Blog

  • திருமுருகன் திருப்புகழ்!

     

    அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

    1. விநாயகர் துதி (இராகம் – நாட்டை; தாளம் – ஆதி)

            தத்தன தனதன தத்தன தனதன
            தத்தன தனதன …… தனதான

            கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
            கப்பிய கரிமுகன் …… அடிபேணிக்

            கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
            கற்பகம் எனவினை …… கடிதேகும்

            மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
            மற்பொரு திரள்புய …… மதயானை

            மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
            மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே

            முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
            முற்பட எழுதிய …… முதல்வோனே

            முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
            அச்சது பொடிசெய்த …… அதிதீரா

            அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
            அப்புன மதனிடை …… இபமாகி

            அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
            அக்கண மணமருள் …… பெருமாளே.

            “அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் — 3”

            “முத்தைத்தரு”

            இராகம்: கௌளை
            தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு

            தத்தத்தன தத்தத் தனதன
            தத்தத்தன தத்தத் தனதன
            தத்தத்தன தத்தத் தனதன ….. தனதான

            முத்தைத்தரு பத்தித் திருநகை
            அத்திக்கிறை சத்திச் சரவண
            முத்திக்கொரு வித்துக் குருபர ….. எனவோதும்

            முக்கட்பர மற்குச் சுருதியின்
            முற்பட்டது கற்பித் திருவரும்
            முப்பத்துமு வர்க்கத் தமரரும் ….. அடிபேணப்

            பத்துத்தலை தத்தக் கணைதொடு
            ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
            பட்டப்பகல் வட்டத் திகிரியில் ….. இரவாகப்

            பத்தற்கிர தத்தைக் கடவிய
            பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
            பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ….. ஒருநாளே

            தித்தித்தெய ஒத்தப் பரிபுர
            நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
            திக்கொட்கந டிக்கக் கழுகொடு ….. கழுதாடத்

            திக்குப்பரி அட்டப் பயிரவர்
            தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
            சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ….. எனவோதக்

            கொத்துப்பறை கொட்டக் களமிசை
            குக்குக்குகு குக்குக் குகுகுகு
            குத்திப்புதை புக்குப் பிடியென ….. முதுகூகை

            கொட்புற்றெழ நட்புற் றவுணரை
            வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
            குத்துப்பட வொத்துப் பொரவல ….. பெருமாளே.

    http://youtu.be/RCHGtC49byQ

    Share
  • Sevalaya – SCOPE international free ITI foundation stone laid

     

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    No 2/25, Ground Floor, Rajaji Nagar Main Road,Pillaiyar Koil Street, Thiruvanmiyur, Chennai 600041.

    Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur –  602024. Tamil Nadu, India.

    Phone: 04424484009, 9444620289, 9444620286, 044-64611488.

    E-mail:   sevalayamurali@gmail.com,   sevalayapro@gmail.com,   Visit us at: www.sevalaya.org.

    ———————————————————————————————————-

    Please publish the following PRESS REPORT in your esteemed newspaper.

    20th Nov, 2012

    SCOPE gives Hope to the Rural Students of Sevalaya

     

    Foundation stone was laid for the proposed ‘Industrial Training Institute’ (ITI) Building in the premises of Sevalaya’s Kasuva Campus near Thiruninravur, on 20th of November at 10.30 AM.  Earlier in the morning, auspicious ‘Boomi Pooja’ was performed.  Sevalaya is a charitable organization which provides free Education, boarding & lodging to the Orphan children, Food, clothing & shelter to the Destitute Senior Citizens. 

    The upcoming ITI is another Great Mile Stone in the spectacular educational history of Sevalaya, which has so far ascended up to the Plus Two level.  The founder trustee of Sevalaya, Mr. V. Muralidharan has said that the rural youth, both boys & girls will be greatly benefitted by this Training Institute, thanks to SCOPE International which has sponsored the ITI Building as part of the CSR agenda for the year.  The trade list of the proposed ITI includes Carpentry, House Wiring, Automobile, Cell Phone Servicing, Bakery & Beautician course etc,.   He was happy to announce that present 10th and Plus One students need not go searching for Institutes in the City.  They can make use of Sevalaya’s Technical Institute for their higher studies, totally free of cost. 

    A Memorandum of Understanding (MOU) was signed between SCOPE and Sevalaya, which formally documents various joint projects, volunteer exchange and mutual cooperation.  In his address the Chief Guest Mr. Edwin Nevis (CEO, Scope International) has expressed his happiness in collaborating with Sevalaya which is being well set up in the past 24 years.  In spite of the long distance from the Chennai City, Sevalaya has managed to grow substantially, and now ventures to elevate the rural youth in higher education.  He challenged the students to be brave enough, study well, and join the SCOPE itself in the future. 

    SCOPE International, a wholly owned subsidiary of Standard Charted Bank, UK PIC, has also conducted an Eye Camp for the benefit of the sixty resident Senior Citizens of Sevalaya’s Old Age Home and for the Children in need, on the same day.  Those who needed Medication, Spectacles & Surgery were helped accordingly.  Mr. Muralidharan has expressed his gratitude to the Ophthalmic experts from ‘Sankara Nethralaya, Chennai’ who have done fabulous service to the destitute and poor children.  Apart from the volunteering initiative, SCOPE International staff were also magnanimous in providing New Clothes to the Thathas & Pattis of the Home.

    While these hectic activities were happening, around fifty volunteers from the same concern braved the sun in the mid afternoon, and planted vegetable seeds in three fourths of an acre in the ‘Total Organic Farmlands’ of Sevalaya.  The founder expressed his optimism this Kitchen Garden Project will cater to the needs of the Sevalaya’s kitchen, which feeds around 210 residents, children as well as the aged people. 

    Earlier Mr. V. Muralidharan (Founder and Managing Trustee, Sevalaya) welcomed and honored the guests with mementoes, and Mr. E. L. Narayanan (Trustee, Sevalaya) has proposed the vote of thanks.

     

    Thanks & Regards

    For Sevalaya

    (V.Muralidharan)

    Founder & Managing Trustee

     

    ————————————————————————————

    Board of Trustees

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

    Advisory ommittee: Dr.G.Nammalvar,

    Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj IPS (Retd), Mr. Amarchand Jain, Dr. Malavika Vinothkumar

    Hony, Co-Ordinator:                                                                   Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                 Mrs. Bhuvaneshwari Muralidhara

      

     

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    No 2/25, Ground Floor, Rajaji Nagar Main Road,Pillaiyar Koil Street, Thiruvanmiyur, Chennai 600041.

    Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur –  602024. Tamil Nadu, India.

    Phone: 04424484009, 9444620289, 9444620286, 044-64611488.

    E-mail:   Sevalayamurali@gmail.com,   Sevalayapro@gmail.com,   Visit us at: www.Sevalaya.org.

    ———————————————————————————————————-

                Please publish the following PRESS REPORT in your esteemed newspaper.                             20th Nov. 2012                                                 

     

    ஸ்கோப்  நிறுவனம் கிராமப்புர இளைஞர்களுக்கு சேவாலயாவின் வழியே உதவி

     

    கிராமப்புர மாணவ மாணவியருக்கு தொழில்நுட்பக் கல்வியளிக்க  உள்ள சேவாலயாவின் ஐ.டி.ஐ  நிறுவனத்திற்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டுவிழாவும், திருநின்றவூரினை அடுத்த கசுவா கிராமத்தில் நவம்பர் 20ஆம் நாள் நடந்தது.  சேவாலயா தொண்டு நிறுவனம், ஆதரவற்ற சிறுவர் சிறுமியருக்கு கல்வி, உணவு, உடைகள், உறைவிடம் ஆகியவற்றினை முற்றிலும் இலவசமாக அளித்து வருகிறது.  அதரவற்ற முதியோருக்கான இல்லமும் இயங்கி வருகிறது.

     

    பனிரெண்டாம் வகுப்புவரை கல்வி பயிலும் பள்ளியுடன், தற்போது ஐ.டி.ஐ நிறுவனம் ஒரு மைல்கல்லாக இணைகிறது.  சேவாலயாவின் நிறுவன அறங்காவலர் திரு. முரளிதரன் அவர்கள் பேசும்போது, கிராமப்புர மாணவ மாணவியர் இக் கல்வி நிறுவனத்தின் மூலம் பயனடைவார்களென்று நம்பிக்கை தெரிவித்தார்.  இந்த ஐ.டி.ஐ தொழில்நுட்ப நிறுவனம், ஸ்கோப் இண்டர்நேஷனல் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்படுகிறது.  தச்சுக்கலை, வீட்டு ஒயரிங், ஆட்டோமொபைல், செல்போன் சர்வீஸ், அழகுக்கலை, பேக்கரி தொழில் நுட்பம் போன்றவை இதில் அடங்கும்.  தற்போது சேவாலயாவின் மஹாகவி பாரதியார் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர், உயர் படிப்பிற்காக நகரத்தினை நோக்கிச் செல்லவேண்டிய அவசியமில்லை என்று திரு. முரளிதரன் அவர்கள் சொன்னார்.  மேற்கண்ட தொழில்நுட்பப் பாடங்களை சேவாலயாவின் ஐ.டி.ஐ ஏழை மாணவ மாணவியருக்கு முற்றிலும் இலவசமாக வழங்க உள்ளது.

     

    இதனிடையே சேவாலயா  தொண்டு நிறுவனத்திற்கும், ஸ்கோப் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு  ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.  சிறப்பு விருந்தினர் திரு. எட்வின் நேவிஸ் (சி.இ.ஓ, ஸ்கோப் இண்டர்நேஷனல்) அவர்கள் பேசும்போது, கடந்த இருபத்து நான்கு வருடங்களாக சிறப்பாக நிலைபெற்றிருக்கும் சேவாலயா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.  மாணவ மாணவியரிடையே அவர் பேசும்போது, நன்கு கல்வி கற்று, நல்ல தைரியத்துடன் தங்கள் ஸ்கோப் நிறுவனத்தில் பணி செய்யும் வாய்ப்பினை பெருமளவிற்கு உழைக்குமாறு அறைகூவல் விடுத்தார்.

     

    ஸ்டேண்டர்ட் சார்ட்டட்  வங்கியின் இணை அமைப்பான ஸ்கோப் நிறுவனம், ஆதரவற்ற முதியோர் பயன்பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றையும் நடத்தியது.  மருந்துகள், அறுவை சிகிச்சை, கண்ணாடி போன்ற உதவிகள் அளிக்கப்பட்டன.  நிறுவனர் பேசும்போது, ஸ்கோப் நிறுவனத்துடன் இணைந்து இம்முகாமினை சிறப்பாக நடத்திய சங்கர நேத்ராலயாவின் மருத்துவக் குழுவிற்கு நன்றி தெரிவித்தார்.  இல்லத்தின் அனைத்து ஆதரவற்ற தாத்தா பாட்டிகளுக்கும் புத்தாடைகளும் வழங்கப்பட்டன.

     

    ஸ்கோப் நிறுவனத்தினைச் சேர்ந்த சுமார் ஐம்பது தன்னார்வ அலுவலர்கள், சுமார் முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் முற்றிலும் இயற்கை விவசாய முறையில் விளையவிருக்கும் காய்கறி விதைகளை விதைத்தனர்.  இதிலிருந்து கிடைக்கும் காய்கறிகள், ஆதரவற்ற சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல உணவகத்திற்கும் பயன்படவுள்ளது.

     

    முன்னதாக சேவாலயாவினை நிறுவிய அறங்காவலர் திரு. வி. முரளிதரன் அவர்கள் வரவேற்புரை வழங்கியிருக்க, அறங்காவலர்களில் ஒருவராகிய திரு. நாராயணன் அவர்கள் நன்றி நவில, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

     

    சேவாலயாவிற்காக

    (திரு. வி. முரளிதரன்)

    நிறுவிய அறங்காவலர்

     

    ————————————————————————————

    Board of Trustees

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

    Advisory ommittee: Dr.G.Nammalvar,

    Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj IPS (Retd), Mr. Amarchand Jain, Dr. Malavika Vinothkumar

     

    Hony, Co-Ordinator:                                                                   Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                  Mrs. Bhuvaneshwari Muralidharan

    Share
  • கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

     

    2012 திசம்பர் 16 ஞாயிறு

     

    அன்புடையீர்,

    வணக்கம். நமது தமிழ்மொழி தொன்மையும் வரலாற்றுத் தொடர்ச்சியையும் உடைய ஒரு செம்மொழி. இலக்கிய , இலக்கணச் சிறப்புகளைப் பெற்ற தமிழ், இன்று அறிவியல், தொழில்நுட்பங்களுக்கும் ஏற்ற ஓர் அறிவியல் மொழியாக வளர்ந்துள்ளது.

     

    இன்றைய மின்னணு காலத்தில் கணினி உட்பட அனைத்து மின்னணுக் கருவிகளிலும் இடம் பெற்ற ஒரு மொழியாகவும்  தமிழ்மொழி வளர்ந்தோங்கி நிற்கவேண்டும். செல்பேசி முதல் கணினிவரை அனைத்துப் பயன்பாட்டுக் கருவிகளிலும் தமிழ் பயன்படுத்தப்படவேண்டும்.

     

    இதற்கான பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவேண்டும். தமிழையே செல்பேசி முதல் கணினிவரையிலும் பயன்படுத்தவேண்டும் என்ற உணர்வு முதலில் தமிழ் மக்களிடையே வளரவேண்டும். அப்போதுதான் மின்னணுக் கருவிகளை உருவாக்குகிற நிறுவனங்கள் தங்களது கருவிகளில் தமிழ்ப் பயன்பாட்டிற்கான வழிவகைகளைச் செய்யும். அதற்கான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்.

     

    மின்னணு உலகில் இந்தி உட்பட பல் மொழிகளும் மின்மொழிகளாக வளர்ந்துகொண்டிருக்க, அம்முயற்சியில் தமிழ் பின்தங்கியுள்ள்து. இன்றேனும் தமிழ் மின்மொழியாக வளர்த்தெடுக்கப் படவில்லை  என்றால், எதிர்காலத்தில் தமிழினம் உரிமைமுதற்கொண்டு, பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும். எனவே தமிழை ஒரு மின்னணுமொழியாக வளர்த்தெடுப்பதின் தேவைபற்றிய விழிப்புணர்வு  மக்களிடையே வளரவேண்டும். கணினித்தமிழ் வளர்ச்சிக்கான குறிப்பான பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்த நோக்கத்தில் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு வரும் 2012 திசம்பர் 16 ஆம் நாள் ஞாயிறன்று சென்னையில் நடைபெற உள்ளது.

     

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்  மலேசியா, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளார்கள். தமிழ்வளர்ச்சிக்கான இம்முயற்சிக்கு  அனைவரும் ஒத்துழைத்து, மாநாட்டை வெற்றியடையச் செய்யும்படி அன்புடன் வேண்டுகிறோம். 

     

    இடம் :  இலயோலா கல்லூரி , கல்வியியல் அரங்கம், சென்னை

    நாள்  :  (2012) திசம்பர் 16 ஞாயிறு  காலை 9.30 முதல் மாலை 6 மணிவரை

     

    மாநாட்டுச் செய்திகளுக்கான வலைப்பூ : kaninithamilvalarccimaanadu.blogspot.com

     

    தொடர்புக்கு:  ந. தெய்வ சுந்தரம் ( மேனாள் தமிழ்மொழித்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்) செல்பேசி :  9789059414  மின்னஞ்சல் : ndstamilcomputing@hotmail.com

     

    Share
  • அணுமின் சக்தி நிலையத்தில் வெப்பசக்திக் கட்டுப்பாடும், பாதுகாப்பும் (2)

     

                                                                                                          [[கட்டுரை : 2]

                                                         சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


     

    பிரபஞ்சப் பெரு வெடிப்பில்
    பொரி உருண்டை
    சிதறித் துகளாகித்
    துண்டமாகித் துணுக்காகிப்
    பிண்டமாகி,
    பிண்டத்தில் பின்னமாகி
    அணுவாகி,
    அணுவுக்குள் அணுவாகி
    பரமாணு வாகி
    அவற்றின்
    அடிப்படைத் தூளாகி
    மூலமாகி, மூலகமாகித்
    மூலக்கூறாகி
    அலையாகி ஒளியாகி,
    கோளாகி,
    அண்டக் கோள்களின் வலையாகி
    ஆத்மா வாகி
    உயிராகிப் பயிராகி,
    உடலாகி
    அறுந்த நூலாகி,
    இழையாய் புழுபோல் 
    நெளிகிறாய் !

    +++++++++++++++

    அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலிகளைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது.

    டாக்டர் ஹோமி பாபா (1944)

    சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன் படுத்தி அணுசக்தியை உற்பத்தி செய்யும் முறை ஒன்றுதான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றதாக உள்ளது 

    டாக்டர் அனில் ககோட்கர் [அணுசக்திப் பேரவை அதிபர்] (செப்டம்பர் 17, 2003)


    முன்னுரை:  “அணு ஆற்றல் தொழில் நுட்பம் என்பது முதிர்ச்சியானதா என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும், அதனை நடைமுறைப் படுத்தும் நம்நாட்டின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்னபிற சம்பந்தப் பட்டவர்களும் இந்த தருணத்தில் முதிர்ச்சியானவர்களா என்ற கோணத்தையும் கவனத்தில் கொண்டு கட்டுரை எழுத வேண்டுகிறேன்.  மாற்று எரிபொருளுக்கான முயற்சிகள் உடனடியாக தேவையென்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், கடினமான தொழில்நுட்ப விஷயங்களையும் புள்ளி விபரங்களையும் கொண்டு மட்டுமல்லாது இன்றய இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகளையும் கவனத்தில் கொண்டு எழுதிய உங்கள் கட்டுரையைக் காண ஆவலுடன்.” என்று ஆகஸ்டு 9, 2007 திண்ணைக் கடிதம் ஒன்றில் நண்பர் R. பாலா குறிப்பிட்டிருந்தார். 

    அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ?  அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ?  என்ற அவரது இரண்டு கேள்விகளுக்கும் பதில் கூறவே இந்தக் கட்டுரையை நான் எழுதுகிறேன்.  அணு ஆயுத சம்பந்தமான அணுக்கருப் பிளவு எருக்களைத் [Nuclear Fissile Materials Uranium-235, Uraniuam-233 & Plutonium-239] தயாரிக்கும் அணு உலைகளின் கண்காணிப்புகளை இராணுவமும், அரசாங்கமும் தேசீயப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இரகசியமாக நடத்தி வருவதால் அவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் எதுவும் நான் குறிப்பிட விரும்பவில்லை.   

     

    அணுசக்தி உலைகள் இயக்கத்துக்குத் தேவையான பாதுகாப்புகள்


    2.  உட்புற, வெளிப்புற மனிதருக்குக் கதிரியக்கப் பாதுகாப்பு

    அணுசக்தி நிலைய மின்சார உற்பத்தியில் முக்கியப் பாதுகாப்பு விதி,  கதிரியக்க வெளியேற்றத்தைக் கோட்டை அரணுக்குள்ளே கட்டுப்படுத்தி, கவசமிட்டு குறைவு படுத்தி, உள்ளே பணி செய்வோரையும், வெளியே வாழ்பவரையும் கதிர்வீச்சிலிருந்து காப்பாற்றுவது.  அணு உலைக்குள்ளே எல்லாத் தளங்களிலும், காற்றோற்றம் உள்ள எல்லா அறைகளிலும் வெவ்வேறு அளவுகளில் கதிரியக்கம் சூழ்ந்துள்ளது. மனிதர் நடமாடும் தளமெங்கும் ஒவ்வோர் இடத்திலும் உள்ள கதிர்வீச்சு அளவுகளைக் கருவிகள் காட்டுகின்றன !  திடீரெனக் கதிர்வீச்சு அளவு அதிகமானல் எச்சரிக்கை அறிவிப்பு மணி அடிக்கிறது.  மிகவும் அதிகமானால் அபாயச் சங்கு ஊதிப் பணி செய்வோரைப் புறத்தே செல்ல அறிவிக்கிறது.  அத்துடன் அணு உலை உடல்நலக் குழுவினர் [Health Physics Group] அனுதினமும் தமது தனிப்பட்டக் கதிர்வீச்சுக் கருவிகளில் [Radiation Monitors] தள உளவு, வாயு உளவு செய்து, கால நேரத்தையும் குறிப்பிட்டுப் பலகைகளில் எழுதி யாவரும் காணும்படி வைக்கிறார். 

    கதிரியக்க அணு உலை இயக்க வல்லுநர் முதல், தரையைச் சுத்தம் செய்யும் சாதாரணப் பணியாளிகள் வரை அனைவருக்கும் கதிரிக்க எழுச்சி, கதிரிக்கத் தீங்கு, கதிரியக்கக் கவசம், கதிரிக்கப் பாதுகாப்பு பற்றி விளக்கமான பயிற்சிகள் நிலையத்தில் முதலில் அளிக்கப்படுகின்றன.  பாரத அணு உலைகளில் வேலை செய்யும் படிப்பில்லாத நபர்களை மேலாளர் ஒருவர் எப்போதும் அவர்கள் பணி புரியும் போது அருகில் நின்று கண்காணித்து வருகிறார்.  உட்புறம் வேலை செய்யும் அனைவரது கதிர்வீச்சுத் தாக்கலைப் பதிவு செய்ய ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கதிர்ப்பதிவுப் பதக்கம் [Personal Dosimeter Badge] அளிக்கப் படுகிறது.  பணியாட்களும் மற்ற அணு உலை இயக்குநர், எஞ்சினியர், மேலதிகாரிகளும் அணு உலை நிலயத்துள் நுழையும் போது கட்டாயம் கதிர்ப் பதக்கத்தைத் நெஞ்சில் தெரியும்படி அணிய வேண்டும்.  நிலையத்தை விட்டு வெளியே செல்லும் போது அவர்கள் வாயிலில் தொங்கும் பலகையில் வைத்துவிட்டு நீங்க வேண்டும். 

    பணியாட்களை நிலைய மேலாளர் [Plant Supervisors] கண்காணிப்பதுடன், தனிப்பட்ட உடல்நலக் குழுவினரும் [Independant Health Physics Unit] அடிக்கடி உளவு செய்து மேற்பார்வை செய்வதால் மனிதத் தவறுகள் பேரளவு குறைகின்றன.  மேலும் நிலைய நபர்களின் கதிர்ப் பதக்கங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு, புதியவை அளிக்கப்படும்.  பழைய பதக்கங்களின் பதிவுக் கதிரடிகள் [Radiation Doses Recorded] ஆய்வு செய்யப்பட்டு அவரவர் பெயருக்கடியில் நிரந்தரமாய் சேமிப்பாகின்றன.  யாராவது மிகையான அளவில் கதிரடி பட்டிருந்தால் விசாரணைக் குழு அதன் காரணத்தை உளவு செய்யும்.  அவ்விதம் கதிரடிப் பதிவு, உளவு, பதக்க மாற்றம் அனைத்துப் பணிகளையும் தனிப்பட்ட உடல்நலக் குழுவினரே நிலையத்தில் கவனமாகச் செய்து வருகிறார்.       

    3.  கதிரியக்கம், அரை ஆயுள் என்றால் என்ன ?

    நாமறிந்த எளிய ஹைடிரஜன் முதல் கனமான யுரேனியம் வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மூலகங்களில் ரேடியம், பொலோனியம், யுரேனியம், தோரியம், புளுடோனியம் போன்ற கன உலோகங்கள் சுயமாகவே கதிர்வீசுகின்றன.  அவ்விதம் கதிர்வீசி பளு குறைந்து படிப்படியாய் வேறு மூலகங்களாக மாறுகின்றன.  அவற்றின் அணுக்கரு சிதைந்து பொதுவாக வெளியாகுபவை ஆல்ஃபா துகள், பீட்டா துகள், அல்லது காமாக் கதிர்.  மூன்றும் வெளியாகலாம்.  அல்லது மூன்றில் ஒன்று அல்லது இரண்டு வெளியேறலாம்.  இயல் யுரேனியம் [Natural Uranium (U-238+U-235] அணுக்கருவில் சுயப்பிளவுகள் [Spontaneous Fissions] நிகழ்ந்து நியூட்ரான்களும் வெளியேறும். யுரேனியம் ஆஃபா துகள் வீசுவது.  சுயப்பிளவில் விளையும் அணுப்பிளவுத் துணுக்கள் பெரும்பாலும் பீட்டா துகளும், காமாக் கதிர்களும் வெளியிடுகின்றன.  அதைப் போல் செயற்கையாக ஆக்கும் புளுடோனியமும் Pu-239, யுரேனியம் U-233 இரண்டும் சுயப்பிளவாகி வெப்பம் தரும் உலோகங்கள்.  ஆதலால் அணு உலைகளில் பயன்படும் மூன்று முக்கிய கன உலோகங்கள் இயல் யுரேனியம், புளுடோனியம்-239 மற்றும் யுரேனியம் -233.        

    ரேடிய உலோகம் ஆல்ஃபா துகள், காமா வீசுவது.  அவ்விதம் அதன் அணுக்கரு சிதையும் போது, அதன் பளு படிப்படியாய்க் குறைவாகி வருகிறது.  ரேடியத்தின் பளு பாதியாகும் காலத்தை அரை ஆயுள் [Half Life] என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.  அதாவது ஒரு கன உலோகத்தின் அரை ஆயுள் அது தீவிரமாகத் தேய்கிறதா அல்லது மெதுவாகத் தேய்கிறதா என்பதைக் காட்டுகிறது. 

    உதாரணமாக

    ரேடியம் அரை ஆயுள் :  1600 ஆண்டுகள்

    இயல் யுரேனியத்தின் U-238 அரை ஆயுள் : 4.5×10^9 ஆண்டுகள்

    யுரேனியம் U-235 [from Nat Uranium] அரை ஆயுள்: 7.1×10^8 ஆண்டுகள்

    யுரேனியம் [U-233 from Thorium] அரை ஆயுள்: 1.6×10^5 ஆண்டுகள்

    புளுடோனியம் -239 [from Nat Uranium U-238] அரை ஆயுள் : 2.4×10^4 ஆண்டுகள்
     
    தோரியம் -232 அரை ஆயுள் : 1.4×10^10 ஆண்டுகள் 

    4.   அணு உலையில் நிகழும் நியூட்ரான்-அணுக்கரு இயக்கங்கள்:  

    அணு உலையில் நூற்றுக்கணக்கான துளைகளில் நுழைக்கப்பட்டுள்ள யுரேனியக் கோல்களைச் சுற்றிலும் மூழ்க்கும் திரவமாக நீர் எப்போதும் நிரப்பப் பட்டுள்ளது. அதுவே நியூட்ரான் வேகத்தைத் தணிக்கும் மிதவாக்கி [Neutron Moderator] நீராகச் சீரான உஷ்ண அளவில் அணு உலைக்குள் செலுத்தப்படுகிறது.  அணுக்கருவை நியூட்டிரான்கள் பிளக்கும் போது ஒவ்வோர் பிளவிலும் வெப்பசக்தி உண்டாகிறது.  அந்த வெப்பசக்தியைத் தொடர்ந்து கடத்திக் கொதிகலனுக்கு எடுத்துச் செல்ல தனியாக வேறொரு நீரோட்டம் அழுத்தமாக பூதப் பம்ப்புகளால் சுற்றோட்டம் பெறுகிறது.  அது பிரதமக் கனல்தணிப்பு நீரோட்டம் [Primary Coolant] என்று அழைக்கப் படுகிறது.  அணு உலை இயங்கினாலும் இயங்கா விட்டாலும் அந்த பிரதம நீரோட்டம் தொடர்ந்து யுரேனிய வெப்பத்தைச் சீரான உஷ்ணத்தில் கட்டுப்பாடு செய்ய வேண்டும்.

    யுரேனியம் -235 உலோகத்தின் அணுக்கருவில் சுயப்பிளவு எழுவதால் வேக நியூட்ரான்கள் எழுந்த வண்ணம் இருக்கும்.  அந்த நியூட்ரான்களின் வேகத்தைக் குறைக்க நீர்த் தடாகமோ [Water Moderator] அல்லது திரள்கரி [Graphite Moderator] கவசமோ இல்லாவிட்டால் அவை காற்றில் மறைந்து விடும்.  அவ்விதம் மிதவாக்கி இருந்தால் மிதவேக நியூட்ரான்கள் மெதுவாக அடுத்தும் யுரேனிய அணுக்கருவைப் பிளந்து வெப்பசக்தியை வெளியாக்கும்.  நியூட்ரான் கணைகள் யுரேனியத்தைத் தாக்கி உண்டாகும் ஒவ்வொரு அணுப்பிளவிலும், இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் மற்றும் சிறிய பிளவுத் துணுக்குகள் எரிக்கோல் கவசக் குழல்களில் சேமிப்பாகும்.  நியூட்ரான் பெருக்கத்தை அணு உலைக் கலனில் கட்டுப்படுத்துவது இயக்குநரின் முக்கியப் பணி.  நியூட்ரான் எண்ணிகை அதிகமானால், வெப்பசக்தி ஆக்கம் மிகுதி ஆகும்.  நியூட்ரான் எண்ணிக்கை ஒரே எண்ணிக்கையில் கட்டுப் பாடானால், வெப்பசக்தி ஒரே அளவில் உற்பத்தி ஆகிறது. நியூட்ரான் எண்ணிக்கையைக் குறைத்தால் வெப்பசக்தி ஆற்றல் குன்றுகிறது.  அந்தப் பணிக்கு உதவ மூன்று வித நியூட்ரான் விழுங்கிகள் [Neutron Absorbers] தேவைப்படுகின்றன.             

    சிறிதளவு நியூட்ரான் எண்ணிக்கைக் கூட்டிக் குறைக்க கோபால்ட் வில்லைகள் கொண்ட “ஆட்சிக் கோல்கள்” [Adjuster Rods or Control Rods with Cobalt pellets] என்பவை பயன்படும்.  மிகையான எண்ணிக்கையில் விரைவாக விழுங்கி அணு உலையை நிறுத்த காட்மியம் வில்லைகள் கொண்ட “தடுப்புக் கோல்கள்” [Shut-off Rods with Cadmium Pellets] அணு உலைக்குள் நுழைக்கப் பட வேண்டும்.  நியூட்ரான் எண்ணிக்கை மீறிச் செல்லும் போது உடனே நிறுத்தவோ அல்லது அணு உலைப் பராமரிப்பு உத்திரவாதத்துக்கு கடோலினியம் நச்சுத் திரவம் [Gadolinium Poison Injection] மிதவாக்கி நீரில் பாய்ச்சப் படுகிறது.

    a)  ஆறும் தொடரியக்கம் (Sub-critical Nuclear Reaction) :

    அணு உலைத் தொடரியக்கம் (Chain Reaction) என்பது மிதவேக நியூட்ரான்கள் அணுக்கருப் பிளவால் அடுத்தடுத்து அணுக்கருவைத் தாக்கிச் சீராக வெப்பசக்தி உண்டாகி வருவது.  ஒவ்வோர் அணுப்பிளவிலும் நியூட்ரான் எண்ணிக்கை 2, 4, 8, 16, 32, என்று பெருக்கம் அடைவதால் அந்தப் பெருக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட, குறிப்பிட்ட அளவைத் தவிர தேவையற்றவை விழுங்கப்பட வேண்டும்.  

    ஆறும் தொடரியக்கம் என்பது நியூட்ரான் பெருக்கத்தை குறைக்கும் முறை.  நியூட்ரான் விழுங்கிக் கோல்கள் அணு உலைக்குள் இறக்கப்பட்டு வெப்பசக்தி மெதுவாகக் குறைக்கப் படுவது.  இந்த முறை திட்டமிடப் பட்ட பராமரிப்புப் பணிகளுக்காகச் செய்யப் படுவது.

    b)  நிறுத்தும் தொடரியக்கம் [Shutdown State]

    நியூட்ரான் விழுங்கிகள் ஏறக்குறைய இயக்கம் புரியும் அனைத்து நியூட்ரான்களையும் விரைவாக விழுங்கித் தொடரியக்கம் பேரளவு சீக்கிரம் நிறுத்தமாகி வெப்பசக்தி குன்றச் செய்தல்.  இந்த தடுப்பு இயக்கம் சுயமாகவும் நிகழும்.  கையாட்சி முறையிலும் நிகழும்.  அணு உலைகளில் சுயத்தடுப்பு நிகழ்ச்சியைத் தடை செய்ய இயலாது. 

    c)  பூரணத் தொடரியக்கம் : (Criticality)

    அணு உலை இயக்கம் ஆரம்பமாகி முதன்முதலில் உண்டாகித் தாக்கும் நியூட்ரான்களும், அணுக்கருவைப் பிளந்து பிறக்கும் நியூட்ரான்களும் ஒரே எண்ணிகையாகச் சீராகி தணிவான வெப்பசக்தி ஆற்றலில் அணு உலை இயங்குவது.  அணு உலையின் வெப்பசக்தி ஆற்றலை மிகையாக்க இதுதான் அணு உலையின் முன்னோடி நிலை.

    d)  மிஞ்சும் தொடரியக்கம் : (Diverging Nuclear Reaction) 

    அணு உலை “பூரண நிலை” அடைந்த பிறகு ஆட்சிக் கோல்களை மெதுவாக உயர்த்தி சிறிதளவு நியூட்ரான் பெருக்கத்தை ஏற்படுத்தி வெப்ப சக்தி அதிகமாக முனைதல்.  அதைத் தொடர்ந்து அணு உலையை உச்ச ஆற்றலில் இயங்க பின்பற்றப் படும் தொடரிக்கம் அது.

    e)  மீறிய தொடரியக்கம் : (Super-critical Nuclear Reaction)

    மனிதத் தவறாலோ அல்லது ஆட்சிக் கோல்களின் பழுதாலோ அணு உலையில் நியூட்ரான்களின் எண்ணிக்கை பேரளவில் விரைவில் பெருகி, வெப்ப சக்தி கட்டுக்கு அடங்காமல் மிகையாவது.  சோவியத் ரஷ்ய இயக்குநர்கள் செர்நோபில் அணுமின் நிலையில் செய்த மாபெரும் மனிதத் தவறுகளால் தணிவு நிலையில் சோதிப்பு நடக்கும் போது அவ்வித மீறிய தொடரியக்கமே நிகழ்த்தது. 

    முதல் காரணம் ஆட்சிக் கோல்கள் முழுவதும் மேலே கையாட்சியில் தூக்கப்பட்டு நியூட்ரான் பெருக்கம் மிகையானது. 

    இரண்டாவது காரணம் நிறுத்தக் கோல்கள் சுயக் கட்டுப்பாட்டில் இல்லாமல் கையாட்சிக்குக் கொண்டுவரப் பட்டது. 

    மூன்றாவது தானாக நியூட்ரான் விழுங்கிகள் இறங்க முடியாமல், கையாட்சியில் நுழைக்கப்பட்டு அணு உலை நிறுத்தம் தாமதமானது (Chain Reaction).

