச்சியைப் பவணந்தியார் உவமமாக்கியிருக்கிறார்.

    “பெய்த முறை அன்றிப் பிறழ்வுடன்தரும்
    செய்தி, கழற்பெய் குடத்தின் சீரே!”

    இந்த நூற்பாவில் கழற்பெய் குடம் என்பது பற்றி மேலே கண்டோம். ‘செய்தி’ என்றால் செயல். ‘ஒருவன் செய்தி கொன்றோர்க்கு’ என்றவிடத்துச் செய்தி என்பது ‘செயல்’ என்னும் பொருள்படுவது காண்க. விளையாட்டு முடிந்து குடத்துக்குள் நிரைக்கும்முறை வேறு அதனை அடுத்த விளையாட்டிற்காகக் கொட்டும்போது நிகழும் முறை வேறு. நிரப்புகிற நிரலில் கொட்டுகிற நிரல் அமையாது. முரணாகும். குழப்பமாகும். எது முன்பின் என்பது தெரியாது. இந்தக் குழப்பநிலையைத்தான் பவணந்தியார் உவமமாக்கியிருக்கிறார். கழல் என்பது அக்காலத்தில் பெரும்புழக்கத்திற்கு ஆளாகியிருந்ததால் அது நிறைந்த குடத்தை உவமமாக்கியிருக்கிறார். கழல் உவமமாகாது. கழலால் நிரப்பப்பட்ட ஆசிரியரே உவமமாவார். கற்பிக்கப்படும் பாடங்கள் பல்வகையாக உள்ளத்துக்குள் இருந்தாலும் அவற்றை நிரலாக ஒவ்வொன்றாக விளங்கும்படிச் சொல்லுவதே கற்பித்தல் பணி. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாது அங்கொன்றும் இங்கொன்றுமாகப், பின்னும் முன்னுமாகக் கற்பிப்பது மாணவனுக்குப் பயன் தராது. அத்தகைய கற்பித்தல் முறையைக் கொண்டவன் எந்நாளும் ஆசிரியர் என்னும் தகுதிக்கு உரியவன் ஆகமாட்டான் என்பது கருத்து. இங்கே கழற்சிக்காய் உவமமன்று. அது பெய்யப்பட்டிருந்த குடமும் அதன் தலைகீழ்வினையுமே உவமம் என்பது அறிக.

    மடற்பனையும் ஆசிரியரும்

    ‘தாழையெல்லாம் மடற்கத்திச் சுழற்றவைத்து’ என்பார் பாவேந்தர். மடலை உடைய இரண்டு தாவரங்களுள் ஒன்று பனை. மற்றொன்று நெய்தல்நிலத் தாவரமான தாழம்பூ. தாழம்பூ மடலின் இருபுறமும் கூரான முட்கள் கத்திபோலக் காணப்படும். மடற்பனையின் புறத்தில் அதன் மட்டையெல்லாம் கத்திபோலக் காணப்படும். அவற்றை ஒதுக்கி மேலே ஏறிப் பழத்தைப் பறிக்க இயலாது. கடினம். பனம்பழம் சுவையானது ஆயினும் பெறவியலாத நிலையில் அது எப்போது விழுகிறதோ அப்போது காத்திருந்து பெற்றுச் சுவைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    “தானே தரக்கொளின் அல்லது தன்பால்
    மேவிக் கொளக்கொடா இடத்தது மடற்பனை”

    என்னும் நூற்பாவில் மடற்பனையின் இயல்பை விளக்கிக் காட்டுகிறார் பவணந்தியார். ‘எளிவந்த பிரான்’ என்பது இறைவனுக்கான புகழ்நாமங்களில் ஒன்று. ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்பது திருவாசகம். எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதால் அடியவனைத் தேடி இறைவன் அருள்பாலிப்பதைப் போல் மாணவனுக்கு ஓடிவந்து அருள் பாலிப்பதே நல்லறம். மாறாக தன்னை அண்ட முடியாத இடத்தில் வைத்துக் கொண்டு தான் எப்போது கொடுக்க இயலுமோ அப்போதுதான் மாணவன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் மனநிலை ஆசிரியன் தகுதிக்கு முரணானது.

    பருத்திக் குடுக்கையும் ஆசிரியரும்

    கல்வி கரையில என்றதால் அது கடல் என்பது பெறப்படும். யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைப்பதுபோல அளவற்ற கல்விச் செல்வத்தை ஆசிரியர் ஒருவர் தன்னுள் பொதிந்து வைக்கிறார். பொதிந்து வைக்கப்பட்ட அச்செல்வம் அவருக்கானது அன்று. பிறருக்கானது. அதனால்தான் கற்பித்தலை ‘ஈதல்’ என்றார் பவணந்தியார். அவரிடம் கற்பதை ‘உடையார் முன் இல்லார் இரப்பதுபோல் கற்க வேண்டும்’ என்றார் திருவள்ளுவர். இருப்பதைக் கொடுக்கின்ற இந்த நிகழ்வு தடையின்றி நிகழவேண்டுமாயின் உள்ளேயிருப்பதும் ஊறுவதும் தடையின்றி வெளிவரவேண்டும். ‘குடுக்கை’ என்றாலும் ‘குண்டிகை’ என்றாலும் ஒன்று. பருத்தியைக் குடுக்கையுள் வைத்துத் திணிப்பது ஒரு செயல். திணித்ததை வெளியில் எடுத்துத் தர எண்ணுகிறபோது ஒட்டுமொத்தமாகவோ சரளமாகவோ வெளியே வராது. கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்துத்தான் தரவேண்டி வரும்.

    “அரிதிற் பெயக்கொண்டு அப்பொருள் தான் பிறர்க்கு
    எளிது ஈவில்லது பருத்திக் குண்டிகை”

    என்னும் நூற்பாவில் உள்ளே அரிதாகப் பெய்யப்படுகிறபொருளை எளிதாகத் தர இயலாத குண்டிகை விளக்கப்படுகிறது. இந்தக் குண்டிகையன்ன ஆசிரியர் தான் கற்ற பொருளைத் தன்னிடம் இரந்த மாணவனுக்கு எளிதில் தர இயலாதாம்.  கொடுப்பதற்கென்றே சேர்த்த கல்வியை வைத்துப் பூட்டிக் கொள்கிற அல்லாசிரியர் இயல்புக்குப் பருத்திக் குணடிகையை உவமமாகச் சொன்னது பொருத்தமானதுதானே!