     

    (தொடரும்)

    ***********************

    தகவல்:

    Picture Credits: 

    1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
    2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
    3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007) 
    4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo 
    5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
    6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
    7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
    8.  Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)
    9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.
    10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants. 
    11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)
    12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)
    13. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)
    14. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]
    15. 
    16. IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction) 
     

    ******************

    S. Jayabarathan [jayabarat@tnt21.com] November 18, 2012

    Share
  • ரேடியம் கண்டுபிடித்த மேடம் கியூரி

     

                               சி. ஜெயபாரதன்,B.E.(Hons), P.Eng.(Nuclear) Canada

     

    புரட்சி செய்த புது யுகக் கதிர்கள்!

    நோபெல் பரிசு பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி, வில்ஹெம் ராஞ்சன் [Wilhem Roentgen] 1895 இல் முதன் முதல் கண்டு பிடித்த எக்ஸ்ரே கதிர்கள் [X Rays], மனிதன் உட்புற அங்கத்தைப் படமெடுக்கும் ஓர் அற்புத ஆய்வுக் கருவியாய், மருத்துவப் பணிக்கு பயன்படுவது போல், கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய அணுவின் அமைப்பை அறியவும் அவை அடிப்படையாய் இருந்தன. அவரைப் பின் தொடர்ந்து பிரென்ச் விஞ்ஞானி, ஹென்ரி பெக்குவரல் [Henri Becquerel] 1896 இல் ஒளிவீசும் உலோகம் அவ்வாறு எக்ஸ்ரே கதிர்களை எழுப்புகிறதா என்று ஆராய்ச்சி செய்யும் போது பிட்ச்பிளன்டி தாதுவில் [Pitchblende Ore] யுரேனிய உப்புக்கள் [Uranium Salts] ஒருவிதக் கதிர்களை வெளியாக்குவதைக் கண்டார். அப்புதிய கதிர்கள் எக்ஸ்ரே கதிர்களை விடப் பன்மடங்கு ஊடுருவுத் திறனைக் கொண்டிருந்தன.

    பெக்குவரலைப் பின்பற்றிப் பிரென்ச் மாது மேரி கியூரி, அவரது கணவர், பியரிக் கியூரி [Marie & Pierre Curie] இருவரும் யுரேனியத்தைப் போல் வேறு உலோகமும் கதிர் வீசுகிறதா என்று பிட்ச்பிளன்டி தாதுவைத் தொடர்ந்து சோதித்தார்கள். அப்போதுதான் யுரேனியத்தை விடப் பல மடங்கு உக்கிரம் கொண்ட கதிர்களை வெளியாக்கும் பொலோனியம் [Polonium], ரேடியம் [Radium] என்னும் புதிய இரு மூலகங்களைக் [Elements] கண்டு பிடித்தார்கள். யுரேனியம், தோரியம், ரேடியம், பொலோனியம் இவற்றில் எழும் கதிர்கள், எக்ஸ்ரே போல் மின்சக்தி துணையின்றித் தாமாகவே உலோகத்திலிருந்து தொடர்ந்து எப்போதும் வெளி வந்து கொண்டி ருந்தன. மேரி கியூரி அந்த இயற்கை நிகழ்ச்சிக்குக் கதிரியக்கம் [Radioactivity] என்று பெயரிட்டார். இவ்வரிய கண்டு பிடிப்புக்காக, மேரி கியூரி, பியரி கியூரி, ஹென்ரி பெக்குவரல் மூவருக்கும் பெளதிக விஞ்ஞானத்திற்கு 1903 இல் நோபல் பரிசு அளிக்கப் பட்டது. அடுத்து மேரி கியூரி ரேடியம் கண்டு பிடித்ததற்குத், தனியாக இரசாயன விஞ்ஞானத்திற்கு 1911 இல் நோபல் பரிசு பெற்றார். இதுவரை இரண்டு நோபெல் பரிசு பெற்ற முதல் விஞ்ஞானப் பெண் மேதை, மேரி கியூரி ஒருவரே.

     

    இருளில் கதிர் ஒளி கண்ட வைர மங்கை.

    மேரி கியூரி இருளில் ஒளியைக் கண்டவர்! அவரது சரிதை வறுமையில் உயர்ச்சி! அபார சிந்தனையும், அளவற்ற பொறுமையும், அசுர சக்தியும் கொண்டு, விஞ்ஞானம் ஒன்றுக்காகவே தன் வாழ் நாட்களை அர்ப்பணித்த ஒரு பெண் மேதையின் வரலாறு! 1867 நவம்பர் 7 ஆம் தேதி போலந்திலுள்ள வார்சா நகரில் வறுமையில் வாழும் பிரென்ச் பெற்றோருக்கு மேரி கடேசிப் புதல்வியாய்ப் பிறந்தார். தந்தையார் பெளதிகம் கற்பிக்கும் ஒரு பள்ளி ஆசிரியர். தாயார் ஒரு பள்ளிக் கூடத்தின் தலைமை ஆசிரியை. கூடப் பிறந்தவர், நான்கு சகோதரிகள்; ஒரு சகோதரன். மூத்தவள் பெயர், பிரானியா. எல்லாப் பிள்ளைகளை விடவும், சிறு வயதிலேயே மேரி மிக்க அறிவோடு காணப் பட்டாள்.

    அப்போது போலாந்து ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், அடிமை நாடாக இருந்தது! போலந்து பல்கலைக் கழகத்தில் பெண்கள் கற்க அனுமதிக்கப் படாததால் மேரி, பிரானியா இருவரும் மேற் படிப்புக்காகப் பாரிஸ் நகருக்குச் செல்ல விரும்பினார்கள். ஆனால் அந்த ஆசை நிறைவேற அவர்களிடம் போதிய பணத்தொகை கைவசம் இல்லை. உயர்நிலைப் பள்ளியை 15 வயதில் முடித்தபின், மேரி ஆறு ஆண்டுகள் [1885-1891] ஓர் இல்லத்தில் தணிக்கை மாதாக [Governess] வேலை செய்து பணம் சேர்த்து, முதலில் பிரானியா பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற உதவ வேண்டிய தாயிற்று. பிறகு பிரானியா வேலையில் சம்பாதித்து, மேரியின் மேற்படிப்பை முடிக்க உதவி செய்தாள். மேரியின் முன் ஆலோசனைப் படி, அத்திட்டம் வெற்றி யடைந்து, தன் 24 ஆம் வயதில் மேரி முதன் முதல் 1891 ஆண்டு பாரிஸூக்குப் பயணம் செய்தாள்.

    பாரிஸ் கடுங்குளிரில் சரியான உணவு, உடை இல்லாமல், பாழடைந்த தங்குமிடத்தில் மேரி சிரமத்தோடு படித்து வந்தாள். மாதம் 100 பிராங்க் நிதித் திட்டத்தில் [கல்லூரித் தவணை உட்பட], பணம் பற்றாமல் பல நாட்கள் வெறும் ரொட்டி, சாக்லெட், சிறு பழத்தைத் தின்று காலம் தள்ள வேண்டிய தாயிற்று. சில சமயம் பசியில் மயக்கமாகிக் கிடந்திருக்கிறாள். அவற்றை எல்லாம் பொருட் படுத்தாது, மேரி ஆழ்ந்து படித்துக் கல்லூரியில் 1893 இல் முதல் மாணவியாக M.Sc. பெளதிக விஞ்ஞானத்திலும், அடுத்த ஆண்டு M.Sc. கணிதத்திலும் பட்டம் பெற்றார். அதன்பின் லிப்மன் ஆய்வுக் கூடத்தில் வேலையில் சேர்ந்து பணியாற்றும் போது தான், அங்கு ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தன் எதிர்காலக் கணவர், பியரி கியூரியைச் சந்தித்தார். பியரி ஓர் உன்னத பெளதிக விஞ்ஞானி. இருவரும் காதல் வயப்பட்டு, 1895 இல் திருமணம் செய்து, அவர்களுக்கு ஐரீன், ஈவ் [Irene & Eve] என்ற இரு பெண் பிள்ளைகள் பிறந்தனர். மேரியும், பியரியும் அடுத்த பத்தாண்டுகள் ஒன்றாக ஆராய்ச்சிகள் நடத்தி, நோபல் பரிசு பெற்று ரேடியம், பொலோனியம் போன்ற மகத்தான கதிர் ஒளிவீசும் உலோகங்களைக் கண்டு பிடித்து உலகை வியப்புள் ஆழ்த்தினார்கள்!

    தீவிரக் கதிர்வீசும் ரேடியம், பொலோனியம் கண்டுபிடிப்பு

    ஹென்ரி பெக்குவரல் சோதித்த போது, யுரேனிய உலோகம் உமிழ்ந்த புதுவிதக் கதிர்கள், அவர் வைத்த வெள்ளி நாணயத்தைச் சுற்றிலும் கருமை நிறங்காட்டிப் படமெடுத் திருந்தது. 1898 இல் அதைப் படித்தறிந்த மேரி கியூரி தானும் சோதித்த போது, யுரேனியத்தைப் போன்று, தோரியமும் [Thorium] கதிர் வீசுவதைக் கண்டார். இதுவே அவரது முதற் கண்டு பிடிப்பு. யுரேனியத்திலும், தோரியத்திலும் ஒளிச்சக்தி எவ்வாறு எழுகிறது ? எக்ஸ்ரே போன்று புறத் தூண்டுதல் எதுவும் இல்லாது, உலோகங்களில் கதிர்கள் எப்படி எழுகின்றன ?

    விந்தையான அந்தக் கதிர்கள் என்னவாக இருக்க முடியும் ? என்று மேரி ஆழ்ந்து சிந்தித்தார். ‘தங்க இதழ் மின்காட்டிக் ‘ [Gold Leaf Electroscope] கருவியில் யுரேனியத்தை வைத்து மேரி சோதித்ததில், இதழ்கள் மின்கொடை [Electrically Charged] இழந்து, கதிர்கள் காற்றை மின்கடத்தியாக [Conductor] மாற்றுவதைக் கண்டார்.

    தெள்ளத் தெளிய அறிந்திட, பிட்ச்பிளன்டி தாதுவதைச் [Pitchblende Ore] சிறிது எடுத்து, அதிலுள்ள யுரேனியம் முழுவதையும் பிரித்தெடுத்து, தங்க இதழ் மின்காட்டியில் மறுபடியும் சோதித்தார். என்ன ஆச்சரியம்! எஞ்சிய பிட்ச்பிளன்டி, எடுத்த யுரேனியத்தை விட அதி விரைவாய் இதழ்களின் மின்கொடையை இழக்கச் செய்தன! அதாவது கரடு முரடான பிட்ச்பிளன்டி வீசும் கதிர்கள், சுத்தமான யுரேனியக் கதிர்களை விட தீவிரம் வாய்ந்தன, என்று அறிந்தார்! அப் புதிருக்கு முடிவான தீர்ப்பு ஒன்றே ஒன்று தான். ஏதோ ஓர் அதிசய, யாரும் அறியாத உலோகம், பிட்ச்பிளன்டி தாதுக் குள்ளே ஒளிந்து கொண்டு, யுரேனியத்தை விட அதி உக்கிரக் கதிர்களை உண்டாக்கி வருகிறது! மேரி வேறு ஒரு யுரேனியத் தாது சால்கொலைட்டைச் [Chalcolite] சோதித்த போது, அதே கதிர் எழுச்சி விளைவுகளைக் கண்டார். அந்த சமயத்தில்தான் கணவரும் மனைவியும் சேர்ந்து உழைத்தார்கள். அடுத்த மூன்று மாதங்கள் மேரியும், பியரியும் இராப் பகலாக உழைத்து, பிட்ச்பிளன்டியை சுத்தீகரித்துச் சோதித்ததில், யுரேனியத்தை விட 400 மடங்கு அதிகக் கதிர்வீசும் முதல் புதிய மூலகம் [Element] ஒன்றைக் கண்டு பிடித்தார்கள். அதற்கு மேரி தன் பிறந்த நாட்டு நினைவாக, ‘பொலோனியம் ‘ [Polonium] என்று பெயரிட்டார். அத்துடன் அவரது ஆராய்ச்சிப் பணி முடியவில்லை. பொலோனியத்தைப் பிரித்தெடுத்த பின்னும் உக்கிரக் கதிர்வீச்சு, முன்னை விட மிக்க அளவில், அதிசயமாக மிஞ்சிய பிட்ச்பிளன்டியில் வந்து கொண்டிருந்தது! அந்த உலோகத்தின் கதிர் எழுச்சி யுரேனிய இயக்கத்தை விட 900 மடங்கு அதிகமாக இருந்தது. 1898 இல் இம்மியளவு [மில்லியனில் ஓர் பங்கு] உள்ள அந்த அபூர்வ ஒளி உலோகத்தைப் பிரித்து அதற்கு ரேடியம் என்று மேரி பெயரிட்டார்.

    ஆனால் மிகச்சிறு நுண்ணளவில் பிரிக்கப் பட்ட ரேடியம், பொலோனியம் இரசாயனக் குணங்களை அறியப் போதாது. அவற்றின் அணுப்பளுவைக் [Atomic Mass] கணக்கிடாமல், கண்டு பிடிப்பை அகில நாடுகளுக்கும் வெளிப் படுத்த முடியாது. மில்லியனில் ஒரு துகளாய் இருக்கும் புதிய உலோகத்தைக் கடைந் தெடுத்து, சிறிதளவு திரட்டக் குறைந்தது ஒரு டன் பிட்ச்பிளன்டி தேவைப்படும்! அந்த அளவுத் தாது எங்கே கிடைக்கும் ? கிடைத்தாலும் எங்கே இறக்கி வைப்பது ? பிறகு இரசாயன முறையில் எப்படிச் சுருக்கம் செய்து புதிர்ப் பொருளைப் பிரித்து எடுப்பது ? இந்த இமாலய முயற்சியில் மேரியும், பியரியும் போதிய நிதியின்றி, நிலமின்றி, ஆய்வகம் இன்றி, துணிந்து ஆழம் தெரியாமல் காலை வைத்தார்கள்!

    எதிர்பாராத விதமாக, பொஹீமியா சுரங்கத்தில் யுரேனியம் மீட்கப் பட்டு எஞ்சிய பிட்ச்பிளன்டி கழிவுச் சாம்பல் ஒரு டன், அவர்களுக்கு நன்கொடையாகக் கிடைத்தது. ஒருவரும் நாடாத, கூரை ஒழுகும், இடிந்து போன ஒரு மரப் பட்டறையில், 45 மாதங்கள் குளிரில் நடுங்கி, வேனல் காலத்தில் வேர்வை சிந்தி, ஒரு டன் தாதுச் சாம்பலைச் சிறுகச் சிறுக, மேரி இராப் பகலாய்ச் சலித்தும், ரசாயன முறையில் வடி கட்டியும், கடேசியில் அவர்களுக்கு வேண்டிய 0.1 கிராம் தூய ரேடியம் 1902 இல் வெற்றி கரமாய்க் கிடைத்தது! 1903 ஆம் ஆண்டில் ரேடியத்தைப் பற்றியும், கதிரியக்கம் பற்றியும் தயாரித்த அற்புத வெளியீட்டுக்கு, மேரி கியூரி டாக்டர் பட்டம் பெற்றார்.

    ரேடியத்தின் குணாதிசயங்களும் கதிர்வீச்சின் பயன்பாடுகளும்

    ரேடியம் இருட்டில் சுடர் விட்டு மிளிர்ந்தது. பியரி கியூரி ரேடியத்தின் ‘ஒளிர்வு ‘ [Luminosity] ‘காந்தத் தளத்தில் நடப்பு ‘ [Behaviour in Magnetic Field] போன்ற கதிர்களின் பெளதிகக் குணங்களைச் சோதித்தார். வெளிவரும் கதிர்கள் நேர், எதிர், நடு மின்னியல் [Positive, Negative & Neutral Charge] கொண்டிருப்பதைப் பியரி கண்டறிந்தார். மேரி கியூரி அந்தக் கதிர்வீச்சு நிகழ்ச்சிக்குக் ‘கதிரியக்கம் ‘ [Radioactivity] என்று பெயரிட்டார். இரண்டு ஆங்கில விஞ்ஞானிகள் வில்லியம் ராம்சே, பிரடரிக் சாடி [Ramsay & Soddy] 1903 இல் யுரேனியம், ரேடியம் ஒரு வித வாயுவை உண்டாக்குகின்றன எனக் கண்டு, அதற்கு ஹீலியம் [Helium] என்று பெயரிட்டனர். ரேடிய உலோகம் தானே ஹீலிய வாயுவாக மாறி ரசவாதம் [Alchemy] புரிவதாக நினைத்தார்கள்! ஏர்னெஸ்ட் ரூதர்போர்டு [Ernest Rutherford] பின்னால் அவற்றுக்கு ஆல்பா, பீட்டா, காமாக் கதிர்கள் [Alpha, Beta, Gamma Rays] எனப் பெயர் அளித்தார். ஆல்பாத் துகளே ஹீலிய வாயு என்று நிரூபிக்கப் பட்டது.

    வெள்ளிபோல் தோன்றும் ரேடியம் இருளில் சுடர் வீசி ஒளிர்கிறது. யுரேனியத்தை விட இரண்டு மில்லியன் மடங்கு ஒளிச்சுடரை, ரேடியம் வீசுகிறது. கண்ணாடிக் கூஜாவில் வைத்தால் கண்ணாடி வயலட் நிறத்தில் மாறுகிறது. ரேடியம் அருகில் உள்ள எல்லாப் பொருட்களையும் தாக்கி, அவைகளும் கதிரியக்கம் உண்டாக்கத் தூண்டுகிறது. ஒரு காலத்தில் ரேடியக் கலவைக் கடிகார முட்களிலும், கருவி எண்களின் முகப்பிலும் இருட்டில் தெரியப் பூசப் பட்டது. 1930 இல் ரேடிய மையைத் தொட்டுத் தடவிய தொழிலாளிகள் எல்லோரும் தீவிரக் கதிர்த் தீங்குகளால் [Radiation Injury] தாக்கப் பட்டு அனிமியா [Anemia], எலும்புப் புற்றுநோயில் [Bone Cancer] மாண்டதால் அம்முறை நிரந்தரமாக நிறுத்தப் பட்டது. முதலில் புற்றுநோய் சிகிட்சைக்கு ரேடியத்தின் கதிர்வீச்சு [Radiation Therapy] பயன் படுத்தப் பட்டது. இப்போது அதை விட மலிவாய்க் கிடைக்கும் கோபால்ட்60 [Cobalt60], சீஸியம்137 [Cesium137] போன்ற கதிர் ஏகமூலங்கள் [Radio Isotopes] மருத்துவக் கூடங்களில் உபயோக மாகின்றன. அணு ஆய்வுக் கூடங்களில் ‘ரேடியம் * பெரில்லியம் ‘ [Radium Beryillium] சேர்க்கை, ‘நியூட்ரான் சுரப்பி ‘ [Neutron Source] யாகப் பயன் பட்டு வருகிறது.

    ரேடியம் நீரில் வீரியமாய் இயங்கி ஹைடிரஜன் வாயுவை வெளியாக்குகிறது. வெள்ளி உலோகத்தின் பாதி அளவு திணிவு [Density] கொண்டது, ரேடியம். நடத்தையில் பேரியம் மூலகத்தைப் போன்றது, ரேடியம். பெரில்லியம், மக்னீஸியம், கால்சியம், பேரியம், ஸ்டிரான்சியம், ரேடியம் யாவும் இராசயனக் குணங்கள் ஒன்றிய ஓரின மூலகக் குழுவைச் சேர்ந்தவை. ரேடியத்தின் வீரியக் கதிர்கள் ஈயத்தைத் தவிர மற்றும் எல்லா உலோகங்களையும் ஊடுறுவிப் பாய்கின்றன. ஆதலால் ரேடியக் கதிர்ச் சுரப்பிக் [Radium Source] கலன்களில் கதிர்க் கவசமாக [Shielding] ஈயம் உபயோக மாகிறது.

    தீவிர ரேடியத்தின் தேய்வு! தாய்மூலகம்! சேய்மூலகம்! அரை ஆயுள்!

    ரேடியம் மற்ற உலோகங்கள் போல் தனியாய் பூமியில் இயற்கையாகக் கிடைப்ப தில்லை. மேலும் யுரேனியம், தோரியம், ரேடியம், பொலோனியம் யாவும் சிறுகச் சிறுகத் தேய்கின்றன! பூமி தாதுக்களில் கிடைக்கும் இயற்கை யுரேனியம் [Natural Uranium] கதிரியக்கத்தால் சிதைந்து [Disintegration], ‘தேய்வு விளைவு ‘ [Decay Product] உலோகமாய்ப் பிட்ச்பிளன்டியில் இருப்பது போல் யுரேனியத்துடன் சேர்ந்தே, ரேடியம் காணப் படுகிறது. அதாவது ‘யுரேனியத் தேய்வுச் சீரணியில் ‘ [Uranium Decay Series] ஆல்பாத் துகள்கள் வெளியேறி, யுரேனியத்தின் பளு குன்றித் தேய்ந்து உண்டாவது, ரேடியம்226. அதுவே மிகுந்த காலம் இருக்கும் ரேடிய ஏகமூலம் [Most Stable Isotpe]. கதிரியக்கத்தால் ரேடியம் தொடர்ந்து சிதைந்து போய், அதன் பளுவும் [Mass] குறைந்து கொண்டு வருகிறது. ரேடியம் போல் சிதையும் அணுக்களின் பளு பாதி பாதியாய் ஆகும் காலம், ஒரு நிலை இலக்கம் [Constant]. அந்தக் கால நிலை இலக்கம், ‘அரை ஆயுள் ‘ [Half Life] எனப் பெயர் பெறும்.

    மிகுந்த காலம் நிலைக்கும் ரேடியம்226 அரை ஆயுள் 1620 ஆண்டுகள். அது போன்று பொலோனியம்210 இன் அரை ஆயுள் 200 ஆண்டுகள். ரேடியம்226 இன் தாய்மூலகம் [Parent Element] தோரியம்230! ரேடியம்226 இன் சேய்மூலகம் [Daughter Element] ரேடான்222 [Radon222]. பின்னால் செய்த ஆராய்ச்சிகளில் ஆல்பாத் துகள் ஹீலிய அணுவாக அறியப் பட்டது. தாய்மூலகமான யுரேனிய238 அணுச் சிதைவில் பளுவிழந்து, சுய ரசவாதம் புரிந்து, சேய் மூலகங்கள் தோரியம், ரேடியம், ரேடான், பொலோனியம் இவற்றைப் பெற்று, இறுதியில் நிலையான ஈயமாக மாறுகிறது. அந்த உலோகங்கள் அனைத்தும் வெவ்வேறு அரை ஆயுட்கள் கொண்டுள்ளதால், யுரேனியத் தாதுவில் அம் மூலகங்கள் யாவும் ஒரே சமயத்தில் தென்படுகின்றன.

    பிட்ச்பிளன்டியில் தானாய்ச் சிதையும் மூலகங்கள் [யுரேனியத் தேய்வுச் சீரணி]

    பிட்ச்பிளன்டியில் மேரி கியூரி கண்ட யுரேனியம், தோரியம், ரேடியம், பொலோனிய ஏகமூலங்கள் எல்லாவற்றையும் யுரேனியத் தேய்வுச் சீரணியில் காணலாம். தேய்வு மூலகங்கள் யாவும் முடிவில் ஈயம்206 அணுப்பளு கொண்ட நிலைமூலகம் [Stable Isotope] ஆகின்றன!

    அணு யுகத்திற்கு அடிகோலிய கியூரி குடும்ப விஞ்ஞானிகள்

    ஐரீன் கியூரியும், அவரது கணவர், பெரடெரிக் ஜோலியட்டும் [Irene Curie Joliot & Frederic Joliot] சேர்ந்து, 1932 இல் ஆல்பா துகளைக் கணையாக ஏவி, குறியாக போரான், அலுமினியம், மெக்னீஸியம் போன்ற மூலகங்களை வைத்து அடித்ததில், செயற்கை முறையில் நைட்ரஜன், பாஸ்பரஸ், அலுமினியம் மூலகங்களில் கதிரியக் கத்தை முதன் முதல் உண்டாக்கி விஞ்ஞானத்தில் விந்தைகள் புரிந்தார்கள். செயற்கைக் கதிரியக்கத்தை [Artificial Radioactivity] மூலகங்களில் [Elements] உண்டாக்கி, அத்தோடு விஞ்ஞான இரசவாதத்தைச் [Alchemy] செய்து காட்டி, இருவரும் 1935 இல் இணைந்து நோபல் பரிசு பெற்றார்கள். 19-20 நூற்றாண்டு விஞ்ஞானச் சரித்திரத்தில் கியூரி குடும்பத்தில் மட்டும் நால்வர் “இயற்கை செயற்கைக் கதிரியக்கத்திற்கு” மூன்று நோபல் பரிசைத் தட்டிக் கொண்டு போய் விட்டார்கள்!

    முதல் அணுப் பிளவைத் தூண்ட அடிகோலியது, ஜோலியட்-கியூரி செய்து காட்டிய செயற்கைக் கதிரியக்கமே. ஜோலியட்-கியூரியைப் பின் தொடர்ந்து, இத்தாலிய விஞ்ஞான மேதை, என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] 1934 இல் நியூட்ரான் கணைகளை யுரேனிய235 உலோகம் மீது ஏவி, முதன் முதல் அணுவைப் பிளந்து [Nuclear Fission] அணுக்கருவினுள் அடங்கிக் கிடக்கும் பிரம்மாண்டமான சக்தியை வெளியேற்ற ஏதுவாயிற்று! ஆனால் ஃபெர்மிக்குத் தான் அணுவை பிளந்தது அப்போது தெரியாமல் போய் விட்டது! 1939 இல் ஜெர்மன் விஞ்ஞானிகள், ஆட்டோ ஹான், ஃபிரிஷ் ஸ்ட்ராஸ்மனும் நியூட்ரான் கணைகளை ஏவி யுரேனிய அணுவைப் பிளந்து, உலகுக்கு முதலில் அறிவித்தார்கள். எக்ஸ்ரேயில் ஆரம்பித்த ‘கதிர் யுகம் ‘ கியூரி தம்பதிகள் ரேடியத்தைக் கண்டு பிடிக்க வைத்து, கதிரியக்கத்தை விளக்கச் செய்து 50 ஆண்டுகளுக்குள் உலகை அணு யுகத்திற்குத் திருப்பியது, இருபதாம் நூற்றாண்டில் ஒரு மாபெரும் நிகழ்ச்சி!

     

    ரேடியத்தாலே புகழடைந்து, ரேடியத்தாலே மரணம்!

    வளர்த்த கடா மார்பிலே பாயும், என்னும் பழமொழியின் கூற்றுப்படி, கியூரி தம்பதிகள் இருவரும், தாங்கள் இராப் பகலாய் உழைத்துக் கண்டெடுத்த ரேடியக் கதிர்களின் கூரிய தீ அம்புகளுக்கு இரையாகினர்! ரேடியத்தை அடிக்கடிக் கையாண்ட பியரி கியூரியின் கைகளைத் தீக்கதிர்கள் சுட்டுப் புண்ணாக்கித் தோலை உரித்து விட்டன! எதிர்பாராத விதமாக 1906 ஏப்ரல் 19 இல் தனது 46 ஆம் வயதில் வீதியில் நடந்து செல்லும் போது, திடீரென அவர் மேல் குதிரை வண்டி ஏறி, விபத்தில் மாண்டார் பியரி. அந்தக் கோர மரணச் சம்பவம் மேரியை மிகவும் பாதித்து விட்டது. பத்தாண்டு காலம் மேரியுடன் இணைந்து ஆராய்ச்சிகள் செய்து ரேடியம், பொலோனியம் இரண்டையும் கண்டு பிடித்து, இணையாக நோபல் பரிசு பெற்ற ஒப்பில்லா விஞ்ஞான மேதை! கணவர் இறந்தபின் தனியாக ஆறு வயது ஐரினையும், இரண்டு வயது ஈவையும் வளர்த்து, எஞ்சிய நேரத்தை விஞ்ஞான ஆய்வுக்கு அர்ப்பணித்து, மேரி கியூரி மேலும் 28 ஆண்டுகள் வாழ்ந்து, மற்றும் சில அரிய ஆக்கப் பணிகளைச் செய்து முடித்தார்.

    முதல் உலக மகா யுத்தத்தின் போது [1914-1918] மேரியும், ஐரீனும் இணைந்து எக்ஸ்ரே கதிர்ப்பட வரைவைச் [X-rays Radiography] சீர்ப்படுத்தி, காயம் அடைந்தோர்க்கு நோய் ஆய்வுக் கருவியாய் [Medical Diagnosis] ஏற்பாடு செய்தார்கள். 1921 இல் தன் புதல்வியரை அழைத்துக் கொண்டு, மேரி கியூரி அமெரிக்காவுக்குச் சென்ற போது, ஜனாதிபதி வாரன் ஹார்டிங் [Warren Harding] அவரை வரவேற்று, உபசரித்து அமெரிக்க மாதர் நிதி திரட்டி வாங்கிய ஒரு கிராம் ரேடியத்தைப் பரிசாக அளித்தார். வார்சாவில் 1932 இல் ரேடிய ஆய்வகத்தை நிறுவி, தன் தமக்கை பிரானியாவை ஆணையாளராய் [Director] நியமித்தார். இறுதியில் பரிதாபகரமாக ரேடியக் கதிர்களுக்குப் பலியாகி, லுக்கிமியாவில் [Leukemia] நோய் வாய்ப்பட்டு 1934 ஜூலை 4 ஆம் தேதி விண்ணுலகு எய்தினார்.

     

     

     

    ரேடியம் கண்டு பிடிக்கவே பிறந்து, ரேடியக் கதிரியக்கம் தாக்கியே இறந்த மாதருள் மாணிக்கம், மேரி கியூரிக்கு இரங்கல் அஞ்சலி செய்த, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியது: “வைர நெஞ்சம், ஒருநோக்குக் குறிக்கோள், மெய்வருத்தம் மீறிய விடாமுயற்சி, அழுத்தமான கருத்து, அசைக்க முடியாத தீர்ப்பு இவை யாவும் ஒருங்கிணைந்த தனித்துவ மாது, மேரி கியூரி! அவரது வாழ்வின் அசுர விஞ்ஞான சாதனை, கதிரியக்க மூலகங்களின் இருப்பை நிரூபித்து, அவற்றைப் பிரித்துக் காட்டியது! விஞ்ஞான ஆராய்ச்சிச் சரித்திரம் இதுவரைக் கண்டறியாத அச்சமற்ற யுக்தியோடு, கடுமையான இடையூறுகள் தடுப்பினும், அவற்றைத் தாண்டிச் செய்த ஓர் அரிய ஆக்கம்!”

     

    *******************************

    Information :

    1. http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1903/marie-curie-bio.html

    2.  http://en.wikipedia.org/wiki/Marie_Curie

    3.  http://en.wikipedia.org/wiki/Pierre_Curie

    4.  http://www.ocrwm.doe.gov/curriculum/unit2/lesson2reading.shtml

    +++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com)  November 18, 2012 (R-2)

    Share
  • காதல் கல்யாணம்

     

    என். சுவாமிநாதன்

    காலையில் கண்விழிக்குமுன் அந்த உரையாடல் என் காதில் கேட்டது.

    என் மனைவியும் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    “எங்கடி உன் கத்திரிக்கோல் ? அப்பாக்குத் தலையில முடி வளர்ந்து அசிங்கமா இருக்கு. நாமளே வெட்டி விடலாம். இல்லாட்டி கடைக்குப்
    போயி ஏகப்பட்ட காசு செலவழிச்சு வெட்டிண்டு வருவார்”

    “அம்மா. கத்திரிக்கோல் ஸ்கூல் காபினெட்ல இருக்கு. அது முடி வெட்டற கத்திரிக்கோல் இல்ல. பேப்பர்தான் வெட்டும்”

    “அது போறும் உங்கப்பாக்கு முடி வெட்ட. நாளைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு வரச்சே எடுத்துண்டு வா”

    இதைக் கேட்டவுடனே எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. “பாவிகளா, என் தலைதான் கிடச்சுதா உங்களுக்கு. நீங்க அம்பது, நூறுன்னு செலவழிச்சு ஹேர்டிரஸ்ஸிங் பண்றது தெரியல. நான் வருஷத்துக்கு ரெண்டு தடவை சலூனுக்கு போனா உறுத்தறதா”.. சொல்லத்தான் நினைத்தேன், ஆனால் வெளியே சொல்லவில்லை.

    அன்றே காலையே நான் வழக்கமாகப் போகும் மரியாவின் சன் சலூனுக்கு போய்விட்டேன்.

    சலூனில் மரியா ஒரு ஜப்பானியக் கிழவருக்கு முடி திருத்திக் கொண்டிருந்தாள்.
     
    என்னைப் பார்த்து, ”குட் மார்னிங். கம். ஸிட் டவுன். யு ஆர் நெக்ஸ்ட்” என்றாள்.

    சோபாவில் அமர்ந்து அங்கிருந்த ஸ்பானிஷ் பத்திரிக்கைகளைப் புரட்டினேன். மரியா ஸ்பானிஷ்காரி. ஆங்கிலம் கொஞ்சம் பேசுவாள். ஸ்பானிஷும் இங்கிலீஷும் கலந்து அவள் பேசுவதில் பாதி புரியாது. ஆனால் தொழிலில் கெட்டிக்காரி.

    அரைமணி ஆச்சு. இன்னமும் சிரத்தையாக திருத்திக் கொண்டிருந்தாள்.

    அவள் முடி வெட்டிக் கொண்டிருந்த ஆளுக்கு தலையில் மிகக் கொஞ்சமே முடி இருந்தது. கவுண்டமணி மாதிரி அந்த ஆள் மீது பாய்ந்து இருக்கிற முடியைப் பிடுங்கி கையில் கொடுத்து முடி வெட்டியாச்சு, இந்த இடத்தை விட்டு ஓடுடா என்று சொல்லலாமா என்று தோன்றியது.

    அப்பொழுது எனக்கு பீட்டர் நினைவு வந்தது.

    ”மரியா.. நேரமாகுமா.. உன் தம்பி பீட்டர் இருக்கானா ? வருவானா?” என்றேன்.

    “பீட்டர்…நோ கம் ”….

    மொட்டையா இப்படிச் சொன்னது எனக்கு புரியவில்லை.

    லீவு எடுத்துவிட்டானோ இல்லா லேட்டா வருவானோ..

    ஆறுமாசம் முன்னால் வந்தபோது மரியா ஒரு சிறுவனுக்கு முடி வெட்டிக் கொண்டிருந்ததால், பீட்டரைத்தான் எனக்கு முடி வெட்டச் சொன்னாள். ”பீட்டர் என் தம்பி, மெக்சிகோவிலிருந்து வந்திருக்கிறான்” என்று விளக்கினாள்.