    தென்னையுள்ளமும் ஆசிரியரும்

    ‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்பது தமிழகத்துப் பழமொழி. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்க வேண்டும்’ என்னும் முரணும் தமிழ் நெறியே. ‘உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து’ என்பது மற்றொரு வரைவிலக்கணம். இவற்றையெல்லாம் தொகுத்துச் சிந்தித்தால் ‘கற்றல்’ என்பது பணிவின் வெளிப்பாடு என்பதும் இரத்தலுக்கு இணையானது என்பதும் ‘கற்பித்தல்’ ‘அறச்செயல்’ என்பதும் கல்வி ஒரு செல்வம் என்பதும்  பெறப்படும். ஆசிரியர் இருக்கும் இடந்தேடி மாணவர் சென்று கற்ற காலம் ஒன்று. மாணவர்கள் கூடியிருக்கும் இடத்திற்கு ஆசிரியர் வந்திருந்து கற்பித்துவிட்டுச் செல்லும் காலம் ஒன்று. எந்தக் காலமாயினும் கற்றல் என்பது  தொழுது பெறுவதே. ‘தொழுபவர்க்கே கல்வி’ என்றும் கருதமுடியும். ஆனால் தொழுபவனை விட்டுத் தொழாதவனுக்குக் கல்வி கொடுப்பதும் நிகழ்கிறது. இத்தகைய இயல்புடைய ஆசிரியருக்குச் சொல்லப்பட்டிருக்கும் உவமமே ‘முடத்தெங்கு’ என்பதாகும். பெரும்பாலும் தென்னைக்கும் பனைக்கும் உள்ள அடிப்படை நிற்கின்ற பாகையில்தான அமையும். பனை நேராக நிற்கும். தென்னை நேராக நிற்காது. இந்த வளைவு தான் வேர்பிடித்திருக்கும் இடத்தை மறந்து அடுத்தவர் இடத்தில் தேங்காய்களைப் போடும் அளவிற்கு இருக்கும். வளைந்த இந்தத் தென்னைக்குத்தான் முடத்தெங்கு என்று பெயர்.

    “பல்வகை உதவி வழிபடு பண்பின்
    அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடத் தெங்கே”

    பாவேந்தர் பாரதிதாசன் ‘தென்னையுள்ளம்’ என்று இதனை அழைப்பார். அவர் வேறொரு சிந்தனைக்கு அதனை உவமமாக்குவார். தனது நாட்டுச் சுதந்திரத்தால் பிறர் நாட்டைத் துன்புறுத்தும் ஆட்சியாளர்களுக்கு அந்த உவமத்தை அவர் சொல்வார். எனவே முடத்தெங்கினைப் போலப் பணிந்து, உதவியவனுக்குப் பலனளிக்காது,  அப்பண்புகள் அறவே அற்ற சற்றும் தொடர்பற்ற ஒருவனுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியன் ‘முடத்தெங்கு’க்கு ஒப்பாவான் என்பது கருத்து.

    நிறைவுரை

    நல்லாசிரியருடைய பண்புகளைப் பற்றிக் கூறும்போது பண்புகளை முதலில் கூறி, உவமங்களைப் பின்னர் தொகுத்துக் கூறியது போலவே,

    “மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும்
    அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்
    கழற்குடம், மடற்பனை, பருத்திக் குண்டிகை
    முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும்
    உடையோர் இலர் ஆசிரியரா குதலே!”

    என்ற நூற்பாவிலும் அல்லாசிரியர் பண்புகளை முன்னர்க்கூறி, உவமங்களால் ஏனைய பண்புகளையும் உடன் கூறியிருக்கிறார். உவமங்கள் நான்கும் இயல்பாக அமையக் கூடாதவை என்பதை உணரமுடியும். “மொழிகுணம் இன்மையும்  இழிகுண இயல்பும் “அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்” என்னும் இயல்புகள் ஆசிரியர் பணிக்கு நுழைவுத் தேர்வு எழுதவே தகுதியற்றவை. நான்கு உவமங்களையும் கற்பிக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர் ஒருவருக்கு இருக்கக் கூடாத முரண்களுக்காக்கியிருக்கிறார் பவணந்தியார். இதனை ‘முரண் கொள் சிந்தை’ என்னும் தொடர் உணர்த்தக் கூடும். நல்லாசிரியர், அல்லாசிரியர் போலவே நன்மாணாக்கர், அல்மாணாக்கர் பற்றிய உவமங்கள் தொடர்ந்து ஆராயப்படும்.

    (தொடரும்…)

    Share
  • சைனா, புதிய விண்வெளி நிலையம் அமைக்க முதற்கட்ட அரங்கை ஏவியது

    சைனா, புதிய விண்வெளி நிலையம் அமைக்க முதற்கட்ட அரங்கை ஏவியது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    Countdown starts for China's space station in 2020 - People's Daily Online

    சைனாவின் புதிய விண்வெளி நிலையத்தின் முக்கிய அரங்கம்

    சைனாவின் இரண்டாம்
    விண்ணுளவி
    சந்திரனைச் சுற்றியது !
    மூன்றாம் விண்கப்பல்
    முதலாக நிலவில் இறக்கிய
    தளவுளவி பின்புறம் சோதிக்கிறது !
    அதிலிருந்து  நகர்ந்த தளவூர்தி
    புதிய விண்வெளி நிலையம் இப்போது.
    சைனாவின் இரு தீரர்
    அண்டவெளிப் பயணம் செய்து
    விண்வெளியில் நீந்தி
    வெற்றி மாலை சூடி
    மண்மீது கால் வைத்தார்
    மறுபடியும் !
    அமெரிக்காவின்
    விண்வெளி வீரர்கள் போல்
    விண்சிமிழில் ஏறி
    வெண்ணிலவில் தடம் வைக்க
    பயிற்சிகள் நடக்கும் !
    நிலவைச் சுற்றி வந்து
    மனிதரில்லா விண்சிமிழ் ஒன்று
    புவிக்கு மீண்டது .
    இன்னும்
    ஐந்தாறு ஆண்டுகளில்
    சாதனையாகச் சைனத் தீரர்
    பாதம் பதிப்பர்
    நிலவின் களத்திலே
    நீல் ஆர்ம்ஸ்டிராங் போல !

    ++++++++++++++++++++

    China's new space station will need 10 more launches to complete | Space

    *****************************************************************

    சைனாவின் புதிய விண்வெளி நிலைய அமைப்பு

    2021 ஏப்ரல் 29 இல் சைனாவின் விண்வெளி நிபுணர் ராக்கெட் ஏவுகணையில் தமது புதிய விண்வெளி நிலையத்தின் முதற் கட்ட முக்கிய அரங்கை ஏவிப் பூமியைத் தணிந்த சுற்று வீதியில் [400 – 450] கி.மீ. [240 -270 மைல்] உயரத்தில் சுற்றி வருகிறது. இதுபோல் இன்னும் 11 முறை ஏவுகணை மூலம் மற்ற அரங்குச் சாதனங்களை அனுப்பி, முழு நிலையமும் அமைக்கப் படும். ரஷ்யா, அமெரிக்கா, ஈரோப், ஜப்பான் ஆகிய நாடுகள் இயக்கிப் பூமியைச் சுற்றி வரும் விண்வெளி நிலையம் போல் இது சைனா இயக்கப் போகும் தனிப்பட்ட இரண்டாம் நிலையம். 90 டன் எடை யுள்ளது. இரண்டு சூரிய தட்டுகள் மின்சக்தி அளிக்கும். பல பில்லியன் டாலர் செலவில் கட்டும் இந்த நிலையத்தின் பெயர் “வான மாளிகை” [ Heavenly Palace]. நிலைய முழு அமைப்பு 2022 இல் முடிந்து விண்வெளி விமானிகள் பயிற்சி பெறுவார். முக்கிய நிலைய அரங்கு 50 கி,மீ. கொள்ளளவு இட வசதி உள்ளது. இதன் ஆயுள் 15 வருடம் . நிலை யத்தில் பயிற்சி பெறும் சைன விண்வெளி நிபுணர் நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும் பயணம் செய்வார்.