    பீட்டர் வந்து எனக்கு வணக்கம் சொன்னான். நாற்காலியில் அமர வைத்தான். என் மூக்குக் கண்ணாடியை வாங்கி மேசைமீது வைத்தான். என்னை கழுத்தைத் துணியால் போர்த்தினான்.

    தலை முழுவதும் தபலா வாசிப்பது போல விரலால் தட்டி, “ லாங் ?மீடியம் ? ஷார்ட் ?” என்று வினவினான்.

    மரியா இப்படிக் கேட்கமாட்டாள். அவளுக்கு ஷார்ட் என்று சொல்ல வராது. ஷாட் என்றே சொல்வாள். “ஷாட், நோ ஷாட்” என்பாள்.   ஷாட் என்றாள் முடியைச் சின்னதாக வெட்டிவிடுவாள், நோ ஷாட் என்றால் தலை மொட்டையாகும்.

    மையமாக “மீடியம் லாங்” என்றேன்.

    இது புரியாமல் மரியாவிடம் அவன் ஏதோ கேட்க, அவளுக்கும் இவனுக்கும் ஸ்பானிஷில் ஒரு வாக்குவாதம்  நடந்தது. கடைசியில் மரியா பீட்டரிடம் ஒரு கத்திரிக்கோலை எடுத்துக் கொடுத்தாள். அவளிடம் பலமுறை கேட்டு பற்பல கத்திரிக்கோல்களால் வெட்டினான். என் தலை ஒரு முடி வெட்டலில் அவ்வளவு தினுசு கத்திரிக்கோல்கள் கண்டதில்லை. எனக்கு முன்னும் பின்னாலும் ஒரடி தள்ளிநின்று ஏதோ பார்ப்பான். பிறகு பாய்ந்து வந்து வெட்டுவான். அவனிடம் ஒரு சிற்பக் கலைஞனின் நேர்த்தியும், கவனமும் இருந்தன.

    அவனுக்கு திருப்தி ஏற்பட்டதும் ஒரு கத்தியைத் தீட்டி என் முகத்தில் சோப்புத் தடவி மழிக்க ஆரம்பித்தான்.

    திடீரென்று “ஃபிரம் இண்டியா?” என்றான்.

    நான் தலையசைக்க, “நேற்றிரவு ஒரு இண்டியா படம் பார்த்தேன். பாட்டு சூப்பர். டான்ஸும் சூப்பர்” என்றான்.

    என்ன படம் என்று கேட்டதற்கு அவனால் சொல்ல முடியவில்லை. மரியாவைக் கேட்க அவளுக்கும் சொல்ல முடியவில்லை. ”அந்தக் கதநாயகி அழகாக இருந்தாள். பெயர் தெரியவில்லை. இப்படி இருப்பாள்” என்று கைக் கத்தியால் காற்றில் ஒரு படம் வரைந்தான். அளவுகளைப் பார்த்தால் நமீதா அல்லது மல்லிகா ஷெராவத் என்று தோன்றியது.

    கொஞ்ச நேரம் முக மழிப்புக்குப்பின் “ அந்தப் படத்துல எனக்கு ஒண்ணு புரியல. கதாநாயகியும் கதாநாயகனும் ஏழைங்க. எப்படி அவங்களுக்கு பிரான்ஸுலயும், கனடாவிலயும் போய் டான்ஸ் ஆடமுடியுது? காசு ஏது ?” என்றான்.

    எனக்கும்தான் அது புரியவில்லை. ”அது கனவு சீன்தான். காசு செலவு இருந்திருக்காது” என்று ஏதோ சொன்னேன்.

    “இன்னொரு விஷயம். அவள் அழகா இருக்கா. அவளோட பாய்ஃபிரண்டும் நல்லா இருக்கான். ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு இருக்கு. ஏன் அவள் அப்பன் அவர்கள் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை ?” என்றான்.

    ”எல்லா இந்தியப் படத்தோட கதையும் இதான். ஜாதி, மத, அந்தஸ்து வித்யாசத்தால் இப்படித்தான் ஆகிறது” என்றேன்.

    அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “பிராடஸ்டெண்ட், கத்தோலிக் போலவா” என்றான்.

    ”அது போலத்தான்”

    “இருக்கட்டுமே. அவள் அப்பனுக்கு என்ன வந்தது ? பொண்ணு செய்யற முடிவை இவன் ஏன் தடுக்கணும் ? இது அனியாயம் இல்லியா ?”
    என்று என் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு வினவினபோது, உலகத்துக் காதல் கல்யாணங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய் அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல் நானே முன்னின்று நடத்தி வைக்கத்தயாராய் இருப்பதைச் சொன்னேன்.

    “குட்” என்று சொல்லிக் கத்தியைக் கீழே வைத்தான்.

    நாற்காலியை ஒரு முறை சுழற்றி என் தலையை பல கோணங்களில் பார்த்து இறுதியாக சிறு திருத்தங்கள் செய்து, வெட்டிய முடித் துண்டுகளை வாக்வம் கிளீனரால் விலக்கி, தலையில் எண்ணெய் போட்டு படிய வாரி கழுத்தையும் இதமாய்த் திருகிவிட்டான்.

    நான் அவனுக்கு கூடுதலாய் இரண்டு டாலர் டிப்ஸ் கொடுத்தேன்.

    இன்று அவன் இல்லாமல் போனது வருத்தமாக இருந்தது.

    மரியா கிழவருக்கு முடிதிருத்தி முடித்து விட்டாள். அப்பாடா என்று பெருமூச்சுடன் எழுந்தேன்.

    மரியா கிழவரிடம் ஒரு பாட்டிலைக்காட்டிச் சரமாரியாக ஸ்பானிஷில் ஏதோ சொன்னாள்.அவள் கையால் காட்டிய சாடைகளிலிருந்து, அந்த பாட்டில் தைலத்தை தலையில் தேய்த்துக் கொண்டால் தலைமுடி முழங்கால் வரை வளரும் என்பதாகப் புரிந்தது.

    பொய் சொல்லுவதற்கும் ஒரு வரைமுறை இல்லாமல் போய்விட்டது என்று நினைத்துக் கொண்டேன்.

    ”நாலு பாட்டில்கள் கொடு” என்று வாங்கிக்கொண்ட கிழவர், ஒரு நூறு டாலர் நோட்டைக் கொடுத்து, ”பாக்கியை நீயே வெச்சுக்க” என்று சொன்னதும், மரியா இடுப்புவரை குனிந்து வணங்கி வாசல் வரை போய் அவரை வழியனுப்பிவிட்டு வந்தாள்.

    என்னைப் பார்த்து ”கமான், ஸிட் டவுன்” என்று உபசரித்து என்னை நாற்காலியில் அமர்த்தினாள்.

    “எவ்ளோ நேரமா காத்திருக்கேன் ?பீட்டர் இருந்தா நல்லாயிருந்திருக்கும். அவன் எங்க ? தனியாக் கடை வெச்சுட்டானா ?” என்று வினவினேன்.

    அவள் ஒரு நிமிஷம் என்னைப் பார்த்தாள். அவள் கண்கள் சற்று கலங்கி விழியோரத்தில் ஒரு சொட்டு கண்ணீர் தெரிந்தது.

    “பீட்டர்..பீட்டர்.. இன் ஜெயில் இன் மெக்சிகோ” என்று தயக்கத்துடன் சொன்னாள்.

    “ஜெயிலா ? ஏன் ? என்னாச்சு ?”

    அவள் சொன்னதிருந்து எனக்குப் புரிந்தது:

    “பீட்டர் தன் குடும்பத்தைப் பார்த்து விட்டு வர மெக்சிகோ போயிருக்கிறான். தன்னுடைய பெண் ஒரு குவாட்மாலா நாட்டுப் பையனைக் காதலித்துக் கல்யாணம் செய்ய விரும்புவது அவனுக்கு பிடிக்கவில்லை. ஒரு பார்ட்டியில் அந்தப் பையனைக் கண்டிக்கப் போய் பெரிய வாக்குவாதமாகி அவனை பீட்டர் கத்தியால் குத்திவிட்டான். போலீசு பிடித்துக் கொண்டு போய் வழக்கு போட்டு, இப்பொழுது ஜெயிலில் இருக்கிறான். வெளியில் வர அஞ்சு வருஷத்துக்கு மேலாகும்”

    =======================

    Share
  • சொர்க்க வாசல்!

     

    பவள  சங்கரி


    அகக் கண்கள் திறந்து
    காட்சிகள் விரிகின்றன.
    அழகான நீர் நிலையைக் காண்கிறேன்!
    இரு புறமும் கொத்துக் கொத்தாக
    மலர்கள் தாங்கிய குறுஞ்செடிகள்

    நீலமேகக் கூரையில்
    வெண்பஞ்சுப் பொதிகள்
    வெளிர்நீல மலைக் குன்றுகளில்
    பனிபடர்ந்த மரக் கன்றுகள்!

    அந்தி மயங்கும் நேரம்…..
    கூட்டில் அடையப் போகும்
    புள்ளினங்களின் கீச்சுக் கீச்சு கீதம்.
    மனம் அமைதியில் திளைத்த இன்பம்.

    அந்த ஓடைக்கரையிலொரு குச்சு வீடு
    சின்ன அறையில் நிறைமனதுடன் நான்!
    குச்சு வீட்டின் கொல்லைப்புறத்து
    பசுமையான வயல் வெளி
    நாணம். கொண்ட பயிர்களின் மோனம்

    கரையோரத்து மலர்களின் நறுமணம்
    குடில்… அழகான குடில்
    எளிமையான மனிதரும்
    அழகான புள்ளினங்களும்
    பகிர்ந்து வாழும் அழகிய குடில்!

    குடிலின் அருகில் என் சொந்தங்கள் இல்லை
    என் சாதி இல்லை… என் மதம் இல்லை
    என் இனம் கூட இல்லை
     பெயர் மட்டுமே அடையாளமாக…..
     அன்பு மட்டுமே ஆதாரமாக

    இயற்கையின் இனிமையைக்
    கொண்டாடும் இனமாக
    அந்த அழகைப் பகிர்ந்து
    பருகும் இனமாக.
    திறந்த இதயத்துடன், பரந்த
    மனதுடன் வாழும் இனம்.
    அங்கு என் அமைதியான
    ஆனந்தமான வாழ்க்கை!!


    நன்றி – இன் & அவுட் சென்னை பிரசுரம்

    படத்திற்கு நன்றி:

    http://www.allpics4u.com/nature/top-10-natural-scenery.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 46 (19.11.12)

     

     மலர் சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

     
     கடற்கரைப் பயணம்
     
     
    பகைவரை அச்சப்படவைக்கும்
    புகார் நகரதனில்
    முழுமதி நாள் அன்று
    வைகறையில் கடலாடிக் களிக்கவென
    இடம்பிடிக்க வேண்டுமென்று
    திரள்திரளாகச் சென்றது மக்கள்கூட்டம்.
     
     
    அவர்களைப் போலவே,
    தாழை புன்னை
    மடல் அவிழ்க்கும் சோலைகளில்
    தானும் கடல் விளையாட்டைக்
    காண வேண்டுமென்று
    கோவலனிடம் வேண்டினள் மாதவி.
     
     
    தாமரைப் பொய்கைகளில்
    துயிலாழ்ந்திருந்த பறவைகள் விழித்து
    வாய் விட்டுக் கூவ,
    பொழுது புலர்ந்தது என்று
    கோழிச்சேவல்கள் கூவி அறிவிக்க,
    சங்குகள் முழங்கிட
    விழித்தெழுந்த விடிவெள்ளி
    பூமி பரவிய இருளை நீக்கியது.
     
     
    அவ்வைகறைப் பொழுதினில்
    மாலையணிந்த மார்பன் கோவலனோடு
    பேரணிகலன்கள் அணிந்தவளாய்ப்
    புறப்பட்டனள் மாதவி கடலாடுதற்கென்று.
     
     
    மேகம் போன்ற
    வன்கையாளன் கோவலன்
    அத்திரி வாகனம் அதனிலும்,
    மான்விழி மாதவி
    மூடுவண்டி அதனிலும்
    ஏறிச் சென்றனர்
    கடற்கரைப் பயணமாய்.
     
    (அத்திரி – கோவேறுக்கழுதை)
     
     
    கோடி மதிப்புப்பெறும்
    விற்பனைக் குவியல்களாய்ப் பண்டங்கள்
    காணப்பெற்ற வணிகர் வீதியையும்,
    மாடங்கள் நிறைந்த
    பெரிய கடை வீதிகளையும்,
     
    மலர்கள் அணிசெய்த
    மாணிக்க விளக்குகளை ஏற்றி,
    மலர்களையும் அருகம்புல்லையும்
    விளக்குகள் மீது தூவி வழிபட்டிருந்து,
    வீதிகளின் இரு புறங்களிலும்
    தமது அணிகலன்கள் ஒலித்திட,
    திரிந்து சென்ற மங்கலத் தாசியர்
    கூட்டத்தைக் கடந்தே சென்றனர்
    கோவலனும் மாதவியும்.
     
     
    திருமகள் குடிகொண்டிருக்கும்
    பட்டினப்பாக்கம் கடந்து,
    கடல் வளப் பெருமையால்
    சிறந்து விளங்கும்
    மருவூர்ப்பாக்கம் கடந்து சென்றனர்
    தம் பயணத்தடங்களில்.
     
     
    பொருள் ஈட்டவென
    மரக்கலங்கள் செலுத்திக்
    கடல்கடந்து புலம்பெயர்ந்து வந்த
    வணிகர் கூட்டம் தங்கியிருக்கும்
    கூல வீதிதனில்,
    ‘இது இன்ன பொருள்’ என்று
    எழுதி அறிவிக்கப்பட்டிருந்த
    மாலைச்சேரிப் பகுதிகளையும்
    கடந்தே சென்று
    நெய்தல் நிலக் கடற்கரைச் சோலையை
    அடைந்திட்டனர்.
     
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 111 – 133
     
    படத்துக்கு நன்றி:
    Share
  • மொபைல் டாக் ஷோ (வெண்டைக்காய்)

     

    திவாகர்

    ஹெல்லோ..கொதிக்கற சாம்பார்லேர்ந்து சுடச் சுட ஒரு வெண்டைக்காய் தானை அப்படியே எடுத்து வாயிலே போட்டு டேஸ்ட் பார்த்தா எப்படி இருக்கும்?

    அடக் கண்றாவியே.. அப்படில்லாம் டேஸ்ட் பண்ணித் தொலைக்காதீங்க.. அப்புறம் டாக்டருக்கு வேஸ்ட் அழுதாகணும்..

    அட, நான் அப்படில்லாம் செய்வேனா.. இல்லே அப்படி செஞ்சா உன்னோட இப்படி அழகா பேசமுடியுமா.. பெப்பப்பே’ ந்னுதான் பேசணும்..

    சரி, என்ன பண்றீங்க..

    அதுதான் சொன்னேனே.. சாம்பார் அடுப்பிலே கொதியா கொதிக்குது.. வெண்டைக்காய் வெந்துபோய் துள்ளி விளையாடுது..

    என்ன.. அடுக்கு மொழி விளையாடுது.. ரொம்ப ஜாலியா இருக்கீங்களோ..

    ஜாலி’ன்னா ஜாலி மாதிரி வெச்சுக்கலாம்.. இல்லன்னா ஜாலி இல்லே’ன்னும் வெச்சுக்கலாம்.. ஜாலி இல்லாத ஜாலி’ன்னும் வெச்சுக்கலாம்..

    என்ன குழப்பறீங்க.. கொழ கொழ வெண்டைக்காய் மாதிரி.. ஆமா கேக்க மறந்துட்டேன்..

    எதை வேணும்னாலும் கேளு.. மறக்காம கேளு..

    அது சரி, வெண்டைக்காயை அப்படியே போட்டிங்களா.. இல்லே.. எண்ணெய்’ல வதக்கிப் போட்டிங்களா.. வதக்கலேன்னா கொழ கொழ’ன்னு இருக்கும்..

    அடி சக்கைன்னானாம்,, இத உனக்கு சொல்லிக் கொடுத்ததே நானாக்கும்.. கல்யாணம் ஆன புதுசுல நீ ஒரு வெண்டைக்காய் வெத்த குழம்பு வெச்சயே.. பச்சையா அப்படிப் போடாதே’ன்னு அந்தக் கொழ கொழ வெண்டைக்காயைக் கையில் பிடிச்சுண்டே, குழந்தைக்குச் சொல்றா மாதிரி செல்லமா சொன்னேனே.. உனக்கு ஞாபகம் வரலே..

    அப்படில்லாம் நான் செஞ்சதா ஞாபகம் இல்லே.. நான் எப்பவுமே பெர்ஃபெக்ட்டாதான்  பண்ணுவேன்.. நீங்க ஏதோ புதுசா கதை விடறீங்க.. விட்டால் எல்லா சமையலையும் நீங்களேதான் இதுவரை பண்ணினேன்’னு சொன்னாலும் சொல்லுவீங்க.. ஏதோ.. சமையல் உங்களுக்கு பழக்கம் இல்லையே’ன்னு இப்போ வதக்கச் சொல்லி ஞாபகமூட்டினேன்..

    செந்தமிழும் நாப்பழக்கம்.. சமையலும் அப்படித்தான்.. இப்பல்லாம் நான் ரொம்ப டேஸ்ட்’டாவே பண்றேனாம்..

    யார் சொன்னது அப்படி..