    ****************************************************************

    சைனா அனுப்பிய முதல் சந்திரத் தளவூர்தி நிலவில் தடம் வைத்து பின்புறத்தில் உளவு செய்கிறது

     

    Chinese Moon Rover 2013

    http://www.space.com/23792-china-moon-probe-off-and-flying-video.html

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aYwAdHJjiAY

    Yutu is movingFirst Lunar image 2013

    “ராக்கெட் என்ன ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவிட முடியாது.”

    மா சேதுங் (1957) – சைனாவின் விடுதலைப் பிதா (Mao Tse-Tung, China Liberator) (1893-1976)

    “சைனா தேசத்தின் நிலவுத் தேடல் திட்டங்கள் ரஷ்ய, அமெரிக்கச் சாதனைகளுக்கு 40 ஆண்டுகள் பிந்தி இருப்பினும், மனித இனத்தின் விண்வெளித் தேடலில் அந்த முயற்சிகள் தேசப் பொறுப்புக்கு தேவையானவை.”

    கியான் வைபிங் (சைனாவின் இரண்டாம் விண்ணுளவி பிரதம டிசைனர்)

    Chinese Moon Rover

    “பூமியில் உள்ள எரிசக்தி ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது.  இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3.  உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.”  [கதிரியக்கம் அற்ற அணுப்பிணைவு மின்சக்தி உலைக்கு [Fusion Power Reactor] எரிக்கருவாக ஹீலியம்-3 மூலக்கூறு பயன்படுகிறது.]

    ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) Head of First Phase of Lunar Exploration

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் வேண்டும்.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு ஏராளமாய்க் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

    Launch and Landing

    ஆசிய முதல் சாதனையாக நிலவில் இறங்கிய சைனாவின் சந்திரத் தளவூர்தி

    2013 ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சைன விண்கப்பல் செங்கி-3 [Chang’e -3]  சந்திரனை நோக்கிப் பயணம் செய்து, நிலவில் தளவுளவியை மெதுவாய் இறங்கித் தடம் வைத்தது.  பிறகு அந்த நிலைத்த சாதனத்திலிருந்து, நகரும் ஆறு சக்கர தளவூர்தி ஒன்று கிளம்பி உளவ ஆரம்பித்தது.   அது முதன்முதல் சைனா செய்த  ஆசிய தீரச் சாதனையாக உலக நாடுகள் கருதுகின்றன.   இந்த அரிய சாதனையைப் புரிந்த முதலிரண்டு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யாவுக்குப் பிறகு, 37 ஆண்டுகள் கழிந்து சைனா வெற்றிகரமாகச் செய்த மூன்றாவது நாடாக உலகுக்குக் காட்டியுள்ளது.  இந்த விண்வெளித் தேரைச் [Chang’e -3, செங்கி -3] சுமந்து நிலவை நோக்கிப் பயணம் செய்ய வைத்தது  சைன ஏவுகணை  மார்ச் -3பி [March -3B].   ஏவு கணை ஏவி 12 நாட்கள் கழித்து,  விண்ணூர்தி சந்திர தளத்தில் இறங்கியது.  பத்தாண்டு முன்பு முதன்முறையாகச் சைனா தன் விண்வெளித் தீரரை அண்டவெளியில் நீந்தச் செய்து பெயர் பெற்ற பிறகு இந்த அரிய சாதனையை வெகு சிறப்பாகப் புரிந்துள்ளது.  சைனா 2020 ஆண்டுக்குள் தன் விண்வெளித் தீரர் நிலவில் கால் வைக்கும் எதிர்காலத்  திட்டத்திற்கு இந்த வெற்றி அடிகோலியுள்ளது.

    Land Prints on the Moon

    சைனாவின் சந்திரத் தளவுளவியும், தளவூர்தியும் வந்திறங்கிய பகுதி, 250 மைல் [400 கி.மீ.] அகலமான ஒரு மட்டத் தளப்பகுதி.   அதன் லாட்டின் பெயர் :  ஸைனஸ் இரிடம் [Latin Name, Sinus Iridum].  அதன் பொருள் : வானவில் வளைகுடா [Bay of Rainbows].  சைனத் தளவுளவி, தளவூர்தி இரண்டும் ஒன்றை ஒன்றைப் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பின.  தளவுளவி நிலவில் ஓராண்டு ஆய்வு செய்யும்.  தளவூர்தி மூன்று மாதங்கள் நகர்ந்து சென்று நிலவில் பணிபுரியும்.  தளவூர்தியின் நகர்ச்சி வேகம் :  மணிக்கு 200 மீ. தூரம் [660 அடி] பயணம் செய்யும்.  30 டிகிரிச் சரிவுத் தளத்தில் ஏறி இறங்க முடியும் தகுதியுள்ளது.

    செங்கி -3 குறிப்பணிப் பெயர் சந்திரத் தேவதைக்கு இடப்பட்ட சைன இதிகாசப் பெயர். அதுபோல் தளவூர்தியின் பெயர் :  யூடூ அல்லது . எளிய முயல் [Yutu or Jade Rabbit] . சைனா அனுப்பியுள்ள செங்கி -3  ஆறு சக்கரத் தளவூர்தி கடைசியில் சென்ற ரஷ்ய தளவூர்தியை விட மேம்பட்டது.   சைனத் தளவூர்தியில் முற்போக்கான தள ஊடுருவு ரேடார் [Ground Penetrating Radar] உள்ளது.   அது நிலவின் மண்ணையும், மேற் தட்டையும் ஆராயும் தகுதியுடையது.  யூடூ முயலின் எடை 120 கி.கி. [260 பவுண்டு] .  யூடூ தேரை இயக்குவது சூரிய மின்சக்தி தரும் தட்டுகள்.  அதனுள் புளுடோனியம் -238 கதிரியக்க மூலகம் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.   அதன் வெப்பம் தளவூர்தியை இரவுக் குளிரில் சூடாக வைத்திருக்க  உதவும்.

    Yutu Rover

    சந்திரனை நோக்கிச் சைனா ஏவும் இரண்டாவது விண்ணுளவி

    2010 அக்டோபர் முதல் தேதி ஸிசாங் துணைக்கோள் ஏவு தளத்திலிருந்து (Xichang Satellite Launch Centre – XSLC) சைனாவின் “செங்கி -2” (Chang’e -2) என்னும் தனது இரண்டாவது விண்ணுளவியைச் சந்திரனை நோக்கி “நீண்ட மார்ச் CZ-3C” (Long-March CZ-3C) ராக்கெட்டில் ஏவியுள்ளது.  செங்கி -2 மிகத் தணிவாக 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் 6 மாதங்கள் நிலவைச் சுற்றிவந்து தள ஆராய்ச்சிகள் நடத்தும்.  முதலில் ஏவிய சந்திர விண்ணுளவி “செங்கி -1” 2007 அக்டோபரில் பயணத்தைத் துவக்கி 16 மாதங்கள் நிலவைச் சுற்றி முடிவில் தளத்தில் விழுந்து நொறுங்கியது.  வடிவத்தில் செங்கி-2 முதலில் பயணம் செய்த சாங்கி -1 விண்ணுளவியைப் போன்றதே !  செங்கி -1 நிலவை 120 மைல் (200 கி..மீ) உயரத்தில் சுற்றி வந்தது.  செங்கி -2 இன் முக்கியப் பணி : நிலவிலும் நிலவுக்கு அப்பாலும் சென்று புதிய விண்வெளிப் பயண நுணுக்கங்களைச் சோதிப்பது.  அடுத்து வரப் போகும் செங்கி -3 & செங்கி -4 விண்ணுளவிகள் இறக்கும் தளவூர்திகள் ஊர்ந்து நகரும் இடங்களைத் தீர்மானிப்பது.  தளங்களின் படங்களை புதிய காமிராக்கள் மூலம் கூர்ந்து விளக்கமாகக் காண்பது.  தற்போது செங்கி-2 சந்திரனை நெருங்கி 60 மைல் (100 கி.மீ.) உயரத்தில் அதனைச் சுற்ற ஆரம்பிக்கும்.  குறிப்பணித் திட்டப்படி சில தினங்களில் விண்ணுளவி மிகத் தணிவான 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் சுற்றத் துவங்கிச் சந்திர தளத்தைக் கூர்ந்து உளவு செய்யும்.

    இந்தியாவும் சைனாவும் 21 ஆம் நூற்றாண்டில் நிலவை நோக்கித் தேடிப் போவதின் உள் நோக்கம் ஹீலியம் -3 எரிசக்தியே. “பூமியில் உள்ள ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது.  இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3.  உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.” என்று ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) (Head of First Phase of Lunar Exploration) கூறுகிறார்.  அணுப் பிணைவு முறையில் மின்சக்தி உண்டாக்கி னால் அமெரிக்காவுக்கு ஓராண்டுத் தேவை 25 டன் ஹீலியம் -3 !  அதாவது பல்லாயிரம் ஆண்டு உலக எரிசக்தி தேவையை நிலவின் ஹீலியம் -3 வாயு பூர்த்தி செய்ய முடியும்.

    Yutu Moon Rover

    இரண்டாம் நிலவுப் பயணத் திட்டத்தின் வேறுபாடுகள்

    துணைக்கோளைத் தூக்கிச் சென்ற ராக்கெட், விண்ணுளவியை “நிலவைச் சுற்றும் மாற்றுப் பாதையில்” (Trans-Lunar Orbit) விட்டதும் அதன் சூரியத் தட்டுகள் விரிந்து மின்சக்தியை அளித்தன.  பூமியைச் சுற்றும் அப்பாதையின் மிகை நீளம் (Apogee) : 230,000 மைல் (380,000 கி.மீ.)  குறு நீளம் (Perigee) 120 மைல் (200 கி.மீ.)  இந்தப் பாதையில் விண்ணுளவி சென்று 5 நாட்களில் நிலவை அண்டிச் சுற்ற முடியும்.  முதலில் நிலவுக்குப் பயணம் செய்த சாங்கி -1 நிலவை நெருங்க 12 நாட்கள் எடுத்தன.  சாங்கி -2 காமிராவின் கூர்மை நோக்குத் திறன் : 33 அடி (10 மீடர்).  சாங்கி -1 கூர்மை நோக்குத் திறன் : 400 அடி (120 மீடர்).  180 அடி (54 மீடர்) உயரமுள்ள ராக்கெட் 345 டன் தூக்கு எடைத் தகுதி உள்ளது.  ராக்கெட் சுற்றுப் பாதையில் இடும் எடைத் தகுதி : 4 டன். விண்ணுளவியின் எடை : 2.5 டன்.  விண்ணுளவிக்கு இட்ட பெயரான “செங்கி” என்பது சைனாவின் இதிகாச நிலவுக் கடவுள் !


    சைனாவின் இரண்டாம் விண்ணுளவி வெண்ணிலவை 6 மாதங்கள் சுற்றி 2013 இல் ஏவப் போகும் சாங்கி -3 ஒரு தளவுளவியோடு இறங்கப் போவதற்கு வேண்டிய தகவலைச் சேமிக்கும்.  “சைனா வின் சாங்கி -2 துணைக்கோள் சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கும் பொறி நுணுக்கத்தையும், சந்திரனுக்கு அப்பால் செல்லும் பயண அனுபவத்தையும் பெற முனையும்,  விண்ணுளவி விரைவாய்ச் செல்லும் ! நிலவை மிகவும் நெருங்கி தணிவுப் பாதையில் சுற்றிவந்து தெளிவாக ஆராயும்.” என்று சைனாவின் சந்திரச் சுற்றியின் பிரதம டிசைன் அதிபர், உவு வைரன் (Wu Weiren, Chief Designer, China’s Lunar Orbiter Project) கூறினார்.  இந்த இரண்டாம் சாங்கி நிலவுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு சுமார் 134 மில்லியன் டாலர் (2010 சைன நாணய மதிப்பு 900 மில்லியன் யுவான்).

    இதுவரை சைனா சாதித்த விண்வெளிச் சாதனைகள்

    1957 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஸ்புட்னிக் விண்சிமிழை அண்டவெளியில் முதன் முதல் ஏவி உலகத்தாரைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது.  அது முதல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் விண்வெளிச் சாதனைப் போட்டிகள் அடுத்தடுத்துத் தொடுத்தன.  அமெரிக் காவின் முதல் துணைக்கோள் 1958 இல் விண்வெளியில் ஏவப்பட்டது ! இரண்டு வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன !  1969 ஆண்டு ஜூலை 20 இல் அமெரிக்க விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் வெண்ணிலவில் தடம் வைத்து 20 ஆம் நூற்றாண்டின் அற்புதச் சாதனையாகச் செய்து காட்டினார். அதற்குப் பிறகு 1972 வரை 5 முறை சென்று அமெரிக்க விண்வெளி வீரர் நிலவில் நடந்து தளவூர்தியிலும் சென்று தகவல் சேமித்தார்.

    அண்டவெளித் தேடலில் ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்கீட்டுக்குப் பிறகுச் சைனா வெகு தாமதமாக முனைந்து விண்வெளிப் பயணங்களைத் துவங்கியது.  1958 ஆம் ஆண்டில் சைனா தனது விண்வெளி ஏவுகணைத் தளத்தைக் கோபி பாலை வனத்தில் நிறுவியது.  சைனா முதல் துணைக்கோளை அண்டவெளியில் வெற்றிகர மாக 1970 இல் ஏவியது.  1990-2002 ஆண்டுகளில் சைனா “செங்கி I, II, III & IV” (Chang’e -1, 2, 3, & 4) விண்சிமிழ் பொறித்துறை நுணுக்க விருத்தியை (Shenzhou I to IV Spacecraft Developments) மேற்கொண்டிருந்தது.