    கோப்ப்படாதே.. நம்ம பில்டிங் வாட்ச்மேன் கோவிந்துதான் சொல்றான்.. நேத்து ராத்திரி என்கிட்ட தக்காளி பருப்பு வாங்கிண்டு போகறச்சே.. என் சமையலைப் பத்தியும் ருசியைப் பத்தியும் அவன் பேசறதெல்லாம் ஆஹா.. ஓஹோதான் போயேன்..

    ஓஹோ.. அவனுக்கு ஓஸி  பழகிடுச்சு.. ஏன் சொல்லமாட்டான்.. அதுக்காக நீங்க ஊர்ல இருக்கற எல்லாருக்கும் சேர்த்து சமையல்’லாம் பண்ணவேண்டாம்.. இருக்கற விலைவாசில இலவச சேவை தேவையில்லே..

    அது அப்படியில்லே..

    எது எப்படி இல்லே.. உங்களை யாராவது ரெண்டு வார்த்தை இல்லாததை இருக்கறாப் போலப் புகழ்ந்து சொன்னா போதும்.. உங்களுக்கு கிக்’ ஏறி கை கர்ணன் கையா மாறிடும்.. அதான் சொன்னேன்..

    சரி சரி.. இப்போ நான் உனக்கு எதுக்கு போன் பண்ணினேன்னா..

    சொல்லுங்க..

    ஏன் அலுத்துக்கறே.. என்னைப்  பார்.. கஷ்டமான வேளைல கூட  ஜாலியா பேசலே?.. இடுக்கண் வருங்கால் நகுக..

    அப்பறம் நகுக்கலாம்.. என்ன’ன்னு சீக்கிரம் சொல்லுங்க

    அவசரப்படாதே.. சரி, நீயே சொல்லு, நீ சீரியஸா ஒரு வேலையை பார்த்துப் பார்த்து செய்யறபோது நடுவுல ஒருத்தர் குறுக்கிட்டு கெக்கபிக்கே’ன்னு ஏதாவது செஞ்சா என்ன பண்ணுவே..

    ஐய்யோ.. எதுக்கு இத மாதிரி எரிச்சலூட்டறீங்க.. எது கையில கிடைக்குதோ அதால ரெண்டு போடுவேன்.. ஐ மீன்.. அப்படி நடுவுல வர்ரவரை..

    நீ அப்படி பண்ணுவே.. ஆனா நான் கையில தேன் பாட்டில் கொடுத்து அனுப்புவேன்..

    ஐயோ வெண்டக்காய் மாதிரி கொழப்பாம சொல்லக் கத்துக்குங்களேன்.. ஒண்ணுமே புரியலே..

    சரி சரி.. நான் இப்போ வெண்டைக்காய் சாம்பார் நல்லா கொதிக்கறச்சே கறண்டியாலே கலக்கிண்டே இருந்தேன்னா..

    நல்ல கொதிக்கறச்சே அது பாட்டுக்கு கொதிக்கட்டுமே.. எதுக்கு சும்மா சும்மா கலக்கணும்?

    இல்லே.. அப்பதான் உப்பு  போட்டேன். அதனால கலக்கினேன்..

    சரி

    நடுவுலே திடீர்னு உங்கப்பா வந்தார்..

    ஆமா.. நான்தான் அவரை அங்கே அனுப்பிச்சு கொஞ்சம்  ஹெல்ப் ஏதாவது வேணும்னா பண்ணச் சொன்னேன்..

    வந்தவர் சும்மா ஹால்’லேயே உட்காரக்கூடாதா.. நேரே இங்கேயே வந்துட்டு, ’என்ன மாப்பிளே அடுப்புலே.. ரசமா’ன்னு சிரிச்சுண்டே கேட்டார்..

    சாம்பாரை தண்ணி  மாதிரி பண்ணியிருக்கீங்க போல.. நினைச்சுப் பார்த்தா எனக்கே சிரிப்பு வருது.. ஒண்ணு பண்ணுங்க.. உங்க சாம்பார் அடிப்பகுதியை சாம்பாரா ஊத்திக்குங்க.. மேல் பகுதியை ரசமா வெச்சுக்குங்க.. இந்த ஐடியா நல்லா இருக்குல்ல.. ஆனா என்ன.. ரசத்துல வெண்டைக்காய் வாசனை வரும்..

    சிரிக்கறியா.. இனிமேதான்  விஷயமே இருக்கு.. அவர்ட்ட  ‘இல்லே மாமா.. இது வெண்டைக்காய் சாம்பார்’ன்னேன்.. அவரு உடனே என் கையிலே இருந்த கரண்டியைப் பிடுங்கி வாங்கிண்டு ‘மாப்ப்ளே.. வெண்டைக்காய் சாம்பார் பண்றதுல ஒரு டெக்னிக் இருக்கு.. ரெண்டு கொதி வரச்சேயே உப்பைப் போடணும், அப்பதான் உப்பு காயுலயும் ஊறும்.. ஆமா உப்பு போட்டீங்களா.. இல்லையா’ ந்னு கேட்டுட்டு, நான் பதில் சொல்லறதுக்குள்ளேயே சுடச் சுட ஒரு வெண்டைக்காய் தானே கரண்டியோட் எடுத்து அப்படியே சடக்கென வாயுல போட்டுட்டார்..

    யார் வாய்’லே?

    அவர் வாய்’லதான்.. என்ன மாமா’ன்னு கேட்டா ஙே ஙே.. பேப்பே.. ஏதேதோ சொல்றார்..

    ஐய்ய்யோ.. இதத்தான் முதல்லயே போன் பண்ணிக் கேட்டீங்களா.. எங்கப்பா இப்ப எங்கே.. அடக் கடவுளே..

    உடனே கையுல தேன் கொடுத்து நாக்குல தடவிக்குங்க..ன்னு சொல்லி அனுப்பிச்சுட்டேனே.. நீ இப்போ அவர்கிட்டே ஏதும்  போன் போட்டு பேசாதே.. உனக்கும் பதில் பெப்பே’தான் வரும், ஹலோ.. ஹலோ.. ஹல்லோ…

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்

     

    திவாகர்

    ஒரு சில திரைப்படங்களில் கடைசிக் காட்சியில் ‘ஆகையினால் சாட்சிகளின் விவரங்களினால் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஹீரோதான் கொலையாளி’ என்று நீதிபதி தீர்ப்பு சொல்ல ஆரம்பிக்குமுன் திடீரென ஒரு சாட்சி வந்து ‘இல்லை யுவர் ஹானர், நான் பார்த்தேன் இவர் கொலையாளி அல்ல’ என்று சொல்லி என்ன நடந்தது என்பதை ‘ஃப்ளாஷ்பேக்’ மூலம் தெரிவித்து, கொலை செய்த வில்லனை சரியாகக் கண்டுபிடித்து கடைசியில் ஹீரோவைக் காப்பாற்றி படத்தின் கதையையும் சுபமாக முடிப்பதை நாம் எல்லோருமே ரசித்திருக்கிறோம்.. என்ன இது பீடிகை என்று பார்க்காமல் கீழே படியுங்கள்.

    சென்ற நூற்றாண்டின் மத்திய காலத்தில் நமக்குக் கிடைத்த மாபெரும் எழுத்தாளர் கல்கி அவர்கள். தமிழில் கதைகளுக்கென எனப் பார்க்கும்போது கல்கிக்கு தலைமைப் பீடம் கொடுத்தே ஆகவேண்டும் எனவும் சொல்லலாம். அவரது எழுத்து நடை எல்லோராலும் விரும்பப்பட்டது. எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு முன்னோடியாகவும் கூட இருந்தது. இப்படிப்பட்டவர் ஒரு மாபெரும் கதை இலக்கியத்தைப் படைத்தார். தமிழ் வாசகர்கள் என்றும் போற்றும் விதத்தில் அவர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அதை வழங்கினார். அவர்கள் மனதில் நிரந்தரமாகப் பதித்தார். அதுதான் பொன்னியின் செல்வன்.

    பொன்னியின் செல்வன் வரலாற்றுக் குழுமம் (ஆங்கிலம்) என்றொரு யாஹூ குழுமம் நம்மிடையே உள்ளது. இக்குழுமத்தில் பொன்னியின் செல்வனை விரும்பிப்பபடித்து அந்தக் கதையைப் பற்றிய விவாதங்கள் அடிக்கடி பலரால் எழுதப்படும். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மையையும் தீர ஆராய்ச்சி செய்து எழுதுவார்கள். இந்தக் குழுமத்தைக் கேள்விப்பட்டு புதியதாய் சேரும் அனைவரும் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி என்ன தெரியுமா?

    “அன்புள்ள ஐயா, நான் இந்தக் குழுமத்துக்குப் புதியவன்(ள்), ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதைத் தெரிவிக்க முடியுமா?”

    இந்தக் கேள்விக்குப் பதிலாக எத்தனையோ இழைகள் அந்தக் குழுமத்தில் உள்ளன என்றாலும் இங்கு புதிதாக வருவோர் மட்டும் ஒவ்வொரு முறையும் இதை மறக்காமல் கேட்டு விடுவர். ஆதித்த கரிகாலன் என்கிற சோழ இளவரசனைப் போல முந்தைய காலத்தில் எத்தனையோ ராஜாக்கள், இளவரசர்கள் கொலை செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆதித்த கரிகாலன் சோழன் கொலையை மட்டும் மிகப் பரவலாக தெரியப்படுத்திய பெருமையும், இந்தக் கொலைக்கு மட்டும் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்த புகழும் கல்கியைத்தான் சாரும். வாசகர்களை கொக்கிப் போட்டு இழுத்து அவர்களின் மூளையின் முக்கியமான செல் ஒன்றினைத் தேடி, அதனுள் இந்தக் கேள்வியைப் பதிவு செய்துவிட்டு, அந்தப் பதிலுக்காக எந்தவித உறுதியான சாட்சியத்தையும் தராமல் சென்றுவிட்டார் கல்கி. இத்தனைக்கும் இதே ஆதித்தன் பெயரில் இவனுடைய பாட்டன் ஒருவன் மிகவும் புகழோடு மிக அதிகமான அளவில் கோயில்களைக் கட்டியதோடு மட்டுமல்லாமல், கல்கியால் பேசப்பட்ட ஆதித்தகரிகாலனை விட, வீராதி வீரனாக, சோழகுலத்தையே மீட்டெடுத்த நாயகனாக சரித்திரக் கல்வெட்டில் புகழ்பாடப்பட்டவன், அவனும் பேச்சு வார்த்தைக்காக சென்றபோது எதிரிகளால் நயவஞ்சகமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டவன், ஆனால் இப்படிப்பட்டவனுக்குக் கிடைக்காத ஒரு புகழை இந்த இளவரசன் ஆதித்தகரிகாலனுக்கு வழங்கிவிட்டார் கல்கி.

    அவனைக் கொலை செய்தது யாராக இருக்கும்? இது எல்லா வாசகர்களையும் சிந்திக்க வைத்த கேள்விதான். பலர் பலவிதமாக ஆராய்ந்து சரித்திரக் கல்வெட்டுகளோடு இணைத்து பொன்னியின் செல்வன் குழுமத்தில் எழுதினாலும், கல்கி எவ்வாறு உண்மையுடன் சற்று கற்பனையும் கலந்து மிகப் பெரிய விருந்து படைத்தாரோ, அதே கோணத்தில் இந்தக் கொலையைப் பற்றி சிந்தித்து, இந்த காலத்துக்கேற்றவாறு அதன் நடையை மாற்றி, இதற்கான விடையை தன் பாணியில் சொல்லியிருக்கிறார் திருமதி பர்வதவர்தினி.

    ஒரு கதையை பழைய நிகழ்வுகளோடு ஒப்பிடும்போது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வாசகரை நம்பவைக்கவேண்டியது ஒரு எழுத்தாளரின் திறமை. கொலை நடந்த இடத்தே நான்கு பேர் இருந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவரை நாம் கொலையாளி என்று சான்றுகளுடன் காண்பிக்கவேண்டும் என்று தானே நேரில் சென்று பார்த்துச் சொல்வது போன்ற ஒரு சாட்சியத்தை தகுந்த பாத்திரத்தின் மூலமாக (சாரு)  மிகவும் ருசிகரமான பாணியில் தெரிவித்திருக்கிறார் பர்வதவர்தினி.

    மேலே முதலில் கண்ட வரிகளுக்கு வருவோம். பொன்னியின் செல்வனில் நாயகர்களில் ஒருவனாகப் படைக்கப்பட்டிருந்த வந்தியத்தேவனைக் குற்றவாளியாக காண்பித்து விடுவித்திருந்தாலும் கொலையை இன்னமும் மர்மமாகவே வைத்த வாசக நீதிபதிகளுக்கு விடை சொல்லும் வகையில் பர்வத வர்தினி நேரே கண்ட சாட்சியமாகத்  தன் கால இயந்திரம் கதையைத் தந்திருக்கிறார் (http://www.vallamai.com/literature/serial/28213/) இடும்பன்காரியைக் காட்டிக் கொடுத்து கொலைக்கு சுப முடிவாகக் காட்டியிருந்த இந்தப் பாணி மிக நன்றாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். இப்படிப்பட்ட ருசிகரமான கதையை வல்லமையில் வழங்கிய் திருமதி பர்வதவர்தினியை வல்லமை குழுவினர் இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்று சொல்லவும் வேண்டுமோ..

    க்டைசி பாரா: திரு சம்பத் அவர்களின் பின்னூட்டம் ஒன்று:

    ”சாதாரணமாக ஒரு சீருந்து நம்மைத் தாண்டி செல்லும்போது நாம் அந்த காரின் பின் இருக்கையில் யார் அமர்ந்திருக்கிறார் என்றுதான் பார்ப்போம். ஆனால் அர்ஜுனன் அமர்ந்த ரதம் ஓடும்போது எல்லோர் பார்வையும் அவன் தேரோட்டிமீதுதான் பட்டது. கண்ணன் பார்த்தசாரதி மட்டும் அல்ல. எல்லோரும் ’பார்த்த’ சாரதி கூட!”


    Dhivakar
    www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    Share
  • தங்க விமானங்கள்

    தமிழ்த்தேனீ  –              

     

    நாராயணா  உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சாயங்காலம் வீட்டுக்கு வரேன் என்றான் கிருஷ்ணன். ஏண்டா இப்பவே போன்லே சொல்லேன் என்றான் நாராயணன். இல்லடா கொஞ்சம் விஸ்தாரமா பேசணும்  வீட்டுக்கு வந்து சொல்றேன், நீதான் எதுவானாலும் சரியா ப்ரடிக்ட் செஞ்சிருவியே அப்பிடீ மண்டையைப் போட்டு உருட்டிண்டே இரு  வந்து சொல்றேன் என்று போனை வைத்தான் கிருஷ்ணன்.

    மூளையின்  அத்தனை செல்களும் யோசிக்கத் தொடங்கின .நாராயணனுக்கு  நாற்பது வருஷ நட்பு, அந்தரங்கமான நட்பு  ,யார்கிட்டயும் சொல்லாத  விஷயமா இருந்தாலும் கிருஷ்ணன்  நாராயணன் கிட்ட கிட்ட மட்டும் பகிர்ந்துப்பான். ஒரு நம்பிக்கை ஒருவழிப் பாதை மாதிரி  நாராயணன் கிட்ட  சொன்னா விஷயம் வேற எங்கேயும்  போகாதுங்கற நம்பிக்கை.

    ஏண்டா உனக்கே தெரியும் எங்கிட்ட சொன்னா  விஷயம்  யார்கிடேயும்  போகாதுன்னு , அப்புறம் என்ன  மர்மம் . சொல்லுடா என்றான் நாராயணன்.    அப்பிடி இல்லேடா இந்த விஷயம் உங்கிட்ட சொன்னதுக்கப்புறம்  எல்லாருக்கும் சொல்லப் போறேன். எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும். நானே இந்த விஷயத்தைப் பரப்பப் போறேன் என்றான் கிருஷ்ணன்.  அவன் செய்யற வேலை எதுவாயிருந்தாலும் அதிலே ஒரு நியாயம் இருக்கும், அதிலும் குறிப்பா நாராயணன் கிட்ட  விவாதிக்கற விஷயம் எல்லாம் ரொம்ப முக்கியமானதா இருக்கும்.

    என்னவா இருக்கும் ! கிருஷ்ணனுக்கு ஒரு பொண்ணு ஒருபையன். ஒரு வேளை அவன் பொண்ணு யாரையாவது  காதலிச்சு வெச்சிட்டாளா , இருக்காதே  நல்ல கட்டுப்பாடா வளப்பான், அந்தப் பொண்ணும் , பையனும் ஒழுக்கமான பசங்க . நல்ல படிப்பாளிகள் .   அப்பிடியே இருந்தாலும் இந்தக் காலத்திலே  இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லே. அது சரி  காதல் விஷயமா இருந்தா  அவனே எல்லாருக்கும் சொல்வானா. எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும்னு வேற சொல்றான் மண்டை குழம்பியது.

    ஆர்வக் கோளாறுலே அவதிப்பட்டாலும் ஒரு வழியா நேரம் ஓடிப் போச்சு. இதோ அஞ்சு மணி ,இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடுவான். என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே வந்தான் கிருஷ்ணன்.  வா கிருஷ்ணா உள்ளே வா என்றபடி கிருஷ்ணன் முகத்தையே ஆராயும் பார்வையில் பார்த்தான் நாராயணன். ஒண்ணும் தெரியலை.