    2003 அக்டோபரில் சைனா முதல் மனித விண்சிமிழ்ப் பயணக் குறிப்பணியை (Manned Space Mission) மேற்கொண்டு செங்சோவ் -5 மூலம் (Shenzhou V) வெற்றிகரமாகச் செய்து உலகை வியக்க வைத்தது !  இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் செங்சோவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி செங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது !  2008 செப்டம்பரில் மூவர் அமர்ந்த விண்சிமிழை முதன்முதல் ஏவி சைன விண்வெளி விமானி அண்டவெளியில் 20 நிமிடங்கள் நீச்சல் புரிந்தது ஆசியா வின் முதல் விண்வெளி மைல் கல்லாக ஓங்கி நிற்கிறது.

    விண்வெளி நிலையம் அமைக்கச் சைனாவின் திட்டம்

    1998 இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கண்காணித்துப் பராமரித்து வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தை (International Space Station) அமைத்துப் பூஜிய ஈர்ப்பு விசையில் புரளும் விண்வெளி விமானிகளை நீண்டகாலப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றன.  அதன் முக்கிய நோக்கம் 2020 ஆண்டுகளில் விண்வெளி விமானிகள் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்யும் திட்டங்கள் உருவாகி வருகின்றன.  அதற்கு விண்வெளி விமானிகள் போய் மீளக் குறைந்தது 12 அல்லது 16 மாதங்கள் நீடிக்கலாம்.  சைனா தனது நீண்டகால விண்வெளிப் பயிற்சிக்குத் தனியா கவே ஒரு விண்வெளி நிலையத்தை (China Space Station) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.  அதன் “டியான்காங் -1 (Tiangong -1 Space Module) முதலரங்குச் சட்டத்தைச் சைனா 2011 ஆண்டில் ஏவ முடிவு செய்திருக்கிறது. டியான்காங் என்றால் “தெய்வீக அரண்மனை” (Tiangong = Heavenly Palace) என்று அர்த்தம்.  அதன் எடை 8.5 டன் இருக்கும்.  அந்த சுற்றும் அரண்மனையில் விவெளி விமானிகள் பூஜிய ஈர்ப்பு விசையில் நீண்ட காலப் பயிற்சியில் ஈடுபடுவார்.  சைன விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வரும் போது அதன் செங்சோவ் -8 (Shenzhov -8) விண்கப்பல் இணைப்பு / அவிழ்ப்புப் (Docking) பணிகளில் பயிற்சி செய்யும். செங்சோவ் என்றால் “தெய்வீகக் கப்பல்” (Divine Vessel) என்று பொருள் ! செங்சோவ் -9 & -10 விண்கப்பலில் இரண்டு அல்லது மூன்று விமானிகள் பயணம் செய்து புதுப் பயணிகள் நுழையவும், பழைய பயணிகள் மீளவும் திட்டங்கள் தயாராகி யுள்ளன.

    ஆசிய நாடுகள் மறைமுகமாகச் செய்யும் அண்டவெளிப் பந்தயம் !

    இந்தியா ஏவிய முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 இல் 300 மைல் உயரத்தில் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறைச் சுற்றியது.  சந்திரனைச் சுற்றப் போகும் இந்தியாவின் முதல் பேரிச்சைத் திட்டம் 2008 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற சந்திராயன் -1 விண்சிமிழ்ச் (Chandrayaan-1) சோதனைகள் நடைபெற்றன.  அப்பயணத்தில் சந்திராயன் -1 விண்சிமிழ் நிலவுக்கு வெகு அருகில் நீள்வட்டச் சுற்றுவீதியில் சுற்றி வந்து உளவுகள் செய்தது !  அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை  சந்திர தளத்தில் இறக்கியது !  அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008  நாணய மதிப்பு) என்று தெரிகிறது !  2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது.  2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது !  இறுதியில் 2005 இல் ஜப்பான் அனுப்பிய முதல் துணைக்கோள் வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றியது.

    அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் மேம்பட்ட விண்வெளித் தேடல்களில் போட்டி இட்டுக் கொண்டுள்ள போது ஆசியாவில் சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் அண்டவெளிப் பந்தயங்களை மேற்கொண்டிருக் கின்றன.  இப்போது சைனா முதல் விண்வெளி நீச்சலைப் புரிந்து ஆசியாவில் தனது முற்போக்கு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் வல்லமையைக் காட்டியுள்ளது !

    2017 ஆண்டுக்குள் சைனா நிலவுத் தள மண் மாதிரியை எடுத்து பூமிக்கு மீளும் திட்டத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறது.  இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சைனா தனது பேரிச்சைத் திட்டமான நிலவுத் தளத்தைத் தொடும் மனிதப் பயணத்தை அமெரிக்காவைப் போல் நிறைவேற்ற முற்பட்டுள்ளது.  அதே காலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்கள் செவ்வாய்த் தளத்தில் தடம்வைக்கப் பயணம் செய்து அதைச் சுற்றி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது !  ஆசியாவின் மகத்தான விண்வெளி வெற்றியின் போது முரண்பட்ட வாசகம் என்னவென்றால் சைனாவின் விடுதலைப் பிதா மா சேதுங், “ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவ முடியாது” என்று இகழ்ச்சியாகக் கூறியது !

    சைனாவின் விண்வெளி ராக்கெட் நுணுக்கத் தேர்ச்சி

    1956 இல் சைனா தனது முதல் ராக்கெட் ஏவுகணை ஆய்வுக் கூடத்தை நிறுவியது.  அடுத்து ரஷ்ய உதவியில் சாங்செங் [Changzheng (CZ)] முதல் ராக்கெட்டைச் செய்து முடித்தது.  1970 இல் சைனா தனது முதல் துணைக்கோளை அனுப்பிப் பூமியைச் சுற்ற வைத்து, அவ்விதம் செய்த ஐந்தாம் உலக நாடாகப் போற்றப் பட்டது.  1992 இல் மனிதன் இயக்கும் துணைக்கோளை ஏவி ரகசியமாய்ச் செய்தது.  1995 இல் ஏவும் போது CZ–2E ராக்கெட் ஒன்று வெடித்து 6 பேர் உயிழந்தனர்.  1999 நவம்பர் 20 இல் செங்ஸோவ் துணைக்கோள் ஒன்று ஏவப்பட்டு 14 தடவை சுற்றி வந்து பிரச்சனையில் பூமிக்கு மீண்டது !  2002 ஆம் ஆண்டில் செங்சோவ் -3 ஏவப் பட்டு 108 சுற்றுகள் செய்த பிறகு பூமிக்கு மீண்டது.  அதே ஆண்டு டிசம்பர் 29 இல் செங்ஸோவ் -4 ஏவப்பட்டு 2003 ஜனவரி 4 இல் திரும்பியது.  2003 அக்டோபர் 15 இல் செங்ஸோவ் -5 மனிதனோடு முதன்முதல் அனுப்பப் பட்டு 14 முறை பூமியை சுற்றி மீண்டது.  அடுத்து 2007 இல் சாங்கி-1 முதன்முதல் நிலவுக்குப் பயணம் செய்து சந்திர தளத்தின் தெளிவான படங்களை அனுப்பியது.  2008 இல் சைனாவின் விண்வெளி விமானிகள் அண்ட வெளி நீச்சலைப் புரிந்தனர்.  2010 அக்டோர் முதல் தேதி சாங்கி -2 சந்திரனை நோக்கிச் சென்று அதன் புவியீர்ப்பில் நுழைந்தது.  ஆசிய நாடுகள் சைனா, ஜப்பான், இந்தியா மூன்றுக்குள்ளும் விண்வெளித் தேடலில் ஓர் மறைமுகப் பந்தயம் உருவாகி வருவதில் பயன் அடையப் போவது ஆசிய மக்களே !


    (தொடரும்)

    தகவல்:

    Picture Credits:  Boston Globe, Christiamn Monitor, Xinhua News Agency & China Daily Reporter, BBC News, The Hindu.

    1. BBC News – Chinese Astronaut Walks in Space [Sep 27, 2008]
    2. BBC News – China Puts its First Man in Space [Sep 27, 2008]
    3. BBC News – China Astronauts Blast into Space [Sep 27, 2008]
    4. BBC News – Timeline Space Flights of the World Countries (2005)
    5. BBC News What’s Driving China Space Efforts By : Paul Rincon [Sep 27, 2008]
    6. BBC News – China Could Reach Moon By 2020 By : Paul Rincon [Sep 27, 2008]
    7. BBC News – China Spacecraft Returns to Earth [Sep 27, 2008]
    8. Boston Globe : China Stokes National Pride with Celebrated First Spacewalk – Maneuver Tests Nation’s Mastry of Technology, By : Barbara Demick  [Sep 28, 2008]
    9. Christian Monitors – China First Spacewalk : No Cold-War Race This Time By : Peter Spootts [Sep 25, 2008]
    10. The Times of India – India Space Program Will Put Rover on Moon [Sep 19, 2008]
    11. Christian Monitor – India Launched its First Satelite (Jan 11, 2007)
    12 The Economic Times – Chandrayaan All Set for Moon Mission (Sep 26, 2008]
    13. Asiaone – Singapore Firm Offers – Chinese Astronaut Completes Nation’s First Space Walk
    [Oct 1, 2008]
    14. China Daily Reporter – Shenzhou VII Spacecraft Lauched fir First Spacewalk By : Hu Yinan [Oct 1, 2008]
    14 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810021&format=html
    அண்டவெளியில் நீந்திய சைனாவின் முதல் விண்வெளித் தீரர் !
    14 (b) https://jayabarathan.wordpress.com/2010/09/10/chandrayaan-2/ (இந்தியாவின் இரண்டாம் நிலவுப் பயணம்)
    15 Xinhua News Agency – Lunar Orbiter a Milestone for Space Agency (October 2007)
    16 The Hindu -Facts & Figures about China’s Second Lunar Probe Chang’e -2 (Oct 1, 2010)
    17 China Launches Second Lunar Probe – Xinhua News Agency (Oct 2, 2010)
    18 Daily Galaxy : China Launches Second Moon Mission (October 3, 2010)
    19 Four Chinese Lunar Launders Mooted – By : Morris Jones, Australia (Oct 6, 2010)
    20 China’s Chang’e-2 Heads for Moon – Xinhua News Agency (October 4, 2010)
    21 Beijing Chinese Space Centre- Xinhua News Agency – Lunar Probe & Space Exploration is Chaina’s Duty to Mankind (October 7, 2010)
    22.  http://www.spacedaily.com/reports/Chinas_triple_jump_progress_in_lunar_probes_999.html  [December 1, 2013]
    23.  http://www.moondaily.com/reports/Silent_Orbit_for_Chinas_Moon_Lander_999.html  [December 9, 2013]
    24.  http://www.moondaily.com  [December 20, 2013]
    25.  http://www.space.com/23855-how-china-change3-moon-rover-works-infographic.html  [December 6, 2013]
    26.  http://www.space.com/23968-china-moon-rover-historic-lunar-landing.html   [December 14, 2013]
    27.   http://www.spacedaily.com/reports/Chinas_first_lunar_rover_lands_on_moon_State_TV_999.html [December 14, 2013]
    28.  http://news.yahoo.com/china-39-39-jade-rabbit-39-lunar-rover-220110008.html   [December 16, 2013]
    29. http://www.dailygalaxy.com/my_weblog/2013/12/chinas-1st-moon-rover-begins-its-exploration-and-search-for-rare-resources.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheDailyGalaxyNewsFromPlanetEarthBeyond+%28The+Daily+Galaxy+–Great+Discoveries+Channel%3A+Sci%2C+Space%2C+Tech.%29 [December 19, 2013]
    30.  http://news.malaysia.msn.com/top-stories/chinas-jade-rabbit-lunar-rover-deployed-on-moon-xinhua-6  [december 14, 2013]
    31.  http://www.bbc.co.uk/news/world-asia-25393826  [December 15, 2013]
    32.  https://en.wikipedia.org/wiki/Chinese_space_program  [December 17, 2013]
    33.https://www.spacedaily.com/reports/To_Mars_and_beyond_as_Chinas_cosmic_journey_continues_999.html [April 24, 2021]
    34.https://www.spacedaily.com/reports/China_ready_launch_new_space_station_core_module_999.html [April 24, 2021]
    35.https://www.spacedaily.com/reports/China_launches_first_module_for_new_space_station_999.html [April 29, 2021]
    36. https://en.wikipedia.org/wiki/Chinese_space_program [April 24, 2021]
    37. https://www.cnet.com/news/china-launches-tianhe-core-module-for-new-space-station-everything-you-need-to-know/ [April 29, 2021]

    Share
  • குறளின் கதிர்களாய்…(348)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(348)

    ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்
    தோற்றம் நிலக்குப் பொறை.

    – திருக்குறள் -1003 (நன்றியில் செல்வம்)

    புதுக் கவிதையில்...

    பிறரை விடப்
    பொருளதிகம் சேர்க்கவேண்டுமென்று
    பொருள் சேர்ப்பதிலேயே
    பற்றுள்ளம் கொண்டு,
    புகழை விரும்பா மக்கள்
    பிறந்து வாழ்தல்
    பூமிக்குப்
    பெரும் பாரமே…!

    குறும்பாவில்...

    அதிகம் பொருள் சேர்க்கவேண்டுமென்று
    அதிலே பற்றுள்ளம் கொண்டு புகழ்விரும்பார் பிறப்பு,
    அகிலத்திற்கு அதிகமான பாரம்தான்…!

    மரபுக் கவிதையில்...

    அடுத்தவர் தம்மை விடவும்பொருள்
    அதிகம் சேர்த்திட வேண்டுமென்ற
    திடமது கொண்டே அதன்மீது
    தீராப் பற்றது கொண்டேதான்
    கிடைக்கும் புகழதை விரும்பாத
    கீழ்க்குணம் கொண்டோர் உலகினிலே
    அடைந்து விட்ட பிறப்பதுவும்
    அதிக சுமைதான் காசினிக்கே…!

    லிமரைக்கூ..

    பார்த்தே அடுத்தவர் தமையே,
    பொருள்சேர்க்கும் பற்றுடன் புகழை விரும்பாதார்,
    பிறப்பதுதான் பூமிக்குச் சுமையே…!