    முகத்தை  ரொம்ப இயல்பா வெச்சிண்டு இருக்கான். அப்பிடீன்னா விஷயம் தீவிரமானதுன்னு அர்த்தம். சரி ரொம்ப ஆர்வமா காட்டிக்க வேண்டாம். என்று மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு காத்திருந்தான் நாராயணன்.  உள்ளே இருந்து நாராயணனின் மனைவி கௌசல்யா வந்து வாங்க அண்ணா இந்தாங்க காப்பி சாப்பிடுங்க என்று கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டு நாராயணனையே பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.

    நாராயணா நேத்திக்கு நம்ம கோயில்லே  நடந்த நிர்வாகிகள் கூட்டத்திலே நம்ம கோயில் விமானத்துக்கு தங்கக் கூறை  வேயணும்னு ஒரு தீர்மானம் போட்டிருக்காங்க . அதுக்கு கிட்டத்தட்ட 100 கிலோ தங்கம் வேணுமாம். நானும் நீயும் சேர்ந்து ஒரு கிலோ தங்கமாவது சேத்துக் குடுக்கணும்னு எனக்கு ஆசை அதான் உங்கிட்ட கலந்து பேசலாம்னு வந்தேன் என்றான் கிருஷ்ணன்.

    ஏண்டா நீ தெரிஞ்சுதான்  பேசறையா, இல்லே தெரியாம பேசறையா நம்மாலே எப்பிடி முடியும்  . நமக்கு யாரைத் தெரியும் நாம் கேட்டா யாரு குடுப்பாங்க? அதுவும் இப்போ தங்க விக்கிற விலையிலே நெனைச்சு கூடப் பாக்க முடியாது என்றான் நாராயணன்.

    நாராயணா  நம்ம காதுக்கு இந்த விஷயம் வந்திருக்கே அப்பவே புரியலையா நமக்கு எல்லாம் தெரிஞ்சாலும்  நமக்கு மேலே ஒரு சக்தி இருக்குடா. அந்த சக்தி இது மாதிரி விஷயங்கள் யாராலே நடக்கணும்னு  முன்னாடியே தீர்மானிச்சு வெச்சிருக்கும். அதுனாலே  நாமெல்லாம்  கருவிகள்தான். முயற்சி செய்வோம் என்றான் கிருஷ்ணன். ஒரு கோயில் கட்ட ஒரு செங்கல் கொடுத்தாலே அவங்க வம்சமே நல்லா இருக்கும்னு பெரியவங்க சொல்வாங்க என்றான் கிருஷ்ணன்.

    அன்றிலிருந்து யாரைப் பாத்தாலும் இந்த விஷயத்தைப் பற்றியே ப்ரஸ்தாபித்து ஒவ்வொருத்தர் மூலமா இன்னொருத்தரைப் பிடிச்சு கிட்டத் தட்ட குருவி சேக்கறா மாதிரி 100 கிராம்  தங்கம் சேத்தாச்சு. இன்னும்  900 கிராம் தங்கம் சேக்கணும்.   நாராயணனுக்கு  நம்பிக்கை தளர்ந்து கொண்டே வந்தது. நடிக நடிகைகளுக்கு   கோடி கோடியா கொட்டிக் குடுக்கற பெரிய பண முதலைகள் கூட இவர்கள் போகும்போது   இல்லேங்க இப்போதான் 600 கோடியை  படம் எடுக்க வியாபாரத்திலே போட்டுட்டு  படம் ஓடுமா ,  பணம் வருமா வராதான்னு தவிச்சிகிட்டு இருக்கோம்  எங்களாலே  இப்போ முடியாது என்றார்கள்.

    சரி கிருஷ்ணா ஏதோ நம்மாலானது 100 கிராம் தங்கம் சேத்துட்டோம் , இனிமே நமக்கு சக்தி இல்லே . இந்த நூறு கிராமை கொண்டு போயி நிர்வாகத்திலே குடுத்துட்டு வந்துடுவோம் என்றான் நாராயணன்.   நாராயணனின் மனைவி கௌசல்யா  உள்ளே இருந்து வந்து  அண்ணா தப்பா நெனைக்காதீங்க நீங்களும் இவரும் மூணு மாசமா அலைஞ்சு 100 கிராம் தங்கம்  சேத்தீங்க. 

    நாட்டுலே  நடக்க சரியான  ரோடு இல்லே, மக்களுக்கு குடிக்க நல்ல தண்ணி கிடைக்கலே. எங்க பாத்தாலும் சாக்கடை , டெங்கு கொசு உற்பத்தியாகி குழந்தைங்க எல்லாம் நிறைய பேரு உயிரை விட்டுட்டாங்க , நிறைய பசங்க  படிக்க வசதியில்லாம கஷ்டப்படறாங்க. அரசாங்கமும் முறையா இதெல்லாம் செஞ்சு தரமாட்டேங்கறாங்க . பொதுமக்களுக்காக இது மாதிரி ஏதாவது திட்டம் போட்டு  அதுக்கு நீங்க ரெண்டு பேரும் உழைச்சா  நல்லா இருக்கும்.

    அதைவிட்டுட்டு  ஏற்கெனவே இருக்கற கோயிலுக்கு தங்க விமானம் செய்யறதுக்கு தங்கம் சேக்க அலையறீங்களே  அந்த சாமி உங்க கிட்ட  தங்க விமானம் கட்டினாத்தான் நான் இங்க இருப்பேன்னு ஏதாவது சொன்னாரா?  என்றாள்.

    என்ன  கௌசல்யா   நீயா இப்பிடிப் பேசறே என்னை விட பக்தி உனக்குதான் அதிகம் , நான் அடிக்கடி கோயிலுக்கெல்லாம் போகமாட்டேன் , நீ பட்டினியா இருந்து தினமும் கோயிலுக்கு போயி தரிசனம் செய்யாம சாப்பிடக்கூட மாட்டியே நீ இப்பிடிக் கேள்வி கேக்கறே  ஆச்சரியமா இருக்கு என்றான் நாராயணன்.

    இதோ பாருங்க அந்தக் காலத்திலேருந்து இந்தக் காலம் வரைக்கும்  நமக்கு இந்த இயற்கையைப் படைச்சு அது மூலமா நம்மையெல்லாம் வாழ வைக்கிறவர்  கடவுள்னு  மனசுலே படிஞ்சு போயிருக்கு , பக்தியோட வளந்தவதான் நான்.

    ஆனா யதார்த்தமா யோசிச்சு பாத்தா  நமக்கு குடுத்த இறைவனுக்கு  நாம செய்யணும் உண்மைதான்  ஆனா இறைவன் கொடுத்த இந்த இயற்கையை காப்பாத்தறதும் நம்ம கடமைதானே .நம்மோட வாழற மக்களுக்கு முதல்லே நல்லது செய்யணும். அதுக்குதான் எல்லா ஆழ்வார்களும்  நாயன்மார்களும்  கடவுள் நமக்குள்ளே இருக்கான்னு சொல்றாங்க. மனுஷனை மதிச்சா கடவுளை மதிச்ச மாதிரிதான். 

    மனுஷனுக்கு தீங்கு நெனைக்காம  எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கத்தான் நான் கோயிலுக்கு போறேன்.  எப்பவுமே கடவுள் எனக்கு இதைச் செய்யி அதைச் செய்யின்னு கேக்கறதில்லே. நாமே ஏதாவது செய்யறோம். நம்ம மனசு திருப்திக்கு எல்லாரும்  திருமங்கை ஆழ்வாரா ஆயிடமுடியுமா? என்றாள் .

    அப்போது அங்கே வந்த  வேலைக்காரி முனியம்மா  அம்மன் கோயிலுக்கு போயிருந்தேம்மா , அங்கே தீபாவளிக்கு அம்மனுக்கு  நீங்க வாங்கிக் குடுத்த  புடவையை சாத்தினாங்களாம் , நல்லா இருந்துச்சு ன்னு உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு  பூசாரி என்றாள் கௌசல்யாவிடம்.

    இவ்ளோ நியாயமா சிந்திக்கறாளே இவ என்ன செஞ்சிருக்கா பாரு என்றான் நாராயணன் ,   அந்தப் புடவை 900 ரூபா , அந்த 900 ரூபாயை ஏதாவது ஏழைக் குழந்தைகளுக்கோ அல்லது ஏதாவது மக்களுக்கு பயன்படறா மாதிரி திட்டத்துக்கோ குடுத்திருக்கலாமே  ஏன் செய்யலே  என்றான் நாராயணன்.

    ஏங்க அது என்னோட வேண்டுதல் என் மனசு திருப்திக்கு செஞ்சேன், அதை நீங்க குறை சொல்லக் கூடாது என்றாள் கௌசல்யா.  நான் குறை சொல்லலே கௌசல்யா , இப்பிடித்தான்  எல்லாரும் நெனைக்கிறாங்க ,அடுத்தவங்களுக்கு சொல்ற யோசனையை அவங்க கடைப்பிடிக்கணும்னு வரும்போது பின்வாங்கறாங்க. 

    உலக நாடுகள் ஒரு நாட்டோட மரியாதையை, தரத்தை அந்த நாட்டிலே எவ்ளோ தங்கம்  இருக்குங்கறதை வெச்சிதான் எடை போடறாங்க. அதுனாலேதான்  நம்ம நாட்டோட   தரத்தை உயர்த்த இதெல்லாம் செய்யறோம். நாட்டிலே யாருக்கும் தனிப்பட்ட மனுஷனுக்கு செல்வம் சேக்கக் கூடாது நாட்டுக்குதான்  சேக்கணும்னு  புத்தியில்லே.

    கிருஷ்ணா இது வரைக்கும்  சேத்து வெச்சிருக்கற 100 கிராம் தங்கத்தை ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிதர ஏதாவது  அமைப்புக்கு குடுத்துடலாம்னு பாத்தா  நாம குடுக்கறதை வாங்கிகிட்டு  குழந்தைகளுக்கு செலவழிக்காம  சில நிர்வாகிங்க அவங்க வீட்டுலே இருக்கற கஜானாவிலே கொண்டு போயி வெச்சிகிட்டு அவங்க குடும்பத்துக்கு சொத்து சேக்கறாங்க. யாரை நம்புறதுன்னே தெரியலையே. எவ்ளோ செய்தி தினசரிலே படிக்கிறோம் என்றான்.

    ஒரு குழப்பமான மன நிலையுடன் கிருஷ்ணன் சரி நான் வீட்டுக்கு போறேன். இதைப் பத்தி யோசிக்கலாம் என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.  அன்று மாலை கிருஷ்ணன் வீட்டின் வாயிலில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து அழைப்பு மணியை அழுத்தினாள். கிருஷ்ணன் எட்டிப் பார்த்து வாங்க உள்ளே வாங்க என்றார்.

    இல்லேங்க நீங்க வெளியே வாங்க என்றாள். வாசலுக்கு வந்தான் கிருஷ்ணன், கூடவே அவன் மனைவி ருக்மணியும் வந்தாள்.

    தப்பா நெனைக்காதீங்க  என் பேரு கிருஷ்ண பிங்கலா, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். நான் யார் வீட்டுக்குள்ளேயும் போறதில்லே , எல்லாரும் என் வீட்டுக்குள்ளேதான் வருவாங்க என்றாள்.

    ஆமாங்க  நாங்க பரம்பரையா கோயிலுக்கு பொட்டுக் கட்றவங்க . வம்ச வம்சமா  எங்க குடும்பம் கோயில்லேருந்து வர வருமானத்திலேதான் பொழைச்சிகிட்டு இருந்தோம்.அதெல்லாம் ஒரு காலம் . இப்பல்லாம் கோயில்லேருந்து எங்களை யாரும் கவனிக்கறதே இல்லே. 

    நாங்களும்  கோயிலைச் சார்ந்து இல்லே. எங்க பொழைப்பு திசை மாறிப் போச்சு. ஆனா அந்தக் காலத்து ஜமீன்தாருங்க, பணம் படைச்சவங்க எல்லாம் காலம் காலமா  எங்க குடும்பத்துக்கு நகையாவும் , பொருளாவும் குடுத்ததெல்லாம் பரம்பரை சொத்தா எனக்கு வந்திருக்கு.

    எங்க பரம்பரையிலே நான்தான் கடைசீ வாரிசு. நான் குழந்தையே பெத்துக்கக் கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன் . எங்க வம்சமே என்னோட முடிஞ்சு போகணும். இனிமே இந்த சொத்தையெல்லாம் வெச்சு பாதுகாக்கணும்கிற  அவசியமும் இல்லே.

    அதுனாலே  மொத்தத்தையும்  நான் உங்க கிட்ட குடுக்கறேன். கோயில் சொத்தையும் பொது சொத்தா நெனைச்சு பாதுகாக்கணும்.   கோயில் சொத்தையும் பொது சொத்தையும் கொள்ளையடிச்சு அவங்க வீட்டுக்கு கொண்டு போனவங்க நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லேங்க. மனுஷனை ஏமாத்தலாம், ஆனா தெய்வத்தை ஏமாத்தக் கூடாது. நான் என்னைப் பத்தின உண்மையைச் சொல்லித்  மனப்பூர்வமா குடுத்து எனக்கும் எங்க வம்சத்துக்கும்  பரிகாரம் செய்யணும்னு ஆசைப்படறேன்.

    எங்க வம்சத்தோட  பாவத்தை அந்தக் கிருஷ்ணனே ஏத்துக்கணும்னு வேண்டிகிட்டு குடுக்கப் போறேன். கோயிலுக்கே போயி அவங்க கிட்ட பேசலாம், ஆனா அவங்க என்னை மதிப்பாங்களான்னு தெரியலை .அதான் பயந்துகிட்டு உங்க கிட்ட வந்தேன் என்றாள்.

    இப்போது கிருஷ்ணனுக்கே  கொஞ்சம் குழப்பமா இருந்துது.. சரி நீங்க குடுங்க நான் கோயில்லே சேத்துடறேன் என்ன சொல்றே நாராயணா என்றான்  என்றான் கிருஷ்ணன் .நாராயணன் சற்றே குழப்பமாக மௌனமாக இருந்தான்.

    படியிறங்கி  தெருவுக்கே போன அந்தப் பெண் மீரா திரும்பி வந்து  உங்க சந்தேகம் புரியுதுங்க .  இந்த மாதிரிக் காசையெல்லாம் ஏத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டா என்ன செய்யறது அப்பிடீன்னு தானே யோசிக்கிறீங்க .

    நான் குலத்திலே தாசியா இருந்தாலும் பகவத் கீதையைப் படிச்சிருக்கேன், கிருஷ்ணன் தன்னோட ஆப்த நண்பன் உத்தவனுக்கு சொன்ன   உத்தவ கீதையையும் படிச்சேன் .அதிலே கிருஷ்ணன்,

    “ஆன்மீக உள்ளங்களே!  நான் கைவிட்டாலும், என்னைக் கைவிடாதவர்கள் யாரோ அவர்களே ஆத்திகர்கள் எனவே, உங்களில் ஆத்திகர்கள் யாரோ அவர்கள்  இந்தக் கிருஷ்ண பிங்கலாவின் மேல் கல் எறியத் கடவீராக ! அப்படி அல்லாதவர்கள்  இவள் மீது பூ எறியக் கடவீராக! “      அப்பிடீன்னு சொல்லி கிருஷ்ண பிங்கலான்னு ஒரு தாசியை பக்தையாக ஏத்துண்டார்.. அதுனாலேதான் நான் என் பேரை கிருஷ்ண பிங்கலான்னு வெச்சிண்டேன். 

    இவ்ளோ சொல்லியும் அவங்க ஏத்துக்கலைன்னா அவங்க கிட்ட சொல்லுங்க,       “நாய் வித்த காசு குறைக்காதுன்னு”    ஏத்துக்குவாங்க.  

    என்னோட கிருஷ்ணன்  ஏத்துக்குவான், அவங்களையும்  ஏத்துக்க வைப்பான் என்றாள் தீர்மானமாக.

                                                                            சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து!

     

                                                                                                        சுபம்

     

    Share
  • சட்ட ஆலோசனைகள் (20)

     

    மோகன்குமார்
     
    கேள்வி: கார்த்திகேயன்
     
     
    ஐயா,

        வணக்கம், என்னுடைய பூர்வீக சொத்தில் உள்ள வீட்டை இரு பங்குகளாக தாத்தாவும் அவருடைய அண்ணனும் பிரித்துக் கொண்டார்கள். அப்போது என்னுடைய தாத்தாவின் வீட்டிற்குச் செல்ல ஒரு பொதுப் பாதை அமைத்துக் கொண்டார்கள். தாத்தாவின் அண்ணன் அப்பாதையை (பெரிய தாத்தா) பத்திரத்தில் குறிப்பிட்டு பிரிவில்லாத பாதி பாத்தியம் என்று எழுதி இரண்டு பத்திரங்களாக பதிவு செய்தனர். இப்போது என்னுடைய தாத்தாவின் அண்ணன் (பெரியதாத்தா) மகள் அவர்களுடைய பாக வீட்டை வேறு ஒரு நபருக்கு விற்றுவிட்டார். அப்படி விற்கும் போது எங்களிடம் கேட்கவில்லை. இப்போது அந்த வீட்டை வாங்கியவர் அந்தப் பாதையை பின்னால் இருக்கும் எங்கள் வீட்டின் வாசல் முடிவு வரை உரிமை கோர முடியுமா? அல்லது அவர் வாங்கிய வீட்டின் அளவு வரை பாதையை உரிமை கோர முடியுமா? ஏனெனில் அவருக்கு ரோட்டின் மீது வாசல் உள்ளது ஆனால் எங்களுக்கு அப்பாதைதான் ஒரே வழியாக உள்ளது. இப்போது அந்த வீட்டை வாங்கியவர் அப்பாதையை எதுவரை உரிமை கோர முடியும்? அல்லது பாதி அளவு மறைக்க உரிமை உள்ளதா? சட்டம் அதற்கு என்ன சொல்லுகிறது.
     
    பதில்:
     
    உங்கள் வீட்டருகில் முன்னே உள்ள இடத்தை வாங்கிய நபர் நீங்கள் செல்ல முடியாத படி முழுதும் மறைத்து கட்டிடம் கட்ட முடியாது. இரண்டு வீட்டுக்கும் பொதுவான நடைபாதை மீது இருவரும் செல்ல உரிமை உண்டு. இதற்கு பெயர் ஈஸ்ட்மென்ட்  உரிமை. இதன்படி நடந்து செல்ல இருக்கும் வழியை மறித்து ஒருவர் தனக்கான வீடு கட்டிக் கொள்ள முடியாது
     
    மேலும் முதலில் இரு வீடாக பிரித்த பார்டிஷன் டீடை எடுத்து படித்துப் பார்க்க வேண்டும். அதிலேயே இந்த நடைபாதை இருவருக்கும் பொதுவானது என்று குறிக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்க வேண்டும். அப்படி குறிப்பிட்டிருந்தால், முன்னர் வீடு வைத்திருக்கும் நபருக்கு தனது வீட்டுக்கு முன் உள்ள இடத்துக்கு முழு உரிமை கிடையாது. குறிப்பாய் அங்கு பில்டிங் கட்ட உரிமை வராது.
     
    மேலும் விபரங்களுக்கு உங்களுக்கு தெரிந்த வழக்கறிஞரை இது சம்பந்தமான டாக்குமெண்டுகளுடன் அணுகுங்கள்

    Share
  • தொடரும் பொய்கள்

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கத் தேர்தல்கள் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது.  இரண்டாவது தடவை ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் ஒபாமா நாட்டை எதிர்நோக்கியிருக்கும் fiscal cliff  எனப்படும் பொருளாதார இக்கட்டை எப்படிச் சமாளிக்கலாம் என்பதில் களம் இறங்கியிருக்கிறார்.  இத்தருணத்தில் நாட்டின் நலன்களைக் காப்பதற்காகவும் திசை மாறிப்போன, பொருளாதாரச் சீர்குலைவை அடைந்திருக்கும் அமெரிக்காவை அதிலிருந்து மீட்பதற்காகவும் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் சூளுரைத்த ராம்னி தன்னுடைய தோல்வியை நினைத்து, புலம்பிக் கொண்டிருக்கிறார். தன்னை எதிர்த்து நின்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் ராம்னி தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறிய சில நல்ல கருத்துக்களைத் தன்னுடைய திட்டங்களில் சேர்த்துக்கொள்வதாகவும் அதற்காக ராம்னியோடு கலந்தாலோசிக்கப் போவதாகவும் ஜனாதிபதி ஒபாமா கூறிக்கொண்டிருக்கும்போது, ஒபாமா இருகட்சிகள் சார்ந்த அரசியல் நடத்துவதில்லை என்றும் தான் அப்படியில்லாமல் எதிர்க் கட்சியையும் கலந்தாலோசித்தே அரசியல் நடத்தப் போவதாகவும் கூறிய ராம்னி தன்னுடைய தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்.  அது மட்டுமல்ல இங்கும் பொய்களாக அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கிறார்.  அவருக்குத் தேர்தல் நிதி வழங்கியவர்களோடும் நிதி திரட்டுவதில் உதவி புரிந்தவர்களோடும் தொலைபேசியில் கான்பெரன்ஸ் காலில் பேசிய ராம்னி, “நான் ஜெயிப்பேன் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள்.  நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்.  தேர்தல் முடிவுகள் எங்களை மிகவும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.  நாங்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை.  (ராம்னி ஜெயித்துவிடுவோம் என்று மிக நம்பிக்கையோடு இருந்ததால் வெற்றிபெற்ற பிறகு கொடுக்கப் போகும் பேச்சை மட்டும் தயாரித்திருந்தாராம்!  அதனால்தான் தான் தோல்வியுறப் போகிறோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியான போதும் தோல்வி அடைந்த வேட்பாளர் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பேச்சைக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை.  ஜெயிப்பேன் என்று விடாப்பிடியாகக் கூறிக்கொண்டிருந்தார்.  உதவியாளர்கள் எழுதிக் கொடுத்த பிறகு தன் பேச்சை நிறைவேற்றினார்.) மிகச் சிறிய ஓட்டு வித்தியாசத்தில்தான் என்னால் ஜெயிக்க முடியவில்லை.  ஆனால் கொஞ்ச ஓட்டு வித்தியாசம் என்றாலும் அரசியலில் அது தோல்விதான்” என்று அங்கலாய்த்திருக்கிறார்.  இது என்ன அண்டப் புளுகு?  ஒபாமாவுக்குக் கிடைத்த எலெக்டொரல் காலேஜ் ஒட்டுக்கள் 336.  ராம்னிக்குக் கிடைத்தவை 206.  இதுதான் கொஞ்ச ஓட்டு வித்தியாமா?

    புதன்கிழமை (நவம்பர் 14) ஒபாமா பங்கேற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் “ராம்னியைச் சந்தித்து அவரோடு கலந்தாலோசிக்கும் திட்டத்தை இன்னும் வைத்திருக்கிறீர்களா?” என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டபோது “ராம்னி மிகச் சிறப்பாக குளிர்கால ஒலிம்பிக்ஸை நடத்தியிருக்கிறார்” என்று கூறியதோடு அரசை எப்படி திறமையாக நடத்த வேண்டும் என்ற ராம்னியின் சில கருத்துக்களையும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

    அவருடைய கான்பெரன்ஸ் காலில் “நாம் எல்லோரும் ஒற்றுமையாக, ஒருவருக்கொருவர் தொடர்போடு இருந்து அடுத்த முறை நம் கட்சி வேட்பாளரை எப்படி ஜெயிக்க வைப்பது என்று ஆலோசிக்க வேண்டும்.  அடுத்த வேட்பாளர் நானாக இருக்க மாட்டேன்” என்றும் கூறியிருக்கிறார்.  இவரை யார் மறுபடி தேர்ந்தெடுப்பார்கள்?  அமெரிக்க அரசியலில் தோற்றவரை மறுபடி தேர்ந்தெடுப்பது அதிகம் இல்லை.  2008-இல் மெக்கெயினிடம் முதல்நிலைத் தேர்தலிலேயே தோற்றார்.  ஒபாமாவிடம் பொதுத் தேர்தலில் மிகுந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார்.  இனி இவர் பக்கம் யாருடைய பார்வை திரும்பும்?  “நான் ஒரு வியாபாரி.  பெயின் கேப்பிட்டலில் இருக்கும்போது நிறைய வேலைகளை உருவாக்கியிருக்கிறேன். (இதுவும் பொய்) என்னால்தான் நாட்டில் வேலைகளை உருவாக்க முடியும்” என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறிக்கொண்டிருந்த இவரை, ஒரு வணிக ஸ்தாபனத்திற்குத் தலைவராக இருப்பதும் ஒரு நாட்டை வழிநடத்துவதும் வேறு வேறான திறமைகள் என்று உணராத இவரை வணிக நிறுவனங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அங்குதான் இவர் கூறும் பொய்கள் நன்றாக எடுபடும்.

    http://www.nytimes.com/2012/11/06/opinion/the-real-loser-truth.html?_r=0

    அமெரிக்காவில் அரசியல்வாதிகள் சொல்லும் பொய்களை அம்பலப்படுத்த  ஆய்வாளர்களைக் கொண்ட சில  நிறுவனங்கள் இருக்கின்றன.  அவற்றில் ஒன்று உண்மைகளை factcheck.org என்ற இணையதளத்தில் வெளியிடும்.  அதன் முகவரி http://factcheck.org/2012/10/false-claims-in-final-debate/

    நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில்  பத்தி எழுதிய ஒரு வரலாற்றுப் பேராசிரியர் தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின் எழுதிய கட்டுரையில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைவது உண்மைகளே என்று எழுதியிருக்கிறார்.  இதில் முக்கிய பங்கு ராம்னிக்கே என்றும் சொல்கிறார்.  இந்தக் கட்டுரையை

    http://www.nytimes.com/2012/11/06/opinion/the-real-loser-truth.html?_r=0  இந்தமுகவரியில் பார்க்கலாம்.

    படங்களுக்கு நன்றி:

    http://thewhiztimes.com/fun-trivia-bio-mitt-romney/

    Share
  • பாசம்

     

    தமிழ்முகில் நீலமேகம்..

    வழக்கமாக விளையாட  வரும்போதெல்லாம், தன் நண்பர்கள்  பட்டாளத்துடனே அந்த மைதானத்திற்கு  வரும் இராசேந்திரன், அன்று  சற்று முன்னதாகவே வந்து  விட்டான். அந்த பசுஞ்சோலை கிராமத்தில், சிறுவர்கள் விடுமுறை நாட்களில் பொழுதைக் கழிக்கும் விளையாட்டு மைதானமாகத் திகழ்ந்தது, ஊருக்கு எல்லையாக இருந்த அந்த பொட்டல் காடு தான். இராசேந்திரன், வீட்டிலிருந்து சந்தோஷமாய் குதித்து விளையாடியபடி அந்த பொட்டல் காடு நோக்கி வந்து கொண்டிருந்தான். வழியில், அவனைக் கண்ட பக்கத்து வீட்டு சிவகாமி பாட்டி “என்னப்பா, விளையாட கிளம்பிட்டியா ? பாத்து பத்திரமா போய்ட்டு வா“ என்றவரிடம் “சரி பாட்டி“ என்று பதிலளித்துவிட்டு துள்ளி ஓடினான்.

    வழிநெடுக தான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த கடலையை கொறித்துக் கொண்டே வந்தவனது கவனத்தை, ஓர் சிறு முனகல் சத்தம் ஈர்த்தது. அவன் சட்டென்று நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். எங்கிருந்து சத்தம் வந்ததென்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மெதுவாக திரும்பி நடக்கத் தொடங்கியவனுக்கு, மீண்டும் அக்குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி நடந்தான். சத்தம் அங்கு அருகிலிருந்த தண்ணீர்ப் பந்தலில் இருந்து வருவதை உணர்ந்து, அருகில் சென்று பார்த்தான். அங்கோர் மேசையின் அடியில், சில மண் பானைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.பானைகள் மெல்ல ஆடுவதைக் கண்ட அவன், மெல்ல ஒவ்வோர் பானையாக எடுத்துப் பார்த்தான். பார்த்தவனுக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்.

         வெளி உலகே அறியாது, சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதை உணராது, அளவிலா ஆனந்தத்துடன் நான்கு நாய்க்குட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாய் ஏறி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவனது கண்களில் ஆர்வமும், மனதில் மகிழ்ச்சியும் நிரம்பியது. சில நிமிடங்கள் தனைமறந்து அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவற்றை தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் மேலிட்டது. சுற்றிலும் பார்த்தவனுக்கு, அங்கோர் கோணிப்பை கிடப்பது தெரிந்தது. அதை எடுத்து வந்தவன், ஒவ்வோர் நாய்க்குட்டியாய் எடுத்து பையினுள் போட்டான். அவன் தூக்கியதும், ஒவ்வொரு குட்டியும் மெல்லிய முனகலுடன் அவனது கரங்களில் தஞ்சமடைந்தன. பின், அலுங்காமல் குலுங்காமல் அந்தக் கோணிப் பையை தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தான் இராசேந்திரன்.

    வீட்டிற்குள் நுழையும் போதே “அம்மா!!!” என்றழைத்தவாறு வந்தவனை, எதிர்கொண்டார் அவனது தந்தை. “ அம்மா கிராமத்து எல்லையில் இருக்கிற எல்லையம்மன் கோவிலுக்கு போயிருக்கிறார் அப்பா, வருவதற்கு கொஞ்சம் நேரம் ஆகும்” என்றார். எப்போதும் வீட்டிற்குள் நுழையும் போதே, அவனது வருகைக்காக காத்திருந்து, வந்ததும் மலர்ந்த முகத்துடன் வரவேற்று, உண்ண வழங்கும் தாய் அன்று வீட்டில் இல்லாதது, அவனுக்கு சற்று வருத்தமாகவே இருந்தது.  இராசேந்திரனின் கையில் இருந்த கோணிப்பையை கவனித்த அவனது தந்தை, “ என்னப்பா அது கோணிப்பையில?” என்றார். “நாய்க்குட்டிகள் பா. அந்த பொட்டல் பக்கத்துல இருக்கிற தண்ணீர்ப் பந்தல்ல இருந்தது. பார்க்க ஆசையா இருந்தது. எடுதுட்டு வந்தேன் பா “ என்றான். “சரி, முகம் கழுவிட்டு வா. பால்  ஊற்றித் தருகிறேன். நீ குடித்துவிட்டு, நாய்க் குட்டிகளுக்கும் கொஞ்சம் எடுத்து வை” என்றார் தந்தை. தந்தை கொடுத்த பாலைக் குடித்து விட்டு, குட்டிகளுக்கும் பால் எடுத்து வைத்தான். அவை குடிக்கும் அழகினை அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் மனம் அதில் ஏனோ லயிக்கவில்லை.

    வாசற்படியில் வந்தமர்ந்த இராசேந்திரன், கன்னத்திற்கு தன் கைகளால் முட்டுக் கொடுத்து அமர்ந்து, தன் தாய் வருகிறாளா  என்று வீதியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது, கடிகாரத்தையும்

    பார்த்துக் கொண்டான். மணி ஏழரை அடித்தது. வீட்டினுள் வந்து, சிறிது தண்ணீர் அருந்தி விட்டு, மீண்டும் வாசலுக்கு சென்றான். அப்போது, தெரு முனையில் யாரோ வருவது போல தோன்றியது. ஆவலாய் எட்டிப் பார்த்தான்.அவனது தாய் வருவது தெரிந்தது. அவள் வீட்டினுள் நுழைந்தது தான் தாமதம், “ எனக்கு என்ன அம்மா வாங்கிட்டு வந்தீங்க? “ என்றான். “ உனக்கு வேணுங்கறதெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். அந்த பையில இருக்கு, எடுத்துக்கோ “ என்றாள் அவனது தாய். “ ஏன் அம்மா எங்கிட்ட சொல்லாம போய்ட்டிங்க?? நான் உங்களை எவ்வளவு தேடினேன் தெரியுமா?? “ என்றான். “ இன்னைக்கு எல்லையம்மன் கோவில்ல விசேஷம். மாசா மாசம் இரண்டாம் சனிக்கிழமை நடக்கும். நானும், ரெண்டு மூனு மாசமா போகனும்னு நினைச்சிட்டு இருந்தேன், ஆனா போக முடியல. இன்னிக்கு தெருவுல எல்லாரும் போவதா, பக்கத்து வீட்டு சிவகாமி அம்மா சொன்னாங்க. அதான் டா ராஜா போய்ட்டு வந்தேன்.” என்றாள்.

    தாயும் மகனும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட தந்தை அங்கு வந்தார். இராசேந்திரனைப் பார்த்து, “ உன் தாய் நீ வீட்டிற்கு வரும் போது இல்லைன்னதும், உன் மனம் எவ்வளவு தேடுது, அதே போல் தானே தன் குட்டிகளைக் காணாது, இவைகளின் தாய் இவற்றைத் தேடும்” என்றார். அப்போது தான், இராசேந்திரனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. மறுநாள் காலை, தந்தையுடன், குட்டிகளை எடுத்துக் கொண்டு தண்ணீர்ப் பந்தலுக்கு சென்று குட்டிகளை எடுத்த இடத்தில் விட்டான். குட்டிகள் மெல்லிய குரலில் முனகின. பந்தலை விட்டு ஓரமாய் ஒதுங்கினார்கள் தந்தையும் மகனும். அப்போது, எங்கிருந்தோ தாய் நாய் ஓடி வந்தது. தன் குட்டிகளைக் கண்டதும், பாசத்துடன் அவற்றை தம் நாவால் வருடிக் கொடுத்தது. தாயைக் கண்ட குட்டிகள் வாலை ஆட்டி தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தின. மன நிம்மதியுடனும், மகிழ்வுடனும் தந்தையுடன் வீடு வந்து சேர்ந்தான் இராசேந்திரன்.

     

    Share
  • ஓசையும், ஆசையும்!

     

    பாகம்பிரியாள்

     நாம் காதல் கொண்ட தருணத்தில்,
    நம் புரிதலுக்கு முன் நீயோ

    கடும் சொல் ஒன்றை உதிர்த்தாய்,
    காதலுக்கு கண்ணில்லையென்று.

    அன்றிலிருந்தே நான் போட்டேன்
    அவசரமாய் என் கண்ணுக்குத் திரை.  

    உன் காலடி ஓசையில், சருகுகள்  மிதிபடுவதில்
    எனக்குப் புரியும் உன் எண்ணங்களின் வேகம்!  

    சுழன்று வரும் இலைகளோடு கலந்து வரும்
    செடிகளின் வாசம் சொல்லும் உன் சோகத்தை.

     பூக்களின் மகரந்தத் தூவலின் சொரிதல்
    புரிய வைக்கும் உன் நேச வருடலை.

    ஓசை என்னும் என் கரம்  காத்திருக்கிறது 
    ஆசை எனும் உன் கரம் எப்போது இணையுமென்று!

    ஆம் கண்ணே! ஓசையும், ஆசையும் சேர்ந்ததுதானே காதல்?
     

    படத்துக்கு நன்றி

    http://io9.com/5872520/a-form-of-blindness-where-you-can-see-everything-but-recognize-nothing

    Share