    கிராமிய பாணியில்...

    ஆசப்படாத ஆசப்படாத,
    அதிகமா சொத்து சேக்க
    அனியாயமா ஆசப்படாத..

    அடுத்தவன விடவும்
    அதிகமா சொத்து சேக்கணுண்ண
    ஆசயில விழுந்து,
    கெடைக்கிற புகழக்கூட விரும்பாதவன்
    ஒலகத்தில பொறந்த
    பொறப்பே வீண்தான்,
    பூமிக்கே அவன்
    பெரிய பாரம்தான்..

    அதால
    ஆசப்படாத ஆசப்படாத,
    அதிகமா சொத்து சேக்க
    அனியாயமா ஆசப்படாத…!

    Share
  • போற்றுவேன் போற்றுவேன் | அண்ணாகண்ணன் பாடல்

    போற்றுவேன் போற்றுவேன் | அண்ணாகண்ணன் பாடல்

    எந்தச் சுப நிகழ்ச்சியிலும் பாடத்தக்க வகையில் நான் இயற்றிய ‘போற்றுவேன் போற்றுவேன்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார், ராகமாலிகையாக இசையமைத்துப் பாடியுள்ளார். கண்டும் கேட்டும் மகிழுங்கள்.

    This is my first ‘lyric video’.

    போற்றுவேன் போற்றுவேன்

    போற்றுவேன் போற்றுவேன் பூவென, பொன்னென
    போற்றுவேன் போற்றுவேன் பொலிவென, வலிவென
    போற்றுவேன் போற்றுவேன் தேனென, மின்னென
    போற்றுவேன் போற்றுவேன் வானென, மீனென

    போற்றுவேன் போற்றுவேன் அழகென, சுடரென
    போற்றுவேன் போற்றுவேன் அமுதென, வடிவென
    போற்றுவேன் போற்றுவேன் விடிவென, விடையென
    போற்றுவேன் போற்றுவேன் உலகென, உயிரென

    போற்றுவேன் போற்றுவேன் நீரென, நிலமென
    போற்றுவேன் போற்றுவேன் சீரென, சாறென
    போற்றுவேன் போற்றுவேன் வேரென, வீறென
    போற்றுவேன் போற்றுவேன் ஆறென, நூறென

    போற்றுவேன் போற்றுவேன் தாயென, தந்தையென
    போற்றுவேன் போற்றுவேன் வாழ்வென, வண்ணமென
    போற்றுவேன் போற்றுவேன் விதையென, விளைவென
    போற்றுவேன் போற்றுவேன் வினையென, வெற்றியென

    போற்றுவேன் போற்றுவேன் தமிழென, செயலென
    போற்றுவேன் போற்றுவேன் கருவென, திருவென
    போற்றுவேன் போற்றுவேன் நுண்ணென, விரிவென
    போற்றுவேன் போற்றுவேன் கண்ணென, கருத்தென

    போற்றுவேன் போற்றுவேன் கதிரென, நிலவென
    போற்றுவேன் போற்றுவேன் கவியென, இசையென
    போற்றுவேன் போற்றுவேன் புதிதென, இனிதென
    போற்றுவேன் போற்றுவேன் மிகமிக மிகமிக.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 64

    பழகத் தெரிய வேணும் – 64

    நிர்மலா ராகவன்

    துணிச்சலுடன் முயற்சி செய்

    அது எப்படி, சில பேரால் மட்டும் வாழ்க்கையில் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க முடிகிறது?

    ஊக்கம் அவர்களுக்கு உள்ளிருந்தே எழுகிறது.

    ஒரு காரியமானது செய்கிறவருக்குப் பிடித்ததாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் திருப்தி ஏற்படும். பிறர் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவருக்கு முக்கியமில்லை.

    அந்தக் காரியத்தால் பணம் கிடைக்காது போகலாம். அதனால் பாதிப்பு அடையாது, புதினங்கள் படிப்பது, பொழுதுபோக்கிற்காகத் தையல் வேலையில் ஈடுபடுவது, சித்திரம் வரைவது, எழுத்துத் துறை, சமைப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறவர்களுக்கு அவை பிடித்த காரியமாக இருக்கும். அதனால், பிறரது உதவியை எதிர்பார்க்காது, தாமே செய்கிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    வேறு சிலர் விளையாட்டுகளில் நேரத்தைச் செலவழிப்பார்கள். ஏனெனில் அது அவர்களுக்கு மகிழ்ச்சி தருவது. சவாலாக அமைவது.

    குழந்தைகள் மற்றவர்களுடன் விளையாடும்போது, மகிழ்ச்சி ஒன்றுதான் அவர்களுக்குக் குறி. பெரும்பாலான பெரியவர்களைப்போல், `இவனுடன் தொடர்பு கொண்டால் என்ன லாபம்?’ என்று கணக்குப் பார்க்கமாட்டார்கள்.

    ஒரு காரியத்தை ஏன் செய்கிறோம் என்று தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கான திறமை தனக்கு இருக்கிறதா என்று ஆராய்ந்துவிட்டு, முழுமனத்துடன் ஈடுபடுகிறவர்களுக்கு வெற்றி கிடைப்பது உறுதி.

    திறமை ஒருபுறமிருக்க, அவர்கள் துணிச்சல் மிக்கவர்கள்.

    துணிச்சல் எதற்கு?

    சட்டத்திற்குப் புறம்பாகவா நடக்கப் போகிறார்கள்?

    நாம் ஒரு காரியத்தில் இறங்கப் போகிறோம் என்று தெரிந்தால், அதற்குப் பலவிதமான எதிர்ப்புகள் கிளம்பும்.

    பிரபலமான அமெரிக்க எழுத்தாளர் ஒருவரை மூதாட்டி ஒருத்தி கேட்டாளாம், “உருப்படியான வேலையை நீ என்று தேடிக்கொள்ளப் போகிறாய்?”

    தன் எழுத்தால் கோடி கோடியாகச் சம்பாதித்தவரைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி!

    அவருக்கு ஆர்வம் இருந்தது. தன் திறமையில் நம்பிக்கை இருந்தது. வெற்றிக்கொடி நாட்டிய பின்னரும் இப்படி ஒரு கேள்வி எழுந்திருந்தால், ஆரம்ப காலத்தில் இன்னும் எவ்வளவு கேலியை, எதிர்ப்பைக் கண்டிருப்பார்!

    ஒருவருக்கு ஊக்கம் தனக்குள்ளிருந்து வந்தால், யார் என்ன சொன்னாலும் எடுத்த முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டார்.

    எதிர்ப்போ, தோல்வியோ, தனது பலத்தைப் பரீட்சை செய்யத்தான் ஏற்படுகிறது என்று புரியும்போது, தன் பலம் என்னவென்று புரிந்துவிடும். அச்சம் விலகிவிடும்.

    ஆனால், பலரும், தம் விருப்பு வெறுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, பிறரது பாராட்டுக்காக, அல்லது ஆமோதிப்புக்காகவே எதையும் செய்கிறார்கள். எதிர்ப்புகள் வந்தால், பயந்து பின்வாங்குகிறார்கள்.

    இப்படிப்பட்டவர்களுக்குப் பெரும் வெற்றி கிடைப்பதில்லை.

    முயற்சியில் வெற்றி

    கனவிலேயே நிலைத்துவிடாது, அக்கனவை நனவாக்குவது எப்படி என்று ஆராய்வது முதல் படி.

    “நான் எல்லாப் பாடங்களிலும் முதல் மாணவனாக இருக்கப் போகிறேன்!” என்று விரும்பினால் மட்டும் போதுமா?

    “புத்தகங்களைத் தொடவே பிடிக்காது. என் வீட்டில், `படி, படி’ என்று உயிரை வாங்குகிறார்கள்!” என்பவர்களுக்குப் படிப்பது கசப்பான வேலை. அதனாலேயே, அது கடினமானதாகத் தோன்றும்.

    மாறாக, காலையில் எழுந்து படிக்க வேண்டும், தெரியாதவற்றைப் புரிந்துகொள்வதற்குத் தகுந்தவர்களை நாடவேண்டும், பொழுதுபோக்குகளிலும் நண்பர்களுடனும் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    `இவ்வளவு கடினமாக இருக்கிறதே! எப்படித்தான் செய்யப் போகிறேனோ!’ என்ற மலைப்பு எழும்போது அதை ஒதுக்கிவிட்டுச் செய்தால், நாமே பிரமிக்கும் அளவுக்குப் பலன் கிடைக்கும்.

    உரிய காலத்தில் நாமே நம்மை ஒழுக்கப்படுத்திக்கொள்ளாவிட்டால், `அப்படிச் செய்திருக்கலாமே!’ என்ற வருத்தம்தான் மிஞ்சும்.

    கண்ட கனவு மெய்யாகாதபோது, `நேரம் கிடைக்கவில்லை. யாருமே ஊக்குவிக்கவில்லை,’ என்பதெல்லாம் நொண்டிச்சாக்கு.

    “ஒரு மரத்தை நடுவதற்குச் சிறந்த வேளை, இருபது வருடங்களுக்கு முன்னால். அடுத்தது, இப்போது!” (சீனப் பழமொழி)

    எப்போதோ செய்யாமல் விட்டதைப் பற்றியே நினைத்துக் குமுறிக்கொண்டிராது, இப்போது செய்யலாமே!

    வெற்றி-தோல்வி

    தோல்வி என்பது வெற்றியின் எதிர்ப்பதமில்லை. இரண்டும் நெருங்கிய தொடர்புடையவை.

    எந்த வெற்றி அடைவதற்கு முன்பும் தோல்வி தவிர்க்க முடியாதது. (ஆரம்பத்திலேயே வெற்றி கிடைத்துவிட்டால், கர்வம் தலைக்கேறி, மேலும் பல வெற்றிகளை அடைவது கடினம்).

    எடுத்த காரியத்தில் உடனடியாக வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது மடமை. விடாமுயற்சி உள்ளவர்களை வீழ்த்துவது கடினம்.

    `நீ செய்து கிழித்தாய்!’

    `நினைத்ததை உடனே செய்து முடிக்கவேண்டும் உனக்கு!’

    `ஆசைக்கும் எல்லை இருக்கவேண்டும்!’

    `சரியான போர்! எப்போதும் என்ன செய்யப்போகிறேன் என்றே பேசிக்கொண்டிருப்பாய்!’

    இப்படியெல்லாம் நாம் எடுத்த திசையை மறித்துப் பேசுகிறவர்களிடமிருந்து விலகுவதுதான் புத்திசாலித்தனம்.

    நெருங்கிய உறவினர்களே அப்படி இருந்தால், அவர்களது கூற்றை அலட்சியம் செய்தால் பிழைத்தோம்.

    வளர்ப்புமுறை

    “கொதிக்கும் நீரில் உருளைக்கிழங்கு வெந்து, மென்மையாகிவிடுகிறது. ஆனால், முட்டை கெட்டியாகிவிடுகிறது”. (யாரோ)

    ஒரு குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளும் வெற்றியாளர்களாகத் திகழ்வதில்லை.

    “எல்லாரையும் ஒரே மாதிரிதான் வளர்த்தோம்!” என்று புலம்பும் பெற்றோர் ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை.

    ஒரே விதமான வளர்ப்புமுறை, வெவ்வேறு மாறுதல்களை ஏற்படுத்தக்கூடியது.

    இயற்கையில், முதல் குழந்தை நுண்ணிய உணர்வுகளைக் கொண்டிருக்கும். பொறுப்பும் பொறுமையும் அதிகமாக இருக்கும்.

    அத்தன்மை புரிந்து, பெற்றோர் ஓயாது விரட்டாமல் இருந்தால் அவன் சிறந்த தலைவனாகும் வாய்ப்பு உண்டு.

    மூத்தவனோ, காலத்துக்கு ஒவ்வாத விதமாக நடக்கச் சொன்னாலும், பெற்றோருக்குப் பணிந்து நடப்பான்.

    அவனுக்குப் பிடிக்காத துறையில் படிக்கச் சொன்னால், அப்படியே நடந்து, உற்சாகமின்றி காலம் தள்ளுவான். அதனாலேயே வெற்றி பெற முடியாது போய்விடும்.

    இரண்டாவது குழந்தையோ நேர் எதிர். அவ்வளவாகப் பொறுமை இராது. `ஏன் இப்படி?’ என்று எதிர்த்துக் கேட்கும் குணம் இருக்கும்.

    ஒரு நல்ல வேலையில் அமர்ந்திருந்தாலும், அதிலிருந்து விலகி, தனக்குப் பிடித்த, சம்பந்தமே இல்லாத வேறொரு துறையில் நுழையும் துணிச்சல் உண்டு. அதில் தோல்வி ஏற்பட்டாலும் சமாளித்துக்கொண்டு, மீண்டும் முயல்வான். அவனுக்கு வயது ஒரு தடையே இல்லை.

    சவால்கள் நிறைந்த முயற்சியில் ஈடுபடுவான்.

    இளையவனுடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, மனமுடைந்து, புதிதாக எதையும் செய்யும் துணிவை இழந்துவிடுவான் மூத்தவன். எல்லாக் காரியமும் தன்னைச் சோதிப்பதுபோல் உணர்வான்.

    தன்னைத்தானே நம்பாதவன்மேல் பிறருக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்?

    `இதைச் செய்யமுடியுமா!’ என்ற மலைப்பு ஏற்படுவது நல்லது. இல்லாவிட்டால், எடுத்த காரியம் மிக எளிதானது என்று அர்த்தம். அதை முடித்தபின், பெருமகிழ்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை.

    விதை நட்டவுடனேயே மரமாகிவிடுகிறதா?  அதைப்போல்தான், எந்தத் துறையிலும் குறுகிய நேரத்தில் பலன் கிடைக்காது. சிறு, சிறு வெற்றிகள் கிடைக்க, மகிழ்ச்சி பெருகும். ஊக்கம் வரும். அதன்பின்தான் பெரும் வெற்றி கிடைக்கும்.

    Share